megathootham-13

ஆபீசில் ரம்யாவை தினமும் சந்திப்பாள் அஞ்சலி. அப்படித் தான் அன்றும் லன்ச் சமயத்தில் ஒன்றாக சேர்ந்து பேசிக்கொண்டிருக்க,

அஞ்சு, எப்படி போகுது லைஃப். இப்போ நீ ஹாப்பியா?” சிரித்தபடி ரம்யா கேட்க,

 

நான் சந்தோஷமா தான் இருக்கேன் ரம்யா. ரிஷியும் சந்தோஷமா தான் இருக்காரு. இந்த நாலு வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு கதை பேசிட்டு இருந்தோம். ஆனா ரிஷி அன்னிக்கு போன்ல யார் கிட்ட பேசினாருன்னு தெரியல. அவங்க அம்மா கிட்டயும் இன்னும் பேசல.

இன்னிக்கு கண்டிப்பா அவங்க கிட்ட பேசி தெரிஞ்சிக்கலாம்னு சொல்லிருக்காரு, நான் பேசிட்டு உனக்கு சொல்றேன்.”

 

எனக்கென்னமோ இது ஒருவேளை அவங்க அம்மாவோட வேலையா இருக்குமோனு தோணுது அஞ்சு. எதுக்கும் என்ன பேசப் போறேன்னு யோசிச்சு பேசு. பெட்டெர் இதைப் பத்தி மொதல்ல ரிஷி அண்ணாவ பேச சொல்லு. அதுக்கப்பறம் அவங்க எப்படின்னு உனக்கு புரியும்.” ரம்யா சரியாக கணித்தாள்.

 

அஞ்சலிக்குத் தான் மனதைப் பிசைந்தது.

அவங்க அம்மாவை பத்தி நான் எப்படி டீ அவர்கிட்டயே தப்பா இருக்குமான்னு யோசிக்க சொல்ல முடியும். ரிஷி தப்பா எடுத்துக்கிட்டா?” மனதில் பட்டத்தை அஞ்சலி சொல்ல,

 

ச்ச ச்ச நீ அப்படி எல்லாம் நினைக்காத. கண்டிப்பா அவரு புரிஞ்சிப்பாரு. நீ பேசிப் பாரு அஞ்சு.” அவளது கையைப் பிடித்து ஆறுதலாகக் கூறினாள்.

 

ம்ம்..சரி ரம்யா, நீ என்கூட இருக்கறது எனக்கு ரொம்ப தெம்பா இருக்குஅஞ்சலி புன்னகைத்தாள்.

ஏய்! பொய் சொல்லாத, ஊர்லேந்து வந்தப்ப மூஞ்சிய பாக்கணுமே, இப்போ எப்படி இருக்க தெரியுமா? இது என்னாலயா இல்ல ..!? அது சரி  உன்கிட்ட  அன்னிக்கே கேட்கணும்னு நெனச்சேன், உன்ன வொய்ப்னு சொன்னாரே ..அதுக்கு என்ன அர்த்தம். அதை சொன்னதும் தான நீ பதறி அடிச்சு அவர் பின்னாடி போன. மறைக்காம சொல்லு டி…” அஞ்சலியை சரியான இடத்தில் நிறுத்தினாள் ரம்யா.

 

ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்ல ரம்யா. நீ சொல்லு ராஜ் என்ன சொல்றாரு, எப்போ ஊருக்கு போறீங்க?” பேச்சை மாற்றினாள்.

 

அடியே என்கிட்டயேவா! முகமே சிவந்து போகுது. சொல்லி டீ. தாலி கீலி கட்டிட்டாரா அப்போவே?” அவள் விடாமல் துரத்த,

 

அய்யய்ய..விட மாட்ட போலிருக்கே.! லன்ச் முடிஞ்சிருச்சு. வா போலாம்  அஞ்சலி கிளம்பியே விட்டாள்.

ரம்யாவிற்கு அதே சமயத்தில் போன் வந்தது. இது தான் சாக்கு என்று ஒரே ஓட்டமாக தப்பித்தாள் அஞ்சலி.

 

விடமாட்டேன் அஞ்சு. மைண்ட்ல தான் இருக்கு. நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா நீ சொல்லாம விடமாட்டேன். ”

 

வீட்டிற்கு சீக்கிரம் கிளம்புவதாக அஞ்சலி ரிஷிக்கு போன் செய்தாள்.

உடனே தன் வேலையையும் முடித்து விட்டு ரிஷி கிளம்பிவிட்டான்.

 

இருவரும் காரில் செல்ல, இன்று வேற பாதையில் காரைச் செலுத்தினான்.

 

எங்க போறோம் ரிஷி?”

பேசாம வா. உனக்கு ஒன்னு காட்டணும்.”

ம்ம்ம்… ” என் தோளைக் குலுக்கி விட்டுபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றதுஎன காரில் ஓடிய பாட்டிற்கு கூடவே சேந்து அவளும் பாடிக் கொண்டு வந்தாள்.

 

ரிஷி அதற்கு உதட்டை மடக்கி சிரித்துக் கொண்டே வர,

 

ஹலோ என்ன சிரிப்பு

 

ஒன்னுமில்ல..”

 

இப்போ சொல்லல…” அவனை மிரட்ட,

 

இல்ல அப்போ நூடில்ஸ்ன்னு டபிள் மீனிங்ல பேசுன..இப்போ இந்த டபிள் மீனிங் பாட்டு..ஒரு மார்க்கமா இருக்கியேன்னு சிரிச்சேன்ஸ்டைலாக அவளை ஒரு கண்ணும் ரோட்டை ஒரு கண்ணும் பார்த்துக் கொண்டே சொல்ல,

 

என்ன மறுபடியும் டபிள் மீனிங்கா.. இந்த பாட்டுல என்ன இருக்கு. ரொமான்டிக் சாங்..” உதட்டை சுழித்து அழகு காட்ட,

 

அதான் அதான்.. அதே ரொமான்டிக் சாங் தான் நானும் சொன்னேன்.” மீண்டும் சிரித்தான்.

 

இத காஷ்மீர்ல எடுத்திருப்பாங்க. அங்கே வெள்ளை பனி பெய்யும் . அது தான வெள்ளை மழை பொழிகின்றதுன்னு பாடறாங்கஅவளும் விடாமல் மல்லுக்கு நின்றாள்.

 

ஹே! என்ன பேச வைக்கறியா. வேணாம் டீ. அப்பறம் நான் மீனிங் சொன்னா..சீ தூ ன்னு எல்லாம் சொல்லக் கூடாது.”

 

அப்படி என்ன மீனிங். சொல்லுங்க பாப்போம்.”

 

இன்னிக்கு சம்பவத்தை நடாத்தாம விடமாட்ட போலிருக்கே!’

 

நானே உன்ன பக்கத்துல வெச்சுட்டு ஒன்னும் பண்ண முடியாம நெருப்புமேல நடந்துட்டு இருக்கேன். நீ என்ன ஏத்தி விடாதசடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.

 

என்ன..?” புரியாமல் அவனை பார்க்க.

அப்படி பாக்காத. மொதல்ல கீழ இறங்குஎன்றான்.

 

அது வெறும் ஒற்றை ரோடு. ஆள் நடமாட்டம் இல்லாத வெட்டவெளி. அங்கே அந்த ரோடு மட்டும் தான் இருந்தது. இரு பக்கமும் வெறும் பாறை. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை.’இங்கு என்ன இருக்கு?’ என்பது போல பார்த்தவள்,

 

என்ன ரிஷி.. இங்க என்ன இருக்கு?”

 

மொதல்ல இறங்கு. அப்பறம் சொல்றேன்.” காரில் இருந்து இறங்கி, அவள் பக்கம் சென்று அவளுக்கு கதவைத் திறந்தான்.

 

சில்லென்ற காற்று கதவைத் திறந்ததும் முகத்தில் மோதியது. வென்ற சத்தம் விண்ணப் பிளந்தது.

இது என்ன இடம்அவள் கேட்டுக் கொண்டே இறங்க,

சில்லென்ற  காற்றில் சிதறி விழுந்தன நீர் துளிகள்.

அவள் மீது பன்னீர் தெளிப்பதைப் போன்ற உணர்வு.

 

வாவ்ரிஷி.. என்ன பிளேஸ் இது? எங்கிருந்து இந்த தண்ணி வருது?”

பதில் ஏதும் சொல்லாமல் அவளது கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். அந்தப் பாறைகளுக்கு நடுவில் ஒருவர் மட்டும் உடலை குறுக்கி பாறைகளின் இடுக்கில் சற்று நசுங்கி செல்லும்படியான ஒரு இடம் வந்தது.

 

நான் முன்னாடி போறேன். என்ன பாலோ பண்ணி வாஎன முன்னே சென்றான்.

என்னானு கொஞ்சம் சொல்லுங்களேன். இங்க ஏதாவது பூச்சி கீச்சி இறுக்கப் போகுது. பயமா இருக்கு. பாறைகளுக்கு நடுல.. இருக்கறதே தெரியாம ஒரு சின்ன சந்து. அதுல வர சொல்றீங்களே.” சலித்துக் கொண்டாலும் பின்தொடர்ந்தாள்.

 

அதைத் தாண்டி சென்றதும் இருவர் மட்டும் நிற்கும் அளவிற்கு ஒரு சிறு இடம் வந்தது, முதலில் சென்றவன் அவளைக் கை கொடுத்து பக்கத்தில் நிறுத்திக் கொண்டான்.

 

மூச்சு வாங்கி வந்து நின்றவள், அவனை இடித்துக் கொண்டு நிற்க,

அவளைத் தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.

 

கண்ண மூடுஎன்றான்.

 

அவளும் மெல்லிதாகச் சிரித்து கண்ணை மூட,  அவனது கையால் அவளது முகத்தை மேலே நிமிர்த்தினான்.

காற்றும் கொட்டும் அருவியின் வென்ற சத்தமும் அவளால் இப்போது உணர முடிந்தது.

 

பன்னீர் தெளிப்பதைப் போன்ற நீர்ச் சாரல் முகத்தையும் உடலையும் நனைத்தது.

 

ரிஷி! இங்க அருவி இருக்கா?” கண்மூடிய படியே கேட்டாள்.

 

ம்ம்ம்கண்ணைத் திறந்து வானத்தைப் பாருமெலிதாக அவள் காதுகளில் உரசும்படி சொல்ல, அவள் சிலிர்த்து கண் திறந்தாள்.

 

வானத்தில் அரை வட்டத்தில் ஏழு வண்ணங்களை உடைய வானவில் தோன்றியிருந்தது. கூடவே அவ்வப்போது தெறிக்கும் நீர்துளிகளும் தெரிய, அவை மாலை வெய்யிலில் பட்டு வண்ணங்களோடு சிதறி விழுந்து விண்ணில் அந்த வானவில்லை வரைந்தது போல தெரிந்தது.

 

வாயடைத்துப் போனாள் அஞ்சலி.

 

ரொம்ப அழகா இருக்கு ரிஷி!!” கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அந்த நேரம் அவளுக்குப் பின்னால் சென்று பாறை மேல் சற்று சரிந்து நின்று அவளையும் அந்த வானவில்லையும் சேர்த்து தன் செல்போனில் படம் பிடித்துக் கொண்டான்.

 

இதை நீ பார்க்கணும்னு தான் இங்க கூட்டிட்டு வந்தேன். இதுக்குப் பின்னாடி இருக்கறது நையாக்ரா பால்ஸ். இங்க இருந்து பால்ஸ் தெரியாது, ஆனா இந்தப் பாறைகளுக்கு நடுவுல நீர்த்துளி பட்டு சாரல் நல்லா வரும். அதோட இந்த வானவில் பாக்கறப்ப அழகா தெரியும்.

 

இந்த இடம் ரொம்ப ரொம்ப சில பேருக்கு மட்டும் தன் தெரியும். எனக்கு  இங்க வந்து நின்னா மனசு லேசாயிடும். அதுவும் நீ என்னை விட்டு போயிட்டன்னு நான் நினைக்கறப்பலாம் இங்க வந்து நின்னுடுவேன்.

உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் அஞ்சு. என் வாழ்க்கைல இனிமே என்ன இருக்குன்னு கூட சில சமயம் யோசிச்சிருக்கேன்.

 

நீ என்கிட்ட திரும்ப வந்த பிறகு தான் நிம்மதியாவே இருக்கேன். யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை நான் இழக்க மாட்டேன்.”  உணர்ச்சிவசப் பட்டான்.

 

ரிஷி, போதும் பழசையெல்லாம் நினச்சு இனிமே பீல் பண்ணைக் கூடாது. நடக்கப் போறதை பத்தி யோசிப்போம். என்னாலயும் இனிமே உங்கள பிரிஞ்சு கஷ்டப் பட முடியாது.” அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

 

அவளை அனைத்துக் கொண்டு உச்சியில் முத்தமிட்டான்.

 

ஒரு செல்பி எடுக்கலாம் வா. நீயும் நானும் சேர்ந்து இது வரை ஒரு போட்டோ கூட எடுத்துக்கல.” அவனது செல்லில், வானவில்லோடு தங்களையும் எடுத்தான் .

 

இருவரும் காருக்கு வரும் சமயம், “சரி இப்போ சொல்லுங்க, டபிள் மீனிங் அதுல என்ன இருக்கு?”

 

ம்ம்வீட்டுக்கு வா..பிராக்ட்டிகலாவே சொல்றேன்.” விரைந்து காரை செலுத்தினான்.

வீட்டில் வந்து இருவரும் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ரிஷியின் போன் அழைத்தது.

சாப்டுட்டு எடுங்க. உங்க பி வா தான் இருக்கும்.” என அஞ்சலி சொல்ல,

சரிங்க மேடம்உடனே அடிபணிந்தான்.

 

மீண்டும் போன் அடிக்கவில்லை.

 

அன்று மதியம் ரம்யா சொன்ன விஷயம் திடீரென நினைவிற்கு வந்தது அஞ்சலிக்கு. அதை இப்போதே பேசிவிடவேண்டும் என முடிவெடுத்து,

ரிஷி, உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.”

 

சொல்லு பொண்டாட்டிஇருவரின் தட்டையும் எடுத்துக் கொண்டு கழுவ போட்டுவிட்டு வந்தான்.

 

அஞ்சலி எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருக்க, அவள் அருகில் வந்து அவளது தலையை வருடினான்.

 

என்ன டா ஆச்சு? என்னன்னு சொல்லு..” வாஞ்சையுடன் கேட்க,

ரிஷி..அது வந்து.. எனக்கு ஒரு சந்தேகம். சந்தேகம் தான். உறுதியா சொல்லல. நீங்க என்ன தப்பா நினைக்காதீங்க.ப்ளீஸ்

முதல்ல விஷயத்தை சொல்லு. உன்னை நான் தப்பா எப்பவும் நினைக்கப் போறதில்ல. எதுக்கு இவ்ளோ டென்க்ஷனா இருக்க?” அவள் கூறப் போவது என்னவென்று அவனுக்கு சிறிதும் அனுமானம் இல்லை.

 

உங்க அம்மா கிட்ட நான் இங்க இருக்கறதா நீங்க சொல்லப் போறீங்க..இல்லையா?” மெல்ல விஷயத்தை ஆரம்பித்தாள்.

 

இல்லையே!” சகஜமாக அவன் தலையை அசைக்க,

 

இப்போது அதிர்ந்தது அஞ்சலி தான்.

 

இல்லையா? என்ன சொல்றீங்க?”

 

நான் இனிமே யாரையும் நம்ப தயாரா இல்ல அஞ்சு. எனக்கு எங்க அம்மா என்னை ஏமாத்திட்டாங்கன்னு தோணுது. அன்னிக்கு உன்ன மாதிரி வேற ஒரு பெண்ணை பேச வெச்சிருக்காங்க.அன்னிக்கு இருந்த சூழல்ல நான் அதுக்கு மேல எதையும் யோசிக்கல. நீ இப்போ சொன்ன பிறகு தான் நான் எவ்ளோ முட்டாளா இருந்திருக்கேன்னு தெரியுது. நான் அப்போ அனுப்பின  டிடெக்டிவ் இப்போ அந்த ஊர்லயே இல்லயாம்.

 

இப்போ வேற ஒருத்தர் மூலமா அவனை பத்தி விசாரிக்க சொல்லிருக்கேன். அவன் கிட்ட உண்மையா வாங்கினா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிடும். அது வரைக்கும் நான் எங்க அம்மாவை நம்ப மாட்டேன்.

 

எங்க அம்மா கொஞ்சம் ஸ்டேட்டஸ் பாக்கறவங்க தான். ஆனா பெத்த பையனோட விருப்பத்துல குறுக்க நிக்க மாட்டாங்கன்னு நெனச்சேன். அது தப்பாயிடுச்சு. எதுவா இருந்தாலும் நான் என் அம்மாவையும் எதிர்த்து உன்னை கல்யாணம் பண்றதுன்னு எப்போவோ முடிவு செஞ்சுட்டேன்.

சோ எங்க அம்மா தான் இப்படி செஞ்சாங்கன்னு உறுதியா தெரியற வரைக்கும் நான் உன்னைப் பத்தி சொல்லப் போறதில்ல. ” உறுதியாகக் கூறினான்.

அதற்குள் இவன் எவ்வளவு யோசித்திருக்கிறான். தனக்காக தாயையும் எதிர்க்க தயாராக இருக்கிறானே!’  அவனையே வாயடைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.