Vannam Konda vennilave

Vannam Konda vennilave

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 3

1982 அன்று

Government Hospital Coimbatore.

நீட்டாக பின் செய்து உடுத்தியிருந்த காட்டன் புடவை, வெள்ளை கோட், கையில் ஸ்டெத் என அந்த காரிடோரில் நடந்து வந்து கொண்டிருந்தாள் குந்தவி. நீண்ட பின்னல் அவள் இடை தழுவி நின்றது. முதல் வேலை நியமனம் கோயம்புத்தூரிலேயே கிடைத்தது. தங்குவதற்கு குவாட்டர்ஸ் கொடுத்திருந்தார்கள். அதனால் எந்த பிரச்சனையும் இருக்கவில்லை.

அப்பா, தங்கை என அளவான குடும்பம் குந்தவியுடையது. அம்மா இவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதே இறந்து போனார். அதன் பிறகு அப்பா வேல்முருகன் தன் பிள்ளைகளுக்காகவே இன்று வரை வாழ்பவர். வசதியான குடும்பம் என்பதால் நம்பிக்கையானவர்களை வேலைக்கு வைத்து பிள்ளைகளை ஒரு குறையுமில்லாமல் வளர்த்தார்.

என்ன, கொஞ்சம் கண்டிப்பான மனிதர். தாயில்லாப் பிள்ளைகளை, அதுவும் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு தனக்கிருப்பதாலோ என்னவோ கடினமாக மாறிப்போனார். படிப்பு தான் அவர் உயிர் நாடி. பெண்பிள்ளைகள் என்று எத்தனை கட்டுப்பாடு விதித்தாரோ, அதே அளவு ஆண்களுக்கு சமமாக பெண்களும் படிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

முதல் முறையாக இங்கே குந்தவியை பார்க்க வந்த போது மனிதர் அழுது விட்டார். குந்தவிக்கும், தங்கை மல்லிகாவிற்கும் ஆச்சரியம் பிடிபடவில்லை. இந்த கல்லுக்குள்ளே இத்தனை ஈரமா என்று வியந்து போனார்கள். குந்தவிக்கும், மல்லிகாவிற்கும் இடையில் ஆறு வருடங்கள் வித்தியாசம். அதனால் தங்கை என்பதை விட, தன் பிள்ளை போலவே பார்த்துக் கொண்டாள் குந்தவி.

இதழில் புன்சிரிப்புடன் அத்தனையையும் அசைபோட்டபடி ஸ்டாஃப் ரூமிற்கு போய்க்கொண்டிருந்தாள். அன்று பி டி யில் டியூட்டி. கொஞ்சம் களைப்பாக இருந்தது. ஒரு காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் போல தோன்றவே, சரி பர்ஸை எடுத்துக் கொண்டு போகலாம் என்று எண்ணமிட்டபடி நடந்தவளை கலைத்தது அந்தக் குரல்.

ஹலோ டாலி.” அந்தக் குரலை சட்டென்று இனங்கண்டவள்,

ப்ரபா!” என்றாள் ஆச்சரியமாக.

டாக்டர் அம்மா ரொம்ப பிசியோ?”

என்ன ப்ரபா, சொல்லாம கொள்ளாம வந்து நிக்கிறீங்க. என்னால நம்பவே முடியலை.”

ம்பாக்கணும் போல தோணுச்சு, அதான் கிளம்பி வந்துட்டேன்.” பிரபாகரன் முகத்தில் அத்தனை சோர்வை இதுவரை பார்த்திராதவள்,

ப்ரபா, ஏதாவது பிரச்சனையா? விஜயா கல்யாணத்துல ஏதாவது சிக்கலா?” 

இல்லை, பிரச்சினை எல்லாம் இல்லை. கொஞ்சம் பேசணும் குந்தவி, ட்யூட்டி முடியுற டைம் தானே, வெளியே போலாமா?”

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இதோ ஓடி வந்தர்றேன்.”

வெளியே வந்தவன் தன்ஃபியட் பத்மினியை நோக்கி நடந்தான். எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த அந்தக் கார் என்னைப் பார், என் அழகைப் பார் என்று நின்றிருந்தது.

பிரபாகரன் நல்ல கெட்டிக்காரப் பையன். சின்ன வயதிலிருந்தே படிப்பில் அத்தனை ஆர்வம். அப்பா சாதாரண ஆசிரியராக இருந்து இறந்து போனார். அதனால் அம்மா காந்திமதிக்கு அப்பாவின் பென்ஷன் வந்தது. ஒரேயொரு தங்கை விஜயா. பையனின் ஆர்வம் பார்த்து அம்மா வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி மகனை படிப்பித்தார். மெரிட்டில் மெடிக்கல் ஸீட் கிடைத்தது

பிரபாகரன் அத்தோடு நிறுத்தி விடவில்லை. ‘கார்டியோலோஜிஸ்ட்என்பது அவன் கனவு. ‘எம்பிபிஎஸ்’ முடித்த கையோடுஎம்எஸ் கார்டியோலோஜி’ பண்ண ஆரம்பித்து விட்டான். அதை முடித்த போது அதே யூனிவர்ஸிட்டியே அவன் திறமை பார்த்து அவனை பகுதி நேர விரிவுரையாளராக சேர்த்துக் கொண்டார்கள். பல தனியார் மருத்துவமனைகளிலும் வளர்ந்து வரும் அந்த இளம் இதய நோய் நிபுணருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டான்.

வாழ்க்கைத்தரம் வெகுவாக உயர்ந்தது. இருந்தாலும் குந்தவியின் மேல் அவனுக்கிருந்த நேசமும், பாசமும் மாறவில்லை. தங்கை விஜயாவிற்கு நல்ல பெரிய இடத்திலேயே டாக்டர் மாப்பிள்ளை பார்த்திருந்தான். நல்ல சீர்வரிசைகளோடு எந்தக் குறையும் இல்லாமல் அடுத்த வாரம் கல்யாணம் நிச்சயம் ஆகியிருந்தது.

போகலாமா ப்ரபா?” குந்தவியின் குரல் கலைக்க நிமிர்ந்து பார்த்தவன், ஒரு சோர்வான சிரிப்புடன் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.

என்னாச்சு ப்ரபா? ஏதாவது சொல்லுங்களேன். உங்களை இப்படி பாக்குறதுக்கு கஷ்டமா இருக்குப்பா.”

சற்று சந்தடியற்ற சாலை ஓரத்தில் காரை நிறுத்தியவன், அவள் தோள் சாய்ந்து கொண்டான். மென்மையாக அவன் தலை கோதியவள், அதன் பிறகு எதுவும் பேசவில்லை. எதுவாக இருந்தாலும் அவன் வாயிலிருந்து வரட்டும் என்று மௌனமாகவே இருந்தாள்.

டாலி!”

ம்…”

வாழ்க்கையில மனுஷனுக்கு காசு, பணம் வரக்கூடாது.”

ஏன்ப்பா?”

மாறிப் போயிடுறான், புத்தி மாறிப் போகுது.”

என் ப்ரபா மாறிடுச்சா என்ன?” நிமிர்ந்து அவள் கண்களுக்குள் ஆழமாகப் பார்த்தவன்,

உன் ப்ரபா அப்படி மாறினா அவன் செத்துப் போய்ட்டான்னு அர்த்தம் குந்தவி.” அவன் வாயை சட்டென்று மூடியவள்,

என்ன பேச்சு ப்ரபா? இதை சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா?”

வாழ்க்கையில எல்லாம் கிடைச்சிருச்சு, நிம்மதி தொலைஞ்சு போச்சு. என் டாலிக்கிட்ட அது கிடைக்கும்னு வந்திருக்கேன் குந்தவி.” அவனை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவள் எதுவும் பேசவில்லை.

ஏதாவது பேசு குந்தவி.”

எதுவும் பேச வேணாம். நீங்க அமைதியா இருங்க. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அது கடந்து போகும் ப்ரபா.”

அம்மாவே இப்படி மாறிப் போவாங்கன்னு நினைச்சுக் கூடப் பாக்கலை குந்தவி.”

ம்…” அவன் தலையைக் கோதியபடி மௌனமாக இருந்தாள்.

பணம் பணம்னு பறக்குறாங்க. நாம என்ன பரம்பரை பணக்காரங்களா? இல்லையே. ஆனா ஆண்டவன் இன்னைக்கு எல்லாத்தையும் குடுத்திருக்கானே. அவங்களுக்கு நான் என்ன குறை வெச்சிருக்கேன். விஜயாக்கு அப்பா இல்லாத குறை தெரியக் கூடாதுன்னு ஒவ்வொன்னா பாத்துப் பாத்து பண்ணுறேன். இதுக்கப்புறமும் எங்கிட்ட இருந்து என்ன எதிர்பாக்கிறாங்க?”

பொண்ணு பாத்திருக்காங்களா?” சட்டென்று நிமிர்ந்தவன், அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.

எப்படி கண்டு பிடிச்சே குந்தவி?”

இதுக்கு எதுக்கு அம்மாவை குத்தம் சொல்லுறீங்க? இது இயற்கை தானே ப்ரபா. பையன் படிச்சு முடிச்சு, கை நிறைய சம்பாதிக்கும் போது அடுத்ததா கல்யாணம் பண்ணி பாக்கனும்னு எல்லா அம்மாக்களும் நினைப்பாங்க தானே.”

பையன் மனசுல ஒரு பொண்ணு இருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறமுமா குந்தவி?” இப்போது குந்தவி ஆச்சரியப்பட்டுப் போனாள்.

எப்படித் தெரியும் ப்ரபா?”

என் அலமாரியில இருந்த உன் ஃபோட்டோவை விஜயா பாத்துட்டா. அம்மாகிட்ட சொல்லப் போனா. நானும் தடுக்கலை. எப்ப இருந்தாலும் தெரிய வேண்டியது தானே, சொல்லட்டும்னு விட்டுட்டேன்.”

…”

ஏய் டாலி! நீ ஏன் அதுக்கு மூட் அவுட் ஆகுறே.” அவளை தன்னை நோக்கி இழுத்து அணைத்தவன், அவள் கூந்தலுக்குள் முகம் புதைத்துக் கொண்டான்.

ப்ரபாநடு ரோட்டுல, என்ன இப்படி…”

டோண்ட் கெயார் டாலி.”

ப்ளீஸ் ப்ரபா…”

நோ! லெட்டர் போடு உன் பாடி கார்ட் ரெண்டு பேருக்கும்.”

எதுக்கு?”

வரச் சொல்லு அந்த தடியன்களை, நான் பேசனும்.” வாய் பேசினாலும், பிடிவாதமாய் அவள் கழுத்து வளைவில் குடியிருந்தான்.

என்ன பேசப் போறீங்க? அதுதான் அன்னைக்கு பாத்து பேசினீங்களே.”

ஆமா! பெருசா பேசினானுங்க. ஏதோ வில்லனை பாக்குற மாதிரி பாத்தானுங்க.”

நீங்க வில்லன் மாதிரி தான் இருக்கீங்களோ என்னவோ?”

அப்படியா அம்மணி! உங்களுக்கு இப்போ நான் ஹீரோ ஆகிக் காட்டட்டுமா? பெர்மிஷன் குடுக்குறீங்களா?”

ஐய்யைய்யோ, இதுதான் வாயைக் குடுத்து வாங்கிக் கட்டிக்கறதா?” அவள் சந்தேகம் கேட்க,

நீ இன்னும் குடுக்கவே இல்லையே டாலி!” பதில் வில்லங்கமாக வந்தது.

“….” மௌனமே பதிலாக வர, சிரித்தவன்

என்ன பெர்ஃப்யூம் இது? வித்தியாசமா இருக்கு.” என்றான் பேச்சை மாற்றும் விதமாக.

தமிழ் சிங்கப்பூர் போனப்போ எனக்காக வாங்கிட்டு வந்தது.”

குந்தவி! தமிழையும், மாறனையும் வரச்சொல்லி லெட்டர் போடு. நான் பேசணும்.”

தமிழோட மில்லுல ஃபோன் இருக்கு ப்ரபா, எதுக்கு இப்போ அவசரமா…”

வசதியாப் போச்சு. நம்பர் குடும்மா, நான் பேசுறேன். என் மச்சினனுங்க வரட்டும். வந்து ஒரு வார்த்தையெஸ்ன்னு சொல்லட்டும்.”

எதுக்குயெஸ்‘?”

நம்ம கல்யாணத்துக்கு.”

ப்ரபா…!”

நான் முடிவெடுத்துட்டேன் குந்தவி, யாருக்கும் சொல்ல வேணாம். ரிஜிஸ்டர் மெரேஜ் பண்ணிக்கலாம்.”

இது தப்பு ப்ரபா.”

எனக்கும் புரியுது, ஆனா என்ன பண்ணச் சொல்லுறே? உங்கப்பாவைத் தான் சமாளிக்கறது கஷ்டம், என் சைட்ல எந்தப் பிரச்சினையும் வராதுன்னு நம்பினேன். எங்கம்மா போற போக்கு எனக்கு சரின்னு படலை.”

அதுக்காக இப்படி முடிவெடுக்கலாமா? நம்மளை கஷ்டப்பட்டு வளத்தவங்களுக்கு நாம கஷ்டத்தை கோடுக்கலாமா ப்ரபா?”

அவங்க நம்மளை கஷ்டப் படுத்துறாங்களே குந்தவி.”

தாங்கிக்கலாம், உங்களையும், என்னையும் பெத்தவங்க தானே. ஒரு கட்டத்துல அவங்களே புரிஞ்சுக்குவாங்க. அதுவரைக்கும் காத்திருக்கலாம்.”

பேரன், பேத்தி பாக்குற வயசிலதான் பிள்ளை குட்டியே பெத்துக்கலாம், பரவாயில்லையா?”

பரவாயில்லை, சமாளிக்கலாம்.” அவள் சிரிக்க

நீ சமாளிப்ப, என்னால முடியாது.” அவன் பிடிவாதமாக நிற்க, வாய் விட்டு சிரித்தவள்,

அப்போ அம்மா பாக்குற பொண்ணை கட்டிக்கோங்க.” என்றாள்.

அடிங்உன்னை பேசவிட்டு வேடிக்கை பாக்குறேன் இல்லையா? நீ இதுவும் பேசுவே, இதுக்கு மேலேயும் பேசுவே.” அதற்கு மேல் அவள் பேசவே இல்லை. அந்த இதயநோய் நிபுணரின் இதயத்திற்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தாள் குந்தவி.

                                **    **    **    **

2018 இன்று.

இரவு ஒன்பது மணி. தமிழ்ச்செல்வன் டின்னரை முடித்து விட்டு ஓய்வாக உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் உமா. ஏதோ டிஸ்கவரி சேனலில் மூழ்கி இருந்தாள்.

ஆரா…”

இதோ வந்துட்டேன்.” சமையல் கட்டிலிருந்து குரல் வந்தது

உமா.”

என்னப்பா?”

அத்தையோட பேசினியாம்மா?”

ம்பேசினேன்பா, எதுக்கு கேக்குறீங்க?”

சுதா வந்திட்டானாம், சொன்னாங்களா?”

ம்…”

அத்தை வீட்டுக்கு போகலாமாம்மா?”

நீங்க போயிட்டு வாங்கப்பா.”

ஏன்டா? அப்படி என்னம்மா பிரச்சினை உனக்கும், சுதாவுக்கும்?”

பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லைப்பா.”

அப்போ ஏம்மா அத்தை வீட்டுக்கு வர மாட்டேங்குறே?”

“…..”

இன்னைக்கா? நேத்தா? எத்தனை வருஷம் ஆச்சு? குந்தவி எவ்வளவு வருத்தப்படுறா தெரியுமா?”

அத்தையை ஹாஸ்பிடல்ல போய் பாக்குறேன் தானேப்பா?”

அப்போ வீட்டுக்கும் போய் பாக்கலாமேம்மா.” எதுவும் பேசாமல் டீ வி யை ஆஃப் பண்ணி விட்டு தனது ரூமிற்குள் சென்று விட்டாள் உமா. மௌனமாக வந்தமர்ந்த ஆராதனா

எதுக்குங்க அவளை வற்புறுத்துறீங்க? விடுங்க, அவளுக்கா எப்ப தோணுதோ அப்ப போகட்டும்.”

ஏதோ உமா மனசு காயப்படுற மாதிரி நடந்திருக்கு ஆரா.”

ம்ஆமா! சுதாவோட பாட்டி ஏதாவது சொல்லி இருப்பாங்களாக்கும். இவ பிடிவாதம் தான் நமக்கு தெரியுமே.”

இல்லைம்மா, உமா அந்த அம்மாவையெல்லாம் கணக்குல எடுத்துக்கிற ஆளே இல்லை. அந்த அம்மா பேசின பேச்சுக்காக இவ குந்தவி வீட்டுக்கு போகாம இருக்க மாட்டா.”

சரி அதை விடுங்க, சுதாவை போய் பாக்கலாமா?”

ம்நாளைக்கு ஈவ்னிங் மில்லுல இருந்து அப்படியே ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்திடலாம்.”

சரிங்க.” ஆராதனா நகர்ந்து விட, யோசனையில் ஆழ்ந்தார் தமிழ்ச்செல்வன்.

அதே நேரம் உமாவும் தன் ரூமில் உட்கார்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்து இருந்தாள். தன் மனதுக்கு மிகவும் நெருக்கமான அத்தை. தனக்கு ரோல் மாடலாக இருக்கும் அத்தை. அவரைப் போல படித்து பெரியகைனோகோலோஜிஸ்ட்ஆக வரவேண்டும் என்று ஆசை வைத்து, மருத்துவத் துறையை தெரிவு செய்தாள்.

ஆனால் அந்த அத்தையின் வீட்டிற்கு அவள் செல்வதில்லை. ஃபோனில் அடிக்கடி பேசுவாள். பார்க்க வேண்டும் போல இருந்தால் ஹாஸ்பிடல் போய் பார்த்துவிட்டு வருவாள்

வீட்டுக்கு வாயேன் உமா.” அத்தை ஆசையாக அழைக்கும் போதெல்லாம் வலிக்கும். போய் விடலாமா என்று தோன்றும். ஆனால் தன்னை தர தரவென்று இழுத்துக் கொண்டு வந்து வீட்டிற்கு வெளியே விட்ட அந்த உருவத்தை நினைக்கும் போது மனம் கடினப் பட்டு விடும். மனதிற்குள்,

வருவேன் அத்தை, நேரம் வரும்போது உங்கள் வீட்டிற்கு நிச்சயம் வருவேன்என்று நினைத்துக் கொள்வாள்.

சிந்தனை வசப்பட்டு இருந்தவளை தொலைபேசி கலைத்தது. எடுத்துப் பார்க்க, அத்தை என்றது. குந்தவி அழைத்துக் கொண்டிருந்தார். தொடர்பை இணைத்தவள்,

சொல்லுங்க அத்தைஎன்றாள்.

உமா, நீ கேட்ட புக் கிடைச்சிருச்சு. இப்போ வீட்டுலதான் இருக்கு. நாளைக்கு குடுத்து அனுப்பவா?”

இல்லை அத்தை, நாளைக்கு உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கோயிலுக்கு வருவேன். மகேஷ் கிட்ட குடுத்தனுப்புங்க. நான் வாங்கிக்கறேன்.”

சரிடா, இப்பவும் உங்க வீட்டுக்கு வந்து வாங்கிக்கறேன்னு சொல்ல மாட்டே இல்லை?”

அத்தைப்ளீஸ்…”

சரி விடு, என் மனசுல ஆயிரம் ஆசை இருந்து என்ன பண்ண? ஆண்டவன் விதிக்கனுமே. மகேஷ் கிட்ட குடுத்தனுப்புறேன். கே டா, பை, குட் நைட்.”

குட் நைட் அத்தை.” ஃபோனை தூக்கி கட்டிலில் போட்டவள் தானும் அப்படியே சரிந்தாள். தூக்கம் வருவேனா என்று கண்ணாமூச்சி காட்டியது.

                                 **    **    **   **    **

அந்த பிள்ளையார் கோயில் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தியவள், உள்ளே சென்றாள். மகேஷிற்கு ஒரு மெஸேஜை அனுப்பி விட்டு காத்திருந்தாலும் கண்கள் மட்டும் அந்தத் தெருவையே அளந்தது. மகேஷ் குந்தவியின் இரண்டாவது பையன். சுதாகரனுக்கும், மகேஷுக்கும் மூன்று வருடங்கள் வித்தியாசம்.

கண்கள் ஒரு எதிர்பார்ப்போடு காத்திருந்தது. உமா உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் போது அத்தையின் வீடு தெளிவாகத் தெரிந்தது. க்ரில் வேலைப்பாடு கொண்ட கேட்டும், அதை அடுத்தாற்போல இருந்த ரோஜாத் தோட்டமும் ஏதேதோ எண்ணங்களை ஞாபகப்படுத்தியது.

மகேஷுக்கும், உமாவிற்கும் இடையில் ஒரு அழகான நட்பு உண்டு. பெண் பிள்ளைகள் இல்லை என்பதால் உமா அந்த வீட்டின் செல்லப்பிள்ளை. குந்தவி மட்டுமல்ல, பிரபாகரனும் அப்படித்தான். ஆனால் சுதாகரன் மட்டும் விதிவிலக்கு.

சுதாகரன், அவன் பாட்டி காந்திமதியின் செல்லம். பாட்டி செய்வது பிழை என்று தெரிந்தாலும், அத்தனை சீக்கிரத்தில் வாயைத் திறந்து பாட்டியை எதுவும் சொல்ல மாட்டான். கொஞ்சம் பொறுமையும், நிதானமும் இருக்கும். மகேஷ் அதற்கு நேர் எதிர். மனதில் தோன்றினால் அடுத்த நிமிடம் வார்த்தையாக வந்துவிடும். தயவு தாட்சண்யம் மருந்திற்கும் கிடையாது

அத்தையின் வீட்டு கேட்டை மகேஷ் திறப்பது தெரிந்தது. கையில் அவள் கேட்ட புத்தகம். யாரோ அழைத்திருப்பார்கள் போலும், திரும்பி நின்று ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

யாராக இருக்கும்?’ சிந்தனை பலவிதமாக ஓட தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள் உமா.

மகேஷ் அப்போதுதான் எழுந்திருப்பான் போல, அவசரமாக எடுத்து மாட்டிய டெனிமும், டீ ஷர்ட்டுமாக இருக்க, அவனோடு கூட வருவது சு..தா..கர்!

உமா ஒரு கணம் இமைக்க மறந்து பார்த்திருந்தாள். இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது உமா சுதாகரனைப் பார்த்து. அவன் ஊருக்கு வரும் போது இவள் இருப்பதில்லை, இவள் வரும் போது அவன் இருப்பதில்லை

காலையிலேயே எழுந்து குளித்திருப்பான் போலும். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தான். அவனும் கோவிலுக்குத்தான் வர ரெடியாகி இருந்திருப்பானாக இருக்கும். இரண்டு பேரும் பேசிக் கொண்டே வந்தார்கள். மகேஷ் ஏதோ சொல்லி அட்டகாசமாக சிரிக்க, இவன் எப்போதும் போல ஒரு அமைதியான புன்னகையை சிந்தினான்

கல்லுளி மங்கன்மனதிற்குள் அவனை திட்டினாலும், கண்கள் அவனை அளவெடுத்தது. இன்னும் கொஞ்சம் முறுக்கேறியிருந்த உடம்பு, முகத்தில் படிப்பிற்குண்டான ஒரு களை, நடையில் ஒரு கம்பீரம், ஆனால் என்ன, முகம் மட்டும் எப்போதும் போல மனதில் இருப்பதைக் காட்டவில்லை. அது எப்படித்தான் அவனால் முடிகிறதோ, உமா ஆச்சரியப்பட்டுப் போவாள்

இருவரும் கோவிலை நெருங்கி இருந்தார்கள். இவளைப் பார்த்த மகேஷ் அங்கிருந்தே கையை அசைத்துஹாய்என்றான். பதிலுக்கு இவள் சிரிக்க, சுதாகரனின் ஆழ்ந்த பார்வை ஒன்று உமாவை உச்சி முதல், உள்ளங்கால் வரை ஆராய்ந்தது. மௌனமாக தலையைக் குனிந்து கொண்டாள். அருகில் வந்த மகேஷ்,

குட்மார்னிங் உமாஎன்றான்.

குட்மார்னிங் மகேஷ்.”

அவன் கூட பேசேன்டிமகேஷ் சொன்னதுதான் தாமதம், உமா மறுப்பாக தலையசைக்க,

டேய் அண்ணா!” அவர்களை கடந்து போய்க் கொண்டிருந்த சுதாகரனை சத்தமாக அழைத்தான் மகேஷ். அவன் இவர்களை திரும்பிப் பார்க்க,

உமா உங்கிட்ட பேசனுமாம்என்றான் சத்தமாக.

உமா இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று மகேஷின் வாயை தன் கையால் மூடியவள், தவிப்புடன்இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லைஎன்பது போல சுதாகரனைப் பார்த்தாள்

நின்று, நிதானமாக ஒரு நொடி அவளைப் பார்த்தவன் கண்களில் சிரிப்பு வந்து போனது. திரும்பி நடந்துவிட்டான். உமா மலைத்துப் போனாள்.

ஏன்டா இப்படி பண்ணினே?” கோபமாக அவள் கேட்க,

சும்மா போடி, எத்தனை நாளைக்குத் தான் இப்படி ரெண்டு பேரும் முறைச்சிக்கிட்டே நிப்பீங்க?”

டேய் மகேஷ், உங்கண்ணா சிரிச்சா மாதிரி இருந்துச்சு டா.”

ஏன்டீ, அவன் சிரிக்க மாட்டானா?”

சிரிப்பாராயிருக்கும். ஆனா என்னைப் பாத்து சிரிக்க மாட்டாரு.”

ஏன், நீ மட்டும் அவனைப் பாத்து சிரிச்சிருக்கயா?”

எதுக்குடா நான் சிரிக்கனும், எதுக்கு நான் உங்கண்ணனை பாத்து சிரிக்கனும்?” அவன்மேல் பாயாத குறையாக அவள் கேட்க,

அப்படி என்னடி அவன் பண்ணிட்டான்? பாட்டி உன்னை திட்டினாங்க, தப்புதான் இல்லேங்கலை, ஆனா அதுக்கு நீயும் பாட்டியை திருப்பி சத்தம் போட்டே. அந்தக் கோபத்துல உன்னை வீட்டுக்கு வெளியே கொண்டு வந்து விட்டுட்டான். இது ஒரு பெரிய விஷயமா உமா?” சற்று நேரம் மௌனமாக இருந்தவள்,

பாட்டியை நான் திட்டினேன்னு என்னை வெளியே துரத்தினாரே, என்னையும் தான் உங்க பாட்டி திட்டினாங்க, அதுக்கு என்ன பண்ணினார் உங்கண்ணன்?”

ஏய் உமா, உனக்குத்தான் தெரியுமில்லை, பாட்டின்னா அவனுக்கு ஸ்பெஷல்டீ, அம்மாவை பாட்டி திட்டினாலே கேட்டுட்டு சும்மா உக்கார்ற ஆள்டீ அவன்.”

அப்போ பாட்டிதான் அவருக்கு ஸ்பெஷலா? உங்கம்மாவை திட்டினா கேட்டுக்கிட்டு இருக்கட்டும், எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. ஆனா என்னைஎன்னைதிட்டும்…” கண்கள் கலங்க, வார்த்தைகள் தடுமாற விம்மியவள் மகேஷின் கையிலிருந்த புத்தகத்தை பிடுங்கிக் கொண்டு ஸ்கூட்டியை நோக்கிப் போய் விட்டாள். விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான் மகேஷ்.

கோயில் பிரகாரத்தை சுற்றி வந்த சுதாகரன் தூண் மறைவில் நின்றபடி இவர்கள் சம்பாஷனையை கேட்டுக் கொண்டிருந்தான். கண்ணீரோடு செல்பவளை கவலையோடு பார்த்திருந்தாலும், அவன் இதழ்களில் ஒரு சின்னப் புன்னகை முளைத்திருந்தது.

 

error: Content is protected !!