Jeevan 29

உன்னோடு தான்… என் ஜீவன்…

பகுதி 29

காயத்ரி, கௌதமின் நிறுவனத்திற்கு வந்து இன்னோடு ஒரு வாரம் ஆகியிருக்க, முதல் நாள் மட்டுமே அவளால் கௌதமை சந்திக்க முடிந்தது. அடுத்து வந்த நாட்களில், அந்நிறுவனத்திற்கு, ப்ராஜெக்ட் செய்ய வந்த மாணவியாய், முதலாளியிடம் எளிதில் சென்று நிற்க இயலாது என்ற நிதர்ஷனம் புரிந்த போதும், அவனை பார்க்க இயலாததை எண்ணி, மனம் பெரும் பாரமாய் போனதால், அதன் தாக்கம், அவளின் முகத்திலும் தெளிவாக தெரிந்தது.

கௌதமிற்கு தான் இருக்கும் இடத்திலேயே, அவளின் நடவடிக்கைகளை பார்வையிடும் வகையில், சிசிடிவி பதிவு ஓடுவதால் அவன் அங்கிருக்கும் நேரமெல்லாம், அவனின் பார்வை அவளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இன்றும் அதே போல பார்க்க, அவளின் வாடிய தோற்றமே ஏதோ சரியில்லை என காட்ட…

அந்த பகுதியை பார்வையிடுவது போல சென்றவனை, அதிசயமாய் பார்த்தாலும் முதலாளியின் வருகையை தடுத்து கேள்வி கேட்க யாரால் இயலும்…. அவன் அங்கே வந்ததை, கூட உணராது இருந்தவளை, மற்றவரின் கவனத்தை கவராது எப்படி பேச? என யோசித்தவன், அங்கு நடக்கும் நிகழ்வுகள் பற்றி மேலாளரை கேட்க, அவரும் அதை விளக்கும் போது, கௌதமிற்கு சாதகமாய், “இப்ப ப்ராஜெக்ட் செய்ய வந்த பொண்ணு உண்மையிலேயே செம டேலண்ட் சார். நாங்க சொல்லறத அழகா கேச் பண்ணிட்டு முடிச்சிடுறாங்க. அதோட, அவங்களால செய்ய முடுஞ்ச வேலையை, நமக்காக செய்து கொடுக்கறாங்க. ஐ திங்க், அவங்கள நம்ம கேப்பஸ் வழியாவே, இங்க போஸ்ட் பண்ணலாம்…” என சொல்ல..

மனதினில், ‘அவள, இந்த துறைக்கு முழு தகுதியையும், வளர்த்துக்க இது ஒரு நல்ல சான்ஸ்ன்னு நினச்சது, சரியா இருக்கு… அவ படிச்சு முடுச்சதும், இந்த டிபார்ட்மெண்ட் ஃபுல்லா, அவள பார்த்துக்க சொல்லிடலாம்!’ என்ற நிறைவு தோன்றிட….

அதை வெளிப்படுத்தாமல், “ஈஸ் இட்! அப்படியா சொல்றீங்க..?! ஓகே, அப்ப அவங்க செஞ்ச வேலைகளோட ரிப்போர்ட்டோட, என் கேபினுக்கு வர சொல்லுங்க, மதியம்….” என சொல்லி, வந்தது போலவே, தனது கேபினுக்கு சென்ற கௌதமின் வருகையையும், சென்றதையும் அறியாமல், தனது வேதனையிலும், குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தாள் அவனின் செல்லம்மா.

கௌதம் அந்த இடத்திலிருந்து வெளியேறும் சரியான நேரத்தில், ஆரன் வாயிலுக்கு வர, “கௌதம்..!” என்றபடி வந்தவனை கூட அறியாது, தனது செல்லம்மா வரும் நேரத்தில், என்ன செய்யலாம்?! என்ற கனவில் மிதந்தவன், லிப்டில் சென்றுவிட..

“என்னடா இது.. கூப்பிட்டது கூட காதுல விழாமா போகறான். அப்ப, சம்திங் ராங்…! இந்த மாமி எங்க…?! முதல்ல அத பார்த்தா தான், இவன் ஏன் இப்படி மந்திருச்சுவிட்ட மாதிரி போறான்னு தெரியும்!” என நினைத்தவன்,

ரிஷஃப்ஷனில் கேட்க, ஆரனை நன்கு அறிந்தவர்களாதலால், எந்த கேள்வியும் இன்றி, காயத்ரி இருக்கும் பகுதியை காட்ட… ‘நினச்சேன்! வேலைய பார்க்காம மாமிய சைட் அடிச்சிட்டு போகுதா, இந்த கேடி…! இரு மாமிய ஒரு கை பார்த்துட்டு வந்து, உன்ன வச்சுக்கறேன்!’ என்றபடியே காயத்ரியிடம் வந்தவன், அவளின் வாடிய முகத்தை பார்த்ததும் குழம்பி தான் போனான்.

“இப்ப தான் கௌதம் இங்கிருந்து போறான். அப்ப மேடம் முகத்துல ப்ளாஸ் லைட் எரியுமின்னு வந்தா.. ப்யூஸ் போனது மாதிரி உக்காந்திருக்கா…! என்னவா இருக்கும்… ?” என யோசித்தவன்,

அவளை நெருங்கி… “ஓய்…! மாமி… எப்படி போகுது வேலையெல்லாம்…?!” என கேட்க… வெகு அருகில் கேட்ட குரலில், அதுவரை வேறு எங்கோ சிந்தனை இருந்ததால், பதறி போய் எழுந்தவள் தடுமாற.. “காயூ…! பார்த்து, பார்த்து..!” என அவசரமாக, அவளின் கையை பிடித்து அவள் கீழே விழாமல் நிறுத்தியவன், “ஏய்… நா தான்… யாருன்னோ பயந்துட்டையா..?!” என கேட்க…

படபடவென அடிக்கும் இதயத்தோடு, வேர்வை வடிய நின்றவளை பார்க்கும் போது ஆரனுக்கே கஷ்டமாகிவிட, ‘டேய், கொஞ்சம் மெதுவா கூப்பிட்டிருக்கலாம். அவள பத்தி தெரிஞ்சும், இப்படியா கத்தி வைப்ப?!’ என தன்னையே திட்டி கொண்டவன், அருகிலிருந்த பில்ட்டரிலிருந்து, தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து, “உக்காந்து முதல்ல குடி…ரிலாக்ஸ் ஆகும்!” என கரிசனமாக சொல்ல, அவன் சொன்ன படி அமர்ந்து குடித்தவள் தன்னிலை பட….

“இப்ப ஓகே வா… ?!” என்றதும்,  “ஓகே..” என தலையாட்டியவளை பார்த்து, மெல்ல சிரித்தவன்… “என்னாச்சி! மூஞ்சி டல்லா இருக்கு, உடம்பு சரியில்லையா?!” என கேட்க… “இல்ல..”என தலையாட்ட… “அப்புறம், நா வரும் போது அப்படி இருந்த..! அசோகவன சீதை மாதிரி ..! அவங்களாவது ராமன விட்டு பிரிஞ்ச சோகத்துல அப்படி இருந்தாங்க.. நீ ராமன் கிட்டையே இருந்துட்டு இப்படி இருக்கறது எதனால…?!” என சிறிது கிண்டல் தோனியில் கேட்க…

அங்கிருந்த காகிதத்தில், ‘நானும் கிட்டதட்ட அந்த நிலைமையில தான் இருக்கேன்… அவர பார்க்கவே முடியல…!’ என எழுத… “இப்ப தானேம்மா, இங்க வந்துட்டு போனான்.. அப்ப பார்க்கலையா.. நீ !” என சொல்ல,

அதுவரை சோகமாய் வாடியிருந்த முகம் பிரகாசமாய் மின்ன, கண்ணில் ஒளியுடன், ‘நிஜமா வந்தாங்களா..?! இங்கையா.. ?!’ என கேட்டவள், ‘நா பார்க்கலையே…!’ என சொல்லும் போதே மீண்டும் முகம் வாடிவிட…

“இப்ப கௌதம பார்க்கணும்.. அவ்வளவு தானே…! இதுக்கா இப்படி இருக்க…! லூசு..” என அவளின் நெற்றியில் ஒரு விரலால் தள்ளியபடி ஆரன் சொல்ல, கௌதமிடம், ‘ஆரன் எப்படியாவது அழைத்து செல்வான், இப்போது அவனை பார்க்க போகிறோம்’ என்ற சந்தோஷமும், வெக்கமும் முகத்தை சிவக்க வைக்க, ஆரன் விரலை தட்டிவிட்டவள், அழகாய் புன்னகையோடு, விரல் நீட்டி மிரட்டுவது போல சைகை காட்ட, ஆரனுக்கும் அவளின் செய்கையிலும், இதுவரை இருந்த சோகம் மாறி அவளின் சந்தோஷத்திலும் புன்னகை வர, இருவரின் சிரிப்பு சத்தமும், அந்த பகுதியை ஆக்கிரமித்தது.

கௌதம், திடீரென அவனது கேபினில் இருந்து, அந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் இன்ஸ்பெக்ட் செய்ய சென்றதை அறிந்த சதாசிவம், தனக்கு தெரியாமல் அந்த இடத்தில் எதாவது தவறு நேர்ந்து விட்டதா..?! அதனால் தான் அங்கு கௌதமே நேரடியாக சென்றானோ?!  என்ற எண்ணம் எழ… அங்கே விரைந்தவர் கண்டது காயத்ரியும், ஆரனும் புன்னகையோடு பேசிக்கொண்டிருப்பதையே…. !

‘இந்த பொண்ணு, இவங்க காலேஜ் ஜூனியர்ன்னு சொன்னாங்க.. இப்ப தானே தெரியுது.. கௌதம், ஏன் இந்த சலுகை கொடுக்கறான்னு.. அந்த பொண்ணுக்கும், ஆரனுக்கும் காதல் கீதல் இருக்கும் போல… அதான் ஆரனுக்காக இங்க கூப்பிட்டு ஹெல்ப் பண்றானா!’ என நினைத்தவர், ‘அப்ப ஆரன் இங்க வந்தது தெரிஞ்சு, கௌதம் வந்துட்டு போயிருக்கானா இருக்கும்.. ஓகே!’ என அவரும் சிறு புன்னகையோடு அவரின் இடத்திற்கு திரும்பினார்.

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்… தீர விசாரிப்பதே மெய்!” என்பதை அவர் உணராத போது வரும் விளைவு…. !!!

*******

ஆரனுடன், காயத்ரி பேசிக் கொண்டிருக்கும் போதே, அவளிடம் வந்த மேலாளர், “காயத்ரி உன்னோட வேலைக்கான ரிப்போர்ட்ஸ் கொண்டுட்டு, சார்.. அவர பார்க்க வர சொன்னாங்க.. இப்ப லன்ச் ஸ்டார்ட் ஆக போகுது.. அது முடுஞ்ச உடனே போங்க..” என சொல்லி, அவர் தனது மதிய உணவோடு அங்கிருந்து செல்ல…

ஆரன், “காயத்ரி.. நீ லன்ச் கொண்டு வந்தியா? இல்ல இங்க கேண்டீன்ல சாப்பிட போறையா?!” என,

“கேண்டீன் தான்” என எழுதி காட்ட.. “அப்ப ஒன்னு செய்..! நீ இப்பவே கௌதம் ப்ளேஸ்க்கு போ.. நா போயிட்டு, மூனு பேருக்கும் லன்ச் வாங்கிட்டு வந்திடுறேன்.. கௌதம் கிட்ட சொல்லிடு…” என சொல்ல…

“யாராவது தப்பா நினச்சிட்டா..?” என காயத்ரி எழுதி கேட்க… சிறு புன்னகையோடு, “நீ போறது ரிப்போர்ட் ஃபைலோட… அதுவும் கௌதம் ரூமுக்கு.. யாரும் அங்க என்ன நடக்குதுன்னு, நோட் பண்ணிட்டு இருக்க மாட்டாங்க. சோ, நீ தைரியமா போ..! நா கொஞ்ச நேரத்துல வந்திடுறேன்..” என சொல்லி அவளோடே வந்து, அவளை லிப்டில் அனுப்பிவிட்டு வெளியேறினான் ஆரன்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்க போகும் படபடப்பும், ஆர்வமும் போட்டி போட, ஆவலாய் கௌதமின் அறைக்கு சென்றவள், வெளியிலிருந்தே கதவை தட்ட…  கண்மூடி இருக்கையில் சாய்ந்தபடி கனவிலேயே இருந்தவன், ‘லன்ச் டைம்ல.. யாரா இருக்கும்!’ என யோசித்தபடியே, “எஸ்.. கம்மின்” என தனது கம்பீர குரலால் அழைக்க,

அவனின் குரலில் உண்டான சிலிர்ப்போடு, உள்ளே வந்த காயத்ரியை ‘இப்போதே எதிர்பார்க்கவில்லை!’ என்பது அவனின் ஆனந்த அதிர்வில் தெரிய, “செல்லம்மா… வாடா… நீ, இப்பவே வருவேன்னு எதிர்பார்க்கவே இல்ல..!” என்று சொன்னபடியே எழுந்து வந்தவன், பெரும் தயக்கத்தோடு நின்றவளின், கையை பிடித்து அழைத்து வந்து, அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து தன்னருகே அமர்த்தியவன், அவள் கைகளை மென்மையாய் பிடித்தபடியே, அவளின் முகம் பார்க்க, அவனின் செயலில் எப்போதும் போல இப்போதும் உள்ளம் குளிர்ந்தவள்..

“எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க..?” என கண்ணால் கேட்க.. “இல்ல என்னோட செல்லம்மா மட்டும், எப்படி எப்ப பார்த்தாலும், இப்படி ப்ரஸ் லுக்கோடவே இருக்கா..?! அவள பார்த்தாலே தனி எனர்ஜி வருதுன்னு, யோசிச்சிட்டு இருக்கேன்!” என சொல்லி,


“ஆனா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, ஏன் செல்லம்மா அப்படி இருந்த..? ரொம்ப கஷ்டமா போச்சு.. அதான், நானே நேரா அங்க வந்தேன். நீயோ, நா வந்தத கூட கவனிக்காம இருக்க, எப்படி உன்ன என்ன கவனிக்க வைக்கன்னே தெரியல…

அதோட, நீ போட்ட கண்டிஷனால ஓப்பனா உன்கிட்ட பேசிட கூட முடியல…  இதுவரை எந்த ஏரியவுக்கும், நானா போனதும் இல்ல.. அதே மாதிரி, சம்மந்தம் இல்லாம யாரோடவும், தனிப்பட்டு பேசுனதும் இல்லைங்கும் போது, உன்கிட்ட பேசறது வித்தியாசமா தெரியுமேன்னு யோசிக்க வேண்டியதா போச்சு.. நல்ல வேளை, அங்க எனக்கு ஒரு சின்ன லூப் கிடச்சதும் உன்ன வர வச்சிட்டேன்..” என்ற படி
அவளின் கன்னத்தை வருடியவனை கண்டு, மெல்ல சிரித்த காயத்ரியிடம், இப்போது வந்திருக்கும் மலர்ச்சியே, அவளின் அப்போதைய ஓய்ந்த தோற்றம் எதனால் என்பதை கௌதமிற்கு புரிய,


“ரொம்ப ஷாப்ட் ஸ்கின் செல்லம்மா உனக்கு..! அப்படியே ரோஸ் பெட்டல்ஸ்ஸ, தொட்ட ஃபீல் ஆகுது..  அந்த பெட்டல்ஸ் மாதிரி, என் கை பட்டதும் சிவந்து போற, இந்த கன்னத்த என்ன என்னமோ செய்ய தோணுது..! பட்.. கல்யாணம் செய்யாம, எல்லை மீறிட கூடாதேங்கற, என்னோட கொள்கை வந்து தடை போடுது…” என்றவன்..  

அவளை இன்னமும் நெருங்கி அமர்ந்து, இருவரின் இத்தகைய கஷ்டத்திற்கு தீர்வாக எண்ணி, “செல்லம்மா… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா..?! உன் படிப்பு முடியற வரைன்னா… இன்னும் ரெ..ண்..டு வருஷம் காத்திருக்கணும்..! அதுவரை உன்ன, இப்படியே பார்த்துட்டே இருக்க முடியாதுடீ…” என ரெண்டு வருட இடைவெளியை, அதே போல் இழுத்து சொல்லி, சினுங்கும் கௌதமை பார்க்கும் போது,

கொஞ்ச நேரத்திற்கு முன்பு, காதலாய் பேசியவன், கண்ணியத்தோடு கல்யாணத்திற்காக காத்திருப்பதாய் சொல்லி விலகி நின்றவனா இவன்!, சிறு குழந்தையாய் அடம்பிடிக்கும், சேட்டை கார அந்த மாயகண்ணனோ என்பதாய் அவனையே பார்த்திருக்க… “செல்லம்மா..!” என காற்றிற்கும் வலிக்கும் வகையில் அழைத்தவன், அவளின் அசையா ஆசை பார்வையில் அவளிடம் நெருங்க… அவனின் நெருக்கத்தில் எப்போதும் போல சிலிர்ப்போடு விழி மூடியவளின் இமைகளில் இதழ் பதிக்க நெருங்கியவன், கதவு திறக்கும் ஓசையில் சட்டென விலக…

ஆரன், “ஹாய் கௌதம்… !” என்ற படி வர, “சரியான, பூஜை நேரத்துல கரடியா…  வந்திட்டு..! முதல்ல.. ரூமுக்கு லக் .. போட்டு வைக்கணும்!” என முனுமுனுக்க…

ஆரன் தொழிலில் இறங்கிய பிறகு, சரியாக சந்தித்து கொள்ளாத நேரத்தில், அதிசயம் வந்து நிற்கும் தன்னை வரவேற்காமல், வாயினுள்ளேயே எதையோ சொல்லும் கௌதமை விசித்திரமாய் பார்த்தவன், காயத்ரியை பார்க்க, அவர்கள் அமர்ந்திருந்த விதமே, கௌதம் ‘என்ன சொல்லியிருப்பான்?’ என்பது புரிய…

“ஏய் மாமி… ! நா போய் லன்ச் வாங்கிட்டு ‘இங்க…’ வருவேன்னு சொல்லிட்டு தானே போனேன். அவன்கிட்ட சொல்லையா..?!” என  காயத்ரியிடம், ‘நான் இங்கே வருவதை ஏற்கனவே சொன்னேன்… உசாராய் இல்லாது போனது, உங்களின் தவறு!’ என மறைமுகமாய் சொல்ல…

‘நிஜமா!’ என கௌதம் பார்க்க, ‘எங்க அதையெல்லாம் சொல்ல முடிஞ்சுது…!’ என்ற காயத்ரியின் பதில் பார்வையில், அசடு வழிய, “வாடா ஆரா..எப்படி போகுது வேலையெல்லாம்?” என கேட்க…

“அப்பாடா.. வந்தவன, அப்படியே.. போன்னு சொல்லிடுவீயோன்னு கொஞ்சம் ஜர்க் ஆகிட்டேன்…” என்ற படியே வந்து, கௌதமின் முதுகில் ஒன்று கொடுத்துவிட்டு, சிரித்தபடி அதே இருக்கையில் அமர்ந்தான்.

பேச்சிக்கொண்டிருந்த கௌதம், ஆரனுக்கு, காயத்ரி, வாங்கி வந்த உணவை அனைவரும் உண்ணும் வகையில் பிரித்து வைத்தவள்,  அங்கிருந்த பிளைட்டில் போட்டு கொடுக்க, “செல்லம்மா நீயும் போட்டு கூடவே சாப்பிடு, இல்ல.. இந்த சாப்பாட்டு ராமன், ஃபுல்லா முடுச்சிடுவான், உனக்கு இல்லாம” என கௌதம் சிரித்தபடி சொல்ல…

முறைப்பை செலுத்தினாலும், “சாப்பாட்டுக்கு வஞ்சம் வைக்க கூடாதுன்னு.. எங்க ஆயா சத்தியம் வாங்கிட்டு தான் சொத்து போச்சு.. ! சோ, சோறு தான் முக்கியம் ங்கற சங்கத்துல சேர்ந்து ரொம்ப நாளாச்சி நானெல்லாம்…” என சொன்ன ஆரனின் வார்த்தையில், வந்த சிரிப்பு, அந்த அறையெங்கும் ஒலித்து ஓய்ந்தது.

சிரித்தபடி அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க, சட்டென எழுந்து, அங்கிருந்த வாஸ்ரூம் நோக்கி ஓடி சென்ற கௌதமின் செயலில் அதிர்ந்த ஆரன்,  சென்று பார்க்க, இதுவரை உண்ட உணவு எல்லாமே வெளி வந்திருந்தது வாந்தியாக…

“கௌதம் என்னடா ஆச்சு…?! என்ன திடீர்ன்னு வாமிட் பண்ற…?!” என பதட்டத்தோடு கேட்டபடி, அவனுக்கு சுத்தப்படுத்த உதவி, வெளியே அழைத்து  வர, கௌதமின் செயலில், காயத்ரியும் பதறி கண்ணில் நீரோடு, “என்னாச்சு?!” என அவனை நெருங்கி கேட்க..

ஆசுவாசமாய் அமர்ந்த கௌதம்…. “எனக்கு ஒன்னுமில்லடா.. ஆரா. செல்லம்மா எதுக்கு அழற…?! என இருவருக்கும் சொல்ல,


“என்னது ஒன்னுமில்லையா..?! ஆமான்டா நீ சாப்பிட்டது ஒன்னுமே இல்லாம தான் வந்திருக்கு.. எதனால ன்னு கேட்டா… இப்படி சவாகாசமா உக்காந்திட்டு.. உன்னையெல்லாம்..” என ஆரன் காய…

“காலைல சாப்பிட்ட புட் சம்திங்… ஏதோ சரியில்ல போலடா… ஒரு மாதிரி தான் இருந்துச்சு! மதியம் லன்ச் ஸ்கிப் பண்ணற ஐடியாவுல இருந்தேன். நீ வாங்கிட்டு வந்ததால, வேற வழியில்லாம சாப்பிட்டதோட விளைவு தான் இது…” என தனக்கென வருந்தும் இருவரின் அக்கறையில் கரைந்தவனாய் சொல்ல,

“போடா…. நா, பயந்தே போயிட்டேன், என்னமோ ஏதோன்னு… வயிறு அப்செட்டுன்னா,  வேணாமின்னு சொல்லியிருக்க வேண்டியது தானே…” என சொல்ல,

“அது…  செல்லம்மா கையால கொடுத்தப்ப .. வேணாமின்னு, சொல்ல தோணலடா… அதான்!” என சிரிப்போடு சொல்ல, தன் கையால் கொடுத்ததற்காக, உண்டால் என்ன ஆகும் என தெரிந்தும், செய்த கௌதமின் நேசத்தில், பொங்கிய அழுகையோடு, அவனிடம் வந்து அணைத்தவளை ஆறுதலாய் தழுவிக்கொண்டான் கௌதமும்…

“செல்லம்மா.. என்ன இது சின்ன புள்ள மாதிரி அழுதிட்டு.. இதெல்லாம் ரொம்ப சாதாரண விசயம் டா…. ஒரு நேரம் சாப்பிடாம, ஸ்கிப் பண்ணியிருந்தா சரியாகி இருக்கும்.. இப்ப உங்கள பயப்படுத்தி விட்டாச்சு…” என சொல்லியபடியே, அவளின் முதுகை தடவி ஆறுதல் படுத்த,

அவர்கள் நிலையை பார்க்கவும் முடியாது, கௌதமின் நிலையில் விட்டு செல்லவும் முடியாது திரும்பி நின்றவன், “ஹுக்கும்…!” என ஒலி எழுப்பி.. “பிகர் கொடுத்தா, பினாயிலையும் பாலா நினச்சு குடிப்பாங்கன்னு கேள்விபட்டத உண்மையாக்கினதுக்கு.. சின்ன பையன, கூட வச்சிட்டு நீங்க செய்யற அக்கப்போரு தாங்க முடியலடா…” என்ற ஆரனின் குரலில் நடப்பிற்கு வந்த காயத்ரி,

தான் செய்த செயலில் வெக்கம் வர, அதை மறைக்க மீண்டும், கௌமின் நெஞ்சத்திலையே ஒழிய.. ஆரனை கெத்தாய் பார்த்தபடியே, கௌதமும் தனது செல்லம்மாவின் தோளில் கையிட்டு, தன்னோடு அணைக்க,


“இதுங்க நம்மள, வெறுப்பேத்திவிடாம இன்னைக்கி ஓயாதுங்க… அவனா வெளிய போன்னு சொல்லறதுக்கு முன்னாடி, டீசெண்ட்டா வெளிய போறது நல்லது..” என தன் நிலையை எண்ணி நொந்த ஆரன்…

“நல்லா வருவீங்கடா… கன்னி பையனோட சாபம் .. உங்கள சும்மா விடாது பார்த்துக்கோங்க…” என சொல்லி வேகமாய் அங்கிருந்து செல்ல, பாய்ந்து அவனையும், மறுகரத்தால் அணைத்த கௌதம்,

“பொறாமையில பொங்காதடா…. எப்பவும் செல்லம்மா இல்லாம, எப்படி நா இல்லையோ.. அதே மாதிரி நீ இல்லாமையும் நா இல்ல..!” என உளமாற சொன்னவனின் வார்த்தையில் நெகிழ்ந்து போய் நின்றான் ஆரன்… தனக்கென துணை வந்தும் தன்னை இன்னும் விலக்காது இருக்கும் நண்பனை பார்த்து…