KYA – 17

                                          காலம் யாவும் அன்பே 17

 

“நான் இந்த பிரபஞ்சத்தை விட்டு வெளியில் செல்லும் மார்க்கம் அறிவேன். காலத்தை கடந்து சென்று வருவேன்… அதை நீயும் பார்க்கத்தான் போகிறாய். ஆனால் என்ன… அப்போது உனக்கு வயசாகிவிடும் நான் இளமையோடு இருப்பேன். என் பாகிரதி அப்போது ‘பாதிரதி’யாக இருப்பாள்….” அவளது தோள்களில் கையை மாலையாகப் போட்டுக் கொண்டு சிரித்தான் பாகிரதியின் காதல் கணவன்.

“பகல் கனவு காண வேண்டாம்.. இன்றைய பொழுது நம் தோட்டத்தில் காய்கறிகளின் அறுவடை. நீங்கள் உங்கள் ஓலைகளைக் கட்டிக் கொண்டு புரளுங்கள். நான் வேலைகளை கட்டிக்கொள்கிறேன்.” அலுத்துக் கொண்டு ,தன் மனதிர்க்கினியவனைத் தள்ளி விட்டு அவன் பிடியிலிருந்து  பாகிரதி நகரப் பார்க்க,

அவனோ உடம்புப் பிடியாக அவளைப் பிடித்திருந்தான்.

“என்ன…?! பகல் கனவா..?! ஆமாம் என்ன செய்வது ..இரவில் தூங்கவிடாமல் என்னை தொல்லை செய்பவளை அடக்கினால் தான் பகலில் கனவு காணாமல், இரவில் காண முடியும்.” தன் காந்தப் பார்வையால் அவளை கிறங்கடித்துக் கொண்டே அவளை வம்பிழுக்க,

“ ச்சே! என்ன பேச்சு இது! விடுங்கள் ..நான் செல்கிறேன்!” அவன் முகத்தைப் பார்க்க நாணி அவள் நிலம் பார்த்துப் பேசினாள்.

“ எந்த ஜென்மத்திலும்  விடமாட்டேன் ரதி. உன்னைத் தேடி வருவேன். இப்போது நான் செய்யும் ஆராய்ச்சி வெற்றி பெற்றால், உன்னையும் என்னையும் எப்போதும் பிரிய விடமாட்டேன்” வேகமாகத் தன்னுடன் சேர்த்து அனைத்து மஞ்சள் மனம் வீசும் அவளது கழுத்து வளைவில் முத்திரை பதித்தான் காதல் மன்னவன்.

 

*******************************************************

“வாகீ.. என்ன ஆச்சு உங்களுக்கு …எழுந்திரிங்க…” இயல் அழுதபடி வாகீயின் உள்ளங்கையை சூடு பரவ தேய்த்துக் கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

“ஹெட்…. எந்திரிங்க” அவனைப் பிடித்து உலுக்கினான் ஆகாஷ்.

மூச்சு முட்டி நீருக்குளிருந்து அப்போது தான்  வெளியே வந்தது போல மூச்சு வாங்கிக் கண் விழித்தான் வாகீசன்.

தொண்டைக் குழியில் சிக்கியிருந்த நீர் இரும்மலோடு வெளியே வந்தது. மங்கலாகத் தெரிந்த பார்வை இப்போது தெளிவாக ஆரம்பித்தது.

அவன் விழித்ததும் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இயல் தன் நெஞ்சில் கை வைத்து அவனுடன் போக இருந்த தனது உயிரைப் பிடித்து நிறுத்தினாள்.

சுற்றுபுறம் உணர்ந்தான் வாகீசன்.

அருகில் இயல் கண்ணீரோடு அமர்ந்திருக்க ,அவளைக் கண்டவன்  “பாகிரதி….யா ”  என மனதில் சந்தேகத்தோடு  பார்த்தான்.

“ஹெட்…ஆர் யூ ஆல்ரைட்!? ” ஆகாஷின் குரல் அவனைக் கலைக்க, அந்தக் கனவிலிருந்து மீண்டான். 

“இயல்…” முதல் முறையாக அவளைப் பேர் சொல்லி அழைத்தான் வாகீசன்.  

அவள் உடனே எழுந்து நின்றாள். அவன் முதல் முறை பெயரை உச்சரித்தது அவளுக்கு உச்சி முதல் பாதம் வரை புது ரத்தம் பாய்ந்தது.

அவன் கண் விழித்ததே நிம்மதியை அளிக்க, இந்த அழைப்பும் சேர்ந்து அவளை சந்தோஷப் படுத்தியது.

ஆனால் இப்போது அவன் ஹெட்.! ‘வாகீசனைப் பொறுத்தவரை இன்னும் அப்படித் தானே நடந்து கொள்கிறான்!’ தன் காதலை அவனிடம் சொல்ல முடியாமல் தவித்தாள்.

அவளது அந்த சிவந்த கண்கள் அவனுக்கு பலவற்றை சொல்லாமல் உணர்த்தியது.

‘தனக்காக அழுதாளா!’,ஆனால் இவளை  முகம் தெரியாத ஒருவனோடு கனவில் கண்டது கண் முன்னே வந்தது.

“யார் அவன்?” மனதில் நினைத்தது வெளியிலும் வந்து விட,

“யாரு ஹெட்?” வந்தனா முன்னே வந்தாள்.

அருகில் பலரும் இருப்பதை உணர்ந்து, இரண்டு கையாலும் முகத்தை அழுந்தத் துடைத்தபடி எழுந்தான்.

‘அத்தனையும் கணவா..இல்லை என் மூளைக்கு எதாவது ஆகிடுச்சா? அவ இயல் மாதிரி தான் இருந்தா..கூட இருந்தவன் யாருன்னு தெரியல..ஆனா அவள ரொம்ப நேசிக்கறான்..’ கனவில் வந்தவன் முகம் மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.

“ஹெட், உள்ளே என்ன இருந்துச்சு…? என்ன ஆச்சு அங்க.. நினச்சத விட ரொம்ப ஆழமா?” ஆகாஷ் அவனை துளைத்துக் கொண்டே இருக்க,

அவனது ஈர உடையும் , இன்னமும் அவனுக்கு நீருக்குள் சென்ற களைப்புத் தீராததையும் உணர்ந்த இயல்,

“ஆகாஷ், முதல்ல நாம வீட்டுக்குப் போகலாம், அவரு ரொம்ப டிஸ்டர்ப்டா பீல் பண்றாரு. ஒரு டீ குடிச்சுட்டு அப்பறம் பேசலாம்” அவளது அக்கறை மற்றவர்களுக்குப் புரிந்தாலும், வாகீசனுக்கோ அவளைக் காணும் போது பாகிரதி தான் முன்னே வந்தாள்.

இன்று காலை வரை அவளுக்கான தன் உணர்வுகளோடு நீருக்குள் சென்றவனை, இப்போது அவள் வேறு ஒருவன் மனைவி, அதுவும் காதல் மனைவி என்ற நினைப்பு தோன்றி வாட்டியது.

‘இல்ல , அவ வேற இவ வேற, இவ என்னோட இயல்’ , மனது இப்போது இயலை தன்னவளாக நினைக்க ஆரம்பித்தது.

மூளையோ வேறு சொல்ல, தனக்குள்ளேயே போராட்டம் ஆரம்பமாவதை உணர்ந்தான்.

 வீட்டிற்கு வந்தவன்,

‘முதலில் தனக்கு ஏன் அவ்வாறு ஒரு நினைப்பு வர வேண்டும்,? அதன் பின்புலம் என்ன,? நீருக்குள் ஏன் எதுவும் கிடைக்கவில்லை.?

அந்த ஐந்து துவாரங்கள் என்னிடம் இருக்கும் ஐந்து கற்களோட சேருமா?’

என பல குழப்பங்களில் உழன்றான்.

சூடான தண்ணீரில் குளித்துவிட்டு வந்திருந்தவன், ஆகாஷ் கொடுத்த டீயைக் குடித்ததும் சற்று தெம்பாக உணர்ந்தான்.

தன் கனவினைத் தவிர்த்து அங்கு நடந்த அனைத்தையும் மூவரிடமும் சொல்ல,

“அப்போ  உங்களுக்கு பிரமிட்ல கெடச்ச அஞ்சு கல், அது இங்க இருந்து தான் எடுக்கப் பட்டதா?” இயல் ஆகாஷ் இருவரும் ஒரே நேரத்தில் கேட்க,

“ஆமா! ஒரு வேளை அந்தக் கற்களை இங்க ஃபிக்ஸ் செஞ்ச பிறகு, எதாவது வழி கிடைக்குதான்னு பார்ப்போம்!” டீ யைக் குடித்துக் கொண்டே சாதாரணமாகப் பேசினான்.

“ அதுசரி  வா.. ஹெட். எப்படி நீங்க மயக்கமானீங்க?” , ‘வாகீ’ என்பதை வாய்க்குள்ளேயே முழுங்கிவிட்டு இயல் கேட்க,

அதை கவனித்த ஆகாஷும் வந்தனாவும் வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டனர்.

“அந்த அஞ்சு குழில ஒன்னைத் தொட்டேன். உடனே ஷாக் அடிச்சு இப்படி ஆயிடுச்சு.. அதுக்குப் பிறகு தான் அந்தக் கனவு!” வாய் தவறி உளறிவிட்டான்.

“கனவா!” மூவரும் அதிர,

தான் தெறியாமல் கூறியதை சரி செய்ய, “கனவு மாதிரி இருந்துச்சுனு சொல்ல வந்தேன்” டீயைக் குடித்தவன் கையிலிருந்த கப்பை இயலிடம் தன்னையும் அறியாமல் கொடுத்தான்.

அந்த உரிமையான செயல் அவளுக்கு திருப்தி அளிக்க,

“சரி நம்ம மறுபடியும் இனிக்கு நைட் அங்க போகலாம். எனக்கு இப்போவே அங்க போகணும்னு தோணுது, ஆனா கொஞ்சம் ரெஸ்ட் இல்லனா என்னால சரியா கான்சென்ட்ரேட் பண்ண முடியாது. நீங்களும் ரெஸ்ட் எடுங்க” என அனைவரையும் இடத்தை காலி செய்யச் சொன்னான்.

அனைவரும் அவன் அறையை விட்டு வெளியேற, ஏதோ நினைவு வந்தவனாக, இயலை மட்டும் நிறுத்தினான்.

“இயல்..”

இன்று மட்டுமே இது இரண்டாவது முறை அவள் பெயரை அவன் உச்சரிப்பது.

கதவு வரை சென்றவள் கண்கள் மின்ன திரும்பிப் பார்த்தாள்.

ஆகாஷும் வந்தனாவும் ஏதோ பேசிக் கொண்டே சென்று விட, இவள் தனியே அந்த அறையில் அவனோடு நின்றிருந்தாள்.

வாகீசன் அவளுக்கு எதிரே வந்தான்.

‘இவள் எனக்கானவள் என்று நினைத்தேனே, வேறு ஒருவனின் மனைவியாக என் கனவில் வரக் காரணம் என்ன!’ அவள் முகத்தைப் பார்த்து ஏங்க,

அவளது கண்கள் வேறு பதில் சொன்னது. கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் பாப்பா  அவனைக் கண்டதும் பெரிதாகியது.

அறிவியலின் படி , நமக்குப் பிடித்த ஒவருவரை , மனதிற்கு நெருக்கமான ஒருவரை நம் கண்கள் பார்க்கும் போது , விழியில் இருக்கும் பாப்பா சற்று பெரிதாகுமாம். (முயற்சி செஞ்சு பாருங்க)

அதை இயலின் விழியில் கண்டவன், அவள் மனதைப் புரிந்து கொண்டான்.

அவனும் தன் விருப்பத்தை சொல்ல நினைத்தான், ஆனால் அந்தக் கனவு, அவனைத் தடுத்தது.

மனத்தைக் கல்லாகிக் கொண்டு அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டான். அவனின் அழைப்பு எதற்காக என்று தெரியாமல் அவன் முன் நிற்பவளிடம்,

தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “ உனக்கு உங்க சொந்தத்துல மாமா பையன் அத்தைப் பையன் அப்படி யாராச்சும் இருக்காங்களா?”

“இல்ல …”  , அவன் மனம் புரியாமல் ‘எதற்குக் கேட்கிறான்’ என யோசித்தாள்.

“ மாப்ள்ள எதாச்சும் பார்த்திருக்காங்களா?” பின் கழுத்தைத் தடவிய படி வேறு எங்கோ பார்த்துக் கொண்டு கேட்டான்.

“ இல்ல…” அவள் தலை சாய்த்து அவனைப் பார்த்து சொல்ல,

‘நீங்க தான் எனக்கு மாபிள்ள.. வேற யாரும் இல்ல’ அவள் மனது இந்த பதிலைக் கூறியது.

வாகீக்கு அவளது பதில் சற்று நிம்மதியைத் தந்தது. இருந்தாலும் இப்போது அவளிடம் தன் மனத்தைக் காட்ட விரும்பாமல்,

“சரி நீ போ” என்றான்.

அவளுக்கோ அப்போதே அவனைக் கட்டிக் கொண்டு காதலைச் சொல்லும் அளவு ஆசை பெருகியது. இயலாமையால் திரும்பிச் சென்றாள்.

சற்று ஓய்வெடுக்க நினைத்தாலும் வாகீசனின் மனது ஆயிரம் குழப்பங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டிருந்தது. அப்போது தான் இன்று காலையில் பேசிய அந்த முதியவர் அவனுக்கு நினைவில் வந்தார்.

அவர் சொன்னது போல் எந்த வேலையும் நடக்க வில்லை. அவரைப் பார்த்தால் ஒரு வேளை விடை கிடைக்கலாம் என்று அப்போதே  வேகமாக அவரைப் பார்க்கக் கிளம்பினான்.

அவனாகக் கிளம்பவில்லை. ஏதோ ஒன்று அவனைக் கிளம்பச் சொல்லு உந்தியது.

கீழே ஹாலில் அமர்ந்திருந்த மூவரும் அவன் எங்கே செல்கிறான் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜீப்பை எடுத்துக் கொண்டு காலையில் சென்ற இடத்திற்கே வந்து வண்டியை நிறுத்தினான்.

மாலை வேளை லேசாக இருட்ட வேறு ஆரம்பித்து இருந்தது, அவர் வருவாரா என்று  ஜீப்பின் வெளியே வந்து வெட்டவெளியில் நடந்து கொண்டே அவரைத் தேடினான்.

அவனை ஏமாற்றாமல் சட்டென அந்த முதியவர் அவன் முன்னே நடந்து வந்தார்.

அவரைக் கண்டதும் என்ன பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை. அமைதியாகவே அவர் முன் நின்றான்.

“நீ இங்க வந்த காரியம் அவ்வளவு சீக்கிரம் முடியாது!” ஆணித்தரமாகக் கூறினார் அந்தப் பெரியவர்.

அவனுக்கு அவரிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் தோன்றியது.

“நீங்க சொன்ன மாதிரி தான் எல்லாம் நடக்குது.. என்னோட சந்தேகத்தை தீர்த்து வைங்க. எனக்கு உங்க கிட்ட நிறைய கேள்விகள் கேட்கணும்.” அவரை வணங்கி அவன் கேட்க,

அவனது கையைத் தன் தடியால் தட்டி விட்டார் .

“ முதல்ல போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு வா! அப்போ தான் உன்னோட வேலை ஆரம்பமாகும்.” கோபமாக சொன்னார்.

“என்ன! கல்யாணமா?” ‘இது என்ன புதுக் குழப்பம்’ என அவரைப் பார்க்க,

“ஆமா! அதோ வரா பார் உன்னைத் தேடி, அவளைக் கல்யாணம் பண்ணிட்டு வா!” அவன் தலையில் பூகம்பத்தையே இறக்கினார்.

அவர் கை காட்டிய இடத்தில் இவனைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தாள் இயல்.

“ என்ன சொல்றீங்க… !” வாகீ புரியாமல் தவித்தான்.

அவள் மனது இன்னும் அவனுக்கு சரியாகப் புரியாத ஒன்று தான்!

உடனே அவன் கையில் தாலியைக் கொடுத்து , “ இந்தா இதை கட்டு… இப்போவே!” என்றார்.

சரியாக இயல் அவன் முன்னே வந்து நிற்க,

அவன் கையில் இருக்கும் தாலியைப் பார்த்து அதிர்ந்தாள்.

“ யோசிக்காத தாலிய கட்டு. இல்லனா இந்தக் கோவில்ல உன்னால ஒரு வரி கூட கண்டுபிடிக்க முடியாது..” அவர் மிரட்டினார்.  

அவனுக்கோ மனதளவில் இயலைப் பிடித்திருந்தாலும் , வேறு ஒருவரின் மனைவியை திருமணம் செய்கிறோமோ என்று ஒரு பக்கம் உறுத்தியது. ஆனாலும் அவர் சொல்லைக் கேட்கவேண்டும் என்று ஏதோ ஒன்று உள்ளுக்குள் அவனை ஆட்டி வைத்தது.

இயலுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. அங்கு வேலை நடக்க என் கழுத்தில் தாலி கட்ட வேண்டுமா!?

‘வாகீசனுக்கு தன் மேல் எப்படிப் பட்ட அபிப்ராயம் இருக்கிறது என்று தெரியாமல் இது எப்படி?’ இதயம் வேகமாகத் துடித்தது.

அவள் பின்னே ஆகாஷும் வந்தனாவும் வந்து கொண்டிருக்க,

“ கட்டு …” கர்ஜித்தார் அந்த முதியவர்,

இவ அந்த பாகிரதி இல்ல, என்னோட இயல்…வாகீயின் மனதில் இப்போது இது சத்தமாகக் கேட்டது.

“ இப்போ நீ தாலி கட்டல பின்னாடி பெரிய ஆபத்து” அவர் வாகீசனுக்கு நெருக்கடி கொடுத்தார்.

“இல்ல .. முடியாது, நீங்க விஷயத்தை சொல்லுங்க” விடாப்படியாக நின்றவனை

“ கட்டப் போறியா இல்லையா” என அவன் கண்ணைப் பார்த்து கேட்க,

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அந்த நொடியே அவனுக்கும் அதுவே சரி என்று பட்டது.

ஒரு முறை பாகிரதியாக நினைத்தாலும் அவள் வேறு ஒருவன் மனைவியாகத் தெரிவாள் என்று, கிடைத்த இந்த சந்தர்ப்பத்தில் , அந்த நெருக்கடியில் இயலின்  கழுத்தில் அந்த மஞ்சள் கோர்த்தத் தாலியைக் கட்டினான் வாகீஸ்வரன்.

எந்த நினைப்பில் இவன் தாலி கட்டுகிறான் என்பது புரியாத இயலுக்கு கண்ணில் தாரை தரையாக நீர் பெருகியது. காதலைச் சொல்லி இருவரும் ஒரு மனதோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டிய தருணம் அல்லவா! என மனம் கனத்தது. 

ஆகாஷும் வந்தனாவும்  உறைந்து போய் நின்றனர்.

இப்போது அங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது அந்தப் பெரியவர் மட்டுமே!

 இயலைவும் வாகீசனையும் இப்போது கணவன் மனைவியாகப் பார்த்து ஆசீர்வதித்தார்  அந்தப் பெரியவர்.

“ உங்களோட கனவெல்லாம் நிறைவேறப் போகுது!” சிரித்துவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அவர் சென்ற பிறகு தான், இப்போது தான் என்ன செய்தோம் என்றே உணர்ந்தான் வாகீசன்.

இயலின் கழுத்தில் தான் கட்டிய தாலியைக் கண்டவன்,

“ஒ காட்” என தலையில் அடித்துக் கொண்டான். தான் எதையும் யோசிக்காமல் ஏன் இப்படிச் செய்தோம் என்று வருந்தினான்.

வாகீயின்  அந்த செயலால் அவனுக்குத் தன்னை பிடிக்காமல் அந்த பெரியவர் நெருக்கடி கொடுத்ததில் கட்டி விட்டானோ ! அதற்குத் தான் இப்போது வருந்துகிறானோ என நினைத்துக் கொண்டாள் இயல்.

அழுகையை அடக்க முடியாமல் வீட்டிற்கு ஓடினாள்.

திருவாசகம்:

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85

பொருள்:
இவ்வுலகில் பல்வேறு விதங்களில் கூறப்பட்டு, மெய்யறிவாக ஆகும்
(ஆய்வின் இறுதியில் சாறாகத் தேறும்) தேற்றமே !
அந்தத் தேற்றத்தின் பயனான தெளிவே ! என்னுடைய சிந்தனையினுள்
உண்பதற்க்கு மிகவும் அரியதும் விரும்பத்தக்கதும் ஆன அமுத ஊற்றே !
என்னை உடைமையாக ஆள்பவனே !
பலவேறு விகாரங்களை உடைய ஊனால் (சதையால்) ஆன இவ்வுடம்பின் உள்ளே கட்டுண்டு கிடக்க
இயலவில்லை, எம் தலைவா ! அரனே ! ஓ ! என்று பலவாறு

 

 

 

 

 

error: Content is protected !!