மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 4:
இருவரும் ஹோட்டல் வந்தடைய அவள் சோகத்துடனே இருந்தாள். அவள் மனநிலையை எப்படி மாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
இருவரும் இருக்கையில் அமர… அவள் பெரிதாக ஆர்வமில்லாமல், மனதில் ‘என்ன பத்தி என்ன நினைப்பான். ஏதோ நட்கேஸ் வண்டி ஓட்டினமாதிரி ஒட்டிருக்கேன்’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…
“சுஷி” என்றழைக்க, அவனை பார்த்தாள்.
“உனக்கு ஞாபகம் இருக்கா… நம்ம சீனியர் ஹை ஸ்கூல் படிக்கிறப்ப கலிபோர்னியா ட்ரிப் போனோமே. அப்போ யாருக்கும் தெரியாம இதே மாதிரி ஒரு இந்தியன் sea food ரெஸ்டரண்ட் போனோமே…” என விழிகள் விரித்து க்ரிஷ் சொல்ல
அவள் அதை கேட்டவுடன், முகம் மாறியது. அவர்களுடைய சிரியவயது நிகழ்வு நினைவுக்கு வந்தது. கூடவே கொஞ்சம் புன்னகையும் வந்தது.
**********
“என்ன ஏன் கூட்டிட்டு வந்த க்ரிஷ்??? எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று பயத்துடன் சிரியவயது சுஷி சொல்ல… “சும்மா சீன் போடாத பயப்படற மாதிரி. அங்க அம்மா sea food ட்ரை பண்ணவே விடமாட்டாங்க”
“கௌஷல் சொல்லிருக்கான் ஷெல் ஃபிஷ் (Shell Fish) செம்ம டேஸ்ட்’டா இருக்கும்னு. இங்க அது கிடைக்கும்னு பாத்து வெச்சுட்டேன் முன்னாடியே” என்றவன் ஆர்டர் செய்தான்.
சுஷி பயத்துடன் சாப்பிட்டு முடிக்க அவனும் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தான். சர்வர் பில் கொடுக்க “சுஷி பில் கட்டிட்டு வந்துடு” என்று சொல்லிவிட்டு எழுந்தான்.
“டேய் நான் வாலட் எடுத்துட்டு வரல” பீதியுடன் சுஷி சொல்ல “என்னது??? நானும் எடுத்துட்டு வரலையே… என்ன செய்றது” என்று யோசித்தவன் “சரி நீ இங்கயே இரு சுஷி. நான் போய் எடுத்துட்டு வரேன்”
“என்ன தனியா விட்டுட்டு போகாத க்ரிஷ். யாராவது கேட்டா நான் என்ன சொல்வேன்?” என்றாள் பயத்துடன்.
“நீ இங்கயே இரு சுஷி… வேற வழி இல்ல. நான் போய் எடுத்துட்டு வரேன் பத்து நிமிஷம்” விறு விறுவென சென்றான். அவன் சென்ற சிறு வினாடிகளில்,
மறுபடியும் அந்த சர்வர் அவள் அருகே வர, சட்டென பயத்தில் எழுந்தவள்… “Sorry we forgot to bring wallet. My friend will be back soon (வால்ட் எடுத்துட்டு வர மறந்துட்டோம். என் ஃபிரன்ட் எடுத்துட்டு சீக்கரம் வந்துடுவான்) என்றாள் பதட்டத்துடன்.
சர்வர் எதுவும் புரியாமல் அவளைப் பார்க்க, அவளை யாரோ பின் இருந்து தோள்ப்பட்டையில் தட்டி அழைக்க… அவள் திரும்பினாள். அங்கே க்ரிஷ் நின்றுகொண்டிருந்தான் கண்களில் கள்ளத்தனத்துடன்…
“பயந்துட்டயா. பில் பே பண்ணிட்டேன்” என்று வாலட்டை காண்பிக்க, கோவத்தின் மிகுதியில் ‘க்ரிஷ்’ என்று அவனை அடிக்க அவன் அங்கிருந்து ஓடினான்.
இருவரும் அவர்கள் குழு உள்ள இடத்திற்கு நடந்து கொண்டே சொல்ல “Sorry we forgot to bring wallet” என்று அவன் அவளைப்போலவே பேசி கிண்டல் செய்துகொண்டே இருந்தான். அவள் போலியாக கோபப்படுவதுபோல் அவனை பார்த்தாள்.
அப்போது அவன் முகம் வீங்கி போய் இருந்தது. அதை பார்த்து சிரிப்பு தாங்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிற?” அவன் புரியாமல் கேட்க “நம்ம ஒரு போட்டோ எடுத்துக்கலாம் க்ரிஷ்” என்று போட்டோ எடுக்கும்போது அவன் முகம் அவனுக்கு தெரிந்தது.
“ஐயோ என்னது இப்படி?” அலறலுடன் அவனின் முகத்தை தேய்த்துக்கொண்டு கேட்க “ஷெல் ஃபிஷ் டேஸ்ட்டா இருக்கும். இல்ல… அதான் அதோட வேலைய காட்டிடுச்சு” என்றாள் மறுபடியும் விழுந்து சிரித்துக்கொண்டே.
சரியாக அந்த நேரம் பார்த்து பார்வதி அவனை வீடியோ காலில் அழைக்க “ஐயோ அம்மா. மாட்டினேன். இந்த நிலமைல பாத்தா கொன்னுடுவாளே. நான் எடுக்க மாட்டேன்” என்று அந்த அழைப்பை எடுக்காமல் விட்டுவிட்டான்.
மறுபடியும் அழைக்க அவன் எடுக்கவில்லை. இதை பார்த்து சுஷி “இதெல்லாம் தேவையா…” என்று சொல்லிக்கொண்டே சிரிக்கும்போது அவளுக்கு பார்வதி அழைத்தார்.
அதை பார்த்த கிரிஷ் “வேணாம் எடுக்காத எடுக்காத” என்று அவளிடம் கெஞ்ச “என்னயா ஏமாத்தின இரு” என்று அழைப்பை அட்டென்ட் செய்தாள்.
செய்தவள் பார்வதியிடம் பேசிவிட்டு போனை அவன் பக்கம் காண்பித்தாள். அவன் முகத்தை பார்த்த பார்வதி, அதற்கான காரணத்தை தெரிந்துகொண்டு அவனை திட்டித்தீர்த்துவிட்டு போனை வைத்தார்.
அவள் பக்கம் திரும்பிய க்ரிஷ் “உன்ன” என்று சொல்லிக்கொண்டே அவளை துரத்த, அந்த நினைவலைகளில் இருந்து நிகழ்விற்கு வந்த சுஷி, க்ரிஷிடம் “மறக்க முடியுமா…” என்று பலமாக சிரித்தாள்.
“இப்போ இங்க ட்ரை பண்ணவா?” அவன் ஆர்வத்துடன் கேட்க
“கண்டிப்பா. அப்போ மாதிரி நான் போட்டு கொடுக்க மாட்டேன் ஆண்ட்டி’ட்ட” என்று சிரித்தாள். “இப்போ அம் யூஸ்ட் டு இட்” என்றவனிடம் “என்ன ஆண்ட்டி’ட்ட திட்டு வாங்கி பழகிடுச்சா?” என்றாள் சிரித்துக்கொண்டு.
அவளின் முகத்தில் சிரிப்பை பார்த்தவுடன் நிம்மதியாக உணர்ந்தவன் “திட்டு வாங்கி இல்ல… நிறைய டைம் சாப்பிட்டு ஷெல் ஃபிஷ் பழகிடுச்சு” என்று புன்னகைத்தான்.
“சரி நீ இப்போ என்ன சாப்பிடறனு சொல்லு” அவன் கேட்க “எனக்கு ஏதோ ஒன்னு” என்றாள் பெரிதாக ஆர்வமில்லாமல்.
“ரைட்… நானே ஆர்டர் பண்றேன்” என்றவன் அவளுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து இருவரும் உண்டனர்.
அவன் தனக்கு பிடித்ததை இன்னும் ஞாபகம் வைத்துள்ளான் என்பதே சுஷிக்கு அளவில்லா சந்தோஷமாக இருந்தது.
சாப்பிட்டு முடிக்கும் போது “க்ரிஷ்…” என அழைத்தாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க “கேன் வி ஹேவ் எ ட்ரிங்க்? ஐ ஃபீல் சோ ஹாப்பி டுடே (can we have a drink? I feel so happy today)” என்றாள்.
அவனுக்கு மது எடுத்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. அனால் அவள் இருக்கும் நிலைமையில் அவளுடன் எப்படி என்று யோசித்தவன் “யு ட்ரிங்க் சுஷி. எனக்கு வேணாம்” என்றான்.
“லைட்டா?” என்று மறுபடியும் அவள் கேட்க “இல்ல சுஷி” என்று மறுத்தான்.
அவள் முதலில் ஆர்டர் செய்து அதை முடிக்க மற்றொன்றை வாங்கிகொண்டாள்.
அதை குடிக்கும்போது, “என்ன அந்த ராமுக்கு எப்படி விட்டுட்டு போதோணுச்சு க்ரிஷ்? அவனை நான் எவளோ லவ் பண்ணேன் தெரியுமா…” என்று டேபிள் மேல் கைவைத்து அழுக ஆரம்பிக்க… அவனால் அதை பார்க்க முடியாமல்
“சுஷி நம்ம கிளம்பலாம். நீ நிறைய எடுத்துட்ட. போதும்” என்று அவள் அருகில் சென்று அவளை எழுப்ப முயற்சிக்க…
“என்னவிடு. நீயும் அவனும் ஃபிரெண்ட்ஸ். அவனுக்கு தான சப்போர்ட் பண்ணுவ. என்ன யாருமே புருஞ்சுகல. நீ கூட தான்” என்று அவன் கைகளை உதறிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்த்தாள்.
அவள் செல்வதை பார்த்து அவசரமாக பில் கட்டிவிட்டு, அவன் வெளியே செல்ல, அவள் காரை உதைத்துக்கொண்டிருந்தாள்.
“சுஷி என்ன ஆச்சு? என்ன பண்ற?” அவசரமாக அவள் அருகே செல்ல “ஏன் டோர் ஓபன் ஆகமாட்டீங்குது?” என்று மறுபடியும் திறந்துபார்த்தாள். “நம்ம கார் அந்த பக்கம் இருக்கு” என்று அவளை கைத்தாங்கலாக அழைத்துச்சென்றான்.
அவளை சீட்டில் உட்காரவைத்து சீட் பெல்ட் போட்டுவிட்டு அவன் டிரைவர் சீட்டுக்கு சென்று ஏறிக்கொண்டான்.
“ஏய் நீ ஏன் ஏறுன? ஸ்டீவ் எங்க?” என்று அவனை தள்ள, “ஸ்டீவ் இன்னிக்கி வரல நான் தான் வந்தேன். மறந்துட்டயா?” என்று காரை கிளப்பினான்.
“உன்கூட வந்தேனோ. அப்போ ஸ்டீவ் ஏன் இன்னிக்கி வரல? ஐயோ தல வலிக்குதே” தலையை பிடித்தவள், டேஷ் போர்டு திறந்து அதில் இருந்த ஒரு மாத்திரையை போட முற்படும்போது…
“என்ன மாத்திர அது? எதுக்கு எடுக்கற?” க்ரிஷ் அவளை தடுத்தான்.
“கைய விடு க்ரிஷ். தல வலிக்குது எனக்கு” என்று அவன் கையை உதறிவிட்டு அதை போட்டுக்கொண்டாள்.
மாத்திரை உள்ளே போன சில நிமிடங்களில் மயக்க நிலைக்கு சென்றாள். க்ரிஷ்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் காரை வேகமாக செலுத்தினான்.
சிறிது நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்’க்கு இருவரும் வந்தடைய, அவன் அவளை கைத்தாங்கலாக கூட்டிச்சென்றான்.
அவர்கள் இருக்கும் தளம் வந்தது. இருவரும் லிப்ட்டில் இருந்து வெளியே வர, அதை வெளியே போன் பேசிக்கொண்டிருந்த ப்ரியா பார்த்தாள்.
சுஷியின் கோலத்தை பார்த்தவள், கிரிஷை முறைத்துவிட்டு உள்ளே சென்றாள். அதை பார்த்தவன்
‘எனக்கூட வரப்ப கூட இந்த நிலமைல கூட்டிட்டு வரேனேனு தானே கோவமா உள்ள போற ப்ரியா’ என்று நினைத்துக்கொண்டு சுஷியை அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.
அவளை உள்ளே அழைத்து சென்றவன் அவளை ரூமில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தான். போர்வையை எடுத்து போர்த்திவிட்டு அவளைப்பார்க்க…
“டோன்ட் லீவு மீ அலோன். ப்ளீஸ் பி வித் மீ (Dont leave me alone. Please be with me” என்றாள் முனுகிக்கொண்டு அரை கண்கள் மூடியவரே.
அவளின் முடியை கோதிவிட்டு வெளியே வந்தவன் என்னசெய்வது என்று யோசிக்க, ப்ரியா கோவமாக செல்வதை பார்த்தது நினைவிற்கு வர, அவளுக்கு மெசேஜ் செய்ய ஆரம்பித்தான்.
கி: ஹாய் ப்ரியா
பி: இதை உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல
கி: கேன் யு கம் அவுட்?
என்ற மெசேஜ் அனுப்பியவன் வீட்டிற்கு வெளியே வர, வெளியே வந்தவள் அவனை பார்த்ததும் சுஷி வீட்டின் அருகில் வந்தாள்.
“நீங்க இப்படி பண்ணுவீங்கனு நினைக்கல. நீங்க கூட அவங்கள இந்த நிலமைல கூட்டிட்டு வரணுமா?” அதிருப்தியுடன் கேட்க…
“இல்ல இதை சடன்’ஆஹ் நிறுத்துறது எவளோ கரெக்ட்’னு தெரில. அவ எந்த லெவல்’ல இருக்கானு தெரில. இன்னிக்கி தான் மீட் பண்ணிருக்கேன். இன்னிக்கே வேணாம்னு சொன்னா அப்பறம் பேசாம போய்டுவாளோனு தான்” என்றான்.
இருவரும் பேசிக்கொண்டிருக்க வீட்டினுள் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு இருவரும் பதறிக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே சுஷியின் கை விரலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.