kaliyugakalki-9

கலியுக கல்கி – 9

 

ஆண்கள் மூவரும் பம்பரமாகச் சுழன்று திருமண வேலைகளைச் செய்து கொண்டு இருந்தனர்.ராகவ்,ரெங்கன்,விதுரன் ராஜலுவின் மேற்பார்வையில்.எளிமையான திருமணம்  பெருமாள் கோவில் சென்று மாலை மாற்றித் தாலி கட்டி, பின் ராஜலுவின் பண்ணை வீட்டில் பெரிய விருந்து.

 

ராஜலுவிற்குச் சொல்ல தெரியவில்லை ஆனால் மனம் ஒரு நிலையில் இல்லை,வேணியிடம் பேச வேண்டும் அவளுடன் தனிமை வேண்டுமென்று மனம் அடித்துக் கொண்டது.கமலாவிடம் சொல்ல முடியாது வெளியில் என்ன தான் அவர் சாதாரணமாக இருந்தாலும்,உள்ளுக்குள் மறுகிறார் என்பதை அறிந்து தான், வேணி விதுரன் பிறந்த பிறகு ராஜலுவிடம் எந்த உறவையும் வைத்து கொள்ளவில்லை.ராஜலு ஆசையாக நாடும் பொழுது ஒரு நாள் அவர் போட்டு உடைத்து விட்டார்.

 

அதில் அதிர்ந்த ராஜலுவும் விலகியே இருந்தார்.விலகி இருந்தாலும் காதல் காதல் தான் அல்லவா. சும்மா இருந்தவரை இழுத்து வைத்துத் திருமணம் செய்து,அவளிடம் செல்ல கூடாது என்றால்.மனுசன் என்னதான் செய்வது.கமலத்தின் வழி இப்போது சீதாவும் என்ற ஐயம் வேறு புதிதாக.

ஒருபுறம் வேணிக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற எண்ணம், எதனால் என்று புரியாத கலக்கம்.இதில் சீதா ரெங்கனை விட்டு அகலாது மிருதுவிடம் நெருங்க விடாமல் தடை செய்வது, அவரை எரிச்சல் அடைய வைத்தது.ஆக மொத்தம் நிம்மதியே இல்லை.

 

அவர் கலக்கம் புரியாமல் புதுப் பெண் போல வேணி அவரிடம் ஆட்டம்  காட்டிகொண்டு இருக்கிறார். “ஏன்ம்மா இங்க வா”. “உன் பெயர் என்ன”.

 

“நா உலர பொ பொன்னிங்க”. “ஹான் பொன்னி வேணி எங்க”.

 

“அவுங்க ரூம்ல இருங்காங்க கூட்டிட்டு வருவாங்க ஐயா”. “வேணாம்மா நான் பார்த்துக்குறேன்,எனக்கு ஒரு உதவி பண்ணு ஒரு அரை மணி நேரம் என்னையும் அவளையும் யாரும் கேட்டா எதாவது சொல்லி சமாளி”.

 

“சரிங்க ஐயா”.அவள் பதிலை பெற்று கொண்டவர் கோபமாக வேணியின் அறையை நோக்கி சென்றார்.அங்கு மிருதுவிடம் எப்புடி நடந்து கொள்வது என்பதைப் பத்தி விளக்கி கொண்டு இருந்தார் வேணி.

 

“இங்க பாருடா சீதா உனக்கு மறுவாழ்வு கொடுத்து இருக்கா அவ மனசு கோணமா நடந்துக்கோ,குழந்தை மட்டும் தான் நம்ப எண்ணமா இருக்கணும் என்ன புரியுதா”.அவருக்கு இது போல்  சொல்ல சங்கடமாகத் தான் இருந்தது இருந்தாலும் சொல்லியாக வேண்டும் சின்னப் பெண் தன்னைப் போலப் பாசம் வைத்து விட்டாள்.எதிர்பார்ப்பு என்றுமே ஏமாற்றம் தானே.

 

ராஜலுவை தள்ளி வைத்து ஏங்கியது அவருக்குத் தானே தெரியும். “நான் சொல்லுறது உனக்குக் கஷ்டமா இருக்கா,இதுக்கு எதுக்கு எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க எனக்குனு  கேட்க தோணுதா”.

 

“ஐயோ! அம்மா அப்புடி எல்லாம் இல்லை.நான் எந்த மாதிரி சூழ்நிலையில இங்க வந்தேனு மறக்கவே மாட்டேன். எங்க அக்கா வீட்டுக்காரு, அவுங்க குடும்பம் பண்ண கொடுமை தங்கமா தான் விதுரன் அண்ணனுக்குப் போன் போட்டேன்.நானும் உங்க தூரத்து உறவு தான் அண்ணனை பத்தி தெரியும் அதான்.இந்த நன்றிக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன்”.

 

அவரது கையை இறுக்கப் பற்றியவள் “அம்மா அவுங்ககிட்ட குழந்தைய கொடுத்துட்டு நான் உங்ககிட்ட இந்த வீட்டுக்கே வந்துறேன் ப்ளீஸ்,எனக்கு திரும்பவும் தனியா இந்தச் சமுதாயத்துல வாழ முடியாது.கல்யாணம் பண்ணா ஒருத்தனுக்கு மனைவியா  இருக்கலாம்,இல்லாட்டி ஊருக்கே………………..”. என்று கதறி அழுத பெண்ணை இறுக்கக் கட்டி கொண்டார் வேணி.

ஒரு பெண் இந்தச் சமுதாயத்தில் தனித்து வாழ்ந்து விட முடியுமா? கதைகளும் கற்பனைகளும் தான் அது சாத்தியம்.அப்புடியும் ஒரு பெண் வாழ்கிறாள் என்றால் அவளுக்கு ஆள் பலம் அல்லது பணம் பலம் இறுக்க வேண்டும்.அது மறை முகமாகவோ,அல்லது வெளிப்படையாகவோ.பெற்றவர்களும் இல்லாத,கல்யாணம் வாழ்க்கையும் நிரந்தரமில்லாத மிருதளவிற்கு இந்தச் சமுதாயத்தில் எந்த விதமான பாதுகாப்பும் கிடைக்காது.

 

இதையெல்லாம் அறியாதவரா வேணி அவரும் அதைத் தாண்டி தான் பயணித்திருக்கிறார். “இங்க பாருடா நீ எனக்குப் பொண்ணு தான்.நீ வந்துரு உன்ன நான் பாத்துக்குறேன்”.

a

பின் இருந்து இதை பார்த்த ராஜலு  எரிச்சலுடன் “ஆமா அவ பார்த்துக்குவா என்ன மாதிரி என் பையனும் பைத்தியம் புடுச்சு தெரியட்டும்”.அவர் கத்தலில் நடுங்கி போய் எழுந்தனர் இரு பெண்களும்.மிருது அழுக தயாராக அவளைக் கண்களைப் போ என்று ஜாடை செய்தார் வேணி.தப்பி ஓடியது அந்த மான்.

 

“என்னடி சொல்லி கொடுக்குற அந்தப் பொண்ணுக்கு” அவர் பேச்சை மாற்றும் பொருட்டு, “பாவா கல்யாணத்துக்கு என்ன சேலை உடுத்த வந்து எடுத்து கொடுங்க”.அவள் பேச்சில் மேலும் கோபமுற்றவர் வேணியின் கையைப் பிடித்து முறுக்கி கத்த தொடங்கிவிட்டார்.

“என்னதாண்டி நெனச்சுட்டு இருக்கீங்க,நீங்களா முடிவு எடுப்பிங்களா யாரு கொடுத்தா இந்தத் தைரியத்தை”.

 

“பாவா கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத கேளுங்க பாவா ப்ளீஸ்.பாவம் பாவா சீதா ரொம்பப் பொசசிவ்”.

 

“உங்க அக்கா மாதிரியா.அதுக்கு எதுக்கு அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் சொல்லு.உன் விஷியத்துல படுச்சு படுச்சு சொன்னேன் உனக்கு நம்ப இனத்துல நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்டிவைக்குரேனு கேட்டளா என்ன பாட படுத்திச் சம்மதிக்க வச்சா.இப்போ என்ன ஆச்சு.நீ வேற கல்யாணம் பண்ணா கூட நல்ல வாழ்ந்து இருப்ப போல”.

 

பாவா!……….. “எதுக்குக் கத்துற அதான் உண்மை.இப்போ அடுத்தப் பலி இந்தப் பொண்ணு”.முகம் கசங்க கட்டிலில் ஓய்ந்து அமர்ந்தவரை பார்க்க பார்க்க அழுகையாக வந்தது வேணிக்கு.அவரிடம் நெருங்கி அமர்ந்து முதல் முறையாக அவர் முகம் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டார் வேணி.பல வருடங்களுக்குப் பிறகு கிடைக்கும் இதழ் தீண்டல்.

 

சாரி பாவா!…. கண் மூடி கட்டிலில் சாய்ந்தவர் சற்று நேரத்தில் தூங்கி போனார்.உடலும் உள்ளமும் கலைத்து இருந்ததால்.ஒரு இதழ் தீண்டல் அவருக்கு அமைதியை கொடுத்தது.வேணி தான் முழித்துக் கொண்டு நின்றார். ‘ஐயோ பாவா முத்தம் கொடுத்ததும் இப்புடி படுத்துட்டாரே’.பதறி அவரை எழுப்ப.பங்காரம் கொஞ்ச நேரம் தூங்க விடு என்று அவரையும் இழுத்து போட்டுக் கொண்டு கண் மூடி தூங்கினார்.

———————————————————————————————-

அங்கு முத்து மிருதுவிடம் “மிருது பத்திரமா இருந்துக்கோ புள்ள,பயப்புடாத இந்த விட்டு அம்மா கொஞ்சம் நல்லவங்க தான், இது வரைக்கும் ஒரு வார்த்தை பேசுனது இல்லை சமையலை தவிர ,ரொம்ப நல்லவங்க.எதுனாலும் எங்களுக்குப் போன் போடு யார்கிட்டையும் நம்பர் கொடுத்துறத”.

 

“அக்கா நீங்க போய்த்தான் ஆகணுமா”. “அடியேய் ஒரு நாள் முழுக்க உங்கிட்ட இங்க நிலைமையைப் பாட்ட புடுச்சு இருக்கேன் திரும்பக் கேக்குற”. “ராகவ் அண்ணனே நால்வர் தான் அக்கா”.

 

“அடிங்க….கொய்யா அந்த ஆளு நல்லவனா இருந்தா நான் கட்டிக்கணுமா.உங்க சங்காத்தமே வேணாம் உடு.பொன்னியே இப்போதான் தெளிஞ்சு இருக்கு”.

 

“எனக்கு உன்ன மாதிரி தாராள குணம் கிடையாது மிருது.கட்டுனா கட்டையில போற வரைக்கும் அவர் ஒருத்தர் தான்.இன்னொரு பொண்ணுக்கு தாரை வார்க்க முடியாது”.

 

தலையைக் குனிந்து கொண்டாள் மிருது கண்ணில் கண்ணீர்.திருமணம் என்ற கனவுகள் அவளுக்கும் உண்டு தான், அதில் பொன்னி சொன்ன உறுதியும் அடக்கம். ஆனால் இப்போது சூழ்நிலை அவள் கனவு காணும் படியா  உள்ளது.

 

“யேய் கோச்சுக்காத மிருது என் நிலைமையைச் சொன்னேன் உன்ன கஷ்ட படுத்தி இருந்தா மனிச்சுக்கோ”..

 

“ஐயோ! அக்கா அப்புடியெல்லாம் இல்ல.நீங்க சொன்னது உண்மைதான் ஆனா எனக்குப் பேச தகுதி இல்லக்கா”. “லூசு மாதிரி பேசாத மிருது விடு இதைப் பத்தி பேசுனா மனசு கஷ்டம்.சரி வா சேர்ந்து சாப்பிடுவோம் அப்புறம் என்ன கேட்டாலும் எங்களைக் காட்டி கொடுத்துறத மிருது” மீண்டும் முத்து அவளுக்கு கோரிக்கை வைக்க.

 

“என் உயிரே போனாலும் சொல்ல மாட்டேன்க்கா கவலைப்படாதீங்க”.மிருதுவின் கையைப் பற்றிக் கொண்டு இரு பெண்களும் சிரித்து கொண்டனர். மிருதுவிற்கு நிறைவு அழகான உள்ளங்களின் நிழலில் நான் என்ற நிம்மதி .

 

 

நாளை திருமணம் என்ற நிலையில் நள்ளிரவு அனைவரும் பரபரப்பாக இருக்க.ராகவ் பதட்டமாக ஓடி வந்தான் “என்ன ராகவ்”.

 

அண்ணா என்று நடுங்கிய படியே ராகவ் விஷியத்தைச் சொல்ல.பல்ல கடித்த விதுரன் அவனிடம் பணத்தைக் கொடுத்து அவர்கள் ஊருக்கு அனுப்பி வைத்தான். “ராகவ் வீட்டுல யாருக்கும் தெரியவேணாம் கல்யாணம் முடுச்சதும் நான் அங்க வருவேன் அது வரைக்கும் என் தங்கச்சிய பத்திரமா பார்த்துக்கோ”.

 

“சரிங்கண்ணா”.பின்பு தயங்கியவன்  “அண்ணா எங்க அண்ணனுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.மன்னி தான் கோபத்துல பண்ணிட்டா”.

 

“எனக்கு தெரியும் ராகவ் அவள பத்தி நீ போ.அப்புறம் உங்க அம்மா எதுவும் அவள சொல்லிட போறாங்க நான் வர வரைக்கும் எந்தப் பேச்சும் வேணாம்”.சிறுது கண்டிப்புடனே விதுரன் சொன்னான்.

 

‘உங்க தங்கச்சி எங்க அம்மாவா பேசாம இருந்தா சரி’ என்று எண்ணியவன் வெளியில் “சரிங்க அண்ணே நான் வரேன்”. “ஏய் ராகவ் கார்ல போ”.

 

“சரி அண்ணே” என்று சென்றுவிட்டான்.அவன் சென்ற அடுத்த நொடி டிரைவர் ஓடி வந்து ஐயா! … அந்தப் பொண்ணுங்க இரண்டும் கோவை பஸ்ல ஏறி போயிடுச்சுங்கய்யா புருவம் சுருங்கி யாரு? என்ற கேட்டவனிடம்.

 

அதாங்க சமையல் வேலை பாக்குமுள்ள இரண்டு பொண்ணுங்க என்றதும் அதிர்ந்தவன்.வேகமாக ஓடி சென்று அவர்கள் இருந்த அறையைத் தட்ட அங்கு மிருது மட்டுமே வந்து கதவை திறந்தாள்.

 

“எங்க அவ” கோபமாகக் கர்ஜித்தான் விதுரன்.இரண்டு அடி பின் சென்றவள் பயந்து நடுங்கி “தெரியல அண்ணா”.கோபமாக இன்னும் என்ன அண்ணா “நீயும் ஓடி போற ப்ளன்ல இருக்கியா”.அவன் கேட்டதில் பதறியவள்.வேகமாக “நீங்களா போகச் சொன்னாலும் போக மாட்டேன் என்றாள்”.

அவள் பேச்சில் அமைதி கொண்டவன் ரெங்கனுக்கு அழைக்க அவனோ சீதாவிடம் போராடி கொண்டு இருந்தான்.

 

“இங்க பாரு சீதா உனக்குப் புடிக்கலனாஎதுக்கு இந்தக் கல்யாணம் நான் உன்கூடச் சந்தோசம்தான் இருக்கேன்.கல்யாணத்த நிறுத்திடலாம்”.தனது மடியில் உட்காந்து கொண்டு தோளில் முகம் புதைத்து ஒரு மணி நேரம் அழுது கொண்டு இருப்பவளை அவனால் சமாளிக்க முடியவில்லை.

 

அவன் அங்குப் போராட வேணியையும் கமலத்தையும் நடுவில் வைத்துக் கொண்டு காச்சி எடுத்து விட்டார் ராஜலு. “இங்க பாருங்க நான் சந்நியாசம் வாங்க போறேன்,அதே மாதிரி இன்னும் கொஞ்ச நாளுல என் பெரிய மவனும் வாங்கிடுவான்.என் சின்ன மகனாவது சந்தோசமா இருக்கட்டும்.அவனுக்கு ஒருத்தியே போதும்”.

 

“என்ன பேச்சு இது பாவா”.கமலம் கண்டிக்க

 

“நீ பேசுன உன்ன கொன்னுடுவேன்.உன்ன மாதிரியே உன் மருமகளும் ரெங்கனை படுத்திக் கிட்டு இருக்கா. ‘என்ன இதுக்குடி’ மிருதுவா கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணீங்க.கஷ்ட படுற பொண்ணுங்கனா இளக்காரமா போச்சா உங்களுக்கு”.

“ஏன் நாங்க மட்டும் தான் நல்லவங்களா வேற மாப்பிள்ளையே கிடைக்காத.அன்னைக்கு நான் இன்னைக்கு என் மவன்.புருஷனை விட்டு கொடுக்க முடியலைன்னா எதுக்குடி இந்தக் கல்யாணம் அந்தப் பொண்ணு உன் தங்கச்சி மாதிரியே வச்சுக்கவா”.இரக்கமே இல்லாமல் கடித்துக் குதறி விட்டார்.

 

ஓடி வந்து அவர் காலை பற்றிய கமலம் “தப்பு தாங்க வெளில நான் சொல்லாட்டியும் உங்கள விட்டு கொடுக்க முடியலை.என்ன விட உங்களுக்கு வேணியைக் கொஞ்சம் அதிகம் புடிக்கும் அதான்.தப்புனு புரிஞ்ச போது அவ விலகிட்டா” என்று அழுத்தவரை.

 

ஐயோ! அக்கா என்ன இது.பாவா நீங்க பேசுறது கொஞ்சம் கூடச் சரி இல்லை,இப்போ அக்காவை திட்டுறீங்க.தனக்காகப் பேசும் தங்கையைக் கட்டி பிடித்து அழுது தீர்த்தார்.

 

ஆண்கள் தான் வலிமையானவர்கள் என்று சொல்லும் சமுதாயமே கொஞ்சம் கவனிக்கவும் ‘சில’ மீண்டும் கவனிக்கவும் ‘சில’ பெண்கள் நினைத்தாள் ஆண்களையும் வீழ்த்தி சாய்க்கலாம் என்பதற்கு உதாரணம் இந்த ஏழு பெண்களும்.

 

அதாவது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று தற்கொலை முயற்சி செய்து கலங்க அடித்த அலமேலு.

 

சரிதான் போங்கடா யாருகிட்ட தமிழச்சிடா நாங்க என்று சூப் கொடுத்து சென்ற பொன்னியும் முத்துவும்.

 

என் புருஷன் தான் ஆனா பாவப்பட்ட பெண்ணுக்கு வாழ்கை கொடுக்கணும் ஆனா எனக்கு மட்டுமே புருஷன் என்று கதற விடுற கமலம் மற்றும் சீதாவும்.

 

நன்றி கடனை காலம் முழுவதும் அடிமையாகச் செய்வோம் என்று உறுதி கொண்டு  படுத்தி எடுக்கும் வேணியும்,மிருதுவும்.

 

ஆக மொத்தம் அசுரர்களை வதம் செய்யும் வலிமையான ஆண்களைக் கூட இந்த ஏழு பெண்கள் கத்தி இல்லாமல்,ரெத்தம் இல்லாமல் கதம் கதம்…………..

 

இனி இவர்கள் நிலை?