kandeepaninKanavu-3

                    காண்டீபனின் கனவு 3

 

தாத்தா யாருக்காக காத்திருந்தாரோ அவர் மலையிலிருந்து இறங்கி வந்தார்.

இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். இருவரிடமும் ஒரு மோன நிலை. தாத்தாவின் கையில் இருந்த ஒற்றை நீலத் தாமரை எதிர்காலத்தை வந்தவருக்கு சொல்லாமல் சொன்னது.

“இந்த முறை நான் இருக்கேன். அடுத்த முறைக்கு நான் இல்ல.ஆனா அதுக்கப்பறம் உனக்கும் இந்த வேதனை இருக்காது. ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.”விரக்திப் புன்னகை தாத்தாவிடம்.

“இது நிரந்தரமில்லன்னு உங்களுக்கு நல்லா தெரியுமே! தெரிஞ்சும் ஏன் வருத்தப் படறீங்க. சந்தோஷம் தான் படனும்.” புதியவர் அவரிடமிருந்த நீலத் தாமரையைப் பெற்றுக் கொண்டார். கிளம்பத் தயாரானார்.

“தமா!” தாத்தா அழைத்தார்.

மெல்லத் திரும்பினார் அந்தப் புதியவர்.

“உன்னைப் பார்க்க நான் ரெண்டு வருஷம் காத்திருந்தேன். வந்ததும் கிளம்பறியே!” தாத்தாவின் கண்களில் வலி தெரிந்தது.

“பேரனை சீக்கிரம் தயார் படுத்துங்க. நானும் என்னால முடிஞ்ச வரை பல நினைவுகளை அவனுக்குள் புகுத்தத் தான் பாக்கறேன். சீக்கிரமே புரிஞ்சுப்பான். அவன் தேடல் தொடங்கற நாளும் ரொம்ப தூரத்துல இல்ல. நான் வரேன். விடியற நேரம் வரப் போகுது. எனக்குக் குடுத்த நேரம் முடிஞ்சு போச்சு.” விறு விறுவென மலையேறத் துவங்கினார் அவர்.

தாத்தா மனதில் பாரம் இறங்காதவராய் வீட்டை நோக்கி நடந்தார். நீலக் கல்லை மீண்டும் பூஜையறையில் வைத்துவிட்டுப் படுக்கச் சென்றார்.

தூக்கம் கண்ணை இழுத்தது. ஆனாலும் வீரேந்திரனிடம் எப்படி விஷயத்தைக் கூறுவது என மூளை யோசிக்க யோசிக்க தலை வலி தொற்றிக் கொண்டது.

வருவது வரட்டும் என வீராவிற்கு போன் செய்ய நினைத்தார். பிறகு என்ன நினைத்தாரோ மீண்டும் அந்த எண்ணைத்தை கைவிட்டு படுத்துவிட்டார்.

மறுநாள் காலை முருகன் வந்து கதவைத் தட்ட அது தானாகத் திறந்து கொண்டது. இரவு அவனது வீட்டிற்குச் சென்று விட்டான். எப்படியும் பெரியவருக்கு உடம்பு சரியில்லாமல் போகும் என அவனே கஞ்சி காய்ச்சி எடுத்து வந்திருந்தான்.

கொண்டு வந்த தூக்கை சமயலறைக்கு எடுத்துச் சென்று ஒரு பெரிய லோட்டாவில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு தாத்தாவின் அறைக்குச் சென்றான்.

நினைத்தது போலவே தாத்தா சுருண்டு படுத்திருந்தார்.

“ஐயா! கஞ்சி காய்ச்சி கொண்டு வந்திருக்கேனுங்க. கொஞ்சம் குடிச்சா தெம்பு வருமுங்க.” என அவரை எழுப்பி அமர வைக்க முயன்றான்.

உடல் நெருப்பாகக் கொதித்தது. அந்த நீலக் கல்லை தூக்கிச் சென்றதின் பலன் அவர் உடல் முழுதும் வெப்பத்தை அது பரப்பி இருந்தது.

தாத்தா எதுவும் பேசாமல் கஞ்சியை வாங்கிக் குடித்தார். இப்போதைய நிலையில் அவருக்கு தெம்பு நிச்சயம் வேண்டும்.

முருகன் கொடுத்த கஞ்சி உடல் சூட்டை சற்று தனித்தது போல இருந்தது.

“முருகா! நான் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்குப் போறேன். அதுக்கு முன்ன நான் சில விஷயங்களை உன்கிட்ட சொல்லறேன். ஒருவேளை நான் செத்த பிறகு என் பேரன் வந்தாலோ, இல்ல நான் இல்லாதப்ப அவன் வந்தாலோ, அவன்கிட்ட நீ சில விஷயங்களை சொல்லணும். உன்னை விட்டா நான் இங்க வேற யார்கிட்டயும் இந்த பொறுப்பை ஒப்படைக்க முடியாது.” சோர்ந்து அவர் பேசுவதைப் பார்க்க முடியாமல்,

“ஐயா, என்னங்க இப்படி சொல்லிட்டீங்க. நீங்க இன்னும் ரொம்ப நாள் நல்லா இருப்பீங்க. உங்களுக்காக நான் என்ன வேணா செய்யறேங்க” என கண்களில் நீர் வார்த்தான்.

“முருகா! எல்லாரும் ஒரு நாள் சாகத் தான் போறோம். அதுக்காக வருந்தக் கூடாது. ஆனா வாழும் போது நம்ம சந்ததிக்கு நாம என்ன நல்லது செஞ்சோம்னு நினைச்சுப் பார்க்கணும். அது தான் முக்கியம்.” பேசமுடியாமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்தார்.

வாடிய முகத்தோடு முருகன் வெளியேறினான். வெளியே சென்றவன் தன் இடுப்பு வேட்டி மடிப்பில் பதுக்கி வைத்திருந்த செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தான்.

“பெரியையா இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பிருவாங்க.அதுக்கு அப்புறம் நீங்க வாங்க.” சொல்லிவிட்டு உடனே இணைப்பைத் துடித்தான்.

***

வீரா வேலை செய்வது ஒரு ஆராய்ச்சிக் கூடம். கிட்டத்தட்ட விஞ்ஞானிகள் தான் அங்கே இருந்தனர். இவன் புதிதாக அவர்களுடன் இணைத்திருந்தான். அவர்கள் புதுப் புது ஆராய்ச்சி செய்து விஞ்ஞானத்தின் ஆற்றலை வெளியுலகிற்கு காண்பித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களுக்குள்ளேயே பல பிரிவினர்களாகப் பிரிந்து ஆங்காங்கே பல ஊர்களில் வேலை செய்தனர்.

இப்போது வீர் சேர்ந்திருக்கும் டீம் ஒரு புது முயற்ச்சியைக் கையில் எடுத்திருந்தனர். அதாவது அவர்கள் இருக்கும் ஊரில் பெரிய பெரிய மலைகள் மலைக்குகைகள் இருந்தன. அவற்றில் சில காந்த சக்தியை அதிக அளவில் வெளிப்படுத்தும் என அறிந்து அந்த ஆராய்ச்சியில் இறங்கினர்.

வீரா, அதன் வேகம், ஈர்ப்பு விசை போன்றவற்றை துல்லியமாக கணக்கெடுத்துக் கூற வல்லவன். அதனால் அவன் இங்கு சேர்ந்து கொண்டான்.

ஏற்கனவே பல குகைகளும் மலைகளும் ஏறி இறங்கி அவனது வேலையை அவன் கச்சிதமாகச் செய்திருக்க, அன்று அவனுக்குப் புதிய வேலை ஒன்று காத்திருந்தது.

“வீர் இது என்ன இடம் தெரியுமா?” ஒரு படத்தை மானிட்டரில் காட்டி, ஆங்கிலத்தில் அவனுடைய சீனியர் கில்பர்ட் வினவினார்.

“அஃப்கோர்ஸ் கில்பர்ட். இது கிராண்ட் கனியன். கண்டிப்பா வாழ்கைல ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம்.” ஆர்வமாகக் கூறினான்.

“பாத்திருக்கியா?” கில்பர்ட் சூசகமாக வினவ,

“ம்ம்ம்…இன்னும் இல்ல. ஆனா என்னோட ட்ராவல் லிஸ்ட்ல இருக்கு. வெய்ட் வெய்ட்… நாம அங்க போறோமா? அங்க தான் புது ப்ராஜெக்ட்டா?” இப்போது மனதில் ஒரு துள்ளல் வந்தது வீராவிற்கு.

“யே!! மேன்…. நாம அங்க தான் போறோம். காந்த விசை மட்டுமில்ல வீர். அங்க அதுக்கும் மேல நிறைய இருக்கு நாம தெரிஞ்சுக்க. நம்ம சைன்ஸ் ப்ராஜெக்ட் தான் ரேங்க் ஒன் வாங்கும் பாரு. இன்னும் ஒன் இயர் இது தான் நம்ம டார்கெட்.” கில்பர்ட் வீராவின் ஆர்வத்தைத் தூண்டினான்.

“ஐ அம் ரியல்லி எக்சைடெட் கில். வந்ததுலேந்து இப்போ தான் எனக்கு உண்மையான வேலை ஆரம்பம்னு தோணுது. எப்போ கிளம்பறோம்.” தன்னுடைய லேப்டாப்பில் அது சம்மந்தமாக தகவல்களை தேடிக் கொண்டிருந்தான்.

“இன்னும் அப்ரூவல் வரல. வந்ததும் அடுத்த நாளே கிளம்ப வேண்டியது தான். ஹைகிங் இஸ் மை ஹாபி. அங்க நாம ஹைக் பண்ணி போக வேண்டி இருக்கும். சோ நல்லா வார்ம் அப் பண்ணிக்கோ.” கில்பர்ட் சிரித்தான்.

“ஹே கில் … எனக்கும் இப்படி பட்ட ட்ராவல் ரொம்ப பிடிக்கும். நான் அல்ரெடி ஃபிட் தான். டெய்லி என்னோட ஜிம் கன்டினியூ பண்ணிட்டு தான் இருக்கேன். ஜஸ்ட் டேட் மட்டும் சொல்லுங்க. ஐ வில் பீ ரெடி வித் மை திங்க்ஸ்” பதிலுக்கு சிரித்து விட்டு அந்த இடத்தைப் பற்றி தங்களுக்கு வந்திருக்கும் டாகுமென்ட்சை கவனமுடன் பார்வையிட்டான்.

அடி முதல் நுனி வரை அந்த இடத்தைப் பற்றியும், அங்கு இருக்கும் ஆபத்துக்கள், அங்கு செல்லும் முன் என்னென்ன தேவை என்பதையும் கூகிளில் சேகரித்துக் கொண்டான்.

அன்று மதியம் உணவு இடைவேளையின் போது சம்ரக்ஷா அவனுக்குப் போன் செய்தாள்.

“கரெக்டா சாப்பாட்டு டைம்ல எப்படி டி உனக்கு மூக்கு வேர்க்குது. சொல்லு என்ன விஷயம்?” சுட சுட ராவியோலியை போர்கில் குத்தி விழுங்கிக் கொண்டிருந்தான்.

“ என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாம் நெக்ஸ்ட் வீக் ஸ்ப்ரிங் ப்ரேக்கு வெளியூர் ப்ளான் பண்றாங்க டா. நானும் போகணும்” அவனிடம் அனுமதி கேட்டாள்.

ஊரில் இருந்த வரை தாய் தந்தையர் பார்த்துக் கொண்டனர். இங்கு வந்த பிறகு அவன் தான் பார்த்துக் கொண்டான். முன்பு அவளின் மேல் அக்கறை அவ்வளவாக இல்லையென்றாலும் இப்போது அவளது முழு பொறுப்பும் அவன் தான். அதை அவனுமே உணர்ந்திருந்தான். அவளும் வீராவிடம்  சொல்லாமல் எதுவும் செய்வதில்லை.

“ஹே விளையாடறியா. நோ வே! உன்ன தனியா அனுப்புனா வீட்ல நான் தான் திட்டு வாங்குவேன். அதுமில்லாம எனக்கு இன்னிக்கு தான் புது ப்ராஜெக்ட் ஆர்டர் வந்திருக்கு. கிராண்ட் கேனியன்!” அவளிடம் ஆசையாக பகிர்ந்து கொண்டான்.

“வாவ். சூப்பர் டா. இவங்க ப்ளான் பண்ண ப்ளேஸ விட இது செம இடம்.. வீர் நானும் வரேன் டா. எனக்கும் ஒரு மாசம் லீவ் தான். வீட்ல இருந்தா போர் தான் அடிக்கும். நீயோ இவங்க கூட அனுப்ப மாட்டேங்கற. ப்ளீஸ் ப்ளீஸ்..” சாம் கெஞ்சத் துவங்கினாள்.

“இது என்ன ஜாலி டூர்ரா..? அபீஷியல் வொர்க் டி. கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க.” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கில்பர்ட் அருகில் வந்தார்.

கட்டை விரலை உயர்த்திக் காட்டி “ப்ராஜெக்ட் ஆன் இன் ஒன் வீக்” என்றார்.

உடனே வீர் அவளிடம். “இரு அஞ்சு நிமிஷத்துல கால் பண்றேன்” என வைத்தான்.

“வாவ் கில்.. லெட்ஸ் ராக் தி பார்ட்டி” என வெறும் கையால் கிட்டார் வாசித்தான்.

“என்ன கத்திட்டு இருந்த..?” கில் கேட்க,

“சாம் நம்ம கூட வரனும்னு சொல்றா. அவளுக்கு ஸ்ப்ரிங் பிரேக் வருது. நாம எப்படி கூட்டிட்டு போக முடியும்?” அவனிடமே கேட்டான்.

“நூறு பர்சன்ட் கூட்டிட்டு போலாம். நாம நாலு பேர் தான போறோம். சோ அவளும் வரட்டுமே. நோ ப்ராப்ளம்.” அவன் தரப்பில் அனுமதி தந்தான் கில்.

வீரா சற்று யோசித்து சொல்வதாக கூறிவிட்டு சென்றான்.

வீட்டிற்கு வந்ததும் சம்ரக்ஷா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன இப்போ?” ஷூவைக் கழட்டிக் கொண்டே கேட்டான் வீர்.

“என்னையும் கூட்டிட்டு போ. இல்லனா என்னை என் ப்ரெண்ட்ஸ் கூட போக விடு. நீ தான் இங்க பெரியவன்னு நீ அட்வான்டேஜ் எடுத்துக்கற.போடா எரும.” அந்த சிறிய வீட்டில் ஒரு மூலையைத் தேடிக் கண்டு பிடித்து எலி போல் ஒடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவளுக்குக் கோபம் வந்தால் இப்படி ஒரு ஓரத்தில் சென்று அமர்ந்துவிடுவாள்.

அவள் நைட் பேன்ட் டிஷர்ட்டோடும், தூக்கி கட்டிய போனிடைல் முடியும் என அமர்ந்திருந்தது அவனுக்கு சிரிப்பை வரவைத்தது. மனதில் எங்கோ அவள் கியூட்டாக இருப்பாதகத் தோன்றியது.

ஏற்கனவே மனதில் அவளையும் அழைத்துச் செல்லலாம் என ஐம்பது சதவிகிதம் முடிவு செய்திருந்தான். எனவே

“சரி வீட்டுக்கு போன் பண்ணலாம். அவங்க என்ன சொன்னாலும் ஓகே. டீலா?” என்றான். எப்படியும் அவளை தனியே விட்டுச் செல்ல வேண்டாமென்று தான் சொல்வார்கள் என அவனுக்குத் தெரியும்.

அவன் சொன்னது தான் தாமதம், உடனே ஓடிச்சென்று வீட்டிற்கு போன் செய்தாள்.

மாமா மோகனின் செல்லுக்கு அழைத்து, அனைவரிடமும் பேசினாள்.

ஸ்பீக்கரில் போட்டு இருவரும் கதையளந்து கொண்டிருந்தனர்.

“தாத்தா இன்னும் வரலையா?” வீர் கேட்க, மோகனுக்கு மனதில் பதட்டம் வந்தது.

“ஏன் டா உனக்கு போன் பண்ணாரா?” குரலிலேயே வேகத்தைக் காட்ட,

“இல்லையே எனக்கு பண்ணவே இல்ல.அதுனால தான் உங்கள கேட்கறேன்.” வீர் சொல்லவும் மோகனுக்கு நிம்மதி வந்தது.

“அவரு கண்டிப்பா வந்ததும் உனக்கு போன் பண்ண சொல்றேன். வேலை எப்படி போகுது?” பொதுவாக பேச ஆரம்பிக்க,

“மாமா… எனக்கு ஒரு மாசம் இங்க லீவ்..அதுனால..” விஷயத்தை மெல்ல ஆரம்பித்தாள் சாம்.

பிறகு தானும் வீராவுடன் செல்ல வேண்டும் எனக் கேட்க,

“ வீர்.. அவள தனியா விட்டு போறது நல்லதில்ல. உங்க ஆபீஸ்ல ஒத்துக்கிட்டா அவளையும் கூட்டிட்டு போயேன்.” மோகனுடன் சேர்ந்து வேதாவும் சொன்னார்.

“ம்ம்ம்..கேட்டுப் பாக்கறேம்மா. அவ்ளோ ஈசி இல்ல” வேண்டுமென்றே அவளைக் காக்க வைக்க நினைத்தான்.

பேசி முடித்துவிட்டு, இரவு உணவையும் உண்டுவிட்டு இருவரும் உறங்கச் சென்றனர்.

“டேய்! பழி வாங்கிடாத டா.. கூட்டிட்டு போ டா..ப்ளீஸ்” சாம் தன்னுடைய கட்டிலிலிருந்து கொண்டே சொல்ல,

“ஐ வில் ட்ரை மை பெஸ்ட். குட் நைட்” முடித்துக் கொண்டு போர்வையை போர்த்திக் கொண்டு படுத்தான்.

“ச்ச.. ஹார்ட்லெஸ் டீமன்” முனகிக் கொண்டே அவளும் படுக்க,

“காதுல விழுந்துச்சு” வீர் கண்ணை மூடிக் கொண்டே சொன்னான்.

“ஸ்வீட் ட்ரீம்ஸ்னு சொன்னேன் டா.” எதற்கும் இருக்கட்டும் சிரித்து வைத்தாள்.

“உன்னை பத்தி எனக்கு தெரியும் டி பிராட். போய் தூங்கு.” உறங்கிப் போனான்.

“ஓடு வேகமா போ.. நேரம் ரொம்ப கம்மியா இருக்கு காண்டீபா” அவனது முதுகின் பின்னால் துரத்திய அந்தக் குரல். அந்தக் குரல் சொன்னபடியெல்லாம் ஆடினான்.

அது அவனுக்குப் மிகவும் பரிச்சயமான குரல். ஆனால் யார் என்று மூளை சிந்திக்க மறுத்தது.

சிந்திக்க ஆரம்பித்தால் ஓட்டத்தின் வேகம் குறையும். அதனால் யோசிக்காமல் ஓடினான். மீண்டும் அந்த ஒளி தெரிய ஆரம்பித்தது. முன்னை விட இப்போது சற்றுப் பெரிதாத இருந்தது.

இருளான பாதையாக இருந்தது இப்போது அந்த வெளிச்சத்தில் சற்று தெரிய ஆரம்பித்தது.

‘என்ன இடம் இது!?’

‘ஒரு குகை!’