Kanmani unai naan karuthinil niraitthen 14

Kanmani unai naan karuthinil niraitthen 14

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்

– சாரா

அத்தியாயம் – 14

கட்டி புரண்டு சண்டை போட்டு கொண்டிருந்த இருவரையும் கண்டதில் கடுப்பான கிருஷ்,

“ச்சை… எருமைங்களா… சண்டையை நிப்பாட்டுங்க…”

இளா வும், ஆரா வும் திரு திருவென முழித்தபடி எழுந்து நிற்க,

“டேய் இளா…அறிவில்ல உனக்கு… எருமை கிடா வயசாகுது இன்னும்… இந்த எருமை கன்னு குட்டி கூட சண்டையை போட்டுகிட்டு உருல்ற…”

கையில் அகப்பட்ட  டவலை எடுத்து இளாவினை கிருஷ் ரெண்டு அடி வைத்தான்…

“டேய் கிருஷ் அண்ணா..எதுக்குடா என் இளா வை அடிக்கிற?”

“என்னது…டேய்…… யா? வயசில பெரியவன்னு மரியாதை இருக்கா? வாடா… போடான்னே… வாயை தச்சிடுவேன்டி…”. அவளையும் துண்டாலயே முதுகில் ரெண்டு வைத்தான் கிருஷ்,

ஆரா ரூமுக்கு வெளியே ஓடி.. வேதாவை அரணாய் கட்டிக் கொண்டாள்,

“பாருங்க…மாதாஜி கிருஷ் அண்ணன் என்னை அடிக்க வரான்.”

ஆரா கோபமாக இருக்குமபட்சத்தில் மானே… தேனே…மாதிரி… வாடா போடா… எல்லாம்  இடையில் வாயில் வரும்… வேதா அவரது செல்ல லட்டுவை கண்டுகொள்ள மாட்டார்..மாறாக அவ வாடா போடான்னு  கூப்பிடற அளவுக்கு என்ன பண்ணின என்று கிருஷிர்க்கு தான் பாட்டு விழும்,

வேதாவிடம் எஃபெக்ட் கம்மியாக இருக்கவும்,

“   என்னை மட்டும் அடிக்கல மாதா ஜி இளாவையும் அடிச்சான்… “

வஞ்சனையின்றி போட்டு கொடுத்தாள்,

“ஏன் ரெண்டு பேரையும் அடிச்சான்?”

எதிர் பார்த்த ரிசல்ட்… வேதாவிடம் இருந்து,

நாங்க ரெண்டு பேரும் கட்டி புடிச்சு கீழே உருண்டோமா? அதைப் பார்த்து… நாங்க மட்டும் சந்தோஷமா இருக்கொம்னு பொறாமைபட்டு தீவிரவாத  தாக்குதல் நடத்திட்டான் மாதா ஜி…”

(டவலால தானடி சாத்தினான்… அதுக்கு டயம் பாம் வச்ச கணக்கா என்னா பில்ட் அப்பு…)

வேதாவிற்கு வெட்கம் வர… ரோஜாவிற்கோ சிரிப்பு பீறிட்டது,

அதற்குள் கிருஷ் கோபமாக முன்னே நடந்து வர… இளா பின்னே வந்தான்… ரோஜா சக்ஸஸ்ஸா? என்று கட்டை விரலை உயர்த்தி, இளாவிடம் கேட்டாள்,

கிருஷ் அவளிடம்…

“என்ன உன் அண்ணன் சந்திரயான் ராக்கெட்டை  நிலாவுக்கு  விட்டுட்டு நேரா இங்க வரானா? அப்படியே பெருமை கொப்புளிக்குது உன் மூஞ்சில?அதுக ரெண்டும் சண்டையில கட்டி புடிச்சு உருண்டுட்டு இருக்குதுங்க… கடுப்பேத்தாதடி…”

“அய்ய…அதுக்கு எதுக்கு நீங்க  இஞ்சி தின்ன குரங்கு போல வச்சிருக்கீங்க உங்க மூஞ்சிய? அரியர் வைக்கிறவங்க அடுத்த அட்டெம்ட்டுல  பாஸ் ஆகறது இல்லை? அது போல எங்க அண்ணன் பாஸ் ஆவார்…” ரோஜாவின் குரலில் அப்படி ஒரு பெருமை,

“எருமைய வச்சி ஏர் ஓட்ட முடியும்… பன்னிய  வச்சி கார் ஓட்ட முடியுமா?”

“ஆ…ஊன்னா… ஆயா கணக்கா எதாவது… இல்லாத கதையெல்லாம் பேசுங்க… வெளங்காத வெட்டி கதை பேசரத விட்டுட்டு, போயி என் அண்ணனையும் ஆராவையும் கோர்த்து விடற வேலைய பாருங்க…”

“ஏண்டி… நடக்குற விஷயமா பேசுடி… ரெண்டும் சேர்றதுக்கு நாள் கணக்கோ.. மாச கணக்கோ ஆகும்னு நினைச்சியா? வருஷ கணக்காகும்டி…”

“பத்து பன்னிரெண்டு வருஷம் ஆனாலும் பரவாயில்ல இருந்து பக்காவா வேலைய பார்த்திட்டு வாங்க… இங்க சீக்கிரம் வந்து, ஒண்ணும் நீங்க  கிழிக்க போறது இல்லை…”

“மாமா வேலை பார்க்குறதையே ஒரு மாமாங்கமா பார்க்கணும் நானு..அதானேடி உன் பிளானு…”

“..க்கும்…”. நொடித்துக்கொண்டு… உள்ளேயே போய்விட்டாள்,

“ஆனா ஒன்னு மட்டும் தெரியுது… இந்த ரெண்டு கழுதைக்கும் கல்யாணம் பண்ணி வச்சாதான் நம்ம  வீட்ல நம்மளுக்கு மரியாதை… இல்லைன்னா ஒரு நாய் கூட மதிக்காது…”

கழுதைக்கும் கழுதைக்கும்  கல்யாணம் பண்ணி வச்சா மழை தானே பெய்யும்… மரியாதை எப்படி கிடைக்கும்? இடையில் கிருஷ்ஷின் டியூப் லைட் பிளிங்க் ஆகி கொண்டிருக்கவும்,

“எதுக்குடா மந்தி குரங்கு மாதிரி வழியில நின்னுகிட்டு குறு குறுண்ணு பார்க்குற…”

வேதா தான் ஓரமாய் நின்னவனை  வாலண்டியராக வம்பு வளர்த்தார்…(எபி முழுக்க இன்னைக்கு ஒரே அனிமல்ஸ் நேம் தான்…   ஸூ  டே ஸ்பெஷல்…)

“இந்த தாய்கிழவி டார்ச்சர் தாங்க முடியலடா சாமி…அப்பப்ப காமெடி பண்றேன் பேர்வழின்னு காண்டாக்குது…”

கிருஷ் வேதாவை முறைத்தான்.. வாஸ்துபடி அந்த வீட்டில் கிருஷின் வாய், அமைதியாக இருந்தால் இப்படி வம்பு வழக்குகள் தானா அவனை தேடி வர்றது சகஜம்,

அதற்குள் சாப்பாட்டை கொட்டிக்க அனைவரும் டைன்னிங்  டேபிளில் ஆஜராக, கிருஷ்ஷும் வந்தமர்ந்தான்…

ஆராவிர்க்கு செல்போனில் அழைப்பு  வந்தது…,

போனை அட்டெண்ட் செய்தவள், பேச ஆரம்பித்ததும்.. அனைவரும் ஃபிரீஸ் ஆயினர்,

“என்ன சீமா திடீர்னு போன் பண்ணியிருக்க?”

………..

“பேசினேன்… இளா… முடியாதுன்னு சொல்லிட்டான்…”

“ஏன் அப்படி சொல்ற சீமா?”

“கிருஷ் அண்ணா வீட்டுல…”

“இல்ல இளாவும் இங்கதான் எங்க கூட இருக்கான்…”

,…

“பக்கத்துல… மாதா ஜி இருக்காங்க… இதோ தரேன்…”

போனை வேதாவின் கைகளுக்கு மாற்றினாள் ஆரா..

“நல்லா இருக்கியா சீமா?”

வேதா கேட்டதும் அந்த பக்கம் பட்டாசு வெடித்தது..

“பார்ட்டியும் இல்லை எந்த ஸ்பெஷல் பிளானும் இல்லைடி… ஆராவுக்கு லீவ்… அதான் வழக்கம் போல வந்து  தங்கியிருக்கா…”

“இது என்னடி பெரிய கூத்தா இருக்கு? நீ எப்ப ஆசைப்பட்டு இந்த அத்தை வீட்டுக்கு வந்த? நான் வெளியில போடின்னு கழுத்தை புடிச்சி தள்ளினேன்… எங்கயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தான்னு.. எந்த கோவத்தை என் மேல காட்டுற நீ?”

“சரி எத்தனை எப்ப வருவ?”

“ஆழாக்கு அரிசிய அதிகமா போடத்தான்… சிலுக்கு சீமான்னு நல்ல பொருத்தமான பேருதான் வச்சிருக்கானுங்க உனக்கு… எப்ப வருவடின்னு கேட்டா.. இந்த சிலுப்பு சிலுப்பிக்கிற?”

“ஆலிவ் டிரசா?”

“திமிரை பாரு.. ஏண்டி… ரோஜா ஒண்ணும் இந்த வீட்டு வேலைக்காரி கிடையாது…என் மருமக… இஷ்டப்பட்டா சமைப்பா…அவளை நானும் என் புள்ளையுமே ஒரு வேலை சொல்ல மாட்டோம்… நீ என்னடி அதிகாரம் பண்றது… வந்தா இருக்கிறதை, மூடிக்கிட்டு திங்கனும் புரிஞ்சுதா?”

போனை கட் செய்தவர்…அனைவரும் அவரையே பார்த்திருப்பதை உணர்ந்து..

“அந்த சீமை சிங்காரி வர்றால்லாம்…”

“என்னைக்கு?”  கிருஷ் கேட்க,

“எவ்வளோ நிமிஷத்துல வராண்ணு கேளு டா? இன்னும் அரைமணி நேரத்தில இருப்பாளாம்… ரோ.. அந்த சிங்காரி, ராத்திரியில பழம் மட்டும்தான் சாப்பிடுவாளாம்… ஆலிவ் ஆயில் டிரஸ் போட்ட சாலட் வேணும் கிறா. இதுல உன்கிட்ட சொல்லி செய்ய சொல்லனுமாம்…லொள்ள பார்த்தியா இவளுக்கு… சாலட்டெல்லாம் டிரஸ் போட ஆரம்பிச்சிடுச்சா இப்போ?”

“மீ.. அது டிரெஸ்ஸிங்… பச்சை காய்கறி, இலை மேல ஆலிவ் எண்ணெயை லேசா ஊத்தி பிசறி விடணும் அதான்…” ரோஜா விளக்கம் கொடுத்தாள்,

“க்க்கும்… நல்லா இலையும், தழையும் தின்னுட்டுதான் காட்டெருமை கணக்கா, எங்க முட்டலாம்? எதை குத்தலாம்ன்னு திரியுறா? இவளுக்கு நம்ம இளமாறன்  வேணுமாம்..?”

“அப்ப என்னை மட்டும், அவளை கட்டிக்க சொல்லி சொல்லி கேட்ட? அந்த ரத்த காட்டேரிக்கு காவு கொடுக்க பார்த்தியா  தாய் கிழவி?” கிருஷிர்க்கு அந்த நாள் ஞாபகம்,

“என்னை பத்தி என்னன்னு நினைச்ச?அவ மட்டும் உன்னை கட்டியிருந்தாள்.. அவளை நான் அடக்கியிருப்பேன்டா…”

“அவளையெல்லாம் உன்னால அடக்கியிருக்க முடியாது… வேணும்னா கொதண்டத்துக்கு பக்கத்து சீட்ல அடக்கமாயிருப்பன்னு  சொல்லு ஒத்துக்கிறேன்..”

“இந்த வேதாவ ரொம்ப சாதாவா நினைச்சிட்டியே தம்பி…”

வேதா முடிப்பதற்குள் இளா,

“டேய்…! உன் மாமாப் பொண்ணை நீ கட்ட வேண்டியது தானடா? இப்படி வச்சிருந்து… என் தலையில கட்டபார்த்தியா? இப்ப என்னை  நிம்மதியா இருக்க விட மாட்டெங்குறா…”

“ஆமா அண்ணா… நீ அன்னைக்கே சீமாவ கட்ட ஒகே சொல்லியிருந்தா என்  இளா ஹாப்பியா இருந்திருப்பான்… என் ரோஜா அண்ணியும், வேறொரு அழகான பையனை கல்யாணம் பண்ணி இருப்பாங்க… எல்லாத்தையும் கெடுத்திட்டு.. இப்ப நீ மட்டும் நல்ல பொண்டாட்டிய கட்டிகிட்டு ஜாலியா இருக்க… செல்ஃபிஷ்…” ஆராவும் தன் பங்கிற்கு ஆட,

“ ம்ம்… புள்ளை பூச்சிக்கெல்லாம் ஐடியா வருது…    நான் வேணும்னா அந்த ரத்த காட்டேரிய ரெண்டாந்தாரமா கட்டிகிடட்டா?” கிருஷ்  வெறுப்ஸாக..

“சரி உன் இஷ்டம்டா… உலக நாயகன் அன்னைக்கே சொல்லிட்டார்… நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்லன்னு…லேட்டா முடிவு எடுத்தாலும் லேட்டஸ்டா எடுத்திருக்க…எங்க நாலு பேருக்கும் டபுள் ஒகே…உனக்கு ஏதாவது அப்ஜெக்சன் இருக்கா ரோ…” வேதா தன் கருத்தை சீரியஸாக கூறினார்,

“ஒரு கண்டிஷன்… கல்யாணமுன்னா நான் காஞ்சிபுரம் பட்டு மட்டும் தான் காட்டுவேன்  கிருஷ்…”

சொல்லி முடிப்பதற்குள் அடக்க முடியாமல் ரோஜாவிடம் இருந்து ஒரு ‘களுக்’ சிரிப்பு வந்தது…(அது என்னா களுக்குண்ணு இருக்குது சிரிப்பு.. பொண்ணுன்னா நல்ல கல கலன்னு சிரிக்க வேணாம்… மெட்ராஸ் பட டயலாக் ஞாபகம்… மண்ணிச்சூ…)

“என்னை பலி கொடுத்திட்டு நீங்க மட்டும் சந்தோஷமா இருக்கலாம்னு பார்த்தீங்களா?

அடிப்பாவி ரோசா…!

உன் புருஷன் உனக்கு அவ்வளவு லேசா?

என் கல்யாணத்துக்கு ஒகே சொல்லிட்டே பேஷா…!

ஒரு காஞ்சிபுரம் பட்டுக்கு ஆசைப்பட்டு..

கட்டின புருஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க தயார் ஆயிட்டியேடி?  ஆனா ஒன்னு…… என் கல்யாணத்தன்னைக்கு அம்புட்டு பேருக்கும் பாயசத்தில பால்டிராய்யில் ஊத்தி கொன்னுட்டுதான் அந்த பேய்க்கு வாக்கப்படுவேன்  ஜாக்கிரதை…”

வடிவேலு  வெர்ஷன்ல  டைமிங்கோட நல்ல ரைமிங்கோட  கிருஷ் சொந்த கதையை சோகமா சொல்லியும்  வழக்கம் போல அந்த வீட்டுல ஒரு ஈ, காக்கா  உட்பட  யாருமே கண்டுக்கல,

“சே…வர..வர.. கொசு தொல்லை ஜாஸ்தியாயிட்டு…சம்பந்தம் இல்லாமல் பேசறத விட்டுட்டு… ஆகற கதையை பார்ப்போம்… குட்டைகுழப்பி வேற வரா? அவ குழப்பறத்துக்குள்ள நாம ஒரு முடிவுக்கு வந்திடிவோம்…”  நெஞ்சில் ரத்தம் வடியும் கிருஷ்ஷிர்க்கு  கதற கதற டின்ஜெர் வைத்த வேதா.. நேரடியாக விஷயத்திற்கு வந்தார்,

“இளா, ஆரா ரெண்டு பேரும் உங்க கல்யாணத்தை பத்தி என்ன முடிவு எடுத்திருக்கீங்க?”

ஆராவின் அழுகை  இளாவின்  கண் முன் வந்து செல்ல… ஆழ மூச்செடுத்தவனின் குரலில் வலியுடன் பதில் வந்தது,

“நான் இதுல முடிவு எடுக்க என்ன இருக்கு டாலி? என் மனச அவகிட்ட சொல்லிட்டேன்…முடிவு அவ கையில…”

அனைவரும் கெள்வியாய் ஆராவையே பார்த்திருக்க…அவள் மட்டும் வலி நிறைந்த இளாவின் கண்களையே  பார்த்திருந்தாள்..

“எனக்கு இளா சந்தோஷமா இருந்தா போதும் மாதாஜி…அதுக்கு சாக சொன்னாலும்… செத்துடுவேன்…”

ஆரா சொல்லி முடிப்பற்குள் இளா,

“அறிவில்லையாடி உனக்கு…உன்னை  சாக விடத்தான்.. நெஞ்சுக்குள்ள பொத்தி.. பொத்தி வச்சி காப்பாத்துனெனா?”

சொல்லி விட்டு செய்தானா? இல்லை சொல்லு முன்னே செய்தானா?

இழுத்து இறுக அணைத்திருந்தான் ஆராவை,

“அடங்கொக்கா மக்கா… தனியா ரூமுக்குள்ள பண்ண வேண்டியதை எல்லாம்,.. இப்படி பச்ச புள்ளைங்க இருக்குற இடத்துல பண்றீங்க… போங்கடா எங்கயாச்சும் ஒதுக்குபுறமா…பன்னி குட்டிங்களா…” கிருஷ் ஆட்டத்தை கலைக்க பார்க்க,

“இங்க என்ன  நடக்குது?”  சீமாவின் குரல் ஆட்டோமேட்டிக்காக  இருவரையும் பிரித்தது.

 

error: Content is protected !!