Kannan Rathai – 28 Final (part – 1)

அத்தியாயம் – 29

அவர்கள் இருவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்தவளின் உதட்டில் புன்னகை அரும்பிட, “என்ன மது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல இப்படி குழந்தை புள்ளை மாதிரி விளையாட்டிட்டு இருக்கீங்க” அவள் குறும்புடன் வம்பிழுக்க பின்னதலையை வருடியவன்,

“சும்மா அவளிடம் விளையாடினேன். நீ பேசிட்டு இரு ருத்ரா நான் போய் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன்” என்றவன் அங்கிருந்து நழுவ அப்போதுதான் பில்போட சொன்ன நினைவு மதுவிற்கு வந்தது.

“கிருஷ்ணா துணியைப் பில்போட கொடுத்துட்டு வந்தேன் வாங்கிட்டு வந்துவிடு” என்றதும் ருத்ரா திகைப்புடன் மதுவைப் பார்த்தாள். அவள் பேசுவது கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அவனும் ஒரு தலையசைப்புடன், “நீங்க பேசிட்டு இருங்க” என்றவன் இரு பெண்களையும் அங்கே இருக்க சொல்லிவிட்டு சென்றான்.

அவன் சென்றதும் அங்கிருந்த டேபிளில் இருவரும் அமர, “மது  கிருஷ்ணாவுடன் என்ன சண்டை” என்றாள் நேரடியாகவே.

மதுவும் சின்ன சிரிப்புடன், “அன்னைக்கு என்னை கல்யாணம் பண்ணுவதற்கு பதிலாக உன்னை கல்யாணம் பண்ணிருந்தா பரவல்ல நான் நல்ல இருந்திருப்பேன்னு சொல்றான் ருத்ரா” என்றாள்.

அவள் சொன்னதைக்கேட்டு ருத்ரா தன்னையும் மீறி பக்கென்று சிரித்துவிட்டு, “யாரு அவனா என்னை கல்யாணம் பண்ணுவான். மணமேடையில் என் பக்கத்தில் உட்கார்ந்து உன்னை சைட் அடிச்சவன்தானே..” என்றவளை கேள்வியாக நோக்கினாள் மது.

அவளின் பார்வையின் பொருள் உணர்ந்து, “அவனால்தான் மணமேடை விட்டு இறங்கி வந்தேன் மது. ஆன இன்னொரு பக்கம் கிருஷ்ணாவுடைய அந்த பொறுமை ரொம்ப பிடிச்சுது. எனக்காக கடைசி நிமிஷம் வரை அமைதியாக இருந்தான். அன்னைக்கு நானும் மெளனமாக இருந்தா இன்னைக்கு எங்க லைப் கோர்ட் ல தான் வந்து நின்றிருக்கும்” என்றாள் எதார்த்தமாகவே.

“அப்போ கிருஷ்ணா உங்களை விருப்பட்டு கல்யாணம் பண்ணலையா?” என்று மது கேட்க, “இதுக்கான பதில் உனக்கு கிடைச்சிருக்குமே” கேள்வியாக புருவம் உயர்த்தினாள் ருத்ரா.

மது அமைதியாக தலைகுனிய, “நீ பாலாவை விரும்பறேன் என்றதும் நான் உண்மையை கண்டுபிடிச்சிட்டேன், நீ விரும்புவது கிருஷ்ணாவைத்தான் என்று. அதன் அன்னைக்கு நான் விட்டுகொடுக்க காரணம்..” என்றாள் தெளிவான குரலில் தடுமாற்றம் இல்லாமல்.

“கிருஷ்ணா கடையில் உன்மேல் காட்டிய அக்கறை, நீ வீட்டிற்கு வந்தும் பேசிய பேச்சே இருவரும் ஒருவரையொருவர் விரும்பியது. கடைசியில் நானே ஒரு ஊமை” என்றவள் நிறுத்திவிட்டு, “சாரி மது அன்றைய மனநிலையை சொல்றேன் தப்ப நினைக்காதே” என்றாள்.

அவளின் குற்றஉணர்வு புரிய, “நான் தவறா நினைக்கல ருத்ரா” என்றதும் அவள் நிம்மதியுடன் பேச்சைத் தொடர்ந்தாள்.

“தேங்க்ஸ்பா. அப்படி சொன்னதும் உனக்கு கிருஷ்ணாவை கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. ஆன வீட்டிற்கு போனதும் அப்பா, அம்மா கேள்வி கேட்டாங்க தெரியுமா” என்றவள் அன்றைய தினத்தின் நினைவுடன் உறவாடுவது போல பேச்சை நிறுத்த அவளின் கரம்பிடித்து ஆருதல் படுத்தினாள் மது.

அவளின் செயலில் நிமிர்ந்த ருத்ரா, “அம்மாகிட்ட சொன்னேன் என்னை மாதிரி எந்த குறையும் இல்லாத பெண்ணிற்கு ஆயிரம் மாப்பிள்ளை கிடைப்பான். ஆன மதுவிற்கு யாரும் கிடைக்க மாட்டாங்கம்மா. கிருஷ்ணாதான் அவளை முழுவதும் புரிஞ்சி வெச்சிருக்கான். அவங்க சேர்ந்தது சந்தோசம்னு சொல்லிட்டேன்” என்றவள் தன் மனபாரத்தை மதுவிடம் இறக்கி வைத்தாள்.

அவளின் உருக்கமான பேச்சு மதுவின் மனதை ஏதோ செய்தது. அவளின் மௌனத்தை கவனித்த ருத்ரா, “மது நீ ரொம்ப லக்கி. அவன் உன்னை அந்த அளவுக்கு விரும்பினான். அன்னைக்கு ஜவுளிக்கடையில் உனக்காக என்னிடம் சண்டைக்கு வந்தான். இது மட்டுமா?” என்றவள் தொடர்ந்து,

“நீ ஆறுமாசம் ஊருக்குப் போன விஷயம் கூட வீட்டிற்கு தெரியாமல் வெச்சிருந்தான்” என்றவளை அவள் திகைப்புடன் நோக்கினாள் மது.

அவளுக்கு எப்படி அந்த விஷயம் தெரியும்? அவளின் பார்வையில் கேள்வி இருக்க, “நான் கிருஷ்ணாவை ஏர்போர்ட்டில் பார்த்தேன். அப்போகூட உன்னை விட்டுகொடுக்கல. சரியான கல்லுளிமங்கன்” என்றதும் மது சிரித்தாலும் அவளின் பார்வை ருத்ராவை முறைத்தது.

“சரிடி முறைக்காதே. உன் புருஷனை நான் எதுவும் சொல்லல.” என்றாள் கேலியுடன் கண்சிமிட்டியபடி.

அப்போதுதான் மதுவிற்கு நினைவுவர, “ஆமா நீ ஏன் கிருஷ்ணா அடிப்பட்டபோ பார்க்க வரல” அவள் கேள்வியுடன் புருவம் உயர்த்திட, “நான் வந்தா அவனோட நடிப்பை சொல்லிருவேன். அதன் வரல” என்றாள் குறும்புடன்.

மது அமைதியாக இருக்க, “உன்னை பேச வைக்கணும்னு வைராக்கியமாக இருந்து ஜெய்ச்சுட்டான் இல்ல உன்னோட புருஷன்” என்றவளின் பார்வை மதுவின் பின்னோடு படிய அங்கே கிருஷ்ணாவுடன் பேசியபடியே வந்தான் ராகவ்.

அவனைப் பார்த்ததும் பட்டென்று தலைகுனிந்த ருத்ராவின் செயலில் மதுவிற்கு ஏதோ புரிய, “ராகவைப் பார்த்து எதுக்கு  தலைகுனிந்து உட்கார்ந்திருக்கிற” என்றாள் அவளின் மீது பார்வையை பதித்தவண்ணம்.

“என்னவோ தெரியல மது. ராகவுடன் இயல்பாவே பேச முடியல தெரியுமா? நான் எல்லோரிடமும் பட்டுன்னு பெசிருவேன். ஏன் கிருஷ்ணா பொண்ணு பார்க்க வந்தப்போ கூட இவ்வளவு பயப்படல. ஆன ராகவ் ஒரு பார்வை உள்ளுக்குள் என்னன்னவோ பண்ணுதுடி” என்றாள் மெல்லிய குரலில்.

அவளின் பேச்சில் இருந்தே ருத்ரா ராகவை விரும்புவதை கண்டுபிடித்துவிட்ட மது, “ராகவ் அண்ணா என்னிடம் சொல்லவே இல்ல எப்போ உன்னோட கல்யாணம் எனக்கு பத்திரிகை கொடுக்கல உன்னை உண்டு இல்லன்னு பண்ணிருவேன்” என்று மிரட்டிட இவளுக்கு என்னாச்சு என்ற கேள்வியுடன் அவளை நெருங்கினர் ஆண்கள் இருவரும்.

ராகவ் இயல்பாக ருத்ராவின் அருகே அமர, “என்ன மது அப்படி போயிட்டு இப்படி வருவதற்குள் மது என்னன்னவோ சொல்ற என்ன விஷயம்” என்று கிருஷ்ணா வேண்டுமென்றே அவளை வம்பிற்கு இழுக்க ருத்ரா சங்கடமாக நெளிந்தாள்.

“கிருஷ்ணா ருத்ராவை உனக்கு தெரியுமா?” என்று குழப்பத்துடன் கேட்க, “டேய் என்னை வேண்டான்னு சொல்லிட்டு மணமேடைவிட்டு எழுந்து போனவளே இவதான்” என்றான் அவன் தன் பங்கிற்கு குண்டைத்தூக்கி போட அவனுக்கோ தூக்கிவாரிப் போட்டது.

“என்னடா சொல்ற” என்று அதிர்ந்தவனைக் கண்டு, “கல்யாணத்தை நிறுத்திய நானே கவலைபடல. நீங்க ஏன் வருத்தபடுறீங்க” என்றாள் ருத்ரா கோபத்துடன்.

“கிருஷ்ணா இங்கே என்ன நடக்குது” என்று ராகவ் புரியாமல் கேட்க மதுவோ நமட்டு சிரிப்புடன், “அண்ணா அன்னிக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்குதாம். அதனால் சீக்கிரமே பொண்ணு கேட்டு வீட்டிற்கு வர சொன்னாங்க” என்று குறும்புடன் அவனை வம்பில் மாட்டிவிட்டாள்.

கிருஷ்ணா புரியாமல், “மது நீ யாரை அண்ணின்னு சொல்ற” என்று அவன் கேட்க, மது அதற்குள் விஷயத்தை கிருஷ்ணாவிடம் சொல்ல, “ஓஹோ அந்த அளவுக்கு போகுதா?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தினான் கிருஷ்ணா/

“ருத்ரா என்னோட ஹெல்ப் ஏதாவது வேண்டுமா?” என்று அவன் வழிய வந்து கேட்க அவனைக் கையெடுத்து கும்பிட்டாள் ருத்ரா.

“போதும் நீ எனக்கு செய்தது எல்லாமே போதும். நீ உன் பொண்டாட்டியை கூட்டிட்டு கிளம்பு கிருஷ்ணா” என்றாள் கோபத்துடன்.

“என்ன ருத்ரா எனக்காக நீ என்னவெல்லாம் செய்திருக்க உனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்றோம்னு சொல்கிறார் நீ வேண்டான்னு சொன்ன எப்படி” என்று குறும்புடன் கேட்ட மதுவை அவள் கொலைவெறியுடன் பார்த்தாள்.

அவளின் கோபம் அதிகரிக்க, “டேய் எப்படிடா இப்படி ஜாடிக்கு ஏத்த மூடி மாதிரி அமைஞ்சிருக்கு. உன்னை சமாளிக்க முடியாமல் மணமேடையில் இருந்து இறங்கி வந்தேன். இவ வந்த மறுபடியும் கல்யாணம் நிற்கும் போலவே” அவள் தலைமீது கைவைத்து அமர்ந்துவிட மதுவோ கலகலவென்று சிரித்தாள்.

“புருஷனும் பொண்டாட்டியும் என்னோட வாழ்க்கையில் விளையாட ரூம்போட்டு யோசிப்பாங்க போல” என்று மனதில் பேசுவதாக நினைத்து அவள் வாய்விட்டு கூற, “இதையேன் நம்ம முதலில் செய்யல” என்று மதுவும் கிருஷ்ணாவும் ஒரே நேரத்தில் கேட்டு ருத்ராவை அதிர வைத்தனர்.

அவளின் அதிர்ச்சி ருத்ராவை அதிகமாக குழப்பிவிட, “இந்த கல்யாணத்தில் குழப்பம் வந்தா நான் தாங்கமாட்டேன். நீங்க இருவரும் கிளம்புங்க உங்களுக்கு புண்ணியமா போகும். என் காதலை நானே பார்த்துகிறேன்..” என்றாள் அவள் கோபத்துடன்,

“இல்ல ருத்ரா” என்று மது ஏதோ சொல்ல வர, “அடியே உனக்கு தலைநாளில் ஆண் குழந்தையா பிறக்கணும் என்று வேண்டிகிறேன் தாயே. முடிஞ்சா ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தை பிறக்கணும் என்று கூட வேண்டிக்கிறேன் இப்போ நீங்க இருவரும் கிளம்புங்க” என்றவள் கெஞ்சாத குறையாக கூறினாள்.

“அவ்வளவு பயம் இருந்தா சரிதான்” என்றவன் மதுவிடம், “நீ வா மது நம்ம கிளம்பலாம். உன்னோட அண்ணன் அவன் பொண்டாட்டிக்குத்தான் சப்போர்ட் போடுவான். அதனால் அவனோட கல்யாணத்திற்கு நம்ம போக முடியாது. பரவல்ல எப்படி இருந்தாலும் பிளாட்டிற்கு வரும்போது நீயே ஆரத்தி எடுத்து அவங்களை வீட்டிற்குள் கூப்பிடு.” என்றதும் அவள் சரியென தலையசைத்துவிட்டு ருத்ராவின் பக்கம் திரும்பினாள்.

“சரி பொழச்சு போ..” என்று மது குறும்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர கிருஷ்ணா சிரித்தபடியே, “ருத்ரா சொல்வதை மட்டும் கேட்ட ராகவ் நீ தப்பிச்ச இல்ல பின் விளைவு விபரீதமாக இருக்கும்” என்று அவனை பயமுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவர்கள் இருவரும் பேசியதில் ராகவிற்கு சில விஷயம் புரிந்துவிட, “ருத்ரா நீ என்னை லவ் பண்றீயா” என்று கேட்க அவளோ ஒப்புதலாக தலையசைத்தாள்.

“கிருஷ்ணா – மதுவிற்காக நீ இவ்வளவு பண்ணிருக்கிற. நீ மனைவியாக கிடைப்பதே அடியேனின் பாக்கியம்” என்று அவன் ஒரு வாக்கியத்தில் சொல்ல, “அவங்களுக்காக நீங்க என்னை லவ் பண்றீங்களா” அவள் கலக்கத்துடன் கேட்டாள்.

அவன் மறுப்பாக தலையசைத்துவிட்டு, “கிருஷ்ணா உன்னைபற்றி சொன்ன நாளில் இருந்தே உன்னை விரும்பினேன். ஆன அது நீதான்னு எனக்கு இப்போதான் தெரியும்” என்றவன் புன்னகைக்க இருவரின் மனமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க தொடங்கியது.

இவர்களின் காதல் கைகூட மதுவும், கிருஷ்ணாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அதற்கு மறுநாளே கிருஷ்ணாவின் மொத்த குடும்பமும் சென்னை வந்துவிட மதுவிற்கு அவர்களின் தேவைகளை கவனிக்கவும் லண்டன் செல்ல தேவையானவற்றை எடுத்து வைக்கவும் நேரம் சரியாக இருந்தது.

அவள் ஒவ்வொருவரின் தேவைகளையும் பார்த்து பார்த்து கவனிக்க கிருஷ்ணாவோ வருத்தத்துடன் வலம் வந்தான். அன்று காலை மது சீக்கிரமே எழுந்து சமையலைக் கவனிக்க மற்றவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர்.

அவளை படுக்கையில் காணாமல் தேடிய கிருஷ்ணா அறையைவிட்டு வெளியே வர மதுவின் குரல் சமையலறையில் இருந்து கேட்க அவனின் கால்கள் அங்கே சென்றது..

“இந்த தூள் கொஞ்சமாவது போடணும் ஜானு. இல்லன்னா சமையலில் டெஸ்ட் வராது. இப்போ இதை நான் போடட்டுமா” என்றவள் கேட்க கிளியோ செல்பில் நின்றபடி, “போடு போடு” என்றது.

அவள் ஒவ்வொரு டிஸ் செய்யும்போதும் ஜானுவிடம் பேசியபடியே செய்ய, “என்னை அங்கே விட்டுட்டு இங்கே வந்து ஜானுகூட பேசிட்டே சமையல” என்ற கிருஷ்ணா சமையலறைக்குள் நுழைந்து அவளின் அனுமதி இல்லாமல் அடுப்பை அணைத்தான்.

“ஹே கிருஷ்ணா என்ன பண்ற நீ” என்று அவள் கேட்கும்போதே அவளை இரண்டு கரங்களில் தூக்கிக்கொண்டு படுக்கையறையை நோக்கி நகர்ந்தவனை அவள் அடிக்க, “ஏய் வெளியே நீ கொடுக்கும் அடிக்கு உள்ளே டபுள் மடங்கு பனிஷ்மெண்ட் கிடைக்கும் மகளே யோசிச்சுக்கோ” என்று மிரட்டினான்.

“ஜானு என்னை தூக்கிட்டு போறான்” என்றவள் சொல்ல, “மதுவை தூக்கிட்டு போறான்” என்று ஜானு மாற்றி கூறியத்தைகேட்டு கிருஷ்ணா சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான்.

அவளை தூக்கிச்சென்று படுக்கையில் போட்டுவிட்டு பொத்தென்று படுக்கையில் விழுந்த கிருஷ்ணா, “மனுஷனோட தவிப்பு புரியாமல் நேரம் காலம் தெரியாமல் வேலை பார்க்கிற மது..” என்றவள் அவளின் கழுத்து வளைவில் தவிப்புடன் முகம் புதைக்க அவளோ கிறக்கத்துடன் விழி மூடினாள்.

“என்னதான் இருந்தாலும் அத்தை மாமாவை கவனிக்கணும் இல்ல. உங்க குடும்பம் வந்திருக்கும் போது நீங்கதான் புரிஞ்சி கொஞ்சம் விலகி போகணும்” என்று அவள் அவனின் கரங்களை தடுத்தபடி கூறினாள்

“எப்படி நீ என்னைவிட்டு விலகி போனீயே அந்த மாதிரி நானும் போகணுமா” என்றான் அவன் தன் வேலையில் கவனமாகவே, “அப்பா சாமி நீ என்னவோ பண்ணு. ஆனா நாலு பேர் இருக்கிற இடத்தில் பொண்டாட்டி தாசன்னு பேரை எடுக்காதே” என்று அவனின் கரங்களுக்கு சுதந்திரத்தை கொடுத்து அவனிடம் காதலை நிலைநாட்டினாள்.

“நான் அப்படிதான் பெயர் எடுப்பேன் என்ன பண்ணுவ” என்றவன் குறும்புடன் கேட்க, “உன்னை கட்டிவெச்சு உதைக்கவே இரட்டை பிள்ளை பெத்துகுவேன்” என்றாள் அவள் கோபத்துடன்.

“அப்போ எனக்கு சப்போர்ட் போட இரண்டு ஆள் குறையுதே” அவன் தீவிரமான சிந்தனையுடன், “அடுத்து இரண்டும் பொண்ணாக பெத்துகோடு. அவங்க இருவரும் அப்பாவுக்கு சப்போர்ட் போடுவாங்க” என்றான் அவன் குறும்புடன் கண்சிமிட்டி.

“கிருஷ்ணா இரண்டு குழந்தைகள் போதுமென்று கவர்மென்ட் சொல்லுதுடா” என்றவள் குறும்புடன் கூற வெக்கத்தில் முகம் சிவந்தாள்.

அவளின் காதோரம் குனிந்தவன், “நானும் அதைதான் சொல்றேன். இரண்டு அட்டம்ட்ல இரண்டு இரண்டு குழந்தையா பெத்துக்கலாம்” என்று அவன் சொல்ல அவளின் உதடுகளில் கள்ளசிரிப்பு வழிந்தது.

“அது எப்படி இரண்டு முறையில் முடியும்” அவள் விளக்கம் கேட்க, “நான் எதுக்கு இருக்கேன். உன்னை இரு முறையும் இரட்டை பிள்ளை பிறக்க வைக்க நான் கேரண்டி தரேன்” என்றவன் அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கினான். அவளும் வெக்கத்துடன் அவனுக்கு உடன்பட்டாள் பெண்பாவை.

ஜானு மதுவின் பின்னாடியே சுற்ற, கிருஷ்ணா ஜானுவிற்கு போட்டியாக அவளின் முந்தானையை பிடித்துக்கொண்டே சுற்றிய தம்பியைப் பார்த்து மாதவன், “அம்மா உன் இரண்டாவது மகனும் பொண்டாட்டி தாசன் ஆகிட்டான்” என்றான்.

“அதுதான் உங்களுக்கு ஜால்ரா போட ஆள் கிடைச்சிருச்சு இல்ல” என்று சங்கீதா சொல்ல தாரிகா அவளுக்கு ஹை – பை கொடுத்தாள்.

“அவன் கோபம் இல்லாமல் இப்படி இருப்பதே எனக்கு போதும்” என்று தாமரையும் ஆறுமுகமும் சொல்ல மாதவ் தான் பதில் சொல்ல முடியாமல் தவித்தான்.

அதைக்கேட்டு கிருஷ்ணாவை மது முறைக்க அவன் சிரிக்க அந்த இடமே அழகாக மாறியது.

மறுநாள் அவர்களை லண்டனுக்கு வழியனுப்பி வைத்துவிட்டு மொத்த குடும்பமும் மதுரைக்கு சென்றது. கிருஷ்ணாவும் – மதுவும் லண்டன் ஏர்போர்ட்டில் கால் பதிக்க அங்கே அவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

error: Content is protected !!