KYA- 37

                     காலம் யாவும் அன்பே 37

 

வாகீசன் காலையில் கண் விழிக்க, இயல் சற்று களைப்பாகவே உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளின் நெற்றியில் ஆள் காட்டி விரலை வைத்து அவளது கண்கள், மூக்கு , வாய் என இதமாக வருடினான். லேசாகச் சிணுங்கியவள் இன்னும் உறக்கத்தில் தான் இருந்தாள்.

மூடிய அவளது விழிகளில் மெதுவாக இதழ் பதித்தான். தூக்கத்திலும் அவனது அருகாமை அவளுக்கு உணர மெல்லக் கண் திறந்தாள்.

“ குட் மார்னிங் பொண்டாட்டி..” நெற்றி முட்டிச் சொன்னான்.

“ குட்  மார்னிங் ஹஸ்பன்ட்” அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

அவளின் தோளில் முகம் புதைத்து மீண்டும் கண்மூடினான்.

“ ஹே பொண்டாட்டி! காஃபி போட்டுட்டு வந்து புருஷன எழுப்பரதில்லையா..! நான் உன்னை எழுப்பவேண்டியதா இருக்கு..!” அவளின் இடையைக் கட்டிக் கொண்டு அவனது நீண்ட கால்களை அவள் மேல் கிடத்தினான்.

“ நாம பிப்டி பிப்டி தான… நீங்களும் வாங்க..ஒரு கப் காஃபி போட்டு ரெண்டு பேரும் குடிக்கலாம்.” வாகீசனின் தலையைக் கோதிக் கொடுத்தாள்.

“சுத்தம்… உனக்கு சமைக்க வேற வராதே! எனக்கும் வராது டி பொண்டாட்டி.. சமைக்க ஆள் வெச்சுக்கலாமா ஃபியூச்சர்ல?”  அவன் மீசையால் அவளது கன்னத்தை சீண்ட,

“அதெல்லாம் வேணாம். நான் இப்போ கொஞ்சம் கொஞ்சமா கத்துட்டு இருக்கேன்..!”

“எப்படி ?”

“சமைக்க வர ஆண்டி நைட் சமையல் பண்றப்ப  நானும் கூட இருந்து கத்துக்கறேன். நீங்க அன்னிக்கு என்னை சமைக்க சொன்னீங்கல்ல , அதுல இருந்து கத்துக்க ஆரம்பிச்சேன்.”

“ ம்ம்ம் உனக்கு ரோஷம் மட்டும் நல்லா வருது..” அவன் கை மெல்ல இடையிலிருந்து மேல் நகர,

“ ஏய்.. நோ…” பட்டென அவன் கையை தட்டிவிட்டு எழுந்தாள்.

“ என்ன டி காலைலேயே டிஸ்ஸப்பாயின்ட் பண்ற…” அவனும் எழுந்துகொள்ள,

“ நீங்க எப்படி ஸ்ட்ரிக்ட்டா இருப்பீங்க.. இப்போ!”

“ இது உனக்கே அநியாயமா இல்லையா.. ஸ்ட்ரிக்டா இருந்தா பொண்டாட்டி கிட்ட ரொமான்ஸ் பண்ணக் கூடாதா? எவ்ளோ நாள் தான் நான் விரதம் இருக்கறது.

உன்ன பார்த்த பிறகு தான் இத்தனை நாள் அடங்கியிருந்த ஆசையெல்லாம் ஒண்ணா வெளில வருது.. வாட் டு டூ… புருஷன் பாவம் பொல்லாதது…” குழந்தையானான் அவள் கணவன்.

“ இது என்ன புது மொழியா… அந்த ஆசை, இன்னும் கொஞ்ச நாள் அடங்கியே இருக்கட்டும். வர்மா  ரதி வந்த பிறகு, அவங்களோட நாமளும் ஹாப்பியா இருக்கலாம். ” சொல்லிக் கொண்டே மெல்ல மெல்ல பின்னால் நகர்ந்து பாத்ரூம் செல்ல நினைக்க,

ஒரே எட்டில் காலை கட்டிலின் மறு பக்கம் போட்டு அவளை எட்டிப் பிடித்தான்.

“ நான் தான் வர்மா நீ தான் ரதி.. அப்புறம் என்ன… சேனாவும் நம்மள அவங்களா மாற சொல்லித் தான் அனுப்பினாரு. அவர் சொன்ன அர்த்தம் உனக்குப் புரியலையா…”

தன் இரும்புக் கைகளால் அவளை சுற்றி வளைத்தான். அசைய முடியாத படி அவனது கட்டுக்குள் வைத்தான்.

அவளின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. அவனது கரங்களில் கட்டுண்டு கிடப்பது. அப்படியே அசையாமல் அதை மனதிற்குள் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

“மேடம்…! என்ன…” நெற்றியை முட்டி அவன் அவளைக் கலைக்க,

“ஒண்ணுமில்ல…”

“அப்போ வா… நேத்து விட்ட இடத்துல இருந்து இன்னிக்கு கண்டினியூ பண்ணலாம்.” அவளை அப்படியே தூகிக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றான்.

அவள் கத்துவதை சிறிதும் சட்டை செய்யவில்லை.

அவளை இறக்கி விட, அவள் வெளியே செல்ல எத்தனித்தாள். பிடித்து நிருத்தி பக்கெட்டில் இருந்த நீரை அவள் மேல் அப்படியே கொட்டினான்.

அவள் உறைந்து போய் நின்றாள். அருகில் இருந்த ஷவரை திறந்து விட்டு, அவனையும் இழுக்க, அவனும் நனைய ஆரம்பித்தான்.

இருவரும் முழுதாக நனைந்து நிற்க, அவளின் சுடிதார் மொத்தும் நனைந்து உடலோடு ஒட்டிய உடையில் பெண்மையின் இலக்கணமாக அவன் எதிரே நின்றாள்.

அவன் கண்களுக்கு அவள் விருந்தானாள்.

அது தெரியாமல் அவள் இன்னும் அவன் மீது நீரை அடித்துக் கொண்டிருக்க, அவளைப் பிடித்து நிறுத்தினான்.

ஷவரை மூடியவன், முகத்தில் அவள் தெளித்த நீரை ஒரு கையால் துடைத்துக் கொண்டு, அவளை நோக்கி முன்னேற,

“வேண்டாம் ….” கிறக்கமாக மூச்சு வாங்கி அவள் பின்னால் நகர்ந்தாள். கதவில் மோதி நிற்க, நேற்று போல அவளின் எதிரே நெருக்கமாக அவன் நின்றுகொண்டிருந்தாம்.

அதே நேரம் இவர்கள் இத்தனை நேரம் செய்த கலாட்டாவில் அறையின் கதவு தட்டப் படுவது கூடத் தெரியாமல் நின்றிருந்தனர்.

வந்தனாவும் ஆகாஷும் வெகு நேரம் ஆனதால் வந்து கதவைத் தட்ட,

கதவு திறந்தே தான் இருந்தது என்று மெல்ல கதவைத் திறந்து கொண்டு உள்ளேயே வந்திருந்தனர்.

“ஹெட்!! இயல்…!” ஷவரை நிறுத்தியதில் அவர்கள் கூப்பிடுவது நன்றாகவே கேட்டது.

இயல் , அவர்களின் சத்தம் கேட்டு, “வ….!” என்று வந்தனாவை கூப்பிட நினைத்தாள். அதற்குள் அவளது வாயை மூடியவன்,

“ ஆகாஷ். நான் ரெஸ்ட்ரூம்ல குளிச்சுட்டு இருக்கேன். இயல் அப்போவே வெளில வந்துட்டாளே!” என்று அவளை வைத்துக் கொண்டே சொல்ல,

“ ஓ! ஓகே ஹெட்… நாங்க கீழ போய் பாக்கறோம். ரொம்ப நேரம் ஆச்சேன்னு தான் வந்தோம். சாரி ஃபார் ட்ரபிளிங் யூ…!” டீசன்ட்டாகச் சொல்லிவிட்டு வெளியேற ,

இயல் அவனையே திரு திருவென பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் சென்று உறுதியானதும்,

ஈரமாக இருந்த அவன் சட்டையை அவள் முன்னேயே கழட்டினான்.

முன்பாவது கையில்லாத பனியன் அணிந்திருப்பான், இன்று அதுவும் இல்லை.

அவனது வெற்று மார்பும் உரமேறிய தோள்களும் , ஒட்டிய அவனது வயிறும் , அவள் ஊற்றிய நீரினால் மேலும் அவனை வசீகரமாகக் காட்டியது.

அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றினாலும் , பெண்மையின் வெட்கம் தடுக்க, தலை குனிந்து கொண்டாள்.

மெல்ல அவள் அருகில் வந்து அவளது கையை எடுத்து அவன் மார்பில் வைத்தான். உடலெல்லாம் சிலிர்த்தது இயலுக்கு.  

இருவரும் கண்களில் உயிர் தேக்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “ இங்க துடிக்கற என் உயிர் ஒவ்வொரு வினாடியும் உன்னைத் தான் நினைக்குது. உன்னோடு வாழப் போற வாழ்க்கை மொத்தமும் உன்னை நான் காதலிப்பேன். நீ!?”

தன் காதலை அழகாக அவளிடம் கூறினான். அவளின் பதிலுக்காக காத்திருந்தான்.

அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவளது மற்றொரு கையையும் அவன் மேல் வைத்தாள்.

அவளின் அந்த தொடுகை அவனுக்கு மிகவும் பிடித்தது. ஆனாலும் அவள் பேசவில்லை.

“பதில் சொல்லு…!” அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல,

இரு கைகளால் அவன் மார்பினைத் தடவி, மேலே அவன் கழுத்தை வருட,

அவன் கண்மூடி அனுபவித்தான்.

பின் கழுத்தில் மாலையாகக் கோர்த்துக் கொண்டாள். அவனது பின்னந்தலையில் அவனின் முடியை பிடித்து தன் முன் அவனை இழுத்தாள்.

“ இது இரண்டாவது… இது தான் என் பதில்” எனச் சொல்லி,

அவன் இதழ்களில் மெல்லிதாக முத்தம் வைத்தாள்.

அவள் ஆரம்பித்து வைக்க, வாகீசன் மீண்டும் மீண்டும் அவள் இதழ்களை நாட, அவளின் ஈர உடையின் உதவியால் , அவளை மேலும் கட்டிப் பிடித்து கைகளால் எல்லை மீறினான்.

தடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லாமல் இயல் அவனுக்குள் புதைந்து போனாள் .

ஒரு கட்டத்திற்கு மேல் நிலைமை எல்லையைத் தாண்டுவதாகத் தெரிந்ததும் இருவரும் சட்டென விலகிக் கொண்டனர்.

மூச்சு வாங்கி தள்ளி நின்று பார்க்க, அவர்களுக்கே சிரிப்பு வந்தது.

இயல் மீண்டும் அவனிடம் வந்தாள்.

“ எனக்குப் பிடிச்ச எங்க ஊர் பிரகதீஸ்வரன் தான் இந்த ஈஸ்வரனை எனக்குக் குடுத்திருக்காரு. அந்த ஆண்டவனுகுக் கண்டிப்பா நன்றி சொல்லணும். பஞ்சாயத்து தலைவர் சொன்ன மாதிரி நான் விரதம் இருக்கப் போறேன்.”

“ உனக்கு என்னை பேர் பாடியா பாத்து மர கழண்டுடுச்சா… நீ ஏற்கனவே கல்யாணம் ஆனவ. அவர் சொன்னது புருஷன் வேணும்னு கேட்டு விரதம் இருக்க சொன்னாரு. உனக்குத் தான் குத்துக் கல் மாதிரி முன்னாடியே நிக்கறேனே!”  அவளைச் சீண்டினான்.

“ ஆமால ! ஆனாலும் அந்த ஆண்டவனுக்கு நான் எதாச்சும் பண்ணனும்.” தலையில் அடித்துக் கொண்டு சொல்ல,

“ம்ம்ம்…. முதல்ல நம்ம வர்மா வரட்டும். அப்புறம் அப்பா அம்மாவை கூப்டு வெச்சு முறையா ஒரு ரிசெப்ஷன் வெச்சுக்கலாம். அதுக்கு பிறகு உங்க ஊருக்கு போய் நேராவே அந்த பிரகதீஸ்வரனுக்கு நன்றி சொல்லுவோம்..

இப்போ நீ ரெடி ஆகி வா. நான் உனக்கு டிரஸ் எடுத்துட்டு வரேன்.”

அவள் தயாராகி வெளியே வர தானும் வந்தான்.

கீழே சேனா அவனுக்காக காத்திருந்தார்.

அவன் தாங்கள் இருவரும் சேர்ந்து விட்டதாக அவரிடம் சொல்ல நினைத்து வர,

அவரே, “ ரெண்டு பேரும் ஒன்னாயிட்டீங்க.. நல்லது” எண்டு சிரித்துக் கொண்டு சொல்ல,

“ அதைத் தான் நானும் சொல்ல வந்தேன். உங்களுக்கே எல்லாம் தெரியும். நான் சொல்லத் தேவையே இல்லை.” வாகீ சொல்ல,

“ இல்ல, இப்போ ஒரு இக்காட்டான சூழ்நிலை. இந்த நேரத்துல நீங்க சீக்கிரமே சேர்ந்ததும் ரொம்ப நல்லதா போச்சு..”

“ என்ன ஆச்சு!?” வாகி சற்று குழப்பமடைய,

“நாம சீக்கிரமே வர்மாவ வர வைக்கணும். இந்த ஊர் திருவிழா முடியறதுக்குள்ள…” கலக்கமாக சேனா சொல்ல,

“ஒரு மாசம் சொன்னீங்களே! இப்போ என்ன பிரச்சனை அதுல? எதுவா இருந்தாலும் நான் இருக்கேன் ஹெல்ப் பண்ண.. வர்மா ரதிய மீட்டே ஆகணும்!” வாகீ வாக்குக் கொடுத்தான்.

“ வர்மா கிட்ட இருக்கற சிவலிங்கம் கொஞ்சம் கொஞ்சமா தேய ஆரம்பிச்சு இருந்துச்சு. அது முழுசா முடியறதுக்குள்ள அவங்க இங்க வரணும். இல்லனா நிரந்தரமா அங்க தான் இருக்கணும்.

அந்த சிவலிங்கம் தான்  மூன்றாவதா தோன்ற போற சுயம்பு லிங்கத்துக்கு அஸ்திவாரம்.

அது இல்லனா சிவன் கோவத்துக்கு ஆளாகனும். இத்தனை நாள் நான் பண்ண பூஜை பலன் எல்லாம் வீணாயிடும்.

இந்த ஊர் சாமியோட பலம் கடைசி நாள் தேர் ஊர்வலம் வரப்ப ரொம்ப அதிகமா இருக்கும். அப்போ நாம அவங்கள இந்த ஊருக்கு வர வைக்க சுலபமா இருக்கும்.

அதுனால இன்னி லேந்து  நான் அந்த பாதாள லிங்கத்துக்கு பூஜை பண்ணப் போறேன். எல்லாம் அவன் தான் நல்லா நடத்திக் கொடுக்கணும்.

நீயும் இயலும் நான் சொன்ன தம்பதி ஒற்றுமைய கடை பிடிச்சுட்டு வாங்க. கடைசி  நாள் பூஜை பண்ணறப்ப என் கூட நீங்க இருக்கணும்.

அப்போ தான் இந்த உலகத்துல வர்மா ரதி இருக்காங்கன்னு இயற்கைய நம்ப வைக்கப் போறேன்.

அப்போ அங்க இருக்கற வர்மா ரதிய இயற்கையே கொல்லப் பார்க்கும். இல்லனா உங்க ரெண்டு பேர இங்க கொல்லப் பார்க்கும்.

வர்மாவுக்கு அவன் கைல இருக்கற சிவலிங்கம் அன்னிக்குத் தான் முழுசா கரையும். அந்த லிங்கம் கொஞ்சம் இருக்கும் போதே அவங்கள இங்க அது இழுக்கும்.

அதுக்குப் பிறகு உங்களுக்கு சக்தி குடுக்க சிவலிங்கத்துக்கு அடில இருக்கற நீருக்குள்ள உங்கள பாதுகாப்பா வைக்கப் போறேன்.

இந்த சிவலிங்கம் உங்களை காப்பாத்தும்.

சரியா தேர் இந்த ஊற சுத்தி வர நேரம் உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வெச்சுட்டா ரெண்டு பேரும் இந்த உலகத்துலையே இருந்திடலாம்.

இந்த ஒரு வாரம் பூரா நான் வர்மா கையில இருக்கும்  லிங்கத்தை  உருகாம வைக்கச் சொல்லி இந்த சிவன் கிட்ட வேண்டப் போறேன்.

அதுனால கவனமா இருங்க… நான் அடுத்த வாரம் கடைசி நாள் , தேர் நாள் அதிகாலைல உங்கள அந்தக் கோவில்ல சந்திக்கறேன். வரேன்.” முகத்தை தீவிரமாக வைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

அனைத்தையும் மற்ற மூவரும் கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.

“இது ஆபத்து இல்லியா ஹெட்”. ஆகாஷ் கேட்க,

“ எங்களுக்கு உயிர் குடுத்தவங்கள அப்படியே விட முடியாது.எதுவா இருந்தாலும் செஞ்சு தான் தீருவேன்!” உறுதியாக நின்றான் வாகீஸ்வரன்.