Kadhalil nan kathaadi aanen

KNKA – 21

ஸ்வாதி பெண்களுக்கான மேக் அப் ரூம்மில் இருப்பதால் சித்தால் உள்ள சென்று பார்க்க முடியவில்லை… இன்று என்ன ஆனாலும் அவளை பார்க்காமல் விடுவதில்லை!!

 

சில பெர்பார்மன்ஸ் முடிந்து , ஸ்வாதியும் பிருந்தாவும் ஆடும் நடனம் வந்தது. அழகாக மராத்தி பாணியில் புடவை கட்டி, ‘பிங்கா கா போரி பிங்கா’ என்று ஆரம்பித்தவுடனே அப்ளாஸ் அள்ளியது.சுழன்று சுழன்று ஆடிய ஸ்வாதியை பார்த்த சித்தின் மனம் தடதடத்தது. அவள் ஆடும் வேகத்திற்க்கு கீழே எதுவும் விழுந்து விடுவளோ என்றெல்லாம் பதறினான்…. எப்படா அவள் நடனம் முடியும் என்று ஆகி போனது அவனுக்கு….

 

அவள் நன்றாக ஆடி முடிக்க வேண்டும் என்பது மட்டும் அவனின் எண்ணமாக இருந்தது. அவளுக்கு சின்னதாக ஏதும் என்றாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்று புரிந்தது….

 

அவள் மேக்கப் கலைத்து விட்டு வரட்டும் என்று பாக் ஸ்டேஜ் பக்கம் போய் நின்று கொண்டான்….

 

மேக்கப்பை மட்டும் கலைத்து விட்டு, புடவையோடு வந்தவளை அந்த மெல்லிய ஒளி வெளிச்சத்தில் மேலிருந்து கீழே ஆற அமர ரசித்தான்!! இருட்டில் நின்ற அவனை கவனிக்காமல் வேகமாக ஹாஸ்டலை நோக்கி நடந்தாள் ஸ்வாதி.

 

சித்தை பார்க்க வேண்டாம் என்ற மனசே ஜெயித்ததால், வேறு எதுவும் ரசிக்கவில்லை..அதனால் ரூமக்கே போலாமென்று கிளம்பி விட்டாள்..

 

“ஸ்வாதி!”

 

சித்! “என்னை தேடி அவனே வந்துட்டனா? என்று துள்ளியது மனது!”

 

வேகமாக இவள் அருகில் வந்த சித்திற்கு , இவள் மன குழப்பம் எதுவும் தெரியாது இல்லையா, அதனால் அவன் எப்போதும் போல் அவளிடம் பேசினான்….

 

“இன்னிக்கு உன் டான்ஸ் பார்த்துட்டேன்!!! ஆனா இனிமே பார்க்கவே மாட்டேன் பா!!!!”

 

“ஏ… ஏன்….நல்…லா… இல்ல… யா…?”

 

“ஹே!! சூப்பரா இருந்தது, அதான் மொத்த ஆடிட்டோரியமும் அப்ளாஸ் கொடுத்துச்சே…….”

 

“அப்புறம் ஏன் அப்படி சொல்றீங்க என்று மெதுவாக கேட்டாள்…”

 

“அதுவா …அது இன்னொரு நாள் சொல்றேன்…”

 

ஆஆஆ…. ஏதோ ஒன்று அவள் காலில் கூசியது போல் இருந்ததால் பயந்து போய் முன்னால் நின்றிருந்த சித்தின் தோளை பிடித்துக் கொண்டு காலை  தரையில் இருந்து மேலே தூக்கி விட்டாள்….

 

ஒரு நிமிடம், திகைத்து பின் சிரித்தபடி இரு இரு என்னனு பார்ப்போம், என்று போன் டார்ச் அடித்தால், ஒரு பேப்பர்..பறந்து பறந்து நகர்ந்தது…

 

அப்போது தான் இருவருமே உணர்ந்தார்கள், அவள் காலை கீழே வைத்து விட்டாலும் அவன் தோளில் போட்ட கை, இப்போது கழுத்தை சுற்றி இருந்தது….

 

உணர்ந்து விலக முயன்றவளை விட வில்லை சித். இன்று அவன் அவளை தொடக்கூடாது  என்ற முடிவில் தான் வந்திருந்தான்….ஆனால் தானாக அமைந்த சந்தர்ப்பம், ஒரு வார பிரிவு,  சமீபமாக அறிமுகமாகிய தாபம் எல்லாம் சேர்ந்து மீண்டும்  மீள முடியாமல் மயங்கினான் சித்!

 

விலக முயன்றவளை சற்றென்று இடையில் கை வைத்து தடுக்க, புடவை என்பதால் ஈஸியாக வெற்று இடையை தொட்டு விட்டான்…. அவ்ளோ தான்!! அவன் உள்ளங்கை உலகத்தில் உள்ள எல்லா சுகத்தையும் சேர்த்து அனுப்பியது அவன் மூளைக்கு…

 

அவனை வேறு யாரோ இயக்குவது போல், அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, மெதுவாக அவள் இதழில் அழுத்தமாக முத்தமிட்டு பின் விட முடியாமல் சுவைக்க ஆரம்பித்தான்…….

 

அவனை விரும்புபவள் அல்லவா, அதனால் அவன் தொடுகை , முத்தம் எல்லாம் ரசித்து மயங்க  தான் செய்தது மனசு , பின் சட்டென்று விழித்துக் கொண்டது மூளை…..

 

ரசித்து முத்தமிட்டு கொண்டிருந்த சித்தை சுலபமாக தள்ளி விட்டாள் ஸ்வாதி.

 

அப்போது  தான் சுரணையே வந்தது சித்க்கு!!

 

“ஸாரி!! ஸாரி டா மா!! என்று அவளை நெருங்க முயற்சி செய்தான்!”

 

“அங்கேயே நில்லுங்க என்று கிரீச்சிட்டாள்”! இதுக்கு தான் நா உங்களை பாரக்காம அவாய்ட் பண்ணினேன்…. ஆனாலும் தேடி வந்து அதே பண்றீங்க……”

 

“வேணும்னு தான் என்னை அவாய்ட் பண்ணியா?என்று நம்ப முடியாமல் திரும்ப கேட்டான்!”

 

“இப்படி பண்ணுவீங்கனு தான் செஞ்சேன்!”

 

“என்ன செஞ்சேன்?”ஓரளவு கெஸ் பண்ணினாலும், அவள் என்ன சொல்கிறாள் என்று கேட்க நினைத்தான்.

 

“இப்படி தான், கட்டிபிடிக்கிறது, கிஸ் பண்றது என்று மூணுமுணுத்தாள்.”

 

“தப்பு தான் ஸாரி!”

 

அவனிடம் அவளுக்கு மிக பிடித்த விஷயம், தப்பென்றால் உடனே மன்னிப்பு கேட்பது, ஆனால் இப்போ மன்னிப்பு கேட்பதும் பிடிக்கவில்லை….

 

“உனக்கு பிடிக்கலைனா என்னை அவாய்ட் பண்ணாம நேராவே என்கிட்ட கேட்டு இருக்கலாமே, ஏன் இப்படி பண்றீங்கனு?”  சின்ன சிரிப்போடு  கேட்டான்…  அவன் அவளுக்கு தன்னிடம் கேட்க உரிமை இருக்கு என்று உணர்த்த அப்படி செய்தான்……

 

ஆனால் வேறு மனநிலையில் இருந்த ஸ்வாதியால் அதை சரியாக உணர்ந்துக் கொள்ள முடியாமல், “இதை வேற கேட்பாங்களா? நீங்க எல்லாம் உங்களுக்கு….தோன்றதை உடனே செஞ்சுருவீங்க! யாரைப்பத்தியும் கவலை இல்லை உங்களுக்கு….உங்க விருப்பம் தானே உங்களுக்கு பெருசு…..”என்று அவள் குழப்பத்தை எல்லாம் அவன் மேல் இறக்கினாள்!

 

“முன்னாடியும் உங்க இஷ்டத்துக்கு கட்டிபிடிச்சீங்க, அன்னிக்காவது பரவாயில்லை இன்னிக்கு பண்ணது எல்லாம் ….”சொல்ல முடியவில்லை அவளால்…..

 

“சரி, பர்ஸ்ட் தடவை அது வேற ஸ்டோரி, சோ லீவ் இட்… ஆனா போன தடவை நா கிட்ட வந்த அப்போ, கத்த வேண்டியது தானே, ஹெல்ப்னு! இல்ல இப்ப மாதிரி என்னை தள்ளி விட்ருக்கலாமே!!!” அவளுக்கும் அவனை பிடித்து இருக்கிறது என்பதை உணர்த்த தான் அவ்வாறு கூறினான்…..

 

ஆனால் ஸ்வாதி மண்டையில் தான் இப்போ வேற ஒரு கொம்பு முளைத்திருக்கிறதே….”ஓ!! நீங்க என்ன வேணா பண்ணலாம் அதை சொன்னா, இப்ப குறையை என் பக்கம் திருப்பிட்டீங்க……”அதுவரைக்கும் கூட அவள் மேல் அவனுக்கு கொஞ்சம் கூட கோவமோ, வருத்தமோ இல்லை!

 

காதலை கூட சொல்லவில்லை,அவளை தொட்டது தவறு என்று அவனுக்கும் தெரியுமே!!  ஆனால் அவள் அடுத்த சொல்லிய வார்த்தையை கேட்டு காயப்பட்டு போனான். ஸ்வாதியால் மட்டும் தானே சித்தை எல்லா வகையிலும் சிதறடிக்க முடியும்!!

அவள் பேசியது எதையும் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதாலோ, இல்லை மனதில் நெருடிக் கொண்டே இருந்ததாலோ, யோசிக்காமல் சொல்லிவிட்டாள் ஸ்வாதி,

 

அந்த சப்னாவையும் இப்படி தான் கட்டிப்பிடிச்சுட்டு நின்னீங்க , அப்புறம் என்ன ஆச்சுனே தெரியலை,  அவ காலேஜ் விட்டே போய்ட்டா……. அந்த மாதிரி .. இன்னும் என்ன சொல்லி இருப்பாளோ தெரியாது……..

 

“போதும் ஸ்வாதி!  இனப்! ஒன்னு மட்டும் சொல்லு! இப்போ சொன்னதெல்லாம் நீ நினைச்சிட்டு இருந்த, இருக்க விஷயமா??!! ஒன்னும் கன்பூயுஷன் இல்லேயே??”

 

அவன் நிதானமாக கேட்கவும், லைட்டா அல்லு விட்டது அவளுக்கு, சப்னா மேட்டர் எல்லாம் இழுத்து இருக்க வேண்டாமோ!

 

சொல்லிட்டு இல்லனு சொன்னா மானம் போய்டாது, தலையை ஆட்டியும் ஆட்டாமலும் அசைத்தாள்….

 

“ஓக்கே, நா என்னென்னவோ நினைச்சேன்! ம்ம்கூம்….இனிமே அது சரி வராது…. எப்போதும் உன் கிட்ட சாரி சொல்ற மாதிரியே இருக்கு என் நிலைமை….இன்னொரு முறை இப்படி நடந்தா , இந்த காலேஜை விட்டு போய்டுறேன் நான்…. ஸாரி போர் எவரித்திங்….என்றவன் கை கூப்பி விட்டு கிளம்பிவிட்டான்……”

 

அவன் அவ்வாறு சொன்னதும் கர கர வென்று கண்ணீர் வழிந்தது…. அட லூசே, அவனை இவ்ளோ லவ் பண்ணிட்டு, ஏதேதோ உளறி, அவனையும் காயப்படுத்தி தொரத்தி விட்டு, இப்ப அழுது என்ன யூஸ் !