Kvi-14

காதல் கிரகத்தில்…

“என்னாச்சி ட்டேபீ? ஏன் திடீர்னு வரச் சொல்ற?”

“குழப்பமா இருக்கு. அதான் கேட்கிறேன்” – குரல் வலிமை இழந்து தோன்றியது.

“இத்தனை நாள், நான் வரேன்னு சொன்னப்ப வேண்டாம்னு சொன்ன. இப்போ என்ன?”

“எனக்கு உன்னயப் பாக்கனும்னு தோனுது. தட்ஸ் ஆல்” – குரலில் அன்பும், அடம்பிடிப்பும் இருந்தது.

“ஓகே…ஓகே.. வரேன்” – அன்பாய் சொன்னாலே கேட்டுக் கொள்ளும் காதல். அடமும் சேர்ந்து கொள்ள, காதல் அடிமைப் பட்டது.

“நிஜமாவேவா?? ” – காதலைச் சந்தேகப் படாதே சயனா!!

“கண்டிப்பா வரேன். நீ என்னாச்சினு சொல்லு?”

அன்றைய அலுவலக நிகழ்வுகளைக் கொட்டித் தீர்த்தாள்.

“ஓ!! சக்திவேலுக்கு ஏதாவது ஆயிடும்னு பயப்படுறியா??”

“ச்சே ச்சே.. சக்திக்கு என்ன ஆகும்?? அவன் சேஃப்பாதான் இருப்பான்”

“அவங்கதான், அவன வரச் சொல்லி இருக்காங்களே ”

“ஆனா, நான் சக்திய வரச் சொல்லப் போறது இல்ல”

“ஏன்? உனக்கு, அவன் இருக்கிற இடம் தெரியாதா??”

“அதெல்லாம் தெரியும். அந்தக் காப்பகத்தில, அவன் அம்மாகூடதான் இருப்பான் ”

“அப்ப, அவன்கிட்ட சொல்லி, வரச் சொல்ல வேண்டியதுதானே ”

“நோ வே. சக்தி ஒரு ரெண்டு நாளு, சேஃப்பான இடத்தில இருக்கனும். அதுக்கு காப்பகம் பெஸ்ட்”

“பட், அவன் வரலைன்னா, உனக்கு பிரச்சினை வராதா??. நீ என்னதான் யோசிக்கிற?? ”

“ஓகே. டிடெயில்லா சொல்றேன் கேளு. குறுக்க பேசக்கூடாது”

சற்று நேரத்திற்கு பின் இங்கே….

அமைச்சர் சொகுசு விடுதியில்…

மாடியின் மூலையில் உள்ள அறையின் உள்ளே, தனிமையில் தரையில் அமர்ந்திருந்தார்.

உள்ளுக்குள் ஆயிரம் கோபங்கள்.

இதுவரை, சயனாவின் அத்துமீறல் பேச்சுக்களை, அரசியல் பழிவாங்கும் கணக்கின் கீழ், கொண்டு வந்ததே கிடையாது.

ஆனால் இன்று அவள் பேசிய பேச்சு, அமைச்சரால் கடந்து போக, முடியவே முடியவில்லை. அவருடைய அரசியல் முகத்தை, அவளிடம் காட்ட வேண்டிய தருணம் வந்துவிட்டது, என்று நினைத்தார்.

கூட்டணியைப் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவள் என்றும், அவள் மீது கோபம் வந்தது.

ஆம்! கூட்டணியைப் பிரித்தால் எந்த அரசியல்வாதிக்குத்தான் பிடிக்கும்!

மேலும் தொழிலதிபரிடம் பேசிய பொழுது…

‘அதிகாரத்தின் உதவி, தொழில் செய்யத் தேவைதான். ஆனால் அந்த அதிகாரம், நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை ‘ – இத்தகைய தொழிலின் பேச்சு, அவள் மீதான கோபத்தை அதிகரித்தது.

இந்தப் பிரச்சினை முடிந்ததும், அவளைத் தட்டி வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இப்பொழுது அவளை, விட்டு வைக்க வேண்டாம் என்று நினைக்கிறார்.

அந்தத் தருணம்…
காவல் அனுமதி கேட்டுக் கொண்டு, உள்ளே நுழைந்தது….

“வாய்யா. எல்லாம் முடிச்சிட்டியா??”

“பாத்துக்கிட்டே இருக்கேன், ஐயா”

“ம்ம்ம்”

“ஐயா, ஏன் தரையில போய் உட்கார்ந்திருக்கீங்க??

“சும்மாதான். வா வந்து உக்காருய்யா. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” – மனம் விட்டு, தன் கோபத்தை கட்டப் போகிறார்.

காவல் வந்து தரையில் அமர்ந்து கொண்டது…

“என்ன விஷயம்?? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க. அதான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருச்சில”

“என்ன முடிஞ்சிருச்சி?? இல்ல என்ன முடிஞ்சிருச்சு?? ”

“கோபப்படாதீங்க. அவதான், நாம சொன்னதுக்கு ஒத்துக்கிட்டாள”

“அவ சொன்னத, நாம ஒத்துக்கிட்டு வந்திருக்கோம். அதான் உண்மை ”

” ஐயா, என்ன சொல்றீங்க??

“நான் சொல்றத கவனமா கேளு. குறுக்க பேசக்கூடாது ”

” சரிங்கய்யா ”

சற்று நொடிக்குப் பிறகு இங்கே…

சயனாவின் அறையில்…

“இன்னைக்கு நான் டீல் பேச வேண்டிய அவசியமே இல்லை. அதுமட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா! எனக்கு பிரச்சனை ஸ்டார்ட் ஆயிடுச்சின்னு அர்த்தம்”

அமைச்சரின் அறையில்…

“இன்னைக்கு அவ கைதான் ஓங்கி இருந்தது. அவ டீல் பேச வேண்டிய அவசியமே கிடையாது. ஆனாலும் டீல் பேசறான, அதுல ஏதோ விஷயம் இருக்கு”

சயனாவின் அறையில்…

“சக்தியப் பத்தி எனக்குத் தெரிஞ்சும் அவங்ககிட்ட, நான் சொல்லாம இருந்திருக்கிறேன்.

இப்போ, அதுவும் அவங்களுக்குத் தெரியும். இருந்தும் நான் சக்தியக் கொல்றதுக்கு ஒத்துகிட்டத, எப்படி நம்புவாங்க??”

அமைச்சரின் அறையில்…

“இத்தனை நாளா, அந்த ஹேக்கர நம்மகிட்ட காட்டிக் கொடுக்காம இருந்திருக்கா. இன்னிக்கு திடீர்னு கொல்றேனு ஒத்துகிட்டானா, அங்க ஏதோ தப்பா தெரியலையா??

இங்கேயும் அவனக் காப்பாத்ததான நினைப்பா?

அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஏதோ ஒரு கருமம் இருக்குது. அதான் சொல்றேன், அவ அவனக் கொல்ல மாட்டா”

அது கருமம் இல்லை. காதல்!! உன் அரசியல் அறிவிற்கு, ஏன்??? உன் அறிவிற்கே அப்பாற்பட்டது..

சயனாவின் அறையில்…

“எனக்கு என்னோட டார்கெட் செட் பண்றது ரொம்ப முக்கியம். இப்ப என்னோட டார்கெட், அந்தப் போலீஸ் மட்டும்தான். அடுத்தது அமைச்சர் ”

அமைச்சரின் அறையில்… 

“இந்த நிமிஷம், என்கிட்ட யாராவது வந்து, உன் எதிரி யாருன்னு கேட்டா?? நான், அவ பேரத்தான் சொல்வேன்”

“அப்போ அந்த ஹேக்கர்?? ” – போலீஸ் குறுக்கிட்டது.

“அவனால நமக்கு எந்த ப்ராப்ளமும் கிடையாது. அவனோட அம்மாவ, ஸ்டேஷன்ல வச்சிக் கொடுமைப் படுத்திறப்போ, வாசல்ல சும்மாதான இருந்தான். ”

“அவகூட இருக்கிறவளுங்க” – திரும்ப குறுக்கீடு.

“அதேமாதிரிதான் அவளுங்களும், நீ அடிக்கிறப்ப, என்ன செஞ்சாங்க??? சும்மாதான இருந்துச்சுங்க”

“ஆமாங்கய்யா”

“ஆனா, இவமட்டும் எதிர்ல நின்னு பேசினா! அடிக்கிறா!! என்னோட அரசியல் வாழ்க்கைக்கே செக் வைக்கிறா. அதான், என் டார்கெட் அவதான்…. அவ மட்டும்தான்” – கண் முழுவதும் செவ்வரளியின் சிவப்பு, மஞ்சள் அரளியின் விஷம்.

சயனாவின் அறையில்… 

“ஒரு போலீஸ்காரன் அவனோட கன்ன எடுத்திட்டு வந்து, என்கிட்ட கொடுப்பானாம். அதுவும் சிஐடி ஆபீஸ்ல வச்சி. அப்படி செய்றதால அவனுக்கு பிரச்சினை வராதா? ”

அமைச்சரின் அறையில்… 

“நீ உன்னோட கன்ன, அவகிட்ட கொடுத்தா?? அது உனக்குத்தான் பெரிய பிரச்சினையா வந்து சேரும்.”

“ஐயோ என்ன சொல்றீங்க” – போலீஸ் குறுக்கிட்டது.

“ஆமா உன் கன் அவகிட்ட இருந்தா, பிரச்சனை உனக்கு மட்டும்தான்”

இங்கே, ‘உனக்கு மட்டும்’ என்பது போலீஸ் மனதில் விதைக்கப்பட்டது.

“அப்போ வேற கன் அரேஞ்ச் பண்றீங்களா??” – போலீஸ்.

“நீ மட்டும் வேற கன் கொடுத்தனா, கண்டிப்பா அவ அலர்ட் ஆயிடுவா”

சயனாவின் அறையில்… 

“அவன், அவனோட ஸ்டேஷன் கன் கொடுக்காம, வேற கன் கொடுத்தா, அவங்க பிளான் வேற. அப்போ, நான் அலர்ட் ஆகனும்”

அமைச்சரின் அறையில்…

“நீ கவலப்படாத. நீ கொடுத்த ஹன்ன, அவகிட்டருந்து எடுத்து, உன்கிட்ட கொடுக்க வேண்டியது, என்னோட வேலை”

காவல் நிம்மதி அடைந்தது.

“அதனால, நீ உன்னோட கன்னயே எடுத்துக் கொடு”

“சரி ஐயா, கன் திருப்பி வந்தா, எனக்குப் போதும்”

சயனாவின் அறையில்…

“என்கிட்ட வந்தப்புறம், அந்த கன், திரும்ப அவன்கிட்ட போகக் கூடாது. ”

அமைச்சரின் அறையில்…

“கண்டிப்பா, அவ அங்க தனியாதான் வருவா. கூட யாரும் வர மாட்டாங்க”

“ஐயா, அந்த ஹேக்கர்” – குறுக்கீடு.

“கண்டிப்பா வர மாட்டான். அவ தனியாதான் இருப்பா. அது அவளுக்கு மைனஸ். நமக்கு பிளஸ். ”

சயனாவின் அறையில்…

“அந்த இடத்துல நான் தனியா இல்ல. என்கூட பீட்டர் இருப்பாரு. அது அவனுங்களுக்குத் தெரியாது. அது எனக்கு பிளஸ். அவனுங்களுக்கு மைனஸ்”

அமைச்சரின் அறையில்…

“அவ அப்படி வரலைன்னா?? என்னய்யா பண்றது” – போலீஸ் குறுக்கிட்டது.

“அவ கண்டிப்பா வருவா. அப்படி அவ வரலைன்னா, அடுத்த நாள் அந்த ஹேக்கர்தான் டார்கெட் ”

சயனாவின் அறையில்…

“ஹன்ன வாங்கிட்டு, நான் போகாம இருக்கலாம். இதனால எனக்குப் பிரச்சினை வராது. ஏன்? ஈஸியா நான் அடுத்த மூவ் பண்ண முடியும். ஆனா, அடுத்த நாளே சக்திய டார்கெட் பண்ணுவாங்க. ஸோ, கண்டிப்பா நான் போயே ஆகனும்.”

அமைச்சரின் அறையில்…

“அப்போ நான் அவகூட ஸ்பாட்டுக்கு போக வேண்டாமா??” – போலீஸ்.

“போயிராத, என் பிளான் மொத்தமும் சொதப்பிரும். அவளே கூப்பிட்டாலும் போயிடாத”

சயனாவின் அறையில்…

“என்ன ஒன்னு, அந்தப் போலீஸ் என்கூட ஸ்பாட்டுக்கு வரக் கூடாது. அப்படி வந்தா நான் நினைக்கிறத, நடத்த முடியாது. ”

அமைச்சரின் அறையில்…

“நாளைக்கு நைட், 1:00 டூ 3:00… நானா??? அவளான்னு?? முடிவு பண்ற நேரம்ய்யா…”

சயனாவின் அறையில்…

“நாளைக்கு நைட், 1:00 டூ 3:00… நானா???அந்தப் போலீஸானு?? முடிவு பண்ற நேரம்…”

இனி சற்று நேரம் அமைச்சர் அறையில் …

“பிளான்னு சொன்னீங்கய்யா?? அது என்ன பிளான்??” என்று காவல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே…

ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் அமைச்சரின் உதவியாளர். அமைச்சர் கோபமாகப் பார்த்தார்.

“என்ன?? ” – இதுவும் கோபமாகவே கேட்கப்பட்டது, அமைச்சரால்.

ஆனால் இந்த ஒட்டு மொத்த கோபமும் உதவியாளர் மீதானது அல்ல. காலையில் அவரை உலுக்கி எடுத்த பெண் மீதானது.

“ஜயா மன்னிச்சிருங்க. உங்கள பார்க்க, நம்ம ஆளுங்க ரெண்டு பேர் வந்திருக்காங்க. அதான்” – மிகவும் பயந்து ஒலித்தது, உதவியாளர் குரல்.

“ஓ, வந்தாச்சா. சரி, வரச் சொல்லு” என்றார் அனுமதி கேட்டவரிடம்.

சிறிது நேரத்தில்…
அதற்குள் அமைச்சர் எழுந்து, சோபாவில் அமர்ந்து கொண்டார்.
காவலும் சேர்ந்து கொண்டது.
இருவர் உள்ளே நுழைந்தனர்…

அந்த இருவரும், அமைச்சர் தினம் தினம் நடத்துகின்ற அரசியல் அடாவடித்தனங்களை, அரங்கேற்றும் நாயகர்கள் போன்று இருந்தார்கள்.

“ஐயா, கூப்பிட்டேங்கன்னு பசங்க சொன்னாங்க” – பவ்வியமாக வந்தது குரல்.

‘சோஃபாவில் வந்து உட்காரு’ என்பது போல் சைகை செய்தார் அமைச்சர்.

“இல்லய்யா. நாங்க நிக்கிறோம். என்ன விஷயம்னு சொல்லுங்க??” – விசுவாசத்துடன் அடியாள்.

“ஒரு சின்ன பிரச்சனை… நீங்க… ” என்று இழுத்தார் அமைச்சர்.

“ஐயா, முதல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க?? அப்புறம் என்ன பண்ணனும் சொல்லுங்க?? அதப் பண்ணதான் நாங்க இருக்கோம்”

“ஒரு பொண்ண போட்டுத் தள்ளனும். இதுக்கு மேல, அவளை விட்டு வெச்சா, எனக்கு நல்லதில்லை.” – வேண்டுதல் தேங்காய் போல், தன் வேண்டுதலைப் போட்டு உடைத்தார்.

“ஆள் யாருன்னு காமிங்கய்யா. ஒன்னும் பிரச்சனை இல்ல. நம்ம பசங்கள வச்சி முடிச்சிரலாம்”

சயனாவை, மிகக் குறைவாக எடை போடுகிறார்கள்!!

“பசங்க வேண்டாம். நீங்க ரெண்டு பேரும்தான் போகனும். ஏன்னா? அவ, நீ நினைக்கிற மாதிரி கிடையாது”

சயனாவை, எளிதாக எடைபோட்டு, அதனால் வந்த எதிர்வினையைப் புரிந்து கொண்ட, அமைச்சர்.

எழுந்து சென்று, அந்த அறையில் மேசையில் இருந்து ஒரு கவரையும், கைப்பேசியையும் எடுத்து வந்தார்.

கைப்பேசியில் இருந்த சயனாவின் புகைப்படத்தை எடுத்து, தொடுதிரை முகப்பில் வைத்துக்கொண்டு, அதை அவர்களிடம் காட்டினார்.

“இதுதான் அந்தப் பொண்ணு. நல்லா பாத்துக்கோங்க. வேனும்னா, உன் மொபைல்ல எடுத்து வச்சுக்கோ. ”

“கொடுங்கய்யா?” என்று வாங்கிக் கொண்டனர்.

அமைச்சர் கொடுத்த கைப்பேசியில் இருந்து, அவர்களது கைப்பேசிக்கு புகைப்படம் மாற்றப்பட்டது.

“பிளான் எப்ப ஐயா?? ”

“முதல்ல இந்த கன்ன வச்சிக்கோ. சைலன்ஷர் கன். சரியா” என்று, அடியாள் கைகளில் கவரைத் திணித்தார்.

“நாளைக்கு ராத்திரி 1:00 டூ 3:00”

“ஐயா, எந்த ஏரியா??”

“அதெல்லாம், இவரு நாளைக்குச் சொல்வாரு. நீங்க அவர்கிட்ட கேட்டுக்கோங்க. ” என்று, காவலைக் கைகாட்டினார்.

காவலைப் பார்த்து, அந்த அடியாட்கள் இருவரும் ‘ஒரு வணக்கம்’ வைத்துக் கொண்டனர். காவலும் எதிர் வணக்கம் செய்தது.

“யாரும் அவகூட இருக்க மாட்டாங்க. மத்தத, போலீஸ் கிளியர் பண்ணி வச்சிருவாரு. அவமட்டும் தனியாதான் வருவா. ”

“எத்தனை பேர் கூட வந்தாலும், எங்களுக்கு பிரச்சினை இல்ல ஐயா”

“ம்ம்ம், அந்தப் பொண்ண ஷூட் பண்ணிட்டு, அந்த இடத்திலிருந்து உடனே கிளம்பிறனும்”

“சரிங்கய்யா”

“கவனமா செய்யனும். யாருக்கும் எந்தச் சந்தேகமும் வரக்கூடாது. நீங்க எஸ்கேப் ஆகுறது ரொம்ப ரொம்ப முக்கியம்”

“சரிங்கய்யா”

“இன்னொரு விஷயம். அவ கைலயும் ஹன் இருக்கப் போகுது. அதனால சொல்றேன் கவனமா இருங்க”

“ஐயா, நீங்க பயப்படாதீங்க, நாங்க பார்த்துப்போம் ”

“ம்ம்ம். அவளை கொன்னுட்டீங்கனா, அந்தக் கன்ன எடுத்திருங்க. அந்த கன்ன கொண்டு வந்து, இந்தப் போலீஸ்கிட்ட கொடுக்கனும், சரியா. ”

” அப்பவே கொடுக்கனுமா?? ”

“ம்ம்ம், நீ என்னய்யா சொல்ற? ” என்று, காவலைப் பார்த்துக் கேட்டார்.

யோசித்தது காவல்.

“சரி விடு. அவகிட்ட அந்தக் கன் இருக்கவே கூடாது. அது ரொம்ப ஆபத்து. அதனால, முதல்ல நீ கன்ன எடுக்க மட்டும் செய்”

“சரிங்கய்யா ”

“மிச்சத்தை அப்புறம் பார்த்துக்கலாம் ”
தலையை நன்றாக ஆட்டிவிட்டு, விடைபெற்றனர் அந்த அடியாட்கள்.

‘எப்படி என் பிளான்’ என்பது போல் அமைச்சர் காவலைப் பார்த்து, கேட்டார். பழிவாங்கும் பகைமை தெரிந்தது.

அந்த நினைப்பில் சிரித்தது.

காலையில், அவள் செய்த செயலுக்கு , இதுவே சரியான பாடம் என்று நினைத்து காவலும் சிரித்தது.

*****

காதல் கிரகத்தில்…

“உன் பிளான்தான் என்ன?? ” – காதல்.

“சூப்பரா கேட்ட. நான் என்ன செய்யப் போறேனா, அந்த கன்ன எனக்கு பேவரா யூஸ் பண்ணிக்க போறேன்”

” புரியல ட்டேபீ”

“ஒரு போலீஸ்காரனுக்கு கன் மிஸ்ஸிங் அப்படிங்கிறது, எவ்வளவு பெரிய பிரச்சினை தெரியுமா?? ”

“???? ”

“அதான் பிளானே! கன் மிஸ்ஸிங். டிஜிபிக்கு இன்பார்ம் பண்ணிடுவேன். அவர் செக் பண்ணா, அந்தப் போலீஸ் மாட்டுவான். “.

” பட், கன் உன்கிட்ட இருக்குதே”

” அது யாருக்கும் தெரியாதுல”

” ஓ.. ”

“அதுக்கப்புறம் அந்தக் கேஸக் கேண்டில் பண்ணவே, அவனுக்கு நேரம் சரியா இருக்கும். அதுக்கப்புறம் அமைச்சர் தனியா இருப்பாரு. அப்ப பாத்துக்கலாம் அவர ”

“பீட்டர் எதுக்கு இதுல. உனக்கு ஹெல்ப் பண்ணவா?? ”

“பீட்டர் எதுக்காகனா, என்னோட பிளான் வொர்க் அவுட் ஆகாம போனா? அப்போ பீட்டர்கிட்ட கன்ன குடுத்திட்டு, நான் எஸ்கேப் ஆயிடுவேன்”

“ஓ, பிளானுக்கு ஆப்ஸன் வச்சிருக்க”

“அத திரும்பி சேஃப்பா, அவங்க ஸ்டேஷன்க்கு கொண்டு போறது, அவரோட வேலை. அதுக்குதான் பீட்டர்”

“இஸ் இட் ஈசி?? ”

“கஷ்டம். எப்படி மேனேஜ் பண்ணப் போறார்னு தெரியல??? திருப்பிக் கன்ன, அவங்க ஸ்டேஷனுக்கே கொண்டு போனாலும்… அதை கரெக்டான இடத்தில் வைக்கிறது… அவ்வளவு ஈஸி கிடையாது”

“தென் வொய்? ”

“என்னோட பஸ்ட் பிளான் ஒர்க் அவுட் ஆகாம இருந்தாதான?? கண்டிப்பா வொர்க் அவுட் ஆயிடும்”

“ஸோ,பீட்டர் டம்மிதான் ” – கூஃபி.

“ப்ராங்க்லி, அவர் மேல, எனக்கு பெரிய நம்பிக்கை இல்ல” – ட்டேபீ.

அவர்மேல் நம்பிக்கை கொள், சயனா. – நாளைய இரவில் நடக்கப் போவதை, இன்றே குறி சொல்லும் காலம்.

” ஓ.. ”

“அவரால வேற எந்த ஹெல்பும் பண்ண முடியாதுன்னு தோனுது”

அவரால் மட்டுமே உனக்கு உதவ முடியும், சயனா!! – குறி சொல்லும் காலம்.

“ஏன்? ”

“ஏன்னா? பொய் சொல்வீங்களானு கேட்டப்போ? ரொம்ப யோசிச்சாரு. ரேவ் சொன்ன மாதிரி, ரொம்ப நியாயவாதி போல.. ப்ச் ”

அவர் உண்மை பேசுபவர்தான்! நியாயவாதியும் கூட!! அது தவறல்ல. – குறி சொல்லும் காலம்.

“ஓ..”

“நான் கேட்டப்புறம் கூட, யோசிச்சி ஒன்னு ரெண்டு பொய் சொல்றேன்னு சொன்னாரு. ஆனா, அப்படிப்பட்ட ஒருத்தர் வச்சிக்கிட்டு, என்ன பண்ண முடியும் சொல்லு”

யாரென்றே தெரியாத உன்னை… நியாயத்திற்காகப் போராடுகிறாய், என்ற ஒரே காரணத்திற்காக, எந்தக் கேள்வியும் கேட்காமல், உன்கூட நிற்பதற்கு வந்தவர்.

சயனா, அவரைக் குறைவாக எடை போடாதே!! – குறி கூறும் காலம்.

“ஓ…”

“அதனாலதான் சொல்றேன், அவரால் எனக்கு பெரிய யூஸ் கிடையாது ”

உன் நிலை கண்டு, உனக்கு உதவப் போகும் ஒரு ஜீவன்!! – குறி கூறும் காலம்.

“ஓ…”

“ஜஸ்ட் கன்ன திருப்பி, போலீஸ் ஸ்டேஷன்ல வைக்கிறதுக்கு யூஸ். தட்ஸ் ஆல் ”

இன்றைய இரவில் அவரைப் பற்றி இப்படி நினைக்கும் நீ! நாளைய இரவில், இதை மாற்றிக் கொள்வாய் சயனா!! – குறி கூறும் காலம்.

“ஓ…”

“எப்படி என்னோட பிளான்? கிளியரா இருக்கா?”

“சூப்பர். லவ் யூ ட்டேபீ ” – காதல் பெருமை கொள்கிறது.

“தயவுசெஞ்சு இப்படிச் சொல்லாத. சக்திக்கு மட்டும்தான், இதச் சொல்ல ரைட்ஸ் இருக்கு”

“இத்தனை நாளா சொன்னப்ப, ஒன்னும் சொல்லல. இப்ப ஏன் சொல்ற?? ”

“ஏன்னா? இப்ப, நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்.”

“இதென்ன புதுசா?? ”

“புதுசெல்லாம் இல்ல. நேத்தே லவ் சொல்லிட்டான். ”

பிறந்தநாளன்று நடந்த பிரியங்களை, தன் மேல் பிரியம் கொண்டவனிடம் பகிர்ந்து கொண்டாள்.

“அவன் உன்கிட்ட பேசவே இல்ல. நாம எவ்வளவு பேசிருக்கோம். ஸோ, இதான் லவ்”

“பட், சக்திய நேர்ல பார்த்திருக்கேன். ஆனா உன்னப் பார்க்கல. ஸோ, எங்க லவ்தான் பெஸ்ட் ”

“ஓ!! இப்படியெல்லாம் நீ கம்பேர் பண்ணுவியா?? ” – காதல், அவளை வியந்து பார்த்தது.

“இன்னும் நிறைய இருக்குது.” – ட்டேபீ

“சொல்லு…சொல்லு..” – காதல், மற்றொரு காதல் பற்றிக் கேட்கிறது.

“நானும் அவனும் ஒரே பைக் வச்சிருக்கோம், தெரியுமா??”

“அட!! எதுக்கு ரெண்டு பைக். எனக்கு உன் பைக்கே போதும்”

“ப்ச். சக்தி பிளாக் கலர் ஷர்ட் போட்டிருந்தான், நான் வொயிட் கலர் ஷர்ட். பிளாக் அண்ட் வொயிட் கோம்போ சூப்பர்ல”

“என்கிட்ட வொயிட் ஷர்ட்டே இருக்குது ட்டேபீ. பெர்பெக்ட் கோம்போ” – வெள்ளை நிற காதல் ஜோடிப் புறாக்கள் போல!!

“அப்புறமா, அவனுக்கு அவங்க அம்மாவ ரொம்பப் பிடிக்கும், எனக்கும் எங்க அம்மாவ பிடிக்கும்”

“எல்லாருக்குமே அவங்கவங்க அம்மாவ பிடிக்கும்”

“அடப்போப்பா” – சிணுங்கல் குரலில், சயனா.

“என்ன ட்டேபீ நீ?? சின்னப் பிள்ளை மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க ”

காதலே! இந்த மங்கை, உன்னிடம் மட்டும்தான், இப்படி மழலையாக மாறுகிறாள்.

“இதெல்லாம் லவ் பண்றதுக்கு அடையாளமா? நான் பேஸிக்கா ஒன்னு சொல்லட்டுமா?? ” – கூஃபி.

” ம்ம்ம்”

“நான்தான், உனக்கு ஐ லவ் யூ சொல்லிருக்கேன்”

“ஓ, அதான் பிரச்சனையா?? அப்போ நல்லா கேட்டுக்கோ! ஐ லவ் சக்தி.. ஐ லவ் சக்தி.. ஐ லவ் சக்தி.. போதுமா? ”

“ஆனா, அவன் சொல்லலை??? ”

“காதல்ல யாராவது ஒருத்தர், ஐ லவ் யூ சொன்னாலே போதும்”

இது புதிதாய் இருக்கிறதே!! காதல் கிரகத்திற்கு மட்டுமான, புதிய காதல் தத்துவம் போல!!

“ரியலி. மாத்த மாட்டேலே?? ”

” ம்கும்”

“அப்போ, அதே ரூல் எனக்கும் அப்பிளே ஆகும்ல” – சட்டம் தெரிந்த காதல் போல!

“அடடா” என்று சொல்லி விட்டு, அடக்கமாட்டாமல் சிரிக்கத் தொடங்கினாள், சயனா.

சிறிது நேரத்திற்குப் பின்

“ப்ளீஸ் புரிஞ்சுக்கோ கூஃபி, நான் சக்தியதான் லவ் பண்றேன்”

“நீ புரிஞ்சுக்கோ ட்டேபீ… ”

“என்ன?? எதை?? ”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சிரிக்கக் கூட முடியல… தெளிவா யோசிக்க முடியல. அப்படி சொன்ன. ஆனா, இப்போ சிரிக்கிற! ரொம்பத் தெளிவா யோசிச்சி பிளான் போட்ருக்க!! அவ்வளவுதான்”

வார்த்தைகளால், அவளை வழிக்கு கொண்டு வரும் வாழ்வியல் கற்றது போல, இந்தக் காதல்!!

“தேங்க்ஸ் அன்ட் ஆலிவ்… ” என்று, அவள் முடிக்கும் முன்னே…

“ஏய்!! சொல்றதா இருந்தா, தமிழ்ல சொல்லு. இல்லன்னா வேண்டாம்”

“ஓகே”

“சொல்லப் போறியா?? ”

“அய்யோ, அது வேற ஓகே”

ஒருமுறை சிரிப்பதே முடியாது என்ற நிலையில் இருந்தவள், மறுமுறையும் சிரித்தாள்.

“இனிமே, உன்கிட்ட பேசுனா, நேர்ல உன் முன்னாடி வந்து நின்னுதான் பேசுவேன். சரியா ட்டேபீ?? ”

“ம்ம்ம்” – காதல் கிரகத்தின், காதல் வருகையின் அறிவிப்பு, கன்னிக்குள் களிப்பை ஏற்படுத்தியது.

“கவுண்ட தே ஹவர்ஸ், ட்டேபீ”

காதல், இதனைச் சொன்ன விதம், அவளது காதிற்கு வெகு அருகில் வந்து ரகசியமாய், சொன்னது போல் இருந்தது.

” பை ட்டேபீ ”

காதல் கிரகம், தன் ஒட்டுமொத்த காதலைத் தூக்கிக்கொண்டு, அவளைச் சந்திக்க வரப்போகிறது.

காய்ந்து போன பூச்செண்டை அணைத்துக்கொண்டு, காதில் சென்ற ‘கவுண்ட் தே டேய்ஸ்’ நினைத்துக் கொண்டாள்.

இறுமிய இதயத்தின், ஒவ்வொரு திசுக்களும் தித்திப்பினை உணர்ந்தது போல இருந்தது.

உறங்க ஆரம்பித்தாள்.

சாவகாசமாக, சாதுரியமாக உத்திகள் அமைப்பது, மிக எளிது.

சங்கடமான சூழ்லில், சமயோசிதமாக புத்தியைப் பயன்படுத்துபவர் மட்டுமே வெற்றி பெறுவார்கள்.

ஏனெனில், இது நியாயத்தை நிலை நாட்ட, அநியாயப் போர்க்களத்தில் நிற்கின்ற நியாயம்.