kv-2

2

அனந்தாச்சாரி மிகுந்த மனபாரத்தோடு அந்த செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதை நினைத்து வருந்தினார். தன் இயலாமையை நினைத்து அவருக்கே வெறுப்பு வந்தது. உடனே யாருக்கோ போன் செய்தார்.

உன்னை நான் என்ன சொல்லி அங்க விட்டுட்டு வந்தேன்.. எப்படி நடந்துச்சு இது?” கோபமாகக் கத்தினார்.

மாமா நான் என்ன செய்யட்டும். எல்லாம் என் கை மீறி போய்டுச்சு.” மறுபுறம் பேசியவன் வருந்த,

நீ ஒன்னும் சொல்லாத. விஜய்க்கு தகவல் சொல்லியாச்சா?” மீண்டும் கத்த,

இல்ல மாமா.. யாரும் அவனுக்கு போன் பண்ணதா தெரியல.” தயங்கித் தயங்கி கூறினான்.

அடேய்முட்டாள்.. நீயாவது யாரோ போல அவன் கிட்ட பேசி இருக்கலாமே. உன்னையெல்லாம்… போனை வை.” கொதித்துக் கொண்டிருந்தார்.

செய்வதறியாது குறுக்கும் நெடுக்கும் நடந்தார். இறுதியில் அவரே அவனுக்குப் பேசிவிட எண்ணினார்.

விஜயின் அலைபேசி எண்ணை அவர் அவனது தந்தை வெங்கடேச பூபதியிடம் இருந்து ஒரு முறை வாங்கி வைத்திருந்தார். ஆனால் எப்போதும் அவனுக்கு அழைக்கக் கூடாது என்றும் வெங்கடேசன் சொல்லி இருந்தார்.

இப்போது அந்த வெங்கடேசனே போய்விட்ட பிறகு, வாக்கு முக்கியமா என்று யோசித்துத் தான் அவனுக்கு அழைத்தார். ஆனால் அவன் ப்ளேனில் வந்து கொண்டிருந்ததால் அது அனைத்து வைக்கப் பட்டிருந்தது.

விஜய் என்ன பண்ற..போன எடுக்காம !” என சுவரை கைகளால் குத்தினார்.

வெங்கடேசன் கடைசியா விஜய் தான் தனக்குக் கொள்ளி வைக்கணும்னு சொல்லிருக்கானே… இவங்க அதை மதிக்காம அந்த உருபடாத பய கோவிந்தன வெச்சு காரியம் பண்ணிடப் போறாங்க. கடவுளே இங்க இருந்துக்கிட்டு நான் என்ன பண்ண… வழி காட்டுப்பா…” கடவுளிடம் புலம்பினார்.

வெங்கடேசனுக்கு வக்கீல் தொழில். திருமணம் ஆகி ஆறு ஆண்டுகள் வரை குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு நாள் திடீரென ஒரு கைக் குழந்தையை கொண்டு வந்து அவரது மனைவியிடம் கொடுத்தார்.

இனி இவன் தான் நமக்கு மகன். இனிமே நமக்கு குழந்தை பிறந்தாலும் இவன் தான் என் மூத்த மகன். நீயும் இவனை அப்படித் தான் வளர்க்கணும்என்றார்.

அவரது மனைவி மிகவும் சாது. கணவனை எதிர்த்து ஒன்றும் செய்யமாட்டார். ஆகையால் அவர் கொடுத்த குழந்தையை கையில் எடுத்து முத்தமிட்டு , தனது தாயன்பை முதல் முதலில் அவனிடம் காட்டினார். அவனைக் கொஞ்சி தாலாட்டி சோறூட்டி அவனிடம் மிகவும் ஒன்றிவிட்டார்.

அன்று முதல் விஜய் அவர்களின் குழந்தை.

அவன் பத்தாவது படிக்கும் போதே அவரது மனைவி இறந்துவிட, மகனை தனித்தே வளர்த்தார். அவனும் தந்தைக்கு எந்த தொந்தரவும் தராமல் தன் வேலையை தானே பார்த்துக் கொள்வான். அவருடன் சேர்ந்து கேஸ் எப்படி கையாள்வது என்று பார்ப்பான். தந்தையிடம் கேட்டுக் கொள்வான். ஆகையால் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். அது நீண்ட நாள் நீடிக்காமல் போகக் காரணம், வெங்கடேசன் அங்கிருந்த அரச குடும்பத்தின் கேஸை நடத்தியது தான்.

அது தான் அவரது இறப்பிற்கும் காரணமாகிப் போனது.

திருவனந்தபுரம்

ஏகப்பட்ட மர்மங்களும் குழப்பங்களும் சூழ்ந்த ஒரு இடமாக இருந்தது அந்த வீதி! போலிஸ் வந்து பாடியைச் சுற்றி நின்று யாரும் அங்கு வராமல் பார்த்துக் கொள்ள, அடுத்த பத்து நிமிடத்தில் ஆம்புலன்சில் வந்து ஏற்றிச் சென்றனர்.

வெங்கடேசனுக்கு சொந்தக்காரங்க யார் பா?” போலீஸ் விசாரிக்க

அவருக்கு ஒரு பையன் இருக்கான். அவன் டெல்லில இருக்கான்.” கூட்டத்தில் ஒருவர் கூறினார்.

அவனுக்கு போன் செஞ்சு விஷயத்தை சொல்லுங்க.” என்று அவர்களும் தங்களின் வேலைகளை முடித்துக் கொண்டு கிளம்பினர்.

கூட வந்த சில கான்ஸ்டபில்கள் மற்றவர்களிடம் வெங்கடேசன் எப்படி அங்கு வந்து விழுந்தார் என விசாரித்துக் கொண்டனர்.

அதற்குள் அங்கு வந்த பிரஸ் மீடியா எல்லாரும் அதை நியூசில் போட ஆரம்பித்து இருந்தனர்.

அக்கம்பக்கத்து வீட்டினருக்குக் கூட விஜயின் எண் தெரியாது. ஆகவே யாரும் அவனுக்குக் கூறவில்லை. நல்லவேளையாக நியூஸ் போட ஆரம்பித்த சில நிமிடத்திலேயே விஜய் அதைப் பார்த்துக் கிளம்பிவிட்டான். இது தான் கடவுளின் செயல் என நினைக்கத் தான் தோன்றும்.

மீண்டும் அனந்தாச்சாரி அவனது எண்ணிற்கு அழைத்தார். நல்லவேளையாக இப்போது ரிங் போனது. அவனது விமானம் தரை இறங்கி இருந்தது. அனந்துவின் எண் விஜயிடம் இல்லை. புது எண் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் , பின் அதை எடுத்தான்.

விஜய்.. அப்பா இறந்துட்டாரு பா. உடனே கிளம்பி ஊருக்கு வா.” எடுத்ததும் விஷயத்தைக் கூறினார்.

நான் நியூஸ் பாத்துட்டு இங்க வந்துட்டேன். நீங்க யாரு?” கனத்த மனதுடன் பேசினான்.

நான்நான்…” அனந்து தயங்கினார்.

சொல்லுங்க.. நீங்க யாரு,,?” அவனது குரல் வற்புறுத்தியது.

நான் உங்க அப்பா ப்ரென்ட் அனந்தாச்சாரி.”

அங்கிள் நீங்களா. நீங்க எங்க இருக்கீங்க.. அப்பாக்கு அங்க என்ன ஆச்சு.. சொல்லுங்க.” ஒரு டாக்சியைப் பிடித்து அதி ஏறிக்கொண்டே பேசினான்.

நீ அங்க போய் பாருப்பா. நான் வெளியூர்ல இருக்கேன்.” என இணைப்பைத் துண்டித்தார்.

இருந்த அவசரத்தில் அவனுக்கு மீண்டும் அழைக்கத் தோன்றாமல் முதலில் தந்தையைக் காணத் துடித்தான்.

அவன் வீட்டின் முன்பு கூட்டம் இல்லாவிட்டாலும் , ஐந்தாறு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் அக்கம் பக்கத்து வீட்டினர். இவன் சென்றதும், “யப்பா விஜய்… அப்பா க்கு இப்படி ஆயிடுச்சே !” என வருந்தினார்கள்.

எப்படி என்ன ஆச்சு?” என பக்கத்துவீட்டுகாரரிடம் கேட்டான்.

தெரியலப்பா.. நல்லாத் தான் பேசிட்டு இருந்தாரு. கோயிலுக்குக் போயிட்டு வந்தவரு , தெப்பக்குளத்துல கால் நனைக்கும் போது அப்படியே கீழே விழுந்துட்டாரு. அங்கேயே உயிர் போயிடுச்சுப்பா.” அழ ஆரம்பித்தார்,

ஹார்ட் அட்டாக்கா?” கண்கள் கணக்க நின்றான்.

போலீஸ் வந்து எங்க கிட்ட எல்லாம் விசாரிச்சாங்க. நாங்க பாத்துட்டே இருக்கும் போது தான் இது நடந்தது. அதுனால எல்லார்கிட்டயும் கேட்டுட்டு ஹாஸ்பிடலுக்குக் கொண்டு போயிருக்காங்க. எங்க கிட்ட உன் நம்பர் இல்லப்பா. அதான் சொல்ல முடியல.” அவனுக்கு அழைக்காததற்கான காரணத்தையும் சொன்னார்.

பச்ச்…” அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

நான் உடனே எங்க அப்பாவ பார்க்கணும்.” என்றான்.

ஜி..ஹெச்.. போ விஜய்..” ஒருவர் சொல்ல,

நானும் கூட வரேன் அண்ணா..” ஒரு குரல் கேட்டது.

திரும்பிப்பார்த்தான் விஜய். அங்கே அரவிந்த் நின்று கொண்டிருந்தான். அவன் அனந்தாச்சாரியின் தங்கை மகன். அவரிடம் அப்போது போனில் பேசியதும் அவன் தான்.

விஜய்க்கு அவனைக் காண ஆச்சரியமாக இருந்தது. ‘தந்தை இருந்தவரை அனந்தாச்சாரியின் குடும்பத்தை அவனிடம் ஓட்ட விட்டதில்லை. ஆனால் இப்போது, அவரே போனில் பேசுகிறார், அவரது தங்கை மகன் தன்னுடன் வருவதாகக் கூறுகிறான்.’ தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று ஒன்றும் விளங்காமல் தவித்தான்.

இப்போது இவனை நம்பலாமா வேண்டாமா..! தெரியாத நண்பனை விட தெரிந்த எதிரி பரவாயில்லை என்று தோன்றியது. அப்படி ஒன்றும் அவன் எதிரி இல்லை. இருந்தாலும் வெங்கடேசன் இவர்களுடன் சேரவிடாததற்கு அவனே நினைத்துக் கொண்ட காரணம் அது.

கொஞ்சம் இரு. என் திங்க்ஸ் எல்லாம் வெச்சுட்டு வரேன்.” வீட்டிற்குள் அவசரமாகச் சென்று வந்தான் விஜய்.

கதவை வெறுமனே சாத்திவிட்டு புறப்பட்டான். அங்கு வீடுகளைப் பூட்டிச் செல்லும் அளவிற்கு பயம் இல்லை.

இருவரும் அரவிந்தின் பைக்கில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே போலீஸ் சூழ்ந்திருக்க, விஜய் இறங்கி ஓடினான்.

சார் நான் தான் விஜய். எங்க அப்பா தான் வெங்கடேச பூபதி. நான் அவர பாக்கணும்அவசரமாகக் கூறினான்.

! நீங்க தான.. கொஞ்சம் இருங்க போஸ்ட்மார்டம் பண்ணி தான் பாடி குடுப்போம்.” இன்ஸ்பெக்டர் சொன்னதும், கோபம் கொண்டான் விஜய்.

யாரக் கேட்டு போஸ்ட்மார்டம் பண்றீங்க. என் பெர்மிஷன் இல்லாம எப்படி செய்யலாம்.” என மொத்த ஹாஸ்பிடலும் பார்க்குமாறு கத்தினான்.

மிஸ்டர்.விஜய் , நாங்க விசாரிச்ச வரைக்கும் உங்க நம்பர் அங்க யாருமே தரல. யாருக்கும் தெரியல. அப்பறம் எப்படி உங்கள கண்டக்க்ட் பண்றது. நீங்க எப்ப வந்து நாங்க ஃபார்மாலிடீஸ் எப்ப முடிக்கறது. அதுனால தான் நாங்க ஆக் ஷன் எடுத்தோம். ரூல்ஸ் படி தான் செஞ்சோம்.” மிகவும் தைரியமாகச் சொன்னார். இல்லை விஜய் கேட்டால் சொல்லும்படி அவருக்கு சொல்லப்பட்டிருந்தது.

புல்ஷிட். இறந்தவரோட செல்போனை ஒரு தடவ ஓபன் பண்ணிருந்தா அவரோட எல்லா காண்டாக்சும் கிடைச்சிருக்கும். ஒரு பேசிக்கான விஷயம். இது கூட தெரியாம நீங்க எப்படி போலீசானிங்க. வேணும்னே இத செஞ்ச மாதிரி இருக்கு. நான் உங்க மேல கேஸ் குடுக்கறேன். சும்மா விட மாட்டேன்.” அவரை வசை பாடியவன் தன் செல்போனை எடுத்து யாருக்கோ அழுத்த,

அந்த இன்ஸ்பெக்டர் சற்று பயந்தார். இவனிடம் இத்தனை புத்திசாலித் தனத்தை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. அத்தோடு அவன் எங்கு வேலை செய்கிறான், எத்தனை தூரம் அவனுக்கு செல்வாக்கு இருக்கும் என சற்றும் சிந்திக்காமல் பேசிவிட்டார்.

விடுப்பா. போன உயிர் திரும்பியா வரப்போகுது. எதுக்கு இந்த சமயத்துல பிரச்சனை பண்ணிட்டு இருக்க. போய் உங்க அப்பாவ பாரு. அவருக்கு செய்ய வேண்டிய கடமையச் செய்கணீர் குரலில் பின்னால் இருந்து ஒருவர் பேசினார்.

திரும்பிப்பார்த்தவன், அவரைக் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டான். சாமியார் போன்ற தோற்றம் , நீண்ட தாடி கையில் ஒரு தடி, சட்டையில்லாமல் ஒரு காவி வேட்டி மட்டும் அணிந்திருந்தார். நெற்றி மொத்தமும் குங்குமத்தால் நிரப்பி இருந்தார். எப்படியும் ஒரு அறுபது வயது இருக்கும். கண்களில் மட்டும் அத்தனை தெளிவு. ஆனால் அவரை எங்கோ பார்த்தது போன்ற உணர்வு. சிறு வயதில் அவரை எங்கோ பார்த்திருக்கிறான்.

இவரைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், “போஸ்ட்மார்ட்டம் முடிந்ததுஎன்று ஒன்றுவன் வந்து சொல்ல, தந்தையைப் பார்க்க ஓடினான்.

அந்த சாமியாரும் அங்கிருந்து சென்றிருந்தார்.

வெங்கடேசனின் உடலைக் கண்டதும் கதறினான் விஜய். “அப்பாஅப்பா என்று உள்ளத்தில் இருந்து அவரைக் கூப்பிட்டான். அவனைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டான் அரவிந்த்.

ரிப்போர்ட்டில் அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று சொல்லி இருந்தனர்.

அரவிந்த் கூட இருந்து அணைத்துக் காரியங்களையும் செய்ய உதவினான். கூடபிறந்தவன் போல உதவினான். அனந்தாச்சாரி இல்லையென்றால் அவனை கடித்துக் குதறிவிடுவார்.

அக்கம் பத்தத்தினர் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு செல்ல வீட்டில் தனிமையில் அமர்ந்திருந்தான். அரவிந்த் அவனுக்காக உணவு எடுத்து வந்தான்.

சாப்பிடுங்க அண்ணா என்றான்.

ஒருநாள் முழுவது சாப்பிடாமல் இருந்ததால் சற்று சோர்ந்து விட்டான். இப்போது இந்த உணவைத் தின்ற பிறகு சற்று தெம்பு வந்தது.

அனந்தாச்சாரி அரவிந்திடம் கூறி சொல்லச் சொன்ன விஷயங்களை மெதுவாகச் சொன்னான்.

உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீங்க கோவப் படாம கேளுங்கஎன ஆரம்பித்தான்.

உங்க அப்பா ஒரு கேஸ் எடுத்து நடத்துனாருல , அதுல ஆரம்பத்துல அரச குடும்பத்துக்கு சாதகமாத் தான் பேச ஆரம்பிச்சாரு. ஆனா போக போக அவருக்கு அரச குடும்பம் பொய் சொல்றதா தோணிச்சு. அவங்க கிட்ட உண்மைய சொல்லச் சொன்னாரு. அவங்க எதுவும் சொல்லல. ஆனா அப்பாவே சில விஷயங்கள கண்டுபிடிச்சாரு. அது பிடிக்காம ….அது பிடிக்காம அவங்க அப்பாவ மிரட்டினாங்க.

அப்பா கோர்ட்ல அவங்களுக்கு எதிரா பேசப் போறேன்னு சொன்னபிறகு … எச்சல் விழுங்கினான்.

சொல்லு என்ன ஆச்சு…” vijaya அவனை உலுக்க,

அப்பறம் தான் அவர் இறந்துட்டாரு.”

வாட்,….??” அதிர்ந்தான். “அப்பாவ கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்றியா…??” கண்கள் சிவந்தது.

அது எனக்குத் தெரியாதுண்ணா. ஆனா அதுக்கு அப்பறம் தான் அவர் இறந்தாரு. உங்க கிட்ட சொல்லணும் னு தோனுச்சு.. அதான் சொன்னேன். நான் வரேன்.” அங்கிருந்து கிளம்ப நினைக்க,

ஒரு நிமிஷம் , ஹாஸ்பிட்டல ஒரு சாமியார் வந்தாரே.. அவர எங்கயோ பார்த்திருக்கேன்.. அவர் யாரு..?”

என்னது சாமியாரா..? எப்ப வந்தாரு..?” அரவிந்த் புரியாமல் பார்த்தான்.

அப்பாவோட பாடி வாங்கறதுக்கு முன்ன ஒருத்தர் வந்தாரே..?”

அப்படி யாரும் வரலைய.. உங்களுக்கு மட்டும் தெரியுதா… ?” ஒரு பயத்துடன் அவனைப் பார்க்க..

விஜய் யோசித்தான்.. “சரி நீ கிளம்புஅவனுக்குக் குழம்பியது. ‘நான் பார்த்தேனே!’ தலையைப் பிடித்துக் கொண்டான்.

விஜய்க்கு அன்றே அப்பாவிற்கு என்ன நடந்தது என தெரியாவிட்டால் மண்டை உண்டைந்துவிடும் போல ஆனது.

அவரது அறைக்குச் சென்றான். அவரது கேஸ் விவரங்களை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

அந்த பேப்பர்களைத் தொட்டதும் அவனுக்குள் கரென்ட் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. கண்ணை மூடி அங்கிருந்த சேரில் அமர்ந்தான். மூடிய அவனது கண்களுக்குள் பத்மநாப ஸ்வாமி தெரிந்தார். அத்தனை பெரிய உருவம் அவன் கண்களுக்குள் தெரிய ஆரம்பித்தது.

அதன் பிறகு இரண்டு பாம்புகள் பின்னப்பட்ட கதவு. இவை மாறி மாறி அவன் கண்களுக்குள் தெரிந்தது. உள்ளிருந்து அவனது கண்களுக்குப் பூட்டுப் போட்டது போல அவனால் கண்களைத் திறக்க முடியவில்லை.

அந்த பாம்புகள் கொண்ட கதவு அவனிடம் பேசுவது போலத் தோன்றியது.

உனக்கான தேடல் இங்கிருந்து ஆரம்பம்.

உன் தந்தை சென்ற இடம் வைகுண்டம்..

அதை நீ காணப் போகும் பேரின்பம் ..

தடை நீக்கிக் கண்டுகொள் பேரண்டம்..”

இரண்டு பாம்புகளும் சிரித்தது…

கண்கள் திறந்தான். அவன் கண்ட காட்சிக்கு என்ன அர்த்தம். ஊருக்கு வந்ததிலிருந்து ஏன் இந்த குழப்பங்கள்.. மர்மங்கள்… புரியாமல் தவித்தான். தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்தான்.

எங்கிருந்து ஆரம்பிப்பது…!’ அவன் தலை வலித்தது,

முதலில் தந்தையின் இறப்பு. அதைத் தான் தெரிந்து கொள்ள வேண்டும்என முடிவு செய்தவன் கேஸ் கட்டை எடுத்தான். முழுதும் படிக்க ஆரம்பித்தான்.

அவனுக்காக காத்திருந்த அந்த மூன்றாவது நபர் அந்தச் சாமியார். அவன் வீட்டு வாசலில் அரூபமாய் நின்றிருந்தார்….

விஜய பூபதிஉன்னைக் குழப்ப நான் இருக்கிறேன். வா வா,,,” அந்தத் தெருவே அதிரும்படி சிரித்தார். ஆனால் அது யார் காதிலும் விழவில்லை.