Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-19

கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…

                             

 

 

அத்தியாயம் 19

 

ஆப்பிரேஷன் அண்டாவுக்கு ,

 

“பதில் சொல்லுடி பனி கரடி…” கிருஷ் மிரட்ட,

 

“போடா….குண்டா….” சொல்லிவிட்டு  எழுந்து கை கழுவ போயிட்டா ஆரா…

 

“தேவையா உனக்கு இந்த அசிங்கம்…”,பக்கத்தில் சிரித்தபடி ரோஜா…

 

“என் ஸ்டைலில விசாரணை நடத்தினேன்…, அதுக்கு என்ன பதில் சொல்லனும்னு  தெரியாம , தெறிச்சு ஓடிட்டா அந்த பாண்டா..”

 

“எது அண்டா பாண்டானு அவளை கலாய்ச்சி கடுப்பெத்தி, குண்டான்னு மொக்கை வாங்கிட்டு , என்னமா பில்ட் அப் கொடுக்குற நீ… நானே அவளை என்னன்னு கேட்டிருந்திருக்கலாம்… உன்னை நம்பினேன் பாரு… போடா லூசு…”

 

“என்னடி புருஷனை லூசு சொல்லுற…? ஆளாளுக்கு போடா வாடான்னு என்னை அசிங்கபடுத்திறீங்க…, இதுலாம் நல்லதுக்கு இல்லை…. நாளைக்கு எனக்கு சிங்க குட்டியோ.., இல்லை, புலி குட்டியோ பொறந்து வந்து எனக்காக நியாயம் கேட்க்த்தான் போகுது … அன்னைக்கு தெரியும் இந்த கிருஷ் யாருன்னு…”

 

“இன்னைக்கே நல்லா அடையாளம் தெரியுது நீங்க யாருன்னு,” … ஆரா ஆஜரானாள்.

 

“என்னை குண்டன்னு சொல்லி அசிங்கபடுத்தின   ஆரும் என்ற கூட பேச கூடாது, ஆரும் என்ற கூட அன்னம் தண்ணி புழங்கக் கூடாது.. அல்லாரையும் நான் என்ற டைனிங் டேபிளை விட்டு தள்ளி வைக்கிறேன்…”

 

“இவரு பெரிய நாட்டாமை…ஏன்டா நேத்து தானடா என்கிட்ட அசிங்கபட்ட, இன்னைக்கு என்னடா புதுசா ரோஷப்படுற….?”

 வேதா என்ட்டிரியை போட்டார்.

 

“சிங்கம் சிங்கிளா இருக்கிறது தெரிஞ்சா போதுமே உடனே பன்னிங்க எல்லாம் கூட்டம் செர்ந்துடுவீங்களே…?”

 

“எருமை.., பெத்த தாயை பன்னின்னு சொல்லுறியா…? எந்த ஊர்லடா பன்னிக்கு சிங்கம் பொறந்தது… எப்ப பார்த்தாலும் யார்கிட்டயாவது ஒரண்டையை இழுத்த வண்ணமே இருக்கிறது… உனக்குன்னு புள்ளை பிறக்க போது ஞாபகம் இருக்கா இல்லையா…? இன்னும் உன்னை விட சின்னவகிட்ட வம்பு பண்ற…” மண்டையிலேயே ஒரு ‘நங்’ வைத்தார்.

 

“பின்ன என்ன தாய்கிழவி…நான் இந்த காட்டுப்பன்னிக்கு எவ்வளவு செஞ்சிருப்பேன்… ? புத்தக மூட்டையை விட அதிகமா இருந்தாலும் பரவாயில்லைன்னு  நீ இதுக்கு கட்டிக்கொடுத்த சோத்து மூட்டையை எல்லாம் பொதி கழுதையா சுமந்துட்டு போயி எத்தனை முறை இவகிட்ட கொடுத்திருப்பேன் எல்லாத்தையும் முழுங்கிட்டு, மறந்திட்டா ….நன்றி கெட்டவ…. குண்டனாமே நான்.” கிருஷ் சொல்லி முடிப்பதற்குள்,

 

“நான் எதையும் மறக்கல அண்ணா… நீ கொடுத்த எல்லா கஷ்டத்தையும்  பொறுத்துகிட்டு , யார்கிட்டேயும் சொல்லாம உன்னை காப்பாத்தி இருக்கேன்… ஆனா நீ எனக்கு செஞ்சேன்னு சொல்லுற…என்னை நல்லா பார்த்து சொல்லு நான் நன்றி கெட்டவளா…?” ஆராவின் பதிலைக் கேட்டு

 

 கிரிஷை எல்லாரும் சந்தேகமாய் பார்க்க,

 

“என்னடி அப்படி தாங்கிகிட்ட … பெரிய தியாகத் தலைவி வந்துட்டா…அவளை நம்பிகிட்டு இந்த ரெண்டு டம்மி பீசுங்களும் என்னை முறைக்குதுங்க….”

 

“வேணாம் …. எல்லாத்தையும் சொல்லிடுவேன்…”

 

“எனக்கு வேணும்டி….ஒரே ஒரு விஷயம் சொல்லுடி பார்ப்போம் எனக்காக என்ன தியாகம் பண்ணினேன்னு …,” 

 

“தேர்டு ஸ்டாண்டர்ட் படிக்கிறப்போ ,நான் சாப்பிட வச்சிருந்த ஆரஞ்சு மிட்டாய தின்னுட்டு, மாதாஜி கிட்ட  அதைச்சொன்னா , எனக்கு பல்லு வலி வந்துரும்னு சொல்லி, என் பூச்சி பல்லு மேல சத்தியம் வாங்கி  மிரட்டுனியே… மறந்துட்டியா அதுக்குள்ள… அதை நான் யார்கிடேயும் சொல்லவே இல்லை தெரியுமா…?”

 

(அடேய் இது சத்தியதுக்கே வந்த சோதனை… பூச்சி பல்லு மேல எல்லாம் சத்தியம் பண்ண சொல்லுவாங்களா டா…?)

 

“செல்லாது செல்லாது…பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி புளிச்சு போன புளிப்பு முட்டாய் மேட்டரை சொல்லிட்டு ,அதுக்குள்ள மறந்துட்டியானு கேக்குறியே…மனசாட்சி இருக்காடி உனக்கு…” காண்டில் கிருஷ்.

 

“அது பழசா…? இரு புதுசா ஒன்னு சொல்றேன்…”

 

 

“சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்குறப்போ   எனக்கு மாதாஜி கொடுத்து விட்ட குழி பணியாரத்தை எல்லாத்தையும் நீயே தின்னுட்டு, மாதாஜி கேட்டா நல்லா இருந்துச்சு பனியாரம்னு பொய் சொல்ல சொல்லி மில்க் பிக்கிஸ் வாங்கி கொடுத்தியே… நான் அன்னைக்கு மாதாஜி கிட்ட பொய் சொல்லிட்டு எப்படி அழுதேன் தெரியுமா…? என் அண்ணனை காட்டி கொடுக்க கூடாதுன்னு அதை இதுவரைக்கும் மாதாஜிகிட்ட கூட மறைச்சிட்டேன்…”

 

“ஆமாமா இது ரொம்ப புதுசுதான்… மேல…” கிருஷ்

 

“ஏய்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்போ மாதாஜி, எனக்கு  கிரீம் மப்ஃபின் வாங்கித் தர சொல்லி கொடுத்த காசுல  , எனக்கு ஒரே ஒரு முட்டை பப்ஸ் வாங்கி கொடுத்திட்டு  மிச்ச காசுல நீ மட்டும் ஸ்விஸ் ரோல் கேக் சாப்பிட்டியே அதை இது வரைக்கும் நான் வெளியில சொன்னேனா…?”

 

“நயந்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்போ எல்லாரும் பிக்னிக் போனமே , அன்னைக்கு ஆராக்கு இது பிடிக்கும், ஆராக்கு அது பிடிக்கும்னு எல்லா ஸ்நாக்ஸையும் உனக்கு பிடிச்சதா வாங்குனியே , அப்ப எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும் , அதை கூட இது வரை உங்க கிட்ட சொன்னேனா மாத்தாஜி…?”

 

“இல்லையேடா தங்கம்…”. வேதா, சிரிக்காமல் சொன்னார்.

 

 

“ம்…. க்கும்…. சொன்னேனா…? சொன்னேனான்னு…. இத்தனை வருஷத்துக்கு அப்புறம் இப்படி ஆவாத அம்மாகிட்டயும் , பொல்லாத பொண்டாட்டி கிட்டயும்

தேதி நேரம் திதி மொதக்கொண்டு போட்டு கொடுத்து, எனக்கு திதி கொடுக்க ஏற்பாடு பண்ணிட்டியேடி தீனி பண்டாரம்…. இதுங்க சும்மாவே என்னை மதிக்காதுங்க, அய்யயோ ரெண்டும் அனல் கக்குதுங்களே.” அத்தனையும் நம்ம கிருஷோட  வாய்ஸ் தான்…

 

 கிருஷ் ஆரா மேல கொடுத்த புகார் மனுக்கு எதிரா ஒரு இருபத்தைந்து பக்க குற்ற பத்திரிக்கையையே வாசிச்சதுக்கு அப்புறம்…

 

“ச்சை…. எவ்வளவு கேவலமான வேலையை பார்த்திருக்க நீ…அவளை வார்த்தைக்கு வார்த்தை புட் பாண்டா சொல்லிட்டு நீ ஸோமட்டோ ஸ்விக்கியா இருந்திருக்க… சின்ன புள்ளைக்கிட்ட புடுங்கித் தின்னதுலாம் ஒரு பொழப்பா..?” ரோஜா முறுக்கி கொண்டாள்.

 

 கீழ் கோர்ட்டு காறி துப்பினதுன்னா, அடுத்து மேல் கோர்ட்டு அப்பீலே பண்ண முடியாத அளவுக்கு அலங்க மலங்க அடித்தது…

 

“ஏன்டா… தங்கச்சியவே இந்தப்பாடு படுத்தியிருக்க, அப்ப உன் புள்ளை கிட்டயே பிடுங்கித் திங்கமாட்டன்னு என்ன நிச்சயம்…? ஜாக்கிரதை ரோ… இவன இனி உள்ள சேர்க்காத திருட்டு பையனா வந்து பொறந்திருக்கான் பாரு… வெக்கமா இல்லையா டா உனக்கு…?”

 

“இந்தா பாரு தாய் கிழவி ,ஒரு தீனிக்கு ஆசைப் பட்டது ஒரு குத்தமா…?அறியா வயசுல தெரியாம புடுங்கி தின்னேன்… அதுக்கு ஆளாளுக்கு ஒரு பெரிய மனுஷனை அசிங்க படுத்திட்டு இருக்கீங்க… எல்லாம் இந்த  புட் பாண்டாவால வந்தது… அஞ்சு பைசா ஆரஞ்சு மிட்டாய்க்குளாம் பஞ்சாயத்து வச்சுகிட்டு…” அவ கையில் ஒரு நறுக் வச்சிட்டு ஓடிட்டான்…

 

“பாருங்க மாதாஜீ…”. எலி மூஞ்சோடு வந்தவளை ,

 

“விட்றா… அவன் டின்னருக்கு வரும்போது தீஞ்ச ரொட்டியை போட்டு விட்டுருவோம்…  வா…. இளா என்னதான் சொன்னான்…? என்ன ஆச்சு அவனுக்கு சரியாவே சாப்பிடலை…” பேச்சை மாத்த …

 

“தெரியலையே மாதாஜி… என்னை பிக் அப் பண்ண கூட வர மாட்டானாம்… சின்னசாமி அங்கிள் கூட வரணுமாம்… இல்லைன்னா தங்கிட்டு வரனுமாம்…”

 

“அப்படியா சொன்னான்… நீ இங்கேயே இருடா… அவனா வந்து கூட்டிட்டு போனா மட்டும் போ…. இல்லைன்னா போகாத…”

 

பதில் சொல்லாமல் யோசனையோடு ஆரா….

 

“என்ன ஆச்சு மீ…?” ஆராவை காட்டி கிசு கிசுத்த ரோஜா விடம்….

 

“என்னன்னு தெரியலை ரோ,  ரெண்டும் குழம்புட்டும் … ஏதாவது மீன் சிக்குதான்னு பார்ப்போம்…”. பதில் சொல்லியபடி வீடு  கிளீனிங்கில் இறங்கிவிட்டார் வேதா…

 

வேகமா கிளம்பி போன இளா , வழக்கம் போல ப்ரேக் அடிச்சது மெரினா பீச்சில் தான்… 

 

ஃபோன் அடிக்க , எடுத்தால் கிருஷ் …

 

“சொல்லுடா…?”

 

“எங்க லைட் ஹவுஸ் பக்கத்தில இருக்கியா…?”

 

 “ம்……”

 

அவளோத்தான்… அடுத்த பத்தாவது நிமிடம், கிருஷ் வந்து இளா பக்கத்தில் உக்கார்ந்து விட்டான்…

 

“என்ன ஆச்சு…? ஆராவா…?”

 

……..

 

“அவ ஒரு லூசு…. ஏதோ சொல்லுறான்னு விடுவியா…? ஃபீல் பண்ணிக்கிட்டு…கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும்…”

 

“எங்களுக்கு கல்யாணமெல்லாம் நடக்குமாடா…?”

 

“சாரி மச்சான் . தப்பா சொல்லிட்டேன்…அவ லூசு இல்ல…நீதான் லூசு…”

 

திரும்பி கிருஷை பார்த்துவிட்டு மீண்டும் இளா கடலை வெறிக்க…

 

“பின்ன என்னடா…? அவ உனக்காக பிறந்தவ… இன்னும் புரியலையா உனக்கு…?”

 

“எனக்கு மட்டும் புரிஞ்சு என்ன பண்றது…? புரிய வேண்டியவங்களுக்கு எத்தனை வருஷம் ஆனாலும் புரியாது போலயே…”

 

 

 

“எல்லாம் சீக்கிரம் புரியும்… இப்பவே புரிய ஆரம்பிச்சுடுச்சு…. விட்டு பிடிப்போம்…”

 

“எப்படி சொல்ற..?”

 

“நீ அந்த பக்கம் கிளம்புனதும் , லட்டுக்கு ஃபுட்டே  இறங்கலை… மூஞ்சி தேய்ஞ்சு போச்சு…”

 

“ஐய்யோ அவ இன்னுமா சாப்பிடலை…?  வாடா வீட்டுக்கு போவோம்…”

 

“ஏன்டா பதறுற…? அதெல்லாம் ஒன்னும் ஆகலை… நல்ல தெம்பா.., அஞ்சு வயசுல ஆரம்பிச்சு பதினஞ்சு வயசு வரை நான் அவகிட்ட புடுங்கி தின்னதை எல்லாம் ஞாபக படுத்தி அசிங்கப்படுத்துற அளவுக்கு புஷ்டியாத்தான்  இருக்கிறா…ஒரு வேளை சாப்பிடாட்டி ஒன்னும் ஆகாது விடு , கொஞ்சம் கொழுப்பாவது குறையட்டும்…”

 

………………. இளா  திரும்பி முறைக்க,

 

“இல்லைடா இப்பயே போனால் ,மிச்சமிருக்கிற ஆறு வருஷக் கதையையும் சொல்லி அந்த காளியாத்தா ரெண்டுத்துக்கும் என்னை காவு கொடுத்திடுவா…. பொறு. டின்னர் டயத்துக்கு போவோம்…”

 

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா…”

 

“காலம் போன காலத்துல திருந்தி என்னாக போகுது… ஆனா ஒன்னு… கண்டிப்பா லட்டு உனக்குத்தான்… அதை எந்த கொம்பனாலும் மாத்த முடியாது…”

 

“எப்படிடா சொல்லுற..?”

 

“ பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி , வழிப்பறி பண்ணி அவகிட்ட வாங்கித் தின்னதையே வருஷம் தேதி கிழமைன்னு விலாவாரியா ஞாபகம் வச்சிருக்கா… வாழ்க்கை முழுக்க அன்பு காட்டி இருக்க…உன்னையா மறக்க போறா…?”

 

“அப்ப அவளுக்கு சோத்துக்கு  ஈக்குவலா என்னையும் பிடிக்கும்னு சொல்றியா…?”

 

“அப்படிலாம் பட்டுன்னு சொல்லிட முடியாது… சோறா ,நீயான்னு ஆராட்ட கேட்டா…, ரெண்டாவது இடம் கண்டிப்பா உனக்குத்தான் தருவா…”

 

“உன்னைய…”

 பட்டுன்னு ஒன்னு முதுகில் வைக்க…

 

“பின்ன என்னடா…? நீ கோவிச்சிட்டு கிளம்பினதும், புட் பாண்டா புட்டே வேணாம்னு சொல்லுதுன்னு சொல்லுறேன்…சும்மா கேள்வி கேட்டுகிட்டு… கூடிய சீக்கிரமே ஒரு மச்சானா …., நம்ம லட்டு…, நான் உனக்கு தாரை வார்த்து தர போற கிஃப்ட்டு… என்னை நம்பு…”

 

“டேய் மச்சான்… இந்த ஹேப்பியோட வாடா , உனக்கு பெக்கிங் டக் வாங்கித் தரேன்…”

 

“வேணாண்டா…. உன்னை நம்பி வாத்தை திங்க ஆசைப்பட்டு ,இன்னொரு முறை வாத்து மடையனாக நான் விரும்பல… ஆள விடு…”

 

“இன்னுமாடா அதை மறக்கல…?”

 

“வாத்தும் வாங்கி கொடுத்து பொண்டாட்டி கிட்ட கோத்தும் வாங்கி டோஸ் கொடுத்து… எப்படிடா அந்த துயரத்தை மறப்பேன்…”

 

“என்னமோ பஸ்ட் டயமா அசிங்கப்பட்டா மாதிரி ரொம்பத்தான் பண்ணுற… வாடா போவோம்…”

 

“ஆமாண்டா அசிங்கபடுறதுல நான் அவார்டு வின்னர்…நீங்களாம் மட்டும் அரியர் வச்சிருக்கீங்க” 

 

வார்த்தை கோவம் போல வந்தாலும், வாத்தை ஒரு கை பார்க்க…

 

பான் ஏசியாக்கு கிளம்பிட்டாங்க…

 

அவர்கள் வேதா இல்லத்திற்கு திரும்பியபோது,

 

சொன்னது போலவே சுக்கா ரொட்டியும், சுரைக்காய் கூட்டுமாய் செய்து வைத்து கொண்டு காத்திருந்தார் வேதா…

 

“ஆல்ரெடி ஃபுல் கட்டு கட்டிட்டு வந்தது தெரிஞ்சா, தாய்க் கிழவி தாறுமாறாக கிழிச்சு தொங்க விட்டுரும்…. அதனால் நீ ஏதாவது சொல்லி சமாளி…. என்னைய அஞ்சு நயா பைசா க்கு கூட மதிக்காதுடா மாப்பிள…” கிருஷ்,

 

“என்கிட்ட சொல்லிட்டல, எப்படி அசத்துறேன் பாரு…” இளா காலரை தூக்கிவிட்டு கொண்டான்…

 

இளாவை கண்டதும் தட்டை சாப்பிட எடுத்து வைத்தவரிடம், 

“எனக்கு உணவு வேண்டாம்…. வகுறு சரியில்லை டாலி…”

 

“என்னது வகுறு சரியில்லையா….? அப்போ பருத்திப் பால் சாப்பிடுகிறாயா…?”வேதாஜியும் இம்சை அரசியா ,

 

“வேண்டவே வேண்டாம் டாலி…”

 

“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, பாதாம் பாலாவது சாப்பிடுகிறாயா…?”

 

“இல்லை டாலி…”, இளா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏவ் ஏப்பத்துடன் கிருஷ் எண்ட்ரீயை போட்டு விட,

 

“உண்மையை சொல்லுங்கள் எங்கே போய் மேய்ந்து விட்டு வந்தீர்கள் இருவரும்….”

 

“டாலி அது நாங்க……..” இளாவுக்கு வேதாவிடம் பேச்சுக்கு கூட பொய் சொல்ல வரலை.

 

“என்னடா நீ…? இத்தனை நாளா என் கூட இருந்தும்  தொண்ணூறு வயசான ஒரு குடு குடு பாட்டியை கூட சமாளிக்க முடியாம திணருற…?”

வேதாவிடம் திரும்பி,

 “இங்க பாரு தாய்கிழவி ….., நாங்க சாயங்காலமே வாத்துக்கறியை வாயில உட்டுட்டோம்.  நீங்க தயாரிச்சு வச்ச விஷத்தை நாளைக்கு சூடு பண்ணி சுட சுட கொடுத்து மரண தண்டனையை நிறைவேத்திக்கோங்க… கேட்குதா…?” காது கேட்காதவரிடம் சொல்வது போல கத்தி சொல்லி,  கிருஷ் வேதாஜியை வம்பிழுக்க…,

 

“அடிங்க….”, கரண்டியை தூக்கி கொண்டு மொத்துவதற்கு துரத்தியவருக்கு, பின்னாலிருந்து இருந்து அலேக்காக கிருஷை அரெஸ்ட் பண்ணி உதவி செய்தான் இளா….

 

“உன் உசுரையும் காப்பாத்த, உனக்கும் சேர்த்து இங்க நான் உசுரை கொடுத்து போராடிட்டு இருக்கேன்… நீ என்னன்னா, நண்பன்னு கூட பார்க்காம இந்த பூச்சாண்டி கிட்ட என்னை புடிச்சு கொடுக்குற…, துரோகி…”

 

“விடாத இளா… புடி அவனை….” 

 

“இந்த வாயி இருக்கே வாய், இனிமே இது பேசுமா…பேசுமா…? சொல்லியபடியே வாயிலேயே ரெண்டு போட்டார்…” வேதா,

 

“வெறும் கையில அடிக்காத பேபி, கரண்டியை வாய்க்குள்ள உட்டு குத்து…” இளாவின் ஐடியாவில்,

 

“என்னடா நண்பன் அடி வாங்குறப்போ சியர் பண்ற…?” கிருஷ் கொந்தளிக்க,

 

“போடா … எனக்கு என் டார்லிங் தான் முக்கியம்… என் குட்டிமாவை பாட்டிமான்னு சொல்லிட்ட, இதுக்கு அப்புறம் என்ன நட்பு நமக்குள்ள…?”

 

“என்னால தாங்க முடியல சாமி… என் பொண்டாட்டி புள்ளையெல்லாம் எங்க….? நான் தனிக் குடித்தனம்  போறேன்…” கிருஷ் , 

 

“அவ தூங்க போயிட்டா… வளைகாப்பு அது இதுன்னு இன்னைக்கு ஒரே அலைகழிப்பா ஆயிடுச்சு ரோ க்கு…அவளுக்கும் ஆராக்கும் திருஷ்டி சுத்தி தூங்க சொல்லியிருக்கேன்… போயி அவளை தொந்தரவு பண்ணாம நீ அப்படி கதவு ஓரமா வராண்டாவில படுத்துக்க….” வேதா.

 

“அய்யயோ வராண்டா எதுக்கு…? வாசபடியிலே படுத்துக்கிறேனே…”

 

“இது நல்ல ஐடியா… வாட்ச்மேன்க்கு தர்ற சம்பளம்  மிச்சம்….” சொல்லிவிட்டு,

கிருஷை வறுத்து கொண்டிருந்தவரை, கையை பிடித்து இழுத்து வந்தான் இளா.

 

“நீ வா டார்லிங்…, உன் கையால அரளி விதையை அரைச்சு கொடுத்தாலும் எனக்கு அது அல்வா துண்டு போலத்தான் இனிக்கும்…”

 

“அது செய்யற அல்வாவே அரளி விதை அரைச்சுத் தான், ஆனாலும் என் பிரெண்டா இருந்துகிட்டு ஒரு வேளை சோத்துக்கு, நீ ஏண்டா இவ்வளவு கேவலமா நடிக்கிற…?” கிருஷ்.

 

“நான் அரளி விதையை அரைச்சு அல்வா செய்யறேன்னா…?” கையில் கிடைத்த டம்ளரை  கிருஷ்ஷை நோக்கி வேதா, எறிய அவன் தப்பித்து ஓடினான்.

 

“எனக்கு முதல்ல சாப்பாடு வைங்க… முன்ன பின்ன தெரியாதவங்கிட்டலாம் என்ன வெட்டிபேச்சு…? இந்த பக்கம் வா டாலி, கழுத்து  செயின அறுத்துட்டு போயிட போறான்…இன்னைக்கு  மதியமே  நீ பட்டுபுடவையில் இருக்கும்போது செல்ஃபி எடுத்து எஃப் பி,  இன்ஸ்டால, 

 

‘இளாவோட டாலி…

இனி அனுஷ்கா நயன்தாரா காலி ..’ ன்னு 

 

கேப்ஷன் போட்டு  போஸ்ட் பண்ணலாம்னு நினைச்சேன்… நான் அவசரமா கிளம்பிப் போனதில , அதை மறந்துட்டேன்.”

 

“அனுஷ்கா ரேஞ்சுக்காடா இருந்துச்சு பொய் சொல்லாத போ,” வேதா வெட்கமாய் புன்னகைக்க,

 

“அடப்பாவி வயசான கிழவின்னு கூட பார்க்காம இதை கொஞ்சுற… அதுவும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எல்லாத்தையும் ஈன்னு இளிச்சு கிட்டே ரசிக்குது …. இந்த ஆயா கிட்ட போடுற கடலைல  பாதியை ஆராகிட்ட போட்டிருந்தால் இந்நேரம் நீ அப்பாவாவே ஆகியிருக்கலாம்….” கிருஷ் முடிப்பதற்குள்

 

 மாடிபடியில் நின்று கொண்டு ரோஜா,

 

“அடாடடா … ஊரே தூங்கினாலும், உங்க வாய் மட்டும் ஓயாதே…. இப்ப ஏன் நடு ராத்திரியில இப்படி கத்துற கிருஷ்…?மனுஷன் தூங்க வேண்டாமா…?”

 

“ம்…வெண்டுதல்டி….” கிருஷ்

 

“உன் வீட்டுகாரனுக்கு சோறு வேணாமா…? வெளியிலேயே எங்கேயோ மொக்கிட்டு வந்திருக்கு…. கேளு…” வேதா சின்னதா கொளுத்தி போட்டார்.

 

“நான் மட்டுமா தின்னென்… கிழவிய எல்லாம் கிளியோபாட்ரான்னு நம்ப வச்சிட்டு இருக்கானே அந்த பச்ச துரோகியும் தான் சாப்பிட்டான்.”

 

“இளா எப்பவோ குட் பாயா சாப்பிட ஆரம்பிச்சுட்டான்… நீ எப்ப வர போற…?”

 

“நான் இனிமே இந்த வீட்டுல சாப்பிட போறதா இல்ல…”

 

“ஏன்…?”

 

“இவளுக்கு வளையல் காப்பு பண்ணுணீங்களே…., என்னை யாராவது கண்டுகிட்டிங்களா…?”

 

“என்ன…உனக்கும் வளைகாப்பு போடணுமா…?”, வேதா கேட்க,

 

“இல்லை… அவளுக்கு மட்டும் புள்ளைத்தாச்சியா இருக்கான்னு ஏழு வகை சோறு செஞ்சு போட்டீங்க… ஆனா அதுக்கு காரணமான என்னை பெருமை படுத்துறது போல ஒரு அஞ்சு வகை டிஃபன்னாவது செஞ்சு போட்டீங்களா…?”

 

தலையிலேயே அடித்து கொண்டார் வேதா…

 

“அவ தனியா புள்ளைக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டது போல, அவளுக்கு சந்தனம் பூசுறது என்ன..? ஆரத்தி எடுக்கிறது என்ன…?” கிருஷ் அடுக்கடுக்காய் புகார் எடுக்க,

 

“அது கஷ்டப்பட்டு புள்ளையை சுமக்கறா, திருஷ்டி படும்டா, ரோ அழகை பார்த்து…. அதுக்குதான் ஆலம் ஆரத்திலாம் எடுக்கிறது…” வேதா விளக்கம் தர,

 

“ யூ…   சீ… தாய்க்கிழவி, மீ டூ, ஈக்வல் ஹார்டு ஒர்க் பண்ணிருக்கேன்… எனக்கு திருஷ்டி படாதா..? வாட் இஸ் திஸ் ப்ளடி நான்சென்ஸ்…?”,

 

வேதா முறைத்தபடி இருக்க,

 

“ஒழுங்கா ஓடிடுடா, இல்லைன்னா செம்ம அடி வாங்கப்போற ஒரு ஆள்கிட்ட,” இளா  மிரட்ட,

 

“ரோஜாங்குற  பெண் சிங்கத்தோட பாதுகாப்பில் இந்த ஆண் சிங்கம் தூங்க போகுது,  அடிக்கிறேன் புடிக்கிறேன்னு காமெடி பண்ணிகிட்டு என் ரூம் பக்கம் வந்துறாதீங்க, அங்க நான் ரொம்ப உக்கிரமா இருப்பேன்…” சொல்லிவிட்டு படிக்கட்டில் காலை வைக்க, 

 

 

 

“ரூம் பக்கம் தூங்க வந்திடாத கிருஷ் அப்புறம், தர்ம அடி வாங்குவ…” ரோஜா பத்திரம் காட்டினாள்.

 

 

“நான் ஒன்னும் உன் கூட தூங்க வரல, என் புள்ளை கூட கட்டிபிடிச்சி தூங்குவேன் போடி….”

 

“ரோ, போயி பால் காய்ச்சி குடி… அப்படியே லட்டுவுக்கும் எடுத்து வை…சரியா சாப்பிடாமல் தூங்க போயிட்டா…”

 

“நீ இரு ரோஸ்… நான் பால் காய்ச்சறேன்.“ சொல்லியபடி கை கழுவினான் இளா…

 

“இவனைப் பாரு தங்கச்சிக்கு உதவி பண்றான்…, இது பொறுப்பான புள்ளை. நானும்தான் ஒன்னு பெத்தேனே, சாப்பிட வந்தவளை அண்டா குண்டான்னு சொல்லி விரட்டி விட்டு வெளில போயி, தனியா இஷ்டத்துக்கு திங்கிறது… அஞ்சு வகை டிஃபன் ஆறு வகை கூட்டுன்னு மல்லுக்கு நிக்குறது, சின்ன பிள்ளைக்கு சரி சமமா… அதெல்லாம் விட, என் பொண்டாட்டி என் புள்ளைன்னு சொன்னா பத்தாது… கூட மாட இருந்து ஒத்தாசை பண்ணனும் அவளுக்கு…” வேதா…

 

“நாங்க ஒத்தாசை பண்ணாமத்தான் அவ பிரகணன்ட் ஆனாளா… போம்மா அங்கிட்டு…” கிருஷின் பதிலில்,

 

“ச்சை… அசிங்கம் பிடிச்ச பய…. போடா…“ என்றபடி இளாவை நகர சொல்லிவிட்டு பாலை காய்த்து,

 

“இந்தா ரோ… சூடா குடிக்க வேண்டாம்… கொஞ்ச நேரம் தன்னால ஆறினதும் குடிச்சுட்டு, அப்புறம் தூங்குடா… காலையில எழுந்திருக்க வேண்டாம்… நான் பார்த்துக்கிறேன்…”

 

“ரோஸ் பால் பத்திரம்…. இங்க ஒரு முரட்டு திருட்டு பூனை சுத்திட்டு இருக்கு… அப்புறம் பாலை ஸ்வாஹா பண்ணிட போகுது.. கையிலேயே வச்சுக்க கீழ வைக்காத…” இளா வார்நிங் கொடுத்தான்.

 

கிருஷ் , கடு கடுத்தபடி ரோஜாவின் பின்னே நடந்தான்…

 

 

 

சாஷா…