Kalangalil aval vasantham 19(3)

“தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றதெல்லாம் ஹம்பக். நான் என்ன ஒன்னும் தெரியாத பாப்பாவா? எனக்கு தெரிஞ்சு தான் எல்லாமே நடந்தது. என்னோட தேவை? உடம்பா மனசா? ஆனா உடல் தேவைக்காக என் புத்தி ஸ்வேதாவ தேடி போகல ப்ரீத்தி. அப்படி போகணும்ன்னு நினைச்சிருந்தா எத்தனையோ பேர் இருக்காங்க.

எனக்கு உடம்பும் மனசும் வேற வேற இல்ல. மனசுதான்னா நீ ஓகே சொல்ற வரைக்கும் பொறுமையா இருந்திருக்கனும். ஏன் இல்ல? என்னோட பெட்டர் ஹாஃப்க்கு நான் நேர்மையா இருக்கனும்ன்னு நினைச்சேனே. அது ஏன் இப்படியாச்சு? ஒருவேளை நேர்மையா இருக்க நினைச்சது தான் தப்பா?” தன்னைத் தானே சுயமாக அலசிக் கொண்டிருந்தான்.

“ம்ஹூம் இல்ல…”

“ஆனா அவ எப்படி அந்த மாதிரி என்னை ட்ராப் பண்ணா? என்னை பார்த்தா அப்படி ஈசியா விழுந்துடற மாதிரியா இருக்கு? எனக்கும் தெரியாம நான் அப்படி தான் இருக்கேனா?” நிச்சயமாக அவனுக்கு இதற்கான பதில்கள் எல்லாம் இதுவரை கிடைக்கவில்லை.

“இல்லடா… அவங்க…” என்று ஆரம்பித்தவள் தயக்கமாக நிறுத்தினாள்.

“ம்ம்ம்… சொல்லு…”

“அவங்களுக்கு… எல்… எல்லாம்… தெ… தெரியும் ஷான். யா… யாரை எப்படி… அடிச்சா… எ… எங்க விழுவாங்கன்னு…” தயங்கியபடியே கூறி முடிக்க,

“அப்படிபட்டவன்னு தெரிஞ்சே விழுந்து கிடந்திருக்கேன்…” என்றவனின் வார்த்தைகளில் கசப்பு.

“அவங்களை எதுக்கு தப்பு சொல்லணும் ஷான்? லவ் பண்றேன்னு சொல்லிட்டு இருந்தியே, அப்ப உனக்கு தெரியாதா ஸ்வேதாவை பற்றி? அவங்க பாஸ்ட்ட அக்செப்ட் பண்ணிட்டு தானே அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்த? உனக்கு…” என்று நிறுத்தியவள், “அறிவு இருந்திருக்கனும். பண்றதை எல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து எக்ஸ்கியுஸ் சொல்லிட்டு இருக்க…” என்று சற்று கோபத்துடன் முடிக்க, அவளை ஆழ்ந்து பார்த்தான் ஷான்.

“ம்ம்ம்… ஆமாம்… அவ பாஸ்ட்ட அக்செப்ட் பண்ணிகிட்டேன். கண்டிப்பா உண்மையா லவ் பண்ணேன். இட் வாஸ் நாட் அன் இன்பாச்சுவேஷன். அது வரைக்கும் என்னால தைரியமா ஒத்துக்க முடியும் ப்ரீத்தி. ஆனா இதையெல்லாம் ஒருத்தி ப்ளான் பண்ணி பண்ணான்னு நினைக்கும் போதே எனக்கு என்னை நினைச்சே அசிங்கமா இருக்கு. ரத்தம் கொதிக்குது… அப்படி இனாவாயனா தெரியுதா, என்னை பார்த்தா?” அவனும் கோபமாக கேட்டான்.

“அஃப்கோர்ஸ். அதுல வேற சந்தேகமா?” என்று கேலியாக அவள் கூற, அது உண்மைதான் என்றாலும், ஒப்புக் கொள்ள முடியாமல், அவளை முறைத்தபடி தள்ளிப் போக முயல, அவன் விலகி போக முடியாதபடி கைகளால் இடுப்பை கோர்த்துப் பிடித்துக் கொண்டாள்.

“உண்மைய சொன்னா கோபம் வருதா கோப்ப்பால்?” குறும்பாக அவள் கேட்க,

“எல்லாரும் கேலி பேசறளவுக்கு நான் தான் இடம் கொடுத்துட்டேன்…”

“யார் பேசுவா?”

“யார் பேசலை?”

“உன்னை புரிஞ்சுகிட்டவங்களுக்கு உன்னோட விளக்கம் தேவையில்ல. புரியாதவங்களுக்கு உன்னை விளக்கவே தேவையில்லை…”

“ம்ம்ம்… ஆனா என்னோட குடும்ப வாழ்க்கைய நான் நேர்மையா வாழ ஆசைப்பட்டேன்டி. என்னோட சரி பாதிக்குதான் எல்லாமேன்னு திமிர்ல இருந்தேன். அது இப்ப…” என்றவன், முடிக்க முடியாமல் திணற, அவனது கன்னத்தைப் பற்றிக் கொண்டவள்,

“இதை பத்தி யார் கவலைப்படணும்?” என்று கேட்க, அவனுக்குப் புரியவில்லை.

“புரியல…” என்றான்.

அவனது கழுத்தில் கைகளை மாலையாக கோர்த்தவள், “உன்னோட பொண்டாட்டிக்கு தான நீ பதில் சொல்லணும். ஏன்டா இப்படி பண்ணன்னு உன் சட்டைய பிடிச்சு கேள்வி கேட்க அவளுக்கு மட்டும் தானடா உரிமை இருக்கு…?” என்று கேட்க, இதழோரம் சிறு புன்னகை மலர்ந்தது அவனது முகத்தில்!

அவளது இடையை இழுத்தணைத்தவன், “ஆமா…” என்றான் ராகமாக!

“அவளுக்கு தான எல்லாமே தெரிஞ்சிருக்கணும்?” அதே ராகத்தில் கேட்க,

“ஆமா…” என்றான் மீண்டும் அதே ராகத்தில்!

“அவ தான உன்னை நம்பனும்?”

“ஆமா…”

“அவ தான உன்னை லவ் பண்ணனும்?”

“ஆமா…”

“உன்னோட ஃபியூச்சர் பொண்டாட்டி உன்னை நம்பறாளாம். தேவைன்னா அவளே உன் சட்டைய பிடிப்பாளாம்…” அவனுடைய ராகத்திலேயே அவளும் கூற,

“ஆஹான்ன்ன்…” என்றான் அவளைப் போலவே!

“வேற யார் என்ன பேசினாலும் அவளுக்கு கவலை இல்லையாம். அவ புருஷனை பத்தி அவளுக்குத் தெரியுமாம்…”

“ஆஹான்ன்ன்…”

“அதனால இந்த மாதிரி கோபப்படறதை எல்லாம் விட்டுடனுமாம்…”

“ஆஹான்ன்ன்…” என்றவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளை இன்னும் நெருக்கமாக இறுக்கியவன், “வேற என்ன பண்ணனுமாம். கேட்டு சொல்லேன்…” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக!

“ஏதாவது அப்படிஇப்படின்னு பண்ணா அடி விழுமாம்.” என்றாள் வெளிவராத குரலில்! முதல் முதலாக அவனோடு இந்த நெருக்கம் அவளுக்குள் நடுக்கத்தை விதைக்க, வார்த்தைகளும் தந்தியடித்தது.

“ஆஹான்ன்ன்…”

அவனை தள்ளி நிறுத்த முயன்றாள். அவனோ அவளது இடையை வளைத்து இன்னும் இறுக்கிக் கொள்ள, முயற்சி தோல்வியுற்றதில், அவனது கரங்களை தடுத்து பிடித்து வைத்துக் கொண்டாள்.

“இனிமே யார்கிட்டயாவது மயங்கிட்டேன் கிறங்கிட்டேன்னு போனா கொன்னுடுவாளாம்…”

“ஆஹான்ன்ன்…” என்றவன், “அந்த ஃபியூச்சர் பொண்டாட்டிய கொஞ்சூண்டு என்னை மயக்க சொல்லேன்…”

“தலைவரே… இந்த வேலையெல்லாம் இப்ப வேணாம் தலைவரே. கொஞ்சம் தள்ளி நின்னுங்க தலைவரே…” என்று அவனை தள்ளி நிறுத்தப் பார்க்க,

“அதை நீங்க சொல்ல வேண்டாம் தலைவரே. என் பியூச்சர் பொண்டாட்டிய சொல்ல சொல்லுங்க தலைவரே…” என்று அவளை இன்னும் நெருக்கமாக்கிக் கொண்டான் ஷான்.

“உங்க பியூச்சர் பொண்டாட்டி தான் தலைவரே சொல்றா…”

“தாங்க்ஸ் பியூச்சர் பெண்டாட்டி மேடம்…” என்றவன், அவளது நெற்றியில் முட்டியவன், இறுக்கமாக ஒரு முறை அணைத்து விடுவித்து விட்டு அவளது தோளில் கை போட்டுக் கொண்டான்.

இருவரது முகமும் சந்தோஷத்தில் விகசித்தது.

சற்று நேரம் மெளனமாக இருந்தவன், “என்ன திடீர்ன்னு?” என்று கேட்க,

“என்ன? என்ன திடீர்ன்னுன்னா?”

“தலைவிக்கு என் மேல காதல் பார்வை…”

“ஏன் தப்பா?” திரும்பி அவனைப் பார்த்து கேட்க,

“தப்பா?” என்று சிரித்தவன், “ஆமா. எப்பவோ ப்ரொபோஸ் பண்ணதுக்கு இப்ப ஆன்சர் பண்ணிருக்க…”

“எனக்கு தோணினா தான தம்பி பதில் சொல்ல முடியும்…” கேலியாக ராகம் படித்தாள்.

“இப்ப தான் தோணுச்சாக்கா?” அதே தொனியில் அவன் கேட்க,

“ஆமா ஆமா…” என்று மாங்கு மாங்கென்று தலையாட்டினாள்.

“வேறென்ன தோணுதுன்னு சொல்லுங்கக்கா…” குறும்பாக அவன் கேட்க,

“உன்னை அடி வெளுக்கணும்ன்னு தோணுதுடா தம்பி…” என்று அவள் சிரித்தாள்.

“உங்களுக்கு என்ன தோணினாலும் பண்ணிருங்கக்கா…” முழுக்க சரணடைந்தான் ஷான்.

“கண்டிப்பாடா தம்பி…” என்றதும் சிரித்தவன், அவளது முகத்தை தன்னை நோக்கி பற்றியிழுத்து கன்னத்தை நறுக்கென்று கடித்துவிட்டு, “தம்பியா?” என்று என்று கிண்டலாக கேட்க, “ஸ்ஸ்ஸ் ஆஆ…” என்று என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டவள், “டேய் கடிகாரா…” என்று அடித்தவளின் கையை பிடித்துக் கொண்டவன், அவளது கண்களை ஆழ்ந்து பார்த்து,

“உனக்கு மனசுக்குள்ள எந்த சங்கடமும் இல்லையா ப்ரீத்தி?” என்று கேட்க,

“ம்ம்ம்… இருக்கு ஷான். இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா அதையெல்லாம் தாண்டி உன்னை என்னால விட்டுக் கொடுக்க முடியாதுப்பா.”

“அதுக்கு வெறும் ஃப்ரெண்ட்ஷிப் கூட காரணமா இருக்கலாம் இல்லையா?”

“இருக்கலாம். ஆனா…” என்றவள் பதில் தெரியாமல் விழித்தாள்.

“ம்ம்ம்… சொல்லு…”

“எனக்கு தெரியல. எக்ஸ்ப்ளைன் பண்ண தெரியல. முழுசா உன் கூடவே இருக்கேன். உன்னோட கஷ்டம், உன்னோட வலி, உன்னோட அவமானம் இதையெல்லாம் என்னால தாங்கிக்க முடியல. உனக்கு என்னால எந்த சொல்யுஷனும் கொடுக்க முடியல. இட்ஸ் எ கைன்ட் ஆப் ஃப்ரஸ்ட்ரேஷேன் யூ நோ? அதுக்கு என்ன பேர் சொல்றது ஷான்?”

“இதுக்கு வெல்விஷர்ன்னு இன்னொரு பேரும் இருக்குடா…” என்று புன்னகைத்தான்.

“இருக்கட்டும்…” என்று கூறியவள், “நீ சிரிச்சுட்டே இருக்கணும். அதுக்கு நான் என்ன பண்ணனும்ன்னு என்னை நானே கேட்டுட்டு இருந்தேன் ஷான்.”

“அது கேரிங் பாப்பா…” அதே புன்னகையோடு கூறினான்.

“எனக்கு ஒரு கஷ்டம் வரும் போது நான் சொல்லாமையே, நான் உன்கிட்ட ஹெல்ப் கேக்காமையே அவ்வளவு பணத்தை குடுத்த. என்னால என்ன கொடுக்க முடியும் ஷான்? நீ சொன்னா கிணத்துல கூட குதிப்பேன். லவ் பண்ண மாட்டேனா?” என்று கேட்க,

“நான் இதை பண்ணேன், நீ இதை பண்ணுன்னு சொல்லறது லவ்வாகுமா பாப்பா?” என்று கேட்டபடி புன்னகைத்தான் ஷான்.

குறும்பு புன்னகையோடு, “அப்படீன்னா எது தான் லவ் ஜெஸி?” என்று கேட்க, அவளது தலையில் சிறு கொட்டு வைத்தான்.

அவளது நிலை அவனுக்குப் புரிந்தது. தனக்காக மட்டுமே அவள் யோசிக்கிறாள் என்ற அந்த உண்மை அவனை நெகிழ்த்தியது என்றாலும் அவனுக்கு அது போதவில்லை. இன்னும் தீவிரமான காதல் என்னும் கட்டத்தை அவள் எட்டவில்லை என்பதை உணர்ந்து கொண்டான். அந்த கட்டத்தை எட்ட வைக்க அவனால் முடியும். ஆனால் அவனுக்கு அப்படி நிகழ வேண்டாம். தானாக நிகழ வேண்டும். அவளாக அந்த நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பினான். வந்துவிடுவாள். தானாக கனிவது தானே இனிக்கும்? நட்புக்காக, மரியாதைக்காக, நன்றியாக என்பதெல்லாம் அவனுக்கு வேண்டாம். முழுக்க முழுக்க அவளது காதல் போதும்.

நெருக்கங்கள் மட்டும் காதலல்ல என்பது தான் இத்தனை நாட்களில் அவன் உணர்ந்தது! அது வெறும் ஈர்ப்பு… மோகம்… தாகம்!

அதை அவன் விரும்பவில்லை. ப்ரீத்தியோடு உயிருக்கு உயிராக வேண்டும். இருவரும் இருவருக்குள்ளும் கரைய வேண்டும். நீயில்லாமல் நானில்லை. நானில்லாமல் நீயில்லை என்றாக வேண்டும். மோகமில்லாமல் காதலில்லை. ஆனால் காதலில்லா மோகம் இனியொருமுறை அவனுக்கு வேண்டாம்.

“ரிலேஷன்ஷிப்ஸ் கம்ப்லீட்டா வேற ப்ரீத்தி.” அவளை ஆழ்ந்து பார்த்தபடி அவன் கூற,

“ஏன் அப்படி சொல்ற ஷான்?” என்று கேட்டவளின் குரலில் சுரத்தில்லை.

“உனக்கு என் மேல இருக்கறது காதலான்னு நீயே உன்னை கேட்டுக்க. ரீசெக் பண்ணு.” என்று அவன் அழுத்தமாக கூற,

“ஷான்…” அவளது பார்வை சற்று அதிர்வை தாங்கி நின்றது.

“அதிகபட்சமான மரியாதை, பாசம், நட்பு, நன்றி உணர்ச்சி, விசுவாசம்… இப்படி இத்தனை வகைக்குள்ள வரும் நீ சொல்ற காதல்…”

“ம்ஹூம் இல்ல ஷான். இங்க நன்றி உணர்ச்சி, விசுவாசம் எல்லாம் எங்க வருது? அதுக்காக நான் லவ் பண்ண முடியுமா? நான் இவ்வளவு வருஷமா உன்னை பார்த்துட்டு இருக்கேன். எனக்கே எனக்கா உன்னை பிடிக்க கூடாதா?” சற்று கோபமாக அவள் கேட்க,

“இல்லடி. என்னை எப்படியாவது மாத்தனும்ன்னு நினைக்கற. அதுக்கு நீயே உன்னை இரையா போட நினைக்கற. அது வேண்டாம்.” என்றவனின் கண்களை ஆழமாகப் பார்த்தாள்.

“என்னை நானே இரையா போட நினைப்பேனா? உளறாத…”

“சரி… நான் சொல்றது உனக்கு புரியல.” என்றவன், “சரி உனக்கு நான் டெமோ குடுக்கறேன். பட் இது என்னோட பெர்செப்ஷனை கூட மாற்றலாம்..” என்று கூறி, அவளது கண்களை ஆழமாக பார்த்து “கிஸ் மீ…” என்று கிசுகிசுத்தான்.

சட்டென்று அவன் இப்படி கேட்கவும் அவளுக்கு சற்று தயக்கமாக இருந்தது. ஆனால் ஒரு முத்தம் என்ன செய்துவிட போகிறது என்று எண்ணிக் கொண்டு, அவனது முகம் நோக்கி எம்பி, கன்னத்தில் சிறியதாய் முத்தம் வைத்துவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

“என்ன தோணுச்சு?” என்று குறும்பாக அவன் கேட்க, அவளுக்கு என்ன பதில் கூறுவது என்று விளங்கவில்லை.

“என்ன தோணனும்?” என்று பதில் கேள்வி கேட்க,

“நான் உன்கிட்ட கேட்டேன்…”

“கிஸ் பண்ண சொன்ன. பண்ணேன்.” வெகு எளிதான பதில் தான். ஆனால் அதை கேட்டவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ரோபோட்டிக் கிஸ்…” வாய் விட்டு சிரித்தான். அவனை முறைத்துப் பார்த்தாள் ப்ரீத்தி.

“முறைக்காத. அதுல தான் எந்த எமோஷன்ஸும் இருக்காது.” என்றவன் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

“இப்ப நீ என்ன தான் சொல்ல வர்ற?” அவளது பொறுமை பறந்து போகும் போல இருந்தது.

“ரஷ் அப் பண்ண வேண்டாம் ப்ரீத்தி. அவ இல்லைன்னா நீயா? நோ வே. நீ என்ன அவளுக்கு சப்ஸ்டியுட்டா? இல்லையே. யூ ஆர் மை சப்போர்ட் சிஸ்டம். யூ ஆர் மைன். நீ என் கூட இருக்கறதே எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம்.

எனக்கு ஸ்வேதாவோட இருந்தப்ப எல்லாம் ஒரு சந்தேகம் இருந்துட்டே இருந்தது. உன்கிட்டயும் கேட்டுட்டே இருந்தேன். தப்பு பண்றேனான்னு! அது நம்ம மனசு நமக்கு உணர்த்தற செய்தி.

நான் நிஜமாவே லவ் பண்றேனா? இல்லைன்னா இது வெறும் உடற்கவர்ச்சியா? சாதாரண ஈர்ப்பா? அப்படி நிறைய கேள்வி. அப்ப தான் ராபர்ட் ஸ்டெர்ன்பெர்க்’ கோட முக்கோண தியரி படிச்சேன். அவர் சொல்றது, காதல்னா மூணு விஷயம் இருக்கணும். இன்டிமஸிங்கற நெருக்கம், பேஷன்ங்கற வேட்கை, கமிட்மென்ட்ங்கற அர்ப்பணிப்பு.”