KVI – 18
KVI – 18
ஒரு மாதத்திற்கு பிறகான காதல் கிரகம்…
உடற் காயங்கள் ஆற்றிக் கொண்டு, மனக் காயங்களை தேற்றுவதற்காக, காதல் மாயங்கள் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் காதலன்!!
காதல் யாசிப்புகள்…
ஒரு மத்தியான வேளையில், காஃபி ஷாப்பில்..
வெளியில் வான் மழை பொழிந்து கொண்டிருந்தது.
ஆவி பறக்கும் காஃபியுடன் பெய்யும் மழையை ரசிக்க வேண்டும். அழகான ரசனை!!
ரேவும் சயனாவும் அந்த ரசனையை வேண்டி காஃபி ஷாப்பில், அமர்ந்து கொண்டிருந்தனர்.
சிப்பந்தி, ஒரு அற்புதமான வேலைப்பாடுகள் அமைந்த தட்டில், காஃபி மற்றும் இனிப்பு வில்லைகள் கொண்ட கிண்ணத்தை வைத்தார்.
‘திரும்பவும் ரியாக்ட் பண்ணவா!!?’ என்று சயனா நினைக்கையில், இதயம் இருமத் தொடங்கியது.
எனினும் சயனா சிப்பந்தியிடம் ஏதோ பேச முற்படுகையில் ..
“வெயிட்டர் நீங்க போங்க. நான் பார்த்துகிறேன்.” – இது காதல் கிரகத்தின் முதல் மனிதன் ‘கூஃபி’, சயனாவின் காதலன், சுருக்கமாக சக்தி.
‘ஐயோ வந்துட்டானா’ – இது தோழி ரேவ் .
‘ஐ வந்துடுட்டானா’ – இது காதலனை மறுப்பவள், வெறுப்பவள், காதல் கிரகத்தின் முதல் மனிதி ‘ட்டேபீ,’, சுருக்கமாக சயனா.
“எதுக்கு சக்தி? அவங்களப் போகச் சொன்ன. எனக்கு சுகர் மிக்ஸ் பண்ணனும்” – வெறுப்பவள் குரலா இது??
“ட்டேபீ, நான் இங்க இருக்கிறப்போ வெயிட்டர் எதுக்கு?”
காதலனின் காதல் அலப்பறைகள் தொடங்கின. சக்திவேல், சயனாவுக்கு காஃபியில் இனிப்பு கலக்கினான்.
“இந்தா, குடிச்சிப் பாரு. அதுக்கப்புறம் இந்த மாதிரி ஷாப் வரமாட்ட.”
“அப்படியா? பார்க்கலாம்”
காதலன் கைகளால் கலக்கிய காதல் காஃபி, காதலி பருக ஆரம்பித்தாள்.
“ஏதாவது சொல்லும்மா?” – கூஃபி.
“சக்தி, இப்பதான குடிக்க ஆரம்பிச்சிருக்கேன். வெயிட் பண்ணு”
எதிரே ரேவ் என்ற ஒரு பிரஜை இருக்கிறது, என்பதை மறந்து விட்டார்கள்.
ஒவ்வொரு முறை பருகும் போது, சயனாவின் பார்வை, சக்தியை முழுங்கிச் சென்றது.
முற்றிலும் பருகியவள், கோப்பையை வைத்து விட்டு, சக்தியை பார்த்து தன் ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி, சக்தியை உலுக்கி எடுத்தாள்.
‘சகியே சயனா, சோதிக்கிறாயடி’ – இது சக்தியின் மனக்குரல்.
“நீதான் சொல்லனும் ட்டேபீ”
“தேங்க்ஸ்”
“காதலனுக்கு தேங்க்ஸ் சொல்லி, காதல் இல்லை என்று நிரூபித்தாள் காதலி.”
மெல்லிய கீற்றாய் புன்னகை ட்டேபீயின் முகத்தில்.
“என்னமோ நீயே காஃபி போட்ட மாதிரி ஸீன் போடற. அந்த வெயிட்டர் தான காஃபி போட்டாரு ”
“ஹலோ… இதுல எவ்ளோ பெரிய விஷயம் இருக்கு தெரியுமா ?”
“என்ன?? என்ன பெரிய விஷயம்?”
“அந்த வெயிட்டர் கொடுத்த காஃபிய அப்படியே குடிச்சா எப்படி இருக்கும்? ”
“கசக்கும் ”
“இப்போ??”
“நீதான சுகர் மிக்ஸ் பண்ண. அப்புறம் எதுக்கு இந்த கேள்வி?”
” எஸ்கேப்பிசம் ”
“ப்ச்.. சொல்ல வந்தத சொல்லு சக்தி” – அவனிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று மன்றாடுகிறவளை என்ன செய்ய முடியும்??
சோஃபாவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தவன், அவளின் அருகே நெருங்கி வந்தான்.
“யாரு, எவ்ளோ கசப்பான விஷயம் உன்கிட்ட கொடுத்தாலும், அத இனிப்பா மாத்திற சக்தி, இந்த சக்திகிட்ட இருக்கு”
சயனாவின் கன்களுக்குள் சென்று, இதைச் சொன்னான் சக்தி.
காதலியின் கண்கள், காதலனை இமைக்காமல் பார்த்தது.
இலவசமான காதல் காட்சிகள் ரேவின் கண்களுக்கு .
“சொல்லு ” – இன்னும் இமைக்க மறுக்கும் சக்தியின் கண்கள்.
“என்ன சொல்ல??” – இமைப்பது என்ற ஒரு செயல் உள்ளது என்பதை மறந்து போன, சயனா.
“பில் நீ கொடுக்கிறியா?? இல்ல நான் கொடுக்கவா?”
இத்தகைய காதல் இம்சைகள் தாங்காமல், இமைகள் இப்பொழுது, இஷ்டத்திற்குத் துடித்துக் கொண்டன.
“சொல்லு ட்டேபீ?”
“ஆர்டர் பண்ண எனக்கு பே பண்ணத் தெரியும். நீ போ ”
“ஒகே,ரிலாக்ஸ். லவ் யு ட்டேபீ” என்று கூறிக் கிளம்பினான்.
சக்தி, தன் கண் பார்வையில் இருந்து மறையும் வரை, தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள், சயனா.
ஒரே ஒரு காதல் ஏக்கம் விதை, ஏக்கர் கணக்கில் சயனாவின் மனதில் விதைக்கப்பட்டது.
பார்வை, எதிரில் இருப்பவளைப் பார்த்தது. இவள் இங்குதான் இருக்கிறாளா? என்ற கேள்வி வந்தது ‘அச்சோ’ என்று இருந்தது சயனாவிற்கு.
சக்தியின் மீதான அர்ச்சனையை ஆரம்பித்தாள், சயனா.
இதழ்கள் திட்டித் தீர்த்தன – ஆனால்
இதயம் என்னவோ தித்தித்தது!!
போடப்பட்ட இனிப்பு வில்லைகளால், காஃபியின் சுவை கூடி, நாவில் தித்திப்பினை ஏற்படுத்தும். இதயம் வரைக்கும் தித்திக்குமா என்ன? அது காதலின் சுவையோ?
காதல் கோபம் …
சிஐடி அலுவலத்தின் அறையில்…
இருக்கையில் அமர்ந்து கொண்டு, பேனாவை வாயில் கடித்துக் கொண்டு, யோசித்துக் கொண்டிருந்தாள் .
அலுவலகக் கட்டத்தின் பார்க்கிங் பகுதியில், ராயலை நிறுத்திவிட்டு, படிகளின் வழியே ஏறி வந்துகொண்டிருந்தான், சக்தி.
அறையில் இருந்த சயனாவிற்கு, இதயம் இரும்ப ஆரம்பித்தது.
அடுத்த நொடி, கதவை திறந்து கொண்டு சக்தி வந்தான்.
“ஹே ட்டேபீ”
‘இவன் எதற்கு இங்கே வந்தான்?’ என்று சயனா நினைத்தாள் .
“இங்க ஏன் வந்த?” – அதைக் கேட்டு விட்டாள் ரேவ்.
“என்னோட லவ்வர பார்க்க வந்தேன்”
“அவ, உன்னய லவ் பண்ணவே இல்ல” – ரேவ்.
‘நீயேன் இப்படி?’ என்பது போல் ஒரு பார்வை பார்த்தான் சக்தி.
“அதை, அவ சொல்லட்டும்” – சக்தி.
“முதல, நம்பர் மாத்து சயனா. அத வச்சித்தான், இவன் உன்னய பாலோவ் பண்றான்”
“நீ, அவளுக்கு இன்ஸ்டெரக்ஸன் கொடுக்காத”
” சக்தி… ” – சயனா.
அமைதியானான் சக்தி.
” நல்லா மிரட்டுவ. அப்புறம் வந்து லவ் பண்ணுவேன்னு சொல்லுவ. அவ எத நம்புவா?” – ரேவ்.
“மிரட்டினாங்களா?? யாரு??”
“ஹே, நடிக்காத. செகன்ட் கொரியர் அனுப்பினேல. அதப் பத்திதான் கேட்கிறேன்”
“அதை அவ கேட்கட்டும். அதோட, அவ பயப்படவேயில்ல”
“சயனா, நீ கேளு” – ரேவ்.
“அவ அன்னைக்கு நைட்டு வந்து பேசிட்டா. அதுக்கு நான் பதிலும் சொல்லியாச்சி. நீ ஒன்னும் கேட்க வேண்டாம். மோர்ஓவர் அது முடிஞ்சி போன விஷயம்”
“அவ மனோனு நினைச்சி, உன்கிட்ட பேசிருப்பா”
“ரேவ், அன்னைக்கே சொன்னேன்ல மனோகர் பேரு வேண்டாம்னு” – சயனா.
இதைச் சொல்லிவிட்டு, சக்தியைப் பார்த்தாள், சயனா. அவனுக்குத் தெரிய வேண்டும், அந்தப் பெயர் தன்னுள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று!!
ஆனால், சயனாவின் அந்தப் பெயர் உச்சரிப்பே, சக்தியின் முகம் மாறப் போதுமானதாய் இருந்தது.
“அப்படின்னா, கொரியருக்கு என்ன அர்த்தம் ” – ரேவ்.
“ச்சே, அது அவளுக்குத் தெரியும் ”
“அப்படியா சயனா??”
“எனக்கெல்லாம் தெரியாது, ரேவ்” – சயனா.
‘நான் சொல்லவா?’ என்பது போல் சக்தி, சயனாவின் இருக்கை நோக்கி நெருங்கி வந்து, குனிந்து நின்றான்.
‘அய்யய்யோ, இவன் ஏன் இங்க வர்றான்’ என சயனா பார்வை.
“சொல்லு சயனா?? உனக்குத் தெரியாதா ?” – முகத்தின் அருகே குரல் ஒலித்தது.
“தெரியாது?” – அருகில் நின்றவனுக்கே சயனாவின் குரல் கேட்கவில்லை.
“கனலை விழுங்கும் இரும்புனா என்னன்னு, நான் வேணா சொல்லவா?? ”
“வேண்டாம் ” என்று சொல்லி, தன் கையிலுள்ள பேனாவால், அவனது தோள்களில் அழுத்தித், தள்ளி நிற்கச் சொன்னாள்.
‘புரியுது’ என்பது போல், அவனும் பின் சென்று நின்றான்.
“சயனா சொல்லச் சொல்லு” – ரேவ்.
“விடு ரேவ்”
“சரி, அதை விடறேன்” – ரேவ்.
‘அப்படி வா வழிக்கு’ என்பது போல் உடற்மொழி, சக்தியிடம்.
“இரு, அன்னைக்கு போஃன்ல சக்தி போட்டோதான் பிடிச்சிருக்குன்னு, உன்கிட்ட சொன்னால??”
“ஆமா”
“அப்பவே நான்தான் சக்தின்னு சொல்லிருக்கலாம்ல ” – சரியான கேள்வி, ரேவிடமிருந்து.
“அது அது அடு…” – தடுமாறினான் சக்தி.
“ஏன் சொல்லல??” – ரேவ்.
‘சகியே சயனா! எப்படிச் சொல்வேனடி, அந்த உணர்வின் வெளிப்பாட்டை! ‘ – இது சக்தி.
“ரேவ், சக்திகிட்டயே போய், எனக்கு உன்னய பிடிக்கல சக்திதான் பிடிச்சிருக்குன்னு சொன்னா? என்ன செய்வான்? சிரிச்சிருப்பான்.”-சயனா.
” அப்படியா?. ” – ரேவ்.
“அதான சக்தி, அன்னைக்கு உடனே போஃன கட் பண்ணச் சொன்ன?? ” – சிஐடி சயனா.
“இல்ல ட்டேபீ. சிரிக்கிற அளவுக்கு சந்தோஷம் இல்ல அது”
‘அப்புறம் எப்படி??’ – இது ரேவ், சயனா பார்வைகள்.
“ஜஸ்ட், ஒரு குத்துப் பாட்டுக்கு டான்ஸ், நீ சொன்னத நினைச்சி… ”
விருவிருவென எழுந்து, அவன் அருகில் வந்தாள் சயனா.
“போதும் நிறுத்து சக்தி”
“இல்ல ட்டேபீ” – நன்றாகவே சிரித்தான், சக்தி.
” நீ திருந்தவே மாட்டியா??” – சயனா.
காதலைத் திருந்தச் சொல்வதில் நியாயமே இல்லை சயனா!!
“வெளிய போயிரு சக்தி. இதுக்கு மேல இங்க நிக்காத” என்று அவனைப் பிடித்து வெளியே தள்ள யத்தனித்தாள், சயனா.
” ஐ லவ் யூ ட்டேபீ ”
“பட், ஐ லைக் யூதான்” என்று வலுக்கட்டாயமாக அவனை வெளியே தள்ளிவிட்டாள்.
“சயனா ” – ரேவ்.
“ரேவ் , நீயும் போ ” – சயனா.
ரேவ் வெளியே சென்றுவிட்டாள்.
கதவை மூடிய சயனா, அதில் சாய்ந்து கொண்டு, சக்தி சொன்னதை நினைத்துச் சிரிக்கத் தொடங்கினாள்.
வெளியே….
“இப்ப உனக்கு சந்தோஷமா?” – ரேவ்.
“என்ன சந்தோஷமா?” – சக்தி.
“அவ எப்படி பீல் பண்றா பாரு??”
“ஏய்!! அவ சிரிச்சிக்கிட்டு இருப்பா. நீ வேற ”
அப்போது கனகா மேம் வந்தார் .
“நீ இங்க என்ன பண்ற ?” – மேம்.
“குட் மார்னிங் மேம். சயனாவ பார்க்க வந்தேன் ?” – சக்தி.
“மேம், இங்க வரக்கூடாதுன்னு சொல்லுங்க. எல்லா பிரச்சனைக்கும் இவன்தான் காரணம் ” – ரேவ்.
“யாரு நானா?? நீதான் காரணம் ” – சக்தி.
” நானா?? நான் என்ன செஞ்சேன்” – ரேவ்.
“அவ ரெண்டு நாள்ல, நான்தான் பேசிறேன்னு கண்டுபிடிச்சிருப்பா. நீதான் வேற பேரச் சொல்லிச் சொல்லி, அவளைக் குழப்பியிருக்க” – சக்தி.
“ஓ… ஆன… ” – ரேவ்.
“போதும் ரேவ் ” – மேம்.
கனகா மேம், சக்தியைப் பார்த்து…
“சக்தி, இனிமே இங்களெல்லாம் வராதீங்க. அது தப்பு. நான் அலோவ் பண்ண மாட்டேன். எதுனாலும் ஆபிஸ் வெளிய பார்த்துக்கோங்க”
“ஸாரி மேம். ஹேவ் எ நைஸ் டே மேம்” என்று இரண்டிரண்டு படிகளாகத் தாவிச் சென்றுவிட்டான், சக்திவேல்.
“ரேவ், நீ கொஞ்ச நாள் சயானக்கூட சுத்தறத நிறுத்து”
“ஏன்?? ”
“அப்பத்தான், அவ மனோகர் அப்படிங்கிற பேர மறப்பா ”
” ப்ச், போங்க மேம்”
“நாம ரெண்டு பேர் மட்டும்தான், அந்தப் பேரச் சொல்லிருக்கோம். அதான் சொல்றேன் ”
“மேம், சக்திய சயனாவுக்கு பிடிக்கல ”
“அத அவ சொல்லட்டும். இவ்ளோ அவன் பேசிறத கேட்டுக்கிட்டு சும்மா தான இருக்கா. ஸோ அவளுக்கு அவனைப் பிடிச்சிருக்கு ”
” ப்ச் ”
“இப்போ இல்ல. அவன் போஃன்ல பேசறப்பவே. ”
“??? ”
“நீ, கொஞ்சம் அவளை யோசிக்க விடு ”
“புரியுதா ரேவ்? இதுவும் அவளுக்காகத்தான் ”
“சரி மேம். ஆனா அவனைப் பார்த்தாலே கோபம் வருது. சயனாவ ஏமாத்திட்டான்னு”
“இல்லடா. அவன் சயனா மேல நிறைய அன்பு வச்சிருக்கான்”
“க்கும், பார்க்கலாம் மேம், சயனா மேல பாசம் வச்சிருக்கிறது நானா? அவனானு??”
இது, காதல் கிரகத்தின் தலை தீபாவளி அன்று, சிறப்பு பட்டிமன்ற தலைப்புக்கு உதவும்!!
சிரித்துக் கொண்டே, ரேவை அறைக்குள் அழைத்துச் சென்றார்.
காதல் விளையாட்டு
நல்ல ஏறுவெயில் வேளையில், சயனா அலுவலக விடயமாக வெளியே வந்திருந்தாள்.
அந்தக் கட்டிடத்தில் கீழ் பகுதியில் பார்க்கிங் வசதியில்லை. மரத்தடியில் பார்க் செய்யப் பார்த்தாள். அங்கும் இடமில்லை.
யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளது இதயம்…
இல்லை!
இப்பொழுதெல்லாம் இவள் இதயம் இருமிக்கொண்டே இருக்கிறது.
ஆதலால் இந்த வாக்கியம், இப்பொழுதெல்லாம் முக்கியத்துவம் இழக்கிறது.
“ஹாய் ட்டேபீ”
‘ஐ வந்திட்டியா !!!’ என்பது போல் பார்வை சயனாவிடம் .
“என்ன ப்ரோப்ளேம் ?”
“பார்க்கிங் செய்ய பிளேஸ் இல்லை”
மரத்தின் நிழலில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த, வண்டிகளின் அருகே சென்றான்.
அதில் இடைச்சொருகலாக இருக்கும் தனது வண்டியை எடுத்தான் .
‘இங்க பார்க் பண்ணு’ என்று கை கட்டினான் .
சயனாவும் பெரிதாக முரண்டு பிடிக்கவில்லை. அதில் ராயலை நிறுத்தனாள்.
சற்றும் சக்தியை சட்டை செய்யாமல், கட்டிடத்தின் உள்ளே சென்றாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு…
வேலை முடிந்ததும், சயனா வெளியே வந்தாள். தன் வண்டியை எடுத்தாள். ராயலை உறுமச் செய்யும் முன் சக்தியை திரும்பி பார்த்தாள்.
அவனும், அவளின் பார்வையின் அழைப்பை புரிந்து அருகில் வந்தான்.
“வேற வேலை இல்லையா?” – ட்டேபீ.
“இல்லை ட்டேபீ” – கூஃபி.
உடனே தன் வாலட் எடுத்து, ஒரு பத்து ரூபாய் தாளை உருவி அவனிடம் நீட்டினாள்.
“ஹே ட்டேபீ, இது என்ன?”
“பைக் டோக்கன் போட்டேல கூஃபி. அதுக்குத்தான்” – காதலனுடன் காதல் விளையாட்டு.
“ஓ! வேலைவாய்ப்பு”
“ய்யா.. ய்யா” என்று சொல்லிக் கொண்டே என்பீல்ட் மேல் ஏறினாள்.
“சக்தி”
“ம்ம்ம், சொல்லு”
“சக்தி, நான் உன்னய கன்சிடர் பண்ணப்போறதில்லை. அப்புறம் எதுக்கு இப்படி ”
“நீ, கன்சிடர் பண்ணுவ ட்டேபீ”
“நான் இல்லன்னு சொன்னா, நீதான் கவலப்படுவ சக்தி ”
“நான் கவலப்படலன்னு தெரிஞ்சா, நீதான் கஷ்டப்படுவ”
ஒருகணம் சயனா முகம், காதல் வலி உணர்த்தியது. அதை சக்தியின் கண்கள் உணர்ந்து கொண்டது.
அவளது நெற்றியில் இருந்த சன் கிளாஸை,ஒற்றை விரலால் கண் வரை இறக்கிவிட்டான்.
சயனாவின் மனதின் திரைக்குப் பின் இருக்கின்ற காதல், கண் பாவையில் தெரிந்தது! சக்தியின் செயலுக்கான காரணம், இதுவே!
“உன் கண்ல காதல் தெரியுது ட்டேபீ”
புன்னகை மறைத்தவாறே, சக்தியைப் பார்த்தாள். பின் இலக்கை மாற்றி, வேறு திசை நோக்கினாள்.
அது, அவனைக் கடந்து சென்று பார்வை அல்ல! கடத்திச் சென்ற பார்வை!!
சயனாவின் இதயம் – சக்தியின் காதல் முகவரி.
“பை!! கிளம்புறேன்” – ட்டேபீ.
“ம்ம்ம், ஐ கிஸ் யூ ட்டேபீ” – கூஃபி.
“என்ன? இன்னைக்கு ‘ஐ லவ் யூ’ சொல்லல” – காதல் ஓட்டை.
“அதான், நீ சொல்லிட்டல ட்டேபீ” – காதல் சேட்டை.
“அய்யோஓஓஓ” – காதல் பிழை.
“இருந்தாலும்,என்னோட ட்டேபீ கேட்டு சொல்லாம இருப்பேனா? லவ் யூ லவ் யூ, லவ் யூ, ட்டேபீ. பை” – காதல் மழை.
காதல் கிரகத்தில் நாளுக்கு நாள், காதல் மழைப் பொழிவின் அளவு, மில்லி மீட்டரலிருந்து சென்ட்டி மீட்டர் ஆகிறதோ??
காதல் பயணங்கள்
ஆதவனின் அட்டூழியம் அதிகமான வேளையில், சயனா தன் ராயலில் வந்து கொண்டிருந்தாள்.
யாரோ பயண உதவி கேட்டு கை காட்டி நின்றது தெரிந்தது??
யாரோ என்ன? யாரோ? சக்திதான். அவன் நின்ற இடத்தில, என்பீல்ட் நிறுத்தப்பட்டது.
தலைக்கவசத்தை கழட்டினாள் .
“சொல்லு, எதுக்காக நிறுத்தின? ”
“லிப்ட் வேணும் ட்டேபீ ”
“முடியாது”
“லவ்வுக்குதான் நோ சொல்றேன்னு பார்த்தா, லிப்ட்க்குமா?? ”
அதானே! – இது வெயிலின் குரல்.
“உன் என்பீல்ட் என்னாச்சி?? ”
“மறந்திட்டேன் ட்டேபீ. இவ்வளவு தூரம் வந்தப்புறம்தான் நியாபகம் வருது, பைக் எடுத்திட்டு வரலன்னு”
நியாயமான மறதி! – இது வெயிலின் குரல்.
“அச்சச்சோ, ஸோ ஸேட். இப்ப என்ன பண்ணுவ? ”
“அதான் ட்டேபீ, லிப்ட் கொடு ”
“நோ …”
“வொய் ”
“நான் லிப்ட் கொடுத்தா, அதுல நீ அட்வான்ட்டேஜ் எடுத்துக்குவ”
“அட்வான்ட்டேஜ்.. அப்படின்னா?” – இது, காதல் கிரகங்கள் தாண்டிய நடிப்பு!!
“அப்படின்னா? உனக்குத் தெரியாத”
“மக்கும்… தெரியாதே ட்டேபீ. ”
“நான் சொல்லவா?”
“தெரியாதத தெரிஞ்சிக்கலாமே ட்டேபீ. நீ சொல்லு ”
“பைக்ல போறப்ப காதுக்குள்ள வந்து ரகசியமா பேசறது ..”
“அய்யயோ ”
“அப்படியே தோள்ல கை போடறது”
“நோ.. நோ… ஐ அம் நாட் தேட் கைன்ட் ஆப் பெர்ஸன்”
“சில சில சீண்டல்கள், அதனால் பல பல பக்கவிளைவுகள்”
சக்தியின் தலையாட்டலும், ஆள்காட்டி விரலும் இல்லை என்று சொன்னது.
“நீ, அப்படியெல்லாம் பண்ணுவ சக்தி. அதான் வேண்டாம்னு சொல்றேன்”
“ச்ச்சே ச்ச்சே. நான் அப்படியெல்லாம் பண்ணவே மாட்டேன்”
“இப்போ சொல்லுவ சக்தி. பட் போறப்போ மாறிடுவ ” – இது கொஞ்சும் குரல்.
“இப்ப என்ன பண்ண ட்டேபீ? லிப்ட் வேணுமே ” – இது கெஞ்சும் குரல்.
“என்கிட்டே, ஒரு ஐடியா இருக்கு கூஃபி ” – ஏதோ வில்லங்கம்!
“கம் ஆன்… சொல்லு.. ”
“பேசாமா? நீ பைக் ஓட்டு.”
“அடடே!! ”
“நான் பின்னாடி உட்கார்ந்து வரேன்.” – இது வில்லங்கம் அல்ல, விருப்பம்.
“வாவ்!! வாட் அன் ஐடியா?? சான்ஸே இல்ல, சயனா ”
என்பீல்டு கை மாறியது.
என்பீல்ட் என்னவனின் கையில்…
என்னவன் முதுகின் சுவரில் சாய்ந்து கொண்டு நான்!! – இது சயனாவின் மனக்குரல்.
இது சயனாவா?? என்ற கேள்வி காதலுக்கு வருகிறது.
‘இது என் வண்டி. நான்தான் ஓட்டுவேன்.’ – காதல் கிரகத்தின், இந்தச் சட்டம் என்னவானது?
காதல் கிரகத்தின் சட்ட திட்டங்கள் மீறப்படுகின்றன. மிகக் கடுமையான தண்டனைகள் தந்தால் மட்டுமே, சட்ட ஒழுங்கு நிலை நாட்டப்படும்.
ஆதலால், காதல் பீனல் கோர்ட், பிரிவு எண் 143 சட்டத்தின் கீழ், இதற்கு தண்டனையாக ஒரு தொலைதூரக் காதல் பயணம்!!!
காதலன் ‘அட்வான்டேஜ்’ எடுக்க கூடாது, காதலி எடுக்கலாம். சயனா எடுத்துக்கொண்டாள்.
தலைநகரின் முக்கிய சாலைகளில் எல்லாம் தாறுமாறாய் காதல் வண்டி பயணித்தது.
சில நேரம் காற்றைக் கிழித்துப் பின்புறம் சாய்ந்தாள், சயனா. பல நேரங்களில், முன்புறம் அமர்ந்து இருந்தவனிடம் சரணடைந்தாள்.
காதலி குறும்பில், காதல் பயணம் செய்திடும் காதலன் நிலை…
Daring daring oh my dabie
Daring daring oh my dabie
அட அட அட அடுக்கும் குறும்பில்…
தக தக தக எரிக்கும் வெயிலில் …
பட பட பட பொழியும் அன்பில்…
ஓகே என் ட்டேபீயின் பிடியில்….
Daring daring oh my dabie
Caring caring your goofy
Daring daring oh my dabie
காதல் கிரக ஏவாள் நீயா…
காதல் கேட்கும் ஆதாம் நானா…
Daring daring my dabie…
நீயும் நானும் காதல் புயலா…
சொல்லாத காதலை…
சொல்லிடும் ஆவலை…
செல்லாதே ஏந்திழை…
செல்லமாய் என் பிழை…
கைப்பேசி கொஞ்சல்கள்…
கண்முன்னே கெஞ்சல்கள்…
காண்பாயோ கொஞ்சமே…
அக்கக்காய் என் நெஞ்சம்…
அட அட அட அடுக்கும் குறும்பில்…
தக தக தக எரிக்கும் வெயிலில் …
பட பட பட பொழியும் அன்பில்…
ஓகே என் ட்டேபீயின் பிடியில்….
ஒரு தரமான Romantic Ride. – இதுவும் வெயிலின் குரல்.
ஆங்கில வழிக் காதல்
இரவு நிலவு உலவ வந்து, உலகை ரசித்து உற்று நோக்கிய பொழுதில் …
என்பீல்டில் ஏகாந்தமாய் காதலி …
திரும்பவும் நிறுத்தப்பட்டது…
காதலன்தான்…
நிறுத்தினாள் காதலி..
“என்ன சக்தி வேணும்? பைக் ஓட்டவே விடமாட்டிக்க.”
மந்தகாசமாகப் புன்னகைத்தான்.
“இன்னைக்கும் லிப்ட் வேணுமா சக்தி?”
மறுப்பாக தலையசைத்தான் .
“அப்புறம் என்ன வேணும் சக்தி? – ஒரே சக்தி புராணம்.
“இறங்கி வா, சொல்றேன்”
இறங்கினாள். தன் ராயலை, அவனது ராயல் நிற்கும் இடத்திற்கு அருகே நிறுத்தினாள்.
அவனுடன் நடந்தாள்.
“சொல்லு சக்தி?”
“சர்ப்ரைஸ்”
காதலனின் அந்தக் காதலைப் பார்த்த பொழுது…
காதலிக்காக பிறந்தநாள் கொண்டாட்டம்…
மஞ்சள் விளக்கொளி இரவில் …
இடைஞ்சல் செய்ய ஆளில்லா தனிமையில்…
சாலையின் நடுவே நட்டு வைக்கப்பட்ட மேஜையில் …
சோலைப் பூவாய் ஒரு சின்ன கேக்…
பூவுக்குள் பூவாய் பூத்திருந்த ஒரு மெழுகுவர்த்தி…
மெலிகின் சுடர் வெறும் சுடரல்ல, அது காதலின் சுடர்…
மறுவார்த்தை பேச விரும்பா காதல் அதிர்ச்சியில்…
சயனா சக்திவேல்…
அவள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தாள். உறைந்து போனவளை உருக வைக்க, அவள் தோளில், ஒரு தொடுகை…
“என்ன இதெல்லாம்?” – ட்டேபீ.
“ஏன் உனக்கு தெரியலையா?”
“தெரியுது, பட் பர்த்டே முடிஞ்சிருச்ல ”
“ய்யா. பட், செலிப்ரேஷன் முடியல”
மலை போல் மறைத்து நிற்கும் காதலை, தாண்டிச் செல்வதெல்லாம் முடியுமா?? என்று மலைத்துப் போய் நிற்கின்றாள்.
“கட் பண்ணு ட்டேபீ”
காதல் ஆரோரோக்கள் பின்னிசையா இசைத்திட …
வெட்டப்பட்டது கேக் மட்டுமல்ல, காதல் கிரகத்தின் அடைக்கப்பட்ட ‘கேட்டும்’…
தன் ஒற்றை விரலால், கேக் எடுத்து சயனா கன்னத்தில், மெல்லிய கீற்றாய் கோடு போட்டான். அதை சற்றும் எதிர் பார்க்கத்தவள்…
“எனக்கு இதெல்லாம் பிடிக்காது சக்தி” என்றாள்.
சொல்லிய சொல்லோடு நிற்காமல், சக்தியின் சட்டையின் கைப்பகுதியில் கன்னத்தை உரசி, துடைத்துக் கொண்டாள் .
இதை சற்றும் எதிர் பார்க்கவில்லை, சக்திவேல். கஞ்சமில்லா காதல் அவன் கண்களில்…
கேக் எடுத்து சயனா வாய் அருகில் கொண்டு சென்றான், சக்தி.
மனம் மன்றாடியது, மறுத்துவிடாதே சகியே என்று!!
சயனா, நன்றாக வாய்திறந்து, சக்தி ஊட்டியதை உட்கொண்டாள் .
“ம்ம்ம். டேஸ்டா இருக்கு சக்தி ”
மற்றுமொருமுறை வாய் திறந்து நின்றாள்.
காதலால் அதிர்ச்சி கொடுக்க நினைத்தவனுக்கு, காதலின் ஆச்சிரியங்களைக் காட்டிக்கொண்டு இருந்தாள் .
“கொடு சக்தி”
“????”
“என்ன? ஏதாவது தப்பா கேட்டேனா?”
“!!!!”
“என்னாச்சி சக்தி?”
“இல்ல சயனா. ஜஸ்ட் பார்மாலிட்டிக்கு ஒருவாய் கொடுப்பாங்க. பட், நீ அகேயின்…”
“நீ எனக்காக வாங்கிருக்க. எதுக்கு ஒரு வாய் மட்டும்னு நினைச்சேன். அதான் சக்தி… தப்பா.. ”
“ஹே ட்டேபீ!! எல்லாமே உனக்குத்தான். வெயிட் பண்ணு ”
மேஜையை சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்து வைத்துவிட்டு, அதிலிருந்த கேக் எடுத்து,
பாதசாரிகள் நடைமேடையில் அமர்ந்து கொண்டான் . அவளையும் அருகில் வந்து அமரச் சொன்னான்.
அவனுடன் அமர்ந்த அருகாண்மையே உணர்த்தியது, அவளின் பெரும்பான்மையான காதலை!!.
நிலவொளியில் காதல் ஊட்டலால்..
‘நாம்’ என்ற சிறைக்குள் அடைபட்ட கைதிகளாய அவனும் அவளும்…
ஒவ்வொரு ஊட்டலுக்கும் சயனா நாவின் சுவை சுரப்பிகள் செய்கின்ற நடவடிகையில், சக்தியின் காதல் சுரப்பிகள் நர்த்தனம் ஆடின…
“இது மாதிரி கேக் கட் பண்ணி, நான் பர்த்டே செலிப்ரேட் பண்ணதே இல்ல சக்தி”
“ஏன்? வேற எப்படி பண்ணுவ?? ”
“ஒன்னும் பண்ண மாட்டேன். ரேவ் விஷ் பண்ணுவா. அவ்ளோதான். ”
“அதான் ஏன்?”
“பேபியா இருக்கிறப்ப, எனக்கும் கேக் கட் பண்ணனும்னு தோணும் சக்தி”
“சைல்டுகுட் மெமோரிஸ் ”
“ப்ச். காசு கிடையாது. டுவெண்ட்டி த்ரீ ஏஜ் வரைக்கும், வீட்ல கஷ்டம்தான் சக்தி ”
சிறிது நொடிகள், சக்தி செய்த தலை கோதல்கள், பிற்கால பிறந்தநாள் பிரியங்களை தெரியப் படுத்தியது, சயனாவிற்கு!!
“வீட்டு வேல பார்த்து, எவ்ளோதான் முடியும்னு சொல்லு ”
“ம்ம்ம் ” என்று சொல்லி கேக்கை ஊட்டினான்.
“இப்போதான் இந்த பைக், வீடு எல்லாம் வாங்கினேன். பைக் ஈஎம்ஐ முடிஞ்சிருச்சி. வீட்டுக்கு, இன்னும் போய்கிட்டிருக்கு ”
காதல் முழுமை அடைவது, அன்பு வார்த்தைகளைப் பறிமாறிக் கொள்வது மட்டுமில்லை! அகத்தின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவதும்தான்!!
“பட், இப்போ கேக் வாங்க காசு இருக்கு. அத கொண்டாட மனசுதான் பேபியா இல்ல”
“என்னோட ட்டேபீ, எனக்கு எப்பவுமே பேபிதான்” – பிசிறடித்த குரலால் தன் பிரியத்தை உணர்த்தினான்.
“இந்த பர்த்டேக்குத்தான் உன்னய பார்க்க ஆசைப்பட்… ” – நிராசை தந்த தடங்கலால் குரல் நின்றது.
பெரிய பெரிய அளவுகளில் கேக்கை ஊட்டினான்…
“பேச விடு சக்தி ”
“சாப்பிடறப்போ பேசக்கூடாது ”
நீ, கவலை என்று காகிதத்தில் எழுதித் தந்தாலே தாங்கமாட்டான். கண்முன்னே காட்டினாள், எப்படித் தாங்கிக் கொள்வான், சயனா!!
காதல் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டது.
“போதும் சக்தி. கிளம்பலாம்”
“ம்ம்ம்”
இருவரும் எழுந்து கொண்டு அவரவர் ராயலில் ஏறினார்கள். கிளம்புவதற்கு முன்பு, பளபளக்கும் தாளினால் சுற்றப்பட்ட பரிசு ஒன்றை தந்தான்.
மறுக்காமல் வாங்கிக் கொண்டாள்.
செல்லும் முன்…
“ஐ லவ் யூ, சயனா சக்திவேல்”
“ஆலிவ் கூஃபி ”
“தேங்க்ஸ்”
“லவ்ல தேங்க்ஸ் சொல்லக்கூடாது”
செல்லமாய், சயனா உச்சந்தலையில் குட்டினான், சக்தி.
அழகாய் இருந்தது!
காதல் ஊடல்கள்
அன்றைய தினம் சயனா காப்பகம் வந்திருந்தாள்.
வரவேற்பறையில் நுழைந்தவள், உரிமையாளரைத் தேடினாள் .
“ஹே சயனா, என்ன இங்க வந்திருக்க” – உரிமையாளர் சந்திரா.
“சும்மாதான் ”
“இன்னைக்கு எங்க டைரக்டர், இங்கதான் இருக்காரு தெரியுமா??”
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்க டைரக்டர்தான், என்னய இங்க வரச்சொன்னாரு ”
அவர் சிரித்தார்.
“சரி வா, கனலி பார்க்கப் போலாம்”
“இல்ல, நான் வரல ”
“அட, சும்மா வா”
“??!”
“இப்பெல்லாம் சக்தி, உன்னய பத்தி மட்டும்தான் பேசறான்”
“ஓ, இப்போ கனலினி ஆன்ட்டி எப்படி இருக்காங்க? ”
“ம்ம்ம், பரவாயில்லை.. ”
கனலினி அறையில்…
அன்று பார்த்த அதே நிலைதான். பெரிய மாற்றம் ஏதும் இல்லை. அங்கே என்ன பேசவென்று தெரியவில்லை. எனவே …
“சக்தி எங்க?” என்று கேட்டாள்.
“ஓ , சக்தி கூட மட்டும்தான் பேசுவிய ”
“நாட் லைக் தேட் ஆன்ட்டி”
அதற்குள் ஒரு ட்ரேயில், கோப்பை கிண்ணம் சகிதமாக நுழைந்தான், சக்தி.
“ஹாய் சயனா”
“எங்க போன, சக்தி?? எதுக்கு கூப்பிட?” – சயனா.
“வெயிட் ” என்றவன் அருகே இருந்த இடத்தில் அந்த ட்ரேயை வைத்தான். அதிலிருந்த காஃபி கோப்பையை எடுத்து சயனாவிடம் கொடுத்தான்.
பின் சக்தி, ஒரு கிண்ணத்தில் இருந்த உணவை எடுத்து, தன் அண்ணைக்கு கொடுக்க ஆரம்பித்தான்.
அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் சயனா. கடைசியாக, தன் அண்ணைக்கு கஞ்சி கொடுத்த நியாபகம் வந்தது.
“குடிக்கலயா சயனா?” – சக்தி.
“நான் வேணா கொடுக்கவா? பவுல் என்கிட்ட கொடுக்கிறியா?? ”
“வேண்டாம் ” – அவர் வாங்கவில்லை என்றால், அவள் மனம் கலங்கும் என்று நினைத்துச் சொன்னான்.
“எனக்கு ஒன்னும் ப்ரோப்ளேம் இல்ல, கொடு சக்தி”
“அவங்க, என்னயத் தவிர, வேற யார் கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க ” – உண்மை பேசினான்.
“ஆமா சயனா… கனலி, சக்தி கொடுத்தா மட்டும்தான் சாப்பிடுவா ” – சந்திரா ஆன்ட்டி.
” ம்ம்ம் ”
“நம்ம கொடுத்தா வாங்க மாட்டா. சரி நீங்க பேசுங்க, நான் வரேன் ” என்று சொல்லி வெளியே சென்றுவிட்டார்.
“எவ்வளவு நேரம் ஆகும் சக்தி” – அவளது மனம், அவளின் தாய்க்காக ஏங்க ஆரம்பித்தது.
“கொஞ்ச நேரம்தான் சயனா, வெயிட் பண்ணு”
“எதுக்கு என்னய வரச் சொன்ன??”
“வெளிய எங்கயாவது போலாம். அதான் வரச் சொன்னேன். வெயிட் பண்ணு” – அவளுடன் நேரம் செலவிட எண்ணும், அவனின் நேயங்கள்.
“ஓ! பட், வெயிட் பண்ண முடியாது, சக்தி. நான் கிளம்புறேன்” – அந்தக் காத்திருப்பு, தான் கடந்து வந்த கவலையை நியாபகப் படுத்துவதால், சொல்லப்பட்டது.
“ஏன்?”
“தெரியல. பட் ஐ கான்ட் வெயிட்”
“அதான் ஏன்னு கேட்டேன்.? ”
சக்தி, செய்கின்ற பணிவிடையை முடிக்கும் நிலையில் இருந்தான்.
“இந்த அட்மாஸ்பியர் பிடிக்கல” – தாயின் நினைவுத் தூண்டுவதால் வந்த வாக்கியம், சயனாவிடமிருந்து.
“எக்ஸ்க்யூஸ் மீ, கம் அகேயின் ” – தன் தாயின் நிலையைக் கண்டு, சொல்கிறாள் என்று நினைத்ததால், வந்த வாக்கியம்.
என்ன சொன்னோம், எதற்காக இந்த வார்த்தை பிரயோகம் என்று தெரியாமல் குழம்பினாள்.
தன் தாயாரின் தேவைகளை, முடித்து விட்டிருந்தான், சக்தி.
“ஒரு நிமிஷம். வெளிய வா” – சக்தி.
‘என்னாச்சி இவனுக்கு’ என்று யோசித்தபடியே அறையை விட்டு வெளியே வந்தாள்.
இருவரும் காப்பகத்தின் வெளிப்புறப் பகுதியில்…
“ஏன் அப்படி சொன்ன? முதல ஸாரி கேளு சயனா”
“ஸாரியா? எதுக்கு சக்தி?”
“நீ பேசினது, சரியில்லை. ஏதோ ஒரு மாதிரி இருக்கு” – குரலில் கடினம் தெரிந்தது.
“பட், ஐ டோன்ட் பீல் ஸோ”
“ஸாரி கேளு சயனா ”
“சக்தி, லவ்ல யாராவது ஸாரி கேட்பாங்களா? ” – அவனின் கடினத் தன்மையை எளிதாக்க முயன்றாள்.
“பரவால்ல கேளு”
“அப்புறம், அது லவ்வேயில்ல சக்தி ”
“இட்ஸ் ஓகே, கேளு”
” ஸாரி நீ கேட்டயா? நீ பண்ண தப்புக்கு?”
“ஸாரி சயனா. ரொம்ப ஸாரி. நான் பண்ணது தப்புதான். போதுமா ”
எதுவும் சொல்லாமல் சென்றவள், என்பீல்டை ஓட்டிக் கொண்டு வந்து, அவன் அருகில் நின்றாள்.
“என்ன பண்ணேனு தெரியல? பட், நீ கேட்கச் சொல்ற. ஸோ… ஸாரி சக்திவேல். ”
“சயனா… ” – தன் முழுப் பெயர் உச்சரிப்பில், முற்றிலும் உடைந்தான்.
அவள் ஏற்கனவே உடைந்து விட்டாள்.
“இல்ல சயனா… நீ அங்க… ”
“இப்போ இதச் சொல்லலாமான்னு தெரியல, பட் இப்பெல்லாம் இதச் சொல்லனும்னு தோணுது ”
“ட்டேபீ ”
“ஐ லவ் யூ சக்தி” என்று சொல்லி தனது இரு கைகளையும், இதழ்களில் வைத்து சக்தியை நோக்கி நீட்டினாள்.
அத்தனை அருகில் கொடுக்கப்பட்ட முத்தம். அன்றைய, அவனின் தூரத்து முத்தம், அவளுக்கு எப்படி வலித்திருக்கும் என்று உணரச் செய்தது.
போய்விட்டாள் சயனா…
போதவில்லை சக்திக்கு…
அழகான காதல் காட்சிகளில், ‘அன்வான்டடாய்’ எதற்கிந்த ஊடல்!!
காதலின் கடைசி சந்திப்பு
அடுத்த நாள்…
இருக்கின்ற அனைத்து உடற்பயிற்சி உபகரணங்களில் எல்லாம், அன்று உடற்பயிற்சி செய்தாள், சயனா.
அழைப்பு மணி ஓசை. அசதியுடன் சென்று திறந்தாள் .
சக்திதான்.
பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.
“குட் மார்னிங் ட்டேபீ”
“….. ”
“கொஞ்ச நேரம் பேசலாமே, ட்டேபீ”
“…..”
“ப்ளீஸ் ட்டேபீ, அதுக்கப்புறம் ஒன்னய டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ”
‘அப்படியா’ என்பது போல் பார்த்தால்.
“நிச்சயமா ட்டேபீ ”
“…..”
“இதுதான் நம்ம கடைசி சந்திப்பு”
“நம்பலாமா?” – இவனை நம்பாதே என்றது சிஐடி மூளை.
“கண்டிப்பா நம்பலாம்”
“அப்புறமா, பின்னாடி வரக்கூடாது”
“அப்கோர்ஸ், வர மாட்டேன் ட்டேபீ”
” ம்ம்ம் ” – இவனை நம்பியது, சிக்கிய மனது.
“கஞ்சி வித் கடைசி சந்திப்பு! ஓகேவா”
“இது என்ன ? புதுசா இருக்கு ”
“என்ன ட்டேபீ புதுசு?”
“எல்லாரும் காஃபி வித்ன்னுதான சொல்லுவாங்க. அதான்… ”
“உனக்கு எது செய்யத் தெரியுமோ அதைத்தான் சொல்ல முடியும். ” – காதலின் குழைவு.
“ஓ! ஓகே ”
“ஓகேவா.. அப்ப வழிவிடு ” – காதலின் நுழைவு.
காதல் கிரகத்தின் மொத்தக் காதலையும் தூக்கி கொண்டு, காதலன், காதலியின் ஊடலை உதறித் தள்ள உள்ளே நுழைந்தான்.
ட்டேபீ அன்ட் கூஃபியின் ‘கஞ்சி வித் கடைசி சந்திப்பு’ அட் காதல் கிரகத்தில்!!
‘கெட்ட பய சார்’, இந்தக் காதல்.