Kalangalil aval vasantham 32

இதுதான் நடக்கிறது என்பதை தெளிவாக புரிய வைத்தார் ஹெக்டே, அவன் நிரந்திரமாக பெட் செய்வான் என்ற நம்பிக்கையில்!

“அந்த மெயின் புக்கி யாருங்க ஹெக்டே? சொல்ல முடியுமா?” என்று கேட்க, அவர் மறுத்தார்.

“இல்ல அர்ஜுன். அது சீக்ரட்…”

“இங்க வேற சர்கிள் புக்கீசும் இருக்காங்களா?”

“எஸ் அஃப்கோர்ஸ். நிறைய பேர் இருக்காங்க. ஆனா டீம்ல யாரோட கை மேல இருக்குங்கறதை பொறுத்து தான், அவங்க சக்சஸ் ரேட் சொல்ல முடியும். அதுவுமில்லாம இந்த தொழில்ல நாணயம் ரொம்ப முக்கியம். ஏமாத்தற புக்கீசும் இருக்காங்க. காசை வாங்கிட்டு அதை எடுத்துட்டு ஓடற ஏஜென்ட்ஸும் இருக்காங்க. ஆனா அப்படிப்பட்ட ஏஜென்ட்ஸ் உயிருக்கு உத்தரவாதம் இல்ல. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நாங்க உண்மையா பார்க்கணும். அதுதான் இங்க முக்கியம்.”

“வாவ்…” என்று வாயை பிளந்தவன், “இதுல இவ்வளவு இருக்கா?” என்று கேட்க, ஹெக்டே சிரித்தார்.

“எஸ்… நீங்க தேர்ந்தெடுக்கற புக்கியோட ரெபுடேஷன் எவ்வளவு முக்கியம்ன்னு நீங்களே பார்த்துக்கங்க…” என்று கூறியவரை அதே வியந்த பார்வை பார்த்தவன்,

“உங்களுக்கு இதுல என்ன பெனிபிட் இருக்கும்? ஜஸ்ட் ஒரு கியுரியாசிடி தான்…” என்று கேட்க,

“பர்சென்டேஜ் தான் அர்ஜுன். இப்போதைக்கு எனக்கு ஒரு பர்சென்ட்… பெரிய அமௌன்ட்டுக்கு எல்லாம்… அப்புறம் ராகேஷுக்குக்கும் அதுல பங்கு வரும்…” என்று சிரித்தார். என்ன இந்த மனிதர் எல்லாவற்றையும் உளறுகிறார் என்று ராகேஷால் நினைக்காமலிருக்க முடியவில்லை. என்னதான் குடிபோதை என்றாலும் இந்தளவா உளருவது என்ற எரிச்சல் அவனுக்கு!

“ஓகே ஹெக்டே. பணம் எப்படி கொடுக்கணும்?”

“பை கேஷ் தான் அக்செப்ட் பண்ணுவோம். அப்படி இல்லைன்னா ஹவாலா கூட ஓகே தான். நமக்கு எல்லா நாட்லயும் ஆளுங்க இருக்காங்க…” என்று கூற, ‘எவ்வளவு தூரம் சரணின் கைகள் நீண்டிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டான் ஷான்.

அத்தனையும் படமாகிக் கொண்டிருந்தது. இவன் ஹெக்டேவை சந்தித்த அதே நேரத்தில், முக்கியமான புக்கீஸ் என்று சந்தேகத்துக்கு உரியவர்களை மகேஷ் மற்றும் அவனது டீம், இதே போல சுற்றி வளைத்திருந்தனர்.

ஹெக்டேவிடமிருந்து பார்வையை ப்ரீத்தியை நோக்கி திருப்பியவன், “ஏய் புஜ்ஜி… என்னடி சொல்ற? பண்ணட்டா?” என்று கேட்க, அவள் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் பேந்த பேந்த விழித்தாள். மற்ற நேரமாக இருந்தால், படபடவென பேசுபவளின் மொழி அப்போது மௌனத்தை தத்தெடுத்தது.

“அவங்களுக்கு புரியல அர்ஜுன்…” ஹெக்டே உண்மையை அறியாமல் பரிதாபப்பட,

“ஆனா என் பொண்டாட்டிய கேட்காம நான் எதையும் செய்ய மாட்டேன் ஹெக்டே.” என்று சிரித்தவன், “ஏய் புஜ்ஜி…” சற்று சப்தமாக அழைக்க, திடுக்கிட்டு பார்த்தாள்.

“என்னங்க?” என்று அப்பாவியாய் கேட்டவளை பார்த்தவனுக்குள் ரகசியப் புன்னகை. இந்தளவு அல்லாடுவாள் என்று தெரிந்திருந்தால், அவளது உணர்வுகளோடு இவ்வளவு உரையாடியிருக்கமாட்டான். அவன் சுதாரித்துக் கொண்டான். ஆனால் அவளால் முடியவில்லை என்று புரிந்தது.

“கிழிஞ்சுது. நீ இன்னும் நார்மலாகலையா?” என்று ஷான் சிரிக்க, அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை.

மற்ற இருவரின் பக்கம் திரும்பியவன், “நேத்துலர்ந்து சண்டை. அதான் இன்னைக்கு எதாவது வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்தலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன். இன்னும் அதே மூடுலையே இருக்கா…” என்று சிரித்தான்.

“குடும்பம்னா நாலும் இருக்கறதுதான் அர்ஜுன்…” என்றவர், மீதமிருந்த விஸ்கியை முடித்து விட்டு எழுந்தார்.

“பணம்…” என்று இழுத்தவன், “இப்ப ஒரு ஒன் சி கொண்டு வந்திருக்கேன். மீதிய எப்ப குடுக்கலாம்?” என்று அவன் கேட்க,

“எப்ப வேணும்னாலும் கால் பண்ணுங்க அர்ஜுன்.” என்று அவரது விசிட்டிங் கார்டை கொடுத்தவர், “யூ ஆர் ஆல்வேஸ் வெல்கம். இங்க வந்துட்டு நேரா ஆஃபீஸ்ல வந்துடுங்க. இதே மாதிரி ரூம்ல வெச்சு பணத்தை கலெக்ட் பண்ணிக்கறேன். எந்த ப்ராப்ளமும் இருக்காது.” என்று கூறினார்.

“ஓகே…” என்றவன், “செக் பண்ணிக்கங்க ஹெக்டே…” என்று கூறியபடி, அவன் வைத்திருந்த ட்ராவல் பேகை அவரிடம் தந்தான்.

பேகை திறந்து ஹெக்டே பார்க்க, அதில் இரண்டாயிரம் ரூபாய் பண கட்டுகள். மொத்தம் ஐம்பது கட்டுகள் இருந்தன. அனைத்தையும் சரி பார்த்து முடித்தவர், “எல்லாம் ஓகே அர்ஜுன்… நான் மெயின் புக்கி கிட்ட கணக்கு குடுத்துடறேன்.” என்றவர், ஒரு ஐபேடை அவனிடம் கொடுத்தார்.

“இதுல நீங்க புக் பண்ற ப்ளேயரோட பேரை ப்ளாக் பண்ணிடுங்க. அடுத்தடுத்தது யார நீங்க புக் பண்றதுன்னாலும், இந்த டிவைஸ்லருந்தே பண்ணுங்க.”

“ஓகே…” என்றவன், “தேங்க்ஸ் எ லாட் ஹெக்டே.” என்று அவருக்கு கைக் கொடுத்தான். ராகேஷ் புறமும் திரும்பி, கைக்கொடுத்தவன், “உங்களுக்கும் தேங்க்ஸ் ராகேஷ். திரும்ப நாம மீட் பண்ணுவோம்.” என்று புன்னகைத்தான்.

“சியூர் அர்ஜுன்.” என்று அவனும் புன்னகைத்தான்.

அவர்களை அனுப்பி வைத்துவிட்டு சோபாவில் சரிந்தவன், தனது ஸ்பை கேமராவையும்,டேபிள் மேல் ஒட்டபட்டிருந்த ஸ்பை கேமராவின் தொடர்பையும் துண்டித்துவிட்டு, லேப்டாப்பில் அவை இரண்டையும் கனெக்ட் செய்து, எல்லாம் சரியாக படமாகி இருக்கிறதா என்று சரி பார்த்தான்.

இரண்டும் அமோகமாக வந்திருந்தன.

“வாவ்… செம…” என்று கூறியவன், ப்ரீத்தியை திரும்பி பார்த்தான்.

அவள் எதுவும் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

மெல்ல எழுந்தவன், கவுச்சில் அவளோடு நெருக்கமாக அமர்ந்தான்.

“என்னடா? ஒரு மாதிரியா இருக்க?” என்று கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள். அந்த பார்வையில் ஏதோவொரு குற்ற உணர்வு.

“தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு ஷான்.” சிறு குரலில் மெதுவாக கூறியவளை, பார்த்தவன், வெடித்து சிரித்தான்.

அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றை பிடித்துக் கொண்டு அவன் சிரித்த சிரிப்பை பார்த்து,

“லொள்ளா?” என்று கேட்டபடி ப்ரீத்தி முறைத்தாள்.

“பின்ன? தப்பு பண்ணிட்ட மாதிரி இருக்கு ஷான்…” என்று அவளை போலவே கூறியவன், “இன்னும் ஒன்னும் பண்ணவே இல்லையேடி… இதுக்கே இப்படி ஃபீல் பண்ணா, இன்னும் மத்ததுக்கெல்லாம் என்ன பண்ணுவ?” என்று குறும்பாக கண்ணடித்தவன், “கிஸ் பண்ணா பாப்பா வந்துரும்ன்னு நினைச்சுகிட்டு இருக்க அப்பாவி நைன்டீஸ் கிட்ஸ்தான நீ?” என்று சிரித்தான்.

“ச்சீ போடா…” என்று அவனை தள்ளிவிட்டபடி, அவள் எழ முயல, அவளது கையை பிடித்து இழுத்தவன், தன் மேல் சரித்துக் கொண்டான்.

“இங்கயே இருடி பொண்டாட்டி.” என்றவன், மீண்டும் ஜாதி மல்லியின் வாசத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.

“என்ன பொண்டாட்டியா?” என்று அவள் நெளிந்தபடி கேள்வி கேட்க,

“பின்ன, வந்தவன் சொன்னானே கேக்கலையா?” அவனது வார்த்தைகளில் அத்தனை கள்ளம்.

“அவனுக்கு சொன்னதே நீ தானாம்…” என்றவள், அவன் மேலிருந்து எழுந்து கொள்ள முயல,

“யார் சொன்னா என்ன? இப்ப நீ என் பொண்டாட்டி தான?” என்றவன், அவளை எழ விடாமல், இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டான்.

“ஃபிராடு…” என்றவள், அவனிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றாள். விடுவானா அந்த திருடன்?

“ஆஹான்ன்…” என்று அவன் சிரிக்க, அவனிடமிருந்து நழுவ முயல்வதிலேயே குறியாக இருந்தாள்.

“நீ சரியான ஃபோர்ட்வென்டிடா…”

“ஆஹான்ன்…”

“உன்னால, வந்தவனுங்க முன்னாடி நான் பேக்கு மாதிரி இருந்தேன்…”

“ஆஹான்ன்ன்…” ராகமிட்டான்.

“என்னை பைத்தியம் மாதிரி உட்கார வெச்சிட்ட…” என்று அவள் சொன்னது அவனுக்கான பாராட்டா? அல்லது இவளது சீராட்டா? அவளை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டவன்,

“சரி, உங்க வீட்ல பாத்த மாப்பிள்ளைக்கு என்ன பதில் சொல்ல போற?” திடீரென தோன்றிய சந்தேகத்தை அவன் கேட்க,

“என்ன சொல்றது? ம்ம்ம்ம்… ஓகே சொல்லிட வேன்டியதுதான்…” என்று சிரிக்காமல் கூற,

“அப்படீன்னா கல்யாண சாப்பாடு போட போற…” உதட்டோரத்தில் புன்னகை வழிய கேட்டான்.

“போட்டுடலாமே…” மிகவும் தீவிரமான குரலில் கூற,

“அப்படியா… அதுக்கு முன்னாடி நான் கொஞ்சம் கண்டம் பண்ணிக்கறேன்…” என்று அவளது காதில் கிசுகிசுத்தவன், அவளை அப்படியே தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் கிடத்தினான். அவள் மருண்டு விழித்தாள்.

“ஒய்… என்ன பண்ற நீ?” அவனிடமிருந்து தப்பிக்க முயல,

“உனக்கு கல்யாணமாகிட்டா இதெல்லாம் பண்ண முடியாதுடி. உன் புருஷன் விட மாட்டான்…” கிண்டலாக கூறியவனைப் பார்த்து முறைத்தவள்,

“டேய் பரதேசி… உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா இப்படி சொல்வ?”

“உனக்கெவ்வளவு கொழுப்பிருந்தா இன்னொருத்தனை கட்டிக்கறேன்னு சொல்வ?”

“நான் ஜஸ்ட் சும்மா சொன்னேன்டா…”

“ஆனா நான் நிஜமாத்தான்டி சொல்றேன்…”

“வேண்டாம்… இது தப்பு…” திக்கித் திணறி அவள் கூற,

“தப்பை தப்பா பார்த்தாதான் அது தப்பு தலைவரே. தப்பை சரியா பாருங்க. அது சரியாத்தான் இருக்கும்…” வேண்டுமென்றே குறும்பாக சிரித்தான்.

“வேணா…”

“எனக்கு வேணும்…”

“இப்படியெல்லாம் பண்ணா இனிமே நான் உன்கூட வெளிய வரவே மாட்டேன்…” கோபமாக கூற நினைத்தாலும் அவளால் முடியவில்லை.

“சரி… வீட்லயே நாம இருந்துக்கலாம்…” தோளை குலுக்கினான் மாயன்!

“ம்ம்ம் எந்த வீட்ல?” அவனை கேட்க, அதற்கு அவனோ, வெகு இயல்பாக,

“நம்ம வீட்ல தான்…” என்றதும் பொங்கி எழுந்தாள்.

“அடேய்… கொன்னுடுவேன். உன்னோட லிவிங் டூகெதர் லீலா விநோதங்கள எல்லாம் நிறுத்திக்க. என்கிட்ட ட்ரை பண்ணா கொலை விழும் ராஸ்கல். முதல்ல அப்பா கிட்ட சொல்லி அந்த ஹாரிங்க்டன் கெஸ்ட் ஹவுஸ எதாவது பண்ணனும்…” பல்லைக் கடித்தாள்.

“ஹேய் இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. லிவிங் டூ கெதர்…” சிரித்தான்.

“என்ன?” முறைத்தபடி தன்னுடைய பெரிய கண்களை விரித்தாள்.

“பின்ன, நான் கல்யாணம் பண்ணிட்டு நம்ம வீட்ல, அதாவது அப்பாவோட இருக்கலாம்ன்னு சொல்ல வந்தேன். நீயா தான் லிவிங் டூ கெதர் ஐடியாவ குடுத்தப்பா. நான் இல்ல. நான்லாம் நல்ல பையன். நீ என்னை கெட்ட பையனாக்க பாக்கற…” ஒன்றுமறியாதவனைப் போல கூறியவனின் தலைமுடியைப் பற்றி ஆட்டினாள் ப்ரீத்தி.

“அடேய்… நீ அப்பாவியாடா…?” வாயை மூடிக் கொண்டாள் ப்ரீத்தி.

“ஆமா ஆமா… நீ தான் என்னை அடப்பாவியாக்கற…”

“இன்னும் வேற என்ன கம்ப்ளைன்ட் சொல்வ?” அவனது முடியை பிடித்து மாவாட்டியபடியே அவள் கேட்க,

“நீ தான்டி சாரி கட்டிட்டு வந்து என்னை மயக்கிட்ட…”

“அது எல்லாரும் கட்றதுதானடா?”

“எல்லாரும் கட்றதும் நீ கட்றதும் ஒண்ணா?

“பின்ன?”

“சாரில உன்னை பார்க்கும் போதே எனக்கு ஜிவ்வுன்னு இருக்கு. அப்படியே உன்னை என்னென்னமோ பண்ணனும்ன்னு தோணுது.”

“தோணுமே…” என்றவள், அவனது முடியை பிடித்து இன்னும் கொஞ்சம் மாவாட்ட,

“அதுவும் அந்த பூவோட வாசமும் உன்னோட வாசமும் சேர்ந்து என்னை என்னென்னமோ பண்ணுதே… என்னதான்டி பண்ண சொல்ற? சாமியாராட்டம் இருக்க முடியலையே…” என்று அவன் கூறிய தொனியில் சிரித்தவள், வெட்கத்துடன் அவனது தலைமுடியை விட்டுவிட்டு அருகில் படுத்துக் கொண்டாள்.

அவளருகில் நன்றாக சாய்ந்து படுத்தவன், “ப்ரீத்தி…” என்றழைத்தான்.

“ம்ம்ம்…”

“நாம கார் வாங்க என்ன பண்ணுவோம்?”

“என்ன கார் பிடிச்சிருக்கோ, அதை வாங்குவோம்…” அப்பாவியாக அவள் பதில் கூறினாள்.

“பிடிச்சிருக்குன்னு உனக்கு எப்படி தெரியும்?”

“லுக், டியுரபிளிட்டி அன்ட் இன்னும் நிறைய விஷயம் பார்ப்போம்…”

“ம்ம்ம்… ஓகே… எல்லாம் பிடிச்சு, நம்ம டிரைவிங்க்கு கன்வீனியன்ட்டா இருக்கான்னு பாக்க மாட்டமா?” அவளை காட்டிலும் அப்பாவிக் குரலில் கேட்க, அவன் எங்கு வருகிறான் என்பது புரிந்தது.

“அடேய்… நீ எதுக்கு இப்படி சுத்தி வளைச்சு கொண்டு போறன்னு எனக்கு தெரியும்…”

“அதான்… அதே தான். டெஸ்ட் டிரைவ் பண்ணாதான வண்டி ஓகேவா… நமக்கு டிரைவ் பண்ண வசதியா இருக்கா, எவ்வளவு ஸ்மூத்தா இருக்குன்னு தெரியும்…”

“அதுக்கு?”

“டெஸ்ட் டிரைவ் பண்ணிப் பார்க்கலாம்டி…” என்றவனை காளி அவதாரம் எடுத்ததை போல எழுந்து அமர்ந்து கொண்டு முறைத்துப் பார்த்தாள் ப்ரீத்தி.

“அடிங்… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்…” என்றவள், விட்ட தலை முடியை மீண்டும் பிடித்தாட்ட,

“டெஸ்ட் டிரைவ் பண்றது நல்லது தலைவரே…” என்றவன் வாய்விட்டு சிரிக்க,

“சை… ஒரு வெக்கங்கெட்டவனை லவ் பண்ணித் தொலைச்சிட்டேன்…” தலையிலடித்துக் கொண்டவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

“அது உன்னோட ப்ராப்ளம் டார்லிங். இப்ப எனக்கு டெஸ்ட் டிரைவ் பண்ணியாகணும். டாட்…” என்று சிரித்தவனை பார்த்து முறைத்தாள்.

“டேய் டிரைவ் பண்றதுக்கு ஸ்டியரிங்கே இல்லாம பண்ணிடுவேன் பார்த்துக்க…” ஆள்காட்டி விரலை நீட்டி அவள் எச்சரிக்க,

“அடிப்பாவி. அதுக்கு பேசாம கருணைக் கொலை பண்ணிடு. ஸ்டியரிங் இல்லாம வாழ்ந்தென்ன லாபம்?”

“அது உன்னோட ப்ராப்ளம் டார்லிங்…” என்று அவனைப் போலவே கூற,

“அதெப்படி தலைவரே அது என்னோட ப்ராப்ளமாகும்? ஸ்டியரிங் இல்லாத வண்டிய வெச்சுட்டு நீங்க என்ன பண்ணுவீங்க?” என்று அவன் கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் ப்ரீத்தி. அவளது திணறலை பார்த்தவன், “பதில் சொல்லுங்க தலைவரே…” என்று வெடிசிரிப்பு சிரித்தான்.

“சோ சிம்பிள் தலைவரே… இந்த வண்டியே வேண்டாம்ன்னு மலைலருந்து உருட்டி விட்டுடுவேன். எப்படி வசதி?” என்று சிரித்தபடி கூறினாள்.

“விட்டா செய்வடி. அதுக்கு முன்னாடி உன்னை கண்டம் பண்ணிடறேன் இரு…” என்றவன், வேண்டுமென்றே அவளை சீண்ட,

“எப்பா சாமி… நான் எஸ்கேப்…” என்று எழுந்து தப்பிக்க முயன்றவளை இழுக்க, அவள் பூவாக அவன் மேலேயே விழுந்தாள்.

“ஷப்பா…” என்று வேண்டுமென்றே முகத்தை சுளித்தவன், “பாக்கத்தான்டி ஸ்லிம்மா இருக்க. செம வெயிட்டு…” என்று கூற,

“அப்படீன்னா, வெய்ட் கம்மியா ஒரு பிகர பாத்து கரெக்ட் பண்ணிக்கங்க தலைவரே…” என்றவள், எழ பார்க்க,

“இதுக்கு மேல இன்னொருத்திய நான் கரெக்ட் பண்ணி, கண்டம் பண்றது கஷ்டம் தலைவரே…” என்றவனின் குறும்பில், அவள் பித்தாகி தான் போனாள்.

“எதே… அடப்பாவி…” என்றவளது உதடுகள் அவன் வசம் சென்றது. வன்மையாக பியைத்து உண்டுவிட்டு, போனால் போகிறதென அவளது அதரங்களை திருப்பி தந்தவனை பார்த்து முறைத்தவள், “சரியான ராட்சசன்…” வலித்த உதடுகளை கையால் தடவிக் கொடுக்க,

“நான் வேண்ணா ஒத்தடம் கொடுக்கட்டா?” அப்பாவி போல கேட்டவனுக்கு, “வேணாம் சாமி. நீங்க குடுத்த வரைக்கும் போதும்…” என்று கையெடுத்து கும்பிட, ஷான் சிரித்தான்.

கள்ளன்… சிரித்தே மயக்கும் கள்ளன்!

தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்

தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!