KKRI – 7

KKRI – 7

அத்தியாயம் – 7

அவளின் அருகில் அமர்ந்திருந்த ஸ்கூல் பெண்ணொருத்தி, “அக்கா உங்களோட ஸ்டாப் வந்துவிட்டது..” என்றாள்.

‘தேங்க்ஸ்..’ என்று சைகை செய்துவிட்டு பஸ்ஸில் இருந்து இறங்கிய மது வீடு நோக்கி நடந்தாள். ஏதோ சிந்தனையுடன் வீடு வந்து சேர்ந்தவள் ரேடியோவை போட்டுவிட்டு ரிப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வரும்பொழுது மணி ஆறு.

அவன் பேச வேண்டிய நிகழ்ச்சியில் வேறொருவன் பேசிக் கொண்டிருக்க விருப்பமே இல்லாமல் சமையலை தொடங்கியவள் அதில் மூழ்கிவிட்டாள். ஜானு வாசலுக்கும், கூண்டுக்கும் மாறி மாறிப் பறந்து கொண்டிருந்தது.

அதன் செயல்களை உன்னிப்பாகக் கவனித்த மது, ‘இந்த ஜானுவைக் கூட மயக்கி வெச்சிருக்கான்.. அவன் வருகிறானா என்று வாசல்வரைக்கும் போய்ப் பார்த்துட்டு வருது..’ என்ற எரிச்சலோடு அமர்ந்திருந்தாள்.

அவன் வரும் முன்னரே அனைத்து வேலையையும் முடிந்துவிட்டு திரும்பிய மது கீழே கிடந்த கத்தியில் கால் வைத்துவிட்டாள். அது அவளின் காலைப் பதம் பார்க்க, ‘ஐயோ அம்மா..’ அலறியவளின் உள்ளங்கால் இரண்டாக அறுபட்டு ரத்தம் ஊர்றேடுத்தது.

அதற்குள் வீட்டின் காலிங்பெல் அடிக்கக் காலில் அடிபட்டதை மறந்துவிட்டு ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.

“ஜானு செல்லம்..” என்றபடி வீட்டிற்குள் நுழைய, ‘இங்க நான் இருக்கிற எண்ணமே இல்ல..’ கிருஷ்ணாவை அவள் முறைத்துக்கொண்டே கதவைச் சாத்திவிட்டு திரும்பினாள்..

“ஜானு பில்ட்டர் காபி குடிக்கலாமா?” என்றவன் சமையலறையை நோக்கிச் செல்ல, “பில்ட்டர் காபி.. பில்ட்டர் காபி..” என்று டைனிங் டேபிளில் வட்டமடித்த ஜானுவை முறைத்தாள் மது.

அதுவரை எப். எம். பாடும் பொழுது கூட பேசாத கிளி இப்பொழுது அவன் ஒரு முறை கேட்ட கேள்விக்கு இருமுறை பதில் தருவது அவளின் கோபத்திற்கு தூபம் போட்டது. காலில் ரத்தம் பெருகுவதை மறந்துவிட்டு கணவனின் செயலைக் கவனித்தாள்.

கையில் காபியுடன் வந்த கிருஷ்ணா அவளுக்கு முதுகாட்டி அமர்ந்துவிட, ‘இந்த வீட்டில் சைட் அடிக்க கூட எனக்கு உரிமை இல்ல..’ என்று முகத்தைத் திரும்பினாள் மது..

“மை தீட்டாத இந்த விழித்தான் எனக்கு வலை விரித்ததோ..” என்றவளை வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.

“செக்க சிவப்பாக இருக்கிற இந்த இந்த உதட்டில் முத்தமிட்ட எப்படி இருக்கு..” என்று அவன் கிளியை வர்ணித்தான்.

‘நல்லா முத்தம் கொடு.. உன்னோட உதடு இரண்டாகக் கிழியும்..’ என்று எரிச்சலோடு கூறினாள். கோபம் அதிகரிப்பதை உணர்ந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“கம்பன் ஏமாந்தான் இளங்கன்னியரை ஒரு மலரென்றானே.. கற்பனை தேர்தானே கம்பன் ஏமாந்தான்..” கிருஷ்ணாவின் குரலில் பாடல் இனிமையாக ஒலித்தது.

ஜானு அதற்கு ஏற்றார்போல் அங்கும் இங்கும் தாவித் தாவி குதித்து இரண்டு  இறகையும் விரித்து நடந்தது. அது செய்யும் சேட்டைகளைக் கன்னத்தில் கைவைத்து ரசித்தான் கிருஷ்ணா.

‘ஐயோ இந்தக் கிளியைக் கூட நல்லா மயக்கி வெச்சிருக்கானே மாயவா.. கண்ணா உன்னோட கண்ணுக்கு இந்த ராதா தெரியவே இல்லையா..’ கணவனின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கினாள் பெண்ணவள். அவன் பாடுவது புரியாமல் பாவமாகப் பார்க்கும் ஜானுவின் நிலையோ அதோ பரிதாபம்.

அவன் அவளையே இமைக்காமல் பார்க்க, “என்னைச் சைட்டு அடிச்சாளா..” என்றவனின் குரலை உன்னிப்பாகக் கவனித்தாள் ஜானு.

“சைட் அடிச்சா.. சைட் அடிச்சா..” என்று அவளை மாட்டிவிட்டாள்.

அதுவரை அவனை ரசனையுடன் நோக்கிய மதுவின் பார்வை நொடியில் மாறிப்போனது. ‘என்னை அவனிடம் மாட்டுவதே உன்னோட வேலையைப் போச்சு..’ என்று எழுந்து கிளியின் அருகே வந்தாள்.

“ஜானு கூண்டுக்குப் போயிரு.. இல்ல உன்னைக் கொன்றுவிடுவாள்..” என்று கிருஷ்ணா கிளியிடம் சொல்ல மது அருகே வருவதைக் கவனித்து பயத்தில் பறந்துவிட்டாள் ..

ஜானுவை அடிக்க டைனிங் டேபிள் நோக்கி வந்தவள், ‘அந்த ஜானுமேல் காட்டும் அன்பில் ஒரு பர்சண்ட் என்மேல் காட்டுகிறாயா? நானும் உனக்காக அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கேன்..’ அவனோடு சண்டைபோட தயாரானாள்.

அவளின் இதழசைவைப் புரிந்துகொண்டு, “நான் உன்மேல் அன்பு காட்டானுமா?”  இடது புருவதைக் கேள்வியாக உயர்த்தினான்.

“நீ என்னிடம் எதிர்பார்ப்பதுக்கு பேரு அன்பா? இல்ல அனுதாபமா மது?” அவனின் கேள்வி அவளின் இதயத்தில் ஈட்டியெனப் பாய்ந்தது.

அவளிடம் பதில் வராமல் இருக்கவே, “நீ என்னிடம் எதிர்பார்ப்பது பரிதாபம் தான்..” என்று அவனே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு, அவளைவிட்டு விலகிச் சென்றுவிட்டான்.

‘அன்பிற்கும், அரவணைப்புக்கும் ஏங்குகிறேன். நானா அவனிடம் பரிதாபத்தை எதிர்பார்த்தேன்..’ என்ற மதுவின் கேள்விக்கு அவளின் மனம் கொடுத்த பதில் மௌனமே.

சிலநேரங்களில் வார்த்தைகள் சொல்லாத விஷயத்தை மௌனங்கள் சொல்லிவிடும். அவளின் கேள்விக்கும் பதில் கிடைத்தது. அவன் சொன்ன வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தாள்.

அந்த வாக்கியத்தின் பொருள் வேறொரு விஷத்தை அவளுக்குக் கற்பித்தது. அது கொடுத்த விடையில் திகைத்தாள் பெண்ணவள். மனைவி என்ற ஸ்தானதுடன் அவனின் காதலும் கலந்திருந்த அந்தப் பார்வை அவளின் மனதிற்குள் வட்டமிட்டது.

தன்னோட அனுதாப பார்வை அவளைத் தன்னிடமிருந்து பிரித்துவிடும் என்று கவனமாகச் செயல்பட்ட கிருஷ்ணாவிடம் விதியும் விளையாடியது. அந்த விளையாட்டுதான் இந்த ஆறுமாதப்பிரிவு. அவளின் காலில் ரத்தம் வெள்ளம் போலச் சென்றதை இருவரும் கவனிக்கவில்லை.

அந்தக் காயம் கொடுத்த வலியைவிட அவன் வார்த்தைகள் கொடுத்த வலி அதிகமாக இருக்க உதட்டைப் பல்லால் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டு மெளனமாக இருந்தாள். அவள் காலில் ரத்தத்துடன் சென்று டைனிங் டேபிளில் அமர்ந்தவளின் விழிநீர் பெருகிட அதற்கு அணையிட்டு அமர்ந்திருந்தாள்.

அவளிடம் காட்டிய கோபத்தை அவன் சாப்பாட்டில் காட்டிவிடுவானோ என்ற சந்தேகத்துடன் அவனையே நோக்கினாள். அவள் சமைத்த சாப்பாட்டை போட்டு அவளின் கண்முன்னே சாப்பிட அமர்ந்தான். அவன் ஒவ்வொன்றையும் ரசித்துச் சாப்பிடுவதை பார்த்தவளின் மனம் கொஞ்சம் நிம்மதியடைய காலைப் பார்த்தாள்.

இரத்தம் வடிந்துக் கொண்டே இருக்க, ‘கத்தியில் கால் வெட்டிவிட்டதோ..’ என்ற சந்தேகம் அவளின் மனதில் எழுந்தது. அவளால் கால் வலியைப் பொறுக்க முடியவில்லை. கத்தியால் அறுபட்ட இடத்தில் வலி வின் வின் என்றது.

அவளின் முகம் நொடிக்கு நொடி மாறுவதைக் கண்டு அவனுக்குள் கேள்வி எழுந்தது. “என்ன விஷயம்..” என்று சாப்பாட்டில் கவனம் செலுத்தியபடியே..

‘ஒண்ணுமில்ல..’ மறுப்பாகத் தலையசைக்க அவனும் தோளைக் குளுக்கிவிட்டு கைகழுவ எழுந்து சென்றான். அந்த அறை முழுவதும் இருந்த ரத்தக்கறை கண்டதும் திடுக்கிட்டான்.

அவள் நடந்த இடமெல்லாம் ரத்தமாக இருக்க, “ஏய் காலில் என்னடி ஆச்சு..” என்றவன் அவளின் காலை ஆராய ரத்தம் வெள்ளமாக அவனின் கைகளை நனைத்தது..

“என்னடி இவ்வளவு ரத்தம் போயிருக்கு.. என்ன பண்ணி வெச்சிருக்க..”  எரிந்து விழுந்த கிருஷ்ணா நிமிர்ந்து அவளின் முகம் பார்த்தான். அவளின் கண்கள் கலங்குவதற்கு தயாராக இருந்தது.

அவளிடம் கோபத்தைக் காட்ட இது நேரமில்லை என்று உணர்ந்து எழுந்து சென்று சுடுதண்ணீர் எடுத்து வந்து அவளின் காலைக் கழுவிவிட்டு கட்டுப் போட்டான். அவள் வலியில் புழுவாகத் துடித்தாள்.

“கொஞ்சம் கூட கவனமாக இருப்பதில்ல.. நேற்று ஜானுகிட்ட கடிவாங்கிட்டு உட்கார்ந்திருந்த. இப்போ காலை வெட்டிட்டு வந்து உட்கார்ந்திருக்கிற. என்னோட உயிரை வாங்கத்தான் ஊரிலிருந்து வந்தீயா..” அவளைத் தூக்கிச்சென்று படுக்கையில் படுக்கவைத்து போர்த்திவிட்டான்.

அவனின் வார்த்தையில் வெளிபட்ட கோபத்தில் கூட அன்பை உணர்ந்தாள் பெண்ணவள். அவளின் கூந்தலை அவன் வருடிவிட அந்த இதத்தில் தன்னை மறந்து உறங்கினாள்.

அவளை சிந்தனையுடன் பார்த்திருந்த கிருஷ்ணா எப்பொழுது உறங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை. “கூ.. கூ.. கூ..” என்று எங்கிருந்தோ ஒரு மரத்தின் மீதிருந்து கூவிய குயிலோசைகேட்டுக் கண்விழித்தான் கிருஷ்ணா.

அவனின் அருகே  படுத்திருந்த மதுவின் முகம் பார்த்தும் அவனின் துயில் தூரம் சென்றது. அவனைக் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் மற்றவர்களின் மத்தியில் மது மட்டும் தனித்து நின்றாள். கள்ளம் கபடம் இல்லாத இந்த பெண்ணின் தூய்மையான அன்பின் முன்னே அவனின் மனம் தோற்றுப்போனது.

அவளின் கூந்தல் காற்றில் அலைபாய்ந்திட ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் அவனின் காதல் மனையாள். ஐந்தில் ஓடிய ஃபேன் காற்றும், விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தால் உருவான குளிர்காற்றும் சேர்ந்து அந்த அறை முழுவதிலும் குளிர் பரவியிருந்தது.

மது குளிரால் நடுங்குவது கண்டு அவளுக்குப் போர்வை போர்த்திவிட்டான் கிருஷ்ணா. அவளின் முகத்தை மறைத்த கத்தைக் கூந்தலை அவளின் காதோரம் ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதழ்பதித்து நிமிர்ந்தான்.

வில்லேன்ற புருவம், மூடிய விழிகள், நேரான நாசி, சிவந்த இதழ்கள் என்று அவனின் பார்வை அவளின் முகத்தை அளவேடுத்தது.  அவளின் கன்னத்தில் இருந்த கண்ணீர் கோடுகள் கண்டு, “எனக்கு ஏன்தான் இவ்வளவு கோபம் வருதோ தெரியல..” என்று தன்னையே கடிந்து கொண்டான்.

அவளின் நெற்றியில் பட்டும்படாமல் இதழ்பதித்து நிமிர்ந்தவன், “ஸாரி ரதிமா..” என்றவனின் மனதில் நிம்மதி பரவியது. அதுவரை அலைப்பாய்ந்த மனம் அவளருகில் இருக்கும் பொழுது அமைதியாக இருப்பதை உணர்ந்து அவனின் உதட்டில் புன்னகை வந்து சென்றது.

“கியூட் பேபி..” அவளின் கன்னத்தில் இதழ்பதிக்க அவளின் முகம் பூவாக மலர்வதை கண்டுகொண்டது அவனின் விழிகள்!

காலைபொழுதே மனைவியின் அருகாமையை ரசித்தவன் எழுந்து சென்று வேலைகளை முடித்துவிட்டு ஜானுவை எழுப்பினான்..

“ஜானு..” என்ற அவனின் அழைப்பில் விழிதிறந்து பார்த்தவளின் காலடியில் ஒரு கடிதத்தை வைத்துவிட்டு, “இதை அவளிடம் கொடுத்திரு ஜானு.. அவளை எப்படியாவது சாப்பிட வை.. நான் கிளம்பறேன்..” என்றவன் சந்தேகமாகக் கிளியைப் பார்த்தான்.

அதனுடைய கூண்டின் கம்பியைப் பற்றியபடி நின்றிருந்தது. அதன் விழி திறந்திருந்தாலும் ஜானு அவன் சொன்ன அனைத்துக்கும், ‘ம்ம்’ கொட்டியது. அதனிடம் அசைவு இல்லாமல் இருப்பது அவனுக்குச் சந்தேகத்தை வரவழைத்தது.

“ஜானு..” என்று அவன் போட்ட அதட்டலில் அரைத் தூக்கத்தில் கீழே சரிந்து விழுந்த ஜானு பேந்த பேந்த விழிப்பது பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் கிருஷ்ணா.

“ஏன் ஜானு நீ எல்லாத்துக்கும் ம்ம்ம் சொன்ன என்னை ஏமாற்றிவிடலான்னு நினைச்சியா?” என்று கிளியைத் தூக்கி ஒரு முத்தமிட்டுவிட்டான்.

ஜானு அவனின் கைகளில் தூங்கி வழிவதைப் பார்த்து,  “நீ தூங்கிடி செல்லம்.. ஆன அவளை எப்படியாவது சாப்பிட வெச்சிரு ஜானு..” என்றதற்கு, “பீ.. பீ..” என்று விசிலடித்தாள் ஜானு..

“தேங்க்ஸ் ஜானு..” என்றவன் கிளியைக் கூண்டுக்குள் விட்டுவிட்டு மதுவைத் திரும்பிப் பார்த்தான்.

“சரியான கும்பகர்ணி.. மணி ஆவது கூடத் தெரியாம தூங்கறா..” என்றவன் கதவை லாக் செய்துவிட்டு கிளம்பினான். அவள் தூக்கம் களைந்து விழிதிறந்துப் பார்க்கும் பொழுது மணி பதினோன்று. அந்த ஹாலில் மாட்டியிருந்த கடிக்காரத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்

‘காலையில் பொழுது விடிஞ்சது கூட தெரியாமல் தூங்கிருக்கேன் பாரு. தத்தி தத்தி..’ என்று தன்னைத்தானே திட்டியபடி அறை முழுவதிலும் பார்வையைச் சுழற்றினாள்.

அவன் இல்லாத வீடு அமைதியாக இருப்பது கண்டு அவன் வீட்டில் இல்லை என்று உணர்ந்தாள். அப்பொழுது அவளின் முன்னாடி வந்து நின்ற ஜானு அவளின் முன்னே குறுக்கும் நெடுக்கும் நடந்து அவளின் கவனத்தை ஈர்க்கவே, ‘என்ன..’ என்று அதனிடம் சைகையில் கேட்டாள். அது அவளிடம் ஏதோ சொல்ல வருவது புரிந்தது..

அதற்குள் ஜானு பறந்துவிட,  ‘ஏய் எங்க போற..’ என்றவள் எழுந்து நிற்க கால் வலி சுருக்கென்றது. ஆனால் அதையெல்லாம் பார்த்தால் பசி தீராது என்று உணர்ந்து ஜானுவைப் பின் தொடர்ந்தாள்.

அவள் சமையறைக்குள் நுழைய ஒரு பாத்திரத்தின் மீது அமர்ந்திருந்தாள் ஜானு. அதன் சூடு தாங்காமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிய ஜானுவைப் பார்த்து அவளுக்குப் பாவமாக இருந்தது..

‘பாத்திரம் ரொம்ப சூடாக இருக்குதோ..’ மது அதைத் தொட்டுப் பார்க்க சுட்டதும், ‘ஐயோ கொதிக்குது..’ என்று ஜானுவின் முன்னாடி கைநீட்டினாள்.

அவளின் கையில் ஏறிய ஜானுவிடம், ‘இதை நான் திறந்து பார்க்கட்டுமா?’ என்று சைகையில் கேட்டதும், “ம்ம்..” என்றது..

அவள் பாத்திரத்தைத் திறந்து பார்க்க அவளுக்கு பிடித்த புளி சாப்பாட்டின் வாசனை அவளின் மூக்கைத் துளைக்க ஆழ மூச்செடுத்தவள், ‘கிருஷ்ணா நீதாண்டா அக்மார்க் 916 கேரட் தங்கம்..’ என்றவள் சாப்பிட அமர்ந்தாள்.

ஜானு பாவமாகப் பார்க்கவே,, ‘ஒரு நிமிஷம் இரு வரேன்..’ என்று சைகை செய்துவிட்டு எழுந்து சென்றாள்

மறுபடியும் வந்தவளின் கையிலிருந்த கப் நிறைய ஆப்பிள் பீஸ் இருந்தது. அதை ஜானுவின் முன்னே வைத்துவிட்டு, ‘நீ அதைச் சாப்பிடு.. நான் இதைச் சாப்பிடுறேன்..’ என்று மீண்டும் சைகை செய்தாள்.

‘எனக்கு தாங்க்ஸ் சொல்லல..’ கிளியின் முன்னாடி கைநீட்டிட அவளின் கையைக் கொத்தி வைக்காமல் மூக்கை உரசினாள் ஜானு.

அவன் செய்த சாப்பாடு வாசனையில் தன்னை மறந்தவள், ‘கிருஷ்ணாவோட கை மணம் அப்படியே அம்மா சமையல்..’ மனதிற்குள் அவனுக்குச் சர்டிபிகேட் கொடுத்தவள் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.

அந்த அறையிலிருந்த ரேடியோவை ஒலிக்கவிட்டு சோபாவில் அமர்ந்தவளின் கவனத்தை ஈர்த்தது அந்தப் பாடல்..

செந்தூரப் பூவே இங்கு தேன் சிந்த வா வா..

தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா..

இரு கரை மீதிலே தன் நிலைமீறியே  ஒரு மனம்

நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே..” பாடலில் தன்னை மறந்தாள்.

அதன்பிறகு கிளி செய்த கலாட்டாவில் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜானுவை வானில் பறக்கவிட்ட மதுவை திகைப்புடன் பார்த்தபடி நின்றிருந்தாள் பிரீத்தி.

 

error: Content is protected !!