LogicIllaaMagic10

மேஜிக் 10

 

“லவ் லவ்… ஆனா அவனுக்கு…வைஷு…” என்ன சொல்வதென்றே தெரியாமல் தடுமாறிய நிவேதா, தயக்கத்துடன் நந்தனாவை பார்க்க

“ம்ம் நேத்து தான் வைஷாலி அவங்களை பாத்தேன். மாமாவையும் பார்த்து ஆசீர்வாதம் வாங்கினோம்”

நந்தனா பேசப் பேச நிவேதா குழப்பத்தின் உச்சியிலிருந்தாள்.

‘என் கிட்ட எல்லாத்தையும் சொல்வான். எப்படி உன்னை பத்தி சொல்லாம மறைச்சான் ? வரட்டும் வச்சுக்குறேன்! ‘ மனதில் அண்ணனைக் கருவியவள்

“எப்போலேந்து? நீங்க இரண்டும் பேரும்…”

“கொஞ்ச நாளாத்தான்” புன்னகைத்தபடி நந்தனா சொல்ல

‘அடப்பாவி ஒரு வார்த்தை சொல்லலை? ‘

“ஓஹோ… அவன் ஏனோ எங்க கிட்ட எதுவும் சொல்லலை அதான் தப்பா எடுத்துக்காதே. சாதாரணமா எல்லாத்தையும் நாங்க குடும்பமா ஷேர் பண்ணிப்போம், இதை ஏன் சொல்லாம விட்டான்? வரட்டும்”

நந்தனாவிற்கோ உள்ளே உதறல் ‘ டேய் நல்லவனே ! நீ விட்ட பொய்யை நூல் பிடிச்சு நானும் வறேன். எங்கள் போய் முடியுமோ’

“ஆமா முதல் முதல்ல எங்க பார்த்தீங்க? எப்படி பழக்கம்? யார் முதலில் காதல சொன்னது? அவனுக்கு நிச்சயமானதை சொன்னானா? இல்லை மறைச்சானா? “ கேள்விக் கணைகளை நிவேதா தொடுக்க

“ப்ளீஸ் ப்ளீஸ் மெதுவா. முதல் கேள்விக்குப் பதில் சொல்லும்போதே அடுத்த கேள்வி மறந்துடுவேன் பா… மெதுவா கேளுப்பா” இயல்பாய் நந்தனா சிரிக்க, சிரித்துவிட்ட நிவேதா

“சரிசரி…முதல்ல எங்க பார்துக்கிடீங்க?”

“ஹோட்டல்ல”

“எப்படி பழக்கம்?”

“என் காலேஜ் ஐடி கார்டு அவர்கிட்ட கெடச்சு திருப்பி கொடுக்க வந்தபோது”

“யார் முதலில் காதலை சொன்னது?” ஆர்வமாக நிமிர்ந்து அமர்ந்தாள் நிவேதா

“அவர்தான்…” சிரிப்புடன் சொன்ன நந்தனா, பொய் சொல்லிப் பழக்கமில்லாத காரணமோ என்னவோ நிவேதாவை பார்க்காமல் தரையைப் பார்த்தபடி அவள் பேச, அதை வெட்கமென்று தவறாய் புரிந்துகொண்டாள் நிவேதா.

“போலிச் சாமியார் ப்ரோபோஸ் பண்ணனா? நம்பவே முடியலையே! என்னடா அதிசயம்?” நிவேதாவின் ஆச்சரியம் அவள் குரலிலும் முகத்திலும் அப்பட்டமாக வெளிப்பட்டது

“போலிச்சாமியாரா?” நந்தனா விழிக்க

“ஆமா சொல்றேன் சொல்றேன்…முதல்ல என் கேள்விகளுக்கு நீ பதில் சொல்லுவியாம்! “

“ம்ம் கேளுப்பா” நந்தனா புன்னகைக்க

“அவனுக்கு நிச்சயம் ஆனதைச் சொன்னானா?”

‘ஆஹா! சொல்லித்தான் காதலை சொன்னானென்று சொல்லனுமா ? இல்ல காதலை சொல்லிட்டு நிச்சயம் ஆனதை சொன்னானென்று சொல்லனுமா?’ எவ்வளவு யோசித்தும் நிரஞ்சன் தன் வீட்டில் தனக்கு நிச்சயமானதைச் சொல்லவில்லை என்பதைத் தாமதமாகவே உணர்ந்தாள்

‘எதையோ சொல்லிவைப்போம்’

“லவ் அப்புறம்தான் சொன்னார்” மீண்டும் அவள் தரையைப் பார்க்க

‘ கியூட்டா வெட்க பட்ரா’ நந்தனாவை மனதில் கொஞ்சிக் கொண்டவள்’. ஆனா சின்னப் பெண்ணா இருக்களே. காதலுக்குக் கண் இல்லைதான் போல. நல்ல பெண்ணா இருப்பண்ணுதான் தோணுது’ ஏனோ நிவேதவிற்கு நந்தனாவை மிகவும் பிடித்தது.

“இப்போ நீ சொல்லு போலி சாமியார் என்னது?” விடாமல் கேட்டாள் நந்தனா

உறக்க சிரித்த நிவேதா “உன் ஆளுதான் போலி சாமியார் “மீண்டும் சிரிக்கக் கேள்வியாய் பார்த்தவள் “புரியலை பா”

“அவன் இருகான்ல, இல்லை இல்லைன்னுவான் ஆனா பின்னாடி தில்லாலங்கடி வேலை செய்வான்.

உதாரணத்துக்கு நான் சாக்லேட் கொடுத்தா வேண்டாம் உடம்புக்கு நல்லது இல்லை அது இதுன்னு அட்வைஸ் பண்ணுவான். ஆனா ராத்திரி நைசா வந்து ப்ரிட்ஜ் லேந்து எடுத்துப் பார் பாரா தின்னுடுவான்…

பிரெண்ட்ஸ் கூட ஷாப்பிங் போக காரோட்ட கூப்பிட்டா படிக்கணும்னு சொல்லுவான்… பார்த்தா வீடியோ கேம்ஸ் ஆடிகிட்டு இருப்பான் வீட்டுல…சரியான ஃபிராடு! அதான் நாங்க வீட்ல அவனைப் போலி சாமியார்னு சொல்லுவோம்.” ஹாஹா. என்று நிவேதா சிரித்தாள்.

“ஆமா உன்கிட்ட எதான ரீல் விட்டானா ?”

‘ரீல் விட்டானா வா? ரீலை தவிர வேற எதுவும் இல்லை . ரீல் மட்டுமே விடுரண்ணு எப்படி சொல்லுவேன் ‘ அவள் யோசிக்க

” என்னாச்சு?” நிவேதா கேட்க

“இல்லை யோசிக்கிறேன்…. ”

“பொறுமையா யோசி.ஆமா இன்னிக்கி பீச்சுக்கு போனீங்களா? இன்னும் வேற எங்க எல்லாம்…சினிம, பார்க்” நிவேதா மெல்லப் போட்டுவாங்க

“இல்ல பீச் மட்டும் தான். அதுவும் இன்னைக்கு தான் முதல் தடவை. அவர்தான் சினிமாவே பார்க்க மாட்டாரே…”

“என்னது சினிமா பார்க்க மாட்டானா? இதென்ன புது புரளியா இருக்கு!” மேலும் பலமாக நிவேதா சிரிக்க

நந்தனா விழிகள் விரிவதைக் கண்டு மேலும் பலமாய் சிரித்தாள் நிவேதா.

“அவனா சினிமா பார்க்க மாட்டான்? அய்யோ ஆண்டவா அவன் நிறையவே பார்ப்பான். எம்.ஜி.ஆர் படம்னா வெறி. வடிவேலுவின் தீவிர ரசிகன். இங்கிலீஷ் படம் ஒன்னு விடாது. உனக்கு ஒன்னு தெரியுமா? அவன் சினிமா பார்க்கத் தனியா தியேட்டர் ரூம் ரெடி பண்ணி வெச்சுருகான். ” அவள் மேலும் சிரிக்க

‘ அடப்பாவி வாயைத் திறந்தாலே பொய்யா? அய்யோ ஆண்டவா!’ என்ன சொல்வதென்று தெரியாமல் நந்தனா விழிக்க

“ஒரு நிமிஷம் அம்மாவை பார்த்துட்டு வரேன்” மைதிலி இருந்த அறைக்குச் சென்றவள் சில நிமிடங்களில் வந்தாள்.

“அவங்களுக்கு எப்படி இருக்கு ? என்னாச்சு அவங்களுக்கு ?” நந்தனா ஆதங்கம் தாங்காமல் கேட்க.

“பயபட ஒண்ணுமில்ல. அவங்களுக்கு லோ பீபி ( குறைந்த இரத்த அழுத்தம் ). எப்போதும் அம்மா இப்படி விரதம் இருந்தா நானோ அப்பாவோ இல்லை அவனோ போவோம் துணைக்கு. இன்னிக்கின்னு பார்த்து அப்பா பிசி, எனக்குப் பீரியட்ஸ், அவனோ வர லேட் ஆகும் சொல்லி இருக்கான். அம்மா தனியா போய் இப்படி.

வீட்ல இப்படி ஆனா நாங்க இருக்கோம் பரவால்ல, வெளில தனியா போய் அதான் கொஞ்சம் டென்ஷன். ஆனா பரவால்ல கொஞ்சம் ரெஸ்ட்எடுத்தா சரி ஆகிடுவாங்க. யூ டோண்ட் வொரி டா ” ஸ்நேக புன்னகையுடன் நிவேதா சொல்ல.

“என்ன விரதம்? அவங்களே டாக்டர் தானே இப்படி அஜக்ரதையா இருக்கலாமா?” நந்தனாவின் ஆதங்கம் ஏறியதே தவிரக் குறைவதாக இல்லை.

“ஊருக்குத் தான் டாக்டர்! வீட்டுல அம்மால? அதான்… அம்மாக்கு எங்களுக்கு என்னன்னாலும் தங்கமாட்டாங்க ! உடனே விரதம், வேண்டுதல் தான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோவில். சொல்பேச்ச கேட்டா தானே. இப்ப என்ன வேண்டுதல் தெரியலை ” கண்களை மூடி சற்று அமைதியான நிவேதா தானாகத் தொடர்ந்தாள்

“இவனோ ஹாஸ்பிடல்ல டெர்ரர்ரா இருக்கான், வீட்ல ஒரேயடியா சாஃப்ட்டா இருக்கான். எங்க யாருக்காவது ஒன்னுன்னா தாங்கமாட்டான். பாசக்கார பய! ” புன்னகைத்த நிவேதா

” அவன் கோவக்காரன் தான், ஆனா ரொம்ப நல்லவன்… அதுக்கு நான் கேரண்டி…”

“என்னடா இது அதிசயம் என் தங்கை எனக்கு நல்லவன் பட்டம் குடுக்குறா ?” சிரித்தபடி படிக்கட்டில் இறங்கி வந்துகொண்டிருந்தான் நிரஞ்சன்.

ஃபார்மல் உடையில் கம்பீரமாகத் தெரிந்தவன் முழங்கால் வரை நீண்ட வெள்ளை ஷார்ட்ஸ் , நீல டீ ஷர்ட் அணிந்து விறுவிறுவென இறங்கி வருவதைக் கண்ட நந்தனா அவனைத் தன்னை அறியாமல் மனதில் மீண்டும் படம் பிடித்துக்கொண்டாள்.

‘ என்னடா இவளோ அழகா இருக்கே!. நீ டாக்டரா? காலேஜ் பசங்க தோத்தாங்க போ! ஒரு வேளை பிளாஸ்டிக் சர்ஜன் தனக்கு தானே எதான செஞ்சு வயசை மறைகிறானோ ?’ கண்ணிமைக்க மறந்து நந்தனா நிரஞ்சனையே பார்த்திருக்க

இதை கவனித்த நிவேதா சத்தமாகத் தொண்டையை செரும, நந்தனா நிராஜனிடமிருந்து கிட்டத் தட்ட அவன்மேல் ஒட்டிகொண்ட தன் கண்களை கஷ்டப்பட்டு விலக்கினாள்.

“என்னைப் பத்தி என்ன சொல்றா என் செல்லம்? ” தங்கையின் தலை முடியைக் கலைத்தவன் எதார்த்தமாகக் கேட்டபடி சார்ஜரிலிருந்த தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தபடி

“நிவி அம்மா எழுந்தாங்களா? செக் பண்ணியா ?” கேட்க

” எஸ் இப்போ ஓகே! பிபி பரவால்ல. தூங்கட்டும். ”

” நான் பார்த்துட்டு வரேன்” தன் அன்னையைத் தானே பரிசோதிக்கும் வரை அவனுக்குத் திருப்தி இல்லை.

” நார்மல்” என்றபடி வந்தவனை முறைத்த நிவேதா

” அதைத் தானே டா நானும் சொன்னேன்? ”

புன்னகைத்த நிரஞ்சன்

“அதெல்லாம் அப்படிதான். நிவி சூடா காபி போட்டுத்தா பார்ப்போம் ! ” என்று சொல்ல

அண்ணன் சொன்ன மரு நொடி சிட்டாய் பறந்து சென்றாள்.

அவள் சென்றதும் நந்தனாவின் அருகில் சென்றவன் “பேபி உங்க வீட்ல சொல்லிடு. நானே ட்ராப் பண்ணுறேன். ஒரு காபி மட்டும் குடிச்சுட்டு கிளம்பலாம்.” சொன்னபடி தன் கைப்பேசியை நோண்ட, தலை அசைத்தவளோ அவன் சொன்னபடியே தன் வீட்டாரிடம் சொன்னாள்.

காபியுடன் நிவேதா வர அதை குடித்தவன். “நிவி நான் நந்துவை வீட்ல ட்ராப் பண்ணிட்டு வரேன். அம்மா எழுந்தா எனக்கு உடனே ஃபோன் பண்ணு சரியா.

நைட் சமையல் நான் பாத்துகுறேன். நீ அம்மா பக்கத்திலேயே இருந்து படி.” என்றபடி கார் சாவியை எடுத்துவரச் செல்ல.

நிவேதா “என் பிரென்ட் யாரையாவது ட்ராப் பண்ண சொன்னா மூக்கால் அழுவான். இப்போ நீன்னதும் பறக்குறான்.” என்று கிண்டல் செய்தபடி சிரிக்க,

என்ன சொல்வதெனத் தெரியாமல் விழித்த நந்தனா, நிரஞ்சன் வரவும் தப்பித்தோம் பிழைத்தோமென அவனுடன் கிளம்பினாள்.

காரில் ஏறிய சில நிமிடங்களில்

“சாரி பேபி நான் உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேச நினைச்சேன். ஆனா அம்மா கால் வந்ததால அப்போ பேச முடியலை”

“பரவால்ல சார் சொல்லுங்க. இப்போ வீட்டுக்குப் போறவரை டைம் இருக்கே”

“ம்ம் சரி முதல்ல எனக்கு ஒரு விஷயம் சொல்லு, நீ ஏன் தெளிவா சொல்லாம கோவில் வாசலில் என்கிட்டே வாங்கிக்கட்டிக்கிட்டே? உண்மையை மொதல்லேயே சொல்லிருக்கலாம்ல? ”

அதுவரை அவளைக் கடிந்து பேசியது அவன் மனதை உறுத்த, கேட்டவனின் குரலிலிருந்தது ஆதங்கமா? கோவமா? புரியவில்லை அவளுக்கு

‘என்னடா இது லூசுத்தனமா கேக்குறே?’

“இதை எப்படியொரு ஆம்பளைகிட்ட சொல்ல முடியும்?”

“இதுல என்ன இருக்கு ? இது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு மாசமும் வர இயற்கையான விஷயம் தானே? சொல்லப் போனா ஸ்ருஷ்டிக்கே இதான் ஆதாரம், இதுக்கா வெட்க பாடுவாங்க? லூசு!” புன்னகைத்தபடி அவன் சொல்ல

“இருந்தாலும்…”

“உங்க வீட்டு ஆம்பளைங்க கிட்ட சொல்ல இப்படித்தான் தயங்குவியா?”

“இல்ல”

“அப்புறமென்ன என்கிட்ட சொல்ல ?” என்றவன், சொன்னபிறகே தன் கேள்வியிலிருந்த அபத்தத்தை உணர்ந்து அவளின் புறம் மறந்தும் திரும்பாமல் காரை ஓட்டினான்.

‘இவன் என்ன சொல்லவரான்? இவனும் நாமளும் ஒரே குடும்பம்னா? ஆஹா சரி இல்லை நந்து இது சரியே இல்லை’

“நீங்க என்ன சொல்லவரீங்கனு புரியலை?” அவனைக் கூர்ந்து பார்த்தவாறு கேட்க

‘அதையே நோண்டறதை பாரு’

“சரி அதை விடு, அப்புறம் நான் சொல்லவந்ததை மறந்துடுவேன்”

“ம்ம் சொல்லுங்க”

“பேபி நாம லவ் பண்றதாவே கொஞ்ச நாள் இருக்கட்டுமே!” வெகு சாதாரணமாய் அவன் சொல்ல, திகைத்து விழித்தது நந்தனா தான்.

“என்ன சொல்லவரீங்க? புரியுற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்”

“நீயும் நானும் காதலிக்கிறதா கொஞ்ச நாள்வரைக்கும் சொல்லுவோமுன்னு சொன்னேன்” மீண்டும் சர்வசாதாரணமாகச் சொல்ல

‘அடப்பாவி….இப்போதான்டா உன் சதியே எனக்குப் புரிஞ்சுது’

“ நீங்க வேணும்னே என்னை உங்க வலைல விழ வைக்கப் பாக்குறீங்க! எனக்குப் புரிஞ்சுபோச்சு. அது மட்டும் எப்போவும் நடக்கவே நடக்காது” அவனை முறைத்தபடி மிரட்ட

நிரஞ்சனோ உரக்கச் சிரித்தபடி “இதுதான் நான் கேட்டத்துலயே பெரிய ஜோக்…உனக்கு எதுல தமாஷ் பண்ணர்துன்னு இல்லையா பேபி?” அவன் சிரிப்பை அடக்காமல் சிரித்துக்கொண்டே இருக்க

‘நான் சீரியசா சொல்றேன், தமாஷுங்குறான்? ஒரு வேளை நாம தான் அவசரப் பட்டோமோ?’ அவள் யோசித்திருக்கும் பொழுதே,

“விளையாடாம நான் சொல்றதை கேளு மா. எனக்குக் கொஞ்ச நாள் உன் உதவி வேணும். நீ தப்பா எடுத்துக்க மாட்டேன்னா சொல்றேன்”

“என்ன உதவி?”

“நீ நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு உன் பதிலை சொல்லு. நடுவுல புகுந்த தய்யா தக்கான்னு குதிக்கக் கூடாது சரிதானே?”

‘நீ மொதல்ல சொல்லு… குதிக்கலாமா, மிதிக்கலாமான்னு நான் முடிவு பண்ணிக்குறேன்’

“ம்ம் சொல்லுங்க”

“நான் சொல்றவரை நாம லவ்வர்ஸ்ன்னு தான் எல்லாரும் நம்பனும். ப்ளீஸ் இந்த உதவியை மட்டும் உன்னால செய்ய முடியுமா?”

“என்ன விளையாடுறீங்களா? இவளோ நாளா பொய் சொன்னதே எனக்கு ரொம்ப கில்டியா (குற்றவுணர்வு) இருக்கு. இதுல இன்னுமா? சாமி! என்னால முடியாது” பதறியவள், சந்தேகமாய்

“ஆமா எதற்குப் பொய் சொல்லணும். ஏற்கனவே சொன்ன பொய்க்கு உங்க ஆளுகிட்ட நீங்கச் சமாதானம் சொல்லணும் மறந்துபோச்சோ?” கிண்டலாகச் சொல்ல

“என் ஆளா? யார் அது?” புருவம் உயர்த்தி அவன் கேட்க

“அதான் அந்த டாக்டர் வைஷாலி”

உரக்க சிரித்துவிட்டவன் “என்ன நீ இன்னிக்கி ஒரே ஜோக்கு மேல ஜோக்கா சொல்ற?”

“ஜோக்கா? உங்களுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு பேரு வைஷாலி தானே?”

“ஆமா வைஷாலி கூடத் தான் நிச்சயமாச்சு, அதுக்கு வைஷு என் ஆளாவாளா?” தலையை இல்லை என்றபடி ஆட்டியவன்

“நோ வே! என் லைஃப்ல அவ இல்லை வேற எந்தப் பெண்ணுக்குமே இடமில்லை” என்றபடி தோளைக் குலுக்க

‘இவன் என்ன சொல்றான்? எந்தப் பெண்ணுக்குமே இடமில்லைன்னா? ” ஏதும் பிடிபடாமல் அவள் குழப்பமாய் அவனையே பார்க்க

அவள் துருதுரு பார்வை துளைத்தாற்போல் அவள் புறம் திரும்பியவன்

“காதலிக்கவோ கல்யாணம் பண்ணிக்வோ எனக்குக் கொஞ்சமும் விருப்பம் இல்லை. ”

‘ என்னடா சொல்றே?’ ஏனோ நிவேதா சொன்ன போலிச் சாமியார் நினைவிற்கு வர ‘ஒருவேளை வேணாம் வேணாம்னு சொல்லிட்டு எதுக்கான அடி போடுறானோ? ‘

” என் இப்படின்னு சொல்ல முடியுமா ? ”

” காரணம் சொன்னா தான் உதவி செய்வியா? ”

“அப்படி இல்லை! ஆனா நீங்க சொல்ற காரணம் எனக்கு ஒகேன்னா…யோசிப்பேன் ”

” சரி. கேளு.” நீண்ட மூச்சொன்றை விட்டவன் பேசதுவங்கினான்.