Kanmani unai naan karuthinil niraithen 15

Kanmani unai naan karuthinil niraithen 15

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் – சாரா.

அத்தியாயம் – 15

“இங்க என்ன நடக்குது?” என்ற கேள்வியுடன் சீமா வந்து நின்றதும், திடுக்கிட்டு ஆரா பதறவும், இளா, ஆராவை சுற்றியிருந்த இடது கையை எடுத்து விட்டு, வலது கையை ஆராவின் தோளை சுற்றியே அவளை அணைவாக இறுக்கி பிடித்திருந்தான்.

வேதா, ரோஜா, கிருஷ் மூன்று பேரும், நல்ல பூஜை நேரத்தில் நுழைஞ்சுடுச்சேப்பா இந்த பனி கரடி என்ற அதிர்ச்சியில் நின்றிருக்க,

“வரும்போது கண்ணால் பார்த்து இருப்பியே… அப்பவும் தெரியலையா… என்ன நடந்ததுன்னு?”

இளா அனைத்து பால்களையும் அடித்து விளையாட முடிவெடுத்து, கிரவுண்டில் சிங்கிள் பேட்ஸ் மேன்னாக நின்றான்.

“அது ஒன்னுமில்லை இளா… ஆராவும் நீயும் சோகமா எதோ பேசினது போல இருந்தது அதான்… நானும் கலந்துக்கலாம்னு கேட்டேன்…”

இருவரும் கட்டிபிடித்து இருந்த நிலையை கண்ட எரிச்சலில் தான் இவள் கோபத்துடன் கேள்வி கேட்டாள்.

ஆனால் தப்பு செய்த எண்ணமோ, தயக்கமோ இளாவுக்கு இல்லை…’ என் ஆரா… என் உரிமை’ என்ற பிரபு ஸ்டைல் புரட்சி போராட்டத்தில் வேகமாக அவன் குரல் கொடுக்கவும்.

இதை எதிர்பார்க்காத சீமாவின் குரல் தான். ‘உன் வேகம்… எனக்கு ரொம்ப சோகம்…’ என்று குழைந்து நெளிந்து விட்டிருந்தது.

“இங்க ஒண்ணும் நானும் ஆராவும் விருந்து வைக்கல… மூணாவது மனுஷங்க வந்து கலந்துக்கரத்துக்கு… போயி வந்த வேலைய பாரு…”

“நான் கலந்துக்க வந்தது விருந்துதானே இளா… ஹ ஹ ஹா…” என்று அவளே காமெடி பண்ணி அவளே சிரித்தாள்.

“நீ உன் அத்தை வீட்டுக்கு வந்திருக்க… அவங்க கிட்ட மட்டும் உரிமை கொண்டாடினா… உனக்கு நல்லது…”

சீமாவின் கண், இளாவின் கையிலேயே இருக்க, இது தெரிந்தும் இளாவின் கை ஆராவின் தோளில்லெயே இருந்தது. கையை எடுத்தானில்லை… மாறாக இன்னும் அணைத்திருந்தான்.

இந்த முறை சீமா தான் கொசு மருந்து அடிக்கவெண்டியதாயிற்று… (புகை மூட்டம் யூவர் ஹானர்… )

அதற்குள் இன்னொரு ஆணின் குரல்.

“ஹே… பேப்… ஐ பார்கிட் யூவர் கிட்…” ( பேபி உன் காரை ஓரங்கட்டிட்டு வந்தேன்னு ஸ்டைலா சொல்றாராமா… )

வந்தவனை அப்போதுதான் அனைவரும் ஸ்கேன் செய்தார்கள்.

கருப்பு டீ ஷர்ட்டும்… லோ ஹிப் ஜீன்ஸ் பேண்ட் டும்… முழங்கையிலிருந்து… கைவிரல் வரை நீண்டிருந்தது ஒரு டிராகன் டாட்டூ… புருவத்தில் துவாரமிட்டு ரிங் போட்டிருந்தான்… தலையில் இரு பக்கமும் ஸீரோ கட்டிங் செய்து நடு பிரதேச முடியை நட்டுகொண்டு பம்பலாக நிற்குமாறு ஹேர் ஸ்டைல் வேறு.

“ஓ… டிரைவரா சீமா… போயி முடி வெட்டிட்டு வர சொல்லு அவனை… நல்ல முத்துன பனங்காயை… தலையில கவுத்து வச்சது போல இருக்குது அவன் மண்டை…” வேதா சீரியஸாக கலாய்த்தார்.

“அய்யோ… ஆன்டி… இவன் என்னோட பெஸ்டீ… விக்ரம்… (பெஸ்ட் பிரண்டாமா)… நாங்க இந்த பக்கம்தான் ஒரு பர்த் டே பார்டில இருந்தோம்… அதான் உங்ககிட்ட பேசின அடுத்த டென் மினிட்ஸ்ல… வந்துட்டேன்…” சீமா புளி போட்டு விளக்கினாள்.

“இந்த விக் மண்டையனுக்கு பேரு விக்ரமாம் டி…” கிருஷ் ரோஜாவிடம் கிசு கிசுக்க.

“ரோஜாவோ… அவனும் அவன் பார்வையும்…” முணு முணுத்தாள்.

“அப்ப கண்ணும் டொக்காடி அவனுக்கு…”

“அட நீ வேற கிருஷ்… அவன் நம்ம லட்டுவ பார்வையாலேயே , முழுங்குறான்… நல்லா தூசி தட்டிட்டு… உன் கண்ணை விரிச்சி பாரு…” ரோஜா கடு கடுத்தாள்.

அதற்குள், “ஹூ இஸ் திஸ் டஸ்கி ப்யூட்டி? ஷீ லூக்ஸ் செக்ஸி… ஐ ஜஸ்ட் லவ் ஹெர்…”

அந்த வட்டுருட்டான் மண்டயன்தான்… ஆராவை பார்த்து… வாயிலே வாட்டர் ஃபால்ஸ்ஸை… ஓபன் செய்து விட்டிருந்தான்.

இளா… முறைத்து கொண்டே குமுக்க தயாராக… கிருஷ்… விஜயகாந்த் போல விழிகளில் வெறியேத்தி அமுக்க தயாராக.

“டேய்… யாரை பார்த்து செக்ஸிண்ணு சொல்ற? என்கிட்ட எதாவது… டஸ்க்கு… டுஸ்க்குன்ன… அப்புறம் புஸ்ஸாயிடுவடா புஸ்வாணம் மண்டையா!” ஆராதான் அரங்கத்தை அதிர விட்டிருந்தாள்… ( ஆராவோட ஆறாம் அறிவு ஆன்ல இருக்கும்போது பயபுள்ள சிக்கிட்டான் போல… )

(இதிலிருந்து நமக்கு என்ன தெரியுது? அத்தனை பேருக்கும் அவன் மண்டை மேல இருக்கிற கொண்டை மேலே ஒரு காண்டு… )

ஆரா எகிறி அடித்ததில்… டர்ரான… விக்ரம்… சீமாவின் பின்னே பதுங்க.

“ஹேய் கூல் ஆரா… டேக் இட் ஆஸ் ஏ காம்பிலீமெண்ட்…” சீமாதான் அவனுக்கு உதவிக்கு வந்தாள்.

“இங்க பாரு சீமா… இது குடும்பம்… உன் ப்ரெண்ட் வந்தான்னா… இங்க எப்படி நடந்துக்கனும்ன்னு சொல்லி கூப்பிட்டு வரமாட்டியா… பொறுக்கி மாதிரி பேசறான்… இதே வேற ஒருத்தனா இருந்திருந்தா வகுந்திருப்பேன்… இவன் கூடதான் ராத்திரி பகல் பார்க்காம ஊர் சுத்தறியா?. ”

வேதா குடும்பத் தலைவியாய் ஏரியாவை தன் கண்ட்ரோலிர்க்கு எடுத்துக் கொண்டார்.

“ஓஹ்… ஆன்டி… அவனை தப்பா எடுத்துக்காதீங்க… அவன் போர்ன் அண்ட் ப்ராட்டப் எல்லாம் யூ எஸ்… சோ ஓபன் மைண்ட்டெட்…” சீமா நியாயம் பேசினாள்.

அவள் நியாயாபடுத்தியது கோபமூட்ட… வேதா.

“அமெரிக்காவிலயும்… அம்மாவுக்குதான பொறந்தான்… அங்க இருக்குற நம்மூர்க்காரங்க எல்லாம் அவுந்து விழுகிற டவுசரை போட்டுக்கிட்டு… இப்படித்தான் அரைவேக்காட்டுத்தனமா பேசுறாங்களா?”

“சாரி ஆன்டி… அவனுக்காக நான் சாரி கேட்டுகுறேன்!” வேதாவின் கோபம் தனக்கு நல்லதல்ல… நமக்கு காரியம் ஆக வேண்டும் என்று சீமா சமாதானம் பேசினாள்.

ஆனால் சீமாவின் மனதிற்குள்… இளாவிற்கும்… ஆராவிற்கும் இடையில் ஏதோ ஒரு பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது… அது என்ன என்று தெரியாமல் இங்க இருந்து போகக்கூடாது… என்ற தீர்மானத்திற்கும் வந்து விட்டாள்.

ரோஜா தான்.

“சரி கை கழுவிட்டு வாங்க எல்லாரும் சாப்பிடலாம்… டைம் ஆகிட்டு…”

என்று சூழ்நிலை யை இயல்புக்கு கொண்டு வந்தாள்.

அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கையை சுத்தம் செய்து விட்டு டைனிங் டேபிளில் உட்கார… விக்ரமுடன் சென்ற சீமா… கையை சுத்தம் செய்து கொண்டே காதில் குஸ்… குஸ்… பேசினாள்.

டேபிளுக்கு வந்த விக்ரம்.

“எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க… ஆரா… நீங்களும் தான்…”

“உனக்கு தமிழ் தெரியுமா?” வேதா கேட்க.

“ஆங்… தெரியும் ஆன்டி… நான் பிறந்தது யூ எஸ்… மூணு வயசுலயே ஃபேமிலியோட சென்னையில செட்டில் ஆகிட்டோம்…”

(பின்ன எதுக்குடா… அம்புட்டு பீட்டர்… இங்கிலீஷ் தெரியாத என்னை இங்கிலீஷ்ல டயலாக் எழுத வச்சிட்டியேடா பாவி… உன் தலைமுடி மொத்தமும் தாறுமாறா கொட்ட… எர்வாமாடின் தடவியும் எஃபெக்ட் இல்லாமால் போக… சபிக்கிறென்டா உன்னை. )

“சரி உட்கார்ந்து சாப்பிடுப்பா… ஆனால் தமிழ்லயே பேசு… எனக்கு இங்கிலீஷ் தெரியாது” (ஆமாம்… எனக்கும்தான்)

வேதா மன்னித்ததை செயலில் காட்டினார்.

சீமாவிற்க்கு இப்போதுதான் நிம்மதி பெருமூச்சு வந்தது… அடிக்கடி இளா, ஆராவையும் கவனிக்க தவறவில்லை.

ஆனாலும் சூழ்நிலையில் ஒரு இறுக்கம்… இளாவின் விழிகள் விக்ரமை பார்க்கும் போதெல்லாம் நெருப்பை கக்கின.

அவரவருக்கு வேண்டியதை ரோஜா பார்த்து பார்த்து பரிமாறினாள்… இடையில், ‘மீ… பரங்கி பச்சடி ஸ்வீட்டா செஞ்சிருக்கொம்… இதுக்கு மேல நீங்க சாப்பிட கூடாது… ஊறுகாய் ஒரு ஸ்பூன் தான்’… என வேதாவை கவனிக்க செய்யவும்.

சீமாவின் எண்ண அலைகள் தான் சுனாமியாக சுழன்றடித்தது.

ஓஹோ… இப்படி ஐஸ் வச்சித்தான்… இந்த கிழவிய கைக்குள்ள போட்டுகிட்டியா? அதான் என்கிட்டயே… அந்த கிழவி உனக்கு அவ்வளோ சப்போட் பண்ணினா போல… ஒரு சாலட் செய்ய சொன்னா நீ குறைஞ்சு பொய்டுவியோ… உன்னை இப்போ கவனிக்க நேரமில்லை… இளாவை பார்த்து பெருமூச்சு விட்டாள்… இருந்தாலும் சின்னதா ஒரு பிட் போடுவோம்… ரோஜாவிடம்.

“அக்கா… நீங்கதான் ஆன்டிய… கண்ட்ரோல் பண்ணுவீங்க போல? அவங்களுக்கு புடிச்சதை ஆன்டி சாப்பிடட்டுமே… கிருஷ் கூட அவர் ஒய்ஃப்ப ஒண்ணும் சொல்ல மாட்டேன்றான்… எங்க ஆன்டி ரொம்ப பாவம்… என்னால இந்தக் கொடுமையை பார்க்க முடியல… நீங்க என் வீட்டுக்கு வாங்க ஆன்டி… நான் உங்களை கவனிச்சுக்கிறேன்…”

சொல்லி முடிக்கலை அதற்குள்.

“எங்கம்மாவுக்கு சுகர் இருக்கு… அதோட அசிடிட்டியும் இருக்கு… கவனம் இல்லாமல் சாப்பிட்டா அப்புறம் அவங்களுக்குதான் கஷ்டம்… அது தெரிஞ்சுதான் ரோஜா கண்ணும் கருத்துமா கவனிச்சுக்கிறா… இதுல உனக்கு என்ன கஷ்டம்…” கிருஷ் பொண்டாட்டிக்கு சப்போர்டினான்.

“இதுக்கு பேரு கண்ட்ரோல் இல்லை… அக்கறை. எந்தங்கச்சிக்கு எல்லார் மேலயும் அன்பு காட்ட மட்டும்தான் தெரியும்… மத்தவங்க மாதிரி கண்ட்ரோல் பண்ண தெரியாது” இளா இடித்துரைக்க.

“அண்ணி… மாதாஜி மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காங்க தெரியுமா?என் கிருஷ் அண்ணாவும் அப்படித்தான்… கிண்டல் பண்ணினா கூட மாதா ஜி கிட்ட அன்பா தான் இருப்பாரு… அதோட உனக்கு இருபத்தி அஞ்சு… அண்ணிக்கு இருபத்தி நாலு… அவங்களுக்கு நீதான் அக்கா…”

“அப்படியே… வயசை குறைக்கிறியே நைசா…”

கடைசியாக ஆரா… அவள் பங்குக்கு ஆத்து ஆத்துன்னு ஆத்திவிட்டாள்.

கடைசில சீமா போட்ட பிட்டு… அவளுக்கே ஆச்சு ரிவீட்.

ஆனால் சம்பவம்… சம்பவம்னு சொல்லுவாங்களே அந்த சம்பவத்தில சம்பந்தப்பட்ட வேதாவும், ரோஜாவும் வாயவே திறக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டதுதான் இருந்ததிலேயே பெரிய அவமானமாகிவிட்டது சீமாவிற்கு.

“ஹி ஹி ஹி… சும்மா கிண்டலுக்கு கேட்டேன்… எனக்கு தெரியாதா ரோஜா வை பத்தி…” வேறு வழியில்லாமல் இளித்து சமாளித்தாள் சீமா.

ஒரு வழியாக சீமாவினால் தோன்றிய இறுக்கம்… அவளை கழுவி ஊத்தியதும் களைய.

ஆனால் இவ்வளவு விஷயம் இங்க போயிட்டு இருக்க… சத்தம் போடாமல் மிக்ஸர் சாப்பிட்டுட்டு… (மன்னிக்கவும்) மிச்ச மீதியை சாப்பிட்டுட்டு இருந்தான் விக்ரம்… ( அடடே… ஆராவை பார்த்தே அரண்டுட்டான் போலிருக்கே)

ஆரா.

“மாதாஜி… சாப்பாடு செம்ம… ஆனா… மொட்ட மாடில சாப்பிட்டு இருந்தா நான் இன்னும் அதிகமா சாப்பிட்டு இருப்பேன்…”

“ஆமாண்டி… இப்ப ரொம்ப கம்மியா கொட்டிக்கிட்ட… அப்ப மாடியில சாப்பிட்டு இருந்தா சட்டி வட்டி எல்லாத்தையும் மொத்தமா முழுங்கியிருப்பியாடி சோத்து மூட்டை…”

“எத்தனை தடவைடா உனக்கு சொல்லுறது… லட்டு சாப்பாட்டு மேல கண்ணு வைக்காதன்னு… ஆளு வளர்ந்தியே அறிவு வளர்ந்துச்சா உனக்கு… முதல்ல உன் காலடி மண்ணெடுத்து சுத்தி போடணும் என் பொண்ணுக்கு…” .. வேதா கொந்தளிக்க.

“நான் ஷூ தானே போடுறேன்… மண்ணுக்கு எங்க போவீங்க…” .. கிருஷ் அலப்பறை கொடுத்தான்.

“நீங்க கவலைபடாதீங்க மீ… கிருஷ் தூங்கிறப்ப… ஒரு பிடி மண்ணை கொண்டுபோய்… அவரு காலிலேயே தேய்ச்சு எடுத்து தரேன்… நீங்க லட்டுக்கு சுத்தி போடுங்க…”

என்ற ரோஜாவின் பதிலுக்கு ஆரா… கிருஷிடம் பழிப்பு காட்ட… காண்டானது கிருஷ் இல்லை… சிலுக்கு தான்.

ஆத்தாடி… இந்த சோத்து குண்டானை கிண்டல் பண்ணினா… சொந்த புள்ள… புருஷன்னு கூட பார்க்காமல் வரிஞ்சு கட்டிக்கிட்டு மல்லுக்கு நிக்குறாளுக… நம்மள அத்தனை பேர் ரவுண்ட் கட்டியும்… ஒரு பார்வை கூட நமக்கு ஆதரவா பார்க்கலையே.

(இதுல பாரு சிலுக்கு… வழக்கமா இவங்க டார்கெட்டு கிருஷ் தான்… இன்னைக்கு நீயா வந்து தொக்கா சிக்கிக்கிட்ட… சின்னா பின்னமாகரத்துக்கு முன்னாடி சீக்கிரமா தப்பிச்சு பொய்டுடி ராசாத்தி… )

வந்த உடனே பொய்டலா முன்னு தான் நினைச்சேன்… இருங்கடி உங்க எல்லாரையும் வச்சி செஞ்சிட்டு போறேன்… அப்ப தெரியும் இந்த சீமா யாருன்னு! அதற்கு வலு சேர்க்கும் விதமாக விக்ரமின் பார்வை அவ்வப்போது… ஆராவை திருட்டுத்தனமாக கபளிகரம் செய்ய… அதைப்பார்த்து சீமாவின் மனது வேகமாக கணக்கு போட்டது.

சாரா.

 

error: Content is protected !!