Kalangalil aval vasantham 19(4)

Kalangalil aval vasantham 19(4)

“ம்ம்ம்.” என்றாள்.

“லவ்னா நெருக்கம் ரொம்ப முக்கியம். இன்டிமசி. ‘அவங்களை பற்றி முழுமையாக எனக்குத் தெரியும். ஐ நோ இன் அன்ட் அவுட். அவங்க பக்கத்துல இருந்தா நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கேன்’ ன்னு நினைக்கற உணர்வு. நெருக்கம் அதிகமாச்சுன்னா உணர்வு நெருக்கத்தை அடுத்து உடல் நெருக்கமும் தானா நடக்கும். அதிக நெருக்கம் அதிக காமத்துக்கு கொண்டு போய் விடும். அதிக காமம் அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கும்.”

“ம்ம்ம்.”

“அடுத்தது வேட்கை அதாவது பேஷன். அதாவது நம்ம துணை மேல நமக்கு இருக்க விளக்க முடியாத ஒரு கவர்ச்சி. அவங்க தான் நம்ம கண்ணுக்கு உலகத்துலையே ரொம்ப கவர்ச்சியாவும், காதலையும் காமத்தையும் ஒருசேரத் தூண்டுறவங்களாவும் இருப்பாங்க…”

“ம்ம்ம்.”

“மூணாவது அர்ப்பணிப்பு அதாவது கமிட்மென்ட். நாம் என்றைக்கும் சேர்ந்திருப்போம். உன்னை எப்போதும் கைவிட மாட்டேன். குடும்பம், குழந்தைகள் என எல்லா எதிர்கால நிகழ்வுகளுக்கும் நானே உத்தரவாதம். இனி நான் என்பது இல்லை. எல்லாமே நாம்தான்ங்கறது. சுருக்கமா சொன்னா நீண்ட கால ஒப்பந்தம்.”

“ம்ம்ம்.”

“காதல்ன்னு சொன்னா இந்த மூணுல ஒன்னு கண்டிப்பா இருக்கும். குறைந்தபட்சம் இரண்டு விஷயங்கள் சேர்ந்து இருக்கும். இந்த உணர்வுக் கலவைபடி ஏழு விதமான காதல் உண்டு.”

“ஓ..” என்றவளின் புருவம் ஏறி இறங்கியது.

“முதல் வகை, ‘லைக்கிங்’ங்கற விரும்புதல். நெருக்கமும் நம்பிக்கையும் அதிகமா இருக்கும். அடிப்படையில் அது ஒரு நல்ல நட்பு. காதலோட மற்ற ரெண்டு உணர்வான வேட்கையும் நீண்ட கால ஒப்பந்தத்துக்கான அர்ப்பணிப்பும் இதில் இருக்காது.”

“ம்ம்ம்.”

“இரண்டாவது வகை, அதீதக் கவர்ச்சி. அது மட்டுமே இருந்தா அதுதான் ‘இன்ஃபாச்சுவேஷன்’ங்கற ஈர்ப்பு. வெறும் உடல் கவர்ச்சியிலும் காமக் கிளர்ச்சியிலும் ஒருத்தர் மேல ஏற்படற லவ். உணர்வு ரீதியான பிணைப்பும் நெடும் வாழ்க்கைப் பயணத்துக்கான அர்ப்பணிப்பும் இல்லாத இந்த லவ்வுக்கு ஆயுள் குறைவு. ஸ்வேதாவோட எனக்கிருந்தது இதுதான்.” என்றவனுக்கு எந்த விதமான லஜ்ஜையும் இருக்கவில்லை. அதை ஒரு செய்தியாக மட்டுமே கூறினான்.

“ம்ம்ம்…” என்றவளுக்குத்தான் சங்கடமாக இருந்தது.

“மூன்றாவது வகை, ‘கமிட்மெண்ட்’ங்கற அர்ப்பணிப்பு மட்டும் இருக்கும். அதை வெறுமைக் காதல்ன்னு சொல்லுவாங்க. ‘உன் மேலே எனக்கு எதுவும் தோணலை. உன்னைப் புரிஞ்சிக்கவும் விரும்பலை. ஏதோ கல்யாணம் பண்ணிக்கிட்டோம், காலம் முழுக்க உன்னைக் காப்பாத்தறேன்’ங்கற உறவெல்லாம் இதில்தான் சேர்த்தி.

உடல் நெருக்கமும் இருக்காது. உணர்வுப் பிணைப்பும் இருக்காது. சரியா சொன்னா அரேஞ்ச்ட் மேரேஜ் சிலதுல ஆரம்பக் கட்டம் இப்படி இருக்கும். அதே போல வாழ்ந்து சலித்துப் போன கப்பிள்ஸ்கிட்டயும் இந்த வெற்றுக் காதலைப் பார்க்கலாம். இந்த மூணு வகையும் ஒரே அம்சத்தை மட்டுமே கொண்டுட்டு இருக்கு. சோ லாங் டெர்ம் கஷ்டம்.”

“ம்ம்ம்ம்…”

“நான்காம் வகை, நெருக்கமும் வேட்கையும் சேர்ந்த ரொமாண்டிக் காதல். ஒரு புது ரிலேஷன்ஷிப்போட ஸ்டார்டிங்ல இருக்க  கிளுகிளுப்பும் கவர்ச்சியும் நெருக்கமும் இருக்கும். காதல் மோகம் இருக்குமே தவிர அது லாங் டெர்ம் ரிலேஷன்ஷிப்பா நீடிக்கத் தேவையான அர்ப்பணிப்பு இருக்காது.”

“ம்ம்ம்…”

“ஐந்தாம் வகை, நெருக்கமும் அர்ப்பணிப்பும் சேர்ந்து இருக்கும் தோழமைக் காதல். ரொம்ப வருஷமா சேர்ந்து இருக்க கப்பிள்ஸ் கிட்ட இது இருக்கலாம். காமம்ங்கற அதிதீவிர உணர்வு காலப்போக்கில குறைஞ்சாலும் பரஸ்பர உணர்வு நெருக்கமும் ‘உனக்காக நான், எனக்காக நீ’ ங்கற வாழ்க்கை ஒப்பந்தமும் தொய்வில்லாம இருப்பதால இது ஆரோக்கியமான காதல்.”

“ம்ம்ம்.”

“ஆறாம் வகை, வெற்றுக் காதல். ஒன்றாகச் சேர்ந்திருப்போம்ங்கற அர்ப்பணிப்பு இருக்கும். உடல் ரீதியிலான உறவுப் பிணைப்பும் நிறையவே இருக்கும். ஆனா மன ரீதியான நெருக்கம் இருக்காது. காமம் முக்கியம். அதைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல கல்யாணம் முக்கியம்ங்கறது மட்டும் தான் இவங்களுக்கு தெரிஞ்சு இருக்கும். ஆனா காதலோட முக்கிய அம்சமான மன நெருக்கம் இல்லைங்கறதால இதுவும் கொஞ்சம் ஷார்ட் டெர்ம்மா போக வாய்ப்புண்டு.”

“ம்ம்ம்..”

“ஏழாம் வகை, நிறைவான காதல். காதலோட மூணு அம்சமும் இருக்கும். ரொம்ப ரேர். ஆனா இப்படி ஒரு லவ் கிடைச்சவங்க ரொம்ப லக்கி ப்ரீத்தி. பேஷன், இன்டிமசி, கமிட்மென்ட். அது ரொம்ப லாங் லாஸ்டிங் ரிலேஷன்ஷிப்.

நானும் லவ் பண்றேன்னு சொன்னா இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும் ப்ரீத்தி. அப்ப தான் நாம எங்க இருக்கோம். நாம போற பாதை சரியா இருக்கான்னு தெரிஞ்சுக்க முடியும்.” என்று அவன் நிறுத்த, அவள் அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“இந்த தியரிய படிக்கும் போது என்னையுமறியாம ஸ்வேதாவ விட உன்னை பொருத்தி பார்த்தது தான் அதிகம். நமக்குள்ள நிறைய பொருந்தி போகுதே, ஏன் அடுத்த நிலைக்கு போகலன்னு என்னையுமறியாம கேட்டுட்டே இருந்தேன். நீ என்னோட ப்ரபோசலுக்கு ஓகே சொல்லிருந்தா நல்லா இருந்துருக்குமேன்னு யோசிச்சேன். எனக்கு அப்ப அது தப்பா கூட தோனுச்சு. உன்னை அப்படி பார்க்க கூடாதுன்னு என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டே இருந்தேன் ப்ரீத்தி.” என்றவனின் வார்த்தைகளில் சற்றும் தயக்கமில்லை.

“ம்ம்ம்..”

“இப்ப நீ யோசி. நீ எந்த ஸ்டேஜ்ல இருக்கன்னு? ஐ நீட் யூ. எனக்கு  உன்னோட பேஷன், இன்டிமசி, கமிட்மென்ட்ன்னு மூணுமே வேணும். நிறைய வேணும். சோ நிதானமா ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கலாம். ஒவ்வொரு ஸ்டெப்பா எஞ்சாய் பண்ணி வாழ்க்கைய ரசிக்கலாம். எனக்கும் கொஞ்சம் டைம் வேணும். ஒருவிதமான குற்ற உணர்வு இருந்துட்டே இருக்கு. அதே உணர்வோட இருந்தா, அது உனக்கு நான் உண்மையா இருக்கறதா ஆகாது. கம்ப்ளீட்டா நான் கியூர் ஆகணும். வெளிய வரணும்.

உனக்கும் அந்த டைம் வேணும். கியூர் ஆகாம அரைவேக்காட்டு ஸ்டேஜ்ல நாம அடுத்த கட்டத்துக்கு போய்ட்டோம்ன்னா நம்ம இன்ட்டிமெஸி உனக்கு அன்ஈஸியாக நிறைய சான்சஸ் இருக்கு. அது சரி வராது. நாம ரொம்ப ரொம்ப லவ் பண்ணனும்.

திகட்ட திகட்ட இந்த வாழ்க்கைய அனுபவிக்கனும். யாருமே அந்தளவு லவ் பண்ணிருக்க கூடாது. ” என்று நிறுத்தியவன், அவளது காதருகில் குனிந்து, “அந்த ஸ்டேஜ்ல ஒரு குட்டி கிஸ் கூட மேஜிக்கலா இருக்கும் ப்ரீத்தி…” என்று கிசுகிசுக்க, ப்ரீத்திக்கு உடல் சிலிர்த்தது.

அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து கொண்டவளிடம், “ஐ நீட் தட் மேஜிக்கல் கிஸ். நாட் எ ரோபோடிக் ஒன்…” என்று கிசுகிசுத்தான்.

அவளால் அதற்கு பதில் கூறமுடியவில்லை. முற்படவில்லை. அவன் கூறுவதனைத்தும் உண்மை தானே! இவ்வளவு தெளிவாக யாரால் சிந்திக்க முடியும்?

“சரி நீ சொல்ற மாதிரி நிதானமா ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கலாம். ஆனா அந்த நிதானம்னா என்ன?” அவனை நேராக பார்த்து ப்ரீத்தி கேட்க,

“தட் டிபண்ட்ஸ். எப்ப வேணும்னாலும் அந்த ஸ்பார்க் வரலாம் ப்ரீத்தி. அடுத்த விநாடியா கூட இருக்கலாம். இன்னும் ரெண்டு நாள்ல இருக்கலாம். இல்லைன்னா இன்னும் ரெண்டு வருஷத்துல கூட வரலாம். ஆனா அந்த ஸ்பார்க்கை நான் உன் கண்ல பார்க்கணும்…” என்றவனின் முகம் புன்னகையில் விகசித்தது.

“அதை எப்படி நீ கண்டுபிடிப்ப? உனக்கு மட்டும் எதாவது ஸ்பெஷல் பவர் இருக்கா?” சிரித்தபடியே கேட்டாலும் உண்மையிலேயே அவன் சொல்லும் தீப்பொறி என்னவென்று அவளுக்குப் புரியவில்லை.

“அந்த மேஜிக்கல் மொமென்ட்ல உனக்கே புரியும்…” என்று சிரித்தான்.

“அப்படீன்னா உன் கண்ல தான் நான் தீய வைக்கணும்.” என்றவளின் குரலில் கிண்டலோடு கொஞ்சம் பிணக்கும் கலந்திருந்தது.

“வைய்யேன் பார்க்கலாம்…” என்றவனின் குரலில் குறும்பு மட்டுமே இருந்தது.

“நிஜமாவே வெச்சுடுவேன்…” சிரித்தபடி மிரட்டினாள்.

“வைய்யுங்கறேன்…”

“எனக்கு கோனார் நோட்ஸ் போடற மாதிரி அவளுக்கும் போட்டு இருக்க வேண்டியதுதானே?” என்று முனக, அவன் சிரித்தான்.

“எனக்கப்ப தோனலையே…”

“ஸ்வேதாவே சரணம்ன்னு மயங்கி போய் கிடந்தவனுக்கு தோணாது ராசா…” என்றவள், முழுதாக அவனை கலாய்க்கும் மூடுக்கு வந்துவிட்டாள்.

“அதுக்கு முன்னாடி நீ என்னை மயக்கி இருக்க வேண்டியதுதான?” பதிலுக்கு கலாய்த்தாலும் அவன் மனதுக்குள் நெருடல். ஸ்வேதாவின் நினைவு அவனை முள்ளாய் குத்தியது. அதே வலி ப்ரீத்திக்கும் இருக்கிறதோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

“ஆமா, இந்த மன்மதனை மயக்கத்தான் காத்துகிட்டு இருக்காங்க…” என்று அவள் நொடித்தாள்.

வாய் விட்டு சிரித்தவன், “ஆனா என்னோட கண்ணுக்கு எப்பவுமே நீ ரதி தான்.” என்றவனின் கண்களில் விழுந்தவளால் எழ முடியவில்லை. கருந்துளையாக அவனுள்ளே இழுத்துக் கொண்டிருந்தான்.

இமைக்காமல் அவனைப் பார்த்தாள். உண்மையிலேயே அவன் மன்மதன் தான்.

காதோர சிறு ஸ்பைக் ஹேர்கட்டோடு, ட்ரெண்டியாக ட்ரிம் செய்யப்பட்ட குறுந்தாடியோடும், மேலுதடை லேசாக மறைக்கும் கற்றை மீசையோடும், கூரான நாசி, கருந்துளை கண்கள், வலிமையான பரந்து விரிந்த மார்பு, திண்மையான தோளுமாய், தினசரி ஜிம் பயிற்சியில் முறுக்கிய நரம்பு தெறிக்கும் கைகளோடு இருந்தவனை பார்க்கையில் அவளது இதயம் மெல்ல நழுவியது. பார்வையாலேயே அவளை மொத்தமாக கொள்ளையடிக்கப் பார்த்தான், அந்த கள்வன்!

ஆக… இவன் சொல்லும் அந்த காதல் என்றால் என்ன?

விடையை தேட ஆரம்பித்தாள் ப்ரீத்தி!

error: Content is protected !!