கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  11

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  11

கண்ணாடி மாளிகை  – அத்தியாயம்  11

நடுங்கிய கைகளோடு, விஜயேந்திரன் அவன் அலைபேசியை எடுத்தான். லீலா அவள் தோள்களுக்குக் கீழே விஜய் என்று பச்சை குத்தப் பட்ட பெயர், அழிக்கப்படும் காட்சியும், லீலா வலியால் துடிக்கும் காட்சியும் அலைபேசியில் ஒளிபரப்பாக விஜயேந்திரனின் கண்கள் கலங்கியது.

அடுத்ததாக ஒரு ஆடியோ செய்தி.

“விஜய்… விஜய்..” லீலாவின் குரல் கண்ணீரால் துடித்தது.

“வலிக்குது விஜய்.” என்று லீலாவின் குரல் தடுமாற, விஜயின் இதயம் வலித்தது. “அன்னைக்கி விஜய்ன்னு டாட்டூ பண்ணும் பொழுதும் வலிச்சது. ஆனால், உன்னை நினைச்சேன். வலி கூட சுகமா இருந்து விஜய். இன்னைக்கு இந்த டாட்டூவை ரிமூவ் பண்ணும் பொது உன்னை நினைக்க கூடாதுன்னு நினைக்கறேன். நினைக்காம இருக்க  முடியலை. முடியலை. முடியலை.” என்று லீலா உடல் வலியிலும், மன வலியிலும் கதறினாள்.

லீலாவின் குரல் விஜயின் ஆழ்மனதைத் தாக்க, “லீலா. லீலா. லீலா.” என்று விஜயின் உதடுகள் முணுமுணுத்தது.

விஜயின் மனம், மூளை என அனைத்தும் லீலாவை வட்டமிட, லீலாவின் குரல் மேலும் தொடர்ந்தது.

“உன்னை நினச்சா, இட்’ஸ் கில்லிங் மீ டு  தி ஹெல்.” என்று லீலா கோபமாக, விரக்தியாக ஓலமிட, அந்த ஆடியோ மெசேஜ் அதோடு முடிவடைந்தது.

விஜயேந்திரன் தனக்கு தானே முணுமுணுத்தான்.

“ஐயோ. லீலா நீ நினைக்குற மாதிரி எதுவும் நடக்கலை. நான் உன் விஜய் மட்டும் தான். இன்னைக்கு இல்லை. என்னைக்கும் நான் உன் விஜய் மட்டும் தான். என்னால் உனக்கும், உன் காதலுக்கும் ஒரு நாளும் துரோகம் பண்ண முடியாது. நான் உன்கிட்ட திரும்ப வருவேன் லீலா.” என்று தனக்கு தானே கூறி கொண்டு லீலாவின் அலைப்பேசிக்கு அழைத்தான்.

லீலாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. விஜயேந்திரன் மனதில் அச்சம் சூழ்ந்து கொண்டது. ‘எதுவும் தவறான முடிவுக்கு போயிரு வாளோ? அவளுக்கு யாருமே இல்லையே. என்னால் இப்ப அங்க போகவும் முடியாதே.’ என்று எண்ணியவாறு தன் யூ. எஸ். நண்பர்களுக்கு அழைத்துச் சிறிது  நேரம் பேசிவிட்டு அறைக்குள் நுழைந்தான் விஜயேந்திரன்.

அப்பொழுது உள்ளே நுழைந்த கீர்த்தனா, “காபி தரவா? டீ தரவா?” என்று விஜயேந்திரனின் முகம் பார்த்துக் கேட்க, “ம்… கொஞ்சம் விஷம் கொடு.” என்று கடுப்பாகக் கூறினான் விஜயேந்திரன்.

விஜயேந்திரனின் வார்த்தைகள் கீர்த்தனாவைச் சீண்ட, கீர்த்தனா சிரித்த முகமாக, “அது அவ்வுளவு கஷ்டமில்லை. நான் நல்ல மனசோடு போட்டா, காபி, டீ கூட தேவாமிர்தம் மாதிரி இருக்கும். யாரையாவது திட்டி கிட்டே போட்டா, காபி, டீ எல்லாமே விஷம் மாதிரி தான் இருக்கும்.” என்று தன் புன்னகையைப் பெரிதாக்கிக் கூறி, “நீங்க செய்ற வேலைக்கு உங்களுக்கு விஷம் கொடுத்தாலும் தப்பில்லை.” என்று முணுமுணுத்துக் கொண்டே அறையை விட்டு வெளியே செல்ல எத்தனித்துத் திரும்பினாள் கீர்த்தனா.

கீர்த்தனாவின் பதிலில் வாயடைத்து விஜயேந்திரன் அவளை  பார்க்க, கீர்த்தனா சரேலென்று  திரும்ப, அவள் திரும்பிய வேகத்தில் அவள் கூந்தல் வேகமாக  அசைந்து கூந்தலிலிருந்து நீர் அவன் கைகளில் பட்டுத் தெறித்தது.

விஜயேந்திரன் விஷம் என்று கூறிய வார்த்தை கீர்த்தனாவின் பொறுமையைச் சோதிக்க, மனம் தாளாமல் வாசல் வரை சென்று, மீண்டும் விஜயேந்திரனிடம் திரும்பினாள் கீர்த்தனா. “ஒருவேளை, நான் விஷம் கொடுத்தா கூட தேவாமிர்தம் மாதிரி இருக்கும்ன்னு நினைச்சி கேட்டீங்களா?” என்று சந்தேகமாகத் தலை சரித்துக் கேட்டாள் கீர்த்தனா.

‘அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கழுத்தை அறுப்பால் போல’ என்ற யோசனையோடு    “ஏய். நான் மூணு வார்த்தை தானே பேசினேன். நீ ஏன் இவ்வளவு பேசுற?” என்று விஜயேந்திரன் சீற, “அந்த மூணு வார்த்தையை ஒழுங்கா  பேசிருந்தா, நானும் அமைதியா போயிருப்பேன்.” என்று அழுத்தமாகக் கூறினாள் கீர்த்தனா.

“சரி. இப்ப நான் என்ன சொல்லணும்?” என்று இறங்கினான் விஜயேந்திரன். “உங்களுக்கு என்ன வேணும்? விஷமா இல்லை. ” என்று வேகமாகக்  கேட்டு, தன் கண்களை மூடி நாக்கை கடித்தாள் கீர்த்தனா.

கீர்த்தனா தன் தலையில் தட்டிக் கொண்டு, “சாரி. சாரி. நான் வேணுமுன்னு சொல்லலை. நீங்க விஷமுன்னு சொன்னது… அது வந்து. நீங்க தான் காரணம்.” என்று தட்டுத்தடுமாறி முடித்தாள் கீர்த்தனா.

அந்த மனநிலையிலும்,  கீர்த்தனாவின் செயலில் விஜயேந்திரனின் முகத்தில் புன்னகை எட்டிப் பார்க்கவா? இல்லை வேண்டாமா? என்று அவன் உதடுகள் ஆராய்ச்சியில் இறங்கியது.

அதற்குள் கீர்த்தனா சுதாரித்துக் கொண்டு, “காபி தரவா? டீ தரவா?” என்று முதல் கேள்வியில் நின்றாள். ‘நினைத்ததை முடிப்பவள் போலும்!’ என்று புருவம் உயர்த்தி கூறி, “எனிதிங் இஸ் ஓகே. இது தான். அது தான் அப்படி எல்லாம் பிடிவாதம் பிடிக்கிற ஆள் நானில்லை.” என்று எங்கோ பார்த்தபடி கூறினான் விஜயேந்திரன்.

கதவை நோக்கி   திரும்பிக் கொண்டு, “காபி,  டீல்ல மட்டும் தான் போல?” என்று கீர்த்தனா முணுமுணுக்க, “என்ன சொன்ன?” என்று கீர்த்தனாவின் முன் வழி மறித்து நின்றான் விஜயேந்திரன். “உண்மையைச் சொன்னேன். ” என்று தோள் குலுக்கி சமையல் அறை நோக்கிச் சென்றாள் கீர்த்தனா.  ‘ஒரு காபிக்கு இவ்வளவு பேச்சா?’ என்று விஜயேந்திரனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.

கீர்த்தனா விஜயேந்திரனிடம் மேலும் பிரச்சனையை வளர்க்க விரும்பாமல், அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் காபியை கொடுத்துவிட்டு, பூஜை அறை நோக்கிச் சென்றாள்.

பூஜையை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்து கீர்த்தனா வேலையே தொடர, அவள் உதடுகள் வழக்கம் போல், தன்னிலை மறந்து பாட ஆரம்பித்தன.

“கை வீணையை ஏந்தும் கலை வாணியே

மெய் ஞானமே சேர்க்கும் அருள் வாணியே

திருமலர் தாழ் போற்றி வா கண்மணி வணங்குவோம்

கை வீணையை ஏந்தும் கலை வாணியே…”

கீர்த்தனாவின் குரலில் கட்டுண்டு, அனைவரும் மெய்மறந்து அவள் பாடலை ரசித்த படி வேலையைத் தொடர்ந்தனர். பூமாவும், நவநீதனும் தன் மருமகளை மெய் சிலிர்த்து பார்த்தனர்.

“உன் கோயில் எங்கும் நாதஸ்வரங்கள் கேட்கும்

அந் நாதம் நெஞ்சில் உந்தன் நினைவை வார்க்கும்

நாள் தோரும் பாயும் நாத வெள்ளம் நீயே…”

கீர்த்தனாவின்  குரல் நாதவெள்ளமாக விஜயேந்திரனின் செவியில் பாய, விஜயேந்திரன் சுற்றுப்புறம் மறந்து, தன் கவலைகளை மறந்து கீர்த்தனாவின் பாடலில் மயங்கினான்.

“பாவாணர் நாவில் மேவும் எங்கள் தாயே

உந்தன் பாதம் போற்றி உந்தன் பிள்ளை நாங்கள் வேண்டும்

        வரங்கள் தாராயோ.”

விஜயேந்திரனின் மனம் அவன் விரும்பும் வரங்களுக்காக ஏங்க ஆரம்பித்தது.

“பாட்டாலே மீரா நந்தன் வசமே சேர்ந்தாள்.”

என்று பாடிய படியே, கீர்த்தனா அவர்கள் அறைக்குள் நுழைய, இசையோடு கீர்த்தனாவை பார்த்த விஜயேந்திரன் சுயநினைவுக்கு திரும்பினான். கீர்த்தனாவின் பாடல் வரிகள் விஜயேந்திரனை துணுக்குற செய்ய, “பாடாதா. நிறுத்து.” என்று தன் காதுகளை முடி கத்தினான் விஜயேந்திரன்.

கீர்த்தனா அவன் சொல்லை சிறிதும் சட்டை செய்யாமல், மேலும் பாட, “பாடாதான்னு சொல்றேன்ல?” என்று விஜயேந்திரன் கீர்த்தனவை விரல் உயர்த்தி எச்சரிக்க,

“பாட்டாலே மீரா நந்தன் வசமே சேர்ந்தாள்.”

என்று கீர்த்தனா மீண்டும் புன்முறுவலோடு  பாட, “நிறுத்துன்னு சொல்றேன்ல?” என்று கீர்த்தனாவின் சங்கைப் பிடித்தான் விஜயேந்திரன்.

விஜயேந்திரனின் கோபம் ஏற, கீர்த்தனாவின் பிடிவாதம் கூடியது. கீர்த்தனா மூச்சு விடாமல் பாட ஆரம்பித்தாள்.

  “பூங்கோதை ஆண்டாள் கண்ணன் மனதை ஆண்டாள்

ஆண்டாளைப் போலே பாவை ஒன்று பாடு

ஆண்டாண்டு காலம் அன்பு தன்னை தேடு

தஞ்சம் நீயே என்று நெஞ்சும் நாவும் நாளும் பாட

ஸ்வரங்கள் தாராயோ.” என்று கீர்த்தனா பிடிவாதமாகப் பாட, தன்  கைகளைத் தலையில் வைத்து தொம்மென்று அமர்ந்தான் விஜயேந்திரன்.

“பாட எனக்குப் பிடிக்கும். அதை யார் தடுத்தாலும் நிறுத்த முடியாது.” என்று கீர்த்தனா உறுதியாகக் கூற, “பொய். நீ என்னைப் பாடி மயக்க பாக்குற.” என்று விஜயேந்திரன் குற்றம் சாட்ட, கீர்த்தனா கலகலவென்று சிரித்தாள்.

“பாஸ். எந்த காலத்தில் இருக்கீங்க?” என்று அவன் முன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் கீர்த்தனா. “அறுவதில்லையா? இல்லை எண்பதில்லையா? காலம் மாறி போச்சு. இந்த பாட்டால் இம்ப்ரெஸ் பண்றது. அப்புறம் சமைத்துப் போட்டுப்  ருசியால் மனசை பிடிக்கிறது. இதெல்லாம் ஓல்ட் ஸ்டைல்.  இப்ப எல்லார் வீட்டிலும் இரண்டு பெரும் சமைப்பாங்க. ருசியா சமைக்கிறவங்க தான் மனசில் இடம் பிடிக்கணும்னா யூடியூப் மனசை கவர்ந்திரும்.  ஆ… நீங்க சொல்ற மாதிரி பாடி மனசில் இடம் பிடிக்க ஸ்ம்யுள் போதும். அதுக்கு நான் எதுக்கு?” என்று கறாராகக் கேட்டாள் கீர்த்தனா.

“நீ என்ன வேணா பேசு.  எனக்கு ஒண்ணுமில்லை. இப்படி பல பொருளோடு பாடி, பேசி திசை திருப்புற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். ” என்று விஜயேந்திரன் கண்டிப்போடு கூற, “உங்க கிட்ட ஒன்னு சொல்லட்டா?” என்று கீர்த்தனா கேள்வியாக நிறுத்தினாள்.

“எல்லாம் முகுந்தன் பண்ண வேலை. உன் பேச்சை எல்லாம் கேட்க வேண்டியிருக்கு. அவன் அவசர கல்யாணம் பண்ணி, எல்லாரையும் நடு ரோட்டில் விட்டுட்டான்.” என்று விஜயேந்திரன் தன் பற்களை நறநறக்க, “முகுந்தனைச் சொல்ல உங்களுக்கு என்ன  யோக்கியத்தை இருக்கு?” என்று விஜயேந்திரனை பார்த்து நக்கலாக கேட்டாள் கீர்த்தனா.

“ஏய் வாயை மூடு டீ.” என்று விஜயேந்திரன் ஒற்றை விரல் உயர்த்த, ” மரியாதை குறைஞ்சா எனக்கு பிடிக்காது.  மிரட்டினா பயந்திருவோமா? சும்மா, இந்த மிரட்டுறது, விரலை உயர்தரது, சங்கைப் பிடிக்கிற வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். நீங்க லவ் பண்ண பொண்ணு ரொம்ப நல்லவ போல? பிரட், பிஸ்சான்னு காரமே இல்லாம  சாப்பிட்டு ரொம்ப அமைதியா இருந்திருப்பாங்க போல? நான் அவங்களை மாதிரி அமைதி இல்லை. தப்புனா கோபம் வரும். கேள்வி கேட்பேன்.” என்று கீர்த்தனா தன் சேலை முந்தானையைக் கையில் சுற்றியபடியே கூற,  “பேசாத.” என்று கர்ஜித்தான் விஜயேந்திரன்.

” நான் பேசக்  கூடாதா? நீங்கப் பேசக் கூடாது. காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்ணத் துப்பில்லை. பெத்த அம்மா, அப்பா கிட்ட நிலவரத்தைச் சொல்லிப் புரிய வைக்க சாமர்த்தியசாலிதனமில்லை. கட்டண பொண்டாட்டிக்கிட்ட உண்மையா இருக்க வக்கில்லை.” என்று கீர்த்தனா விஜயேந்திரனை குற்றம் சாட்டினாள்.  செய்த தவற்றை கீர்த்தனா  சுட்டிக்காட்ட விஜயேந்திரனின் கோபம் சிவ்வென்று ஏறி,   கீர்த்தனாவின் கன்னத்தை பதம் பார்க்க விஜயேந்திரனின் கைகள் அவள் கன்னம் நோக்கி  வேகமாக இறங்க, இருவரின் வாழ்க்கையும் எதை நோக்கி பயணிக்கும்?

கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…

 

error: Content is protected !!