Alai osai 4

அலை ஓசை – 4

சந்திரா, தனக்கு வந்த பரிசை பார்த்து ஆச்சரியப்பட்டு போனாள். காரணம், நேற்று ருத்ரா விற்கு வந்த அதே கிப்ட் பாக்ஸ் இன்று சந்திராவுக்கு வந்தது. ஆனால், ஒரே ஒரு வித்தியாசம். நேற்று ருத்ரா விற்கு வந்த கிப்ட் பாக்ஸ்யுடன் எந்த ஒரு கடிதமும் இல்லை. இன்று சந்திராவுக்கு ஒரு கடிதமும் இருந்தது. அந்த கடிதத்தை பிரித்த சந்திரா, படிக்க ஆரம்பிக்கும் முன் அதை தன் கைபேசியில் படம் பிடித்து கொண்டாள். அக்கடிதத்தில்,

ஹலோ சந்திரா மேடம்.ருத்ரா விற்கு ஒரு கிப்ட் பிரசண்ட் பண்ணினேன்.பட், பேட் லக். அவன் எதையும் கண்டு பிடிக்கவில்லை. நீயாச்சும் ஏதாவது கண்டு பிடிப்ப என்று நினைக்கிறேன். ஆல் தே பெஸ்ட் “

என்று எழுதி இருந்தது.

ஆனால், அவள் படித்த சில நொடிகளில் அவ்வரிகள் மறைந்து விட்டது. ருத்ரா கூறிய மேஜிக் இன்க் பற்றிய நியாபகம் வர, அவள் உதடுகள் அவளையும் அறியாமல் ‘சபாஷ்’ என்று அந்த நிழல் உருவத்தை பாராட்டியது.

“ஜித்தனுக்கு ஜித்தன் இந்த உலகத்தில் பிறந்து தான் இருப்பான். இதை நீ கண்டிப்பாக புரிஞ்சிப்ப பிளாக் சீப்” கசந்த புன்னகை உதட்டில் பரவ விட்ட சந்திரா, தன் போரென்சிக் நண்பனை அழைத்து,
” சேகர் சந்திரா டா” “சொல்லு சது, என்ன ஆச்சரியம் உன் பிஸி டைம் ல மேடம் எனக்கு லாம் கால் பண்ணி இருக்க, சொல்லு எந்த கேஸுக்காக என் ஹெல்ப் உனக்கு தேவை படுது” தோழியை நன்கு அறிந்த நண்பனாய் சேகர் கேட்க, “எல்லாம் மகேஷ் காணாமல் போன கேஸ் தான், டிவி ல நியூஸ் பார்த்து இருப்ப. நான் உனக்கு ஒரு போட்டோ அனுப்பி இருக்கேன், அதை வைத்து எழுதினவங்களோட பெர்சோனாலிட்டி பத்தி சொல்ல முடியுமா? ” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வர, “இனிக்கு ஈவினிங் சொல்லிடுறேன் சது” வாக்கியங்கள் முற்று பெற்றாலும், கடமைகள் முற்று பெறாமல் இருக்க, இருவரும் அதை மேற்கொள்ள, சந்திரா ருத்ராவை காண ஹாஸ்பிடலுக்கும் சேகர் அவன் லாப் பிற்கும் செல்ல ஆயத்த மாகினர்.

சந்திரா கிளம்பும் சமயம், பிராத்தல் சம்பந்தமான ஒரு கேஸ் வந்தது. அதை தன் அஸிஸ்டண்ட் ஆதியிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு, தன் ஜீபில் பயணமானாள்.

தன் அஸிஸ்டண்டினிடம் சொல்லாமல், தானே அந்த கேஸை பார்த்திருந்தால், நடக்க போகும் இரண்டாவது கடத்தலை தடுத்திருக்கலாமோ என்னமோ? அதை அறியாமல் சந்திரா ஹாஸ்பிடலுக்கு விரைந்து சென்று கொண்டிருந்தாள்.

# # # # # #

எல்லையில் வேலை
செய்யும் வீரனுக்குமுண்டு,
கொல்லையில் வேலை
செய்யும் உழவனுக்குமுண்டு…

வெயிலில் உடல் களைத்து
போகும் கொத்தனாருக்குமுண்டு,
ஏசி குளிரில் வைட் காலராய்
வேலை செய்யும் ஐ. டி
பொறியாளர்களுக்கும் உண்டு…

கடமை!

# # # # # # #

ஹாஸ்பிடலுக்கு சென்ற சந்திரா, நேராக ருத்ரா இருக்கும் இடத்திற்கு சென்றாள். ஏனோ, போனில் பேசிய போது இருந்த உற்சாகம் இப்போது அவனிடம் இல்லை.

சந்திரா வந்ததை உணர்ந்த ருத்ரா, “பேட் லக் சது. நோ க்லூஸ் “என்று வருத்தப்பட, ” நீ நடந்ததை சொல்லு ருத்ரா, நீ மகேஷ் எப்படி கடத்தப்பட்டு இருக்கான் என்பதை கண்டு பிடித்து விட்டாய் என்று கூறினாய் அல்லவா? ” என்று அவனை ஊக்குவித்தாள்.

அன்று காலை ஹாஸ்பிடலுக்கு வந்த ருத்ரா, நேராக சென்றது மார்ச்சுரிக்கு தான். அங்கு இருக்கும் சிசிடிவி கேமரா, ஹாஸ்பிடல் சிசிடிவி ஸ்டோரேஜ் டிஸ்க் யுடன் டேரக்ட் லிக்ங் இல்லை என்று முதலில் கண்டறிந்தான் . பின், அதற்கான ஸ்டோரேஜ் பூடேஜஸ் ஐ காண வேண்டும் என்று ஹாஸ்பிடல் டெக்னீஸியன்ஸிடம் கூறினான்.

சில நிமிடங்களில், அதை பார்த்தவன், அந்த நிழல் உருவம் திட்டமிட்டு தான் மகேஷை கடத்தி சென்று இருப்பதை கண்டறிந்தான்.

“சது, அதுல மகேஷ் போதையில் நடப்பது போல மார்ச்சுரி நோக்கி வந்து கொண்டு இருந்தான். சில நொடிகளில், அவன் தரையில் விழுந்தான். அதற்காகவே காத்து இருப்பது போல், அவனை ஒரு ஆம்புலன்ஸில் ஏற்றி அந்த நிழல் உருவம் சென்று விட்டது. மேலும், அந்த நிழல் உருவம் தன்னை ரயின் கோர்ட் மூலம் முழுதாக மறைத்து கொண்டது. பலமான மழையால் பூடேஜஸும் சரியாக பதிவாக வில்லை.

மகேஷோட மயக்கமான நிலை எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. மகேஷோட அடென்டர் நர்ஸ் ரெண்டு பேரையும் விசாரித்த பிறகு தெரிந்தது,

அவன் இருந்த புளோரில் இருக்குற எல்லா நோயாளிகளுமே மயக்கத்தில் இருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சுது ரூம்ஸ்க்கு யூஸ் பண்ற ஸ்பிரேயில் மயக்க மருந்து கலந்து இருக்கு என்று. மகேஷ் ரூம்க்கு ஸ்பிரே பண்ண சில நிமிடங்களில் அவன் அடென்டர்க்கு மகேஷ் கிட்ட பேசணும் என்று ஒரு போன் கால் வந்து இருக்கு.

பேசின மகேஷ் ரொம்ப நேவர்ஸ் ஆகி கத்த ஆரம்பித்து இருக்கான். அவன் அடென்டர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், மகேஷ் ரூம விட்டு வந்திருக்கான். கால் வந்த நம்பரை டிரேஸ் பண்ணினா இப்போது மகேஷ் வீட்டை காட்டுது”

என்று கூறி முடித்த ருத்ரா, “உனக்கு ஏதாவது தோன்றுகிறதா சது? ”

” நீ சொன்ன அந்த நம்பர் ஏன் மகேஷ் வீட்டை காட்ட வேண்டும்? ” என்று சந்திரா தன் சந்தேகத்தை கூற, “எனக்கும் இது தோணியது. ஸோ, நான் மகேஷோட வீட்டை ரைட் பண்ண ஐ.டி டிபார்ட்மென்ட் கிட்ட கேட்கலாம்ன்னு நினைக்கிறேன. நீ என்ன நினைக்கிற சது?” “குட் ஐடியா! அதோடு எனக்கு இன்றைக்கு ஒரு கிபிட் பாக்ஸ் வந்தது ” என்று சந்திரா கூற, சந்திராவின் அர்த்த பார்வையின் செய்தியை உணர்ந்த ருத்ரா, “என்ன என்று பார்த்தியா சது?” “வா, பார்ப்போம் ” என்று ஒரு அறைக்கு சென்றனர்.

அந்த கிப்ட்யில் இருந்த சிடியை play செய்து பார்த்த இருவரும் அதிர்ந்தனர். 1.36 நிமிடங்கள் ஓடிய அந்த வீடியோவில், மகேஷ் ஒரு நாற்காலியில் மயங்கிய நிலையில் இருந்தான். அவனை சுற்றி இரண்டு அடி இடைவெளியில் ரெகார்ட் செய்ய பட்டு இருக்க வேண்டும். மேலும், அவன் இருக்கும் இடத்தை அறியாமல் இருக்க அவனை சுற்றி வெள்ளை நிற திறை இருந்தது. வீடியோ முடியும் போது,

“நானே எவ்வளவு தடயம் கொடுக்க முடியும் செல்லம்ஸ், நீங்களும் ஏதாவது பண்ணுங்க” என்று ஏளனமாக ஒரு மிமிக்ரி வாய்ஸ் கூறியது.

“டாம் இட்” என்று கத்திய ருத்ரா, குழப்பமான நிலையில் இருந்த சந்தியாவை பார்த்து “என்ன யோசனை சது? ” என்று வினவினான்.

“நான் அந்த நிழல் உருவம் பண்ணிய எல்லாவற்றையும் யோசிக்கிறேன். வாட்ஸ் கால் பண்ணி மகேஷ் கடத்த பட போவதாக கூறியது, அப்புறம் பேப்பர் இப்போது இந்த வீடியோ , எல்லாமே தன்னோட அடையாளத்தை மறைத்து வைத்து. இது எல்லாம் ஏதோ அப்போவே திட்டமிட்டு பண்ண மாதிரி இல்லை. ரொம்ப நாளா பிளான் போட்டு, இந்த ஹாஸ்பிடல் நம்ம அலுவலகம் எல்லாத்தையும் நல்லா கவனிச்சு பண்ணி இருக்கணும்.. எந்த ஒரு சிசிடிவிலியுமே அந்த நிழல் உருவத்தோட உருவம் தெளிவாக பதிவாக வில்லை.”

என்று அவள் தன் யோசனையில் மூழ்கி இருக்க, இருவரின் மனதிலும் அந்த முதல் கிப்ட்யில் வந்த பேப்பர் வந்து வந்து போனது..

“சது, அந்த நிழல் உருவத்தோட ஆக்டிவிடீஸ் பார்த்தா, நம்மல இப்போ கூட வாட்ச் பண்ணுற மாதிரி இருக்கு. இத கண்டு பிடிக்கவே நமக்கு இவ்ளோ நேரம் ஆகிவிட்டது. நான் போய் ஐ. டி. டிபார்ட்மென்ட் ல ரெட்டி வீட்டை ரைட் பண்ண பேசுறேன். நீ போய் கமிஷனர் கிட்ட இதை பற்றி சொல்லி விடு” என்று கூறி கொண்டே தன் தொப்பியை மாட்டிக் கொண்டு சென்று விட்டான்.

ஆனால், சந்திரா தன் யோசனையில் இருந்து வெளியே வரவில்லை. அவள் மனதில் அந்த நிழல் உருவம் மட்டுமே நிறைந்து இருந்தது.

“இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல், அதுவும் மகேஷ் அட்மிட் ஆகி இருந்தது ஐசியு க்கான பகுதி. அங்கு இருந்த எல்லாரும் ரூம் ஸ்ப்ரே னால மயக்கமாகி இருக்காங்க. பட்,எந்த நோயாளிகளுக்குமே மயக்க மருந்தால எதுவும் ஆகவில்லை. அப்படினா, மருந்தோட வீரயத்திற்கான அளவு கம்மியாக இருந்து இருக்க வேண்டும்.அப்படினா, எந்த அளவு மருந்து போட்டா எப்படி வேலை செய்யும் என்ற பேஸிக்ஸ் தெரிந்து இருக்க வேண்டும். மிமிக்ரி , எஸ்.எப்.எக்ஸ்(SFX) எஃபெக்ட், இப்போ மருந்து ஓட அறிவு, இது எல்லாம் மகேஷ கடத்த கற்றுக் கொள்ள பட்டதா இல்லை தனக்கு முன்னமே தெரிஞ்சத இதுக்கு யூஸ் பண்ணிகிட்டாங்காலா?

அதோடு, கடத்தப்பட்ட மகேஷயும் அடித்த மாதிரி தெரியலை. அவனோட உடம்பில் எந்தவொரு தழும்பும் இல்லை. அவன் மயக்கமாக மட்டும் தான் இருந்தான்.அப்புறம் எதுக்கு கடத்தப்பட்டு இருக்கணும்? குழப்புதே ஆண்டவா! ” என்று குழம்பி பாரமான தன் தலையை கையில் தாங்கி அமர்ந்தாள். அப்போது அவள் காதோரம்,

“செல்ல குட்டி, ரொம்ப யோசிச்சா குழப்பம் தான் வரும். அதிகமான குழப்பம், கோபம், சோகம் எல்லாமே நம்முடைய மனவலிமையை பலவீன படுத்தும். ரிலாக்ஸ் பண்ணு. உன்னால் முடியும் என்கிற நம்பிக்கையை கொண்டு வா. எல்லா பிரச்சனைகளும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். நீ தெளிவா இருந்தா மட்டுமே,உனக்கான தீர்வு உன்னை வந்து சேர்ந்து இருக்கும்” என்று வலிமையான ஒரு ஆணின் குரல் கேட்டது.

அந்த குரலில் அவள் மனது அமைதியானது. புது தெம்பு வந்தது போல் உணர்ந்தாள். மனதில் எதோ நெருடல் ஏற்பட, அதை உடனே தெளிவுபடுத்தி கொள்ள, ருத்ரா விடம் கூட சொல்லாமல்,தன் தந்தையை காண சென்றாள்.

# # # # # #

இன்கம் டாக்ஸ் அலுவலகத்திற்கு சென்ற ருத்ரா, மகேஷ் கேஸில் தான் கண்டு பிடித்த அனைத்தையும் கூறினான்.

“ரெட்டி வீட்டை ரைட் பண்ணினால் கண்டிப்பாக ஏதாவது க்லூ கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன் தீரன்” என்று தன் யோசனையையும் கூறினான்.

சிறிது நேரம் யோசித்த அந்த ஆபிசர் தீரன் குமார், “ருத்ரா, நீங்க சொல்ல வருவது எனக்கு நல்லா புரியுது. பட், தீரஜ் ரெட்டி மும்பை கோடீஸ்வரரில் அவரும் ஒருத்தர். சோ, வீ ஹாவ் டு ஃபாலோ அவர் ரூல்ஸ். எங்களோட மேல் அதிகாரிகள் கிட்ட பெர்மிஸன் வாங்கணும். ஒரு இரண்டு மணி நேரம் டைம் கொடுங்கள். ஐ வில் மேக் அ கால் டு மை சீனியர். வீ வில் டூ அவர் டுயிட்டி! உங்களுக்காக சீக்கிரமா பண்ண டிரை பண்றேன் ” என்று நம்பிக்கை ஊட்டினார். அங்கிருந்து நேராக தன் ஸ்டேஷனுக்கு சென்ற ருத்ரா, மற்ற கேஸ்களை பார்வையிட ஆரம்பித்தான். எனினும், அவன் மனதில் சீக்கிரமாக மகேஷ் கேஸை முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

# # # # # # # #

சந்திரா தன் தந்தையை காண கமிஷனர் அலுவலகம் வந்தாள். ஆனால், கமிஷனர் யாரையும் தன்னை தொந்தரவு செய்ய கூடாது என்று சொல்லி விட்டது சந்திரா யோசிக்க வைத்தது, தனியாக ஒருவரிடம் வீடியோ கால் பேசி கொண்டு இருப்பது விவாதம் இல்லை என்றாலும், எதையும் தன்னிடம் மறைக்காத டாடி இன்று தன்னையும் அனுமதிக்க கூடாது என்று கூறியது சந்திரா விற்கு விநோதமாக தான் தெரிந்தது.

பின் ருத்ரா கண்டறிந்த அனைத்தையும் தன் தந்தையிடம் ரிபோர்ட் செய்த சந்திரா, தன் ஸ்டேஷனுக்கு சென்றாள். அங்கு ஆதியிடம் காலையில் தான் கொடுத்த பிராத்தல் கேஸின் டியிடெயில்ஸ் கொண்டு வர சொல்லி விட்டு, இன்ன பிற கேஸை பார்வையிட்டு கொண்டு இருந்தாள்.

“மேம் நீங்க கேட்டது ” என்று ஆதி ஒரு பைலை கொடுக்க, “ஆதி, இந்த ஹோட்டல் எங்க இருக்கு? ” என்று சந்திரா வினவ,

“மேடம், இந்த ஓபன் ஹார்ட்ஸ் ஹோட்டல் புதுசாக வந்திருக்கிறது. லைட்ஸ் தெருவில் இருக்கிற ஒரு குழந்தை பூங்காவை தான் இப்படி ஹோட்டலா மாற்றி இருக்காங்க. அந்த பார்க் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கிறதால மக்கள் அந்த பூங்காவை யூஸ் பண்ணாமல் விட்டு இருக்காங்க. இப்போது ஹோட்டலா மாறின பிறகும் கூட மக்கள் நைட் ஸ்டே பண்ண பயப்படுறாங்க. அதுனால அவங்களுக்கு பிராத்தல் பண்ண அந்த நேரத்தை பயன்படுத்திகிறாங்க!”

என்று தான் கண்டறிந்தவற்றை கூறி கொண்டு இருக்கும் போதே, சந்திராவிற்கு தன் தாயிடம் இருந்து கால் வரவே, “குட் ஜாப் ஆதி! நாளைக்கு இவங்களை கோர்ட் யில் ஆஜர் பண்ணிடுங்க ஆதி. வேற ஏதாவது கேஸ் வந்தாலும் நீங்களே ஹாம்டில் பண்ணுங்க. மகேஷ் கேஸ் கொஞ்சம் க்ரிடிக்கலா போகுது. ஸோ, என்னால மற்ற கேஸஸை கவனிக்க முடியலை. ஐ நோ யூ வில் மேனேஜ் வெரி வெல்!” என்று சந்திரா நிதர்சனத்தை கூற,

“எனக்கு உங்கள் நிலை  நல்லா புரியுது மேடம்! அப்படி யே ஏதாவது சந்தேகம் வந்தாலும் உங்ககிட்ட கிளாரிபை பண்ணிட்டு பிரோஸீட் பண்ணிக்கிறேன். யூ டோண்ட் வொரி மேம்!” என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசிய ஆதியை பாராட்டுதலாக பார்த்த சந்திரா, தன் வீட்டை நோக்கி பயணமானாள்.

ஆனாலும், அவள் மனதில் ஓபன் ஹார்ட்ஸ் என்ற பெயர் குழப்பத்தை தந்தது.

# # # # # # #

சந்திராவின் ருத்ராவின் தூக்கத்தை எல்லாம் அழகாக பறித்த நிழல் உருவமோ, தான் வழக்கமாக செல்லும் பள்ளி வளாகத்தின் வெளியே, அந்த இரண்டு வயது சிறுமிக்காக காத்துக் கொண்டு இருந்தது.

கலைந்த முடியும், தன் உறவின் வருகையை எதிர் நோக்கி, வருபவர்களை எல்லாம் அலசும் அந்த விழிகளும், தன் பையை சுமக்க முடியாமல் சுமக்கும் அந்த குட்டி முதுகும், “இன்னுமா வரல? ” என்று செல்லமாக கோபித்துக் கொள்ளும் அழகும், நொடிக்கு ஒரு முக பாவத்தை மாற்றும் அந்த குழந்தையின் அழகில் அந்த நிழல் உருவம் மயங்காமல் இருந்தால் தான் ஆச்சரியம்.தான் கண்ட அழகை தன் பேசியிலும் பதிவு செய்தது.

பின் ஆறடி உயரம் கொண்ட ஒரு நெடியவனை கண்டவுடன் அக்குழந்தை “டாடி” என்று ஆர்ப்பரித்து அவன் தோல்களில் ஏறி கொண்டது.

“அம்மா வரலயா டாடி? “என்று முகம் சுருங்கி கேட்ட குழந்தையை அள்ளி அணைத்து, ” ஏன் அம்மா தான் வரணுமா? டாடி வர கூடாதா? ” என்று எதிர் கேள்வி கேட்டான். “அப்படி எல்லாம் இல்லையே.. ” என்று புது பூவாக அக்குழந்தை மலர்ந்தாள். பின் அருகில் இருக்கும் பார்க் யில் சிறிது நேரம் விளையாடிய பின், அக்குழந்தையின் பசியாற்ற உணவகம் சென்று, அவள் விரும்புவதை ஆடர் செய்து சாப்பிட்டு, தன் வீட்டை நோக்கி அந்த நெடியவன் பயணமானான்.

அவனையும் அக்குழந்தையையும் அந்த நிழல் உருவம் பின் தொடர தவறவில்லை.. எப்படியாவது அக்குழந்தையின் தாயை காண வேண்டும் என்ற அந்நிழல் உருவத்தின் நோக்கம் நிறைவேறாமலே போனது.

அருகில் இருக்கும் முழு நிலவின் ஓவியத்தை கண்ட நிழல் உருவத்தின் உதடுகள் மர்ம புன்னகையை வீசியது.

# # # # # #

மனம் கொண்ட ரௌத்திரமும்
காணாமல் போனதே
உன் மழலை சொல்லினிலே!
நான் கொண்ட திமிரும்
அகந்தையும் சுக்கல் சுக்கலாக
உடைந்து போனதே,
உன் சில்லறை சிரிப்பினிலே!
உலக அற்புதங்கள்
ஒன்றாக சேர்ந்தாலும்,
அன்று மலர்ந்த பூவாக
சிரித்து குதூகலக்கும்
குழந்தையின் முன்னால்
தோற்கும் அல்லவா?

# # # # # # # #

“மகேஷ் கடத்தல் கண்டிப்பாக திட்டமிட்டதாக இருந்தாலும், அதுக்கும் நம்ம பண்ற பிஸினஸுக்கும் எந்த தொடர்பும் இருக்காது பாஸ், அதோட என் பையனை நான் நிச்சயமா சீக்கிரமா கண்டு பிடித்து அவனை அப்படி யார் கடத்தினாங்களோ அவங்களை நான் நிச்சயமா சும்மா விட மாட்டேன். நீங்கள் என்னை நம்பலாம் பாஸ்” எல்லாரையும் ஆட்டுவிக்கும் தீரஜ் ரெட்டி பயந்த நிலையில் யாருடனோ பேசியில் பேசி கொண்டு இருக்க,

“எனக்கு தெளிவு இல்லாத பதிலில் எப்பயுமே நம்பிக்கை வந்தது இல்லை. சீக்கிரமா காரியத்தை முடிச்சுட்டு இனிமே நீ பேசலாம். அது வரை நம்மலோட டீல் அப்படியே தான் கிடப்புல இருக்கும். ” தொப்பியில் தன் முகத்தை மறைத்துக் கொண்டு இருந்த , “பாஸ்” என்று அழைக்கப்படும் அந்த மர்ம ஆசாமி போனில் உறுமி விட்டு வைக்க,

இந்த பக்கம் இருந்த தீரஜ் கொதி நிலையில் கமிஷனருக்கு கால் செய்து சில பல திட்டுகளை இலவசமாக கொடுக்க, அரசியலில் இதுலாம் சாதாரணம் அப்பா என்று கமிஷனரும் அவரின் இயல்புக்கு மாறாக மிகவும் அசால்ட்டாக அவரின் பிற வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.

போனில் உறுமி விட்டு திரும்பிய அந்த “பாஸ்”, தன்னையே கண்ணை மறைத்து கொண்ட கூலரின் வழியாக உறுத்து பார்த்து நின்று கொண்டிருக்கும் அந்த ஆறடி இளங்காளையின் பார்வைக்கு பயந்து நடுங்கினான்.

” வரவர உங்க போக்கே சரியில்லை பெரியப்பா!” உங்களை நான் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற ரீதியில் கூறிவிட்டு சென்று விட்டான் அவன். கதையின் நாயகனா? பார்த்தால் அப்படி தான் இருக்கிறான். ஆறடி உயரத்தில், ஜிம் உபயத்தால் முறுக்கேறிய உடலும், துளைக்கும் கண்களும், அதை எப்போதும் மறைக்கும் கூலர்சும் ஆணின் இலக்கணம் கொண்ட ஆணழகன்!

‘ஆழ்ந்த குரலிலும் தன் கோபத்தை வெளிப்படுத்த முடியுமா? ஆட்டுவிக்கிறானே இவன்! ‘ மனதில் நினைத்ததை சொல்லிடதான் முடியுமா? அந்த இருளில் ஆட்சி செய்யும் பாஸால்!

# # # # # #

“வல்லவனுக்கு வல்லவன்
உலகில் பல பேர் இருக்க
எல்லாம் எனக்கே
சொந்தம் என்ற
அகந்தை மனிதன்
மனதில் திளைத்திருக்கும்
காரணம் என்னவோ?
உன் கையில் இன்று
புரளும் பண கட்டுகள்
நாளை எவர் கையிலோ?
புரிந்து கொள் மனிதா,
வாழ்க்கை எதார்த்தத்தை! “

# # # # # # #

தினமும் தன் பாதி அழகை மட்டுமே காண்பித்து வந்த அந்த வாணுலகத்து தேவதை, இன்று தன் முழு அழகையும் காட்ட எண்ணி தன் படைகளான நட்சத்திரங்களுடன் விண்ணில் வந்தது.

அந்த வாணுலகத்து தேவதையின் அழகில் மயங்கிய கடல் அரசன், அவளை கடத்த தன் அலைகளை ஏவி விட்டான்.

எனினும், அந்த அலைகளால் அவளை கடத்த இயலவில்லை. எப்படியாவது தன் அரசனின் கட்டளையை நிறைவேற்ற மீண்டும் மீண்டும் ஆக்ரோசமாக அலைகளை வான் நோக்கி பாய்ந்தது.

இதை எல்லாம் வானில் இருந்த அந்த தேவதையான நிலவு அலைகளின் போராட்டத்தை பார்த்து கர்வமாக சிரித்தது.

இங்கே இந்த காதல் யுத்தத்தை சிறிதும் உணரும் நிலையில் இல்லாமல், கடல் அலைகளை வெரித்து பார்த்து கொண்டு இருந்தாள், குழந்தையின் தாய்.

அவள் மனதில் இரண்டு வருடங்களாக ஓடும் அதே நினைவுகள் ஓடி கொண்டு இருந்தது.

பௌர்ணமி நிலவும் குளிர்ந்த காற்றும் ஆக்ரோஷமாக கரையை நோக்கி பாய்ந்து வரும் கடல் அலைகளும் அவள் மனதில் பதிய வில்லை.

அவள் கால்கள் வழக்கமாக செல்லும் படகின் அருகே சென்றது. அவள் வந்ததை உணர்ந்த படகோட்டி, நடுக்கடலிற்கு சென்றான்.

அவளின் மனம் அவளையும் அறியாமல் மறக்க நினைக்கும் சில நிகழ்வுகளை கண் முன்னே காட்டியது.

அவள் மனதில் எப்போதும் தோன்றும் கவிதை வரிகளும் தோன்றி, மன வலிகளை மேலும் வலிக்க செய்து கொண்டு இருந்தது. இறுதி இரண்டு வரிகளில் அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

அவள் கண்களில் வழிந்த கண்ணீரை கண்ட நிழல் உருவத்திற்கும் கண்ணீர் வழிந்தது. ஏனோ, அந்த நிழல் உருவம் தன்னையும் அறியாமல் சில பல திட்டங்களை தீட்டியது. அந்த திட்டங்கள் யாவும் நல்லதொரு காரியத்தை நிறைவேற்பதற்காக அல்ல.

# # # # # # #

பெண்ணின் அழுகை
அவள் காதலுக்காகவோ?
தொலைத்த வாழ்க்கைகாகவோ?
தெரிந்தவர் எவரோ?
மங்கை கண்ணீர்
எழுப்பும் வினாவிற்கு
விடை தான் உண்டோ?
கடலில் ஆழத்தை
அறிந்தவர் இருந்தும்,
மனதின் ஆழத்தை
அறிந்தவர் எவரோ

# # # # # # #

ருத்ரா எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையுமா?
சந்திராவின் யோசனைகள் அவளை நேர்வழி படுத்துமா?
நிழல் உருவத்தின் இந்த நிலைக்கு காரணம் என்ன?
நிழல் உருவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
ருத்ரா, சந்திரா இணைந்து கண்டறிவார்களா?
நிழல் உருவம் தொடரும் தாயின் கண்ணீருக்கு காரணம் என்ன?

# # # # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # # # #