KYA – 35

KYA – 35

                                           காலம் யாவும் அன்பே  35

 

 அதிகாலையில் விழிப்புத் தட்ட, எங்கோ சிக்கிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். கண் விழித்துப் பார்க்கும் எண்ணமில்லாமல் அந்தக் காலைப் பனியில் லேசாகக் குளிரவும் செய்ய போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.

அவனுக்கும் சேர்த்தே போர்த்தி விட்டிருக்க.. குளிருக்கு இதமாக அவன் முதுகில் ஒட்டிக் கொண்டு படுத்திருந்தாள். கன்னத்தை அவன் முதுகில் உரசியபடி அரைகுறை தூக்கத்தில் இருக்க அவளுக்கு எங்கிருக்கிறோம் என்றே மறந்திருந்தது.

அவனும் தூக்கத்தில் அவளது கையை இழுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு ஒரு போர்வையில் சுகமாக உறங்கினான்.

ஏனோ அன்று இருவருக்குமே நிம்மதியாக உறக்கம் வந்தது. விடிந்து வெகுநேரமாகியும் இயல் கண்விழிக்கவில்லை..

வாகீசனுக்கு  சிறிது நேரத்தில் தூக்கம் கலய சோம்பல் முறிக்க கை நீட்டினான். அப்போது தான் தன் இடையில் அவள் கை படர்ந்திருப்பதை உணர்ந்தான்.

அழகாகச் சிரித்து அவள் புறம் திரும்பிப் படுத்தான். பதுமை போல தன்னருகே அவளைக் காண, அள்ளி அணைத்துக் கொள்ள அவன் கைகள் துடித்தது.

இருந்தும் கட்டுப் படுத்திக் கொண்டு அவள் முகத்தையே சிறிது நேரம் ரசித்துக் கொண்டிருந்தான்.  

அவளது அந்த உதட்டை மெலிதாக வருடியவன், வருடிய தன் விரல்களை முத்தமிட்டுக் கொண்டான்.

“ உன்ன நான் விடறதா… முடியுமா டி பொண்டாட்டி…! ! இல்ல உன்னால தான் இருக்க முடியுமா.. கண்ணுல பாக்கறப்ப காதல கொட்ற… நான் என்ன ஒன்னும் தெரியாதவனா..

அந்தக் காதலை மொத்தமா குடு டி..

நீ முதல் முதலா வந்தப்பவே எனக்குத் தெரியும்… நீ ஹெல்பரா எனக்கு.?.. எனக்கு சேவை செய்யணுமா…! உன் தலை முதல் கால் வரை நான் சேவை செய்ய ரெடியா இருக்கேன் டி.. அது உனக்கு ஏன் புரியமாட்டேங்குது..

உனக்கு அடிமையா நான் இருக்க காத்திருக்கேன்… சீக்கிரம் எனக்கு அந்த வாய்ப்பை குடு டா…” தூங்கும் அவளோடு மனதால் அளவளாவினான்.

அவளும் உறக்கத்தில் அவன் பேசியது புரிந்தது போல.. “ம்ம்ம்” என்று சொல்ல,

அவனுக்கு சிரிப்பு வந்தது.

மெல்ல அவளின் பட்டுக் கன்னத்தில் முத்தம் வைக்க நெருங்க.. அவளோ லேசாக கண் விழித்தாள்.

சட்டென தன் கையை நீட்டி சோம்பல் முறிப்பது போல பாவனை செய்ய.. அவள் அவனின் சத்தம் கேட்டு பட்டென விழித்தாள்.

அவன் முகத்தை அருகில் அதுவும் தூங்கி விழித்தவுடன் கண்டதில் அவளுக்கு ஆனந்தமே.. ஒரு நொடி பார்த்திருக்க,

அவனோ அவள் கை இன்னும் இருப்பதை உணர்த்த , அவனே அவளது கைய மெல்ல எடுத்துவிட்டான்.

‘எதுக்கு இப்போ கையப் பிடிக்கறான்’ என்று பார்க்க, தான் தான் அவன் மேல் கை போட்டு உறங்கினோம் என்று உணர, “சாரி” என உருவிக் கொண்டாள்.

“ நீயும் ரதியா மாற ட்ரை பண்றன்னு நெனச்சேன்..இல்லையா??”

அவன் இவ்வாறு கேட்கவும் , இவளுக்கு பொத்துக் கொண்டு வந்தது…

“தூக்கத்துல கூட அப்படி நடந்துக்க எனக்குத் தெரியாது…” எனவும்..

“அடேங்கப்பா… அதே மாதிரி தான் நானும்.. எல்லா நேரமும் வர்மாவா மாற  மாட்டேன்..” சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான்.

‘இவன் என்ன சொல்றான்.. ! இப்போ பண்றதெல்லாம் இவனா பண்றானா…! காலங்காத்தால குழப்பறானே’ அவன் வெளியே வரும் வரை இவள் படுக்கையிலேயே இருந்தாள்.

அவன் வெளியே வந்ததும் இவள் அவசரமாக உள்ளே சென்று விட..

அவளுக்கு முன் இவன் காபி அருந்த கீழே சென்று விட்டான்.

வழக்கம் போல ஆகாஷ் தான் அவனுக்காக காபி போட்டு ரெடியாக வைத்திருந்தான்.

வந்தனா இன்னும் வரவில்லை.

“ குட் மார்னிங் ஹெட்.. நல்ல தூக்கமா…” சுட சுட அவன் கையில் காபி கொடுக்க..

“ குட மார்னிங் ஆகாஷ்.. ம்ம்ம்.. ரொம்ப நாளைக்கு பிறகு வார்ம் ஸ்லீப்…” கிட்சன் மேடையில் அமர்ந்து கொண்டே சொன்னான்.

ஆகாஷிற்கு புரிந்து விட்டது.. விஷமாமாக சிரிக்க..

“ ஹெட்.. ப்ரென்ட்லியா கேட்கறேன்… இயல உங்களுக்குப் பிடிச்சிருக்கு தானே!” தன்னுடைய ஹெட் என்பதைத் தாண்டி அவனிடம் ஒரு ஈர்ப்பு எப்போதும் ஆகாஷிற்கு உண்டு. அந்த உரிமையில் கேட்க,

வாகீசனும் அதை உணர்ந்தே பதில் சொன்னான்.

“ எனக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை என்கிட்ட யாரும் போர்ஸ் பண்ண முடியாது ஆகாஷ். யு நோ தட்.. அப்கோர்ஸ் ஐ லவ் ஹர்” எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அவன் காதலை ஆகாஷிடம் ஒத்துக் கொண்டான்.

அதிலும் கூட வாகீசனின் ஆளுமை அவனுக்குத் தெரிந்தது.

“ நீங்க எல்லா விஷயத்துலயும் என்னை அட்மையர் பண்றீங்க ஹெட்… ஐ லைக் யுவர் அட்டிடியூட் . அந்த சித்தர் என்கிட்டே உங்களுக்கும் இயலுக்கும் நடுவுல கனேக்ஷன் வர வைக்கணும்னு சொன்னாரு. நீங்களே அதுக்கு அவசியம் இல்லாம பண்ணிட்டீங்க…” அவனும் உண்மையைக் கூற,

“ வெல்… உனக்கு அவ்வளவு வேலை இல்ல.. அவளுக்கும் என்னைப் பிடிக்கும்னு எனக்கும் தெரியும்.. ஒரு சின்ன ஊடல் அதுவும் உரிமையான ஊடல் தான்.. அவளுக்குள்ள இருக்கு. சீக்கிரம் அவளே அதை உணர்ந்து என்கிட்ட சொல்லுவா..

இது கூட ஒரு மாதிரி என்ஜாய் பண்ணிட்டுத் தான் இருக்கேன்.

கடைசில எங்க போகப் போறா.. நான் தான் அவளுக்கு எண்டு. அவளாலயும் என்னை விட்டு போக முடியாது. நடக்கற சீன்ஸ் எல்லாம் நீயும் கொஞ்சம் ஏத்தி விடு. அது போதும்..” காபி அருந்திய படியே சொல்லிக் கொண்டிருந்தான்.

“ கலக்குங்க ஹெட்… ஆனா என்னமோ உங்களுக்குள்ள ஸ்டார்டிங்லேந்தே இருக்குல…”

“ ம்ம்.. ஆமா.. மே பீ அது எங்க ப்லட் லைன்ல இருக்கறதுனால. ஆனா அது இல்லனாலும் அவள எனக்குப் பிடிக்கும்”

“ சூப்பரா சொல்லிட்டீங்க… உங்களோட இந்த ஃபார்ம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்குள்ள இருக்கற வர்மா சார் கெத்து காட்டறாரு..” சொல்லிக் கொண்டிருக்கும் போதே இயல் உள்ளே வந்தாள்.

இருவரும் அமைதியாக…

அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனக்குக் காபி கலந்து கொள்ள தம்ளரைத் தேடினாள்.

வாகீசன் அவன் குடித்துக் கொண்டிருந்த பாதி காபியை நீட்ட,

“இதுலயுமா!” பாவமாகக் கேட்க,

“ எல்லாத்துலையும் ஷேர் பண்ணிக்கணும்.. அது தான் சேனா சொன்னது”  எங்கோ பார்த்தபடி வாகீ சொல்ல,

“ பெட்டர் நீ அந்த ஹாஃப் காபியை குடிக்கறது தான்னு நான் நெனைக்கறேன்..” ஆகாஷ் கூட சேர்ந்து கொண்டான்.

“ யூ மீன் பெட்டர் ஹாஃப்!” வாகீ கிண்டலாகச் சிரித்தான்.

ஆகாஷும் சிரித்து விட, இயல் தான் தவித்துக் கொண்டிருந்தாள்.

 ‘ இது என்ன ! எப்போ பாத்தாலும் நான் தோத்து போய்கிட்டே இருக்கனுமா.. இனி விடக் கூடாது. நாம முதல்ல சாப்பிட்டிட்டு அப்புறம் இவனுக்குத் தரனும். அப்போ என்ன பண்றான்னு பாக்கறேன்.’  

அவள் இன்னும் அதை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க,

“ ஆகாஷ் உனக்கு இடுப்புல கை போட்டுட்டு தூங்கற வியாதி பத்தி தெரியுமா..!” வாகீ அவளை ஓரக்கனால் பார்த்துக் கொண்டு கேட்க,

‘ அடப் பாவி! இவன் எதை சொல்ல வரான்…கடவுளே இவன் வாய மூடனுமே!’

“ குடுங்க காபியை” வாங்கி மடக்கென குடித்து விட்டுச் சென்றாள்.

ஆகாஷ் புரியாமல் பார்த்துவிட்டு.. “சம்திங் பர்சனல்” என வாகீயைக் கேட்க,

“ ப்ச் .. நத்திங்.. இன்னிக்கு கொஞ்சம் நான் நம்ம வொர்க் பத்தி ரிப்போர்ட் அனுப்பனும். அந்த சிவலிங்கம் பத்தி சொல்லப் போறதில்ல. ஜஸ்ட் கோவில் உருவான வருஷம் அப்புறம் சில பொதுவான தகவல் மட்டும் அப்டேட் பண்ணிடறேன்.

நீங்களும் அதைப் பத்தி வெளிய சொல்லிக்காதீங்க..” என்க,

“ கண்டிப்பா ஹெட்.. எதுவும் லீக்ஆகாது!” உத்திரவாதம் கொடுத்தான்.

அவன் வருவதற்குள் குளித்துவிட்டு வர வேண்டும் என்று இயல் வேகமாக சென்றாள்.

அவசரமாக வந்ததில் துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்று விட, அறையின் கதவையும் தாள் போடாமல் சாத்தி மட்டும் வைத்திருந்தாள்.

ஆனால் அவனோ ரிப்போர்ட் அனுப்பவேண்டும் என்று அறைக்கு வந்து தனது லேப்டாப்பில் மூழ்கி இருந்தான்.

ஐந்தே நிமிடத்தில் வந்து விடலாம் என்று குளிக்கச் சென்றவள், குளித்துவிட்டு டவல் மட்டும் கொண்டு வந்ததை நினைத்து தன்னையே நொந்து கொண்டாள்.

‘ச்சே! எல்லாத்துக்கும் இப்படி பதட்டப் பட்டா இப்படித் தான் நடக்கும். இப்போ எப்படி டவலோட வெளிய போறது..அதுக்குள்ள அவன் வந்துட்டா என்ன செய்றது.. சரி வேகமா போய் முதல்ல ரூம் கதவை லாக் பண்ணிடலாம்.’  இவ்வாறு யோசித்துக் கொண்டே, பட்டென பாத்ரூம் கதவினை திறக்க, சத்தம் கேட்டு லேப்டாப்பில் மூழ்கியிருந்த வாகீசனும் சத்தம் வந்ததால் நிமிர்ந்து பார்க்க,

அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்த அதிர்ச்சியில் அவள் மீண்டும் பாத்ரூமிர்க்குள்ளேயே தஞ்சம் புகுந்தாள்.

‘ ஐயையோ! இவன் எப்போ வந்தான்… பாத்திருப்பானா! கடவுளே! முதல் நாளே இப்படி எல்லாம் நடக்கணுமா! காலைல அவன் மேல கை போட்டு தூங்குனதுக்கே வாரினானே! இப்போ இது வேறயா… ச்சே! எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ!’ அறைக்குள்ளேயே நின்று தலையில் அடித்துக் கொண்டாள்.

ஒரு நொடியே பார்த்திருந்தாலும் , அவளின் அந்த நிலை வாகீசனை புரட்டிவிட்டது.

கழுத்தின் கீழிருந்து முழங்கால் வரை மறைந்திருந்த பாகம் அன்றி , கண்ணுக்கு விருந்தான மற்றவை அவனை பித்தம் கொள்ள வைத்தது.

அதிலிருந்து வெளி வர முடியாமல் தலையைத் திருப்பியவன், அப்போது தான் கவனித்தான், அவளின் சுடிதார் கட்டிலின் மேலேயே இருந்தது.

 

‘ ஓ! மேடம் மறந்துட்டாங்களா… சூப்பர்’

“ என்கிட்டே வாலண்டியரா மாட்டிக்கிரியே” முனகிக் கொண்டே அவளின் உடையைக் கையில் எடுத்துகொண்டு பாத்ரூம் வாசலில் நின்றான்.

“ இயல் கதவைத் திற…” சாதாரணக் குரலில் அவளை அழைக்க,

“ம்ம் ஹூம்.. முடியாது…” அவன் எப்படிப் பட்ட மனநிலையில் இருக்கிறானோ என பயந்து உரைத்தாள்.

“ எவ்வளவு நேரம் உள்ளேயே இருப்ப..வெளிய வந்து தான ஆகணும்.” கதவில் சாய்ந்து நின்று கொண்டான்.

“ நீங்க கொஞ்ச நேரம் வெளிய போங்க.. நான் வந்துக்கறேன்..” கெஞ்சினாள்.

“வாட்.. நான் ஏன் வெளிய போகணும்…இந்த ரூம் என்னோடதும் தான். ஈக்குவல் ரைட்ஸ் இருக்கு…”

“இப்படியே எப்படி வர்றதாம்… !”

“கொஞ்ச நேரம் முன்னாடி வந்த.. இப்போ என்ன?!”

“ விளையாடாதீங்க.. ப்ளீஸ்..” மேலுள்ம் அவள் கெஞ்ச,

சிரித்துவிட்டு.. “ சரி சரி நான் டிரஸ் குடுக்கத் தான் வந்தேன்.. கதவை லேசா திறந்து வாங்கிக்கோ”

அவன் குரலில் விஷமம் இல்லையென்றதும் சற்று நம்பினாள்.

சில நொடிகளில் அவள் தன்னை சமன் படுத்திக் கொண்டு, மெல்ல கதவைத் திறக்க,

அந்த நொடி அவனுக்குள் வர்மா எட்டிப் பார்த்தான்.

‘ என் பொண்டாட்டி தான’ என்ற எண்ணம் முன்னே நின்றது.

லேசாகத் திறந்த கதவை தன் பலத்தால் சட்டெனத் திறந்து , அவளை சுவரோடு சாய்த்தான்.

சற்றும் இதை எதிர்ப்பாராததால் , நெஞ்சம் படபடக்க, அவனை பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளைக் கண்களால் அளந்தான்.

வெறும் டவல் மட்டும் சுற்றிக்கொண்டிருகிறோம் என்ற நினைப்பே அவளை குறுக வைத்தது.

கண்களை இருக்க மூடிக் கொண்டாள்.

அவளின் இறுக்கத்தை உணர்ந்தவன்.. அவள் மேல் மோதி நின்றான்.

அவளுக்கு நடுக்கமே வந்தது… கண்களை திறந்து அவனைப் பார்த்தாள்…

அத்தனை நெருக்கமாக அவனைப் பார்த்ததில் அவளுக்குமே அவளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. மிகவும் சிரமப் பட்டாள்.

மெல்ல “ ப்ளீஸ்” என்றாள்.

“எஸ் ப்ளீஸ்…” என திருப்பிக் கேட்டான்…

“ தள்ளுங்க..” அவன் கண்களைப் பார்த்து சொல்ல,

“ சரி..” என அவள் தோள்களைப் பற்றி இன்னும் சுவரோடு தள்ளினான்.

அவன் கைகள் பட்ட இடம்  உடலில் தீ மூட்டியது.

அதற்குமேல் பேச அவளுக்கு நாக்கு வரவில்லை. ஒட்டிக் கொண்டது.

அவளை நோக்கிக் குனிய அவள் கண்களை மூடி முகத்தைத் திருப்பிக் கொள்ள,

அவளது கழுத்தின் அருகே முகத்தைக் கொண்டு சென்று வாசம் பார்த்தான். அவனது மூச்சு அவளை அசையவிடாமல் செய்ய,

அப்படியே உறைந்து நின்றாள்.

அவளது கையைப் பற்றினான். அழுத்தப் பற்றி அதில் அவளது உடைய திணித்து விட்டு , சட்டென விலகிச் சென்று விட்டான்.

மயக்கம் வராத குறையாக சில நிமிடம் அங்கேயே நின்றாள்.

 

 

 

error: Content is protected !!