Jeevan Neeyamma–EPI 15

171916099_840757923178210_3424615682123961255_n-e688c9bc

Jeevan Neeyamma–EPI 15

அத்தியாயம் 15

 

என்னவனின் ஒற்றைப் பார்வை உயிரையும் கொடுக்கும், உயிரையும் எடுக்கும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

பல்கலைகழகத்தின் எல்லா பீடத்தின் செமெஸ்டர் தேர்வுகளும் ஒரு முடிவை அடைந்திருந்தன. அடுத்த செமெஸ்டர் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதம் இருக்க, மாணவர்கள் அந்த வீக்கேண்ட் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்திருந்தனர். முதல் செமெஸ்டர் பரீட்சைகளை நன்றாக செய்திருந்தாள் மீனாட்சி. புரியாத பாடங்களை ரஹ்மான் விளக்கமாக சொல்லித் தந்திருக்க, மன நிறைவாகவே தேர்வுகளை முடித்திருந்தனர் தோழிகள் இருவரும்.

மாணவர்கள் கிளம்பும் முன், தமிழ் கழகத்தின் முதல் நிகழ்ச்சியாக கவிதை போட்டி வைக்கலாம் என முடிவெடுத்திருந்தனர் கழக உறுப்பினர்கள். எல்லா பகுல்ட்டியில் இருக்கும் நோட்டிஸ் போர்ட்டிலும் கவிதை போட்டிக்கான விளம்பரம் ஒட்டப்பட்டது. அதோடு துண்டு பிரசுரங்களாகவும் தமிழ் மாணவர்களுக்கு நேரிடையாக விநியோகிக்கப்பட்டது.

காதல், நட்பு என இரண்டு தலைப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து கவிதை எழுதலாம் என ஆப்ஷன் கொடுத்திருந்தார்கள் ரஹ்மானும் அவனது குழுமமும். ஏற்பாட்டுக் குழுவினரும் அதில் கண்டிப்பாக கவிதைப் படை(டி)க்க வேண்டும் ஆனால் அது மற்ற போட்டியாளர்களை உற்சாகப்படுத்த மட்டுமே! அவர்களது கவிதை போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என அறிவித்திருந்தான் ரஹ்மான்.

போட்டி, செமெஸ்டரின் கடைசி நாளான அன்றைய வெள்ளிக்கிழமை இரவு ஏற்பாடாகியிருந்தது. போட்டியில் கலந்துக் கொள்பவர்கள், நேரிடையாக தங்களது கவிதைகளை நடுவர்கள் முன்னே வாசித்துக் காட்ட வேண்டும். நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பே இறுதியானது என போட்டி விதிமுறைகளில் அறிவித்திருந்தார்கள். நடுவர்களாக மலேசிய இலக்கிய உலகில் இப்பொழுதுதான் தலை எடுத்து வரும் இளைஞர்களை அழைத்திருந்தான் ரஹ்மான்.

வெள்ளி மதியத்தில், கடைசி நேர ஆயத்தங்களை செய்து முடிக்க போட்டி நடக்கப் போகும் லெக்சர் ஹாலில் கூடி இருந்தனர் ஏற்பாட்டுக் குழுவினர். ஏற்கனவே துணைத் தலைவராய் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்திய அனுபவம் இருந்ததால், ஒவ்வொரு வேலையையும் நேர்த்தியாய் திட்டமிட்டிருந்தான் ரஹ்மான்.    

“காய்ஸ், பேனர கொஞ்சம் மேல ஏத்திக் கட்டுங்க. அப்போத்தான் போட்டோ எடுக்கறப்ப பேனரோட வோர்டிங் அழகா கேப்ச்சராகும்” என சொல்லிய ரஹ்மான், மைக் மற்றும் ஸ்பீக்கர் எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என செக் செய்ய ஆரம்பித்தான்.

செயற்குழு உறுப்பினராக இருந்த மீனாட்சியும் மற்ற ஜீனியர்களும், நடுவர்கள் அமரப் போகும் மேசைகளை துணி போட்டு அலங்கரித்து, குட்டியாய் பூ வாஸ் வைத்து, வாட்டர் பாட்டிலையும் அடுக்கி வைத்தார்கள். அவர்கள் உபயோகிக்க பேனா, மார்க் போட பேப்பர், பேசுவதற்கு மைக் என எல்லாம் செட் செய்தார்கள்.

“மீனாட்சி!” என மேடையின் பின்புறம் இருந்து மைக் வழியாக ரஹ்மான் அழைக்க, இவள் திரும்பிப் பார்த்தாள்.

மற்றவர்கள் முன்னிலையில் மீனாட்சி என தான் அழைப்பான் ரஹ்மான். இவளும் அவனை மரியாதையாகவே நடத்துவாள்.

“மைக்க எடுத்து பேசு! வேலை செய்யுதான்னு டெஸ்ட் செய்யனும்”

நடுவர்களுக்கான மைக்கை கையில் எடுத்தவள் பெரிய பாடகி போல குரலை செறுமிக் கொண்டு,

“மைக் டெஸ்டிங்! மைக் டெஸ்டிங்! ஓன், டூ த்ரீ” என கத்த பயங்கரமாய் எதிரொலித்தது அவள் குரல்.

ரஹ்மான் காதில் விரலை விட்டுக் குடைய, மற்றவர்கள் திடீரென கேட்ட சத்தத்தில் பதறி போனார்கள்.

“யம்மா தாயே மீனாட்சி! மொல்லமா பேசறத சவுண்டா ஏத்திக் குடுக்கத்தான் இந்த மைக்கு! அதுல சத்தமா கத்தி, எங்க காத மொத்தமா கொத்தி விட்டறாதே! உனக்கு புண்ணியமாப் போகும்” என லோகா கிண்டலடிக்க, அவனைப் பார்த்து குறும்பாக நகைத்தவள் மைக்கை மைக் மோகன் போல சாய்த்துப் பிடித்து தலையை ஆட்டிக் கொண்டே இன்னும் சத்தமாக,

“என்னோடு பாட்டுப் பாடுங்கள்

எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்” என பாட ஆரம்பித்தாள்.

அந்த லெக்சர் ஹால் முழுக்க அவள் குரல் சத்தமாக ஒலிக்க,

“மோகன் தங்கச்சிகிட்ட இருந்து அந்த மைக்க புடுங்குங்கடா” என லோகா கத்த ஆரம்பித்தான்.

இன்னொரு ஜீனியர் பெண் இவளிடம் இருந்து மைக்கைப் பிடிங்கி,

“இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்

சுகம் தேடுங்கள்” என தொடர, அப்படியே மைக் எல்லோர் கைகளிலும் மாறி மாறி போய் அங்கொரு இசை கச்சேரியே அரங்கேறியது.

இரவெல்லாம் கண் விழித்துப் படித்தது, பரீட்சை எழுதிய ஸ்ட்ரேஸ், அன்று நடக்கப் போகும் போட்டியைப் பற்றிய பயம் என சோர்ந்துப் போய் கிடந்தவர்களுக்கு மாற்றி மாற்றி பாடியது அப்படி ஒரு உற்சாகத்தைக் கொடுத்தது. பாடி முடித்து எல்லோரும் கெக்கெபெக்கெவென சிரிக்க ஆரம்பித்தார்கள்.

சற்று நேரத்தில் அந்த இடத்தையே கலகலப்பாக மாற்றி இருந்த மீனாட்சியை புன்னகையுடன் பார்த்திருந்தான் ரஹ்மான். வேலையை ஒரு வழியாக முடித்து விட்டு, அழகாய் இரவு நிகழ்ச்சிக்குக் கிளம்பி வர கலைந்துப் போனார்கள் அனைவரும்.

“ரஹ்மானு!”

“சொல்லு”

“டீ?”

“சரி வா!”

லோகாவும் அவர்களோடு இணைந்துக் கொள்ள, டீ குடிக்கப் போனார்கள் மூவரும். ஹேமா தமிழ் கழகத்தில் எந்தப் பதவியும் வகிக்காததால் இரவு போட்டியில் கலந்துக் கொள்ள வருவதாக சொல்லி வேலையில் இருந்துக் கலண்டுக் கொண்டாள்.

ரஹ்மான் டீயோடு சேர்த்து கரிபாப்பும்(இங்குள்ள சமோசா) வாங்கி வர,

“போன் குடு ரஹ்மானு” என கையை நீட்டினாள் இவள்.

இவர்கள் இருவரும் ரஹ்மானின் வீட்டில் இருந்து கிளம்பி வரும் போது, கைத்தொலைபேசி ஒன்றை வாங்கித் தந்திருந்தார் அப்துல்லா. ஆபத்து அவசரத்துக்கு தொடர்பு கொள்ள உதவும் என அவர் சொல்லிய போது, முகம் கசங்கப் பெற்றுக் கொண்டான் இவன். அந்த நோக்கியா 6110 போன் பெயரளவில் தான் அவனுடையது. ஆனால் அதை முழு அளவு உபயோகிப்பது மீனாட்சிதான். அதில் பாம்பு கேம் விளையாடுவதுதான் இப்பொழுதெல்லாம் அவளுக்கு மிக பிடித்தப் பொழுது போக்கு.          

ஹேமாவுக்கும் அவளது அம்மா ஒரு போன் வாங்கிக் கொடுத்திருந்தார். அருகருகே அமர்ந்துக் கொண்டு,

“சாப்டியா?” என மீனாட்சியும்,

“நீ சாப்டியா?” என ஹேமாவும் மேசேஜ் செய்து அதற்கு ரிப்ளை வருவதை அதிசயமாக பார்த்துப் பூரித்துப் போவார்கள். மொபைல் போன் பயன்படுத்த ஆரம்பித்த முதல் ஜெனரேஷன் அவர்கள் அல்லவா! எல்லாமே அதிசயமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது இருவருக்கும்.  

மீனாட்சியின் அட்டகாசத்தினால் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானான் ரஹ்மான். அப்பொழுதெல்லாம் ஒரு மேசேஜீக்கு இருபது காசு என சார்ஜ் வரும். தன்னிடம் போன் வாங்கும் அளவுக்கு வசதி இல்லையென இவள் அலட்டிக் கொண்டதேயில்லை. இருப்பதை வைத்து அதாவது ரஹ்மானின் போனை வைத்து சந்தோஷமாகவே இருந்தாள் அம்மணி.

“போனை கீழ வச்சிட்டு ஒழுங்கா சாப்பிடு மீனாம்மா” என ரஹ்மான் மிரட்டவும்தான், கேமில் இருந்து வெளி வந்தாள் இவள்.

“அதான் பாம்பு கூடவே ப்ரேண்ட்ஷிப் வச்சிருக்கல்ல! அப்புறம் ஏன் இந்த போனுலயும் பாம்ப கட்டிக்கிட்டு அழற” என்றான் லோகா.

“இங்க பாருங்க லோகாண்ணா! என் ஹேமாவ நான் எவ்ளோ வேணா டேமேஜ் பண்ணுவேன். ஏன்னா அவ என்னோட ப்ரோபெர்ட்டி! ஆனா மத்தவங்க அவள எதாச்சும் சொன்னா அவ்ளோதான், வெளுத்துருவேன்” என தோழிக்கு பரிந்துக் கொண்டு வந்தாள் இவள்.

“பேரே பாரு ஹேமாவாம் ஹேமா! அவள கட்டப் போறவன் வாழ்க்கை  முழுக்க கோமாதான்!” என இவன் இன்னும் வம்பிழுக்க,

“இப்டிலாம் சொல்லாதீங்க! கடைசில கோமால கிடக்கப் போற ஆள் நீங்களாயிடப் போறீங்க” என்றவள்,

“நான் போறேன் ரஹ்மானு! இங்க வாஸ்த்து சரியில்ல” என சொல்லி அவசரமாக கரிபாப்பை மொக்கி விட்டு, டீயையும் குடித்து விட்டு எழுந்துக் கொண்டாள்.

“ரஹ்மானு! இன்னிக்கு நீ என்ன கலர்ல சட்டைப் போட்டுட்டு வருவ?”

“ரெட் கலர் ஷேர்ட் அயர்ன் செஞ்சு வச்சிருக்கேன்”

“அது வேணா. மஞ்ச கலர்ல எதாச்சும் இருந்தா போட்டுட்டு வா”

“ஏன் மீனாம்மா?”

“இன்னிக்கு நைட் நம்ம ப்ரென்ஷிப்கு ஒரு கவிதை படிக்கப் போறேன் நான்! நட்புக்கு அடையாளம் மஞ்சள் கலர். சோ இன்னிக்கு நம்ம ரெண்டு பேருமே மஞ்சள்ல வரனும்”

“அப்போ மஞ்சளா மங்களகரமா வந்து, ரெண்டு பேரும் மாரியாத்தாக்கு கூள் ஊத்தப் போறீங்க! சூப்பர், சூப்பர்” என்ற லோகாவின் கையிலேயே படபடவென அடித்தவள்,

“நான் வரேன் ரஹ்மானு” என கிளம்பி விட்டாள்.

‘சிகப்பு(காதலின் நிறம்) போடலாம்னு நினைச்சாலும் விதி மஞ்சள் தான் உனக்குன்னு முகத்துல அறைஞ்சு புரிய வைக்குது’ என நினைத்துக் கொண்ட ரஹ்மான், வேக எட்டு வைத்து தன்னை விட்டு நடந்துப் போய் கொண்டிருக்கும் தனது மீனாம்மாவையே பார்த்திருந்தான்.

அன்றிரவு லெக்சர் ஹால் தமிழ் மாணவர்களால் நிரம்பி வழிந்தது. போட்டியில் கலந்துக் கொள்பவர்கள் ஏற்கனவே பெயர் கொடுத்திருக்க, ரிஜிஸ்ட்ரேஷனில் அமர்ந்திருந்த மீனாட்சியும் மற்ற ஜூனியர் பெண்களும் வந்திருந்த போட்டியாளர்களுக்கு டோக்கன் கொடுத்து முன் வரிசையில் அமர வைத்தார்கள்.

“டீ ஜண்டா! என்னோட கவிதைய உனக்குப் படிச்சுக் காட்டனேன், ஆனா உன் கவிதைய எனக்கு கடைசி வரைக்கும் காட்டவேயில்லல்ல!”

“ஜெயிக்கனும்னா சைலண்டா மூவ் பண்ணனும் அம்மன். முதல் பரிசு கிடைக்கப் போற கவிதைய நான் வெளிய சொல்ல, வேற யாராச்சும் காப்பி அடிச்சிட்டா! அதான் அந்த ரிஸ்க்க நான் எடுக்கல! சோ மத்தவங்களோட லைவ்வாவே நீயும் பார்த்துக்கோ!” என கெத்துடன் அவளுக்கு மீனாட்சி ஒதுக்கிக் கொடுத்த இடத்தில் அமர்ந்தாள் ஹேமா.

அவள் பேச்சுக்கு வாந்தி வருகிறது போல சைகை காட்டிவிட்டு தனது வேலையைப் பார்க்கப் போனாள் மீனாட்சி அம்மன்.

வந்ததிருந்த நடுவர்களையும், தமிழ் லெக்சரர்களையும், மாணவர்களையும் வரவேற்று பேசினான் ரஹ்மான். அதற்கு பிறகு சீனியர் லெக்சரர் ஒருவர் இறைவாழ்த்துப் பாடி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். செயற்குழுவில் இருந்த பெண்ணொருத்தி முதல் கவிதையைத் தொடக்கி வைக்க, அதற்கு பிறகு வரிசையாக போட்டியாளர்கள் கவிதை படித்தார்கள்.

நன்றாக இருந்த கவிதைக்கு ஆஹா ஓஹோவென ஆர்ப்பாட்டம் செய்து கைத்தட்டிய மாணவர்கள், மொக்கை கவிதைகளை கழுவி கழுவி ஊற்றி கத்தி கிண்டலடித்தனர். அந்த இடமே இளசுகளின் சத்தத்தில் அல்லோலகல்லோலப்பட்டது.

ஹேமாவின் முறை வர, காண்பிடண்டாக மேடை ஏறி மைக் முன்னே நின்று அனைவரையும் வணங்கினாள்.

“வணக்கம் எனதன்பிற்குரிய நடுவர்களே, தோழர் தோழிகளே! இன்று நான் படைக்கப் போகும் கவிதையின் தலைப்பு காதல்” என சொல்லி முடிக்க லோகாவின் தலைமையில் ஆண்கள் பக்கம் ஒரே கலாட்டா.

“உன் கவிதை எனும் இன்ப வெள்ளத்தில் மூழ்க வந்த எங்களை ஏமாற்றாதே ஹேமா! படி ஹேமா படி”

அவர்கள் பக்கம் திரும்பி ஈ என இளித்து வைத்தவள், தொண்டையை செறுமி,

“காதல்…….

காதல் ஒரு போதை

மாறிப் போகும் உன் பாதை

கண்ணனுக்கு ராதை

அடடா கண்ணனுக்கு ராதை

ராதை ஒரு கோதை!!!!

காதல்…

காதல் ஒரு மந்திரம்

ஆண்கள் செய்யும் தந்திரம்

பிடித்து விடும் தரித்திரம்

அடடா பிடித்து விடும் தரித்திரம்

நீ ஆகிடுவாய் சரித்திரம்!!!

காதல்…” என அவள் இன்னும் சொல்லப் போக,

கீழிருந்து லோகா,

“காதல் ஒரு பருப்பு

இப்போ பறந்து வருது பாரு செறுப்பு” என கத்த கூட்டத்தில் கொல்லென சிரிப்பலை.

நடுவர்களுக்குக் கூட சிரிப்பை அடக்க முடியவில்லை. லோகாவை முறைத்தப்படியே கீழே இறங்கினாள் ஹேமா. அவளுக்குப் பிறகு இன்னும் சிலர் கவிதை படிக்க, மீனாட்சியின் முறையும் வந்தது.

மஞ்சள் தேவதையாய் அவள் மேடையேற ஆண் நடுவர்களின் கண்களில் கூட லேசாய் சலனம். எல்லோருக்கும் வணக்கம் சொல்லியவளின் பார்வை நடுவர்களின் அருகே நின்றிருந்த ரஹ்மானில் நிலைத்தது. அவனைப் பார்த்து புன்னகைத்தவள்,

“அன்பு எனும் மலர் சாற்றி

பாசம் எனும் திரி ஏற்றி

நட்பு எனும் நெய் ஊற்றி

மீனாட்சியாய் எனை போற்றி

வணங்கிடுவான் அவன்

என் மனதிற்கினியவன்

அன்பன் அவன் என் நண்பன்!

மலர்ந்த பூக்கள் எல்லாம்

ஒரு நாள் உதிர்ந்துப் போகும்

இப்புவியில் காற்றுள்ள வரை

உதிராமல் மணக்கும் பூ எங்கள் நட்பு(பூ)” என சொல்லிக் கொண்டே வந்தவளுக்கு கண்கள் கலங்க ஆரம்பிக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரஹ்மானுக்கும் தொண்டை அடைத்தது.

“நன்றி வணக்கம்” என சட்டென முடித்துக் கொண்டு கீழே இறங்கி விட்டாள் மீனாட்சி.

அதன் பிறகு இன்னும் பலர் வரிசையாக கவிதை சொன்னார்கள். கடைசி ஆள் கவிதை சொல்லி போட்டியை நிறைவு செய்ய,

“நடுவர்கள் முடிவை சொல்ல மேலும் அரை மணி நேரமாகும் என்பதால், நாங்கள் அறிவித்திருந்தது போல நாட்டிய நாடகம் இப்பொழுது அரங்கேறும். அது முடிந்த கையோடு வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி நிகழ்ச்சி ஒரு நிறைவைக் காணும்” என ரஹ்மான் அறிவித்தான்.

“தலைவரே! டீம்ல எல்லாம் கவிதை சொன்னாங்க! நீங்க மட்டும் டபாய்க்கப் பார்க்கறீங்க! உங்க கவிதை எங்க?” என பெண்கள் பக்கம் இருந்து ஜொள்ள, புன்னகையுடன் ஆரம்பித்தான் ரஹ்மான்.

“ஊமை பேசாத பாஷையாய்

குருடன் பார்க்காத பார்வையாய்

செவிடன் கேட்காத கீதமாய்

முடவனுக்கெட்டாத கொம்புத்தேனாய்

காதல் பூத்ததுதான் ஏனோ

நான் புழுங்கி சாகத்தானோ!!!!

தரையில் துடிக்கும் மீனும்

நீரில் தவிக்கும் மானும்

சேர்ந்தால் பாவம்தானோ!!

என் காதல் சாபம்தானோ!!!!!” என புன்னகையுடன் அழகாய் கவிதை சொல்லியவன், உள்ளுக்குள் அழுது வெளியே சிரித்தப்படி நாட்டிய நாடகத்துக்கு வழி விட்டு கீழே இறங்கி வந்தான்.

“காதல் தோல்வி கவிதை செம்மையா இருந்துச்சி ரஹ்மானு! நீதான் அந்த சூமந்திரக்காளிய லவ் பண்ணவே ஆரம்பிக்கல, அதுக்குள்ள புட்டுக்கிட்ட மாதிரி என்னம்மா கவிதை சொல்ற! எனக்கே சிலிர்த்துக்கிச்சுப் பாரேன்!” என தன் கையை நீட்டி அவனிடம் காட்டினாள் மீனாட்சி. பதிலுக்கு புன்னகையை மட்டுமே பரிசாய் கொடுத்தான் ரஹ்மான்.

முடிவு அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவையடைய இரவு மணி பன்னிரெண்டை எட்டி விட்டது. மீனாட்சி ஹேமாவுடன் கிளம்பிப் போயிருக்க, ரஹ்மான் நடுவர்களை அனுப்பி விட்டு லெக்சர் ஹாலில் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான் நண்பர்களுடன். வேலை நடுவே போன் சத்தமிட, பாக்கேட்டில் இருந்து வெளியே எடுத்தான் இவன்.

“என்னாச்சு ஹேமா?”

“சீனியர், சீனியர்….அய்யோ சீனியர், அம்மனுக்கு….”

 

(ஜீவன் துடிக்கும்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ்..ஹெப்பி வீக்கேண்ட்! லவ் யூ ஆல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!