Kanmani-unai-naan-karuththinil-niraiththen-episode-25(2)

கண்மணி 25(2)

 

 

யூ எஸ், டெக்சாஸ்சில், இருந்தான் இளா. இரவு நேரம் அங்கே,

தூக்க கலக்கத்தில், 

 

“ஹே, லட்டு குட்டி.,” உடலின் சோர்வு, உதட்டை எட்டாமல், உற்சாகமாய் இவளிடம் இளா.

 

முகம் இவளைக் கண்டு மலர, கலைந்த தலையும், களைந்த தோற்றமும் மாய், இருந்த இளாவைப் பார்த்ததும், 

முதலில் பட்டது அவனின் உருவமும் அழகும்.

 

“ஹா..ய்…! ” அவள் தடுமாறி,

 

“என்னடி திக்குது ஆராவுக்கு”

 

அவன் மந்தகாசமாய் சிரித்து வைக்க, 

 

‘அவளுக்காவது திக்குது, எனக்கு பக்குது, கூடவே விக்குது டா செல்லம்,’

 

எதிர்பாராத நேரத்தில் ஆரா , ஃபேஸ் டைம் கால் செய்ய,

அவனது பார்மல் தோற்றத்தில் மட்டும் பார்த்துவிட்டு, இன்று கேசுவல், திடீர்  தோற்றத்தை கண்டு, மயங்கிய மாலினி, 

 

‘ம்.. ஹும்.. எனக்கில்லை.. எனக்கில்லை… சொக்கா…

நிம்மதியா வேலைய பாக்க விடரானா…’ பெருமூச்சுடன், நாசுக்காய் கழண்டு கொண்டாள்.

 

அவள் இருந்ததும் தெரியாமல் சென்றதும் தெரியாமல் இளா.

 

” நல்ல தூக்கத்தில் இருந்தவனை, எழுப்பி விட்டுட்டு என்னடி இப்படி பார்த்துக்கிட்டே இருக்கிற?”

 

“ஓஹோ,  தூங்கிட்டு இருந்தீகளோ…? அங்க தூங்குறவகளை எழுப்பிட்டனோ…?” குறும்பாய் ஆரா,

 

“ஆமா.. ஆமா,  இந்த நேரத்துக்கு, மொத்த ஹூஸ்டன்காரகளும்  தூங்கிருப்பாக, மொத்த டெக்சாஸ் காரகளும் தூங்கிருப்பாக, கவர்னர் கிரேக் அப்பாட் டூம்  தூங்கிருப்பாக, அவ்வளவு ஏன் நம்ம டிரம்ப் கூட தூங்கிருப்பாக. நான்தான் என் மின்னல் ஆராவுக்காக முழிச்சுருக்குதேன்.”

 

ஆரா சிரிக்க, இளாவும் இணைந்து சிரித்து விட்டு, 

 

கலைந்த தூக்கத்துடன் , உற்சாகமாக பேசியவனை பார்த்து விழுங்கியபடியே ஆரா மீண்டும் நிற்க,

 

“ஓய், என்னடி இப்படி புதுசா பார்க்குற.. ஃபிரீஸ்ஸாகி நிக்கிற? அதோடு அதிசயமா திக்குற..? தலையை கோதியபடியே கேட்டு சிரிக்கவும்,

 

ஆரா, “அழகா இருக்குற நீ ,” 

 

அவள் பார்வையிலும் , சொல்லிய தொனியிலும் வெட்கம் வந்தது இளாவிற்க்கு. 

 

“பக்கத்துல இருக்கிறப்போலாம், பாப்பா மாதிரி இருந்துட்டு, அவசரமா ஃப்ளைட் புடிச்சு ஓடி வந்தாலும் ஒன்றை நாள் ஆகுற தூரத்துல இருக்கிறப்போ , இப்படி ஆளை முழுங்குற பார்வை பார்க்குறியே டி , இதுலாம் நியாயமா…?”

 

“யாரு முழுங்கப் பார்த்தா..? நானா..? இல்லையே.” சுற்றி முற்றி பார்த்து தன்னை நிதானப் படுத்துக்கொண்டாள்.

 

“சுதாரிச்சுட்டா… கிராதகி.” முனகிக் கொண்டான்.

 

“தாஸ் குரூப் எம்டி கிட்ட எகத்தாளமா பேசிட்டேன் டா,” தொடர்ந்து நடந்ததை கூறவும், 

 

அவன் , “யாரு அந்த குஞ்சாக்கோபன்னா… சபாஷ், என்கிட்டேயெ உதை வாங்க வெண்டியவந்தான் , கொஞ்சம் வேலையில், லேட் ஆகிட்டு., அந்த அங்கிள்கிட்ட வார்ன் பண்ணிட்டு விட்டுட்டேன். இப்போ ஆராக்கிட்ட வாங்கிக் கட்டிகணும்னு விதி இருந்திருக்கு.

அவனை விடாத லட்டு, அதட்டி அடிச்சு வேலை பழகிக்கோ. எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் அவன்.”

 

“என்னது அவனை அடிச்சு வேலை பழகனுமா..?” ஆராவால் சிரிப்பை கட்டுபடுத்த முடியாமல் சிரிக்கவும்,

 

“இதுலாம் ஒரு தொழில் ரகசியம்டா ஆராக் குட்டி. ஒரு ஏரியாவில் நாம ரவுடியா ஃபார்ம் ஆகனும்னா, இருக்கிறதுலயே வீக்கா, சல்லிப் பயலா, ஒருத்தனை சூஸ் பண்ணி, அவனை அடிச்சு, மிரட்டி ரவுடியிசம் பழகிட்டா போதும், ஆட்டோமேட்டிக்கா அந்த ஏரியா ரவுடியா நீ ஃபார்ம் ஆகிடுவ, அடி வாங்குணவனே , நீ ரொம்ப உக்கிரமானவன்,  ராவான ரவுடின்னு,   பீ ஆர் ஓ வா மாறி ஊர் முழுக்க பரப்பி விடுவான்.”

 

“அதுபோல குஞ்சாக்கோ,வை யூஸ் பண்ணி, நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபிசர்ன்னு ஃபார்ம் ஆகிக்கோ.” இளா டிப்ஸ் தர,

 

“இப்பதான்டா தெரியுது, நீ இவளோ சீக்கிரம் எப்படி பெரிய டான் ,   பிசினஸ் மேன்னா ஃபார்ம் ஆனன்னு, எல்லாம் புள்ளை பூச்சியா பார்த்து அடிச்சுருக்க, கேடி.” ஆரா கலாய்த்தாள்.

 

“ஹ ஹ ஹா… ஆகா, நாம டான் ஆன ரகசியத்தை லீக் அவுட் பண்ணிட்டோமே.

நான் பத்து பேரை அடிச்சு டான் ஆகல, நான் அடிச்ச பேரும் டான் தான்.” கே ஜி எப் போஸ் கொடுத்தான் இளா.

 

“எல்லாம் சரி அது என்னடா குஞ்சாக்கோபன், ?”

 

“அது இன்னும் மதர் ஃபீடிங்ல, இருக்குற குஞ்சுப் பறவை, கூட்டை விட்டு வெளியே பறக்காம ,ரெக்கை வளர்ந்தும், அப்பா அம்மா பறவை தயவுல சாப்பிடுற குஞ்சு பறவைடா,”

 

சொன்னதும், “செம்ம பேரு, சரி விடு, நானும் அத அடிச்சு பிரியாணி பண்ணி, மாஸ்டர்ரா ஆயிடுறேன்.”

 

“சரி, நீ தூங்குடா, நான் கால் கட் பண்றேன்.” ஆரா சொல்லி கட் செய்ய போக,

 

“எனக்கு கால் கட்டு போட்டுட்டு கட் பண்ணிக்கோ.”

இளா ஒரு மார்க்கமாக பதில் தந்தான்.

 

“டேய்…இப்ப என்ன, சொன்ன..?”

 

“ம் ….என்னை கட்டிக்க சொன்னேன்.?”

 

….. அமைதியாகிட்டாள்.

 

“அதானே , சும்மா இருக்கிற, மனுஷனை உசுப்பேத்தி ரணகளம் ஆக்கிவிட்டுட்டு, இந்த பூனையும் பால் குடிக்குமான்னு நிப்ப,  நீ ஃபோனை கட் பண்ணிக்கோ. என்னால முடியாது.” கோபமாய் இளா

 

“மாட்டேன். நீயே கட் பண்ணு.” பிடிவாதமாய் ஆரா.

 

“நீதான பண்ணின, நீயே கட் பண்ணு.”

 

அவர்களின் இரு ஐ போன்களும், எவனாவது ஒருத்தன் காலை கட் பண்ணி எங்களை காபந்து பண்ணி விடுங்கடா அயோக்கிய இராஸ்கல்களா…? கதறியது.

 

“நீ தூங்கு போ.” ஆரா 

 

“நீ ரொம்ப போங்கு போ. ஆசைகாட்டி ஏமாத்துற.” இளா முறுக்கினான்.

 

ஆராவுக்கு , சிரிப்புடன் வெட்கமும் கலந்து வந்தது. 

 

“படுத்தாதடா பக்கி.”

 

“எங்க, படுத்த தான் பார்க்கிறேன். ஒத்துவர மாட்டுறியே… சரி, ஒரு உம்மா கொடுத்துட்டு ஓடிப் போ, மன்னிச்சு விடறேன்.” இன்னமும் விடாமல்  அவன் கேட்க,

 

“முடியாது.”

 

“இல்லைன்னா எனக்கு தூக்கம் வராது டி, பிளீஸ்.” கெஞ்சினான்.

 

“சரி கண்ணை மூடி, கன்னத்தை காட்டு.” இறங்கி வந்தாள்.

 

“க்கும், கன்னத்துக்கே, கண்ணை மூடன்னுமா..?” 

அவன் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தை காட்ட,, 

 

தன் ஃபோன் ஸ்க்ரீனில் ஆரா முத்தம் வைக்க, இளா கண்களை திறந்து உதட்டினில் வாங்கிக் கொண்டான்.

 

“அடேய், பிராடு பயலே. ?”

ஆரா முறைக்க,

 

“உனக்காக காத்திருக்கும் ஒரு வெர்ஜின் காதலனுக்கு ஒரு விர்ச்சுவல் லிப் கிஸ்க்கு வழி இல்லையா அய்யகோ.”

 

புலம்பிவிட்டு, 

 

அவள் ஏதோ சொல்ல வர,

 

“நான் கேட்க மாட்டேன், கேட்க மாட்டேன், எதையும் கேட்க மாட்டேன்.

 இதே சந்தோஷத்தோட தூங்க போறேன். எதுவும் பேசி என் ரா ரொமான்ஸ் ஃபீலியாவை, நோ ரொமான்ஸ் ஃபோபி யாவா மாத்திடாத,”

 

“லவ் யூ டா லட்டு. பை. ஸ்வீட் டிரீம்ஸ்.” 

 

அவள் முறைக்க,

 

 “நான் எனக்குச் சொன்னேன். ” ஒரு பறக்கும் முத்ததையும் ஊதி அனுப்பி விட்டு, இளா ஹாப்பி மோடில் வைத்து விட்டான் ஃபோனை.

 

ஆராவிற்குள், உண்மையில் உடலின் ஒவ்வொரு செல்லிலும் பாப்கார்ன் வெடித்து கொண்டிருக்க, என்ன உணர்விது என்பதே தெரியாமல், கிறங்கி இருந்தாள். 

 

உடல் பொருள் ஆவி என ஏதேதோ உணர்வுகள் ஆட்கொணர , மீள முடியாமல், டேபிளில் சாய்ந்தே நின்று கொண்டிருந்தாள்.

நேரம் கடக்க,

 

மாலினி, இண்டர்காம்மில் அழைத்து, 

 

“மேம், இது உங்க லஞ்ச் டைம். இன்னும் உங்க லஞ்ச் பாஸ்கெட் கான்பரன்ஸ் ரூம்லெயே இருக்கு. எடுத்து வரவா…?” கேட்க.

 

“வேணாம், ஆம்ஸ், எனக்கு பசிக்கல,”

 

வாழ்கையில் முதல் முறையாக அந்த வார்த்தை ஆராவின் உதடுகளில்.

 

‘என்னாச்சு நம்ம மேடம்க்கு. ‘ யோசித்து விட்டு, மாலினி உண்டு, ஓய்வெடுத்து அவள் அலுவல்களை ஆரம்பிக்க, வந்தவள், அப்போது தான் ஆரா,  கேபினில் இன்னும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்ததை பார்த்தாள்.

 

“எக்ஸ் கி யூஸ் மீ மேடம்.”

 

ஆரா “எஸ் “என்க,

 

“இன்னும் நீங்க சாப்பிடல,” 

 

“அச்சோ , மறந்துட்டேன்,”

 

அப்போதுதான் கவனித்தாள் மாலினி, ஆராவின் மூளையும் உடலும் நான்ஸின்க்கா செயல்படுவதை,

 

‘ரைட்டு, பாஸ் , மேடத்தை பாஸ்(pause) பண்ணி விட்டுட்டு, போயிட்டார் போல,’ 

 

‘ரெண்டு பேருக்கும் சம்திங் சம்திங்கோ…?’

 

‘எங்கிருந்தாலும் வாழ்க தான் நாம பாடனும் போல, சரி நாம நம்ம வேலையை பார்ப்போம்.’

எண்ணிவிட்டு கடந்து சென்றாள் மாலினி.

 

நாட்கள் உருண்டோட, இளா அவ்வப்போது ஆராவிடம் வீடியோ காலிலும், ஒரு முறை ஆராவை, சென்னையிலும் சந்தித்தான்.

 

ஆராவை தனம், ஆராசில் வந்து, அவ்வப்போது பார்த்து விட்டு, பலகாரம் செய்துகொடுத்து விட்டு போனார்.

 

ஒரு நாள் காலை, பதினொரு மணியளவில்

கிருஷ் , பதட்டமாக கால் செய்தான் ஆராவிர்க்கு,

 

“லட்டு, பெயின் ஸ்டார்ட் ஆகிட் ட்டு டெலிவரி ஆகப் போகுது டி எனக்கு. சீக்கிரம் வா.”

 

“அண்ணா,  வீட்டுல உக்கார்ந்து தொப்பையை வளர்த்தப்பவே நினைச்சேன், இவ்வளோ பெருசா இருக்கே, என்னைக்கு  டெலிவரி டேட்டோன்னு. இன்னைக்கு தானா.?”

 

வேதா, ஃபோனை வாங்கி,” பயந்துட்டான், அதான் உன் அண்ணன் உளருறான், அண்ணிக்கு பெயின் ஸ்டார்ட் ஆகிடுச்சு. மீரா நர்சிங் ஹோம்க்கு கூட்டிட்டு பொறோம் நீ, நேரா அங்க வந்துடுடா.”

 

“சரிங்க மாதாஜி. இதோ கிளம்பிட்டேன். அண்ணியை பத்திரமா பார்த்துக்கோங்க, வரேன்.”

 

சொல்லிவிட்டு இளாவுக்கு அழைத்து சொல்லிவிட்டு , கிளம்ப,

 

“ஏய், இப்படியே ஓடாத,  நான் வர ரெண்டு நாள் ஆகும். நீதான் சமாளிக்கணும். சிவகுரு வை கூட்டிட்டு போ, பில்ஸ் செட்டில் பண்ண மெடிசின் வாங்க எல்லாருக்கும் புட் அரெஞ் பண்ணன்னு ஹெல்ப் பண்ணுவாரு.”

 

“ஆசிர்வாத் கிட்ஸ் செக்சனுக்கு போயி, நல்ல நியூ பார்ண் டிரேசெஸ் கொஞ்சம் எடுத்துக்கோ. கிளம்பு. பதறாத, டாலியையும், கிருஷ்ஷையும் நல்லா கவனிச்சுகோ.”

 

சொல்லி ஆராவை அனுப்பி விட்டு, 

 

மாலினியிடம் கால் செய்து, சில வேலைகள் சொல்லி அனுப்பினான்.

 

ஆரா, நர்சிங் ஹோம் போக, அங்கே கிருஷ், தலையை தொங்கப் போட்டுக் கவலையாய் அமர்ந்திருந்தான். 

 

வேதா , லேபர் ரூம் நர்சிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

 

“அண்ணா,”

இவள் அழைக்க, 

 

“பயமாயிருக்கு லட்டு,” கிருஷ்.

 

“பயப்படாத, அண்ணி, அழகா ஒரு பாப்பா பெத்து தரப் போறாங்க பாரு சீக்கிரமா,” தோளை வருடிச் சொல்ல,

 

“அவ , வலிக்குதுண்ணு கத்தினப்போ, உயிரே இல்லடா எனக்கு. அவ்வளோ பிளட்டுடா . எனக்கு அவ மட்டும் பத்திரமா வந்தா போதும்.” கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் வடிந்தது.

 

“அச்சோ, அண்ணா.. அழரத நிப்பாட்டு. பெயின் பேபி வர்ற வரைக்கு மட்டும் தான். சரியாகிடும்.” கண்ணைத் துடைத்து தோளில் சாய்த்து கொண்டாள்.

 

அப்போது வந்த வேதா,

 

“நல்லா சொல்லுடி லட்டு, ரோ, புள்ளை பெக்குற வலிக்கு அழுவுறா, இவன் அவளைப் பார்த்து அழுவுறான். நான் அவளை பார்ப்பனா..? இவனை பார்ப்பானா..? என்னவோ ஊர்ல யாரும் புள்ளை பெக்காத மாதிரி அதிசயமா..?”

 

“ஊர்ல எல்லாரும் புள்ளை பெக்குறதும் என் ஜா பெக்குறதும் ஒண்ணா. கல் நெஞ்சகார கிழவி. போ, எனக்கு என் பொண்டாட்டி பத்திரமா இப்பவே சிரிச்ச மூஞ்சோட வேணும்.”

 

அவன் பேசுவதில் , சிரிப்பு வந்தாலும்,

” புள்ளை பெக்குறவளே கொஞ்சமாதான் அழுவுரா, தயவு செஞ்சு, அப்படி, ஓரமா போயி அழுவு. இங்க நின்னு நீ கத்தி ரோவை பயமுறுத்தாத பக்கி.” அதட்டல் போட்டார்.

 

“நீங்க போங்க மாதாஜி, நான் பார்த்துக்கிறேன் அண்ணனை. அவனே கஷ்டத்துல இருக்கான். இப்ப திட்டுறீங்க.” ஆரா, கிருஷ்ஷீர்க்கு சப்போர்ட் செய்தாள்.

 

“தாய்க் கிழவிக்கு தான் ஈவு இரக்கமே இல்லையே பின்ன எப்படி பேசும்.?” கிருஷ்.

 

“ரெண்டு எருமைங்களும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா..? ரொம்ப சந்தோஷம். என்னைய படுத்தாம அப்படி எங்கனா ஓரமா போயி மேய்ங்க.” வேதா கடுப்பாக.

 

“என்னைய ஜாவை பார்க்க உள்ள விடமாட்டுறாங்க பாருடி.” தங்கையிடம் முறையிட, 

 

“ஏன், மாத்தாஜி. இப்படி பண்றீங்க..? அண்ணா, அண்ணியை பார்க்க ஏற்பாடு பண்ணுங்க. இல்லைன்னா நான் டாக்டர்ட்ட பேசறேன்.”

 

“என்ன… வோன்… மாத்தாஜி போடுற நீயும். அந்த டாக்டர், பிரசவத்துக்கு புருஷன் கூட இருக்கலாம்னு சொல்லி உள்ளதான் கூட்டிட்டு போனாங்க.”

 

“அவள் அங்க கத்தவும், புள்ளை பிறக்குறதுக்கு முன்னாடியே, இரத்தத்தை பார்த்து உன் நோண்ணன், மயங்கி மல்லாக்க விழுந்துட்டான்.”

 

“அதுல, ரோவுக்கு பீப்பி அதிகம் ஆகிடுச்சு இந்த எருமை உழுந்ததை பார்த்து,”

 

“பிரசவம் பார்க்குற டாக்டர், அவளை விட்டுட்டு இவனுக்கு ஒரு ஊசியைப் போட்டு, இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வெளிய தள்ளி கதவ சாத்திட்டு, என்னை முறைச்சிட்டு போனாங்க.”

வேதா நடந்ததை கூறவும்,

 

ஆரா, “அடப்பாவி அண்ணா”, இப்போ கிருஷ்ஷை முறைத்தாள்.

 

“இந்த எருமையை கொஞ்ச நேரம் நீயே மேயிடி”, 

 

சொல்லி விட்டு ரோஜாவை பார்க்க சென்றுவிட்டார்.

 

மாலினியும் வந்து கூடவே நின்னாள்.

 

“பாஸ் அனுப்பி விட்டாங்க மேடம்”, சொல்லி, அனைவருக்கும், பிளாஸ்க்கில் சூடாக டீ ஊற்றி குடிக்க கொடுத்தாள்.

 

கொஞ்ச நேரத்தில், ரோஜா, அவர்கள் வீட்டு மகாலட்சுமியை பெற்றதாக, நர்ஸ் வந்து சொல்லி விட்டு போக, 

 

அனைவரும் மகிழ்ந்து போயி நிற்க, வேதா,

ஆராவிடம் , கேட்டு சில்லறையை சாமிக்கு முடிந்து வைத்தார்.

 

“என் பொண்ணுக்கு பதினொரு லட்சம் தருவேன், நீ என்னனா பீத்தலா பதினொரு ரூபா முடியுற , சண்டைக்கு வந்தான்.”

 

“இவன் ஒருத்தன், சாமிக்கு முடிப்பு இப்படித்தான் வைப்பாங்கடா,”  சொல்லி வேதா திட்டினார்.

 

நர்ஸ் கொண்டு வந்து , குழந்தையைய் தர, கிருஷ் , தன் தாயைப் பார்த்தான்.

 

வேதா, “நம்ம வீட்டு லட்சுமியை, தாய் மாமா தான் வாங்கனும். இளா, இல்லையே இங்க, பாப்பாவொட அத்தை லட்டு வாங்கட்டும்” சொல்ல, 

 

“வாழ்த்துகள்டா மச்சான்.”

 

திடீரென இளாவின் குரல், மாலினி அவனுக்கு நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தாள்.

 

“தேங்க்ஸ் டா,” அகமகிழ்ந்து கிருஷ்.

 

“யாராவது ஒருத்தர் குழந்தைய வாங்குங்க,” நர்ஸ் சிரித்து கொண்டே கூற,

 

“கோவிச்சுக்காதீங்க சிஸ்டர், ஒரு நிமிஷம் , மாலினி அதை கொடுங்க” இளா சொல்ல,

 

“பாஸ்சே , வீடியோ பார்த்து செலக்ட் பண்ணினாங்க மேம்.”

அவள் ஒரு நகைப் பெட்டியை எடுத்து தந்தாள்.

 

அதில் பேபி செயின், 

 

“லட்டு, நம்ம தங்கக் குட்டியை தங்கம் போட்டுவிட்டு தூக்கிக்கொ ,” இளா கூற, 

சொன்னபடி செயினை போட்டு விட்டு, தூக்கிக் கொண்டாள் ஆரா.

 

ஏனென்றே தெரியாமல் எல்லாரும் ஆனந்தக் கண்ணீரோடு பார்திருந்தனர்.

 

வேதா , கிருஷ் ஷை கட்டிக் கொண்டு அழுதே விட்டார். 

 

அனைவரும் குழந்தையைப் மாறி மாறி தூக்கி கொஞ்ச, 

சிறிது நேரத்தில், ரோஜாவை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. 

 

இளா வீடியோ காலில் ரோஜாவிடமும் பேசி வாழ்த்து சொல்லிவிட்டு, தூங்க சென்றான் நெகிழ்ச்சியோடு.

 

ஆரா, குழந்தையை வைத்து கொண்டு , யாரிடமும் தரவில்லை.

வயிற்றில் இருக்கும்போதே, கேட்டு பழகி இருந்த ஆராவின் குரலில், அவள் தூக்கினால்,  சுகமாக இருந்தது குழந்தைக்கு.

 

“கொஞ்ச நேரம் கொடுடி. இது என் பாப்பா. வேணும்னா, நீ பெத்துக்கோ.” கிருஷ் பிடுங்கப் பார்க்க,

 

“போ, தர மாட்டேன். நான்தான் ஃபர்ஸ்ட் தூக்கினேன். இது என் பாப்பா. உனக்குதான் பாப்பா வேணாம், அண்ணி மட்டும் போதும் சொன்ன, போயி அண்ணியை தூக்கிக்கொ. “

 

ஆரா மறுக்க, 

ரோஜா பார்த்து சிரிக்க, 

 

வேதா, “ஆக மொத்தம் நான் வர வரைக்கும்தான் புள்ளை உங்க  கையில் இருக்கும், 

இப்படி பிஞ்சு குட்டியை தூக்கிக்கிட்டே இருந்தா, பாப்பாவுக்கு உடம்பு வலிக்கும். உரம் விழுந்துடும்.”

 

அதட்டிக் கொண்டே, ரோஜாவுக்கு, பால் பிரட் ,ஊற வைத்து ஸ்பூனில் ஊட்டிக் கொண்டிருந்தார்.

 

எதையும் கண்டுகொள்ளாமல்,

 

குழந்தை, அத்தை மடி சுகத்தில் கண்களை மூடி , பொக்க வாயைத் திறந்து ஆனந்த சயனத்தில் இருந்தது.

 

சாஷா…