Ruok- final2

Ruok- final2

நிலா-முகிலன் 10

“அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ!” என மனநல மருத்துவரான அகிலா சொன்னதும், சத்தமாகச் சிரித்த முகிலன், “என்ன ஆன்ட்டி! யோகா பண்ணு; மெடிடேஷன் பண்ணுன்னு சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணுன்னு சொல்றீங்க!?” என கேட்கவும்,

“இல்லப்பா முகிலா! கல்யாணமும் யோகா மாதிரி, மெடிடேஷன் மாதிரி அமைதியும் ஆரோக்கியமும் கொடுக்கும் விஷயமாதான இருக்கணும்?

அப்படி பார்க்கும்போது, உன்னால இந்த பொண்ணுக்கு நிம்மதி கிடைக்கும்னு மனசார நம்பறேன்.

அதுவும் டாக்டர்ஸ் ப்ரஃபஷன்ல இருக்கும் பலருக்கு ஒரு நிறைவான குடும்ப வழக்கை அமையறதில்ல!

உங்க ஸ்ரீதர் அங்கிள் எனக்கு கொடுக்கற சப்போர்ட்டாலதான் நான் இங்க உட்கார்ந்திருக்கேன்.

அந்த மாதிரி சப்போர்ட் கிடைக்காமத்தான் பலபேர் எனக்கு எதிரே உட்கார்ந்து இருக்காங்க, ட்ரீட்மெண்ட் எடுக்க!” எனச் சொன்னவர்,

“நிலா ரொம்ப ஷார்ப் அண்ட் இன்டெலிஜெண்ட்! இவ பெரிய நியூரோ சர்ஜனா வரணும்! அவ கையால பல உயிர்களை காப்பாத்தணும்! அதுக்கு நீ அவளுக்கு துணையா இரு போதும்!” என அவனிடம் சொன்னவர், நிலாவை நோக்கி, “டாக்டர்ஸ் கூட சாதாரண ஹியூமன் பீயிங்தான்! ஆனாலும் இப்படி உணர்ச்சிவசப்பட்டால் சாதிக்க முடியாது நிலா! என்ன புரிஞ்சிதா?

உன் மனசுல இருக்கறத எல்லாம் முகிலன் கிட்ட சொல்லு! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவளவு சீக்கிரம் உன் கோர்ஸை முடிச்சிட்டு, உன்னோட சர்வீசை ஸ்ரார்ட் பண்ணு, அலாங் வித் யுவர் மேரிட் லைஃப்!” என்றவர், “ஆல் தி பெஸ்ட் ஃபார் யுவர் ப்ரைட் அண்ட் ஜாய்ஃபுல் பியூச்சர்!” என இருவருக்குமாக சொல்லி முடித்தார் அகிலா!

அதன் பிறகு அவர்கள் வீடு வந்து சேரவே, இரவு வெகுநேரம் ஆகிப்போனது.

மேற்கொண்டு அவளுடன் ஏதும் பேச இயலவில்லை முகிலனுக்கு. அவள் மனதில் இருப்பதை அறிந்துகொள்ளாமல், அவளை விட்டுவிட்டு, அங்கிருந்து போகவே மனம் வரவில்லை அவனுக்கு! அவளுடைய வெட்கச் சிரிப்பு வேறு சேர்ந்துகொண்டு, அவனை ஒரு வழி செய்துகொண்டிருந்தது.

***

அடுத்த நாள் அதிகாலையிலேயே, அவளை எழுப்பி, அவசரமாகக் கிளம்பச்சொன்னவன், நிலாவை தன்னுடன் அழைத்துக்கொண்டு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள, அவனுடைய நண்பனுக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டிற்கு வந்திருந்தான்.

விடுமுறை சமயங்களில் வந்து தங்குவதற்கென ஏற்படுத்தப்பட்டிருந்த அந்த வீட்டில், பணியாளர்கள் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர்.

அங்கே இருந்த நீச்சல் குளத்தின் அருகில் வந்து, தண்ணீரில் கால்கள் நனையும்படி முகிலன் உட்காரவும், தயங்காமல், அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள் நிலா!

அதனால் தோன்றிய முறுவலுடன், அவளுடைய கண்களை ஊடுருவி, “அகிலா ஆன்ட்டி சொன்ன மாதிரி, நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு நீ நம்பினா, என்கிட்டே எல்லாத்தையும் சொல்லு பேபி! ஐ ஆம் டோட்டலி அட் யுவர் சர்வீஸ்!” என நெகிழ்ச்சியாக அவன் சொல்லவும், அவனுடைய அந்தப் பார்வை, மின்சாரத்தை நொடிப்பொழுதில் விழிவழி அவளது சிந்தைக்குள் பாய்ச்ச, அவனுடைய காதலை அதில் உணர்ந்தவள், அவனுடைய வார்த்தைகளில் நெகிழ்ந்தவளாக, அவனிடம் மனதில் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் நிலா!

***

நொடிகள் நிமிடங்களில் கரைந்து கொண்டிருக்க, தனது அழுகையிலிருந்து மீண்டு வந்த நிலா, அவனுடைய இதயத்துடிப்பை உணர்ந்து, நிமிர்ந்து முகிலனின் முகத்தைப் பார்க்க,

அவன் சட்டைப் பையில் வைத்திருந்த பொத்தான், சிவந்திருந்த அவள் கன்னத்தில் பதிந்து தடத்தை ஏற்படுத்தி இருக்கவும், அவன் அதை அழுந்தத் துடைக்க, அவனுடைய கரங்களில் கட்டுண்டிருப்பதை உணர்ந்து, அதிலிருந்து விடுபட முயன்றவளை நிதானமாக விடுவித்தவன், “தென்! மேற்கொண்டு எதுவும் செய்யாமல் ஏன் விட்டுட்டு வந்த? இப்படி உன்னையே டேமேஜ் பண்ணிக்கறதவிட போராடி பார்த்திருக்கலாமே?” எனக் கேட்டான் அவன்.

“ப்ச்! அவ்வளவு பெரிய சீனியர் டாக்டர்; எங்களுக்கெல்லாம் ரோல் மாடல்; அவங்க ‘ப்ளீஸ்!’ போட்டு கெஞ்சிக் கேட்கும் போது எனக்கு  என்ன செய்யறதுன்னே புரியல!

அங்க நடந்தது ஒண்ணும் ரகசியமெல்லாம் இல்ல! எங்க டிப்பார்ட்மென்ட்ல எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம்தான்.

ஆனால் யாருமே அதை பெருசா எடுத்துக்கல! அப்படி இருந்தும் கூட, நிலமங்கையோட பாடிய டிஸ்போஸ் பண்றதுக்கு முன்னால, என்னை அங்கிருந்து டிஸ்போஸ் பண்ண, சத்யா மேடம்மை நல்லா யூஸ் பண்ணிகிட்டாங்க! அதுதான் உண்மை!

வேற வழி இல்லாம, நான் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தேன்.

அப்பாவை காண்டாக்ட் பண்ண முடியல.

அம்மாவால இதையெல்லாம் ஈசியா எடுத்துக்க முடியாது; பயந்துருவாங்க; ஸோ அவங்ககிட்டயும் சொல்லல!

எனக்கு யார்கிட்ட இதை பத்தி டிஸ்கஸ் பண்றதுன்னு தெரியல. ரொம்ப கன்ப்யூசிங்கா இருந்தது.

கண்ணை மூடினாலே அந்த பெண்ணோட முகம் வந்து என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது.

ப்ராப்பர்டி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருந்ததால அவளோட லேப்டாப் பேக்கை யாருக்கும் தெரியாம நான் வீட்டுக்கு வரும்போதே எடுத்துட்டு வந்துட்டேன்.

அதை பத்தி தெரியாததால நிலமங்கையோட பேரண்ஸ் கூட அதை க்ளைம் பண்ணல போலிருக்கு.

பேக்கை ஓப்பன் பண்ணி பார்த்தால்,  அவங்க லாப்டாப் ஆக்சிடண்ட்ல டேமேஜ் ஆகியிருத்தது. பட் டாகுமென்ட்ஸ் சேஃபாதான் இருந்தது.

அந்த பொண்ணு சொன்ன மாதிரி டாக்குமெண்ட், கீ எல்லாத்தையும் பிரபாவை கண்டுபிடிச்சு  அவர்கிட்ட ஒப்படைச்சா என்னன்னு திடீர்னு எனக்கு ஒரு தாட் வந்துது. அதுதான் நடந்த பாவத்துக்கு உடந்தையா இருக்கறதுக்கு நான் செய்யும் ப்ராயச்சித்தம்னு தோணிச்சு.

சென்னைல எனக்கு யாரையும் தெரியாது.  ஸோ இந்த ஆட்ரஸ் பார்த்துட்டு இங்கேயே வந்துட்டேன்.

அப்பா அம்மாவை பொருத்த வரையில் நான் மதுரைலதான் இருக்கேன்னு நினைச்சிட்டு இருந்திருப்பாங்க.

அப்பத்தான் தூக்கம் வராம இந்த மாத்திரையெல்லாம் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்!

பிறகு நிலமங்கை வேலை செய்த கம்பனில போய் விசாரிச்சேன். லீவ்ல போயிருந்ததால அவங்க இறந்துபோன தகவல்கூட அங்க யாருக்கும் தெரியல.

அவங்க சோழிங்கநல்லூர்ல ஒரு பி.ஜில தங்கியிந்ததா சொன்னாங்க. அங்க போய் பார்த்தால் அவங்களோட டிரஸ்ஸஸ் தவிற அங்க வேற எதுவும் இல்ல. டாக்குமென்ட்ஸ்ல பார்த்தால் ‘ஆர்.பிரபஞ்சன்’ங்கற பேரைத் தவிர பிரபாவை பத்தின டீட்டைல்ஸ் எதுவும் அதுல இல்ல.

அவரை கண்டுபிடிக்க முடியாம போனால், மெடிக்கல் பிரபஷனையே விட்டுடனும் அட் த ஸேம் டைம், கல்யாணம் பண்ணிக்காம லைப் புல்லா இப்படியே இருந்துடனும்; அதுதான் என் தப்புக்கு நான் செய்யும் பிராயச்சித்தம்னு நினைச்சேன்.

ஆனால் போனமாசம் உங்கள இங்க பார்த்ததும் என்னோட அந்த எண்ணமெல்லாம் தூள் தூளா நொறுங்கிப் போச்சு!” என முகம் சிவக்கச் சொன்னவள்,

“எதிர்பாராத நேரத்துல, எதிர் பார்க்காத இடத்துல உங்களை பார்க்கவும் எல்லாத்துலயும் தோத்துப் போன ஒரு பீல் வந்துடுச்சு.

எது நடக்கவே நடக்காதுனு நான் நினைச்சேனோ அது நடக்கவும், அப்படியே ஷாக் அடிச்ச மாதிரி ஆயிடுச்சு!

நான் உங்க கிட்ட ப்ரபோஸ் பண்ணி, ஒரு வேளை நீங்க அதை அக்செப்ட் பண்ணிட்டாலும், அதை நான் செத்துப்போன ஒரு பொண்ணுங்கு செய்யும் ஒரு அநியாயமா நினைச்சேன்.

பல ஆசைகளோட இருந்த ஒருத்தி அநியாயமா செத்துப்போன உணர்வு கூட இல்லாம சந்தோஷமான ஒரு வாழ்க்கைக்கு நான் தயாராவது ரொம்ப பெரிய பாவம்னு தோணிச்சு!

ஆனால் உங்களை நேர்ல அதுவும் சிங்கிளா பார்த்த பிறகு, எவ்வளவு பெரிய விஷயத்தை இழப்க்கப்போறோம்னு நினைச்சு வெறுத்துப்போயிட்டேன்!

எங்க என் மனசு மாறிப்போயிடுமோன்னு ஒரு பயம் வேற வந்தது.

மாத்திரை போட்டும் துக்கம் வராமல் போனதால,  பக்க விளைவுகளைப் பத்தி நல்லாவே தெரிஞ்சிருந்தும் அதோட டோஸேஜ் அதிகமா எடுத்துக்க ஆரம்பிச்சேன் .

அப்படியும் மனசு அமைதி இல்லாமல் போக, சூசைட் பண்ணிக்க ட்ரை பண்ணேன்!” என்று முடித்தாள் நிலா.

அதில் கலவரமடைந்தவன் “இது என்ன புதுக்கதை?  சூசைட் பண்ணிக்கத் தூண்டற அளவுக்கு நான்  என்னம்மா செஞ்சேன் உன்னை!? அதுவரைக்கும் நாம நேருக்குநேர் பார்த்தது கூட இல்லையே!” எனக்கேட்டான் முகிலன் யோசனையாக.

“நான்னு சொல்லுங்க! நாமன்னு என்னை ஏன் சேர்த்துக்கறீங்க?” என எகத்தாளமாகக் கிண்டலுடன் நொடிந்துகொண்டவள், “நான் உங்களை முசூரிலேயே பார்த்திருக்கேன் கிட்டத்தட்ட எட்டு வருஷத்துக்கு முன்னால! தெரியுமா?” எனக்கேட்டாள் நிலா நாணம் பூத்த புன்னகையுடன்.

***

நிலா பள்ளிப்படிப்பு முடித்து, டேராடூன் மருத்துவக்கல்லூரியில் அடி எடுத்து வைத்திருந்த சமயம், பதின்ம வயதின் கடைசி படிகளில் நின்றுகொண்டு, அந்த வயதிற்கே உரியக் குறும்புகளோடும், எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளோடும் வாழ்க்கையை சொட்டு சொட்டாக ருசிக்கத்தொடங்கியிருந்த சமயம், ஒரு சனிக்கிழமை விடுமுறையை அனுபவிக்கவென நண்பர்கள் கூட்டத்துடன் பனிமலைகளின் மகாராணி என்று அழைக்கப்படும் முசூரி வந்திருந்தாள்.

மதியம் வரை ஊரை சுற்றியவர்கள் உணவருந்த அங்கே இருக்கும் ஒரு நட்சத்திர விடுதியின் உணவகத்திற்குள் நுழைய, அங்கே உட்கார்ந்து அந்த இடத்தையே அதிரச்செய்து கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.

பொம்மை கடையைப் பார்த்த குழந்தை போல அந்த கூட்டத்தில் தனித்துவமாகத் தெரிந்த ஒருவனிடம் நிலாவினுடைய பார்வை சென்று நிலைத்து, பொம்மை கடையைப் பார்த்த குழந்தை போல வேறு எங்கும் நகரமாட்டேன் எனப் பிடிவாதம் பிடிக்க, நண்பர்களில் கிண்டலுக்கு பயந்து பார்வையைத் திருப்பியவள் அதிர்ந்தாள். காரணம் ஆண் பெண் பேதமின்றி, அவளுடைய தோழர்கள் அனைவரின் பார்வை மொத்தமும் அவனையே மொய்த்துக்கொண்டிருந்தது.

‘அடப்பாவிகளா’ என மனதில் எண்ணிக்கொண்டு, கையை தட்டி அனைவரையும் உணர்வுக்குக் கொண்டுவந்தவள்,”வந்த வேலையை பார்க்கலாமா?” என ஹிந்தியில் கேட்க, அனைவரும் உணவு மேசையை நோக்கி நகர்ந்தனர்.

ஆனாலும் அந்த புதியவனை நோக்கிய அனைவருடைய கண்களும் அவனிடமே நிலைத்திருந்தன. அவனுக்கும் கூட பலர் அவனைப் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தே இருக்கலாம். அதையெல்லாம் அவன் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வெகு இயல்பாக இருந்தான். அவனுடைய நடவடிக்கையில் ஒரு அலட்சிய பாவம் இருந்தது. அதுவே அவனை மேலும் கம்பீரமாக காட்டியது.

இரண்டு பெண்களையும் சேர்த்து அவனுடன் பத்து பன்னிரண்டு பேர் இருக்கலாம். அந்த அனைவருமே நல்ல ஆளுமையுடன் மிடுக்குடனே இருந்தாலும், ஏனோ அந்த ஒருவன் மட்டும் நிலாவின் விழிகளுக்குள் புகுந்து, அவள் மனதில் கல்வெட்டாய் பதிந்துபோனான்.

அன்று மாலை அங்கே அமைந்திருக்கும் மார்க்கெட் பகுதியான ‘மால் ரோட்’ எனும் இடத்தில் அவர்களை மறுபடியும் பார்க்க நேரவும், நிலாவின் கண்கள் அவனைத் தேட, ஒரு கடைக்குள்ளிருந்து வெளிப்பட்டான் அவன்.

அவனுடைய நண்பன் ஒருவன் (ஜெய்) அவனது காதுகளில் ஏதோ சொல்லவும், அவனது வழக்கமான அலட்சியத்துடன் தோளைக் குலுக்கியவாறு அவன் செல்ல, அவளுடைய மனதும் அவன் பின்னாலேயே சென்றது.

அவன் தன்னை பற்றித்தான் ஏதோ சொல்லியிருப்பானோ என்ற எண்ணம் தோன்றி, அவளை வெட்கம் கொள்ளச் செய்தது.

இப்படி ஸ்வாரஸ்யத்துடன் ‘சைட்’ அடிக்கும் பழக்கமெல்லாம் இயல்பிலேயே அவளுக்குப் பிடிக்காத காரணத்தால், ‘இனி இப்படி நடந்துகொள்ளவே கூடாது’ என எண்ணிக்கொண்டாள் நிலா! ஆனால் அவளுடைய பேச்சை அவளாலேயே கேட்கமுடியாமல் போனதுதான் விந்தையிலும் விந்தை. காரணம் அடுத்து வந்த வார இறுதி நாட்களிலும் தொடர்ந்து அவனைப் பார்க்கும்படியே நேர்ந்தது.

கெம்ப்ட்டி நீர்வீழ்ச்சி, ஜாரி பாணி நீர்வீழ்ச்சி, கன் ஹில், ஜ்வாலா தேவி கோவில், என ஒவ்வொரு விடுமுறையின் போதும் முசூரியையே அவளுடைய நண்பர்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என அவளுக்குக் கோபம்கூட வந்தது. அந்த வசியக்காரன்தான் காரணமோ எனக்கூட எண்ணிக்கொண்டாள்.

ஒவ்வொரு முறையும் அவள்தான் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே தவிர அவன் ஏறிட்டும் அவளைப் பார்க்கவில்லை. அவளைத்தான் என்றில்லை, அவளுடன் இருந்த எந்த ஒரு அழகியையும் அவன் ஒரு பொருட்டாக மதித்து, பார்வையைத் திருப்பக்கூட இல்லை, அவனுடைய நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விதிவிலக்காக.

அதுவே அவனிடம் அவளைச் சரணடையச் செய்ய போதுமானதாக இருந்தது. அவனைப் பற்றிய நினைவுகள் நாளுக்குநாள் அவள் மனதில் அதிகமாக நிறைந்துகொண்டே போனது.

ஒருவறாக இரண்டு மாதங்கள் கிடந்திருந்த நிலையில், டேராடூனில் இருந்து முசூரி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ‘பட்டா பால்ஸ்’ என்னும் நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் பொழுது, ஒரு சிறிய பாலத்தை நோக்கி அவன் சென்றுகொண்டிருக்க, “ஹேய் முகில்! முகில்! வெயிட் பண்ணுடா நானும் வரேன்!” என அழைத்தவாறே அவனை பின் தொடர்ந்து சென்றான் அவனுடைய நண்பன் ஜெய்!

அப்பொழுதுதான் அவன் பெயர் முகில் என்றும் அவன் ஒரு தமிழன் என்றும் உணர்ந்துகொண்டாள் நிலா!

“முகில்! அதுதான் உங்க பேரா?’ என அவள் மனதிற்குள்ளே கேட்டுக்கொள்ள, “ஹேய்! சுனோ! உஸ்கா நாம் முகில் ஹேனா! ஓ ஏக் மதராஸீபீ ஹூன்!” எனக் குதூகலமாக மற்றவரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் அவளுடைய தோழி ஒருத்தி. “பாவிகளா அடங்கவே மாட்டீங்களாடீ நீங்க?! டோன்ட் சே மதராசி! ஜஸ்ட் சே தமிழன்! தீவானே!” என அவர்களைப் பார்த்து மென்மையாகக் கடிந்துகொண்டாள் நிலா!

அதுதான் அவள் முகிலனைக் கடைசியாகப் பார்த்தது. அதன் பின் அவள் பல முறை முசூரியை நோக்கிப் படை எடுத்த போதும், அவளுடைய பார்வையில் சிக்கவே இல்லை அவன்.

தொடர்ந்த நாட்களில், அதுவரை இருந்ததைக் காட்டிலும் அவனுடைய நினைவு அதிகம் தாக்கியது அவளை.

அவனைப் போன்று ஒருவனைத்தான் மணக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றி, நாளடைவில் மணந்தால் அவனைத்தான் மணக்கவேண்டும் இல்லையென்றால் அப்படியே காலத்தைக் கடந்துவிட வேண்டும் எனத் தீவிரமாக எண்ணத்தொடங்கிவிட்டாள் அவள் அவன் மீது ஏற்பட்டிருந்த ஈர்ப்பினால்.

அதன் பின் படிப்பு, படிப்பு என அதிலேயே தன்னை புதைத்துக்கொள்ள, அவனைப் பற்றிய எண்ணங்கள் மூளையின் ஏதோ ஒரு மூலைக்குள் சென்று மறைந்து ஒளிந்துகொண்டன.

அவள் ஹௌஸ் சர்ஜனாக இருக்கும் சமயம், அவளுடைய வீட்டில் திருமண பேச்சைத் தொடங்கவும், எங்கோ போய் பதுங்கி இருந்த அவனது நினைவு, சுதந்திரமாக வெளியில் வந்து அவளைத் துரத்தவும், திருமணத்திலிருந்து தப்பிக்க, மேற்படிப்பைக் கரணம் காட்டினாள் நிலா!

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கே சென்றாலும் அவனைத் தேடியவண்ணம் இருக்கும் அவளுடைய விழிகள்.

சமூக வலைத்தளங்களில் கூட அவன் கிடைக்காமல் போக, நாட்கள் வேறு அதி வேகமாக ஓடிக்கொண்டே இருக்கவும், அவனை இனி சந்திக்கவே இயலாது என்ற முடிவிற்கு வந்திருந்தாள் நிலா!

சரியாக அந்த சமயம் பார்த்து இந்த பிரச்சினைகள் ஏற்படவும், கிறுக்குத்தனமாக ஏதேதோ முடிவுகளை அவள் எடுத்திருக்க, அடுத்த நாளே அவர்களுடைய குடியிருப்பின் பூங்காவில், மாமாவின் பேத்தியுடன் விளையாடியவாறு அவளுக்குக் காட்சிகொடுத்து அவளை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் முகிலன்.

சொல்லிக்கொண்டே போனவளைப் பேச்சற்று பார்த்துக்கொண்டிருந்தவன்,  “முசூரில எனக்கு வெறும் நாலு மாச ட்ரைனிங் மட்டும்தான். அதுக்கு பிறகு, ஹைதராபாத் போயிட்டேன். அந்த பீரியட்லதான் என்னை நீ பார்த்திருப்ப! நிறைய்ய்ய்ய்ய  மிஸ் பண்ணிட்டோம் இல்ல?” என  அலுத்துக்கொண்டான் முகிலன்.

“ப்ச்! எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும் இல்ல! நான் அப்பவே உங்களைப் பார்த்திருந்தால், இவ்வளவு படிப்பெல்லாம் படிச்சிருக்க மாட்டேன் தெரியுமா?” என்ற நிலா, “பெட்டர் லேட் தேன் நெவெர்! இப்பவாவது இது நடந்ததே! உங்களைப் பொறுத்தவரைக்கும் இப்ப நடந்ததுதானே ஃபர்ஸ்ட் மீட்டிங்?” என்றவள்,

“நம் விழியின் பின்பகுதியில் அமைந்திருக்கும் ‘ஆப்டிகல் நெர்வ்’ எனப்படும் மெல்லிய நரம்பின் மூலம் நமது காட்சிகள் நொடி நேரத்திற்குள் நம் மூளைப்பகுதிக்குள் சென்று அங்கே அமைந்திருக்கும் நினைவு மண்டலங்களை சென்றடையும். அதில் ‘அமிக்டாலா’ எனும் பகுதியில்தான் பயம், மகிழ்ச்சி, காதல், துக்கம், அவமானம் சம்பந்தப்பட்ட காலத்தால் அழிக்கமுடியாத சில நினைவுகள் ஆழமாக பதிந்துபோகும்! அதுவே கண்டதும் உண்டாகும் காதலுக்கும் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கவும் காரணமாக இருக்கலாம்” என அறிவியல் விளக்கம் கொடுத்தாள் நிலா முகம் மலர.

12839

“பார்றா!  டாக்டர் புள்ள என்னம்மா பேசுது!” என கிண்டலுடன் அதிசயித்து, “இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன?

ஒரு மாசம் முன்னால நீ இதை சொல்லி இருந்தால் கூட நான் நம்பி இருக்க மாட்டேன்!

லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா! லூசா நீன்னு கிண்டல் கூட பண்ணியிருப்பேன்! ஆனால் இதை நான் ப்ராக்டிகலா எஸ்ப்பீரியன்ஸ் பண்ணதால சொல்றேன் அழகி! ஐ ஆம் ஸ்பீச் லெஸ்!

காரணம் எதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும்; இப்ப இந்த மொமன்ட் எனக்கு இதை உன்கிட்ட சொல்லணும்னு தோணுது பேபி! தட் இஸ்… ஐ லவ் யூ ஃபிரம் த பாட்டம் ஆஃப் மை ஹார்ட்!” என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய வலது கையை பற்றி, அவளது விரல்களில் மென்மையாக இதழ் பதித்தவன், பின் அவளுடைய கன்னங்கள் இரண்டிலும் கவிதை படித்தான் முகிலன்.

***

தைமாத முழு நிலவு, மென்மையாக ஒளிவீசிச் சிரித்துக்கொண்டிருக்க, காலை முதல் லேசான மழை பொழிந்து, நிலமங்கை குளிர்ந்திருந்தாள் இன்பமாய்!

அந்த சூழ்நிலையை அனுபவித்தபடி, அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில், அவள் தற்கொலை செய்துகொள்ள ஏறி நின்ற சுவரில் கைகளை ஊன்றியவாறு, அன்று கவனிக்காமல் போன அழகிய நிலவையும், இருளில் நிழலெனத் தெரிந்த தூரத்துக் குன்றுகளின் எழிலையும் பார்த்து மயங்கியபடி நின்றுகொண்டிருந்தாள் நிலா!

அப்பொழுது அவளுடைய பார்வை எதார்த்தமாக அந்த சுவரின் கீழே அமைந்திருந்த சன் ஷேடின் மேல் பதிய, அங்கே வைக்கப்பட்டிருந்த ஏ.சி அவுட் டோர் யூனிட்டின் அருகில் விழுந்து சிதறிக் கிடந்த ஒரு கைப்பேசி அவளது கண்களில் பட்டது.

அதை நன்றாக உற்றுப்பார்க்கவும், சில நாட்களாக, ‘எங்கே தொலைத்தோம்?’ என அவள் தேடிக்கொண்டிருந்த அவளுடைய கைப்பேசிதான் அது என்பது அவளுக்குப் புரிந்தது.

அவள் தற்கொலைக்கு முயன்ற அன்று, முகிலன் அவளை இழுத்து கீழே தள்ளும்பொழுது, அது அங்கே விழுந்திருக்கவேண்டும். அப்பொழுது இருந்த நிலையில் அவள் அதை மறந்தே போனாள்.

அதை நினைக்கும் பொழுது முகிலன் அவளைக் காப்பாற்றிய அந்த நிகழ்வு, அவளது நினைவில் வந்து அவளது உடல் சிலிர்த்தது.

12840

கும்பகோணத்தில் இருக்கும் முகிலனின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பூர்வீக வீட்டில் முந்தைய நாள்தான் நிலா-முகிலனின் திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்துமுடிந்திருந்தது.

இரு குடும்ப உறவுகளும், நண்பர்களும் வந்திருந்து அவர்களை வாழ்த்திச் சென்றனர்.

நிலா அவளது மேற்படிப்பை விட்ட இடத்திலிருந்து தொடர ஏதுவாக மூன்று மாதங்களுக்குப் பிறகு திருமணத்திற்கு நாள் குறித்தனர்.

மேலும், முகிலனுக்கு ரகசிய பணிகள் இல்லாத நேரங்களில், நிலாவின் படிப்பு முடியும்வரை அவளுடன் மதுரையிலேயே இருக்க வசதியாக திட்டமிட வேண்டி இருந்ததால், இந்த அவகாசம் அவனுக்கும் தேவைப்பட்டது.

ஜீ.கே மாமா, மாமி, ஜெயந்தி, கதிர் இவர்களுடன் ஜெய்யும் அவனது மனைவியும் வேறு சேர்ந்துகொண்டு அவர்களைச் செய்த கேலியில், முகிலனே ஓய்ந்துபோனான் என்றால் நிலாவின் நிலைமையை என்னவென்று சொல்ல?

அனைத்தையும் நினைக்க நினைக்க அப்பொழுதும்  கூட சிரிப்பு வந்தது அவளுக்கு! அவளது அந்த நினைவைக் கலைத்தது, காற்றில் கலந்து வந்த அந்த பாடல்!

எட்டாத உயரத்தில்

நிலவை வைத்தவன் யாரு?

கையேடு சிக்காமல்

காற்றை வைத்தவன் யாரு?

இதை எண்ணி எண்ணி

இயற்கையை வியக்கிறேன்!

பெண்ணே! பெண்ணே!

பூங்காற்றை அறியாமல்

பூவை திறக்க வேண்டும்!

பூ கூட அறியாமல்

தேனை ருசிக்க வேண்டும்!

அட உலகை ரசிக்க

வேண்டும் நான்

உன் போன்ற பெண்ணோடு!

வெண்ணிலவே வெண்ணிலவே

விண்ணை தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை!

இந்த பூலோகத்தில்

யாரும் பார்க்கும் முன்னே

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்!

கைப்பேசியில் ஒலித்த அந்த பாடலுடன் இணைந்து அதன் கடைசி வரிகளைப் பாடிக்கொண்டே அவளை நெருங்கி வந்து, அவளது கூந்தலின் வாசம் பிடித்தவாறே நின்றான் முகிலன்.

அவனை எதிர்பார்த்தே காத்திருந்தாலும் அவன் முகம் பார்க்க நாணி, தலை குனிந்தவளை தன் புறம்  திருப்பி, அவளுடைய விழிகளைப் பார்க்க, அதில் போதையின் மயக்கம் இல்லை! அவன் மீதான காதலின் மயக்கம் மட்டுமே ஒளிர்ந்தது!

ஆனால் அவனது கண்களைச் சந்தித்தவள்தான் அதில் தெரிந்த விஷம பாவனையில் மிரண்டு போனாள். ‘ஏதோ வில்லத்தனம் செய்ய பிளான் பண்றார் போலவே!’ என எண்ணி அவள் பின்வாங்க, நொடியும் தாமதிக்காமல் அவளை அப்படியே தூக்கி, அந்த சுவரின் மேல் உட்கார வைத்தான் முகிலன்!

அதில் மேலும் மிரண்டவள், ‘வீல்’ என்ற அலறலுடன் இரு கைகளாலும் அவனது சட்டையின் காலரைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் நிலா.

“ஏய் அழகி! கண்ணைத் திறந்து கொஞ்சம் திரும்பி கீழ பாருடி!” என சிரித்துக்கொண்டே விஷமாக அவன் சொல்லவும், மேலும் பதறியவள், “இல்ல! என்ன இறக்கி விடுங்க ப்ளீஸ்!” என்று சொல்லிக்கொண்டே, மெதுவாக கைகளைச் சட்டையிருந்து அவனது கழுத்திற்கு அவள் இடமாற்றம் செய்ய, “இவ்ளோ பயப்படுவியா நீ? அன்னைக்கு இந்த வால் மேலதான ஏறி நின்ன!” என அவன் நக்கலாகக் கேட்க,

“அன்னைக்கு எனக்கு வாழனும் என்கிற ஆசையே இல்ல! ஆனா இன்னைக்கு அது ரொம்பவே இருக்கு! விளையாடம இறக்கி விடுங்க!” என நிலா நடுங்கும் குரலில், கோபம் கலந்து சொல்ல அவளை இறக்கி விட்டவன், “இதே மாதிரி ஒரு த்ரில்லான லைஃபுக்கு நீ ரெடியா அழகி!” எனத் தீவிரமாகக் கேட்டான் முகிலன்.

12841

அவன் கேள்வியை உணர்ந்து மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டி தனது சம்மதத்தை பகிர்ந்தாள் நிலா.

அவனது வேலையைப் பற்றியும், அதில் இருக்கும் ஆபத்துகள் பற்றியும், அதில் அவனது அதீதமான விருப்பத்தைப் பற்றியும் அவளிடம் ஏற்கனவே விளக்கமாகச் சொல்லியிருந்தான் அவன்.

அதை அவள் உள்வாங்கிக்கொள்ள அவளுக்கு சில நாட்கள் தேவைப் பட்டது. அதன் பிறகுதான் அந்த திருமண நிச்சயதார்த்தமே ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கிடையில் பிரபஞ்சனைக் கண்டுபிடிக்க அவன் எடுத்த முயற்சியில், சீனாவிலிருந்து முகிலன் மீட்டுவந்த அவனுடைய சக உளவுத்துறை அதிகாரி பி.ஆர்.ரத்தினம், அதாவது பிரபஞ்சன் ராஜரத்தினம்தான் அவர் என்பது தெரிய வந்தது.

அவருடைய பெயரை சுருக்கமாக மட்டுமே அவன் கேள்விப்பட்டிருந்ததால், பிரபஞ்சனை அவருடன் இணைத்து பார்க்கவில்லை முகிலன்.

நிலமங்கையின் மரணத்தை மிகுந்த வலியுடன் அவருக்குத் தெரியப்படுத்தி, அந்த வீட்டையும்  நிலாவைக் கொண்டே அவரிடம் ஒப்படைத்து, அவளுடைய எண்ணத்தையும் நிறைவேற்றி, மேலும் அவர் மூலமாக நிலமங்கையின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து, அவளுடைய குற்ற உணர்ச்சியையும் களைந்தான் முகிலன், டாக்டர் சத்யபாமாவை அதில் சம்பந்தப்படுத்தாமலேயே.

***

மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தவளை, “இதுவரைக்கும் பிரச்சினைகளை பற்றி மட்டுமே பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டோம்; உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும் சொல்லு அழகி!” என அவன் ஆவலாக கேட்க,

அதிகாலை வான் பிடிக்கும்!

வான் மீதில் முகில் பிடிக்கும்!

முகில் மறைக்கும் மதி பிடிக்கும்!

முழு மதியின் ஒளி பிடிக்கும்!

செண்பகப்பூ மரத்தடியில், மென் தென்றல் தான்  பிடிக்கும்!

தென்றல் கலந்து தரும் செண்பகத்தின் மணம் பிடிக்கும்!

மின்வெட்டு காரிருளில் பறக்கும் மின்மினி பிடிக்கும்!

மின்வெட்டைத் தோற்கடிக்கும் மின்மினியில் ஒளி பிடிக்கும்!

குயில் இசைக்கும் பண் பிடிக்கும்!

மொழிதனிலே தம்ழ் பிடிக்கும்!

கார்த்திகையில் மழை பிடிக்கும்!

மழை பொழியும் கார்முகிலை காதலிக்க தினம் பிடிக்கும்!

மழை மட்டும் என்றில்லை மாலை வெயில் இதம் பிடிக்கும்!
சித்திரையின் வெயில் கூட சிக்கனமாய் தான் பிடிக்கும்!

‘ஏண்டா இவ கிட்ட இப்படிக் கேட்டோம்’ என நொந்து, இடையே அவன் பேச வந்ததையும் கொஞ்சம் கூட கவனிக்காமல் அது பிடிக்கும் இது பிடிக்கும் என நிறுத்தாமல் அடுக்கிக்கொண்டே போனவளை,

“ஏய்! எதார்த்தமா என்ன பிடிக்கும்னு கேட்டா;  சொல்ல வறத கூட கவனிக்காம, பேசிட்டே இருக்க! மத்தவங்க சொல்ல வறதையும் கொஞ்சம் கவனிக்னிக்கனும்!” என கொஞ்சம் அதட்டலாக அவன் சொல்விட, அதில் மிரண்டு போய், “என்… என்ன?  கவனிக்கல… சாரி!” என அவள் தடுமாற,

,”இது சாம்பிள் மா! இதுக்கே இப்படி பயப்படற, போலிஸ்காரன் பொண்டாட்டி இப்படியா இருப்ப?

பதிலுக்கு, மேனர்ஸ் இல்ல! அது இல்ல? இது இல்லன்னு எகிற வேணாம்! அதவிட்டுட்டு!

இதெல்லாம் உனக்கு கொஞ்சம் கூட செட்டே ஆகல!” என அடக்கப்பட்ட சிரிப்புடன், முகிலன் தீவிரமாக சொல்லவும், அவன் தன்னை கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்தவள்,

பதிலுக்கு, “லவ் பண்ற பொண்ண… அதுவும் கட்டிக்க போற பொண்ண, தனியா இருக்கும் போது இப்படி மிரட்ரீங்க;

உங்களுக்கு மேனர்ஸ் இல்ல! சோஷியல் ரெஸ்பான்சிபிட்டி இல்ல! கவிதை சொன்னா பாராட்டற அளவுக்கு ரசனை இல்ல” என அவள் கடகடவென பொரியவும்,

“ஆஹான்! அழகி நீ பார்ம்க்கு வந்துட்ட போ! நவ் ஒன்லி யூ ஆர் பர்ஃபக்ட்லி ஓகே ஃபார் மீ பேபி! லவ் யூ!” என்றவாறு பேசிப்பேசியே சிவந்துபோன நிலாவினுடைய உதடுகளுக்கு ஓய்வு கொடுக்க அவற்றைச் சிறை செய்தான் முகிலன் அவனது இதழ்களால் மென்மையாக சில்லென்ற காதலுடன்.

அதுவரை முகில்களுக்குள் மறைந்திருந்த முழு நிலவு, மீண்டு வந்து அங்கே பிரகாசமாக ஒளிவீசிக்கொண்டிருந்தது நாணத்துடன்!

error: Content is protected !!