பேசிக் கொண்டிருக்கும் போதே சைலேஷின் கார் நகர, அதை ஆல்வினின் கார் பின் தொடர்ந்தது. அதை தொடர்ந்து சற்று இடைவெளி விட்டு, இவர்களது போர்ஸ் ட்ராவலர் தொடர்ந்தது.
சைலேஷின் கார் நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் பயணித்துக் கொண்டிருந்தது.
நுங்கம்பாக்கம் ஹை ரோடு, சூளைமேடு சிக்னல், வள்ளுவர் கோட்டம், மெரீனா பீச் போன்றவைகள் ஓரினசேர்க்கையாளர்களின் விருப்பமான இடங்கள். இரவு பதினோரு மணிக்கு மேல் அந்த இடங்களில் அவர்களது ஆளுகை தான்!
அந்த இடங்களில் வண்டிகள் வேகம் குறைகின்றன என்றால், அவர்களின் தேவைகளை சொல்லாமலே புரிந்து கொள்வார்கள், சாலையோரங்களில் காத்திருப்பவர்கள்.
அதை சரியென்றோ தவறென்றோ கூற நாம் யார்?
மனிதனின் தேவையனைத்தும் சரியானவையே என்பது ஒரு சிலரின் நியாயமாக இருக்கலாம். அது நியாயமாவதோ, அநியாயமாவதோ ஒவ்வொருவரின் பார்வையை பொருத்ததே!
அது அவர்களின் உலகம்… அவர்களுக்கான உலகம்!
அந்த உலகிலும் வலி உண்டு, வேதனை உண்டு, தவிப்புண்டு, வெட்கமுண்டு, வெறுப்புண்டு… ஆனால் இந்த அத்தனை உண்டையும் துளி உதட்டு சாயமும், கண்மையும் மறைத்துவிடுகிறது!
சைலேஷ் மிதமான வேகத்திலேயே காரை செலுத்திக் கொண்டிருந்தார். இருபுறமும் பார்வையிட்டபடி!
அப்போது அவரை முந்திக் கொண்டு சென்றது ஒரு இன்னோவா. சற்று தூரம் தள்ளி வேகத்தை குறைத்து உருட்டியபடி நின்ற அந்த இன்னோவாவை பார்வையிட்டபடியே வேகத்தை குறைத்தார் சைலேஷ். அது பெரும்பாலும் ஓரினசேர்க்கையாளர்களின் சங்கேத மொழி.
நின்ற இரண்டு வண்டிகளையும் சற்று தூரத்திலிருந்து பார்வையிட்டுக் கொண்டிருந்தனர், ஷான், ப்ரீத்தி மற்றும் மகேஷ்.
“எதுக்கு இங்க வண்டிய நிறுத்தி இருக்காங்கடா?” புரியாமல் கேட்டாள் ப்ரீத்தி.
“உன்னை மொதல்ல பார்க்லையே கட் பண்ணி விட்ருக்கணும். இது என்ன அது என்னன்னு மனுஷனை நெளிய வைக்கற…” அவளது காதில் கிசுகிசுத்தான் ஷான்.
“இதுல நெளிய என்ன இருக்கு?” அவனை முறைத்தாள்.
“இங்க பாரு. இதுக்கெல்லாம் சப்டைட்டில் போட்டுட்டு இருக்க முடியாது. புரியலைன்னா கண்ணை மூடிக்க, இல்லைன்னா தனியா இருக்கப்ப கேளு… மகேஷும் இருக்கப்ப கேட்காத…”
பல்லைக் கடித்தபடி கிசுகிசுப்பாக கூறினான் ஷான்.
“தெரியலைன்னா சொல்ல வேண்டியது தான? இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையணும்?” என்று வடிவேலு பாணியில் கலாய்த்தவளை பார்த்தவன்,
“தனியா நீ சிக்காமையா போவ? அப்ப இருக்குடி உனக்கு…” என்றபடி, சற்று தூரத்தில் தெரிந்த ஆல்வினையும் சைலேஷையும் பார்த்தான்.
ஆல்வின் வித்தியாசமாக தொளதொளவென பூ போட்ட சட்டை அணிந்திருந்தான். அதை விட வித்தியாசமான ஷார்ட்ஸ். நான்கு பட்டன்களை திறந்து விட்டபடி சுதந்திரமாக விட்டிருந்தவனை பார்க்கவே மிகவும் விசித்திரமாக இருக்க, ப்ரீத்தி ‘பே’ வென ஷானை பார்த்தாள்.
***
சட்டை காலரை தூக்கி விட்டபடி காற்றாட நின்றவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசும் காற்று விசுவிசுவென முரட்டுத்தனமாக வந்து மோதியது. சாலை அமைதியாக இருக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் நின்று கொண்டிருந்தனர். அழுத்தமான லிப்ஸ்டிக். தலை நிறைய மல்லிகை. இறக்கிக் கட்டிய புடவை. கண்களில் மை. முகத்தில் கனமான ஒப்பனை. நளினமான நடை நடந்து போனவர்களையே பார்வையிட்டபடி நின்றிருந்தான்.
அருகில் வந்து நின்றது சைலேஷின் ஆடி.
ஓரக்கண்ணால் பார்வையிட்டுக் கொண்டான். சைலேஷை கவனிக்காததை போல போனவர்களை பார்த்துக் கொண்டிருந்தவனை மேலிருந்து கீழ் வரை பார்வையிட்டார் சைலேஷ்.
ஜிம் போய் சேர்த்து வைத்த சதைக் கோளங்கள் அவரை மிகவும் கவர்ந்தது. அவரது விருப்பத் தேர்வு, இவர்களை போன்றவர்கள் தான். சைலேஷ் இயல்பிலேயே சற்று மாறுபட்ட பால் பண்பை கொண்டவர். பெண்களோடு உறவாடுவதை விட, ஆண்கள், அதுவும் உறவில் வன்மையாக ஆதிக்கம் செலுத்துகிற ஆண்மை மிக்க ஆண்களை மிகவும் விரும்புவார்.
அந்த வகையில் திமிரோடு ஓட்டிப் பிறந்த முரட்டு ஷானை அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ரவியிடம் மாட்டினால் தனக்கு சங்கு தான் என்பதால், நேருக்கு நேராக அவனைப் பார்த்தாலும் பார்க்காதது போல நகர்ந்து விடுவார்.
சத்தியசோதனை அவருக்கு!
அதிலும் ஒரு முறை அவனை இறுக்கமான டிஷர்ட்டில் பார்த்தபோது அவரால் அவரை கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியாமல் தவித்துப் போனார்.
சைலேஷ் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தாலும் பார்க்காததைப் போலவே நின்று கொண்டிருந்தான் ஆல்வின். என்ன தான் நடக்கிறது என்பதையும் பார்த்து விடலாம் என்று முடிவு செய்து கொண்டவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது. ஆனால் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
மெதுவாக அவனை நோக்கி வந்தார் சைலேஷ்!
திரும்பி அவரைப் பார்த்தான் ஆல்வின்!
“டபுள் மூன்?” ஆல்வின் சைலேஷை பார்த்து கேட்டான். அதுவொரு சங்கேத பாஷை. டபுள் மூன் என்றால் பாலியல் தேவைக்காக ஆண்கள் தங்கள் சுயபாலினத்தை தேர்வு செய்வதென்பது பொருள்.
அதை கேட்டவுடன் சைலேஷின் முகம் ஸ்விட்ச் போட்டது போல மலர்ந்தது!
“எஸ் டார்லிங். ஆர் யூ இன்ட்ரஸ்ட்டட்?”
“அஃப்கோர்ஸ். அம் வெய்ட்டிங்.” என்ற ஆல்வின், “டாப் ஆர் பாட்டம்?” என்று கேட்க,
“வாட் இஸ் யுவர்ஸ்?”
“அஃப்கோர்ஸ் டாப்…” என்றான் ஆல்வின்.
“ஐ டோன்ட் மைன்ட் பீயிங் அட் பாட்டம்…” என்றவர், “அண்ட் ஐ லைக் டூ பி சப்மிசிவ்…” என்று தனது ஆசையை எடுத்துக் கூறினார் சைலேஷ்.
“ஓ மை…” என்று ஆனந்தமானதை போல காட்டிக் கொண்டவன், “தட்ஸ் கிரேட்” எனவும் சைலேஷ் இறக்கையில்லாமல் பறந்தார்.
சிலருக்கு ஆதிக்கம் செலுத்துவதில் ப்ரியமிருப்பதை போல, சிலருக்கு ஆதிக்கம் செலுத்தப்படுவதில் ப்ரியமிருக்கும். டாமினன்ஸ், சப்மிசிவ் என்பதில் பல கட்டங்களும் உண்டு. சிலருக்கு கொத்தடிமையாக நடத்தப்படுவதில் கூட விருப்பமிருக்கும். சிலருக்கு அடித்தால், சிலருக்கு ரத்தம் வழிய அடி வாங்கினால் என்று பலதரப்பட்ட விருப்பப் பட்டியல் உண்டு.
இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ப்ரீத்தி, உண்மையிலேயே தலையை பிடித்துக் கொண்டாள்.
“சத்தியமா ஒண்ணுமே புரியல தலைவரே…” என்று அவனது காதை கடிக்க, அவன் குறுஞ்சிரிப்போடு மகேஷை பார்த்தான். அவனது பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவன், சற்று விலகி வண்டியின் கதவை ஓட்டி நின்று கொண்டான்.
“ஏய் ஏன்டி இப்படி மானத்த வாங்கற?”
“புரியலன்னு கேக்கறது ஒரு குத்தமா?”
“சரி பக்கத்துல வந்து தொலை. இனிமே உன்னை கட் பண்ணிட்டு தான் வரணும்…” என்று சலித்துக் கொண்டவன், அவளது காதை பிடித்து இழுத்து, முழு உரையாடலின் அர்த்தத்தையும் கூறத் துவங்க, ப்ரீத்தியின் முகம் விளக்கெண்ணையை குடித்தது போல ஆனது.
“ஐயோ ச்சீ…” என்று தலையிலடித்துக் கொண்டவள், “பெருமாளே பெருமாளே… என் காதை கொஞ்சம் டெட்டால் போட்டு வாஷ் பண்ணி விட்டுடுப்பா…” என்று காதை மூடிக் கொள்ள,
“பாதிக்கே இப்படியா? மீதிக்கு என்னடி சொல்வ?”
“ஐயோ வேண்டாம் தலைவரே… வேண்டாம்.” என்று கையெடுத்து கும்பிட்டவள், “என்னை விட்டுடுங்க. இந்த பச்சை மண்ணை சுட்ட மண் ஆக்காதீங்க…” என்று அலறினாள்.
அதை பார்த்தவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
“ஏய்… நீ தானடி கேட்ட?”
“தெரியாம கேட்டுட்டேன். இனிமே கேக்கவே மாட்டேனே…” என்றவள், சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல், அவ்வப்போது உரையாடல்களுக்கு காது கொடுத்துக் கொண்டுதானிருந்தாள். சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்துக் கொண்டுமிருந்தாள்.
***
“இன்னைக்கு எனக்கு லக் அடிச்சுருக்குன்னு நினைக்கறேன்.” ஆல்வினை நளினமாக தடவிக் கொண்டே கூறினார் சைலேஷ்.
அவரது தொடுகை நெளிய வைத்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “அஃப்கோர்ஸ் ஸ்வீட்டி…” என்று அவரது கன்னத்தைத் தடவினான் ஆல்வின்.
கண்களை மூடி அவனது அந்த இதமான வருடலை ஆழ்ந்து அனுபவித்தார் சைலேஷ். அவனது ஆண்மை வாசம் அவரது உணர்வுகளை கிளறிவிட்டது.
அவரது தோளை இறுக்கமாக பற்றினான், இறுக்கமாக, மிக மிக வன்மையாக. அவனது அந்த கடினத்தில் அவரது தோள் வலித்தது. கிட்டத்தட்ட எலும்பை நொறுக்கும் அந்த வலிமையில் சொக்கிப் போனார்.
“ஐ நீட் மோர் பேபி…” என்று கண்களை மூடியவாறே சைலேஷ் கூற, அவனது இறுக்கம் சற்று குறைந்தது.
கண்களை திறந்து ஆல்வினை பார்த்தார்.
அவனது பார்வை அவனைப் பார்த்து மயக்கமாக புன்னகைத்தபடி சென்று கொண்டிருந்த அந்த இருவரின் மேல் பட்டது. பெண்களை தோற்கடிக்கும் அந்த கவர்ச்சியில் மயங்கியதை போல அவர்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஆல்வின்.
“என்ன பேபி?” என்று ஏமாற்றமாக கேட்டார் சைலேஷ்.
“ஐ நீட் ஹெர்…” என்று கண்களால் சுட்டிக் காட்டியவனை வருத்தமாக பார்த்தார் சைலேஷ். அவருக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. இன்றைய இரவு அவனோடு தான் என்று முடிவெடுத்துக் கொண்ட பின் இப்படி அவன் கூறியது, அவருக்கு பெரும் ஏமாற்றமே! ஆனால் அப்படியே விட்டு விட கூடியவர் இல்லை சைலேஷ்.
“நோ பேபி. ஐ நீட் யூ நவ்…”
“சாரி ஸ்வீட்டி. நாம இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்று அவரை கத்தரிக்க முயன்றவனை, கெஞ்சுவதை போல பார்த்தார்.
“ப்ளீஸ் பேபி. என்னை டிஸ்ஸபாயின்ட் பண்ணாதே.” என்று மன்றாடினார்.
சப்மிசிவ் குணங்கள் இருப்பவர்கள், தங்களது இணைகளை தக்க வைக்க, எவ்வளவு வேண்டுமானாலும் கீழிறங்குவார்கள் என்பதை ஆல்வினும் அறிந்திருந்தான். அவரது பலவீனமான புள்ளியை அவன் தட்ட, அவர் சிக்கிவிட்டார்.
“ம்ம்ம்… ஓகே.” என்று தலையசைத்தவன், “நான் சொல்றதை எல்லாம் கேட்கணும்.” நிபந்தனை விதித்தான்.
“கண்டிப்பா கேட்பேன்.”
“என்ன சொன்னாலும் செய்யனும்.”
“கண்டிப்பா செய்வேன்.”
“ஐ வான்ட் டூ ஸ்மோக் வீட் (weed). உனக்கு?”
“வாவ். தட்ஸ் மை ப்ளெஷர்…” அவருக்கும் கஞ்சா குடிக்கும் பழக்கம் இருந்தது. ஓரின சேர்க்கையாளர்கள் எல்லாமே இப்படி இல்லை. ஆனால் இப்படிப்பட்டவர்களும் உண்டு. காரை முழுவதுமாக மூடிக் கொண்டு கஞ்சா, மாலி எனப்படும் எக்ஸ்டசி, ஆசிட் எனப்படும் எல்எஸ்டி, கேட்டமைன், டிஎம்டி ஊசிகள் என்று போதையில் முழுவதுமாக ஆழ்ந்தபடி இருப்பார்கள்.
“ஓகே…” என்றவன், “காருக்கு போகலாமா?” என்றவன், அவரது தோளில் வன்மையாக கைபோட்டபடி அவனது இன்னோவாவில் தள்ளினான்.
அவனது வன்மையான ஒவ்வொரு செயலையும் ரசித்தார் சைலேஷ்.
அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டவன், சுருட்டு போன்றவைகளை கையிலெடுத்தான். லைட்டரை எடுத்தவன், ஒன்றை பற்ற வைத்து, அவரிடம் கொடுத்தபடி, இன்னொன்றை பற்ற வைத்துக் கொண்டான், தனக்காக!
அவனிடமிருந்து வாங்கியவர், வாயில் வைத்து ஆழமாக மூச்சை இழுத்து விட்டபடி புகையை உள்ளிளுத்தார்.
அவர் எப்போதும் புகைக்கும் கஞ்சா போலில்லை இது!
“நானும் எத்தனையோ பாட் அடிச்சுருக்கேன். ஆனா இது வேற மாதிரி தூக்குதே பேபி…” என்றவரின் குரல் மயக்கத்தில் ஆழ துவங்கியது. சர்ரென்ற இந்த போதை கஞ்சாவில் புதிது. கஞ்சா புகைக்க ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து தான் மிதக்கும் உணர்வு அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த புகை அவரை சுழல செய்தது, சந்தோஷத்தில் மிதக்க செய்தது. கண்களில் ஏதேதோ தோன்றியது. தான் யாரோவாக மாறிவிட்டதாக தோன்றியது. உடலுக்குள் ஆயிரம் யானை சக்தி புகுந்து விட்டதாக தோன்றியது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பேரின்பம் மின்னல் போல பாய்ந்தது. அந்த இன்பத்தை அவர் இதுவரை உணர்ந்ததில்லை.
“வாவ்வ்வ்வ்வ்…” என்று குழறியவர், “என்ன பேபி இது? ஐ நீட் சம் மோர்…” என்று கேட்க,
“இது ஸ்பெஷல் வீட் ஸ்வீட்டி.” என்று ஆல்வின் மயக்கமாக சிரிப்பதை போல நடித்தான். உண்மையில் அவனிடமிருந்தது சாதாரண புகையிலை சுருட்டு. சைலேஷ் புகைத்தது, ஸ்பெஷல் கஞ்சா. அதாவது டிஎம்டி கலந்த கஞ்சா. சாதாரண கஞ்சா இந்த போதையை மெது மெதுவாகத்தான் கொடுக்கும். ஆனால் இந்த டிஎம்டி சட்டென தூக்கி விட்டுவிடும். அதற்காகவே சிலர், வெள்ளை பொடியாக இருக்கும் டிஎம்டியை கஞ்சாவில் சேர்த்து புகைப்பார்கள். சாதாரண சிகரெட்டில் கலந்து புகைப்பவர்களும் உண்டு. ஆனால் இந்த போதை அனைத்தும் ஒரு இரண்டு மணி நேரத்துக்கு தான். தப்பித்தவறி அளவு அதிகமானால் வலிப்பு வருவதற்கும் வாய்ப்பு உண்டு!
எல்லாம் இன்பமயமாக தோன்றியது அவருக்கு. அந்த இன்பத்தை விட்டுவிட கூடாது என்பதற்காக முழு சுருட்டையும் புகைத்துக் கொண்டே இருந்தார்.
அது முடிந்ததும் ஆல்வினிடம், “எனக்கு இன்னொன்னு குடு பேபி…” என்று கெஞ்ச, அவனும் புன்னகைத்தபடியே,
“எப்படி இருக்கு?” என்று கேட்டபடி இன்னொரு கஞ்சா சுருட்டை அவரிடம் கொடுத்தான்.
“சொர்க்கம்… சொர்க்கம் தெரியுது பேபி…” என்று கிறக்கமாக அடுத்ததை வாயில் வைத்து புகைக்க துவங்கினார்.
அந்த புகை அவனுக்கே கிறுகிறுக்க வைத்தது, அதனாலேயே கண்ணாடி ஜன்னகளை திறந்து வைத்துக் கொண்டான். வெளிக்காற்று வரவும் இவனால் ஓரளவுக்கு மூச்சு விட முடிந்தது. ஆனாலும் மூச்சு விடுவதை சற்று கட்டுப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது.
இரண்டாவது சுருட்டை அவர் ஆரம்பித்த போது, அவரது ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டுப் பார்த்தான் ஆல்வின். அவரது ஐபோன் தட்டுப்பட்டது. எடுத்தவன், திறந்து பார்த்தான். அவரது கைரேகையை கேட்டது.
அவரது வலது கை பெருவிரல் ரேகையை சென்சாரில் வைத்தான். திறந்து கொண்டது.
போன் கைக்கு கிடைத்ததை சமிஞ்சையாக அனுப்பினான் ஷானுக்கு!
உடனடியாக சைலேஷின் பேசிக்கு அந்த லிங்க் மெசேஜாக வந்தது.
அந்த லிங்க்கை திறக்க, அந்த ஸ்பை மென்பொருள் தானாக பதிவிறக்கம் செய்து கொண்டது. இனி அந்த பேசியில், அந்த மென்பொருள் இருப்பதை கூட யாரும் அறிய முடியாது. வந்த மெசேஜை அழித்துவிட்டு அவரது பேசியை ஜிப்பாவில் இருந்த இடத்திலேயே வைத்தான் ஆல்வின்.
வேலை முடிந்தது அவர்களுக்கு!
கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தவரை கைத்தாங்கலாக பற்றிக் கொண்டவன், அவரை அவரது காருக்கு அழைத்து சென்றான்.
கார் கதவை திறந்தவன், ஓட்டுனர் இருக்கையில் அமர வைத்து விட்டு கார் கதவை மூடினான்.
“என்னை விட்டுட்டு போகாத பேபி…” அந்த நேரத்திலும் சைலேஷ் தானொரு காதல் மன்னன் என்று நிருபிக்க,
“நான் எங்கயும் போல ஸ்வீட்டி. ஜஸ்ட் டூ மினிட்ஸ். நாம நம்ம இடத்துக்கு போய்டலாமா?” என்று கேட்க,
“வாவ். சூப்பர். போலாம்…” என்று போதையில் குழறினார்.
அடுத்த நாள், ‘ஸ்வேதாவின் தந்தை போதையில் குத்தாட்டம்’ என்று செய்திகள் பரபரத்தது.
அவர் அலங்கோலமாக போதையில் ஆடிய ஆட்டத்தை எல்லாம் பலரும் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர், அது ஸ்வேதாவின் தந்தை என்று தெரியாமலேயே! அவர் ஸ்வேதாவின் தந்தை என்று தானே வெளியுலகுக்கு அறிமுகம். தெரிய வந்தபோது அந்த முகத்தால் சோஷியல் மீடியா தீப்பிடித்துக் கொண்டது.
ஷான் வெளியுலகத்துக்கு எப்படி தெரிய வேண்டும் என்று ஸ்வேதா மூலமாக போதை மருந்தை கொடுத்தாரோ, அது இப்போது அவருக்கு நடந்து கொண்டிருந்தது.