Kaalangalil aval vasantham 3 (1)

Kaalangalil aval vasantham 3 (1)

அத்தியாயம் மூன்று

மிதமான வேகத்தில் ஈஸிஆரில் கார் போய் கொண்டிருந்தது. இளையராஜா இதமாக வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிருந்தார். பிரீத்தியோடு இரவுணவை முடித்துக் கொண்டு, அவளை அவளது ஹாஸ்டலில் விட்டுவிட்டு, ஸ்வேதாவின் வீட்டை நோக்கிப் போய் கொண்டிருந்தான்.

யோசித்துப் பார்த்தால் வேண்டுமென்றே தான் பிரீத்தியோடு உணவுண்டு இருந்தான், ஸ்வேதாவை கடுப்பாக்கவென்றே! அதோடு பிரீத்தியை அவளது ஹாஸ்டலில் வேறு டிராப் செய்திருந்தான். அவ்வளவு நேரமும், ஸ்வேதா கால் செய்து கொண்டே தானிருந்தாள். சுமாராக ஐம்பது முறையாவது அழைத்திருப்பாள். அத்தனை கோபம் அவளுக்கு.

இவன் தான் செல்பேசியை சைலன்ட்டில் வைத்திருந்தானே! எப்படியும் விடாமல் அழைப்பாள் என்பது தெரியும். ஒரு முறை எடுக்காவிட்டால் விட்டுவிடும் ரகமல்ல அவள்! திரும்ப திரும்ப, திரும்ப திரும்ப அழைத்திருந்தாள், அவளும் விடாமல்!

அதிலும் கடைசியாக பேசுகையில் அவனை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றிருந்தாள்.

“சரி இப்ப எங்க இருக்க ஷான்?”

“அதை அவசியம் சொல்லியே ஆகணுமா?” பல்லைக் கடித்துக் கொண்டு இவன் கேட்க,

“அஃப்கோர்ஸ்…” என்றாள், தீர்க்கமாக!

“சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு ஸ்வேதா?”

“பிகாஸ் வி ஆர் கமிட்டட். டோன்ட் யூ தட் இடியட்?” கோபத்தில் அவள் கத்த,

“எஸ், ஐ நோ. அப்கோர்ஸ் ஐ அக்னாலட்ஜ் இட். ஆனா இதை நீ பப்ளிக்கா அனௌன்ஸ் பண்ணுவியா?” கசப்பாக சஷாங்க் கேட்க, மறுபுறம் மௌனித்தது.

“சொல்லு ஸ்வேதா. அட்லீஸ்ட் பப்ளிக்கா அக்னாலட்ஜ் பண்ணுவியா?” இறுக்கமாக இவன் கேட்க,

“எல்லாம் தெரிஞ்சுதானே என்னோத் ரிலேஷன்ஷிப்ல இருக்க ஷான்?” அவளது குரலில் நடுக்கம் வெளிப்படையாக தெரிந்தது.

“தெரிஞ்சுன்னா என்ன மீன் பண்ற?” கூர்மையாக கேட்டான்.

“என்னோட வேலை. என்னோட கமிட்மெண்ட்ஸ். என்னோட லிமிடெஷன்ஸ்…”

“எல்லாம் உன்னோட, உன்னோட உன்னோட… ஒய் டோன்ட் யூ திங் அபௌட் மீ டாமிட்?”

பதில் கூறாமல் மௌனமாக இருந்தவளை நினைக்கையில் எரிச்சலாக இருந்தது. எதிரில் ப்ரீத்தி வேறு. வெகு சங்கடமாக உணர்ந்தான். அவள் எதிரில் இத்தகைய வாக்குவாதம் தேவையில்லை தான். ஆனால் ஸ்வேதா சற்றும் புரிந்து கொள்ள மறுப்பது அவனுக்குள் பெரும் கோபத்தை தூண்டி விட்டிருந்தது. இவளால் வீட்டில் உள்ள அனைவரையும் பகைத்துக் கொண்டு, சண்டையிட்டு…

“எனக்கு இப்படியொரு சீக்ரட் ரிலேஷன்ஷிப் தேவையில்ல ஸ்வேதா…” என்று முகத்திலறைந்தார் போல கூறியவன், இணைப்பை துண்டித்தான்.

ரெஸ்டாரன்ட்டில் அமர்ந்தபடி அவனை எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரீத்தி. ஏனென்றால் இவையெல்லாம் கடந்த இரண்டு மாதமாக பழகிப் போயிருந்தது அவளுக்கு.

பிரீத்திக்கு தெரிந்தவரை கடந்த ஆறு மாத பழக்கம் தான் இது. அதிலும் இந்த கடைசி இரண்டு மாதங்களாகத்தான் இருவரிடையில் இப்படி வாக்குவாதங்கள்!

இதையெல்லாம் பார்க்கும் போது, காதல் என்றாலே காத தூரம் தான் ஓடத் தோன்றியது. எதற்கு காதலிக்க வேண்டும், எதற்காக இப்படி அடித்துக் கொள்ள வேண்டும்?

மானங்கெட்ட காதல்!

அந்த காதல் யாருக்குமே தேவையில்லை!

மனதுக்குள் அவளொரு கோணத்தில் யோசித்துக் கொண்டிருக்க,

“சாரி ப்ரீத்…” என்றவன், “இங்க தாய் க்ளாஸ் நூடுல்ஸ் நல்லாருக்கும். வாட் டு யூ வான்ட் டூ ஆர்டர்?” என்று சட்டென்று அவனது முகத்தை மாற்றிக் கொள்ள, பிரீத்திக்கு தான் சங்கடமாக இருந்தது.

“எனக்கு வெஜ் ஹக்கா நூடுல்ஸ் போதும்…” என,

“கூட ஏதாவது சூப்…” என்று கூறியபடி அவன் மெனுவை பார்க்க,

“இல்ல பாஸ்… அது போதும்…” என்றாள். எப்படியாவது முடித்துக் கொண்டு ஓடி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான்.

“நோ… வேற ஏதாவது கூட, ஸ்டார்ட்டர் மாதிரியாவது ஆர்டர் பண்ணலாம்…” என்றபடி அவன் மெனுவை மேய்ந்தான்.

அவனது முகத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் காண முடியவில்லை. உணர்வுகளை எப்போதும் வெளிக்காட்ட அவன் விரும்ப மாட்டான் என்பது தெரியும். ஆறு மாதம் முன்பென்றால், இதை விட இறுக்கமான, உணர்வுகளை மிகுந்த கட்டுப்பாட்டில் வைக்கத் தெரிந்த சஷாங்கனை அவளுக்கு தெரியும்.

ஸ்வேதாவுடன் காதலென்று ஆன பின் இத்தனை நாட்களாக அந்த இறுக்கம் தளர்ந்து இருப்பதையும் பார்த்திருக்கிறாள்.

காதலில் ஊடலும் கூடலும் சகஜம் தான் என்ற நிலையில், அவனது இப்போதைய கோபம் கூட அவளுக்கு சற்று சிரிப்பை வரவழைத்தது.

அவளது முகத்தில் இருந்த சிரிப்பைக் கண்டவன்,

“மேடம் எத பாத்து சிரிக்கறீங்க?” மெனுவை மூடி வைத்தபடி கேட்க,

“உங்க கோபத்தைப் பார்த்து தான் பாஸ்…” என்று அதே சிரிப்போடு கூற,

“என்னோட தலைவலி உனக்கு சிரிப்பா இருக்கா?”

“தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள், அகறலின் ஆங்கொன்றுடைத்து…” என்றவள், “இந்த ஊடலை கூட எஞ்சாய் பண்றீங்க பாஸ்…” என்று கிண்டலடிக்க,

“என்னது இது?”

“ஹும்ம்… திருக்குறள் பாஸ்…” சிரித்தாள்!

“ஸ்கூல்ல கூட இதையெல்லாம் நான் படிச்சதில்ல…”

“அப்பறம் எப்படி பாஸ், பாஸ் பண்ணீங்க?”

“எக்ஸாம்ல பாஸ் பண்ண நாம தான் படிக்கணும்ன்னு அவசியம் இல்ல. நமக்கு முன்னாடி இருக்கவன் படிச்சா போதும் ஆபீசர்…” என்று சிரிக்காமல் கூற,

“பாஸ்… அதுக்கு பேர் காபி அடிக்கறது…” என்று இவளும் சிரிக்கவே சிரிக்காமல் கூற,

“இருக்கட்டும்… சோ வாட்? அவன் ஹார்ட் வொர்க் பண்ணான்… நான் ஸ்மார்ட் வொர்க் பண்ணேன்…” என்று உதட்டை மடித்து வைத்துக் கொண்டு நக்கலடிக்க,

“நீங்க எப்பவுமே ஸ்மார்ட் வொர்க் தான பாஸ் பண்ணுவீங்க?” அவனது வேலைகளை எல்லாம் தன் மேல் கட்டுவதை நினைத்து நக்கலாக கேட்க,

“அப்கோர்ஸ்…” என்றவன், செல்பேசி அழைக்கவும் முகம் மாறினான்.

மீண்டும் ஸ்வேதா தான்!

ஆனால் அவனுக்கு முந்தைய கோபமில்லை! அதே கோபத்தில் இருந்திருந்தால், கண்டிப்பாக எடுக்கக் கூட நினைக்க மாட்டான்.

பிரீத்தியிடம் வம்பளத்துக் கொண்டிருந்தது, அவனது உணர்வுகளை மடை மாற்றியிருந்தது!

“ஜஸ்ட் ஏ மினிட்…” என்று பிரீத்தியிடம் கூறியவன், செல்பேசியை எடுத்து,

“சொல்லு…” என்றான், கண்டிப்பான குரலில்! அவளது இயல்பை அப்படியே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை அவன் புரியவைத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

“சாரி… சாரி… சாரி… சாரி… இன்னும் ஒரு லட்சம் சாரி ஷான். பிளீஸ்…” முந்தைய பேச்சுக்கு சற்றும் பொருத்தமில்லாமல் அவள் கெஞ்ச ஆரம்பிக்க, அவனுக்குள் ஒரு சோம்பலான பெருமூச்சு எழுந்தது.

இதுதான் எப்போதுமேயான வாடிக்கை!

மிஞ்சுவது, தான் மிஞ்சினால் கெஞ்சுவது!

“ஹும்ம்…”

“ப்ளீஸ் ஷான்… ஏதோ டென்ஷன்ல இருந்தேன். உன்னை வேற ரெண்டு நாளா பார்க்கலையா… அதான்… அந்த டென்ஷன்ல பேசிட்டேன்.” என்று இன்னும் இறங்கிக் கெஞ்ச,

“ஹும்ம்…”

“ப்ளீஸ் ஷான்… ஏதாவது பேசு…” என்றவளின் குரல் உடைந்து நா தழுதழுத்தது! ஆர்டர் செய்த உணவுகள் வந்திருந்தது.

“ரெஸ்டாரண்ட்ல இருக்கேன். அப்பறமா பேசறேன்…” என்று முடித்துவிட்டு வைக்கப் போக,

“ரெஸ்டாரண்ட்லையா? பிஸினஸ் பேசிட்டு இருக்கியா?” அவளது குரலில் கூர்மை மீண்டிருந்தது!

“ஷால் ஐ செர்வ் மேடம்…” சஷாங்கன் பேசிக் கொண்டிருந்ததால், சர்வர், பிரீத்தியிடம் அனுமதி கேட்க,

“எஸ் ப்ளீஸ்…” என்றாள், அவன் ஏதாவது மறுமொழி கூறுகிறானா என்பதை பார்த்தபடியே!

“நோ… சாப்பிட வந்தேன்…” ஸ்வேதாவிடம் பதில் கூறிய அவனது குரலில் அதே அழுத்தம்! ஆனால் ப்ரீத்தி பேசியது, அந்த பக்கத்தில் ஸ்பஷ்டமாய் காதில் விழுந்து விட,

“யார் கூட?” என்று கேட்டாள், அவனைப் போலவே அழுத்தமாக!

“ஏன்? உனக்கென்ன?”

“ஜ.. ஜஸ்ட்… கேட்டேன்…” சற்று தயங்கினாலும், அவள் பேசியை வைக்கவில்லை. அவளுக்கு தெரிந்து கொண்டாக வேண்டும், யாரோடு போனான் என்று!

“சரி வைக்கறேன்…” என்று இவன் வைக்கப் பார்க்க,

“அந்த பிரீத்தியோட தான் இருக்கியா?” என்று அவள் தேள் கொட்டுவது போல கேட்ட கேள்வியில் ஆயிரம் சந்தேகங்கள் கொட்டிக் கிடந்தது.

“சோ வாட்?”

“உனக்கு நான் ஒருத்தி போதாதா?”

“போதாது…”

“டோன்ட் யூ ஃபீல் அஷேம்ட்?”

“சர்ட்டன்லி நாட்…”

அவளது கோபம் மீண்டும் எவரஸ்ட்டை தொட்டது.

“உன்னை நான் நல்லவன்னு நினைச்சு…”

“நினைக்காத…”

அவளது கேள்விகளுக்கெல்லாம் நக்கலான பதில்களையே கூறிக் கொண்டிருக்க, ஸ்வேதா சற்று நிதானித்தாள். கொஞ்சம் மௌனமானவள்,

“பேபி…” அவளது காதலெல்லாம் சேர்த்து வைத்து குரலில் கொட்டி அழைக்க, மறுபுறம் கேட்டுக் கொண்டிருந்தவனால் அதற்கும் மேல் கோபத்தை இழுத்துப் பிடித்து வைக்க முடியவில்லை.

நிமிர்ந்து பிரீத்தியை பார்க்க முடியாமல், தலைகுனிந்தபடியே தலையை கோதிக் கொண்டவன்,

“ம்ம்ம்…” என்றான்.

“ப்ளீஸ் பேபி…”

“ஹும்ம்… சொல்லு…” என்றதிலேயே அவன் மலையிறங்கிவிட்டானென்பது ஸ்வேதாவுக்கு புரிந்து விட்டது.

அவனிடம் கோபத்தை காட்டி எகிறி நின்றால், அதற்கும் மேலாக எகிறி விடுவான் என்பதை அவள் சற்று தாமதமாகத்தான் புரிந்து கொண்டாள்.

இன்றைய பாடம் அவளுக்கு!

ஆனால் சற்று இறங்கி வந்து பேசினாலோ, அவன் மிக நல்லவன்!

அதை சாதுர்யமாக புரிந்து கொண்டவள், “சாரி பேபி… ப்ளீஸ்…” என்றவள், “நீயும் இல்லைன்னா நான் எங்க போவேன்?” என்று தழுதழுத்தவள், சற்று இடைவெளி விட்டு, “செத்துடுவேன்டா…” என்று அழுகையோடு முடிக்க, அவனால் அவளது அழுகையை தாள முடியவில்லை.

“ஷ்வேத்தா…” தவிப்பாக அழைத்தவன், முழுமையாக மலையிறங்கி இருந்தான்.

“ஐ நீட் யூ பேபி… ஐ நீட் யூ ஆல்வெய்ஸ்…”

அழுதபடி அவள் கூற, அவனால் அதற்கும் மேல் தாள முடியவில்லை.

“சரி வை ஃபோனை…” என்று இணைப்பை துண்டித்தவன், பிரீத்தியை நிமிர்ந்து பார்க்காமல், உணவில் மும்முரமானான்.

அவனது சங்கடம் புரிந்தது பிரீத்திக்கு!

“ஈஸி பாஸ்…” என்றவளை நிமிர்ந்து பார்த்தான் சஷாங்கன்.

அவளது முகத்திலிருந்த புன்னகை, அவனது உதட்டிலும் சிறிதாக ஒட்டிக் கொண்டது.

“ஐ ஆம் ட்ரையிங் டூ பி…” என்ற அவனது பதிலில் அவளது புன்னகை இன்னுமே விரிந்தது.

“நீங்க ரொம்ப பொசெஸ்ஸிவா இருக்கீங்கன்னு நினைக்கறேன் பாஸ்…”

“எஸ்… அப்கோர்ஸ்… அந்த பொசெஸிவ்னஸ்‌ தப்புக் கிடையாது ப்ரீத். இருக்கணும். எனக்குன்னு வந்ததுக்கு அப்புறம் என்னோடது மட்டும் தான்னு நான் நினைக்கறது தப்பா?”

“இல்ல பாஸ்… கண்டிப்பா இல்ல… ஆனா அவங்களோட ஸ்பேஸை நீங்க ஆக்குபை பண்ணலாமா?”

“வாட் டூ யூ சே?”

“அவங்க பிரொஃபெஷன் தெரிஞ்சு தானே லவ் பண்ணீங்க? இப்ப அதை கம்ப்லீட்டா விடணும்ன்னு நீங்க சொல்றது நியாயமா?” இருவருக்குமான பிணக்கே இதில் தான் ஆரம்பம் என்பதையும் அவள் அறிவாள். அனைத்தையும் அவள் முன்னர் தானே பேசுகிறான். அவளறியாமல் அவனிடத்தில் எதுவுமே இல்லையென்ற அளவுக்கு பிரீத்திக்கு அவன் பரிட்சயம்.

“அவ அந்த வேலையை விடலைன்னா வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க… இப்பவே நிறைய நெகடிவ்வா பேசறாங்க. அவங்க இன்னும் பேசற அளவுக்கு தானே அவ பிஹேவ் பண்றா? எனக்காக கொஞ்சம் விட்டுக் கொடுக்கக் கூடாதா ப்ரீத்?” என்றவனது குரல் கனமாக இருக்க, சட்டென தன் முன் இருந்த தண்ணீரை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டான்.

கொஞ்சம் மௌனமாக இருந்தவன், “அவளோட பாஸ்ட் பத்தி எனக்கு இஷ்யூஸ் இல்ல. பழைய விஷயம் எதுவுமே எனக்கு வேண்டாம். ஆனா என் வீட்ல இருக்கவங்க அப்படியே நினைப்பாங்களா? ஆனா அவளை என்னால விட்டுத் தர முடியாது. ஏன்னா…. ஏன்னா… அவளை அவ்வளவு லவ் பண்ணிட்டேன். ஒய் டோன்ட் ஷி ஹானர் மை பீலிங்க்ஸ்? என்னோட பியூச்சர் அவ கூடத்தான். ஆனா அதே நினைப்பு அவளுக்கும் வேணுமா இல்லையா?” என்று கேட்க, அவளால் மறுத்துப் பேச முடியவில்லை. இவன் கூறுவதும் நியாயம் தானே?

 

 

error: Content is protected !!