KKA. 2

நாட்பது வயதை தொட்ட கன்னியவள்… நல்ல உயரம் உயரத்திற்கு ஏற்ப அளவான உடல்வாகு… உயர்த்தி கட்டினால் குதிரை வால் அசைந்தாடும் அளவிலான கூந்தல்…திறம்பட தொழிலை நடத்திவரும் இன்றைய தலைமுறைக்கு தலைவியாக விளங்கி வரும் பெண் சிங்கம் அவள்… கல்யாண வாழ்வு தன் திருமண நடந்து சில நாட்களிலேயே பொய்த்து விட இன்று மட்டும் தனித்து வாழும் அவள், இன்று வரையில் தன் கல்லூரி வாழ்வின் இனிப்பான நிகழ்வை எண்ணி வாழ்த்துக்கொண்டிருப்பவள். 

அவள் தான் நம் நாயகனின் அத்தையாம்….மிஸ்.மீனாட்சி 

 

(எதற்கு இவ்வளவு இவருக்கான முன்னுரிமை???? ) 

 

“அத்தம்மா !”..என்று வாயிலில் கேட்ட குரலை கேட்டவரின் வதனம் ஒளிர இதழ்கள் தாமாகவே பிரித்து சிரிப்பொன்றை வழங்கியது அம் மங்கைக்கு… 

வா வரு….என சமயலறையில் சமைத்தவண்ணம் இருந்தவர் குரல் கொடுக்க அவனும் அவர் இருந்த இடம் வந்தவன் அங்கிருந்த மேடையில் ஏறி அமர்ந்தான்.

“என்ன ஸ்பெஷல் இன்னக்கி? ” என்று கேட்டவன் அவரின் கையினால் துருவப் பட்டுக்கொண்டிருந்த கேரட்டை அவன் கைக்கு மாற்றி பாதி துறவியும் மீதி அவன் வாய்க்கும் செல்ல, “அல்வா வேணும்னா துருவுர வேலையை மட்டும் பாரு. இல்லன்னா வெச்சிரு” என மீனாட்சி கூற,சரி சரி என்றவன் பாதி கேரட்டை தான் துருவினான்….. “காலைல என்ன சாப்பாடு அத்தம்மா “எனவும் காலைல ஒரு காபி, அதோட இன்னும் எனக்கு பசிக்கலடா என்றார்.. 

என்ன அத்தம்மா தினமும் இப்படியே இருந்தா உடம்பு என்னத்துக்கு…”என ருத்ரா கேட்க 

‘அதான் இwrப்போ உன்கூட சேர்ந்து மூக்கு முட்ட திங்க போறனே.அதோட பாரு எப்படி இருக்கேன்னு.. என அவரை ஒரு முறை சுற்றி காட்டியவர்.. “உடம்பு நல்லாதானே டா இருக்கு”என்றார். 

 

“ஹ்ம்ம் பிகர் நல்லாத்தான் இருக்கு பிகருக்கு வாய்க்கொழுப்புதான் ஜாஸ்தி ஆகிடுச்சு… நேரத்துக்கு எதுன்னாலும் சாப்பிடு அத்தம்மா.. ” எனவும்

‘சரிடா வளந்தவனே ‘ என்றவர் ‘அதை விடு அடுத்த வாரமாவது கொஞ்சம் கம்பனி பக்கமா வர ஐடியா இருக்கா? ‘ எனவும்,

“இருந்தது, ஆனா நேத்து நைட் ஒரு ப்ரொஜக்ட் கைக்கு வந்திருக்கு என்றான் .’என்னடா இந்த தடவையும் தூரமா எங்கயாவது போகணுமா ? ‘என சோகமாக கேட்க, 

சமையல் மேடையில் இருந்து இறங்கியவன் “நோ.. நோ.. நம்ம ஏரியா, அதோட நம்ம மது, மாதவன் படிக்கிற காலேஜ், காலேஜ் பசங்களோட சம்பந்தப்பட்டது… அதான் யோசிக்கிறேன். அதோட ப்ரொஜக்ட் முடியிறப்ப கண்டிப்பா நா யாருன்னு தெரிய வரும்…. “

“காலேஜ் பசங்க சம்பந்த பட்டதுன்னா ரொம்ப பெரிய ப்ரோஜக்டா இருக்குமே!”

மீனாட்சி கேட்க,

“ஆமா அத்தம்மா பெரிய ஆளுங்க சம்பந்தப்பட்டிருக்காங்க, அதோட ஒரு ப்ராஜெக்ட் உள்ளேயே பல இருக்கும் போல… ‘

 

“சரிடா உன்னை நம்பி குடுக்குறாங்கன்னா,உன் மேல எவ்வளவு நம்பிக்கை இருக்கணும். இதன் மூலம் உன்னை தெரிய வெக்கிறதுல உனக்கு ரிஸ்க் இல்லன்னா, தாராலமா பண்ணு வரு… “

 

‘அதோட அத்தம்மா மாதவாக்கு அதுல கொஞ்சம் இன்வோல்வ் ஆகவேண்டி இருக்கும், ஆனா இந்த முறை அவனை சேர்த்துக்குறது பற்றி டிபார்ட்மெண்ட்ல முன்னமே பேசிருவேன்.’ என ருத்ரா கூறினான்.. 

 

சரி வா சாப்பிடலாம் என இருவருமே பரிமாறிக்கொண்டு பேசியவாறே உண்டனர்… 

 

வாரத்தில் சனிக்கிழமை காலை டென்னிஸ்.அது முடிய மாலை வரை அவன் அத்தையோடு தான் அவன் நேரம். அதன் பின் அவரும் அவனுடனே அண்ணன் இல்லத்தில் வந்து இருந்து விட்டு இரவு உணவையும் எடுத்துக்கொள்பவர் அவர் வீடு செல்வார். இதுவே வளமை.. மற்றைய நாட்களில் அவன் வீடு வரும் போது அவருடன் வந்து சற்று நேரம் செலவழித்து விட்டே செல்வான். முடியா நாட்களில் அவனோ அல்லது அவரோ தொலை பேசியிலாவது பேசிக்கொள்வார்கள்…. 

 

இவன் தனது கல்லூரி படிப்பை முடித்திருந்த சமயம் அவனது ப்ரோபசர் ஒருவர் அவனிடம் அவர் அத்தையை திருமணம் முடிக்க விரும்புவதாக கேட்க இவனுக்கும் அவர் மேல் நல்ல அபிப்ராயம் இருக்குக்கவும் தன் அத்தையிடம் கேட்டிருந்தான்… அவனுக்கும் இவ்வளவு அழகும் அறிவும் நிரம்பிய மங்கை தனித்து வாழ்வதை எண்ணி, நினைக்கும் பொழுதுகள் எல்லாம் அதற்கான காரணங்கள் என்னவோ, யேன் இப்படி என்று வருந்துவது உண்டு… ஆனாலும் அவனிடம் அவர் அதுபற்றி பகிர்த்திருக்க வில்லை … 

 

‘என்ன வரு நீ உனக்கு பொண்ணு பார்த்து சைட் அடிக்கிற நேரத்துல அத்தைக்கு மாப்பிளை பார்க்குற ‘ எனவும்,

 

“அத்தம்மா பி பிராக்டிகல், எப்பயும் இப்படியே இருக்க முடியுமா? உங்களுக்காக ஒருத்தர் வேணாமா? எனவும், 

“வேணும்டா வரு நா இல்லன்னு சொல்லல்ல.. எனக்கு தேடிக்கணும்னு தோணல.தோணி இருந்தா உங்கப்பாட்ட சொல்லி பண்ணிக்கொள்ள மாட்டேனா என்றவர் பார்க்கலாம் தோணினா பண்ணிக்கிறேன்” என்றார்.

 

” ஹ்ம்ம் உனக்கு தோணி பண்ணும்போது அறுபதாம் கல்யாணம் தான் அதுவும் எழுவது வயசு கிழவன் கூட. என்கூட வந்தாளே நீ என் அக்கவான்னு தான் கேட்குறானுங்க. உனக்கு தான் உனக்கிருக்க பவர் தெரில” என கூறியிருந்தான்…. 

“யேன் அத்தம்மா நம்ம சித்தி தம்பிய கல்யாணம் பண்ணி விட்டுட்டு வந்த? ” எனவும் ‘ நா விட்டுடு வரல்ல வரு அவந்தான் விட்டு டு போய்ட்டான்” 

 

‘அவன் கிடக்கான் மாங்கா மடையன்’ என்றவன். அத்தம்மா நீ என்கிட்டே யேன் உன்னை பற்றி சொல்லணும்னு தோணல? 

தோணும்டா சிலசமயம் கத்தி அழணும் போல இருக்கும் ஆனா அந்த டைமெல்லாம் நீ பக்கத்துல இருந்ததே இல்ல… “கோள் பன்னிருந்த வந்திருக்கமாட்டேனா யே என்னை கூப்பிடலல்ல “என அவர் அருகே வந்து அவர் தோளில் கைப் போட்டுக் கொண்டவன் ” சரி இப்போ சொல்லு ” எனவும்,

இப்போ வேணாம்டா பேசலாம் இன்னொரு நாள் கண்டிப்பா’

” ப்ரோமிஸ்” என இவன் கை நீட்ட 

‘ப்ரோமிஸ் வரு’ என அவன் புறங் கையில் முத்தமிட்டார்…

‘சரி வா போலாம் 

வீட்டுக்கு, நம்ம சந்திரமுகி வந்திருக்கா” என்றான்… 

டேய் அவ உன் அக்காடா.. எப்போ பாரு முறைச்சிகிட்டு… “உன்னை எதாவது சொன்னா எனக்கு வரும் பாரு கோவம்… “என அவன் முகமெல்லாம் சிவக்க 

” அய்யே நல்லாவே இல்ல என் பையன் ரொம்பதான் இப்போ கோவப்படுறான்.. உன் வேலைக்கும் அது நல்லதில்லை அதோட உனக்கு வர பொண்ணு அடுத்தநாளே நீ இப்படி இருந்தேன்னா அவ வீட்டுக்கு கிளம்பிருவா”என்றார்… பார்க்கலாம்… என்றவன், ” ஆஹ் அத்தம்மா இன்னக்கி நம்ம டென்னிஸ் கோட்டுக்கு ஒரு பொண்ணு வந்தா கொஞ்சம் பார்க்கலாமேன்னு …. நினைக்கும் போதே கிளம்பிட்டா அதுவும் அவ ஆல் கூட… “

“ஏண்டா இப்டி…. ” என அவனை பார்த்து சிரித்தவாறு வீட்டை பூட்டிக்கொண்டே ‘உனக்குன்னு பிறந்தவளை உன் கண்ணுக்கு கடவுள் காட்டுவான்டா சீக்கிரமே… அத்தை நா சொல்றேன் பாரு’ என்றவர் அவனுடன் தன் அண்ணன் இல்லத்தில் நுழைந்தாள்… 

 

(அத்தை கடவுள் காட்டிட்டான்.இவன் தான் சரியா பார்க்கல )

 

வீட்டில் இவர்கள் இருவரும் நுழைய வரவேற்பு அறையில் அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க “ஹாய் வரு மாமா” என தன் அக்காளின் பிள்ளைகள் இரண்டும் இவனை நோக்கி வர “ஹாய் ! எப்போடா வந்திங்க? ” என தெரியாதவாறு கேட்க நாங்க லஞ்சுக்கே வந்துட்டோம் மாமா என சொல்ல… 

‘ஆமா இவருக்கு நாம வந்தது எங்க தெரியப் போகுது. அதான் கையோடயே சுத்துதே ஒன்னு அவங்க கூடவே இருந்தா நம்ம கூட இருக்க உன் மாமாவுக்கு எங்க நேரம்’ ரித்திகா கூற. 

 

“ஆமாக்கா சரியா சொன்ன நேரமே இல்ல.உன்கிட்ட மிச்சமிருந்தா குடேன் நா யூஸ் பண்ணிக்கிறேன்’ என்றவன் மாதவன் அருகே அமர்ந்து போனை நோண்ட ஆரம்பிதான். 

 

மீனாட்சி அவர் அண்ணியின் அருகே போய் அமர்ந்தவர் கையோடு கொண்டு வந்திருந்த அல்வாவை கொடுக்க… ‘மிச்சம் வெச்சானா எனக்கு?என அவர் அதில் இருந்து ஒரு ஸ்பூன் வாயில் போட்டவாரே கேட்க. 

‘இன்னக்கி உங்களுக்கும் சேர்த்தே பண்ணிட்டேன் அண்ணி ‘ என்றார் மீனாட்சி … 

எனக்கும் என அதனை மாதவனும் மதுவும் பங்கு போட்டுக்கொள்ள.. ரித்திகா வேறு பக்கம் திருப்பி அமர்ந்தாள்…

 

மீனாட்சிக்கும் ரித்திகாவுக்கும் வயது பத்து வருடமே வித்தியாசம். வயதில் தான் இவர் அதிகம் மற்றபடி அழகிலும் அறிவிலும் அதிகமாக மீனாட்சி இருக்க ரித்திகாவின் காலேஜ் நாட்களில் நண்பர்கள் இவளை கேலி செய்ய அதோடு ரித்திகா சற்று பூசிய உடல்..இப்படி அல்ப விடயங்களுக்கெல்லாம் அவருடன் பொறாமை கொண்டு அவர் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டிருக்கிறாள்.இப் போ தன் தம்பியை அவளோடு உறவாட விடுவதில்லையாம் என்று புதிய குற்றச்சாட்டு… யாருமே ரித்திகாவின் கதைக்கு காது கொடுக்காததும் இன்னும்pplகோபமே அதிகமானது 

 

என்றுமே ரித்திகாவின், பேச்சுக்களை காதில் வாங்கிக்கொள்ளாத மீனாட்சி, ரித்திகாவிற்கு திருமண வரன் வர துவங்கியதுமே தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார்… அண்ணன். அண்ணி எவ்வளவு கூறியும் மனம் மாறாதவர் அவர்கள் வீட்டோடு ஒட்டியே அமைத்துக்கொண்டார்.. உங்களுடனே இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக…

 

ஜனார்த்தனன் இன்றும் மனதளவில் தன் தங்கைக்கான நல்ல வாழ்வினை அமைத்து கொடுக்க முடியவில்லேயே. தன் தந்தை செய்துவிட்டு சென்ற காரியம் இன்றளவும் அவள் வாழ்வினை சரிபடுத்த முடிய வில்லையே என்று மீனாட்சியை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் மனதால் அழுது கொண்டு தான் இருக்கிறார்…. 

ருத்ரா இதை பலமுறை கவனித்திருந்தாலும் அத்தை கூறாது அவர் பற்றி யாரிடமும் கேட்க விருப்பப்படாதவன் இன்னும் அமைதியாக இருக்கிறான்.

Epi2.2

 

“ஹேய் கயல் ரெடியா? ” என கேட்டவாறு தானும் வேலைக்கு செல்ல தயாராகி வந்தவர் தன் பெண்ணை பார்த்தபடி அப்படியே இருக்க “என்ன ஹனி? எனவும்

” எப்போவுமே டெனிம் லேயே பார்த்து பழகிட்டேனா, இப்போ ( டாப் லெகிங்ஸ் அணிந்து ஷோலை கழுதை ஒரு முறை சுற்றி போட்டிருந்தாள் ) இது ரொம்ப அழகா இருக்குடா என்றவர், அவள் நெற்றியில் வைத்திருந்த கருப்பு நிற சிறு பொட்டினை சரி செய்து விட்டு அப்படியே உங்க அம்மாடா போட்டோ கோப்பியாட்டம் இருக்க. எந்த வித்தியாசமும் இல்ல.

 

ஆனா பொட்டு மட்டும் பெரிய பொட்டா வெச்சுப்பா, என்று விட்டு, சரி வாடா டைமாச்சு கிளம்பலாம்.”

என அவர் வண்டி சாவியையும், இவள் இவளது ஸ்கூட்டி சாவியுடனும் வர, 

“கண்ணம்மா மேனேஜ் பண்ணிப்பியா? இல்லனா நானே ட்ரோப் பன்னிட்டு, ஈவினிங் நானே பிக் பண்ணிக்கிறேன், கார்லயே போலாம்டா ” என அரசு கேட்க, 

 

அச்சோ ஹனி நா போய்ப்பேன்… இந்த ட்ராபிக்ல இதுதான் லேசா இருக்கும்.. என்றவாரே வீட்டை பூட்டிக்கொண்டு இருவருமாக அவர்களது வண்டிகளில் கிளம்பினர். 

 

அவளது கம்பனி வாசலில் அவள் வண்டி நிறுத்தவும் சொல்லிக்கொண்டு அவர் அலுவலகம் சென்றார்.

 

கருப்பு நிற கண்ணாடியிலான முகப்பு கொண்ட கட்டிடம் அது. “RV CONSTRUCTIONS ” பெரியளவிலான அரசாங்க மற்றும் தனியார் கட்டுமானங்களை தரமான முறையில் சிறந்த பொறியிலாளர்கள், நிர்மானர்களை கொண்டு பெறுபேற்று அமைத்து கொடுக்கின்றனர்.. 

 

பதினைந்து வருடங்கள் தொடர்ந்து நடத்தி வரும் இன் நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பானதொரு முன்னேற்றம் அடைந்துள்ளது. பெண்ணுக்கு கடினமானது என நினைக்கும் துறையில் தனி பெண்ணாக தன் அண்ணனின் பக்க பலத்தில் ஆரம்பித்தவர் இன்று தனித்து விளங்கும் ஒருவராக வணிக உலகில். 

 

உள் நுழைந்தவள் வரவேற்பில் தன் பெயர் கூறி வந்திருக்கும் காரணம் சொல்லி அனுமதி பெற்றவள் நேராக சென்று நின்றது அந்த கம்பனியின் உரிமையாளினி மீனாட்சியின் அறையில்..

 

” குட் மோனிங் மேம்”. எனும் இவள் குரல் கேட்டு தேநீர் கோப்பையுடன் திரும்பியவர், அடர் நீல நிற காட்டன் சேலை அரை அடி அகல மெரூன் வண்ண பார்டர் இட்ட சேலை அவர் உடலை சுற்றி இருக்க, முகத்தில் எவ்வித ஒப்பனையும் இன்றி நெற்றி நடுவே இவள் வைத்திருந்ததை போன்ற ஒரு சிறு கருப்பு பொட்டு, கழுத்தில் தடித்த ஒரு செயின்.இருவரும் இருவரையும் உற்று நோக்கியவாறு சிறிது நேரம் இருந்தார்கள்… முதலில் நடப்புக்கு வந்த கயல்,”மாம் “எனவும்… “யா கம் இன்” என அழைத்தவர், அவரிருக்கையில் வந்தமர்ந்து அவளையும் அமருமாறு கூற அவளும் அமர்ந்தவள் தன்னை அறிமுக படுத்திக்கொண்டாள்… 

‘ஏன் இந்த துறையை செலக்ட் பண்ணின கயல்? ‘ எனவும் 

 

எங்கப்பா இந்த பீல்ட் மேம். சோ எனக்கும் அதுலயே இன்டெரெஸ்ற் வந்துருச்சி… 

 

“உங்களுக்கு ஜாப் செய்ய இன்னும் டைமிருக்கே கயல், லண்டன்லேயே மேற்படிப்பை தொடர்த்திருந்தா நல்ல கம்பெனி ஒன்னுல ஜோயின் பண்ணலாமே”. 

 

“இங்க அதையே பண்ணலாம்னு இருக்கேன் மேம்.அதோட கொஞ்ச நாளைக்கு பொறுப்பான ஒருத்ருக்கு கீழ இருந்து இந்த துறை பற்றிய தெளிவை பெற்று கொள்ளணும்னு இருந்தேன். அதற்கு இந்த ஜாப், அதுவும் இந்த கொம்பனில நல்ல வாய்ப்பா அமைஞ்சது…. வீகென்ட்ஸ் என் ஸ்டடீஸ் தொடரலாம்னு இருக்கேன் “என கூறி அவர் முகம் காண, 

 

‘குட். நானுமே இந்த பீல்ட் வரப்ப கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனா இப்போ.. என மீனாட்சி கூற 

“எல்லோரும் உங்களை பார்த்து பயப்புட ஆரம்பிச்சுட்டங்க”என்று கயல் முடித்தாள்… 

 

“ஹ்ம்ம் என்று சிரித்தவாறு நான் மட்டுமில்ல இந்த கம்பனியோட ஓனர். என்னுடைய பையனும் இருக்கான். எனவும் எதிலோ சந்தோஷமடைந்திருந்தவள் மனம் ஏமாற்றத்தை உணர, ஆனா கம்பனி பக்கம் லேசில வரமாட்டான்.சோ எல்லாமே தனியா நானே பார்க்க வேண்டிய நிலை.. சோ இதுக்கப்றம் நீயும் சப்போர்ட்டா இருந்தன்னா எனக்கு ரொம்ப ஹெல்ப் புள்ளா இருக்கும்.. என்று பேசிக்கொண்டவர், அவளை தனது பி.ஏ வாக வேலையில் அமர்த்திக்கொண்டு அவளுக்கான வேலைகளை கூறினார்… 

 

இரண்டு மாதங்களாக மனம் நிரம்ப தன் தொழிலில் ஈடுபாட்டுடன் செய்துகொண்டு செல்ல தான் இந்தியா வந்த காரணத்தை செயல்படுத்த வழி தெரியாது ஒவ்வொரு நாளும் மனதில் பல எண்ணமிட்டுக்கொண்டிருந்தாள். … 

 

அரசு ஓர் அரச நிறுவனத்தில் அதுவும் அரச கட்டிடங்களை கட்ட கட்டுமான கம்பனிகளுக்கு காண்ட்ராக்ட் வழங்கும் போது, போட்டி கம்பெனிகளின் இடையே அதன் சரி நிகர்களை தரம் பார்த்து எதற்கு வழங்க வேண்டும் எனும் இறுதி முடிவை சரிவர ஆராய்ந்து எடுக்கும் தகுதியை கொண்டவராக இருக்க இதற்கு முன் இருந்தோர் பலரும் பணத்தின் பின் செல்ல வேண்டிய தேவையில் தமக்கு சாதகமான நிறுவனத்துக்கு காண்ட்ராக்டினை வழங்கி வந்தனர். 

 

பணத்தேவை இன்றி தொழிலில் இருந்த பற்றுக்காக தொழில் புரிபவர் தரமான கம்பனிகளை மட்டுமே கருத்தில் கொண்டு தேர்தெடுத்தார். அதனால் இன்னும் நாலு மாதத்தில் ஆரம்பிக்க இருக்கும் RVC க்கு கிடைத்த காண்ட்ராக்ட் இவர் வந்து இரண்டு மாதங்களில் அது பற்றி ஆராய்ந்து இடை நிறுத்தம் செய்திருந்தார்…. காரணம் சிறு குறை ஒன்றே என்பதை அறிந்திருந்தவர் அதோடு RVC யின் என்ஜினீயரில் ஏதோ குளறுபடி இருப்பதையும் ஊகித்தவர் அதனை தெளிய படுத்தும் முகமாக கம்பனி உரிமையாளருக்கே நேராக கடித மூலமான கோரிக்கை ஒன்றினை அனுப்பி இருந்தார்.. 

 

அதோடு வேறு கம்பனிகளிடையே இது பற்றி தெரிய வரும்முன் சரி செய்துகொள்ள தன்னை சந்திக்குமாறு கூறியிருக்க, அதனை வாசித்து பார்த்தவர் முகமோ கோவத்தில் சிவந்து இருந்தது.

 

‘என்னாச்சு மேம்? ‘ என கயல் வினவியவள் அதனை அவளும் வாசிக்க, ‘ டேய் ஹனி நம்ம கம்பனிக்கே லெட்டரா நல்லா வருவ’ என மனதில் நினைத்துக்கொண்டாள், 

 

‘மேம் அவங்களை மீட் பண்ணினா என்னனு தெரிஞ்சுக்கலாமே’.

அவளை நிமிர்ந்து பார்த்தவர் என்ன தெரிஞ்சுக்க இருக்கு.டிரெக்டா எனக்கே லெட்டர் அனுப்பிருக்கான்னா பெருசா எதிர் பார்க்குறான் போல.. 

 

‘புரியல மேம் ‘ என கயல் மீண்டும் கேட்க “பணம் தான் கயல் இவன்களுக்கு. பணத்தாசை முத்திப்போச்சு… நோகாம உட்கார்ந்த இடத்திலிருந்தே சம்பாரிக்க பார்கிறான்கள்..” 

“மேம்! எல்லோருமே அப்படி இருபாங்கன்னு சொல்ல முடியாது தானே. நாம அவரை மீட் பண்ணி என்னனு பார்க்கலாம்” என தன் தந்தை காரணமின்றி தடை செய்திருக்க மாட்டார் எனும் நம்பிக்கையில் இவள் கூற 

“ஹ்ம்ம் மீட் பண்ணறேன்” என கூறி எப்போது எங்கு என கேட்டவர் அத் தகவலை நினைவில் வைத்துக் கொண்டார்…. 

 

இரண்டு மாதங்களை கடந்தும் யார் எவரென குழம்பிப்போய் இருந்தான் ருத்ரா… அவனது ப்ராஜெக்ட் ஆரம்பமாகி இருந்தாலும் மற்றையது போல இதில் ஒன்றும் செய்ய முடியாத நிலைமை. அதிகம் கல்லூரி மாணவர்களின் பங்கு… அவர்களை முன்னிட்டே அனைத்தும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது..

மாதவனும் அவனுக்கு தேவையான விடயங்களை சேகரித்து தர இவனது தலையோ குழம்பியிருந்தது.. 

‘அண்ணா பசங்களை எதுன்னாலும் பண்ணிக்கலாம்.. ஆனா பொண்ணுங்க தான்’.

“அதான் மாதவா நானும் யோசிச்சிட்டு இருக்கேன் காலேஜிக்குள்ள சப்ளை பண்றவன்ல இதுக்கு யாரு பிரதானமா இருக்கான்றதை பிடிச்சாதான் எதுன்னாலும் பண்ணலாம். “

 

என்னை நீ தெரிஞ்சதா காட்டிக்கிட்டாதான் உன்ன காலேஜில நம்புவானுங்க..’ சரிண்ணா பார்த்துக்கலாம்.’ என இருவரும் பேசிக்கொண்டு இருக்க, மீனாட்சி வீட்டுக்குள் நுழைந்தார்…. 

 

“ஹேய் என்னடா அண்ணனும் தம்பியும் தீவிரமாக டிஸ்கஸ் பன்னிட்டு இருக்கீங்க”..

‘ ஹாய் அத்தம்மா என்ன இன்னக்கி ஏர்லியா வந்திருக்க? ‘ என ருத்ரா கேட்க 

“ஏன் ரெண்டுபேருக்கும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? ” என அச்சோ அதெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சது தான் என்றான் சரிடா பேசிட்டு இருங்க வந்துர்றேன் என அவறைக்கு செல்ல…

 

“மேடம் மூட் அப்செட் போல சுடச்சுட காபீ போட்டு மூடை மாத்திருவோம் என்று எழுந்தவன் ‘மாதவா உனக்கும் காபி தரட்டுமா? என கேட்டவாறே அவன் சமயலறைக்கு செல்ல ஹ்ம்ம் ஓகே என்றவன் அவன் பின்னே சென்று சாப்பிட எதாவது இருக்கா என தேட ‘அதோ அந்த கபோர்ட்ல ஸ்னாக்ஸ் 

இருக்கும் ‘பாரு என்றான்… 

 

“டேய் அண்ணா நம்ம வீட்ல ஹால்ல எத்தனை சேயார்ஸ் இருக்குன்னு தெரியுமா உனக்கு ஆனா இங்க கிச்சேன்ல இருக்க கபோட்ல என்னஇருக்குன்னு தெரிஞ்சு வெச்சிருக்க என மாதவன் கூற, 

 

அதை கேட்டவாறு வந்த மீனாட்சி அவன் சாப்பிடறது எங்க இருக்கும்னு அவனுக்கு தானேடா தெரியும் என்றவாறு சமயலறையில் இருந்த மேசையிலேயே மூன்று பேருமாக அமர்ந்து காபீ குடித்தனர். 

 

தம்பி செல்லவும் தன் அத்தையை பார்த்தவன் “அத்தம்மா என்ன ப்ரோப்லேம் இன்னக்கி இவ்வளவு டல்லா இருக்கீங்க? ” எனவும் அது வரு… என்று ஆரம்பித்தவர் இன்று வந்த கடிதம் பற்றி கூறவும் இவ்வளவு நாளும் இல்லாம திடிர்னு என்னை புதுசா? 

 

“அதான்டா எனக்கும் புரியல, புதுசா வந்திருக்க ஒருத்தர் தான் டிரெக்டா எனக்கே அனுப்பி இருக்கான் போல..லேடின்னதும் எதுனாலும் பண்ணலாம்னு நினைச்சிருப்பான். நாளைக்கி இருக்கு” என இவர் பொரிந்து தள்ள.

 

“அத்தம்மா என்ன இது எப்பயுமே நீங்க இப்படி நிதானம் தவறி பேசினது இல்ல. அதோட அவன் பணம் தான் கேட்கப்போறான்னு எப்படி தெரியும். ஜஸ்ட் ஒன்ஸ் பேசி பார்க்கலாம்” என்றான் ருத்ரா.

‘ஹ்ம்ம் ‘என்றவர் . ரொம்ப அசிங்கம் டா.இது வெளில தெரிய வந்ததுன்னா, இதற்கு முதல் செய்து கொடுத்த எல்லாருமே நம்ம மேல வெச்சிருக்க நம்பிக்கை இல்லாம போக வாய்ப்பிருக்கு.. 

“அச்சோ அப்டிலாம் ஒன்னும் ஆகாது… நாளைக்கு நான் அவரை மீட் பண்றேன். அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு டிசைட் பன்னுவோம் ஓகே..” 

 

‘உனக்கு ஏற்கனவே வேலை அதுக்குள்ள இதும் முடியுமாடா வரு?’

 

” அத்தம்மா பீல் பிரீ.. வரு இருக்க பயமேன்… நா இப்போ வெளில போறேன்.. காலைல அவரை மீட் பன்னிட்டு நாம ரெண்டு பேரும் வெளில லஞ்ச்க்கு மீட் பண்ணலாம் ஓகே டன்” என்றவன் அவரிடம் விடைப்பெற்றான். 

கயலுக்கு அலைபேசியில் அழைப்பெடுத்தவர் ‘கயல் நாளைக்கு அந்தாளை மீட் பண்ண வாரதா மெயில் பன்னிரு’ என்றார்.

“ஓகே மேம் என்றவள் ‘ஆ யூ ஓகே? ” எனவும் ‘ஓகே டா தேங்ஸ்’ என்றவர் நாளைக்கு நீ சொன்னா மாதிரி பேசிட்டே முடிவு பண்ணலாம் ‘ என்று விட்டு போனை வைத்தார்… 

 

ஹைய்யா !!!என மனம் குதூகலிக்க நாளை நடப்பது யாவும் நல்லதாகவே நடக்கட்டும் என அவசரமாக இறைவனுக்கு ஒரு மெயில் அனுப்பியவள், அடுத்த அறையில் இருந்த தன் தந்தைக்கு மீனாட்சியின் பிஏ வாக ஒரு மெயிலும் அனுப்பிவிட்டு உறக்கத்தை தழுவினாள்.