Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-15

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன் 

 

 

அத்தியாயம் – 15

 

கற்பகத்தின் கத்தலில் ஆரா அதிர்ந்து போய் எழுந்து,

 

“நான் என்ன செஞ்சேன் ஆன்டி.” பயந்த குரலோடு கேட்க,

 அவள் பயந்து நின்ற பாவத்தை பார்த்த   ரோஜாதான்,  ஆராவை   இழுத்து நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்…

 

“என்ன செஞ்சியா..?, உனக்கு முன்னாடி உன் ராசிதான் எல்லாரையும் காவு வாங்கிடுதே, எங்க போனாலும் அங்க எல்லாரையும் முழுங்கிட்டுதானே மறுவேலை பார்ப்ப, உன் வீட்டுல முழுங்கினது பத்தாதுன்னு, என் நாத்தனார் வீட்டுக்கு வந்து அப்பான்னு சும்மா கூப்பிடதுக்கே கிருஷ் அப்பா டிக்கெட்டை வாங்கிட்டார்…இப்போ என் பொண்ணு ஆசைபடுறான்னு சொல்லியும் ,அவகிட்ட இளாகிட்ட பேசி சம்மதம் வாங்கிறேன்னு சொல்லி நீ அவனை  மயக்கி கைக்குள்ள போட்டுக்கிட்ட,  அவ சாகுறன்னு நிக்குறா…இப்ப உனக்கு சந்தோஷமா..? முன்னாடி வீட்டை விட்டு வெளியே போ… எங்க சோறு கிடைக்குதுன்னு அலைஞ்சிட்டு இருப்பியா…?”

 

கற்பகத்தின் இந்த வஞ்ச கணக்கில் ஆராவிற்க்கு கண்களில் இருந்து கண்ணீர் இடை விடாது வழிந்தது என்றால்,ரோஜாவும் கிரிஷும் அயர்ந்து போயினர்.

வீட்டுப் பெரியவர்களை எதிர்த்து பழக்கமில்லாத அவர்களுக்கு இதை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.

 

விடாது கை கால்கள் நடுங்க, சிறிது நேரத்தில் உடல் வெட்டி இழுக்க தரையோடு சரிந்தாள் ஆரா.

 

முதலில் சுதாரித்தது கிருஷ் தான்….அவளை அள்ளி சோஃபாவில் கிடத்தி முகத்தில் தண்ணீர் தெளிக்க, 

கை கால்களை அழுதபடியே தேய்த்து விட்டு கொண்டிருந்தாள் ரோஜா, 

சீமாவும் விக்ரமும் நடப்பதை அதிர்ந்து பார்த்திருக்க, இன்னொரு இருக்கையில் அமர்ந்த கற்பகம், ஆரா நடிக்கிறாள் என்ற பாவத்திலேயே அமர்ந்திருந்தார்.

 

டாக்டருக்கு ஃபோன் செய்து வீட்டிற்க்கு அழைக்க விரும்பியவனாய் கிருஷ் எழும்ப ஆரா கண் விழித்தாள்.

 

“ரோஜா, என் தங்கச்சியை கூட்டிட்டு போய் சாப்பிட ஏதாவது கொடு….. அவ எழுந்து இவளோ நேரம் ஆச்சு….. நீ பாட்டுக்கு சர்கசை வேடிக்கை பார்க்கிறது போல நின்னுட்டு இருக்குற….. அவ சாப்பிட்டதும் கிளம்பு… நாம ரெண்டு பேரும் அவளை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகணும் …”

 

என் தங்கச்சி வார்த்தையை தொடர்ந்த. அக்கறையும் அன்பும் இன்னும் எரிகிற வயிற்றில் எண்ணெயை ஊற்ற, கற்பகம் பற்ற வைக்காமலேயே கற்பூரமாய் எரிந்தார்…….

 

“என்ன கிருஷ் திமிரா….?? இவ என்ன உன் கூட ஒட்டிக்கிட்டு பிறந்தவளா…? நான் அவளை வீட்டை விட்டு வெளியே போன்னு சொன்னா …, தங்கச்சின்னு சொல்லி உறவாடிட்டு இருக்க…”

 

“ஒரே தமாசு அத்தை உங்க கூட…, இதான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம். எங்க போனாலும் கெஸ்டா போயிருக்கோம்ன்றதையே மறந்து, ரொம்ப உரிமையா,  உங்க சொந்த வீடுன்னு நினைச்சி நடந்துக்க ஆரம்பிச்சுடுவீங்க.”

  

வார்த்தை சிரிப்பை வர வைப்பது போல இருந்தாலும், கிருஷின் முகத்தில் இருந்த கடுமை ஏதோ நடக்க கூடாததை நடத்திவிடுவான் என்ற குறிப்பு தர,

 

ஆராவை டைனிங் டேபிளில் உட்கார வைத்து விட்டு வந்த ரோஜா , கிருஷிடம் அவசர அவசரமாக சென்று,

“கிருஷ் உங்க தங்கச்சிக்கு சாப்பாடு வேணாமாம்…அடம்பிடிக்கிறா… அவளை போயி நீங்களே ஹாஸ்பிட்டலுக்கு கிளம்ப சொல்லுங்க. “நான் மீக்கு ஃபோன் பண்ணி சொல்லிட்டு கிளம்பறேன்…”

 

ஆனால் ரோஜாவின் முகம் முழுவதும், போதும்  எதுவும் பேசாதயேன்….என்ற  கெஞ்சல் நிறைந்து இருக்க, கிருஷ் கண்களை மூடி கோபத்தை கட்டுப்படுத்த முடியல என செய்தி சொன்னான்…… நான் பார்த்துக்கிறேன் என்றபடி கற்பகத்தை நோக்கி முன்னேறியவள்,

 

“அம்மா பசியில இருக்கீங்க போல,  வாங்க சாப்பிடலாம்… சீமா எழுந்துட்டாங்களா….?” என்று அக்கறை காட்டுபவள் போல தொடர,

 

“அதான் அடம் பிடிக்கிறாளாமே…, உன் புருஷனோட ஒட்டிக்கிட்டு பொறந்த உன் நாத்தனார்…அவளுக்கு போயி ஊட்டுங்க ரெண்டு பேரும்… நான் என்ன கஞ்சிக்கு வழி இல்லாம, உன் மாமியார் வீட்டுக்கு வந்தேன்னு நினைச்சியா…? உன் புருஷன் உரிமை இல்லாதவன்னு குத்தி காட்டிட்டு போறான்… நீ சோத்துக்கு வந்துருக்கேன்னு சொல்லி காட்ட வந்தியா…?”

 

“ஐயோ… பெரியம்மா, அவரு பேச்ச விடுங்க… உங்க மனசு காயம்பட்டதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். வந்தவங்களை சாப்பிட கூட கூப்பிடல பாருங்க…நீங்க வாங்க அம்மா, இந்த வீட்டுல உங்களுக்கு இல்லாத உரிமையா…?”

 

“நல்ல ஜாடிக்கு ஏத்த மூடி தான்டி நீ…. ஒன்னுத்துக்கும் வக்கு இல்லாத குடும்பத்துல இருந்து வந்திருந்தாலும் உனக்காவது வந்தவங்கள வரவேற்க தெரிஞ்சிருக்கே….” 

முகத்தில் உதாசீனம் காட்டி, வார்த்தையில் வஞ்சம் வைத்து பேச…., ரோஜா , கண்ணை மூடி அவள்  மாமாயி வேதா ஆனந்தமாயியை உருப்போட்டு கொண்டாள்.

 

“முதல்ல   நீங்க ஜாடிக்கு ஏத்த மூடி, கிருஷ் க்கு ஏத்த ஜோடின்னு பாராட்டுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பெரியம்மா…. நீங்க சொன்னது சரிதான்…  வக்கில்லாத குடும்பமா போனதினால் தான் இருபத்தி நாலு வயசிலேயே இப்படி கல்யாணம் பண்ணிக்க வேண்டியதா போச்சு… உங்களை போல வசதி இருந்திருந்தால், என்னைவிட ரெண்டு வயசு  கூட இருந்தும் சீமா அக்கா  இருக்கிறது போல,  கல்யாணம் பண்ணிக்காம ஜாலியா ,இஷ்டத்துக்கு ஊர் சுத்திட்டு, ராப்பகல் பார்க்காம பார்ட்டி கொண்டாடிட்டு இருந்திருக்கலாம்…. எனக்கு அந்த கொடுப்பினைலாம் இல்ல…”

 

“இப்ப பாருங்க,இருபத்தி ஏழு இருபத்து எட்டுக்குள்ள புள்ளை பெக்கனும், இருக்கிற மூணு ஷோ ரூம்லயும் வரவு செலவு வந்துச்சான்னு பார்க்கணும், இதுலாம் பார்க்குறதுக்கே நேரம் இல்லை… இதுல ஏதேதோ கம்பெனில கோடி கோடியா கொட்டி என் பேர்ல ஷேர் வேற , வாங்கி போட்டுருக்குங்க… அதெல்லாம் வைத்தியநாதன் பெரியப்பா பார்க்கிறதனால எனக்கு பிரச்சினை இல்லாம போகுது… இல்லைன்னா காசு எண்ணியே காணாம போயிருப்பேன் பெரியம்மா…”

 

“பத்தாதுக்கு எங்கத்த வேற எல்லா பொறுப்பையும் கொத்து சாவியோட, என்கிட்ட உட்டுட்டு அக்கடான்னு ரிடயர்மெண்ட் வாங்கிகிட்டாங்க… இதுல கூடவே முந்தானையை பிடிச்சுகிட்டு ரோசா ரோசான்னு, எல்லாத்துக்கும் ரோசா வேணும் இந்த கிருஷ்க்கு… எவ்வளவு இம்சை… இருபத்தி அஞ்சு வயசு இதெல்லாம் அனுபவிக்கிற வயசா… சீமா அக்கா போல சுதந்திரத்தை அனுபவிக்கிற அளவுக்கு வக்கில்லை பெரியம்மா எனக்கு….

என் கஷ்டம் உங்களுக்கு எதுக்கு பெரியம்மா….. நீங்க வந்து சாப்பிடுங்க….”

 

     “லட்டுக்கு போயி சாப்பாட ஊட்டி வேற விடனும், இல்லைன்னா கிருஷ் அவ்வளோதான் என் தங்கச்சியை பார்க்குறத விட உனக்கு என்ன புடுங்குற வேலைன்னு கோபப்பட்டுருவார்…., சொல்ல முடியாது பெரியம்மா அந்த தங்கச்சி பைத்தியம், அவளுக்காக கட்டின பொண்டாட்டி என்னையே வீட்டை விட்டு வெளியில அனுப்பினாலும், ஒன்னும் சொல்றதுக்கில்ல….”

 

“பின்ன ஆசிர்வாத் பாட்னர்ஷிப்ல தான வேதா டெக்ஸ்டைல்ஸ் உருவானுச்சு, அதனால் இருக்கிற ஷோ ரூம், இந்த வீடு இதெல்லாம் என் தங்கச்சியும், இளாவும் போட்ட பிச்சைன்னு இந்த மனுஷனுக்கு ஒரு நினைப்பு…. இந்த கூத்த, நான் எங்க போயி சொல்ல…., ம்………… எல்லாம் என் தலை எழுத்து என்ன பண்றது…..”

 

பெருமூச்சுடன் ரோஜா உள்ளே நுழைய  , டைனிங் டேபிளில் ஆராவுக்கு அருகில் அமர்ந்திருந்த கிருஷிர்க்கு ஒரே சந்தோஷம்….

‘பாருடா என் டார்லிங் ஜா, இவ்வளோ அழகா சமாளிக்கிறாளே, பரவாயில்ல நான் கூட என்னமொன்னு நினைச்சேன், இந்த தாய் கிழவி, நல்லாத்தான் டிரெய்னிங்க கொடுத்து வச்சிருக்கு…. இவகிட்ட நீ உஷாரா இருந்துகோடா கிரிஷ்… விருந்தாளியவே இந்த வெளு வெளுக்குறா  அப்ப வீட்டுக்காரன என்னல்லாம் பண்ணுவாளோ….?? ஏதேதோ நினைத்தபடி, 

 திரும்பி கற்பகத்தின் முகத்தை பார்க்க ….

 

“……. ப்பா……”

 

 

‘நல்லா காட்டு காட்டுன்னு காட்டிட்டாடா என் டார்லிங் ஜா…. கத்தியின்றி ,ரத்தமின்றி நடந்த  யுத்தத்தில் ,கற்பகத்திர்க்கு பலத்த உள் காயம் போலயே …..’ மவுனமாக சிரித்து கொண்டான்…. கிருஷ். 

 

 

 

 

‘என்னா சாமர்த்தியமா சமாளிச்சுட்டா வேதா மருமக…… சும்மா விடக்கூடாதே…….’ இது கற்பகத்தோட மைண்ட் வாய்ஸ்…

 

அப்போ விக்கி அவன் தூங்கிட்டு இருந்த ரூம்லயிருந்து சீமாவை பார்க்க வேதா ரூமுக்குள் நுழைய, 

 

“நில்லு விக்கி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என கற்பகம் நிறுத்தினார்…

 

கிருஷ்ஷை பார்த்துவிட்டு , “இட்ஸ் நாட் எ ரைட் பிளேஸ்…. எதுவா இருந்தாலும் உள்ள போயி பேசலாம் ஆன்டி “,என்று விக்கி உள்ளே போயிருந்தான்…

 

‘க்கும் இவன் விக்கி இல்ல முடிச்சவிக்கி ……’ என்றான் கிருஷ் எல்லாத்தையும் கவனித்த படி….

 

அதற்குள் ரோஜா வந்து , “அடுத்து என்ன பண்றது கிருஷ்…. ஆராவுக்கு இப்போதைக்கு உடம்புக்கு ஒன்னும் இல்லை,வெறும் மந்த்லி பிராப்ளம் தான்… ஆனா ஒரு மாதிரியா இருக்கா அதிர்ந்து போயி…அதுலதான் மயங்கிட்டா போல, பிடிவாதமா அரை கிளாஸ் ஜூஸை குடிக்க வச்சேன்.. படுத்திருக்கா. நான் வேற கற்பகத்தம்மாவை எக்கச்சக்கமா ஜாடை பேசிட்டேன் ,வேற எதுவும் பூதம் கிளம்பிடுமா…?”

 

“நீ சரியாதான்டி கொடுத்திருக்க, என்னா டிரெய்னிங் கொடுத்து வச்சிருக்கு தாய் கிழவின்னு நானே பூரிச்சு போயிட்டேன்… நீ பேச பேச, பார்க்கணுமே அடி அடின்னு அடிச்சு , அக்கிரமம் பண்ணி , அம்பத்தூர் ஆசிட் பேக்டரி யில முக்கி எடுத்தது போல இருந்துச்சு அத்தை மூஞ்சு ..”

 

“நானே ஸ்ரீலஸ்ரீ வேதாந்த மாயியை மனசுல நினைச்சுக்கிட்டு பேசி தள்ளிட்டேன்… கொஞ்சம் ஓவர் டோஸ் ஆச்சோ….? பாவம் ,அந்த பெரியம்மா…. பார்க்க பழைய நடிகை கே. ஆர். விஜயா   போல இருப்பாங்க… என்னால அவங்க முகமே மாறி போச்சு….ரொம்ப கில்டியா இருக்கு கிருஷ்…”  என்றபடி ரோஜா புலம்ப…,

 

“அட, நீ வேற டி…. எங்கத்தை பார்க்கத்தான் கே.ஆர்.விஜயா மாதிரி..ஆனா பண்றது எல்லாம் ஒய்.விஜயா வேலையா இருக்கும்….”  

 

“லட்டுதான் ரொம்ப பாவம்பா…. அவளுக்கு முகமே சரியில்ல…. அவங்க பேச்சு அவளை பாதிச்சிடுச்சு போல… ஒன்னுமே பேசல இடி விழுந்த கணக்கா இருந்தா….. படுத்தும் தூங்கலை, வெறிச்சபடி இருக்கா… எனக்கு என்ன பேசறது அவகிட்டன்னே தெரியல….மீ வரட்டும், எல்லாத்தையும் சரி பண்ணிடுவாங்கன்னு நான் அவகிட்ட எந்த சமாதானமும் சொல்லல கிருஷ்….”

 

“அதானே இங்க ஒரு கார்கில் வாரே நடந்து முடிந்திடுச்சு இன்னும் காணும் பாரு இதுகள. ரெண்டும் சிக்கன் வாங்க தான போனுச்சிங்க….இல்லை சிங்கப்பூர் போனுச்சுங்களா…?” 

 

சொல்லி கொண்டிருக்கும் போதே கிருஷின் மொபைலில் ஃபேஸ்புக் நோட்டிஃபிகேஷன் ஒன்றன் பின் ஒன்றாக டிங் டாங் ஆர்பரிப்புடன் வந்தபடி இருக்க..….. 

 

கிஷோர், ஸ்வப்னா அண்ட் எயிட்டி சிக்ஸ்  அதெர்ஸ் கமெண்ட்டெட் ஆன்  த போஸ்ட் தட்  யூ  ஆர்  டாக்ட் இன்……(kishore,swapna and 86 others commented on the post that you are tagged in…)

 

“என்னடா இது… இம்புட்டு பேரு என்னை டேக் பண்ணின போஸ்ட்க்கு  கம்மெண்ட்ஸ் பண்ணியிருக்காங்களா…?” என்றபடி அவன் ஃபேஸ் புக்கை ஓபன் செய்ய…,

 

அதில் ஓபன் ஆன வீடியோ வில்  வேதா ,

 

கோழி கூண்டில் கையை விட்டு, ஒவ்வொரு கோழியாக விளக்கி விட்டபடி,

 

‘மவனே…., கொலைகாண்டுல இருக்கிறேன்…. உங்க யாருக்காவது பொண்டாட்டி, குடும்பம் , குட்டின்னு சென்டிமென்ட் இருந்தா அப்படியே ஓடி போயிடுங்க….’

 

 பக்கத்தில் கையை கட்டியபடி இரண்டு அடி பொடி நிற்க… பேட்ட வசனத்தின் டப்மாஷ் , முடியும்  போது வேதா வெறித்தனமாக உரிச்சு தொங்கவிடப்பட்ட முழு கோழியை பிடித்திருக்குமாறு பினிஷிங் வேறு…

 

பக்கா மாஸ் ,டப் மாஷாக எடிட்டிங் செய்து , அப்லோட் செய்யபட்டிருந்தது… 

 

“உரிச்ச கோழிய வச்சுகிட்டு இந்த கிழவிக்கு, இதெல்லாம் இப்ப தேவையா…?  எந்த  ரண களத்துலயும் ,இதுக்கு மட்டும் குதூகலம் குறைய மாட்டேங்குது…”

 

எதுக்கு டென்ஷன் ஆகுறான்னு பார்க்க ஃபோனை வாங்கிய ரோஜாவுக்கு , டப் மாஷய் பார்த்துவிட்டு ஒரே சிரிப்பு…

 

“என்னடி இளிப்பு…, எங்க போனான் அந்த சிக்கன் கடைக்காரன்…, நான் கறி வாங்க போறப்ப எல்லாம், கடனுக்கு கறி வாங்க வந்த கடங்காரனை பார்க்கிறது போல கேவலமா பார்ப்பான்… இந்தம்மா கடைக்கு ஓனர் கணக்கா கோழி கூண்டுக்குள்ள தலைய விட்டுட்டு நிக்குது….”

 

“கிருஷ், மீ க்கு ரெண்டு சைடும் ரெண்டு பேர் கைகட்டி நிக்குறாங்களே, அதுல லெஃப்ட் ல நிக்குறவர் தான் அந்த கறி கடைகாரரு… ரைட்ல நிக்குறவர் கறி வெட்டுறவர்.”, என்று வயிறை பிடித்துகொண்டு சிரித்தாள்….

 

மீண்டும் வீடியோவை பிளே பண்ணி பார்த்தவன் , கருமம் ,கருமம் என்று தலையிலேயே அடித்துகொண்டான்….

 

‘வயசான கிழவிக்கு வந்த வாழ்க்கைய பாரேன்….. உனக்கு இதெல்லாம் ரொம்ப தேவையாமா இப்ப, வெட்டுன கோழி ய எடுத்துட்டு  போயி ஊட்டுல புள்ள குட்டிக்கு முதல்ல சோறு ஆக்கி போடும்மா…’  என்று கிருஷ் கீழே கமென்ட் போட,

 

 நிமிடங்களில் கிருஷிற்கு பயங்கர கண்டன  ரிப்ளைஸ்….. அதில் ஒரு பெண் உச்ச கட்டமாக , மெசஞ்சர் பாக்ஸில் வந்து , ‘கொஞ்ச காலமா தான்  நாங்க பொண்ணுங்க வெளியில வந்து எங்க வாழ்க்கைய என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிருக்கொம்… உங்களை போல ஆணாதிக்க வாதிகளுக்கு அது பொறுக்கலையா…?’ என்று கேள்வி அனுப்ப…..

 

‘நீ ஆம்பளையா இருந்தா உன் அட்டிரசை அனுப்புடா…வீட்டுக்கு வந்து நான் கறி குழம்பு வச்சு தரேன்னு ஒரு ரிப்ளை….’.

 

‘இவனே நல்லா புசு புசுன்னு போந்தா கோழி போல தான்டா இருக்கான், ஒரு கோழிய, கலாய்ச்சதும் இந்த போந்தா கோழிக்கு கோபம் வருதுடான்னு’ ஒருத்தன் ரிப்ளை கொடுக்க,

 

கிருஷ்,

“கொய்யால, இப்ப என்னா நடந்துச்சுன்னு இப்படி கிளம்பிட்டாய்ங்க…. அடேய் குண்டு வைக்கிற தீவிரவாதிய எல்லாம் விட்டுட்டு, குண்டா இருக்கிறேன்னு எனக்கு கண்டனம் கொடுக்குறாங்க பாவி பயலுக…”

 

ரோஜா எல்லாத்தையும் சிரித்து கொண்டே பார்க்க,  

கிருஷ் , “ஓஹோ இப்ப வந்து பொங்குணவுங்க தான் அந்த இளா பய சொன்ன வேதா ஆர்மியா…. பண்ணாடைங்க , எல்லாரும் இவளோ வெட்டியா இருக்கி ரானுங்க…. இன்னும் வாங்குன கறி வீடு வந்து சேரலை…அதுக்குள்ள வம்பு தும்பு எல்லாம் முந்திட்டு வருது…. அந்த தாய்க்கிழவிஐஐஐஐஐ …… என்றபடி பல்லை கடித்தான்…”

 

 

அங்கே வேதாவின் ரூமில் இருந்த கற்பகம், சீமாவிடமும் விக்ரமிடமும்  தீவிரமா ஆலோசனை கூட்டம் நடத்திட்டு இருந்தார்…. நேத்து நைட்டு என்ன நடந்ததுன்னான்னு வளையம் போட்டு விளக்கிட்டு இருந்தான்… 

 

“ஏன் விக்கி இவ எனக்கு யாரும் வேணாமுன்னு திடீர்னு அழுகுறா, பிடிவாதம் பிடிக்கிறா…. என்னை காலங்காத்தால வர சொல்லிட்டு ,இவ கிளம்புன்னுனு சொல்றா….?”

 

“தெரியலையே ஆன்டி….  இவ இந்த ரூமுக்கு வந்ததுக்கு அப்புறம் யாராவது ஏதாவது சொல்லியிருக்கலாம் ஆன்டி… எல்லாருமே நாங்க வந்ததுல இருந்து எங்களை இல் டிரீட் தான் பண்ணினாங்க….”

விக்ரம் ஏத்தி விட்டான்…

 

“என்னதான் நடந்ததுன்னு ஒன்னுமே சொல்லாம இப்படி இருக்கிறாளே…. ஆனா என் பொண்ணை யார் கஷ்டபடுத்தி இருந்தாலும் அவங்கள நான் சும்மா விடமாட்டேன்…. எனக்கு பதில் சொல்லி தான் ஆகனும் யாரா இருந்தாலும்….”

 

கற்பகம் அம்மா பாசம்ன்னு நினைச்சி பாய்சனை கொட்டிட்டு இருந்தார்….

 

“வரட்டும் என் நாத்தி…. கண்டவளை கூப்பிட்டு வச்சு உபசாரம் பண்றா…. என் பொண்ணு மட்டும் இளக்காரமா அவளுக்கு…..”

 

ட்ராக் வேதா பக்கம் திரும்பியது…..

 

வேதாவும் இளாவும் வீட்டிற்குள் நுழைய, சாமானை எல்லாம் பிடுங்கி வைத்து விட்டு , அவர்களோட பெட்ரூமுக்கு வலுக்கட்டாயமாக தள்ளிட்டு போயிட்டாள் ரோஜா…

 

நடந்த விஷயத்தை ஒன்னு விடாமல் சொல்லி முடிக்க,

 

இங்க இவ்வளவு களேபரம் நடக்குது…. நீ என்னன்னா பேட்ட டயலாக் பேசி ஃபேஸ் புக்கில விளம்பரம் கொடுக்கற… ஆக மொத்தம், கிருஷ் அவனோட குமுறலயும் வெளியே சொல்றதுக்கு மறக்கல… 

 

இளாவின் முகம் கோபத்தில் சிவந்து விட்டது…. அவனை தோளை அழுத்தி அடக்கிய வேதா , நேராக ஃபோன் செய்தது வைத்தியநாதனுக்கு….

 

“சொல்லும்மா வேதா….” அன்பொழுக பேசிய அண்ணனிடம்,

 

“சீமா, அவ ப்ரெண்ட், அதோட சீமாவோட அம்மா எல்லாரும் இங்கதான் இருக்கிறாங்க…  நீங்க தயவு செஞ்சு வாங்க…. எனக்கு எப்படி அண்ணன் இருக்கீங்கன்னு கேக்க தான் ஆசை…. ஆனா நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம் தான் இனிமே உங்களை அண்ணனு கூப்பிடனுமா வேணாமான்னு தெரிய போகுது…”

 

“ஏம்மா எதுவும் பிரச்சினை பண்ணிட்டாங்களா….?”

 

“போதும், இதுவரைக்கும் எல்லா பிரச்சனையையும் நீங்க தள்ளி நின்னு கேட்டு, தள்ளி நின்னு பார்த்துன்னு., வந்து கடைசி முறையா இப்பவாவது பிரச்சனைய எதிர்ல நின்னு பாருங்க…. அப்பதான் எதிராளி வலி என்னன்னு தெரியும்…”

 

“இதுவரைக்கும் செஞ்ச தப்பையெல்லாம் திருத்திக்கறதுக்கு கடைசி வாய்ப்பு கிடைச்சிருக்கு… வழக்கம் போல வேலைக்கு பின்னாடி சாக்கு வச்சு ஒளிஞ்சு கிட்டு வராம போகமாட்டீங்கன்னு நினைக்கிறேன்….”

 

ஏக் மார் தோ துக்கடா என பேசியவர் வைத்து விட்டார் போனை..

இளா, வேதா ஃபோனை எடுத்த போதே ஆராவிடம் ஒடியிருந்தான்… 

 

வேதாவின் வாள் வீச்சில் ,மன்னிக்கவும் வாய் வீச்சில் வைத்தியநாதன் ,அடுத்த இருபதாவது நிமிடம் ,வேதா வீட்டு வாசலில் காலிங்க் பெல் அமுக்கி விட்டு காத்திருந்தார்…

 

போயி கதவைத் திறந்த வேதா, 

 

குடிக்க தண்ணியை கொடுத்து விட்டு, “எல்லா பிரச்சனைக்கும் ரெண்டு பக்கம் இருக்கும்… இதை எல்லாரையும் விட அதிகமா நான் நம்பறேன்…”

“என் வீட்டுல படுத்திருந்த என் பொண்ணு ஆராவை உங்க பொண்டாட்டி வெளியில போக சொன்னாங்கலாம் ….”

 

“அதுவும் நான் வீட்டில் இல்லாதப்போ….”

 

“என் பொண்ணை மதிக்காதவங்கள நானும் மதிச்சு சண்டை போட விரும்பல….” 

 

“அவங்க என்னோட ரூமில தான் இருக்காங்க…. என்னன்னு கேட்டுட்டு,ஏதாவது விளக்கம் கொடுக்கணும்னு நினைச்சா , மாடியில என் புள்ளை ரூமில இருப்பேன் வந்து பேசுங்க…”

 

“உங்க பொண்ணும் பொண்டாட்டியும், எந்த தப்பும் பண்ணல, நியாஸ்தர்கள்ன்னு தோனுணிச்சுன்னா…, என்கிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை…, நீங்க அவங்க எல்லாரையும் கூப்பிட்டுட்டு உங்க வீட்டுக்கு போயிட்டே இருக்கலாம்…”

வேதா , அடுத்த நொடி ஆரா இருந்த ரூமிற்க்கு படியேறிகொண்டிருந்தார்.

 

 

 

சாஷா…