Kalangalil aval vasantham – 22

22

ஜுபிட்டர் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கான்பிரன்ஸ் அறை

அறையில் ஷான், ப்ரீத்தி, ஆல்வின் மற்றும் மகேஷ் இருந்தனர்.

அவர்களை தவிர வேறு யாருக்கும் நடக்கும் விஷயங்கள் தெரியாது. அவர்களுக்குள் நடக்கும் பேச்சுவார்த்தைகள், எதுவும் வெளியே போகாது என்பதால் மட்டுமே, அந்த குழுவில் அவர்கள் இருந்தார்கள். மகேஷின் குழுவை மகேஷ் வழி நடத்தினாலும், அவர்களுக்கு பிரச்சனைகளின் முழு சாராம்சம் தெரியாது. ஆல்வின் அவனது குழுவை வழி நடத்தினாலும், ஹேக் செய்து கண்டுபிடிக்க வேண்டியவற்றை மட்டுமே அவர்கள் செய்வார்கள். ஆனால் முழுக்க ஆராய்ந்து கொண்டிருப்பது இவர்கள் மட்டும் தான்.

அனைவரும் மெளனமாக அவர்கள் முன் இருந்த திரையை பார்த்துக் கொண்டிருந்தனர். மகேஷ் எழுந்து அவர்கள் முன்னே வந்தான். அவன் கையில் ஒரு சிறிய ஃபைல்  இருந்தது.

திரையில் சரண் சிங்கின் படம் வந்தது.

“இவர் சரண் சிங் பாதல். அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ். பஞ்சாபி. ஐபிஎஸ் 1993 பேட்ச். பர்ஸ்ட் போஸ்டிங் சென்னை. இன்னும் நாலு வருஷத்துல ரிட்டையராகரார். எப்படியும் டிஜிபி ஆகிடனும்ன்னு நினைக்கறார்.

ஒய்ப் ஐஏஎஸ். அவங்களும் சென்னை தான். செக்ரட்ரியேட்ல இருக்காங்க. ஒரே ஒரு பொண்ணு. எத்திராஜ்ல படிப்ப முடிச்சுட்டு மாடலிங் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு பஞ்சாபி கிரிக்கெட்டர் கூட லவ். சரண் சிங்குக்கு ரவி கூட பத்து வருஷமா பழக்கம். ரொம்ப க்ளோஸ்.

வீக்னெஸ்னா பணம், பொண்ணுங்க. ரவி தான் இவருக்கு நடிகைகள் கூட பழக்கம் பண்ணி தர்றது. சினிமா ஆக்ட்ரஸ் மட்டுமில்ல, டிவி ஆக்ட்ரஸ், மாடல்ஸ்ன்னு எக்கச்சக்கமா பொண்ணுங்க பழக்கம் உண்டு. லிஸ்ட்ல…” என்று நிறுத்திய மகேஷ், சற்று தயங்கி, “ஸ்வேதாவும் உண்டு…” என்று முடிக்க, ஷான் முகத்தில் எந்தவிதமான உணர்வுமில்லை.

ப்ரீத்தி தான் சங்கடமாக அவன் முகத்தைப் பார்த்தாள். உண்மையில் அவளுக்கு பாவமாக இருந்தது. எப்படியெல்லாம் திட்டமிட்டு இவனை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது கோபமாக வந்தது. அவர்கள் மேல் வந்த கோபம் அப்படியே ஷான் மேல் திரும்பியது.

“எல்லாத்தையும் விட, சரண்சிங்க்கு பிடிச்சது விர்ஜின் கேர்ள்ஸ். அதை வெச்சு தான் அவரை ட்ராப் பண்ண முடியும்.” என்று நிறுத்தினான்.

“மகேஷ் சொல்றது கரெக்ட் ஷான். அவரோட ஐபிய ஹேக் பண்ணதுல, அவரோட செர்ச் ஹிஸ்டரி முழுக்க, இது சம்பந்தமா தான் இருக்கு. சரியான அலைஞ்சான் கேஸ்டா…” என்று ஆல்வின் கூறியதை கேட்டவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“மனுஷன் வாழ்றார். கொடுத்து வெச்சவன்…” என்று சிரித்தபடியே கூற, ப்ரீத்தி திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

“இப்ப நீ எதுக்கு முறைக்கற?”

“ஒரு தடவை பட்டது உங்களுக்கு பத்தாதா பாஸ்?” என்று அவள் திட்ட, ஆல்வின் சிரித்தான். இருவரின் டாம் அன்ட் ஜெர்ரி சண்டைகளுக்கு இப்போது பழக்கப்பட்டிருந்தான்.

“ஓகே ஓகே…” என்றவனுக்கு, தன்னுடைய சிறு வயதில் தாத்தன் தந்தைக்கு கூறியது இப்போது காதில் ஒலித்தது.

‘எவனாவது பொண்டாட்டிய தவிர இன்னொரு பொண்ணை தொட்டான்னா, அவனுக்கு சனி பிடிக்குதுன்னு அர்த்தம்டா மாதேசா. தொடற பொண்ணோட ராசி சரியில்லன்னா சொத்து சுகம் அத்தனையும் போய்டும். அந்த தப்பை மட்டும் பண்ணவே கூடாது. வீட்டுக்கு வந்த மகாலட்சுமி மனசை ஒருக்காலும் கஷ்டப்படுத்த கூடாது. அவ தான் மகாராணி. அந்த மகாராணி மனசு வெச்சா தான் குலம் தழைக்கும். நல்ல வித்து உருவாகும். அவ மனசு கஷ்டபட்டா, பரம்பரையவே பாவம் புடிச்சுக்கும்டா. இதை எப்பவும் ஞாபகம் வெச்சுக்க…’

அவர்கள் பரம்பரையில் அப்படித்தான். தானும் அப்படித்தான் இருந்தது. இனி…

‘ப்ரீத்தி…’ என்று நினைத்தபோது, அவனையும் அறியாமல் புன்னகை மலர்ந்தது.

“சரண் சிங் காலைல ஆறு மணிக்கு எழுந்துடுவார். ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ். ஃபிட்டா இருக்கனும்ன்னு நினைப்பார். ஆறரை மணிலருந்து ஏழு வரைக்கும் ஜாக்கிங். ஏழு மணிக்கு ஜிம். மீடியம் டூ ஹெவி வொர்க்அவுட். எட்டு மணிக்கு வீட்டுக்கு போனா, ஒன்பதரைக்கு வெளிய வர்றார். டைம் கான்ஷியஸ். ஆஃபீஸ் முடிஞ்சா, காஸ்மோ க்ளப். அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் கூட பார்க் ரெஸ்ட்ரோபார்ல மீட்டிங். பார்க்லையே இவருக்கு தனி சூட் ரூம் இருக்கு. பர்மனென்ட்டா. அங்க தான் இவரோட அத்தனை ஆக்டிவிட்டீஸும். பதினோரு மணிக்குள்ள வீட்டுக்கு போய்டறார். ஏதாவது வேலை இருந்தா மட்டும் தான் லேட் ஆகுது. இவர் பயப்படற ஒரே ஆள், இவரோட ஒய்ப் தான்.”

சரண் சிங்கின் வரலாற்றை ஒப்பித்தான் மகேஷ்.

“எங்க ட்ராப் பண்ண முடியும்ன்னு நினைக்கறீங்க மகேஷ்?” ஷான் கேட்டான்.

“காஸ்மோ க்ளப்ல தனியா இருக்கறதில்ல… அது செக்கன்ட் ஆப்ஷன், ரெஸ்ட்ரோபார்ல கூடவே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ட்ராப் பண்ண சரியான இடம் ஜிம் தான் பாஸ்…” என்று மகேஷ் கூறியதை கேட்ட ப்ரீத்தி,

“எஸ். நானும் அதை தான் நினைச்சேன்…” என்றாள்.

“ஒரு பொண்ணு இருந்தா ஈசியா ட்ராப் பண்ணிடலாம்…” மகேஷ் யோசனையாக கூற,

“நான் போறேன் பாஸ்…” என்றாள் ப்ரீத்தி.

“பிச்சுருவேன்… அடங்கு…” பல்லைக் கடித்தான் ஷான்.

“ஏன் நான் போகக் கூடாது?”

“ஏய்… அவன் ஏற்கனவே பொறுக்கி. என் முன்னாடியே உன் கிட்ட அப்படி வழிஞ்சான். எல்லாம் தெரிஞ்சும் உன்னை அனுப்ப நான் என்ன லூசா?” கோபம் பீறிட்டது அவனுக்கு.

மகேஷும் ஆல்வினும் இருவரும் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தனர்.

“நான் என்ன தனியாவா போக போறேன்? கண்டிப்பா செக்யுரிட்டி இருக்கும். நீங்க இருப்பீங்க… அப்புறம் நான் ஏன் போக கூடாது?” விடாமல் சண்டையிட்டாள் ப்ரீத்தி.

“இந்த மாதிரி விஷயத்துக்கு எல்லாம் உன்னை அனுப்ப நான் என்ன…” என்று ஆரம்பித்தவன், முடிக்கவில்லை. கண்டிப்பாக கெட்ட வார்த்தை தான் வரும். அனைவர் முன்னுக்கும் அவளிடம் அப்படி பேச விரும்பவில்லை அவன்.

“சாரி பாஸ். நான் போறதுதான் சரியா இருக்கும். விஷயம் நமக்குள்ள இருக்கணும். வெளிய இருந்து யாரை அனுப்பினாலும், விஷயம் லீக் ஆகிடும். என்னை நம்புங்க. நான் என்னோட செக்யுரிட்டில காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்.” எனவும் வேறு வழியில்லாமல் தலையாட்டினான்.

“ஓகே. ஆனா நான் சொல்றதை எல்லாம் அக்செப்ட் பண்ணிக்கணும்…”

“கண்டிப்பா பாஸ்…” என்று தலையாட்டினாள்.

“நான் என்ன சொல்ல போறேன்னு நினைச்சு நீ தலையாட்டுறீங்க ஆபீசர்?” கிண்டலாக அவன் கேட்க,

“ஏதோ ரூல்ஸ் சொல்றீங்கன்னு நினைச்சேன் பாஸ்…”

“ஏதாவது கோக்குமாக்கா சொன்னா என்ன பண்ணுவீங்க ஆபீசர்?”

“இவங்க முன்னாடி அப்படி சொல்ல மாட்டீங்கன்னு தெரியும் பாஸ். மீறி ஏதாவது சொன்னா உங்க மண்டைய நான் உடைப்பேன்னும் உங்களுக்கு தெரியும் பாஸ்…” என்று சிரிக்காமல் சொல்ல, மற்ற மூவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“டேய் உனக்கு தகுந்த ஒரே ஆள் நம்ம ப்ரீத்தி மட்டும் தான்டா…” ஆல்வின் சிரித்தபடியே கூற, அவனும் தலையாட்டினான்.

“அதுதான் தெரிஞ்சதாச்சே மச்சான்…” என்று சிரித்தவன், “ஜோக்ஸ் அப்பார்ட், அவனை ட்ராப் பண்றேன்னு அவன் கூட க்ளோசா மூவ் பண்ண கூடாது…” என்ற முதல் கண்டிஷனிலேயே டென்ஷனாகி விட்டாள் ப்ரீத்தி.

“என்னை என்னன்னு நினைச்சீங்க பாஸ்?”

“நான் என்ன வேணும்னாலும் நினைப்பேன் ஆபீசர். அதை பத்தி உங்களுக்கு என்ன? சொல்றதை கேட்டா தான் போகலாம்… ஓகேவா? இல்லையா?”

“ஓகே…” என்றாள் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு!

“நெக்ஸ்ட், செல்போன் ஏர்டாக்ன்னு எதையும் மிஸ் பண்ண கூடாது.”

“ம்ம்ம்… ஓகே”

“அடுத்தது, கைல பெப்பர்ஸ்ப்ரே, ஷாக் ஸ்டிக் கண்டிப்பா இருக்கணும். எதையாவது மறந்துட்டேன்னு சொன்ன, தொலைச்சுருவேன் பார்த்துக்க…” அழுத்தமாக அவன் கூறியதை கேட்டவள்,

“அந்த ஆளுக்கு இவ்வளவு சீன் இல்லடா…”

“இருக்கோ இல்லையோ… கைல இருக்கணும்… தேவைன்னா யூஸ் பண்ணனும்… என்னடி சொல்ற?” அரட்டலாக அவன் கேட்க, உதட்டை சுளித்தபடி தலையாட்டினாள்.

“ம்ம்ம்… சரிஈஈ…”

“அப்புறம் முக்கியமா ஒன்னை மறந்துட்டேன்…”

“எஸ் பாஸ்…”

“இனிமே நீ கடி ஜோக் சொல்றதை விட்டுடனும்…” என்று சிரித்தான்.

“அது கஷ்டம் பாஸ்…”

“அப்படீன்னா நீ போக வேண்டாம்.”

“சரி பாஸ். ட்ரை பண்றேன்…” என்று அவள் கூறியதிலிருந்தே தெரிந்தது, அதை அவள் செயல்படுத்த மாட்டாளென்று!

“ஜாக்கிரதைடா…” என்றவனின் தொனியில் மனம் வழுக்க முயல, இழுத்துப் பிடித்தாள் ப்ரீத்தி.

“கண்டிப்பா பாஸ்…” என்றாள்.

அவனது பதட்டம் வெளிப்படையாக தெரிந்தது. அவன் என்று வரும் போது, சற்றும் பயப்படாதவன், ப்ரீத்தியை தனியாக அனுப்ப இவ்வளவு தயங்குவது, ஆல்வினுக்கும் மகேஷுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“நாங்க விட்டுட மாட்டோம் பாஸ். மேடம் இருக்க சரௌன்டிங்ல பத்து பேராவது செக்யுரிட்டிக்கு இருப்பாங்க…” என்றான் மகேஷ் , ஷானுடைய சஞ்சலத்தை பார்த்து!

“கண்டிப்பா இருக்கணும் மகேஷ்…” என்றான் ஷான் கண்டிப்பாக!

அவனது அமைதியில்லாத மனநிலையை உணர்ந்த ப்ரீத்தி, “பாஸ்.. எனக்கொரு சந்தேகம்!” மிகவும் சீரியசான முக பாவனையோடு கேட்க,

“சொல்லுடா…” என்றவன், அவளது இதழோரத்தில் மடிந்த சிறு குறும் புன்னகையை கவனிக்கவில்லை. அவனது கவனமெல்லாம் ப்ரீத்தியை எப்படி தனியாக அனுப்புவது என்ற கவலையிலேயே இருந்தது.

“பஸ் ஸ்டான்ட்ல பஸ் நிற்குமா?” என்று கேட்க,

“ஆமா…” தீவிரமான முக பாவனையோடே அவன் கூறினான்.

“பைக் ஸ்டான்ட்ல பைக் நிற்குமா?” என்ற அவளது கேள்வியின் போது தான் சற்று சுதாரித்து, அவளை ஒரு மாதிரியாக பார்த்தபடி,

“ஆமா…” என்று இழுக்க,

“ஆனா கொசுவர்த்தி ஸ்டான்ட்ல கொசு நிற்குமா பாஸ்?” என்ற அரிய பெரிய கேள்வியை கேட்டவளை கொலை காண்டோடு பார்த்தவன்,

“வேணான்டி கொலை கேஸாகிடும்…” என்று பல்லைக் கடித்தபடி, அவளது கழுத்தைப் பிடித்து நெரிப்பது போல வர, சற்று தள்ளி அமர்ந்து கொண்டவள்,

“தெரியும்னா ஆமான்னு தலையாட்டுங்க, தெரியலைன்னா இல்லைன்னு தலையாட்டுங்க. இதென்ன சிறுபிள்ளைத்தனமா?” சிரிக்காமல் அவள் கூறியதை பார்த்த ஆல்வினுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டு சிரித்தான்.

அவனை பார்த்து முறைத்த ஷான், “நீ தான கேட்ட… இவ மாதிரி ஒரு செக்ரட்டரி. எப்படி? சமாளிப்பியா?” என்று கிண்டலாக கேட்க,

“ஒரே நாள்ல நாக்கு தள்ளிடும் மச்சான்…” என்று சிரித்தான் ஆல்வின்.

“அப்படீன்னா என்னோட நிலைமைய நினைச்சுப் பாரு…”

இருவரையும் பொதுவாக பார்த்த ப்ரீத்தி, “பொறாமை பிடிச்ச உலகமடா சர்வேசா. ஒரு கேள்விக்கு பதில் சொல்ல தெரியல… இதுல இவங்க என்னத்த பண்ணி… என்னத்த செஞ்சு…” என்னத்த கண்ணையாவை போல ஷானை கலாய்த்தாள்.

அவள் புறம் குனிந்த ஷான், அவளது காதில், “இப்ப நீ நிறுத்த போறியா? இல்லைன்னா மெக்ஸிக்கன் சலவைக்காரி ஜோக் சொல்லட்டா?” என்று கிசுகிசுக்க, இரண்டு கைகளாலும் அவளது வாயை மூடிக் கொண்டாள்.

அதைப் பார்த்தவனுக்கு சிரிப்பு பீறிட்டது.

புன்னகை முகத்துடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த ஆல்வின், “சரி… அடுத்த விக்கட்டை பார்க்க வேண்டாமா?” என்று கேட்க,

“சைலேஷ் தானே?” என்று சிரித்தபடியே கேட்டான் ஷான்.

“எஸ்…” என்றவன், மகேஷை பார்த்து, “என்ன மகேஷ்?” என்று கேட்க, திரையில் சைலேஷுடைய படம் வந்தது.

“பேர் சைலேஷ். மாயாவோட பார்ட்னர். லீகலா கல்யாணம் பண்ணிக்கல. இவரோட முதல் குடும்பம் ஹைதராபாத்ல இருக்கு. அவங்களுக்கு இரண்டு பசங்க. இவரோட ஹைதராபாத் ப்ராபர்டீஸ மெயின்டைன் பண்றது அவங்க தான். மாயாவ சேர்த்துகிட்ட பிறகு, இவர் சென்னைல பாதி நாள், ஹைதராபாத்ல பாதி நாள் இருப்பார். ஸ்வேதாவுக்கு முதல் பட சான்ஸ் வாங்கி தந்ததுல இருந்து எல்லாமே இவர் தான். ஸ்வேதாவை ரவியோட லிங்க் பண்ணி விட்டதும் இவர் தான்.

மாயாவோட கண்ட்ரோல்ல தான் ஸ்வேதா இருக்கறதா எல்லாரும் நினைக்கறாங்க. ஆனா உண்மைல சைலேஷ் தான் அங்க டிசைடிங் அத்தாரிட்டி. நிறைய அரசியல்வாதிகள் பழக்கமும் இருக்கு. கிராண்டா பார்ட்டி நடத்தறது, அதன் மூலமா காண்டாக்ட்ஸ் பிடிக்கறது இவரோட டெக்னிக்.

இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, ஒவ்வொரு முக்கியமான ஆளுங்களோட அந்தரங்கம் முழுக்க இவருக்கு அத்துபடி. அதுக்கேத்த மாதிரி செயல்படறதுல இவரை அடிச்சுக்க ஆளே இல்ல. சுருக்கமா சொன்னா ஹைடெக் மாமா. ரவிக்கு முக்கியமான ஆள். வலது கை மாதிரி.”

“ரவியோட சீக்ரட்ஸ் வேணும்னா சைலேஷ்ங்கற டஸ்ட் பின்னை தேடினா போதும் போல…” என்று சிரித்தான் ஷான்.

“எஸ்…” என்றான் ஆல்வின்.

“இவர எப்படி ட்ராப் பண்றது மகேஷ்? எனி வீக்னெஸ்?” யோசனையாக ஷான் கேட்டான்.

“சொன்னா கேவலமா இருக்கும் பாஸ்…” என்று மகேஷ் சிரித்தான்.

“சொல்லு மேன்… அப்படி என்ன கேவலமான வீக்னஸ்?” கிண்டலாக கேட்டான்.

“மேடம் வேற இருக்காங்க…” தயங்கிய மகேஷை ஆச்சரியமாக பார்த்தவன்,

“அந்த அளவுக்கு கேவலமா?”

“எஸ் பாஸ்…”

“ப்ரீத், க்ளோஸ் யுவர் ஐஸ் அண்ட் இயர்ஸ்…” என்றவனின் உதடுகள் கிண்டலில் மடிந்திருந்தன.

“யூ ப்ளீஸ் க்ளோஸ் த டோர்…” என்று அருகில் அமர்ந்திருந்த ஷானை பார்த்துக் கூறியவள், மகேஷை பார்த்து, “சொல்ல வந்ததை சொல்லுங்க மகேஷ்…” என்று கண்டிப்பான குரலில் கூற,

“ஹீ இஸ் எ பை(bi) பாஸ்…” என்றதும் அந்த அறையில் நிசப்தம் நிலவியது. என்ன பதில் பேசுவதென்றே புரியாமல் வந்தமர்ந்த அமைதி அது!

ப்ரீத்தி மட்டும் குழப்பமாக, “பை’ யா? அப்படீன்னா என்ன பாஸ்?” என்று ஷானை பார்த்துக் கேட்டாள். அவளுக்கு உண்மையிலேயே அதற்கான அர்த்தம் புரியவில்லை.

மகேஷ் சொன்னதை விட அவள் கேட்ட கேள்வியில் ஷான் அதிர்ந்தான். அவனை காட்டிலும் மற்ற இருவரும். இதற்கென்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவர்கள் இருவரும் தலையை சொரிய, ஷான் சிரிப்பை அடக்க வழி தெரியாமல், வெடித்து சிரித்தான்.

“ஏன் சிரிக்கறீங்க?” அவளுக்கு குழப்பம் தீரவில்லை என்றாலும், ஏதோ கோக்குமாக்கான அர்த்தம் என்பது மட்டும் புரிந்து விட்டது.

“அப்பறமா சொல்றேன் பக்கி…” சிரித்தபடியே ஷான் கூற, அவனுக்கு மிகவும் அருகில் சாய்ந்தவள், அவனது காதில், இருவருக்கு மட்டும் கேட்குமாறு,

“தப்பான அர்த்தமாடா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள். அவளது முகம் சங்கடமாக துவண்டது.

“தப்பெல்லாம் இல்லடி.” என்று சமாதானப்படுத்தியவன், “அது ஜஸ்ட் செக்ஷுவல் ஓரியன்டேஷன். அவனுக்கு பொண்ணுங்க மட்டுமில்ல, பசங்கன்னா கூட இன்ட்ரஸ்ட்டாம்…” அவளை போலவே கிசுகிசுப்பாகவே கூற, அவளுக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை.

“அது எப்படி? அப்படி?” என்று யோசனையாக கேட்க,

“ஏய் இதெல்லாம் தனியா கேளுடி. இங்க வெச்சு எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ணுவேன்?” அவளது முகத்தைப் பார்த்தவாறு மடிந்த இதழோரம் துடித்துக் கொண்டிருந்த புன்னகையோடு அவன் கேட்டதில் லேசாக பல்பு எரிந்தது அந்த அம்மணிக்கு.

“அய்யயோ…” என்று ஆரம்பித்தவள், இரண்டு கைகளாலும் தலையை தாங்கிக் கொண்டு குனிந்து கொண்டாள்.

“சோ, என்ன பண்ணலாம் கைஸ்?” என்று மற்ற இருவரையும் பார்த்து ஷான் கேட்க, சட்டென நிமிர்ந்த ப்ரீத்தி,

“தலைவரே… நீங்களே ட்ரை பண்ணிருக்கலாம். மிஸ் பண்ணிட்டீங்க…” என்று கூற,

“ஏய்… அடங்கு… வேண்டாம்…” ஷானால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இல்ல தலைவரே. ஸ்வேதா தனி ட்ராக், இவன் தனி ட்ராக்ன்னு நீங்க ஓட்டி இருக்கலாம்ன்னு ஐடியா சொல்றேன்…” என்று அவனை மீண்டும் ப்ரீத்தி கலாய்க்க, மற்ற இருவரும் வெடிச்சிரிப்பு சிரித்தனர்.

“நானே விட்டாலும் நீ அவளை விட மாட்ட…” என்று அவளது பின் மண்டையில் தட்டிய ஷான், “ஐடியா குடுக்கறியா, ஐடியா…” என்று இன்னொரு முறை தட்ட, தலையை தேய்த்து விட்டபடியே,

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல தலைவரே. தாராளமா நீங்க ட்ரை பண்ணலாம். பிகாஸ் யூ ஆர் எ கவர்ச்சிகண்ணன் யூ நோ?!” சிரிக்காமல் பங்கமாய் அவள் கலாய்த்ததில், ஆல்வின்,

“எப்படி மச்சி இப்படியொரு ஆளை வெச்சுட்டு சுத்தற?” வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“என்னை அசிங்கப்படுத்த நானே சம்பளம் கொடுத்து கூடவே வெச்சுருக்கேன்டா… என்ன பண்ண?” என்று சலித்துக் கொள்ள,

“என்ன தலைவரே? என்னை இப்படி அசிங்கப்படுத்தீட்டீங்க?” சிரிக்காமல் அவனை இன்னும் வாரினாள் ப்ரீத்தி.

அவள் புறம் குனிந்தவன், “மெக்ஸிக்கன் சலவைக்காரி ஜோக் வேணுமா?” என்று கிசுகிசுப்பாக கேட்க, அவள் சட்டென கையால் வாயை மூடிக் கொண்டாள். அவளது அந்த செய்கையை பார்த்தவனுக்கு புன்னகை பொங்கியது.

கடைசியாக சைலேஷிடம் ஆல்வினை அனுப்புவது என்று முடிவானது.