kaliyugakalki-8

கலியுக கல்கி – 8

 

வருத்தம் தோய்ந்த முகத்துடன் தோழிகள் இருவரும் அமர்ந்து இருந்தனர் எதிரில் அவர்களைப் பார்த்தபடி மிருதுளா இவர்களுக்குப் பக்கவாட்டில் ராகவ்.

 

நால்வரும் ராஜலு குடும்பத்தை பத்தி தான் பேசி கொண்டு இருந்தனர்.பொன்னிக்கு விதுரன் மேல் இன்னும் பித்துக் கூடியது,இப்போது முடிவே செய்துவிட்டாள், அவன் தனக்கு வேண்டாமென்று.அவன் அவலங்களைக் களை எடுக்கும் கல்கி,அவனுக்குத் தான் என்றும் நிகர் ஆக முடியாது.

——————————————————————————————

சீதாவின் விடயம் அறிந்த முத்துவிற்கு  அவர்கள் திருமணம் தவறு என்று தான் தோன்றியது.அதற்காக எத்தனை பெண்களைத் திருமணம் செய்து இவர்கள் காப்பாற்ற முடியும்.அன்று அவர்கள் சீதாவை திருமணம் செய்யவில்லை என்றால் சீதா வாழ்ந்தற்கே அடையாளம் இல்லாமல் போயிருக்கும் அது வேறு ஆனால் மிருது.

 

ஆம் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரெங்கனுக்குத் திருமணம் செய்ய எண்ணி சுபிக்ஷ என்ற பெண்ணை உறுதி செய்தனர்.அவளது பெரியப்பா மகள் தான் சீதா.தாய் தந்தை இருந்தும் அவளது முடிவுகளை எடுப்பது சீதாவின் சித்தியும்,சித்தப்பாவும் தான்.பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் அல்லவா.அதுபோலத் தான் மித மிஞ்சிய சொத்துகள் அத்தனையும் சீதாவின் பெயரில்.

 

சொத்து இருந்து என்ன பயன் சீதாவிற்கு வயிற்றில் புற்று நோய்.அரும்பாடு பட்டு செலவழித்து அதை வேரோடு அழித்தாயிற்று.ஆனால் குழந்தை என்பது கனவிலுமில்லை.அதனால் பட்ட மரத்தை யாரும் திருமணம் செய்ய முன்வரவில்லை.

 

எதனால் ஆரோக்கியமாக வளர்ந்த சீதாவிற்குப் புற்று நோய்?அதுவும் வயிற்றில்? சிறு வயதில் இருந்து கோளாறு இருந்துள்ளது,பெற்றவர்கள் தட்டி கழித்து  சித்தியின் பொறுப்பில் விட்டதால் இந்த நிலைமை.

 

அதுமட்டுமில்லை அவள் எடுத்து கொண்டது சாதாரணமான சிகிச்சை.முதலில் பார்த்து இருந்தாலே இதற்குத் தீர்வு கண்டு இருக்கலாம்.

 

‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ பணம் இருந்தால் தான் ரெத்த உறவும். தன் பிள்ளை,தன் மனைவி,என்ற சுயநலம்.சீதாவின் தந்தை வெறுத்து சொத்தை தம்பி மகளின் நல் வாழ்விற்குக் கொடுத்து விட்டார்.சீதாவிற்கு இதில் விருப்பம் தான், சித்தப்பாவின் ராஜதந்திரம் பலித்தது.

 

இதையெல்லாம் திருமணத்திற்கு முதல் நாள் விதுரனால் அறியப்பட்டுச் சொத்தை கை பற்றி மீண்டும் சீதாவின் பெயரில் எழுதப்பட்டு, அடுத்த நாளே ரெங்கனின் திருமணம் சீதாவோடு.கண் இமைக்கும் நேரத்தில் ராட்சசன் போல் செயல் பட்ட மகன்களைப் பெருமிதமாகப் பார்த்தார் ராஜலு.

 

சாதாரணச் சொத்துக்காக இந்த முடிவில்லை  என்பது ராஜலுவின் கணிப்பு.இதில் கொடூரமான சில உண்மைகள் மறைக்கப் பட்டது.அதனால் தான் ரெங்கன் திருமணத்தை நிறுத்தியது.அண்ணனும் தம்பியும் இம்மண்ணை விட்டு பிரியும் வரையில் ரகசியம் வெளி வராது.

 

சீதாவிற்கு அழுகை தான் வந்தது.அதுவும் ஆண்டுக் கண்ணகில் ஏமாற்ற பட்டது,தனது உடல் நிலை எண்ணி எண்ணி வெடித்துச் சிதறியது.அதன் பின் ஓர் ஆண்டுக் காலம் ரெங்கன் என்னும் சிங்கத்தை அன்பு கோல் வைத்து  அதட்டி,உருட்டி மறுமணம் செய்யச் சம்மதம் பெற்றாள்.சிங்கம் உஷாராக எனக்குத் தோன்றினால் ஓர் அவளைப் பெண்ணுக்கு வாழ்கை கொடுப்பேன் என்று சத்தியம் செய்தது.அதன் விளைவு தான் இந்த மிருது.

 

சீதாவை எண்ணி கலக்கம் வந்தது பெண்களுக்கு. தங்களுக்கெல்லாம் இத்தகைய பெருந்தன்மை இருக்கும் என்பது சந்தேகம் தான்.அதுவும் பொன்னிக்குச் சத்தியமாக முடியாது.புரட்சி செய்கிறேன் என்ற பெயரில் விதுரன் வேறு பெண்ணை.ஐயோ நீயும் வேண்டாம் உன் சங்காத்தமும் வேணாமுட சாமி விலகி கொண்டாள்.

 

“யோவ் ஐயரே நீ இங்க வந்த கதை தெரியும்,உங்க அண்ணே எப்புடி மாட்டுனாரு.”

 

“அதயேன் கேக்குற செல்லக்குட்டி”.

 

அவனை முறைத்தவள் “இப்புடியெல்லாம் பேசுனா சோத்துல வேஷம் தான்”.

 

“உன் கையாள எது குடுத்தாலும் நான் ஹாப்பி”.

 

அவள் எழுந்து செல்ல போகப் பொன்னி கை பற்றி இழுத்து கொண்டாள் “அண்ணே நீங்க சொல்லுங்க”.

 

“நான் இங்க வேலை பாக்குற விஷியத்தை அண்ணாகிட்ட சொன்னேன்,ரொம்பக் கோப பட்டான்.நேக்கு பிடிக்கலை இங்கேயே வா வேற வேலை வாங்கித் தரேன் சொன்னான்,நான் கேட்கலை.

 

ஒரு நாள் நேருல வந்துட்டான்.அவனை முதலில் பார்த்தது அலமேலு தான்.அப்புறம் பார்த்த முதல் நாளே பாடிட்டே என்கிட்ட வந்து உங்க அண்ணா எனக்கு வேணும்.போன் நம்பர் கேட் டா ,அப்போ இருந்து இப்பவரைக்கும் என்ன அண்ணன் என்னைக் கொல்ல காத்துண்டு இருக்கான்.

 

அவன் எங்க அம்மா கொன்டு,அவாளா மீறி எதுவும் செய்ய மாட்டான்.நேக்கு அலமேலு நெனச்ச பாவமா இருக்கு, அவா மன்னிய வந்தா நேக்குச் சந்தோசம் தான்.

 

இதற்கு என்ன பதில் சொல்வது பெண்களுக்குத் தெரியவில்லை.அவர்கள் மூவருமே ஒரு மாதிரி மனநிலையில் தான் குழம்பி தவிக்கின்றனர்.ஏதோ ஓர் புள்ளியில் இவர்கள் ஒன்றாக ஒரே குடும்பத்தில் இணைகிறார்கள்.அதுவே பயத்தைக் கொடுத்தது உண்மை. நடப்பவையை எண்ணி பார்த்தால் தலை சுற்றியது.

—————————————————————————————————

வேணியின் அரவம் கேட்கவும் அனைவரும் களைய ராகவ் முத்துவின் கை பற்றி அவனது அறைக்கு இழுத்துச் சென்றான். “யோவ் கையவுடு என்ன தைரியம் உனக்குத் தயிர் சாதம் வுடுய்யா”.

 

“ஏண்டி கத்துற கொஞ்ச நேரம்”. ‘என்ன கொஞ்ச நேரம்’ அவள் எண்ணும் முன்னே இறுக்க அணைத்தான்.அதே வேகத்தில் அவளைப் பிடித்து அறைக்கு வெளியில் விட்டுட்டு கதைவை சாத்தி கொண்டான்.மூடிய கதவில் சாய்ந்து நின்று சத்தம் வராமல் சிரிக்க.மூடிய கதவுக்கு முன் முத்து காலால் உதைத்து.”யோவ் தயிர் சாதம் மரியாதையா வெளில வந்துரு. இல்ல மரியாதை கெட்டு போய்டும் பிராடு”, கதவை பார்த்து கத்த.

 

அங்கு வந்த விதுரன் என்ன முத்து என்று கேட்க தலையை ஒன்றுமில்லை என்று குலுக்கி தலைதெறிக்க ஓடி சென்றாள்.

————————————————————————————————

மூச்சு வாங்க வந்தவள் பொன்னிய தான் படப் படவென அடித்தாள்.தலையும் புரியாமல் வாழும் புரியாமல் அடி வாங்கிய பொன்னி வலி தாங்காமல் முத்துவின் கைகளைப் பற்றி “எதுக்கு எரும அடிக்குற”.

 

“சனியனே நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்தேன் நீ தானடி இங்கன கூட்டிட்டு வந்த பாரு இப்போ”.

முத்து என்ன பாரு அழுதவளை முகம் பார்க்க செய்து. “நான் அவரு கிட்ட பேசுறேன் முத்து, இந்த ஒரு மாசம் பொறுத்துக்கோ.அந்த அண்ணே கல்யாணம் முடியட்டும், நம்ப இங்க இருந்து போயிடலாம்.

 

“நெசமாவா”.

 

நெசந்தான் முத்துவிற்குப் பொன்னியின் பேச்சில் நம்பிக்கை இல்லை.அவள் எப்போதோ விதுரன் பக்கம் சாய்ந்து விட்டாள்.அதனால் முத்து நம்பாமல் பார்க்க.

 

அவளின் பார்வை உணர்ந்து “சரிவராது முத்து போயிடலாம்.இப்போ எல்லார் கவனமும் நம்ப மேல தான் இருக்கும்.ரெங்கன் அண்ணே கல்யாணத்துல அவுங்க கவனம் திரும்பட்டும் போயிடலாம்”.

 

நீ சொல்லுறதும் சரிதான் பொன்னி.எனக்கு வர வர அந்த ஐயர பார்த்தா  பயமா இருக்கு பொன்னி பொசுக்கு பொசுக்கு கட்டிக்குது.சங்கடமான நிலையில் முத்து.பார்க்க தைரியமான பெண்ணாக இருந்தாலும் முத்துவிற்கு இது போல் சூழ்நிலையை  கையாள தெரியவில்லை.

 

 

“ராகவ் அண்ணே நல்லவர் முத்து”.

 

“நல்ல வாயில வந்துரும் புள்ள போய்டு.அந்த ஆளு நல்லவரா இருக்கட்டும் நமக்கு ஒத்துவராது”.சரிதான் முத்து பொன்னியும் ஆமோதித்தாள்.

 

அக்கா அண்ணே சாப்பாடு கேக்குறாரு என மிருதுளா வந்து நிற்க.நீயும் முத்துவும் பார்த்துக்கோங்க எனக்கு மேல் வேலை இருக்கு, என்று கழண்டு கொண்டாள் பொன்னி.முத்துவும் அவள் எதற்குச் சொல்கிறாள் என்று அறிந்தவள் போல் செயல் பட்டாள்.

———————————————————————————————-

இதே நிலை இரு வாருங்கள் தொடர.விதுரன் தான் விடக் கண்டன் ஆயிற்றே நேரே பொன்னி அறைக்கே வந்துவிட்டான்,

 

அங்கு…….

முத்து போனில் பாட்டு போட்டு அவளும் பாடி கொண்டே பொன்னியின் கை பிடித்து ஆடி கொண்டு இருந்தாள்,மிருதுளா கை தட்டி ஆர்ப்பரிப்பு.விதுரனும்,ராகவ்வும் இரவு தான் வருவார்கள்,வேணி அவர் அறையில் முடங்கிக் கிடக்க.இங்கு கன்னிகள் கொண்டாட்டம்.

அதுவும் குத்து பாட்டுத் தலையில் தலைப்பாகை கட்டி பாவாடையை முட்டிக்கு மேல் கட்டி ஆண் போல் பொன்னியும் (என்னது பொன்னியா! ) தாவணியைத் தூக்கி இடுப்பில் சொருகி முத்துவும்.இரு தோள்களையும் குலுக்கியவாரே  சன்னமாக விசில் அடித்து மிருது ,அழகு அள்ளி கொண்டு போனது.

 

பொன்னி முத்துவின் கை பற்றி இழுத்து அனைத்து

‘வாடி வாடி நாட்டு கட்ட

வசமா வந்து மாட்டிக்கிட்ட

கன்னி பொண்ணு கப்பம்கட்ட

காளை வருது மல்லுக்கட்ட’

 

என்று பாடி கொண்டே பொன்னி முத்துவை சுற்றி ஆட அமோகமாகத் தான் இருந்தது இரு ஆண்களுக்கும்.விதுரன் கன்னிகள் அறையை நோக்கி வரும் போதே ராகவ்வும் வால் பிடித்துக் கொண்டு வந்தாயிற்று விதுரனுக்குப் பின்னால் நின்று திறந்த வாய் மூடாமல் வீடியோ வேறு.

 

இப்போது இன்னும் சிறப்பான காட்சி பொன்னி நடுவில் நின்று கொண்டு முத்து வலப்பக்கம் மிருது இடப்பக்கம்.

விசில் அடித்துக் கொண்டு மிருது உல்லாசமாக,நமுட்டை கடித்துக் கொண்டு பொன்னி சிறப்பாக,துள்ளி துள்ளி நளினமாக முத்து. அட அட கண் கொள்ளா காட்சி.

 

அதிர்ச்சி குறையாமல் இருக்கும் விதுரனை பார்த்தவன். ஐயோ பாவம் மனுஷன் திகில் அடுச்சு போய் இருக்காரு. அண்ணே! அண்ணே! சன்னமாக ராகவ் அழைக்க.விதுரனும் கிசு கிசுப்பாக என்னடா செப்பு

 

எத்தனை தடவ சொல்லி இருக்கேன் இந்தக் கேடிகளைப் பத்தி நம்புனீங்களா,என் ஆளு தான் வாயாடின்னு சொல்லுவீங்க, இப்ப பாருங்க உங்க பங்காரம் பங்கம் பண்ணுது.

 

அவன் சொல்லுவதும் சரிதான். தான் இல்லாத பொது இவர்கள் தப்பிக்க எடுத்த முயற்சிகள், ராகவ்வை சீண்டுவது அனைத்தும் விதுரனிடம் சொல்லுவான் ஆனால் ஒரு நம்பாத சிரிப்புடன் விதுரன் கடந்து விடுவான்.ஆனால் இன்று ……..

 

அடுத்து ராகவ் அந்த விடியோவை ரெங்கனுக்கு அனுப்பி வைத்து அவரது ரீயாக்சன் பார்க்க.அடுத்த இரண்டு நிமிடத்தில் ராகவ்வின் சட்டையைப் பிடித்து இழுத்து நிறுத்திவிட்டு.மிருதுவை ஆவலாக பார்க்க செர்ரி பழ உதட்டை மடித்து விசில் அடித்து கொன்டு இருந்தாள். பார்த்த ரெங்கன் வைகுண்டம் போயாச்சு. (குறிப்பு:அவர் முன்பே  மிருதுவை பார்க்கத்தான் இங்கு வந்து கொன்டு இருந்தார்.)

 

சில மணி நேரம் ஆட்டம் தொடர சுத்தி சுத்தி ஆடிய மிருது எதார்த்தமாக வாயிலை பார்க்க அங்கே கண்ட காட்சியில்

 

ஆ ஆ ஆ ஆ ………………………………………………. அக்கா மிருது அலற.

 

ஏண்டி கத்துற நிதானமாகத் திரும்பிய பொன்னியும் முத்துவும் அதிர்ந்து நின்றனர்.

 

இந்த நாள் இனிய நாளாக முடிந்தது முக்கன்னிகளுக்கும்……..