KVI-9

KVI-9

கனலை விழுங்கும் இரும்பு – 9

சயனாவின் தனி அறைக்குள், ரேவ் மற்றும் ‘கனகா மேம்’ நுழைந்தனர். அவர்களது வரவு, சயனாவிற்கும், அவள் காதலுக்கும் இடைஞ்சலாக இருந்தது.

அவளுக்குத் தெரியும், அவர்கள் ஏதேனும் உபதேசம் ஓதவே வந்திருப்பார்கள் என்று!

“நான்.. நான்.. கிளம்புறேன் மேம்” என்று வெளியே செல்ல எழுந்தாள்.

கடகடவென வெளியே செல்லப் போன சயனாவை, கைப்பிடித்து நிறுத்தினாள் ரேவ். திரும்பி நின்று பார்த்த சயனாவின் முகம், அத்தனைக் கடுப்பை வெளிப்படுத்தியது.

“என்ன?” – முகம் கடினம் காட்டியது.

“உக்காரு சயனா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” – ரேவால், சயனாவிடம் கடினம் காட்ட இயலாது.

“கைய விடு. நாளைக்கு பேசலாம். ஐ அம் நாட் இன் குட் மூட்”

“இப்பவே பேசனும். உட்காரு” – ரேவ் அடம்பிடித்தாள்.

“ரேவ், அவ கைய விடு. சயனா, வந்து உட்காருடா. நான் உன்கூட பேசனும்” – கனகா மேம்.

இதை எதிர்பார்க்கவில்லை, சயனா.
எனவே , வந்து அமர்ந்தாள்.

“சயனா, சக்திவேலைப் பத்தின டீடெயில்ஸ்ஸ, அமைச்சர்கிட்ட ஏன்டா சொல்ல வேண்டாம்னு சொல்ற?? காரணம் கரெக்டா சொல்லுடா” – அவள் மூளையைச் சலவை செய்யப் போகிறார்.

சயனாவிற்கு, அவர்கள் இருவரும், ஏதோ பெரிய திட்டத்தோடு வந்திருக்கிறார்கள், என்று புரிந்தது.

“ஏன்னா?? இவ சக்திவேல லவ் பண்றா. அதான் இப்படியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா. ” – தோழி பற்றிய தெளிவான புரிதல்.

“ரேவ், சும்மா இரு. நீ சொல்லுடா” – கனகா மேம்.

“மேம்… நான்.. நான்.. யாரையும் லவ் பண்ணல” – யாரை ஏமாற்றுகிறாள் இவள்? தன்னையா??

“இதை, எங்கள நம்பச் சொல்றியா?? ” – ரேவ். புரிந்தவர்களை ஏமாற்றுவது கடினம்.

“ஏன்? உனக்கு இதுல, என்ன நம்ப முடியல? ” – காதல் கொண்ட மனம், அனைவரையும் கடிந்து கொள்கிறது.

“அவன லவ் பண்ணலன்னா? அவன் போட்டோ உனக்கு எதுக்கு? பர்ஸ்ட் மொபைலிலருந்து டெலிட் பண்ணு”

“முடியாது ”

“அப்ப ஒத்துக்கோ”

“அதுவும் முடியாது ”

“ஏன்?? ”

“ரேவ்… போதும்” – கனகா மேம்.

“மேம், இந்த விஷயத்தில தெளிவா முடிவெடுக்க முடியல. ஆனா இந்தக் கேஸ எப்படியாவது டீலே பண்ணனும்னு தெளிவா, உறுதியா இருக்கேன் ”

“அதுவும்,சக்திவேலுக்கு பேவராதான”

“அப்கோர்ஸ் ”

“அப்போ, அதுக்கு என்ன பேரு? ”

“….” – நியாயம் நிற்கும் பக்கத்தில், நானும் நின்று கொள்கிறேன், என்ற போர்வைக்குள்: காதலின் சுகமான தூக்கம்.

“ரேவ், நீ கொஞ்சம் சும்மா இரு” -” மேம்.

“சக்திவேலைப் பத்தி, உனக்கு என்ன தெரியும், சயனா? ”

“நான் கேள்விப்பட்ட வரைக்கும்… ”

“நான் கேட்டது, உனக்கு… ”

“…..” – உள்ளுணர்வு என்பது வார்த்தைகளைக் கொண்டு உணர்த்த முடியாது அல்லவா??

“நான் சொல்லட்டுமா? சக்திவேல், உன்னோட உணர்வுகளோட விளையாடுறானோனு எனக்குத் தோனுது. சந்தேகமா இருக்கு ”

“சேச்சே, சக்தியப் போய் அப்படி? கண்டிப்பா கிடையாது. என்னால அப்படி யோசிக்க கூட முடியாது. ”

“இருக்க வேண்டாம்னுதான் நானும் நினைக்கிறேன். ஆனா, இப்படி ஒரு கொரியர் வரும்போது, நான் அதையும் யோசிச்சாகனும்”

“நீங்க கொரியரக் கண்டுக்காதீங்க, மேம். ஜஸ்ட் லீவ் இட்”

“முடியாத சயனா. நாளைக்கு உனக்கு ஏதாவது ப்ராப்ளமாச்சுன்னா, இந்த இடத்தில, நாம தெளிவா முடிவு எடுத்திருக்கலாமோனு எனக்குத் தோனும். அதுக்காகத்தான் நான் பேசறேன்”

“நீங்க சக்திய தப்பா புரிஞ்சிருக்கீங்க. அவனால எனக்கு ஒன்னும் ஆகாது”

“திரும்பத் திரும்ப, நீ தப்பாவே யோசிக்கிற. நாங்க உன்னை எதுவும் சொல்லல. ஏன் முன்னெச்சரிக்கையா இருக்க கூடாதுன்னுதான் கேட்கிறேன்”

“சரி சொல்லுங்க என்னன்னு?? ”

“நாளைக்கே, ரேவ மிரட்டி இப்படி ஒரு மெசேஜ் வந்தா நீ என்ன மாதிரி ரியாக்ட் பண்ணுவ,சயனா?? ”

அவர்களைப் புரட்டி எடுத்திருப்பாள். அப்படிச் செய்கிறவளும்,செய்தவளும் தான்.

“அதே பொசிசன்லதான் நாங்க இருக்கோம். உனக்காக மட்டும்தான் நாங்க யோசிக்க முடியும். ”

“… ” – சக்தியின் வாசகம், அவர்களை இப்படி பேச வைக்கின்றது, என்று புரிந்தது.

“உனக்கென்ன வேனும். சக்திக்காக, அந்தக் கேஸ டிலே பண்ணனும். சொல்லு அதான? ”

“ம்ம்ம்”

“சக்திவேல் சைடுல நியாயம் இருக்கு. அதனால, இந்த கேஸ்ல, அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம். ஓவர் ஆலா, கேஸ டிலே பண்ணலாம்”

“மேம்.. அமைச்சர்கிட்ட என்ன சொல்லுவீங்க” – ரேவ்.

“அவ கேட்கிறது புரியுதாடா? நாம ரெண்டு சைடும் மாட்டிக்கிட்டு நிப்போம்”

உயர் அதிகாரிகள், அதிகாரங்கள் தருகின்ற அழுத்தம் புரிகின்றது,சயனாவிற்கு.

“எலக்சன் வரைக்கும், அமைச்சர்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். ”

“தேங்க்ஸ் மேம்” – சயனா.

“வெயிட் பண்ணு. ஆனா நீ சக்தியப் பத்தி, இந்த மாதிரி நினைக்கிறது, மூட்டை கட்டி வை.. ”

“ஆமா, சக்திவேல் வேண்டாம். அவன் ஒரு அக்யூஸ்ட். மனோகரைத்தான் கல்யாணம் பண்ணனும். ”

“ப்ச், சக்தி அக்யூஸ்ட… ” – சயனா.

“நீ சும்மா இரு ரேவ்.”

“மேம், என்னய பேசவிடுங்க” – சயனா.

“இருடா சயனா. இங்க பாருடா! எனக்குத் தெரியும், நீ மனோகிட்ட போஃன்ல பேசுறேன்னு.”

“…..”

“அதே நேரத்தில சக்திவேல் பத்தி, இப்படி நினைக்கிற. இந்த மாதிரி ஒரு குழப்பத்தில இருக்கிறப்ப, எந்தவொரு முடிவும் எடுக்க வேண்டாம்.”

“ம்ம்ம்”

“கொஞ்ச நாளைக்கு மனோகிட்ட பேசாத.”

“ஐயோ மனோ போஃன் பண்ணா?”

” அப்போ, அவன வரச் சொல்லு”

“இல்லை மேம். நான் கேஸ் முடிஞ்சப்புறம் வரச் சொல்லாம்னு நினைச்சேன். ”

“கேஸ் முடிஞ்சாச்சு. பண்றது டிலே, நல்லா புரிஞ்சுக்கோடா” என்று சயனாவைப் பார்த்து சொன்னவர்…

“ரேவ், உங்க அம்மா அப்பா எப்போ வருவாங்க?” என்றார்.

“இன்னும் நாலு நாளாகும்”

“சயனா, ரெண்டு நாள் யோசிடா. யோசிச்சுட்டு, மனோகிட்டட பேசி, அவன வரச் சொல்லு. நான் இருக்கிறேன், ரேவோட பேரன்ட்ஸ் இருக்காங்க. வீ ஆர் ஹியர் பார் யூ. புரியுதாடா? ”

“…..”- தனக்காகவே யோசிக்கிறார்கள் என்று தெரிந்தும், அதைப் புரிய மறுப்பதெல்லாம் காதலுக்கே உரிய தனிச் சிறப்பு!!!

“புரியுதாடா?? ”

“புரியுது மேம். சக்திவேலுக்கு ஹெல்ப் பண்ணலாம். பட், மனோவ கல்யாணம் பண்ணிக்கோனு சொல்றீங்க”

“அப்படி இல்லடா… ”

“அப்படித்தான். எனக்கும் சக்திக்கு ஹெல்ப் பண்றது ஓகே. பட், மனோ ப்ரோவுக்கு போட்டியா வந்தா?? வந்தா?? ஒத்துக்க முடியாது. ” – ரேவ்.

“ஏன் ரேவ்? இவ்வளவு ஓபன்னா பேசற” – கனகா மேம்.

“நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு எழுந்தவள்… ரேவைப் பார்த்து, “தயவு செஞ்சி வீட்டுப் பக்கம் மட்டும் வந்திராத” என்று எச்சரித்து விட்டு சென்றாள்.

“பாருங்க மேம், அவளுக்காகத்தான நானும் சொன்னேன்”

“ஏன்? இது அவளுக்குத் தெரியாதா? அவளக் கொஞ்சம் யோசிக்க விடு? திரும்பவும் சக்திவேல் பத்தி பேசினா, என்கிட்ட வந்து சொல்லு. ”

இருவரும், சயனாவின் நலனுக்காக என்று, இன்னும் என்னென்ன செய்யப் போகிறார்களோ??!

******

ஆளில்லாத சாலையில், ராயலைத் திருப்பினாள். ஓரிரு விளக்குக் கம்பங்கள் மட்டுமே.

சுவிங்கம் சுழற்றப்படும் பக்கத்திற்கு ஏற்றவாறு, என்பீல்டின் சக்கரங்கள் திரும்பின. வலது இடது என்று சாலையில், ஷிக் ஷேக் என்று வண்டி ஓட்டினாள்.

ஒரு பேருந்து நிழற்குடை அருகில், பள்ளி சீருடையுடன் மாணவி மற்றும் ஒரு பருவ வயது பையன் நின்று கொண்டிருந்தனர்.

ஆனால், அவர்களுக்குள் ஏதோ பிரச்சினை போலிருந்தது. அருகில் சென்றவள், ராயலை இளைப்பாறச் செய்தாள்.

“என்ன பிரச்சனை?” – சுவிங்கத்தில் சிக்கியபடி வார்த்தை வந்தது.

அந்த மாணவியின், முகம் அத்தனை பதட்டத்தை வெளிப்படுத்தியது.

“சொல்லுங்க? இந்த நேரத்தில, இங்க என்ன பண்றீங்க? ”

இவள், தனக்கு உதவுவாளா?? என்ற எண்ணத்தில், அந்த மாணவியின் பார்வை.

“பயப்படாம சொல்லுங்க”

“மேம், என்னோட போட்டோவ எடுத்து வச்சிக்கிட்டு, ஏதோ மார்பிஃங்லாம் பண்ணி, நெட்ல அப்லோட் பண்ணுவேன்னு மிரட்டறான்.. அப்”

“போதும்..போதும்.. ”

இப்போது சயனா, அந்தப் பையனைப் பார்த்தாள். அவனது கைப்பேசியை ‘கொடு’ என்பது போன்ற அலட்சிய, சைகை செய்தாள். அவனும் கொடுத்தான்.

ஏனெனில், சயனாவின் தோற்றம். அவளது உடை. அவளது உடற்கட்டு. அவளது வாகனம். எல்லாவற்றையும் விட, பற்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த சுவிங்கம், அவனைக் கொடுக்க வைத்தது.

“சரி வாங்க, நான் வீட்ல டிராப் பண்றேன்”

அந்தப் பெண் ஏறிக்கொண்டாள்.
கேட்பாரற்று அந்தப் பையன் நின்றான்.
அந்த மாணவியை, அவளது வீட்டில் கொண்டு வந்து விட்டாள்.

“தேங்க்ஸ்” என்று சொல்லி வீட்டை நோக்கி நடக்கலானாள்.

“ஒரு நிமிஷம்..” என்று கூறி, அவளை அருகில் அழைத்தாள், சயனா.

“இந்த மாதிரி வீடியோ கிரியேட் பண்றவங்க, ஷேர் பண்றவங்க, ஏன் அதப் பார்க்கிறவங்க… நாம ட்ரெஸ் போட்டிருந்தாலும்… அவங்க பார்வை இப்படித்தான் இருக்கும். இதெல்லாம் கண்டுக்கவே கூடாது… போய்கிட்டே இருக்கனும்… சரியா? ”

“ம்ம்ம், தேங்க்ஸ் மேம்”

மறுபடியும் ஷிக் ஷேக்…

யோசனையுடன், ராயலின் யாத்திரை. என்ன யோசனை? இதற்கு முன் என்றால், இந்தப் பையனை அடித்திருப்பாள். ஆனால் இன்று??

எல்லோரும் சொல்வது போல், சக்தி தன் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கானோ??

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

மிகவும் பலவீனமாக உணர்ந்தாள், சயனா.

ரேவ் மற்றும் கனகா மேமின் வார்த்தையான ‘உணர்வுகளுடன் விளையாடுகிறான்’ என்ற வாதம், அவளை வறுத்து எடுத்தது.

யோசித்து, யோசித்து ஒவ்வொரு படியாக மேலே ஏறினாள்.

வீட்டிற்குள் நுழைந்த பின், நேராகத் தன் தாயாரின் அறைக்குள் சென்றாள்.

நேற்று ஈடுகட்டப்பட்ட இழப்பு, இன்று ஈடு செய்ய முடியாததாகத் தெரிந்தது. சக்திவேலின் முகத்தை, மூளைக்குள் கொண்டு வந்து நிறுத்திப் பார்த்தாள்.
இப்பொழுதும், தாயின் இழப்பு பூதாகரமாகத்தான் தெரிந்தது.

சக்திவேலைப் பார்க்கும் முன்பே, இந்த இழப்பினை, யாரிடமோ இளைப்பாற்றிக் கொண்டது போல் உணர்வு. யார்? யாராக இருக்கக் கூடும் என்று யோசிக்கும் பொழுது, அவளது ‘கூஃபி’ ஞாபகம் வந்தது.

முகத்தில் முறுவல் வந்த அடுத்த நொடி, காதல் கிரகத்தில் இருந்து அழைப்பு வந்தது… தொடுதிரையில் உறுமிக் கொண்டிருந்தது, மனதை உரசிய ‘கூஃபி’ என்ற எழுத்துக்கள்…

“ஹலோ.. ஹலோ.. கூஃபி” – ஆவல்! அப்பட்டமான ஆவல்!!

“…..” – காதல் அதிர்ச்சி கொள்கிறது.

“கூஃபி.. கூஃபி…”

“ஹே ட்டேபீ, இதென்ன பேரு?? புதுசா இருக்கு” – செல்ல்லப் பெயர் கிடைத்த உற்சாகத்தில், காதல்.

“நான் அன்னைக்கே, இப்படித்தான் கூப்பிட்டேன்.. நீதான் கட் பண்ணிட்ட”

“ரியலி ஸாரி ட்டேபீ. நீ உடனே திருப்பி கால் பண்ணிருக்கலாமே”

“நீதான சொன்ன… ஐ மீன் இட்னு.”

“திரும்ப நீ கால் பண்ணி, ஐ நீடு (need) இட்னு, சொல்லிருக்கலாமே”

எது ஒன்று, அவளது தேவையைத் தோன்றவிடாமல் தடுத்தது என்று புரிந்தது. – அந்த ஒன்று சக்திவேல்.

“தோனலையா ட்டேபீ. சரி விடு”

“….. ” – காதலிடம் குழம்புகிறாள்.

“மிஸ் பண்ணியா ட்டேபீ? ”

“இல்லை. இன்வெஸ்டிகேஷன், அது இதுன்னு கொஞ்சம் பிஸியா இருந்தேன்” – எளிதாகச் சொன்னாள்.

“ஓ…. ஓகே ”

“நீ.. நீ… மிஸ் பண்ணியா?? ” – கேட்கலாமா? வேண்டாமா? என்ற சந்தேகத்தில் கேட்கிறாள்.

“இல்ல ட்டேபீ. வொர்க் இருந்தது. ஸோ, உன்னப் பத்தி நினைக்கவே நேரமில்ல”

“… ” – எள்ளளவும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை, காதலின் பதிலை.

“ட்டேபீ கேஸ் எப்படிப் போகுது?? ”

“கேஸ் ஆல்மோஸ்ட் ஓவர்தான். ஆனா நான் கொஞ்சம் டிலே பண்ணலாம்னு நினைக்கிறேன்” – தாயின் அறையில் இருந்து வெளியேறி விட்டாள்.

“ஏன்? எதுக்கு? ”

“சக்திக்காக ”

“அதான் எதுக்கு? ”

“ஏன்னா?சக்தியோட சைடுல நியாயம் இருக்கு”

“நீ, அந்த ஹேக்கர… ”

“ஒரு நிமிஷம் நிறுத்து… அவனுக்குப் பேர் இருக்கு ”

“இதப் பாருடா!! அவனச் சொன்னா என் ட்டேபீக்கு எவ்வளவு கோபம் வருதுன்னு??? ” – ட்டேபீக்கு கோபம் என்றால், கூஃபிக்கு பொறாமை.

“அவனப் பத்தி தெரிஞ்சா? நீயும், இப்படித்தான் பேசுவ” – காதலிடமே காதல் பேசுகிறாள்.

“ஓ! உனக்கென்னத் தெரியும் ” – காதல் கேள்வி கேட்கிறது.

“எனக்கு நல்லாவே தெரியும். சக்தி பேமிலி சூப்பர், தெரியுமா? – அந்தச் சின்னக் கூட்டில், தானும் ஒரு பறவையாக வாழ ஆசை!!

“….. ” – காதல் கேட்கிறது.

“ப்ரண்ட்ஸ், கூட இருக்கிறவங்க எல்லாருமே ஹெல்ப் பண்றாங்கனா, ஸம்வாட், ஹீ இஸ் ஜெனியூன்.” – புனிதமான ஆசை!

“…..” – காதல் கேட்கிறது.

“நல்லா படிக்ககூட செய்வானாம். அது எனக்கே தெரியும். பிகாஸ், அவனோட ஹேக்கிங் ப்ளான் அன்ட் மூவ்ஸ் ” – தவறைக் கூட தம்பட்டம் அடித்துச் சொல்லும் அளவிற்கு ஆசை!!

“….. ” – காதல் கேட்கிறது.

“கடைசியா, இந்த மெசேஜ் தான் எனக்குப் பிடிக்காதது, சக்திகிட்ட ”

“ஐ.. சூப்பர்” – காதலின் கொட்டம்.

“தேவையே இல்லாத ஒன்னு. இதான், இதுக்குத்தான் சக்தி மேல செம்ம கோபத்ல இருக்கேன் ”

“ஐ, இது நல்லா இருக்கே” – காதலின் கெட்ட ஆட்டம்.

“அவன மட்டும் இப்ப பார்த்தேனா, சும்மா சப்பு சப்புனு… ”

“ஐ.. இது இன்னும் நல்லா இருக்கு ” – ‘கெட்ட பய சார் ‘ இந்தக் காதல்.

“ச்சே ச்சே.. சக்தியெல்லாம் அடிக்க முடியாது. ”

“அடப்போம்மா… ”

சயனா சிரிக்கிறாள். – காதல், அவளை எந்தச் சிக்கலிலும் சிரிக்க வைக்கிறது.

“ஏன் ட்டேபீ? என்னப் பத்திக் கேட்டா என்ன சொல்லுவ? ” – ஏக்கத்துடன் காதல் கேட்டே விட்டது.

“….. ” – காதல் சிந்திக்க வைக்கிறது.

“ட்டேபீ, கன்சிடர் பண்ண மாட்டேன்னு தெரியுது. அப்புறம் எதுக்காக, போஃன்ல பேசிக்கிட்டிருக்க?? ”

“நீ இப்படியும் பேசுவியா, கூஃபி??. நான் யோசிக்கல. யோசிருக்கனும். ஸாரி, நான் என்னயப் பத்தி மட்டும் யோசிட்டேன்ல.. ஸாரி.. ஸாரி”

“சயனா” – காதல் துடிதுடித்தது.

“நீதான சொன்ன, இந்த ரிலேசன்ஷிப் மேரேஜ்லதான் முடியனும்னு அவசியமில்லன்னு. ”

“ச.. ய.. னா.. ” – காதல் துன்பம் கொண்டது.

“நான் பண்றதும் தப்புதான், இல்லை? அதான், அன்னைக்கே கேட்டேனே, நான் உன்னய ஏமாத்திர மாதிரி இருக்கான்னு”

“சயனா, முட்டாள் மாதிரி பேசாத..”

“தெரியல கூஃபி. எப்பவும் நான் அதுகிட்டதான் இப்படி பேசுவேன்.. ”

” ‘அது’ வா? யாரு? ”

” என் அம்மா ”

“அப்போ அம்மான்னு சொல்லு”

“சரி, என் அம்மாகிட்டதான் எல்லாம் சொல்லுவேன். அது எந்த எதிர்பார்ப்பு இல்லாம, கேட்கும். அதே மாதிரிதான் உன்னையும் நினைச்சேன். ”

“சயனா” – காதல், தாய்மை இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது. காதலின் கணம் கூடுகிறது.

“இந்தக் காதல் என்னைய ரொம்ப பலவீனப்படுத்துதோ?? ” – அவளின் ஓய்ந்த குரலே சொல்லியது, இது அவளின் பெரிய குறை என்று!!

“இல்ல சயனா, காதல் யாரையும் பலவீனப்படுத்தாது. ஆனா காதலை நீ மறைச்சேனா, கண்டிப்பா அது உன்னை பலவீனப்படுத்தும்” – காதல் வெளிப்படுத்தும் குற்றச்சாட்டு.

“….” – ஒத்துக் கொள்கிறாள்.

“ஐ லவ் யூ ட்டேபீ”

“ஆலிவ் கூஃபி (olive goofy – I love goofy)”

“ம்ம்ம்… விவரம்”

“புரிஞ்சிடுச்சா??”

“நல்லா புரியுது. நான் உன்னை காதலிக்கிறேன், சயனா”

“நானும்… ”

“முடியாது சயனா… உன் மொழியில சொல்றப்ப, அத உணர்ந்து சொல்லுவ. உணர்ந்தாதான் சொல்ல முடியும்”

“கரெக்ட்”

“நீ ஏன் இப்படி இருக்கிற ட்டேபீ?? ”

“தெரியல கூஃபி, பட், ஐ அம் டவுன்” – குரல், மிகவும் துவண்டு இருந்தது.

“மனசளவுல, டன் கணக்கில இரும்பு மாதிரி. தெரியாதா உனக்கு? ”

“ஐ, டன் கணக்கில இரும்பு.. நல்லாருக்கு” – கொஞ்சம் துடிப்பு வருகிறது.

“ம்ம்ம்… நீ இரும்பி”

“வ்வ்வாவ், பெட்டர் தென் ட்டேபீ ”

“அந்த ஹேக்கர்… ”

“ஹேய்… ”

“அப்படித்தான் சொல்லுவேன். ஒரு மெசேஜ் அனுப்பி, என்னோட ட்டேபீய புலம்ப விட்டவன… ” – காதல் வெறி.

“ஹாஹா ” – துள்ளல் சிரிப்பு.

“சொல்லு, ஹேக்கர் என்ன மெசேஜ் அனுப்பியிருந்தான் ”

“உன்னை விழுங்கும் கனலாவேன்”

“அவன் என்ன அப்படி சொல்றது. நான் சொல்றேன், அந்தக் கனல்கிட்ட இந்த இரும்பு உருகனும்னு அவசியமில்லை”

“வாவ், சூப்பர்” – துணிச்சலே வந்துவிட்டது.

“சயனா, நல்லா கேட்டுக்கோ, அந்தக் கனலையே விழுங்கப் போற இரும்பு நீதான்”

“நல்லாருக்கு இன்னொரு தடவை சொல்லு ” – இங்கு ‘விழுங்கும்’ என்பது ‘விரும்பும்’ என்றல்லவா, பொருள் கொள்கிறாள்.

“கனலை விழுங்கும் இரும்பு… என் சயனா” – காதல் விழுங்குமா? இல்லை கனல் விழுங்குமா??

காதலின் ‘என் சயனா’, அவளது காதுகளில் விழுந்ததா??

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

error: Content is protected !!