Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-23(1)

Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-23(1)

  1. கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…

அத்தியாயம் 23 (1)

 

ஆராவின் பாட்டி தனஞ்ஜெயம் அடுத்த நாள் குடும்பத்துடன் வருவதாக அறிவிக்க,

 

இங்கு ஆராவைத் தவிர யாருக்கும் உணவு இறங்கவில்லை.

 

அவள் தட்டில் அவளுக்காக உணவு போட்டுவிட்டு வந்து, அவள் ஒரு வாய் சாப்பிட்டு, வேதாவுக்கு ஒரு வாய் தர, வேண்டாம், தலையாட்டி

மறுத்த வேதா அணைத்து கொண்டார். கண் கலங்கவில்லை, ஆனால் மனது கனத்திருந்தது.

 

“மாத்தாஜி, நான் உங்களைலாம் விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன், டோண்ட் வொர்ரி, பீ… ஹாப்பி.”

 

சொல்லிவிட்டு “அண்ணி, பாப்பாக்கு பசிக்கும்”, 

ரோஜாவிற்கு ஒரு கை  சாப்பாடு ஊட்டி விட்டாள். ரோஜாவும் அதோடு போதும் என்க,

 

“இப்படி உம்முன்னு இருந்தீங்கன்னா, நானே அந்த ஆயா பாட்டி கூட ஓடிப் போயிடுவேன்.” ஆரா மிரட்டலில்

 

“நீ வீட்டை விட்டு காலை வெளில எடுத்து வை, காலை உடைச்சுடறேன்.” கிருஷ் திட்டினான்,

 

“போடா … வெவ் வே…” சொல்லி விட்டு போயி இளாவின் அருகில் அமர்ந்து தின்ன தொடங்கினாள்.

 

“இளா, தண்ணி வேணும்டா”

 

அவன், ஆரா மண்டையில் கொட்டிவிட்டு தண்ணீர் எடுத்து வர சென்றான்.,

 

“இது என்ன மாதிரியான ஜந்துன்னே தெரியலையே.? வீடு இவளோ ரணகளத்தில் இருக்குறப்போ, இதுக்கு மட்டும் சோறு கேட்க்குது.” தலையில் அடித்துக் கொண்டான்.

 

“அவளுக்கு பசி அவ சாப்பிடுறா. உனக்கும் வேணும்னா போயி எடுத்துட்டு வந்து தரேன் கொட்டிக்கோ.” கடுப்பில் ரோஜா.

 

கிருஷ் திரும்பிக் கொண்டான்.

 

மீண்டும் அமைதி, இளா தண்ணீரை ஆராவிடம் தந்து விட்டு,

 

“யாரும் கோபமோ கஷ்டமோ பட வேண்டாம். நாளைக்கு அவங்கள்ளாம் வரட்டும், என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம். ஆரா மேஜர். அவளோட விருப்பம் இல்லாம யாரும் அவளை தூக்கிட்டு போக முடியாது. எல்லாரும் போயி நிம்மதியா  தூங்குங்க. “

 

“யாரு இவளை நம்புறியா..? நாலு குலாப் ஜாமுனை கிண்ணத்துல போட்டு  கார் டிக்கில வச்சுட்டாங்கன்னா , இதுவே மோப்பம் பிடிச்சுட்டு போயி அவுங்க கார்ல ஏறிடும். அப்படியே டிக்கிய மூடி புடிச்சிட்டு போயிடுவாங்க.  நம்ம சைடு அவ்ளோ வீக்கா இருக்கு.” கிருஷ்,

 

நக்கலுக்கு ஆரா,

 

“டேய் அண்ணா, நான் என்ன லக்கேஜ்ஜா., டிக்கியில் அமுக்கிப் போட்டு கொண்டு போக.? இல்ல,   மசால் வடைக்கு மயங்கி பொறில மாட்டுற பெருச்சாளியா.” 

 

“இல்ல, சக்கரை பொங்கல்க்குக் சரண்டர் ஆவுற சுண்டெலி.”

 

கிருஷ் பதிலில், ஆரா கடுப்பாகி

 

“மூஞ்ச பாரு. நாளைக்கு நான் ஓடிபோயிடுவனே , நீ என்ன பண்ணுவ?”

 

பழிப்பு காட்டி சொல்லியதை, விளையாட்டாய் இருந்தாலும், எல்லாரும் பதறி பார்க்க, இளாவிடம்,

 

“எல்லாரும் லூசாயிட்டாங்க இளா, நீதான் கரெக்ட்டா சொன்ன. எனக்கு எங்கேயும் யார் கூடவும் போற ஐடியா இல்ல, சரி… நான் போயி தூங்குறேன்ப்பா.”

 

“மாத்தாஜி குட் நைட்,”

 கன்னத்தில் முத்தமிட்டு விட்டு, 

 

ரோஜாவிடம் சென்று , 

“அத்தைக்கு தூக்கமா வருது பாப்பு, நாளைக்கு கதை சொல்றேன்,” நிறை மாத வயிறில் முத்தம் வைத்து, பை சொல்லி விட்டு, 

 

“அண்ணி நீங்க சாப்பிட்டு தூங்குங்க, பாப்பாக்கு பசிக்கும்.”

 

இளாவிடம் திரும்பி

 

“இளா, நாளைக்கு ஆராஸ் போகட்டா,? ரெண்டு வெட்டிங் சாரி டிசைன் பண்ணனும்.” கேட்க,

 

“நீ போயி டிசைன் டிசைன்னா கிழிச்சதுலாம் போதும். வீட்டுலயே உக்காரு.” கிருஷ் கத்தினான்,

 

ஆரா அவனை முறைக்க,

 

“வேண்டாம் லட்டு. அப்புறம் பார்த்துபோம்.” இளாவின் பதில் வந்ததும்,

 

 “நேத்து கிருஷ் அண்ணா, வர்றவங்களுக்கு பொங்கலும் புளியோதரையும் போட்டு துரத்தி விடுன்னு, சொன்னாங்கன்னு , பொங்கல் செஞ்சுட போறீங்க, மாதாஜி , எனக்கு பொடி இட்லியும் தேங்காய் சட்னியும் வேணும்,”

 

ப்ரேக் பாஸ்ட் மெனுவையும் தந்துவிட்டு,

 

கிருஷ்ஷின் அருகில் வந்து, கடந்து செல்ல இடமே இல்லாதது போல இடித்து தள்ளிவிட்டு ஓடி விட்டாள்.

 

எல்லார் முகத்திலும் புன்னகை.

 

“சரியான சோத்து மூட்டை, வீடு பத்தி எறிஞ்சாலும் , உள்ள பாய்ஞ்சு போயி , சோத்துக் குண்டானை காப்பாத்தி கையோட எடுத்துட்டு வந்து ,வேடிக்கை பார்த்து ட்டே திங்குற கேஸ், பின்ன எப்படி இருக்கும்.”

தலையில் அடித்து கொண்டான் கிருஷ்.

 

அனைவரும் மனம் லகுவானதும் உண்டு விட்டு உறங்க செல்ல, 

 

இளா சென்றது, ஆராவின் அறைக்கு.

 

ஆராவை பார்த்து கொண்டே இருக்க தோணியது அவனுக்கு. தலையை கோதிவிட்டு கொண்டே , அவள் முகமருகில் கட்டிலின் கீழே தரையில் அமர்ந்து கொண்டான்.

 

தூங்கிக் கொண்டிருந்தவளின், உள்ளங்கையை விரித்து அதில் அவனின்  முகத்தை சாய்த்து கொண்டே அவள் முகம் பார்த்திருந்தான்.

 

ஏதேதோ பழைய நினைவுகள், எல்லாவற்றிலும் அவன் ஆரா, சுற்றி சுழன்றடித்து ஆட்கொண்டாள். இளாவின் கண்களில் கண்ணீர். 

கண்ணீரும், இரண்டு நாள் மழிக்கப்படாத தாடியும் உறுத்தி ஆராவினை எழுப்பி விட,

 

“இளா, ஏன் அழற..? என்னாச்சு..?” சுற்றி முற்றி பார்த்து திரு திருத்தாள்.

 

“ஒன்னுமில்லடா லட்டு நீ தூங்கு.” எழுந்து செல்ல முயன்றவனை இழுத்து, வயிறை கட்டிக்கொண்டு, 

 

“இப்படி அழுதுட்டு போகாத…? பிளீஸ். எனக்கு கஷ்டமா இருக்கு. ஏற்கனவே என்னை விட்டுட்டு நீ தனியா இருக்க ஆரம்பிச்சுட்ட,

இப்போ ஒரு மாதிரி இருக்க, என்னை நம்பலையா..?”

 

“அப்படி இல்ல லட்டு. இதுவரைக்கும் உனக்கு நான், எனக்கு நீதான்னு இருந்துட்டோம். இப்போ உன்னை சொந்தம் கொண்டாட வேற ஆளுங்க இருக்காங்கன்னு நினைக்கும் போது , நான் தனியா ஆகிட்ட மாதிரி ஒரு ஃபீல். என்னை விட அவுங்களுக்கு என்ன உன் மேல உரிமைன்னு ஒரு பொறாமை. விடுடா உனக்கு இது புரியாது. தூங்கு நான் போறேன்.”

 

அவன் கைகளை பிடித்து கொண்ட ஆரா,

 

“எனக்கு புரியாது, ஏன்னா நான் லூசு. எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் ஏன்னா நான் லூசு..? ஆமா எனக்கு எதுவும் புரியாது புரியவும் வேண்டாம், ஆனா எனக்கும் ஒரு மனசு இருக்கு. அதுல உங்க எல்லார் மேலயும் கொள்ளை கொள்ளையா அன்பு இருக்கு. உன்னை மட்டும்தான் இந்த உலகத்திலேயே எனக்கு ரொம்ப பிடிக்கும் இளா. அதுக்கும் மேல எனக்கு எல்லாமே நீதான். இப்போ கூட நீ என்னால தான் அழரன்னு எனக்கு தெரியும். ஆனா என் மரமண்டைக்கு எதுக்குன்னு தான் புரியல. என்கிட்ட உனக்கு ஏதோ வேணும் தெரியும். உன் கண்ணு என்ன கேட்க்குதுன்னு,  அது என்ன சொல்ல வருதுன்னு எனக்கு தெரியல. தெரிஞ்சா அதை உனக்கு தராம என்னால வேற யாருக்கு தர முடியும்?. என்னால, மத்தவங்க போல புத்திசாலித்தனமாக  உன் முகத்தை பார்த்து கண்டு பிடிக்க முடியல, நான் தத்தி. நீயே சொல்லிடென் பிளீஸ்…”

 

ஆரா ஆதங்கத்துடன்  கண்களை குளமாக்கியபடி சொல்ல,,

 

“எதுவும் இல்லடா, நீ அழாத. சாரி … சாரி” அணைத்து கொண்டு கண்ணை துடைத்து விட்டான்.

 

அழுகை நிற்காமல் செல்லவே..

 

கண்ணீர் நிரம்பிய இமைகளில் முத்தங்கள் வைத்து, 

 

“சாரிடி, வெரி சாரி.” 

 

அவன் சாரியில் கண்ணைத் திறந்து அவனை சிறிய சிரிப்போடு அவள் பார்த்திருக்க,

 

” எனக்கு உன்கிட்ட இருந்து இந்த பாசம் மட்டும் போதும்,”

 

சொல்லி இடது கன்னத்தில்  ஒரு முத்தம் வைத்து, 

 

“எனக்காக தரணும்னு யோசிச்ச பார்த்தியா அது போதும்,”

 

சொல்லி வலது கன்னத்தில் ஒரு முத்தம், வைத்து விட்டு, 

 

“எனக்கு நீ மட்டும் போதும், எனக்கு எந்த குறையும் இல்ல,லவ் யூ டா லட்டு,” 

 

காதலனாய் அவளின் உதடுகளை நெருங்கியவன், வெகு நெருக்கத்தில் அன்றைய முத்தத்தில் ஆராவின் அழுகை நினைவுக்கு வர, 

 

தன் உதடுகளை மடித்து,  கடித்து சமப்படுத்திகொண்டு அங்கிருந்து வெளியேற பார்க்க,

 

கைப் பிடித்து இழுத்தவள்,  

 

“ஏன் கொடுக்காம போற,?”

 

“எது?” தெரியாதவன் போலேயே கேட்க,

 

“முத்தம்.” தயங்கியபடி சொல்லிவிட்டாள்.

 

“இல்ல வேண்டாம்.”

 

“ஏன்?”

 

“அன்னைக்கு நீ ரொம்ப அழுதிட்ட, கஷ்டமாயிட்டு ,வேண்டாம்.”

 

“பரவாயில்ல அழ மாட்டேன். கொடு.” அடம் பிடித்தாள் ஆரா

 

“அப்போ நீ கொடு.” இளா குறும்பாய் கேட்க,

 

அவள் கண்ணை இருக்க மூடியபடி நடுங்கிய உதடுகளை கட்டுபடுத்தி, அவன் முகத்தின் அருகில் உதட்டை குவித்து வர,

பார்த்ததும் சிரிப்பு பீறிட, 

 

“என்னை கிறுக்கனாக்குற நீ,”

 

 அவள் முகத்தை பிடித்து உதடுகளை தன் கன்னத்தில் வாங்கிக் கொண்டான்.

 

அவள் ,”சாரி, சொதப்புறேன்.. ரொம்ப…., இன்னொரு டேக் போவோம்.” 

 

“இங்க என்ன ஷூட்டிங்கா போகுது,   ஒன்னும் பிரச்சினை இல்லை.”

 

அவள்  கன்னத்தில் மீண்டும் ஒரு முத்தம் வைத்தவன் , 

 

“எனக்கு இது போதும் இப்போ. தாங்க்ஸ்.”

 

சொல்லி, மூக்கை பிடித்து செல்லமாய் ஆட்டி விட்டு சிரித்த முகத்துடன் சென்று விட்டான் தூங்க.

 

ஆராவிற்க்கு, சிறியதாய் ஒரு ஏமாற்றம்.

 

‘ஏன்..? போயிட்டான். நாம கொடுக்க தான வந்தோம். நம்ம முத்தம் பிடிக்கலையா..? எனக்கு கொடுக்கவே தெரியல. ஒருவேளை நம்ம உதடு, கிட்ட பார்க்க  கேவலமா இருக்கோ???.’ குழப்ப,, 

 

‘ ஊ ‘ சொல்லி உதடு குவித்து கண்ணாடியில் பார்த்தவள், உதடுகளை குவித்து அதே ‘ஊ’ வுடன் ஒரு செல்ஃபி எடுத்து இளாவின் வாட்ஸ்அப் பிற்கு ‘சாரி, அண்ட் குட் நைட்’ டைப்பி மெசேஜ்ஜுடன் போட்டோ அனுப்பி விட்டு, இளாவின் நினைவுகளோடேயே உறங்கி போனாள்.

 

அங்கே…தனக்கு உதடுகளை குவித்து அவள் அனுப்பிய ஃபொட்டோவை பார்த்ததும்,  இளாவிற்கு ஒரே சந்தோஷம்…

 

“அச்சோ , லட்டு குட்டி, அப்படியே சாப்பிடற அளவுக்கு செம்மையா இருக்குறடி”, போனில் அவள் நிழலுக்கு,  உம்மா தந்துவிட்டு, சிரித்த முகத்துடன் தூக்கத்தை தழுவினான்.

 

விடிந்ததும் அந்த வீடு , விருந்தினர்களின் வருகைக்கு தயாராகி கொண்டிருந்தது. இன்னும் தூக்கத்தில் ஆரா.

 

கிருஷ்சையும் இளாவையும், ஹாலில் அனைவரும் உட்காரும்படி ஏற்பாடு செய்ய சொல்ல, பழைய கால முற்றம் வைத்த ரோஜா வீடு, புணரமைப்பிற்க்கு பின்னும் போதுமான அளவில் உட்கார இருக்கைகள் தயார் செய்யபடாத்தால், 

இரண்டு சிங்கிள் கட்டில்களை கொண்டு திவான் செட்டப் வைத்து கொண்டிருந்தனர். 

 

கிருஷ் வேண்டா வெறுப்பாய் , தொம்மு தொமென்று நகர்த்தி வைத்து கொண்டிருந்தான். இளா அவனை முறைத்தபடி வேலையை செய்ய,

 

ரோஜா , “அது எங்க தாத்தா யூஸ் பண்ணின நாற்காலி கிருஷ் பார்த்து பதமா நகர்த்து, அதை உடைச்சா உன் மண்டைய உடைச்சுடுவென் நான்.”

 

“நான் கூட புதுசுனு நினைச்சேன்,”  வேண்டுமென்றே வேகமாய் நாற்காலியை வேகமாக கீழே  வைக்க,  அதன் கால் ஒடிந்து விழுந்தது.

 

ரோஜா அனலை கக்க, இளா, ரெண்டு அடி முதுகில் வைத்தான்.

 

“அடேய் ஏன்டா காலையிலேயே வேலை செய்யுற ஒரு குயந்த  புள்ளைய  இப்படி கும்முறீங்க..” 

 

ரோஜாவிடம் திரும்பி ,

 

 “இங்க என்ன லுக்கு…? அது உங்க தாத்தாவுக்கு தாத்தா யூஸ் பண்ணுனது போல,  மாமன் லைட்டா டச் பண்ணுணதுக்கே  பப்பரப்பேன்னு பல்லிளிச்சுக்கிட்டு போய்ட்டு… ஓடி போய்  அந்த தாய்க்கிழவிகிட்ட புள்ள பிடிக்க எத்தனை பேர் கொண்ட கும்பல் வராங்கன்னு கேளு…? அதுக்கு தக்க, அடிச்ச ஆணியில்,  தேவை இல்லாத ஆணியை புடுங்குவோம்.”  சொல்ல, 

 

அவள் முறைத்து கொண்டே போய் விட்டாள்.

 

“ரோஸ் வீட்டை ரெனவெட் பன்றப்போ அந்த காண்டிராக்ட்டர் அவ்வளோ  சிலாகிச்சு  சொன்னார், இங்க இருக்கிறதுலாம் ஆண்டிக் பீஸஸ், பத்திரமா பார்த்துக்கொங்கன்னு… ஏன்டா ரோஸ் அவ்வளவு தூரம் சொன்னுச்சுல…அப்பவும் இப்படி   உடைச்சுட்டியே…? எரும… எரும, எருமைக்கு தெரியுமா ஏரோப்பிளேன் அருமை…?”

 

“எனக்கு தெரிஞ்சு இந்த ஜில்லாவுலயே ஆன்டிக் பீசு, ஆராவோட ஆயா ,அந்த புள்ளை பிடிக்கிற பாட்டி தான். அதுவும் இன்னும் கால் நூற்றாண்டுக்கு காலாவதியாகாம சேஃபா தான் இருக்கும். ஆக்ச்சுவலி, அந்த பல்லு போன ஆயாவுக்கு நான் ஆதாயம் தான் பண்ணிருக்கேன். அந்த தனம் ஆயா அது பாட்டுக்கு அக்கடான்னு சாய்ஞ்சு உக்கார்ந்து அந்த நேரம் சேர் கால் உடைஞ்சு  , பாட்டி  பனால் ஆகியிருந்தா என்னத்துக்கு ஆகறது. இது தெரியாம…”

 

கிருஷ் தமாஷ் செய்து தலையில் அடித்து கொள்ள,

 

இளா , கையை கட்டிக் கொண்டு, 

 

“கொஞ்சம் அங்க பாரு கண்ணா…” பின்னே காட்ட,

 

கிருஷ்ஷின் பின்னால், வேதா உக்கிரமாக நின்று கொண்டிருந்தார்.

 

“அங்க பாருங்க மீ, அந்த சேர் காலை தான் உடைச்சுட்டான்.” ரோஜா கம்பிளைன்ட்டில்,  சேரை பார்த்து விட்டு மீண்டும் கிருஷ்ஷை பார்க்க,

 

“ஹி ஹி ஹி… ஃபன்னி கேர்ள். போயி வர்ற கெஸ்ஸ்ட்டுக்கு சீட்டிங்க்கு கேட்டுட்டு வான்னு அனுப்பினா, கையோட தாய் கிழவியை கூட்டிட்டு வந்து ச்சீட்டிங் பண்ற. இங்க ஒரே புழுக்கமா இருக்கு, நான் குளிக்க போறேன். “

நழுவ பார்த்தவனிடம்,

 

“நில்லுடா, அவுங்க வந்துட்டு போகுற வரைக்கும், ஒரு வார்த்தை பேச கூடாது அவங்ககிட்ட, அது வரை நீ மவுன விரதம்.” 

வாயைக் கோணிக்கொண்டு கிருஷ் செல்ல,

 

“அதோட, நீ உடைச்ச சேரை எடுத்துட்டு போயி நீயே ரிப்பேர் பண்ணிட்டு வந்து தரணும் ,நாளைக்கே.” வேதாவின் கட்டளையில், கிருஷ் முறுக்கி கொண்டு நகர,

 

“என்னடா பதில் சொல்லாம போற…?”

 

“நான் இன்னைக்கு மௌன விரதம்.” சென்று விட்டான்.

 

“மூஞ்ச தூக்கி ஏழு முழம் நீட்டி வச்சிருக்கான் இவனை நம்பாத இளா. அவங்க வந்தா மரியாதை இல்லாம இடையில் வாய்விட்டுற  போறான் ஜாக்கிரதை.”

 

ரோஜாவிடம்,

 ” ரோ  அவன் மேல நீயும் ஒரு கண்ணு வச்சுக்கோ. சின்ன எருமை  இன்னும் எழும்பாம என்ன பண்ணுது..?  அதை எழுப்பி குளிச்சு ரெடியாக சொல்லு ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடுவாங்க.  அதோட நல்லதா பளிச்சென ஒரு சுடிதாரை போட்டுக்க சொல்லு. இது பாட்டுக்கு, எதுவும் மிடி கிடின்னு போட்டுகிட்டு நின்னுச்சுன்னா, அவங்க என்ன இப்படி பொண்ணு வளர்த்து வச்சிருக்கொம் நாமன்னு  நினைச்சிட போறாங்க.”

 

 பந்தமில்லாத,  யாரோ ஒருத்தரின் வளர்ப்புதானே பொய்யாகி விட்டதென யாரும் நினைத்திட கூடாது என்ற கவலையில்,

வேதா சொல்லிவிட்டு, அவர் வேலையை பார்க்க சென்றுவிட்டார்.

 

சரியாக ஒன்பது நெருங்க, ஒரு இன்னோவா ஃபார்ச்சூன், ஒரு பழைய மாடல் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அம்பாசிடர் கார்,ஒரு ரினால்ட் டஸ்ட்டர் அணி வகுக்க, மொத்த குடும்பமும் வந்திறங்கியது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!