Kadhal – 17

Kadhal – 17

மேக்னா தன் முன்னால் நின்ற நபரை பார்த்து பேச வார்த்தைகள் மறந்து போய் நிற்க புன்னகையுடன் அவள் முன்னால் வந்து நின்ற தனபாலன்
“பரவாயில்லையே! நான் சொன்ன வேலையை சரியாக பண்ணிட்ட சபாஷ்!” என்றவாறே அவளது கையில் இருந்த பெட்டியை வாங்கி கொள்ள

கோபமாக அவரை முறைத்து பார்த்தவள்
“எதற்கு ஸார் இப்படி பண்ணீங்க? உங்க பணத்தை திரும்ப உங்க கிட்டயே தர வைக்குறதுக்கு என்னை எதற்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அலைய வைத்தீங்க?” படபடவென பொரிந்து தள்ள

தன் காதை தேய்த்து விட்டு கொண்டவர்
“இப்படி வாம்மா! வந்து உட்காரு” என்றவாறு அங்கே போடப்பட்டிருந்த மர நாற்காலியை சுட்டிக் காட்டியவாறே அமர்ந்து கொண்டார்.

மேக்னா அவர் சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாதது போல தன் கைகளை கட்டிக் கொண்டு விறைப்பாக நிற்கவும் அவளது அந்த நிலையை பார்த்து மெச்சுதலாக தன் புருவம் உயர்த்தியவர்
“இது உனக்கு நான் வைத்த ஒரு சின்ன டெஸ்ட் மேக்னா” என்று கூறவும்

“டெஸ்டா?” சற்றே கேலி கலந்த குரலில் அவள் அவரை நோக்கினாள்.

“இப்போ நீ என் நண்பன் சுதர்சனை கடத்தி வைத்து பணம் வாங்கி இருக்க, அந்த பணத்தை வைத்து ஒரு வயதான ஆளுக்கு ஆபரேஷன் பண்ணி அவங்களுக்கு பொண்ணா மாறிட்டா

அதேமாதிரி ஒரு பொண்ணு கிட்ட வம்பு பண்ண என் தம்பி, அவனோட பிரண்ட்ஸை அடித்து துவம்சம் பண்ணி இருக்க அது மட்டுமில்லாமல் அரெஸ்ட் பண்ண வந்த போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவிட்டு தைரியமாக என் இடத்திற்கே வந்து நான் கொடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்க சொல்லி வந்து நின்ன

இது எல்லாம் வைத்து பார்க்கும் போது உன்னை அவ்வளவு சாதாரணமாக எடை போடக் கூடாது இல்லையா அதனால தான் இந்த சின்ன பரீட்சை இப்போ நீ தெரிந்தோ, தெரியாமலோ எனக்கு சம்பந்தமான ஆட்களையே தேடி தேடி வறுத்தெடுத்து இருக்க ஒரு வேளை இதை எல்லாம் உங்க ஆசிரமத்தில் நடந்த விஷயங்களுக்காக பழி வாங்க கூட நீ பண்ணி இருக்கலாம் இல்லையா?”

“ஸார்!” தன்னைப் பற்றி எல்லா விடயங்களையும் அக்கு வேறாக, ஆணி வேறாக தனபாலன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியாகி நின்ற மேக்னா இறுதியில் தன் மனதிற்குள் இருந்த விடயத்தை சரியாக கணித்தது போல அவர் கூற அவளோ முற்றிலும் கதி கலங்கிப் போனாள்.

“நான் அப்படி எதுவும் பண்ண வரல” தன் தடுமாற்றத்தை மறைத்து கொண்டவாறே அவள் பதிலளிக்க

புன்னகையுடன் அவள் முன்னால் எழுந்து வந்து நின்றவர்
“அதை கண்டு பிடிக்க தான் இந்த வேலையை நான் உன் கிட்ட கொடுத்தேன் ஒரு வேளை நீ என்னை உண்மையாக பழி வாங்கும் எண்ணத்தோடு தான் இதை எல்லாம் பண்ணி இருந்தேன்னா இந்த பணத்தை நீ வேற ஏதாவது பண்ணி இருப்ப ஆனா அப்படி எதுவும் பண்ணல அதற்காக நான் உன்னை முழுமையாக நம்பிட்டேன்னு நினைக்காதே! இது ஆரம்ப கட்ட சோதனை தான் இதே மாதிரி பல படிகளை நீ கடக்க வேண்டி இருக்கும் அதற்கும் தயாராக இரு” சவால் விடுவது போல கூற

அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தவள்
“இப்படி நம்பிக்கை இல்லாமல் எனக்கு வேலை தந்து இருக்குறதை விட என்னை என் வழியிலேயே போக விட்டு இருக்கலாமே?” கேள்வியாக அவரை நோக்கினாள்.

“நீ என் எதிரி! எதிரியை நேருக்கு நேராக சந்தித்த பிறகு நீயா? நானா? என்று சண்டை போடுவதை விட அந்த எதிரியோட பலவீனத்தை பயன்படுத்தி நம்ம கூடவே வைத்து இருப்பது நமக்கு நூறு மடங்கு பாதுகாப்பானது அது உனக்கு தெரியுமா?”

“அப்போ உங்க சுய நலத்திற்காக என்ன வேணும்னாலும் பண்ணுவீங்க அப்படித்தானே?”

“ஆமா! கண்டிப்பாக அது தானே உண்மை! நான் ஒரு அரசியல்வாதி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக அரசியல் பண்ணுறேன் இந்த சின்ன விசயத்தை பற்றி நான் யோசிக்காமல் இருப்பேனா?” தனபாலன் நக்கலாக மேக்னாவைப் பார்த்துக் கேட்க அவளுக்கோ வயிற்றில் இருந்து தொண்டை வரை ஒரு பயப்பந்து உருளுவது போல பிரமை உருவானது.

இருந்தாலும் முயன்று தன்னை இயல்பாக இருப்பதை போல காட்டிக் கொண்டவள்
“சரி ஸார்! நீங்க என்னை எப்போது வேண்டுமானாலும் நம்புங்க அது ஒரு புறம் இருக்க என்னோட அடுத்த வேலை என்ன அதை சொல்லுங்க?” தற்காலிகமாக அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு வேறு பேச்சின் பால் அவரது சிந்தனையை திருப்ப முயன்றாள்.

“நல்லா பேச்சை மாற்ற கத்துட்டு இருக்க பரவாயில்லை நீ பிழைச்சுக்குவ உன்னோட அடுத்த வேலை நாளைக்கு தான் இப்போ நீ போகலாம்”

“என்ன?” மேக்னா குழப்பத்துடன் அவரைப் பார்க்க

“நாளைக்கு காலையில் பத்து மணிக்கு வேலைக்கு வந்துடு” அத்துடன் பேச்சு வார்த்தை முடிந்தது போல தனபாலன் வீட்டிற்குள் சென்று விட

மேக்னாவோ முகம் சிவக்க கோபத்துடன்
‘இந்த ஆளு அவன் மனதில் என்ன நினைச்சுட்டு இருக்கான்? வேலை தர்றதாக சொல்லிட்டு அங்கேயும், இங்கேயும் அலைய வைக்கிறான் இந்த ஆட்டம் எல்லாம் கொஞ்ச நாள் தான் இந்த தனபாலனின் சாம்ராஜ்யம் தவிடுபொடியாக போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை’ மனதிற்குள் கறுவிக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தாள்.

‘ஆனாலும் அந்த ஆளு என் மேல் இன்னும் முழுமையாக நம்பிக்கை வைக்கல அந்த ஆளோட நம்பிக்கையை எப்படியாவது எடுத்துக் கொள்ளணும் அதற்கு அப்புறமாக தான் என்னோட ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வைக்கணும்’ பல்வேறு பட்ட சிந்தனைகளினூடே பேருந்து ஏறி தன் வீடு வந்து சேர்ந்தவள் நடராஜன் மற்றும் வள்ளி வேலை தொடர்பாக கேட்க அதற்கு பொதுவாக பதிலளித்து விட்டு தன்னறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.

அதன் பிறகு தனபாலன் கொடுத்த ஒவ்வொரு வேலைகளையும் விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கடமைக்கு என செய்து கொண்டு வந்தவள் நாளாக நாளாக அவரது நம்பிக்கையையும் சிறிது சிறிதாக சேர்க்க ஆரம்பித்து இருந்தாள்.

ஒவ்வொரு நாளும் தனபாலனை அவருக்கே தெரியாமல் பின் தொடர ஆரம்பித்தவள் சிறிது நாட்களில் அவரது அன்றாட நடவடிக்கைகளின் தொகுப்பை தன் கை வசம் வைக்கும் அளவுக்கு அத்தனை மும்முரமாக தன் பழி வாங்கும் மன எண்ணத்தில் மூழ்கி போய் இருந்தாள்.

ஆள் மாறாட்டம், கட்டப்பஞ்சாயத்து, கடத்தல் என அரசாங்கத்தை ஏமாற்றும் வேலைகளே தனபாலனின் முக்கியமான பணம் பெறும் வழி முறைகள்.

அதில் பெரும்பாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை அல்லது ஆட்களை கொண்டு செல்வதே மேக்னாவின் பொறுப்பு.

போகும் வழியில் யாராவது, ஏதாவது பிரச்சினை விளைவிக்க வந்தால் அந்த தடைகளையும் மீறி அவள் செல்ல வேண்டும்.

எந்த வேலையை செய்ததாக சொல்லி ராணியிடம் அவள் சண்டையிட்டாலோ இப்போது அதே வேலையை தனபாலனுக்கு செய்ய வேண்டிய நிலையில் தான் இருப்பதை எண்ணி அவள் விரக்தி அடையாத நாட்களே இல்லை.

தான் செய்யும் வேலையை பற்றி தன் குடும்பத்தாரிடமோ, ராணியிடமோ சொல்ல முடியாத நிலையில் மேக்னா சிக்கியிருக்க அந்த வலையை உருவாக்கிய காரண கர்த்தாவான கடவுளோ அவளுக்கு இன்னும் இன்னும் பல சிக்கலான வலைகளை வீசக் காத்திருந்தார்.

மேக்னா தனபாலனிடம் வேலைக்கு சேர்ந்து ஒன்றிரண்டு மாதங்கள் கடந்து இருந்த நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டிருந்த தனபாலனினது தம்பியும், அவனது நண்பர்களும் டிஸ்சார்ஜ் ஆகி இருந்தனர்.

தனபாலனினது தம்பி மகேஷ் தன் அண்ணனின் அலுவலகத்தில் ஒரு ஆளாக வேலை பார்த்து கொண்டிருந்த மேக்னாவை பார்த்ததுமே கோபத்தில் சத்தமிடத் தொடங்க அவசரமாக அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த தனபாலன் விடாமல் சத்தமிட்டு கத்தி கொண்டிருந்த தன் தம்பியை அந்த இடத்தில் இருந்து அழைத்து கொண்டு சென்றார்.

“அண்ணா! நீ என்ன வேலை பார்த்து வைத்து இருக்க? என்னையும், என் பிரண்ட்ஸையும் அடித்து இரண்டு, மூணு மாதம் ஹாஸ்பிடலே கதின்னு இருக்க வைத்த அந்த பொண்ணை இங்கே ஆபிஸில் சேர்த்து வைத்து இருக்க! உனக்கு என்ன புத்தி கெட்டு போச்சா அண்ணா?” தனபாலனது அலுவலக அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்த படி மகேஷ் விடாது சத்தமிட்ட வண்ணம் இருக்க அவரோ சாதாரணமாக தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு அவனைப் பார்த்து கொண்டு இருந்தார்.

தான் கேட்ட கேள்விகளுக்கு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்த தன் அண்ணனின் முன்னால் கோபமாக வந்து நின்றவன்
“அண்ணா! நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் நீ என்னடான்னா இவ்வளவு அமைதியாக இருக்க? சொல்லுண்ணா எதற்கு அந்த ராட்சசியை இங்கே வேலைக்கு சேர்த்த?” என்று கேட்கவும்

அவனருகில் எழுந்து நின்று கொண்டு அவனது தோளில் கை போட்டு கொண்டவர்
“இப்போ நீ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் எல்லாம் போக போக நீயே புரிஞ்சுப்ப அது மட்டுமில்லாமல் இப்போ நான் என்ன சொன்னாலும் உனக்கு அது பதிலாக தெரியாது மாறாக கோபத்தை அதிகரிக்கும் விஷயமாக தான் இருக்கும் அதனால இதோடு மேக்னாவை பற்றி பேசுவதை விட்டுட்டு உன் வேலையை கவனி போ!” என்று கூற கோபத்துடன் அவரது கையை தட்டி விட்டவன் அதே கோபத்துடன் அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றான்.

தனபாலனின் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த மேக்னா அவர்கள் இருவரும் பேசியதை எல்லாம் கேட்டு விட்டு தன் மனதிற்குள் அடுத்து என்ன செய்வது என்று வேகமாக திட்டம் தீட்டத் தொடங்கினாள்.

அண்ணன் – தம்பிக்கு இடையில் உருவான ஒரு சிறு பிளவு மேக்னாவின் திட்டத்தை இலகுவாக நடை முறைப்படுத்த அவளுக்கு உதவி பண்ணியது.

மகேஷ் மேக்னாவை தனபாலனின் அலுவலகத்தில் பார்க்கும் நேரம் எல்லாம் அவளை முறைத்து கொண்டே செல்ல அவளோ அவனைப் பார்த்து நக்கல் சிரிப்போடு அவனைக் கடந்து செல்வாள்.

அது மட்டுமில்லாமல் அவனைப் பார்த்தும், பார்க்காமல் அவள் கடந்து செல்லும் போதெல்லாம் அவனுக்குள் கோபம் கொழுந்து விட்டெறியத் தொடங்கும் அதை அவனது முகத்திலேயே பார்த்து அவள் மனதிற்குள் பெருமளவு திருப்திபட்டுக் கொள்வாள்.

அவளது இந்த நடவடிக்கைகளே மகேஷ் மற்றும் தனபாலனுடனான பிளவை இன்னும் அதிகமாக்கி இருக்க அது மேக்னாவிற்கு இன்னமும் சாதகமாகிப் போனது.

அன்று…..

மகேஷ் தன் நண்பர்களுடன் வெளியூர் செல்வதற்காக தனபாலனிடம் பணம் கேட்டு செல்ல வேறு ஒரு முக்கியமான வேலையில் இருந்தவர் அவனுக்கு பணம் தர மறுத்து இருக்க கோபத்துடன் அவரிடம் சத்தமிட்டு கத்தி விட்டு வெளியேறி வந்தவன் ரிஷப்சனில் நின்று கொண்டிருந்த மேக்னாவையும் பார்த்து தன் ஒட்டுமொத்த கோபத்தையும் கொட்டி விட்டு சென்றிருந்தான்.

அன்றைய தினம் முக்கியமான ஒரு அரசியல் கட்சி கூட்டம் ஒன்று இருக்கவும் தனபாலன் அந்த வேலைகளில் மூழ்கி இருக்க அவர் மேக்னாவைப் பற்றியோ, மகேஷைப் பற்றியோ கவனித்து இருக்கவில்லை.

வழக்கமாக இரவு எட்டு மணிக்கு வேலையில் இருந்து தன் வீடு திரும்புபவள் அன்றைய தினம் தன் வீட்டிற்கு செல்லாமல் மகேஷ் மற்றும் அவனது நண்பர்கள் வழக்கமாக ஒன்று கூடி இருக்கும் ஒரு பாழடைந்த குடோனிற்கு சென்று காத்து நின்றாள்.

பல தவறான சம்பவங்கள் வழக்கமாக நடக்கும் இடம் அது என்பதால் அந்த பக்கம் ஆள் நடமாட்டமோ வேறு எந்த கண்காணிப்புகளோ அங்கே இருக்காது.

மேக்னா எதிர்பார்த்து காத்திருந்தது போலவே மகேஷ் மற்றும் அவனது நண்பர்கள் நான்கு, ஐந்து பேர் கூட்டமாக முழு போதையில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்து இருந்தனர்.

பல நாட்களாக மனதிற்குள் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்த கோபத்தை ஆற்ற வழி தெரியாமல் மகேஷ் போதையில் தன்னை மூழ்கடித்து கொண்டு மேக்னாவையும், தனபாலனையும் பற்றி திட்டிக் கொண்டு இருக்க அவனது நண்பர்களும் அவனுடன் சேர்ந்து ஆமாம் போட்டுக் கொண்டு இருந்தனர்.

இதழில் ஒரு இகழ்ச்சி புன்னகையுடன் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு நின்றவள் தன் கைப்பையில் இருந்து கையுறை ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு அந்த இடத்தில் கீழே கிடந்த ஒரு இரும்புக் கம்பியை தூக்கி கொண்டு அவர்கள் முன்னால் சென்று நின்றாள்.

மகேஷின் நண்பர்கள் எல்லோரும் முழு போதையில் தங்களை மறந்து அவனது காரிற்குள் அசந்து தூங்கி கொண்டிருக்க அவன் மாத்திரம் மேலும் மேலும் போதையைத் தேடிய வண்ணம் நின்று கொண்டிருந்தான்.

போதையில் கண்கள் இரண்டும் மங்கலாகிப் போக தன் முன்னால் ஏதோ ஒரு புகை போன்ற உருவம் நிற்பதைப் பார்த்து தன் கண்கள் இரண்டையும் கசக்கியவன்
“ஏய்! யாருடா அது?” தன் கண்களை மேலும் நன்றாக விரித்து கைகளால் முன்னால் காற்றில் துளாவ அவனது கைகளை தன் கையில் இருந்த கம்பியால் தட்டி விட்டவள் ஓங்கி அவனது தலையில் அடிக்கப் போக சற்று தள்ளி யாரோ ஒருவர் முனங்கும் சத்தம் கேட்டு அச்சத்துடன் சுற்றிலும் திரும்பி பார்த்தாள்.

அங்கு நின்று கொண்டிருந்த அவனது காரின் பின்னால் இருந்து சத்தம் வரவும் அவசரமாக அந்த பக்கம் சென்றவள் ஒரு சிறு பெண் பிள்ளை கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாய் பிளாஸ்திரியால் ஒட்டப்பட்டு இருப்பதை பார்த்து வேகமாக அந்த பெண்ணின் கை, கால் மற்றும் வாய் கட்டை அவிழ்த்து விட்டாள்.

அவள் அந்த கட்டுகளை அவிழ்த்து விட்ட அடுத்த நொடியே
“அக்கா! என்னை காப்பாற்றுங்க” ஒரே தாவலில் அந்த பெண் பிள்ளை மேக்னாவை கட்டி கொண்டாள்.

“உனக்கு எதுவும் ஆகாது ம்மா! அழாதே! நான் இருக்கேன் இல்லையா?” ஆதரவாக அந்த பெண் பிள்ளையை அணைத்து கொண்டு அவளது கண்களை துடைத்து விட்டவள்

“இங்கே என்ன நடக்க இருந்ததுன்னு எனக்கு புரியுது இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் வெறும் அடியோடு அன்னைக்கு விட்டது என் தப்பு!” என்றவாறே எழுந்து கொண்டு போதையில் தள்ளாடியபடி நின்ற மகேஷின் தலையில் தன் கையில் இருந்த கம்பியால் ஒரே ஒரு அடி அடிக்க

அவனோ
“அம்மா!” என்ற அலறலோடு தலையை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தான்.

அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த அந்த சிறு பெண் தன்னை காப்பாற்றுவதற்காக தான் அப்படி அவள் செய்தாள் என்றெண்ணி
“ரொம்ப நன்றி க்கா!” தன் இரு கரம் கூப்பி கூற புன்னகையுடன் அவளைப் பார்த்து தலை அசைத்தவள் காரில் மகேஷின் உடலை ஏற்றி விட்டு அந்த சிறு பெண்ணையும் அழைத்து கொண்டு சற்று தள்ளி இருந்த ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத பாலத்தை நோக்கி அந்த காரை செலுத்தி கொண்டு சென்றாள்.

ஏற்கனவே அந்த பாலத்தில் இடிபாடுகள் இருக்க அந்த இடத்திற்கு நேராக காரை நிறுத்தியவள் சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு அந்த காரை தனியாளாக அந்த பாலத்தில் இருந்து தள்ளி விட்டாள்.

அநியாயமாக பல பேர் வாழ்க்கையில் அண்ணனும், தம்பியுமாக பல்வேறு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடி இருக்க அதற்கு எல்லாம் சேர்த்தாற் போல இன்று அதற்கு ஒரு முடிவுப்புள்ளிக்கான தொடக்கத்தை அவள் ஆரம்பித்து வைத்திருந்தாள்.

சிறு வயதில் இருந்து ஒரு சிறு துரும்பிற்கு கூட கெடுதல் நினைத்திராத தன்னை இப்படி நான்கு, ஐந்து உயிர்களை காவு வாங்கச் செய்து விட்ட தன் தலை விதியை எண்ணி நொந்து போனவள் தான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே முழங்காலிட்டு அமர்ந்து கொண்டு தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

அவள் செய்யும் ஒவ்வொரு செயலையும் வியப்பாக பார்த்து கொண்டிருந்த அந்த சிறு பெண் அவளருகில் வந்து
“நான் இதை யாரு கிட்டயும் சொல்ல மாட்டேன் அக்கா!” அவளது கையை பற்றி கூற கலங்கி, சிவந்து போய் இருந்த தன் கண்களை துடைத்து விட்டபடியே முயன்று வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் அந்த பெண்ணை அழைத்து கொண்டு அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றவள் அந்த பெண்ணின் வீட்டைத் தேடி அங்கே அவளை விட்டு விட்டு வரச் சென்றாள்.

நடுத்தர அளவில் இருந்த அந்த வீட்டின் முன்னால் ஒரு பெண்மணி தலையில் கை வைத்த வண்ணம் அமர்ந்து இருக்க
“அம்மா!” என்ற கூவலோடு மேக்னாவின் அருகில் இருந்த அந்த சிறு பெண் பிள்ளை அந்த பெண்மணியை நோக்கி ஓடிச் சென்று அணைத்து கொண்டாள்.

“சீதா! எங்கே டா போய் இருந்த? ஸ்கூலில் இருந்து நீ வீட்டுக்கு வரலன்னு தெரிந்ததும் அம்மா எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா?”

“நான் ஸ்கூல் விட்டு வரும் போது நாலு, ஐந்து பொறுக்கி பசங்க என்னை இழுத்துட்டு போயிட்டாங்கம்மா இதோ இந்த அக்கா தான் என்னை காப்பாற்றிக் கூட்டிட்டு வந்தாங்க” மேக்னாவின் புறம் அந்த பெண் பிள்ளை கை காட்ட

கண்கள் கலங்க அவளருகில் வந்து அவளது கரங்களைப் பற்றிக்கொண்ட அந்த பெண்மணி
“ரொம்ப நன்றி ம்மா! யாரு, எவர்னு தெரியாத எங்களுக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல” மனதார உணர்ந்து பேசவும்

பதிலுக்கு அவரைப் பார்த்து புன்னகைத்து கொண்டவள்
“நன்றி எல்லாம் வேண்டாம்மா ஏதோ என்னால முடிந்த சிறு உதவி சரி ம்மா நான் வர்றேன் ரொம்ப லேட் ஆகிடுச்சு வீட்டில் தேடுவாங்க” என்று விட்டு அங்கிருந்து செல்ல பார்க்க

“ஒரு நிமிஷம்மா!” அந்த பெண் அவசரமாக அவள் முன்னால் வந்து நின்றார்.

“என்ன ஆச்சு?”

“என் பொண்ணு வாழ்க்கையை காப்பாற்றி இருக்கீங்க உங்க பேரு என்னென்னு தெரிஞ்சுக்கலாமா?” தயக்கத்துடன் அவர் அவளை நோக்க

சிறு புன்னகையுடன் அவரை நிமிர்ந்து பார்த்தவள்
“காலமும், நேரமும் வரும் போது நீங்களே தெரிஞ்சுப்பீங்க” என்று விட்டு வேகமாக அந்த இடத்தில் இருந்து விலகி சென்றாள்.

அவள் கூறியதன் அர்த்தம் புரியாமல் அந்த பெண் அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டு நிற்க மேக்னாவோ தான் செய்த காரியத்தை எண்ணி தனக்குள்ளேயே மருகிக் கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தாள்.

வேலை முடிய தாமதமாகி விட்டது என்று வள்ளியிடமும், நடராஜனிடமும் காரணம் சொல்லியவள் தன்னறைக்குள் வந்து அமர்ந்து கொண்டு தன் இரு கைகளையும் வெறித்துப் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

‘பல பேருக்கு உதவி செய்து அவர்கள் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்த நானா இன்று கொலை செய்து விட்டு வந்து இருக்கிறேன்?’ கோபம், ஆற்றாமை, கவலை, குற்றவுணர்ச்சி என எல்லா உணர்வும் ஒன்று சேர தன் அருகில் இருந்த மேஜையின் மீது இருந்த கத்தியை எடுத்தவள் தன் கைகள் இரண்டையும் தாறுமாறாக வெட்டத் தொடங்கினாள்.

‘நான் செய்யும், செய்யப் போகும் ஒவ்வொரு தவறுக்கும் விசாரணை செய்பவளும் நானே! தண்டனை அளிப்பவளும் நானே!’ மேக்னாவின் மூன்றாவது டைரியில் பாதியைப் படித்து முடித்து இருந்த சித்தார்த்

‘ஒரு வேளை இந்த மேக்னா என் அப்பாவோட தங்கச்சி பொண்ணாக இருந்தால்! இல்லை! இல்லை! அப்படி மட்டும் இருக்கவே கூடாது!’ அதற்கு மேல் அந்த யோசனையோடு அந்த இடத்தில் இருக்க முடியாமல் விருட்டென்று எழுந்து கொள்ள மின் விசிறியின் குளிர்மை நிரம்பிய அந்த அறையிலும் மின்விசிறியின் குளிர்மையைத் தாண்டி அவனது முகத்தில் முத்து முத்தாய் வேர்வைத் துளிகள் பூக்க ஆரம்பித்தது……..

error: Content is protected !!