kse-6

kse-6

அத்தியாயம் – 6
அவளின் பார்வையைக் கண்டவன். “உண்மையை தான் சொல்லுறேன். மூனு பேர் என்னை காதலித்தார்கள்” என்றபடி அவளை நோக்கி மூன்று விரலை நீட்டினான் அரவிந்த்.
“இது நம்ப கூடியதாய் இல்லையே?” சந்தேகமாய் இழுத்தாள் மிது.
“ஆமா… நம்புறது கஷ்டம் தான்… ஆனா நம்பி தான் ஆகணும். நானும் உன்னை போல தான் முழித்தேன். ஆனா, நான் ரொம்ப அழகா இருக்கேன்னு என் பின்னாடி வரும் போது நான் என்ன செய்வதாம்?” காலரை தூக்கி விட்டபடி வினவினான் அவன்.
இபொழுது அவனை கொலைவெறியில் முறைத்தாள் மிது ‘ராஸ்கல் பொய் சொல்லுறான்’ எண்ணிக் கொண்டாள்.
“அப்புறம் என்ன பண்ணுனீங்க, உங்க காதலிகள் எங்கே?” நாடியில் கைவைத்து வினவினாள் மிது.
“நான் தான் ஏற்கனவே ஒரு ராட்சசி மேல் காதலில் விழுந்துடேனே? அது தான் அவங்களுக்கு பணத்தை குடுத்து விரட்டி விட்டுட்டேன்”
“விரட்டி விட்டீங்க ஓகே, அதெதுக்கு பணம் குடுத்தீங்க?” என்றாள் அப்பாவியாய்.
“நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொன்னங்கல்ல, அதுக்கு தான்” கூறியபடியே வானத்தை நோக்கினான் அரவிந்த்.
இப்பொழுது அவனையே பார்த்திருந்தாள் மிது. ‘கொஞ்சம் அழகாய் தான் இருக்கிறான்’ அவள் மனம் அவனுக்கு சர்டிபிகேட் கொடுத்தது.
அவளின் எண்ணவோட்டத்தை அறிந்தவன் போல் “சொல்லு எனக்கு எத்தனை மார்க் குடுப்ப?” அவளின் முன் தன்னை அங்கும், இங்கும் திருப்பிக் காட்டியபடி கேட்டான்.
அவனையே காலில் இருந்து முகம் வரை பார்த்தவள் “உனக்கு எப்படியும் பத்துக்கு ஒ… இல்ல ஒரு மார்க் வேணா தரலாம். அப்படி தான் மொக்கையா இருக்க உலக அழகன் போல சீன் போடாதே” நமட்டு சிரிப்புடன் கூறினாள்.
“ம்ம்… நீ கரெக்ட்டா தான் சொல்லுற, நான் அழகில்லை போல, அது தான் என்னோட ராட்சசியும் என்னை ஏறெடுத்தும் பார்கவில்லை”
“இந்த ராட்சசி உன் காதலிகளில் நான்காவது ஆளா?” கிண்டலாக வினவினாள்.
“இல்லை… இப்படி தான் அவளும் தப்பா புரிஞ்சுட்டு இருக்கா? அந்த ராட்சஸி தான் என் வாழ்கையில் வந்த, வரும் முதலும், கடைசியுமான பெண்ணா இருப்பா”
அந்த நேரம் ஏனோ அவள் மனம் கொஞ்சமாய் சலனமானது.
அவளை கவனிக்காமல் மேலும் தொடர்ந்தான்.
“முதல் முறையா அவளை கோவிலில் பார்த்தேன். அவன் தங்கச்சி, தம்பி கூட வந்திருந்தா… அத்தனை அழகு… பார்க்க பார்க்க தெவிட்டா அழகு… எப்பவும் அந்த முகத்தையே பார்த்துட்டு இருக்கணும்னு தோனுற அழகு” உணர்ந்து முகத்தில் ஒரு வித வெட்கத்தை கொண்டு தொடர்ந்தான்.
“அவளை பார்த்த நேரத்தில் இருந்து எனக்கு ஒரு குடும்பம் கிடைச்சதா நினைச்சேன். அவளுக்கு அவ குடும்பத்துக்கு மேல ரொம்ப பாசம் போல.
அவர்களுக்காக தான் அவள் இருப்பாள் போல, எல்லாமே குடும்பத்துக்காக தான் செய்யுறா? அவளை தூரத்தில் இருந்து மட்டுமே ரசித்து பார்ப்பேன்.
பக்கத்தில் செல்லும் தைரியம் வரல, ஒருவேளை பிடிக்கலன்னு சொல்லிட்டா என்னால் தாங்க முடியாது”
“அதுக்காக உங்க காதலை நீங்க அவ கிட்ட சொல்லலியா?”
“எப்படி சொல்லுறது… பயமா இருக்கு, ஒரு வேளை சொதப்பிட்டன்னா?”
“பயமா உனக்கா? நீ தான் எல்லாரையும் மிரட்டிட்டு இருப்ப.. இதோ இப்போ என்னை மிரட்டி உன் கூட வச்சிருக்க மாதிரி. அவளையும் அழைச்சுட்டு வரவேண்டியது தானே?”
‘அப்படி தான் அழைச்சுட்டு வந்திருக்கேன்’ மனதில் எண்ணியவன் “நீ என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்க மிது. நான் ஆசைப்பட்ட பொருளை எப்பவும் எப்படியாவது, என்கிட்ட வச்சுக்கணும்னு நினைப்பேன்?”
“அப்போ என்னை ஏன் இப்படி அடைச்சு வச்சிருக்க?”
“நான் உன்னை அடைச்சு வைக்கல, உன் பணத்தேவைக்கு நீ வந்திருக்க”
“நீ பேசுனா கண்டிப்பா சொதப்ப தான் செய்வ… யார் அந்த பொண்ணு, எங்க இருக்கான்னு சொல்லு, நான் பேசுறேன் உனக்காக?” பேச்சை மாற்றினாள். உண்மையும் அது தானே? பணதேவைக்கு தானே இங்கு வந்திருக்கிறாள்.
“யாரு நீயா?” கிண்டலாக கேட்டான். அவனும் அவள் பாதைக்கே சென்றான்.
“ஆமா… நான் தான் ஏன் என்னை பார்த்தா எப்படி தெரியுது உனக்கு”
“நீ ரொம்ப அழகா இருக்க… சோ உன்னை நான் நம்புறேன்… அழகா இருக்கிறவங்க பொய் சொல்லமாட்டாங்க”
“சரி சொல்லு எங்க இருக்கா அவ?”
“இங்க தான்” என்றான் அவளை கூர்மையாக பார்த்துக் கொண்டு.
“இங்கயா? யாரை சொல்லுற நீ?” கண்கள் இடுங்க வினவினாள் மிது.
“இங்க” என்றபடி நெஞ்சை சுட்டி காட்டினான் அவன்.
“ஒஹ்” என்றபடி அமைதியானாள்.
அவன் எதையோ மறைப்பது போல் தெரிந்தது.
இருவரும் அவரவர் நினைவில் மூழ்கி அந்த ஏகாந்த இரவை ரசித்தனர்.
@@@@@@@@@@@@@@@
மறுநாள் காலை என்றும் இல்லாத திருநாளாய் அவன் அறைக்கு வந்து காலை வணக்கம் கூறினாள் மிது.
அதிசயமாக அவளைப் பார்த்தான் அரவிந்த். ஆனாலும், சும்மா இருந்தால் அவன் அரவிந்த் இல்லையே.
“என்ன சூரியன் மேற்கில் உதித்து விட்டது போல?”
“நான் மாறிட்டேன்”
“அப்படியா? வாழ்த்துக்கள்”
“நான் இனி உங்க கிட்ட சண்டை போடமாட்டேன்” உறுதிக் குரலில் கூறினாள்.
அவன் தான் வேறு ஒருத்தியை காதலிக்கிறானே, அவன் சொல்வது போல் நான் அவன் மனைவியாக மாறவேண்டாம்.
ஆனாலும் கழுத்தில் கிடந்த கருகுமணி அவளை உறுத்தியது. அதை அவளால் சாதரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இன்னும் ஆறு மாதம் தானே.
அதுவரை வாங்கிய பணத்துக்கு உழைக்க வேண்டும் திடமாக முடிவெடுத்த பின் தான் அவளால் நிம்மதியாக உறங்க முடிந்தது.
“நிஜமாகவா?”
“நிஜமாக தான்”
“சரி தான்… இன்னைக்கு உண்மையாவே சூரியன் மேற்கில் தான் உதிக்கிறது”
அவனைப் பார்த்து மெதுவாக சிரித்தபடி வெளியில் சென்றாள் மிது.
‘இன்னைக்கு இவளுக்கு என்ன ஆச்சு… என் லவ் கதையை கேட்டு ஓவரா பீல் ஆகிட்டாளோ…’
அவனின் யோசனையை தடுத்தபடி அவன் முன் காபியுடன் வந்து நின்றாள் மிது.
“ரொம்ப சூடா இருக்கு, பல் விளக்கிட்டு குடிங்க”
அவள் கூறி முடிக்கும் முன் அதை குடித்து விட்டிருந்தான்.
“ஐயோ சூடு!” அவள் பதற,
“அது தான் பக்கத்திலேயே சூடா நீ நிக்குறியே, இந்த சூட்டுக்கு முன்னாடி அது கம்மிதான்” கூறியவன் அருகில் கிடந்த டவலை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்து விட்டிருந்தான்.
ஒரு நொடி திகைத்தவள், முகத்தில் தோன்றிய சிரிப்புடன் வெளியில் சென்றாள்.
குளித்து முடித்தவன், பால்கனியில் நின்று தோட்டத்தையே பார்த்திருந்தான். அது அவனின் பழக்கம். பாட்டி வீட்டுக்கு வந்தால் ஒரு இரண்டு நாள் மட்டுமே தங்குவான். அப்படி வரும் பொழுது அவனின் பகல் நேர பொழுது தோட்டம் தான்.
இப்பொழுதும் தோட்டத்தை பார்த்திருந்தான். அங்கு பாட்டி நாற்காலியில் அமர்ந்திருக்க, மிது அவரிடம் பேசியபடி தோட்டத்தில் சில செடிகளை நட்டுக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி, செடிகளை அழகாக வெட்டிக் கொண்டிருந்தாள்.
“ஒரு பொண்ணு வீட்டில் இருந்தால் அழகா தான் இருக்கு” பாட்டி உணர்ந்துக் கூறினார்.
அதையே தான் அவனும் எண்ணிக் கொண்டிருந்தான். ‘அம்மா இருந்தால் இப்படி தான் வீடு இருக்கும். இப்பொழுது அந்த இடத்தை மிது பிடித்து விட்டாள்’ சிரிப்புடன் பார்த்திருந்தான்.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, பாட்டிக்கான சாப்பாட்டை அவரிடம் கொடுத்தபடி எதையே சிரிப்புடன் பேசிக் கொண்ருந்தாள்.
அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், தன் அறைக்கு வந்து தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு அவர்கள் முன் வந்து நின்றான்.
“என்னடா அரவிந்த் அதுக்குள்ள கிளம்பிட்ட” பாட்டி கேட்க.
“ஆமா பாட்டி, சென்னை ஆபிஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு… மிது பாட்டியை நல்லா பாத்துக்கோ” அவளிடம் கூறியவன் சிறு தலையசைப்புடன் தன் ஜீப்பில் கிளம்பினான்.
செல்லும் அவனையே பார்த்திருந்தாள் மிது.
அடுத்து வந்த நாட்கள் பாட்டியுடன் கழிந்தது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டில் எல்லாரும் அவளிடம் பேசினர்.
அவ்வபொழுது பாட்டியும் அவர்களிடம் பேசிக் கொள்வார். தாயின் உடலில் இப்பொழுது நல்ல முன்னேற்றமாம். தங்கச்சி சந்தோசமாக கூறினாள்.
அவளுக்கும் அத்தனை சந்தோசமாக இருந்தது. ஆனாலும், கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்த நல்ல விஷயத்தை கேட்க அரவிந்த் இல்லையே என்று.
இதற்கிடையில் பாட்னா ஆபிஸ் கணக்கு வழக்கு இவளை தேடி வந்தது. அரவிந்த் தான் ஆள் அனுப்பினானாம். வந்தவர் கூறிக் கொண்டிருந்தார்.
அவ்வபொழுது ஆபிஸ் விஷயமாக அவனும், அவளிடம் பேசுவான். ஆனால் முந்தி மாதிரி மனைவி என்றோ, காதலி என்றோ பேசமாட்டான்.
கொஞ்சமாய் மனம் அவனை தேட ஆரம்பித்தது. ஏதோ அவளை விட்டு விலகியதாய் உணர்ந்துக் கொண்டாள்.
அடிக்கடி கழுத்தில் கிடந்த கருகுமணியை அவள் கைகள் வருடிக் கொண்டன. இப்படியே ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது.
அவளையே பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்த பாட்டி ஒரு நாள் அவளை தேடி வந்தார்.
அவளையே கூர்ந்து பார்த்தவர் “உண்மையாவே நீ அவனை காதலித்து தான் கல்யாணம் பண்ணுனியா?”
இக்கேள்வி அவளை திடுக்கிட வைத்தது. ‘என்னல்லாம் சொல்லி சொதப்பி வச்சுருக்கானோ?’ கைகள் தானா, அவன் கையால் வாங்கிய தாலியை வருடிக் கொண்டிருந்தன.
அந்த கருகுமணியையே பாட்டியின் கண்கள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தன.
error: Content is protected !!