Im 9

 

 அவர்கள் குழுவின் ‘வாட்ஸப் கால்’ லில் பேசிக்கொண்டிருந்தாள் மயூரி! தேர்வுக்கு முன் வரும் ‘ஸ்டடி லீவ்’ அது, ஆதலால் அன்று வீட்டிலிருந்தாள்!

கல்லூரியில் யாரிடமும் தனக்கு நிச்சயம் முடிந்த விஷயமெல்லாம் மயூரி சொல்லியிருக்கவில்லை! ஆனால் பொழுதன்னக்கும் விவேக்குடன் போனில் அரட்டை அடிப்பதை பத்தி அங்கே அவள் தோழிகள் அனைவருக்கும் தெரியும்!

‘சம்திங் சம்திங்’ என்று அவர்களாகவே ஒரு முடிவுக்கு வந்து அவளை நிதமும் கேலியில் திணரடித்தனர்!


நடுநடுவே அவர்களுக்கிடையே விஷ்ணுவிற்கு ரிசர்வேஷன் வேலையும் போய்க் கொண்டிருந்தது! கல்லூரி வாழ்க்கையில் சிரிப்புக்கு பஞ்சமா என்ன? எதற்கு என்று தெரியாமலேயே மணிக்கணக்கில் சிரித்துக் கொண்டிருந்தனர்! இப்போதும் அதே!

“டவுட் கேட்க தானே போன் பண்ணீங்க! அதை சொல்லுங்க டி முதலில்! என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!” மயூரிக்கு அது படிக்கும் நேரம்!


“இந்த வருஷ சப்ஜெக்ட்ஸ் நினைச்சாலே எனக்கு கடுப்பாகுது! இந்த ஆப்தமாலஜி எல்லாம் படிச்சே தான் ஆகணுமா!” என்றாள் ராஜி!

“நீ டாக்டர் ஆகியே தீரணுமா!” மயூரி கேட்க,

“நல்லா கேளு, இங்கே வந்ததிலிருந்து இதை ஏன் படிக்கணும் அதை எதுக்கு செய்யணும்னே கேட்டு என் உயிரை எடுக்குறா!” என்றாள் நிரஞ்சனா!

அவள் சொன்னதில் ஒரு ஐந்து நிமிடம் அங்கே சிரிப்பலை!


ஒரு வழியாய் தோழிகளுடன் பேசிவிட்டு போனை வைக்க விவேக் வந்தான்! 

அவன் பார்வையை சந்தித்தவளுக்கு தெரிந்தது, ‘இனி இன்று படிச்ச மாதிரி தான்’என்று!

பெஞ்சில் அமர்ந்திருந்தவளின் பக்கம் இருந்தவன் அவள் தோளில் கைபோட்டபடி இன்னமும் நெருங்கி அமர்ந்தான்!


எப்போதும் பிச்சி பூவின் வாசம், முன்னர் தன் அன்னையின் புடவை வாசம்

இப்போது அவன் வாசம் மயூரியை கட்டிப் போட்டது! இந்த மணங்களை எல்லாம் ஒரு பேக்கெட்டில் அடைக்க முடிந்தால் எப்படியிருக்கும்! தேவையான போது வாசம் பிடிக்கலாமே! யோசனையில் அவள் மூழ்கியிருக்க, ‘உன் பக்கம் இருப்பதே எனக்கு போதும்’ என்பது போல் அவனும் அமைதியில் கழித்தான்.


அடுத்து வந்த நாளில் படிப்பதில் மூழ்கியிருந்தவளின் அறைக்குள் தடாலடியாக நுழைந்தான் விஷ்ணு!

“ஆ…படிக்குறப்ப ஏன் டா டிஸ்டர்ப் செய்றே! வெளியே போ விஷ்ணு!”

“வெளியே தானே, நான் மட்டும் போகலை நீயும் வரே! கமான் எந்திரி!”

“எனக்கு நிறைய முடிக்க வேண்டியிருக்கு நான் வரலை! விடுறா…”

 அவள் சொன்னதை காதில் வாங்காமல் தரதரவென அறையை விட்டு அவளை வெளியே இழுத்து வந்தான்!

“விடு விஷ்ணு! என்ன டா இது! இப்படியேவா நான் வர முடியும்!”


டிராக் பேண்ட் டி ஷர்ட்டில் இருந்தாள்!

“இதுக்கு என்ன! நல்லா தானே இருக்கு!”

“உன் கண்ணை கொண்டு போய் நல்ல டாக்டர் கிட்ட காட்டு! உன்னோட பெரிய தொல்லை…ஹாலில் வெயிட் பண்ணு வரேன்!”


அவனுடன் பைக்கில் போய்க் கொண்டிருந்த சமயம் விவேக்கை அழைத்தாள்!

“மூவி போறேன், நீங்களும் வரீங்களா? எந்த மால் விஷ்ணு!… பீனிக்ஸ்! ஓகே அங்க பார்க்கலாம்!”

“அவரில்லாம இப்பல்லாம் எங்கையும் வரதில்லையோ மேடம்!”

“ம்ம்…அப்படித்தான்!”

பைக்கின் கண்ணாடியில் தெரிந்த அவள் முகம் பார்த்தான்! சிவந்திருந்தது, வெட்கத்தால்!

எப்படி நிகழ்ந்தது இந்த மாற்றம்! அவனுக்கும் தெரியவில்லை!

“இப்ப வெட்கப்படுறியா வள்ளி?”

அதற்கும் தலைகுனிந்துக் கொண்டாள்!

“சகிக்கலை!” 

என்றவன், அவள் தந்த மொத்த குத்துக்களையும் முதுகில் வாங்கியபடி திரையரங்கம் வந்து சேர்ந்தான்!

விவேக்கிற்கு காத்திருந்த நேரத்தில் அந்த ‘மாலை’ சுற்றிக் கொண்டிருந்தனர்!


“ஹேய் விஷ்ணு வாட் எ சப்ரைஸ்! என்ன ஷாப்பிங்கா!”

விஷ்ணுவை நெருங்கினர் இரண்டு அழகான் பெண்கள்!

“பின்ன வேற என்ன! நீங்க இங்க என்ன செய்றீங்க? இன்னிக்கு பார்லர் லீவா என்ன?!”


அவன் கேட்டது சரிதான் எனப்பட்டது மயூரிக்கு! ஒரிஜினல் நிறம் தெரியாத அளவுக்கு அத்தனை மேக்கப் போட்டிருந்தனர் அவ்விரு பெண்களும்!


“கமான் எப்பவும் என்னை இப்படியே சொல்லுவியா நீ! ஐயம் எ ப்ரோ இன் மேக்கப், நானே தான் செஞ்சிப்பேன்! பார்லர் எல்லாம் வருஷத்தில் சில முறை தான்!”


மயூரி அந்த பெண்களுக்கு பின்னே விஷ்ணுவை பார்த்தபடி நேர் எதிராய் நின்றிருந்தாள்! விஷ்ணுவும் அவளும் ஜாடையாய் பேசிக் கொண்டனர்! ரகசியம் பேசுவது அவர்களுக்குத் தான் சகஜமாய் வருமே!

அவன்- “இந்த பிங்க் டிரஸ் பொண்ணை தான் சொன்னேன்! ஆளு எப்படி?”

மயூரி- “ம்ம்…ஓகே! ஆனா இவளுக்கு பவுண்டேஷன் வாங்கவே நீ நிறைய செலவு செய்யணும் விஷ்ணு!”

அவன்- “கிர்ர்ர்…ஏன் எல்லாரும் எப்பவும் என் கிட்ட செலவை பத்தி மட்டுமே பேசுறீங்க!”

அவள்- “லாங் ரன்னில் அதையும் பார்க்கணும் தானே!”

அவன்-“அவ கிட்ட என்னை கொஞ்சம் பேச விடுறியா! பட்ஜெட் போட்டு என் உயிரை எடுக்காதே! என் கிட்ட உன் முட்டை கண்ணை காட்டுறதை முதலில் நிறுத்து! அவ என்னை ஒரு மாதிரி டவுட்டா பார்க்குறா!”


மயூரவள்ளியுடன் ஒரு கண் பேசிக் கொண்டிருந்தாலும் அந்த அஞ்சுவிடமிருந்து அவனால் தன் கண்களை அகற்ற முடியவில்லை!

“அஞ்சு போலாமா?”

உடனிருந்தவளுக்கு பொறுமை போயிருந்தது! அங்கிருந்து போகவே மனமில்லாதவள் போல் நின்றிருந்தாள் அந்த அஞ்சனா! 

அந்த அஞ்சுவுடன் தன் நண்பனின் செயல்பாட்டை போட்டோ வீடியோ எடுத்த வள்ளி இப்போது விஷ்ணுவை நெருங்கி நின்றுக் கொண்டாள்.

“காலரை ஏன் இப்படி மடக்காம வச்சியிருக்கே!” என்ற வாசகத்துடன்! அவன் பல்லைக் கடித்தது அவளுக்கு மட்டுமே தெரியும்!


அவள் செயலில் அஞ்சு முகத்தில் ஒரு மாற்றத்தை பார்க்க மயூரிக்கு சிரிப்பாக இருந்தது! அவனதை சரி செய்து விட்டவள் மீது பார்வை போனது அவ்விரு பெண்களுக்கும்!


“இவ…இவங்க யாரு விஷ்ணு?”

“பிரண்ட்!”

“பிரண்டுன்னா…கேர்ள் பிரண்டா!”

இந்த வாக்கியத்தை கேட்க தான் இங்கே வந்தேன் என்பது போல் சரியாய் விவேக்கும் வந்தான் அவ்விடம்! 


“எனக்கு அண்ணியா ஆகப் போறா!”

அஞ்சு முகத்தில் சட்டென்று ஒரு நிம்மதி பெருமூச்சைக் கண்டவன்,

“உனக்கு அதில் எதுவும் பிராப்ளம் இல்லையே!” என்றான் ஒரு நமுட்டு சிரிப்போடு!


அந்த அஞ்சு அதற்கு வெட்கப்பட்டதை பார்க்க அழகாய் இருந்தது மயூரவள்ளிக்கு!


“நான் ஏன்…” நிமிர்ந்து அவன் முகத்தில் கேலியை பார்த்தவள்,

“காட், இனி உன் கிட்ட பேச முடியாது! கிளம்புறோம் இப்ப! நாளைக்கு ஆபிஸில் பார்க்கலாம்…பை!” என்ற அஞ்சுவும் அவள் தோழியும் அங்கிருந்து போய் விட்டனர்!


விவேக்கும் பார்த்திருந்தான் மயூரியின் செய்கையை! அவனால் என்றுமே ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமது! என்னதான் மனதை சமாளித்து வைத்திருந்தாலும் இப்போது அது முரண்பட ஆரம்பித்திருந்தது! அவள் எனக்கானவள்! அந்த உறுதியுடன் 

அவர்களை நெருங்கிய விவேக், மிக உரிமையாய் மயூரியின் கைகளில் தன்னதை கோர்த்துக் கொண்டபடி நடக்க ஆரம்பித்தான்!


படம் முடிந்து வீடு வந்த பின்னர் மறுபடியும் படிக்க அமர்ந்தவளை இப்போதும் விடவில்லை தம்பிக்காரன்!


“இனிமேல் வெளியே போகணும்னு சொன்னா என்னை கூப்பிடாதே வள்ளி!” விஷ்ணு கடுப்படித்தான்! 

“எப்படி எப்படி, கூப்பிட்டது நானு?”

“அண்ணாத்தைக்கு உன் மேல் உரிமை வந்திடிச்சுன்னு படுது! அவன் கூட உட்கார்ந்து மனுஷன் படம் பார்ப்பானா டி! அவனை எதுக்கு நீ நம்ம ரெண்டு பேர் நடுவில் உட்கார வச்சே”

‘நான் என்ன டா செஞ்சேன்! செஞ்சதெல்லாம் அவன்’


“சரி அடுத்த முறை கூப்பிடலை சரியா!” என்றாள் சமாதானமாய்!

யோசித்துக் கொண்டிருந்தான்!


“அண்ணனுக்கு பிடிக்காதுன்ன நீயும் செய்யாதே மயூரி!”

“தெளிவாய் குழப்புறே நீ!

 எப்போதிலிருந்து அண்ணன் புராணம் பாட ஆரம்பிச்ச!”

“அவன் மயூரி புருஷன் ஆனதிலிருந்து!”

அவன் பேச்சில் எவ்வித சம்மந்தமும் இருப்பதாக அவளுக்கு படவில்லை!

“என்னவோ எனக்கு நீ சொல்றதெல்லாம் ஒண்ணும் புரியலை விஷ்ணு!”


“உனக்கு நான் ஏதாவது சொல்லி உடனே புரிஞ்சியிருக்கா! எப்படியோ போ! அவன் கூட சேர்ந்து நீயும் லூசா போனதுதான் மிச்சம்! அவனை இனிமேல் கூப்பிடாதே அவ்வளவுதான் நான் சொல்ல வந்தது! நான் கீழ போறேன்! படிக்க தானே இங்க வந்தே, அந்த வேலையும் கொஞ்சம் பாரு”

அடப்பாவி!


இவன் போனதும் ஹப்பாடா என்றபடி அந்த கனத்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்!


விவேக் அந்த நாள் முழுவதற்கும் அவள் கண்ணில் படவே இல்லை என்பது அவள் கருத்தில் கூட இல்லை!


“அம்மா எனக்கு செலவே இல்லாம ஒரு பொண்ணு பார்த்திருக்கேன்!” என்றான் விஷ்ணு!

“எப்படி டா!”

“நம்ம மோனி தான். கையில் காதில் எதுவும் போட்டுக்க மாட்டா! ரொம்ப கடவுள் பக்தி ஜாஸ்தி! முழு நேரமும் அதில் மூழ்கியிருப்பா! நீ என்ன செய்றே எனக்காக அவ அப்பன் கிட்ட போய் பேசுறே!”

“முதலில் நீ உன்னை பெற்றவர் கிட்ட இதை பத்தி பேசுறியா ராசா?”

“ஏன் பேசுவேனே, எனக்கென்ன பயமா! 

நான் மேஜர் மா, யாரை வேணாலும் கல்யாணம் செய்ய எனக்கு உரிமையிருக்கு சும்மா பூச்சாண்டி காட்டாதே!”


கனகவேல் வந்திருந்தார்!

மகன் வாயடிப்பதை அங்கு நின்று கேட்டுக் கொண்டிருந்தார்!


“என்ன தேவையில்லாத பேச்சு போயிட்டிருக்கு!”


“அமுதா ஒரு சிக்னல் கொடுத்திருக்கலாமே!”

சின்ன குரலில் அன்னையிடம் சீறினான் விஷ்ணு!


“முதலில் உன் வேலையில் கவனம் வச்சி அதில் முன்னேற பாரு! அண்ணன் கல்யாணமெல்லாம் முடிஞ்ச பிறகு தானே யோசிக்கணும்! அதுக்குள்ள அவசரப்படாதே! அமுதா உன்னால் அவனுக்கு அம்மாவா நடந்துக்க முடியுமா முடியாதா! 

எப்ப பாரு அவனுக்கு சரிக்கு சமமா வாயடிச்சிட்டி இருக்கே! இதெல்லாம் நல்லா இல்லை! அவ்வளவு தான் சொல்வேன்! “


போயிட்டாரா என்று அவன் எட்டிப் பார்க்க மறுபடியும் பிரவேசமானார்!


“அந்த பொண்ணு மோனி பேச்சு இனி இந்த வீட்டில் கேட்க கூடாது! அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு! மாப்பிள்ளை அமெரிக்காவில் வேலையில் இருக்காராம்!”


போய்விட்டார்!


“ஆமா இப்ப எதுக்கு மா அவர் இந்த எக்ஸ்ட்ரா இன்பர்மேஷன் எல்லாம் தராரு! நான் அவர்ட்ட கேட்டேனா!”


“மெல்ல பேசுறா! அப்பாவுக்கு கேட்க போகுது!”


“அட போம்மா! இருந்த ஒரு பொண்ணும் போச்சு! எல்லாரும் அமெரிக்கா மாப்பிள்ளையே கேட்டா நான் எங்கே மா போவேன்!”

“நீ ஜப்பானுக்கு வேனா போயேன் டா!”


“மா…ஏன் உள்ளூரில் இருந்தா ஆவாதோ! என்னை இப்படி புலம்ப விட்டுட்டாங்களே!”


மகனின் செய்கையில் நகைக்க ஆரம்பித்தார் அமுதா!