Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-24(2)

கண்மணி 24 (2)

 

 

அனைவரும் கிளம்பும் போது, ஒவ்வொருவராக விடைபெற்று சொல்லிக்கொள்ள,

 

ஜெயத்தின் மகன் கனிஷ்க் வெறுமனே அனைவரிடமும் தலையசைத்து செல்ல,

 

குமரன் , விடை பெற, “வர்றேங்க” சொன்னான் வேதாவிடம், 

 

இதைப்பார்த்த தனம்,  “ஜெயம் , கொடி  போலதான் வேதாவும் உங்களுக்கு, விமலன் மகன் குமரன் போலத்தான் இளா உங்களுக்கு சொல்லி, 

தன் மகள்கள் வயிற்று பேத்திகளிடம்,

இளாவை மாமா,  வேதாவை சித்தி , கிருஷ்ஷை அண்ணா, ரோஜாவை அண்ணி என்றும் அழைக்குமாறு அறிவுறுத்தி,

மகன் வயிற்று பேரப் பிள்ளைகளிடம், கிருஷ்சை மாமா, ரோஜாவை சகோதரி , வேதாவை அத்தை” என்றும் அழைக்கும்படி கூற,

சிறியவர்கள் முகம் சுண்டி விட்டது.

 

“என்ன பார்க்குறீங்க சொல்லிட்டு வாங்க”, சொல்லியபடி கறாராய் அவர் நிக்க,

 

ஜெயத்தின் மகள் ஸ்வேதா, இளாவிடம் வந்து “போயிட்டு வரேன் மா…. மா,” தயங்கியபடி பெரியார்களுக்காய் கூற,

 

ஆரா, இளாவின் கைகளை பிடித்து கொண்டு , அவன் முன்னே மறைத்தார் போல, இது என் பொம்மை, சொல்லும் குழந்தையாய்,  ஒரு கோபப்பார்வை பார்த்தாள்,

 

ஸ்வேதாவின் கண்களில் மின்னல், தன் தங்கைகளை பார்த்து, ஆராவைக் கண்ணை காட்டி,

 

இளாவை, “மாமா… அப்போ நான் கிளம்புறேன்..” சொல்லிச் செல்ல,

 

அவன் சிரித்து விடை கொடுக்க, ஆரா, அவனை முறைத்து வைத்தாள்.

 

வேதா ஆராவிடம், “லட்டு, அக்காகிட்ட போயிட்டு வாங்க சொல்லு,” சிறிய குரலில், கண்டிக்க,

 

” ஒய்  மாத்தாஜி, , மாத்தாஜி ஒய்…?” கடுப்பாய் கேட்டாள்.

 

“சொல்றாங்கள்ள, சொல்லு லட்டு,” இளா, தோளைத் தட்ட,

 

அனைத்தையும் பார்த்தா ஸ்வேதா, ஆராவை, கடுப்பேத்த,

“நான் போயிட்டு வரேன் , தங்க….ச்சி…சி….சி…,”

 

ஆரா, பல்லைக் கடித்து , இளா வேதா முகம் பார்த்து , 

“போயிட்டு வாங்க அக்.. க்கா…” துப்பினாள்.

 

ஸ்வேதா சிரித்தபடி செல்ல, 

வால் பிடித்தபடி அவளது தங்கைகளும் வந்து,

 

” போயிட்டு வர்றோம் ஆராதனா,” ஒருத்தியும்

“போயிட்டு வர்றோம் அக்கா,” இன்னொருத்தியும் வேகமாய்  ஆராவிடம் சொல்லி விட்டு,

 

இளாவிடம் , “பை… இளா… மாமா…” வேண்டும் என்றே கத்தி சொல்ல,

 

ஆரா, இன்னும் அழுத்தமாய் இளாவின் கைகளை பிடித்து, கிள்ளிவிட்டு தன் கைகளுக்குள் வைத்து கொண்டாள்.

 

“போயிட்டு வாங்க,” அவன் சிரித்தபடி சொல்ல, ஆராவின் முகம் சுண்டி விட்டது. 

 

அனைவரும் சென்றதும் கோபமாக தன்னறையில் போயி படுத்து கொண்டாள்.

 

கிருஷ்,   “நான் கூட என்னவோ நினைச்சேன், அந்த பாட்டி, இவ்வளோ நல்லவங்களா இருப்பாங்கன்னு நினைக்கல,”

 

ரோஜா , “நீ யாரைத்தான் நல்ல விதமா நினைச்ச, அவங்களை நினைக்க,”

 

“ஆனாலும் எனக்கு ஒரே ஒரு வருத்தம்.. இளாவுக்கு மட்டும் மூணு அத்தை பொண்ணாம், எனக்கு மட்டும் ஒன்னே ஒண்ணாம், அதுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி கூப்பிட்டு வருவாங்களாம், இதுலாம் பெரிய அநியாயம்… நான் ஒத்துக்க மாட்டேன்.”

 

“இங்க யாரும் உன்கிட்ட கருத்து நியாயம்லாம்  கேட்கல,” வேதா சொல்ல, இருந்தாலும் மனம் தளராத கிருஷ்,

 

“இருந்தாலும் நான் கேப்பென், இவனுக்கு மட்டும் மூணு மச்சினிச்சி, எல்லாம் அவனை மாமா மாமான்னு கொஞ்சுதுங்க, எனக்கு கட்டி வச்சவளுக்கும் தங்கச்சி இல்ல, தானா கிடைச்ச கொழுந்தியாளையும்  கட்டி குடுக்கறப்ப கூட்டிட்டு வந்துருக்காங்க. எனக்கு மச்சினிச்சி வேணும்… இப்பவே…”

 

 “உனக்கு மச்சினிச்சி ஒன்னுதான் கேடு. போடா உள்ள,” சொல்லிவிட்டு வேதா செல்ல, கிருஷ் உடனே,

 

“எனக்கென்ன குறைச்சல் ,அறிவில்லையா, அழகில்லையா…?”

 

“தொப்பையில்லையா, தொந்தியில்லையா, மந்தி குரங்கு போல வாலிலிலையா, கிழிஞ்ச வாயில்லையா, பிஞ்சு போன பாயில்லயான்னு வரிசையா அடுக்கு மொழி பேசு, ஏன் நிப்பாட்டிட்ட,?”

ரோஜா முறைத்து நிற்க,

 

“சரி, சரி போ. கூட தங்கச்சி இல்லாம தனியா பொறந்துட்டு, எகத்தாளத்தை பாரு. புருஷனை என்ஜாய் பண்ண விடாம செஞ்சிட்டமேன்னு, கொஞ்சமாச்சும் குற்ற உணர்ச்சி இருக்கா உனக்கு,  நான் கோவிச்சுட்டு போறேன், இமய மலைக்கு,”

 

“தனி ஒரு மனிதனுக்கு மச்சினி இல்லையென்றால், மனைவியை மறந்திடுவோம்,”

 

வீர வசனம் பேசி கிருஷ் நகர,

 

அவன் காலரை பிடித்து , “எங்க எஸ்கேப் ஆகுற,? மனைவியை மறந்துட்டு மலை ஏறுறதுக்கு முன்னாடி, நீ ஒடைச்ச எங்க தாத்தா சேரை சரி பண்ணிட்டு வா, அப்படியே அடுக்கு மொழி பேசி, நடிச்சு, ஓப்பி அடிச்சு ஏமாத்திடலாமுன்னு நினைக்காத ,” 

ரோஜா மிரட்ட,

 

“ஆஆன்… பொல்லாத சேர்… இரு, என் ஜூனியர் புலி குட்டி பொறந்ததும், ஊருக்கு போக முன்னாடி, உன் பழைய தாத்தா யூஸ் பண்ணின, பழைய ஓட்டை ஃபர்னிச்சர், மிச்ச  தட்டு முட்டு சாமான்னு எல்லாத்தையும் தூக்கி எடைக்கு போட்டு பேரீச்சம் பழம் வாங்கி சாப்பிட்டிடறேன்.” கிருஷ்.

 

“உனக்கு ஆன்டிக் ஃபர்னிச்சரை வித்து பேரீச்சம் பழம் கேட்குதா, இரு உன்னை தூக்கி காய்லாங்கடையில் போடுறேன்,” இளா, அவனை குண்டு கட்டாக தூக்க,

 

“விடாதீங்க அண்ணா, தூக்கிட்டு போயி காய்காங்கடையில் போட்டு, அஞ்சு பத்து குறைஞ்சாலும் பரவாயில்ல, கொடுக்கிற காசை  வாங்கிட்டு வாங்க,”

 

“எச்சூஸ் மீ, ரோசா,  தகரத்தை தான் காய்லாங்கடையில் போடணும், என்னைய போல ,தங்கத்தை சேட்டு கடையில் தான் வைக்கணுமிடி” கிருஷ்ஷின் விளக்கத்தில்,

 

ரோஜா , குஷனை தூக்கி அடிக்க, இளா கிருஷ்ஷய் பிடித்து கொண்டு அவளுக்கு உதவினான். அடித்து அஞ்சு நிமிஷம் ஆனதும்,

 

“என்னடா , உடம்புல ஒரு பார்ட்டுக்கு மட்டும் மஸ்ஸாஜ் கம்மியா இருக்கு, தெரப்பிஸ்டு டீமுல ஒரு ஆள் குறையுது போலயே, எங்கடா அந்த புளி மூட்டை…?”

 

அப்போது தான் ஆராவை அனைவரும் தேடினர்.

 

“அவ ரூமில் இருப்பா, நான் போய் பார்க்குறேன் , நீங்க போங்க,” அனுப்பிட்டு , இளா ஆராவின் அறைக்கு சென்றான்.

 

அங்கே  போர்வையால்  முழுதாய் மூடிக் கொண்டு, ஆரா.

 

இளாவிற்கு சிரிப்பு பீரிட, “ஓய், இப்ப எதுக்குடி முழுசா மூடிட்டு படுக்கையை போட்டு இருக்க,?”

 

அசைவில்லாமல் இருக்கவே, 

 

ஆராவின் போர்வையை இவன் இழுக்க, 

 

“நான் யார்கிட்டேயும் பேசுறதா இல்ல,” எழுந்து உட்கார்ந்த ஆரா போர்வையை விட்டு வெளியே வராமல், அப்போதும் போர்வைக்குள்ளேயே  உக்காந்திருந்தாள், அவனை பார்க்காமல்,

 

“ஏன் பேசமாட்டீங்க மேடம்..?” இன்னும் சிரிப்பு கலையாமல் இளா கேட்க,

 

“அவளுங்க மாமா மாமான்னு சொல்லி கொஞ்சுறாளுங்க, உன்னை, நான் வேணாம்னு தடுத்தும் பல்லை பல்லை காட்டுற,”

 

புரியாமல் , யோசித்து,” ஓ, தனம் பாட்டி வீட்டு பொண்ணுங்களா,…? போயிட்டு வாங்கன்னு தான சொன்னேன்.” மீண்டும் யோசித்து,

“ஆமா… நீ எப்போ தடுத்த…?” இளா கேட்க,

 

“அதான் உனக்கு முன்னாடி நின்னுட்டு உன் கையை அழுத்தினேன்ல,”

 

“ஒஹ்ஹ்… அதுக்கு அதான் அர்த்தமா..?”  சத்தமாக சிரித்தபடி, 

 

“சரி, எதுவா இருந்தாலும் போர்வையை எடுத்துட்டு, முகம் பார்த்து  சொல்லு கேக்குறேன்,”

 

அவன் போர்வையை விலக்கி அவள் முகம் பார்க்க எத்தனிக்க,

“ஒன்னும் வேணாம், போ.”

 

“ஆனா எனக்கு ஒன்னு வேணுமே…” இளா மந்தகாசப் புன்னகையுடன் போர்வைக்குள் புகுந்தான்.

 

உள்ளே குனிந்து கண்ணை மூடியே உக்காந்திருந்தாள் ஆரா,

 

“ஓய் , செல்லாக் குட்டி, என்னை பாரேன்.” தாடையை தூக்கி கேட்க,

 

“என்னை கடையில விக்குற லட்டுன்னு கிண்டல் பண்ண, அந்த பாவி ரதிக்கிட்ட பல்லை காட்டின யாருக்கும் நான் மூஞ்ச காட்ட மாட்டேன்.  என் போர்வையை விட்டு வெளியே போடா.”

 

“போக மாட்டேனே.”

 

சட்டமாய் அவள் மடியில் படுத்து கொண்டு,

 

“எல்லாரும் இருக்கிறப்போ முறைக்கவா முடியும். என்னை பாருடி. பிளீஸ். என் பட்டு லட்டு, ஐயம் சாரி லட்டு, உனக்கு பிடிக்கலன்னு எனக்கு தெரியாம , அப்படி சொல்லிட்டேன், சாரி,” அவன் கொஞ்ச,

 

“சரி, இதான் லாஸ்ட் வார்னிங், இனிமே அதுங்க கிட்ட நீ பேசக் கூடாது, இப்படி அழகா ஷர்ட் ஜீன்ஸ்லாம் போட்டுட்டு வந்து, அதுங்க முன்னாடி நிக்க கூடாது.” ஆரா பெருந்தன்மையுடன்,

 

“இனிமே, அதுங்க முன்ன, ஷர்ட்டே போட மாட்டேன் தாயே. வேணும்னா பனியனொடவே இருந்துக்குறேன்.  சரியா…?”

 

“அய்யோ,… வேணாம்ப்பா, வெஸ்ட்ல, நீ ரொம்ப ஹேண்ட்சம்மா இருப்ப, அதுலயும் அந்த பிளாக் கலர் வெஸ்ட்லலாம் சான்சே இல்லை. ஸ்லீவ் லெஸ் டீ ஷர்ட்லாம் போட்டு, உன்னோட ஆர்ம்ஸ்சையெல்லாம்,  அதுங்க கிட்ட காட்ட, நீ டிரையே பண்ண கூடாது புரிஞ்சுதா..?” ஆரா அவசர உத்தரவு பிறப்பித்தாள்

 

“ஆமாவா… இதெல்லாம் முன்னாடி என்கிட்ட சொன்னதே இல்லையேடி நீ, உண்மையிலேயே ஹேன்ட்சம்மாவா இருக்கேன்.” இளாவின் கேள்வியில்,

 

ஆராவின் குரல் குறைந்து,

 

“முன்னாடி எனக்கே அப்படி தெரியாதே. ஆனா நீ எப்பவும் ரொம்ப அழகன்தான். இப்பலாம் செம்ம ஸ்மார்ட் ஆகிட்ட இளா.”

 

“நிஜமாவா…” இளா ரகசியமாய் கேட்க, 

 

“ம்..” மேலும் கீழும் தலையை ஆட்ட,

 

“ஆனா என் கண்ணுக்கு, என் ஆரா எப்பவும் அழகான ஸ்வீட்டான லட்டுதான், தெரியுமா..?”  கிறக்கமாய் இளாவின் குரல், மயக்கமாய் அவன் கண்கள்,

 

ஏனோ, அவன் முகம் பார்க்க முடியாமல் ஏதோ தடுக்க, 

 

தன் கைகளை கொண்டு அவன் கண்களை மூடினாள். இளா அந்த கைகளை இழுத்து உதடுகளிடம் கொண்டு வந்து ஒரு முத்தம் வைத்தான். 

 

“தேங்க்ஸ் டி.”

 

“எதுக்கு..?”

 

“சும்மா …., எல்லாத்துக்கும் தான் தேங்க்ஸ்…., சரி , 

உண்மையில் தனம் பாட்டி வீட்டுக்கு போக உனக்கு பிடிக்கலையா..?”

 

“ஃபஸ்ட், அவங்களை மீட் பண்ணிணப்போ, அதிர்ச்சியா இருந்தது போல இல்லை இளா, இப்போ. என்னை ஒருத்தங்க நினைச்சுப் பார்துட்டு இருந்திருக்காங்கன்னு தெரிஞ்சதும் செம்ம ஹாப்பி ஆயிட்டு. ஆனா வரக்கூடாதின்னு சொன்னது தாத்தா. அவர் அப்படியே இருக்குறப்போ, நான் போக மாட்டேன்ப்பா.”

 

“உன்னை யார் போகச் சொன்னா..? விருப்பம் இருந்தா போயிட்டு வா. அவ்வளோதான் சிம்ப்பிள். ஆனாலும் தனம் பாட்டி ரொம்ப நல்லவங்க, ரொம்ப பாவமும் கூட, நீ அம்மாச்சின்னு கூப்பிட்டதும், அவங்க முகத்தில் லைட்ட போட்டா போல அப்படி ஒரு பிரகாசம்.”

 

“அவங்களுக்கு உன்னை பிடிச்சிருந்துச்சு இளா, அதான் எனக்கும் அவங்கள பிடிச்சு போச்சு.”

 

“ஆங்… பார்த்தனே . மேடம் பொசுக்குன்னு கவுந்ததை,”

 

சொல்லி விட்டு அவன் சிரிக்கவும், ஷேமாகி விட்டது ,

 

“முதல்ல எழுந்து போடா ,என் போர்வையை விட்டு, நீ அவளுங்களை பார்த்து ஈன்னு பல்லை காட்டிட்டு எதுக்கு என் மடியில் படுத்திருக்க,  , போ.” மீண்டும் ஆரா துரத்தவும்,

 

“இது என்னாங்கடி புது கதையா இருக்கு, இப்போ தான நான் மன்னிப்பு கேட்டுட்டு வந்து மடியில சீட் பிடிச்சேன். இப்படி,  நினைச்சு நினைச்சு திட்டுறே ,எருமை.”

 

“எனக்கு கோபம் வர்றப்பலாம் அப்படித்தான் திட்டுவேன். இனிமே அதுங்கள பார்த்து இளி, அப்புறம் இருக்கு உனக்கு.”

 

“ஆக்சுவலி ஸ்பீக்கிங், இதுவரைக்கும் அந்த ஐடியா இல்ல, இப்பத்தான் தோணுது. அந்த முந்திரிகொட்டை பாக்கியயை விட ஸ்வேதாவும் , பாக்கிக்கு சின்னவ ஒருத்தி இருந்தால்ல அவளும் நல்லா இருந்தா,”

 

வர்ணித்து முடிப்பதற்குள், இளாவின் முகத்தில் ஆராவின் கண்ணீர் பட்டுத் தெறித்தது.

 

“டேய். லட்டு விளையாட்டுக்கு சொன்னேன் நான். சாரி. வெரி சாரி. இனி விளையாடமாட்டேன் இப்படி, இப்பதான் என் லட்டு வளர்ந்துட்டாங்க, அவங்க கிட்ட ஆசிர்வாத்தை பார்த்துக்க சொல்லிட்டு, லாஹிருஷ்  லாஞ்சிங்  வேலையை நாம பார்ப்போமுன்னு நினைச்சேன். என்னடி இப்படி கிண்டலுக்குலாம், குட்டி புள்ளையா அழுவுற?.”

 

“எனக்கு நீ வேற கேர்ள்ஸ் பத்தி பேசினா , பார்த்தா பிடிக்கல இளா. சீமா பத்தி பேசுறப்போலாம் அப்படி தோனினது இல்ல. ஆனா இப்ப தோணுது.” அழுகையொடு சொன்னாள்.

 

“இதுக்கு அழுவாங்களா.? இனிமே இப்படி பேசவே மாட்டேன். சரியா.” ஆராவின் இரண்டு பக்க கன்னத்தையும் பிடித்து இளா கேட்கவும்,

 

“ம்..” தலையை ஆட்டி சரி சொன்னாள்.

 

“குட். லட்டு, இனிமே தான் நீ பார்த்து பக்குவமா நடந்துக்கணும். ரோஸ்க்கு கொஞ்ச நாளில் பாப்பா பொறந்திடும், சோ , கிருஷ் இங்க ரோஸ் கூட கண்டிப்பா இருக்கணும். ஆசிர்வாத் , வேதா டெக்ஸ்டைல்ஸ்ல ,நீ எப்பவும் கவனமா இருக்கணும். ஆராஸ் சூடு பிடிக்க ஆரம்பிச்சுட்டூ, நீ இனி அதோட இதையும் சேர்த்து கொஞ்ச நாள் பார்த்துக்கிற மாதிரி இருக்கும். கோயம்பத்தூர் மில்ஸ், லாஹிருஷ்ன்னு நான் பிசி ஆகிடுவேன்.புரிஞ்சுதா…?”

 

“புரிஞ்சுது இளா, நீ, போயிட்டு வா, நான் பார்த்துக்கிறேன்.”

 

“சூப்பர்… நீ தனியா பார்த்துக்க வேணாம். உனக்கு நம்ம குரூப்ஸ்சோட அட்மினிஷ்டிரேஷன் தெரிஞ்ச ஆளை   பீ ஏ வா விட்டுப் போறேன். அவங்க இங்க உன் கூட இருந்து ஹெல்ப் பண்ணுவாங்க. சரியா.?

தேவைபடறப்போ, சென்னைக்கு ஃப்ளைட்ல போயி வந்துக்கோ. ஃபுல் பொறுப்பும் உன்னதுதான். என்ன டன்னா…?” அவன் ஜோஷாக கேட்க,

 

” டன் டன்,   டபுள், டன்.  ஆனா நீ அப்பப்போ என்னை வந்து பார்க்கணும். வீடியோ கால் பேசணும். அப்போதான் டன்டனாடன்.” அதே ஜோஷில் ஆரா.

 

“கண்டிப்பா,” மீண்டும் கன்னத்தை கிள்ளி, ஒரு முத்தம் வைத்த இளா,

 

“எதுவும் கஷ்டமா இருந்தா, உன் அண்ணன் வெட்டிப் பையன்ட்ட கேட்டுக்கோ. ஆனா அவனை வேற எங்கையும் போக விடாத, ஒரு மாசம் அவனுக்கு , பேட்டர்னிட்டி லீவ்.”

 

“டன்னோ டன் , இளா. இந்த பேட்டர்னிட்டி லீவில, கிருஷ் அண்ணாவை , அலுங்காம நலுங்காம பத்திரமா பார்த்துக்கிறேன்.”

 

சொல்லிவிட்டு ஆரா சிரிக்க, இளாவும் இணைந்து சிரிக்க, அந்த ரூம் முழுக்க, சிரிப்பொலி.

 

ஹாலைக் கடந்த கிருஷ், சிரிப்பு சத்தம் கேட்டு உள்ளே வர, பார்த்தது, வெள்ளை போர்வைக்குள், ஆரா உட்கார்ந்திருக்க, அவள் மடியில் படுத்திருந்த இளாவின் கால்கள் , போர்வையை விட்டு வெளியே நீண்டிருந்தது.

 

“அடேய்,போர்வையை போத்திக்கிட்டு, என்ன கருமம்டா, பண்றீங்க, பன்னி குட்டிங்களா..? அதுவும் பட்ட பகலில”,

 

சொல்லி விட்டு, வெளியே தெரிந்த இளாவின் கால்களிலும், ஆராவின் முதுகினுலும், கிருஷ் சாத்தினான்.

 

“டேய் எருமை, எதுக்குடா அடிச்ச , சும்மா பேசிட்டு இருந்தோம்டா,” இளா விளக்க,

 

ரெண்டு பேரும் போர்வையை விட்டு வெளியே வந்தனர்.

 

“அதுக்கு எதுக்குடா , போர்வையை போட்டு மூடிக்கிட்டு, பேசினீங்க, தடி மாடுங்களா. முன்னாடி உங்களுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்,”

 

சொல்லி விட்டு, போர்வையை இழுத்ததில் தலை கலைந்து உட்கார்ந்திருந்த ஆராவிடம், 

 

“ஆளையும் மண்டையும் பாரு. போமரெனியன் நாய்க்கு ஷாக் வச்சது போல , நாலா பக்கமும் நட்டுட்டு நிக்குது,” மண்டையில் கொட்டு வைத்து கிருஷ் சொல்ல,

 

“ஆ… ஏன்டா என்னை கொட்டின,?” கேட்ட ஆராவுக்கு  இளா தலையை தடவி விட, கிருஷ்,

 

“ரெண்டு பேரும் ஒரே போர்வைக்குள்ள என்னாடி பண்ணிட்டு இருந்தீங்க,?” 

 

“நாங்க ஆசிர்வாத் குரூப்ஸ்சையும், வேதா டெக்ஸ்டைல்ஸையும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு போக, ரெண்டு மாச பிளான் போட்டுட்டு இருந்தோம், அதுக்கு என்னடா இப்போ.” ஆரா கத்த,

 

“உனக்கு ஆக்கிற அரிசில அரை ஆழாக்கு குறைச்சு போட்டாலே, ஆசிர்வாத் குரூப்ஸ் அம்பானி குரூப்ஸ்ஸா மாறிடும். இதுக்கு எதுக்கு பிளான்?”

 

சொல்லி விட்டு சிரிக்க,

 

“டேய் அண்ணா, நீ ஓவரா பேசிட்ட, எப்ப என் சாப்பாட்ட பத்தி பேசிட்டியோ அப்போவே, உனக்கு நாங்க கொடுத்திருந்த பேட்டர்னிட்டி லீவ் கேன்சல் ஆகிட்டு. உன் வேலையை நீ தான் பார்த்துக்கணும்.”, வாயை கோணியபடி ஆரா சொல்ல, இளா ஆமொதித்தான். 

 

“கரெக்டா சொன்ன லட்டு, இவனுக்கு பேட்டர்னிட்டி லீவ் கேன்சல்ட். வந்து உடனே மேடம் ஆர்டர் படி, டியூட்டியில ஜாயின் பண்ணு.”

 

காற்றிலேயே, அவன் லெட்டர் பேடில் , சைன் போட்டு, சீல் குத்த,

 

“வந்துட்டாங்க பெரிய ஆபீசர்ஸ்…, எனக்கு பேட்டர்னிட்டி லீவ் தரேன்னு சொல்லிட்டு ரெண்டும், மெட்டர்நிட்டி லீவுக்கு ஏற்பாடு பண்ணுதுங்க. அதுவும் பட்ட பகலில முக்காடு போட்டு மூடிக்கிட்டு,  பிராடு குட்டிங்க.”

“எழுந்து ஓடுங்க, ரெண்டு பேரும்.” விரட்டி விட்டு,

 

இளாவிடம் திரும்பி, “உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கிற வரை இந்த அரிசி மூட்டையோட குடோன்ல , உன்னை நான் பார்க்க கூடாது. நான் வரலைன்னா இந்நேரம் என்ன ஆகியிருக்கும்.”

 

“இனிமே நான் தான் இந்த அரிசி குடோனுக்கு வாட்ச்மேன்.” ஆரா ரூமை காட்டி கிருஷ் மிரட்ட,

 

இளா அவனை முறைத்தான். 

 

“நீ கவலைப்படாத இளா, இது இங்கேயே என்னோட ரூமுக்கு காவல் காக்கட்டும், நான் சுவர் ஏறி குதிச்சு உன் ரூமுக்குள்ள வந்துடறேன்.”

 

ஆறுதல் போல இளாவை, இடுப்போடு கட்டிக் கொண்டு, கிருஷ்ஷையும் முறைத்து கொண்டே ஆரா, கூற, இளாவின் மனதுக்குள் தென்றல் சுகமாய் வருடிச் சென்றது. கண்களை மூடி, இந்த நொடியை சேமித்து கொண்டான்.

 

 

சாஷா…