LogicillaMagic3

மேஜிக் 3

நந்தனா, சுகன்யா மற்றும் மயூரா ஒன்றாகக் காலேஜ் கேண்டீனில் உணவருந்திக் கொண்டிருந்தனர்.

இரண்டு நாட்களாகவே நந்தனா எதிலுமே நாட்டம் இல்லாமல் இருக்க, சுகன்யா பொறுமையிழந்து.

“நந்து என்ன உன் பிரச்சனை? ஒழுங்கா பேச மாட்டேங்குறே, டான்ஸ் ரிஹெர்சலுக்கும் வரலை. என்னதாண்டி நெனச்சுக்கிட்டு இருக்கே ? “

தோழியின் வசவு எதுவும் நந்தனாவின் செவியில் விழுந்தப் பாடில்லை. ஏனோதானோ என்று அவள் உணவருந்திக் கொண்டிருக்க,

சுகன்யா அவள் தோளைப் பிடித்துக் குலுக்கி “ஹேய்! கேட்கறேன்ல என்னடி அப்படி யோசனை ? எப்போவும் ஏதோ போலவே இருக்கே உடம்புக்கு ஏதாவது முடியலையா?”

நந்தனாவோ “ம்ம்…ம்ம்… “ என்று மலங்கமலங்க விழிக்க

அவள் எதிரில் அமர்ந்திருந்த தோழி மயூராவோ ‘சுத்தம்! ஒருவேளை ஏதா இருட்டுல தனியா போய்க் காத்து கருப்பு அடிச்சுருக்கோ? இப்படி முழிக்குறா? எதற்கும் டெஸ்ட் பண்ணுவோம்’ என்று எண்ணி “நந்தனா சாயங்காலம் கோவில் போகலாமா ?“

“ம்ம்” இப்பொழுதும் நந்தனா இவ்வுலகத்தில் இல்லை

“கோவில் போகலாமா….?” சற்று உரக்க மீண்டும் கேட்டாள் மயூரா.

“இல்லைடி நான் வரலை” வேகமாக வந்தது பதில்

சுகன்யாவோ “ஏண்டி இப்படி சொல்றே? உனக்குப் பிடிச்ச அசோக் நகர் ஆஞ்சி கோயில் போவோம்டி! “

“நான் வரலை….”

மயூரா வோ “சரி நம்ம திநகர் வெங்கி பாக்க போலாமா? “

“நான் வரலை மயூ” குரலில் ஒட்டுதலின்மை தெளிவாய் வெளிப்பட்டது

விடாத மயூரா “இல்லாட்டி முப்பாத்தம்மன் கோவில் போகலாமா?”

“நான் தான் வரலைன்னு சொல்றேன்ல? ச்சே” கோவமாய் எழுந்த நந்தனா, திரும்பிப்பார்க்காமல் விறுவிறுவெனச் சென்றுவிட்டாள்.

அரண்ட மயூராவோ “ஆத்தாடி இந்தக் கத்து கத்துறா! சாத்தியமா பேய்தான் பிடிச்சுருக்கு சுகு…” என்று தோழியைப் பயத்துடன் பார்த்தவள் மேலும் “அய்யயோ! அய்யயோ ! என் ஃபிரென்டுக்கு பேய் பிடிச்சுருக்கே ! அய்யயோ…” என்று அலற

சுகன்யாவோ கடுப்பாகி “அடச்சே ஏண்டி இப்படி கத்துறே? நீ கத்துற கத்தில் ஊருல இருக்குற எல்லா பேயுமே இங்க வந்துற்றபோதுடி”

பதற்றம் குறையாதா மயூராவோ “என்னமோ எனக்கு அவளைப் பார்த்தாலே பேயைப் பார்க்குற மாதிரியே இருக்குடி. கண்டிப்பா இது பேய்தான்! ”

“ஏண்டி மயூ என்னையும் பயமுடுத்துறே? அப்படியெல்லாம் இருக்காதுடி”

“எனக்குத் தெரியும்டி. என் பாட்டியோட சித்தியோட பேத்தி நாத்தனாருக்கு இதேபோலப் பேய் பிடிச்சுது நாங்க எல்லாம் பேயோட்டும்பொழுது பார்த்தோம். இது நிச்சயமா பேய்தான்!” மயூரா நந்தனாவிர்க்கு பேய் தான் பிடித்திருக்கிறது என்று முடிவே செய்துவிட்டாள். மனதில் ‘மொதல்ல தாயத்து வாங்கி கட்டிக்கிட்டுத் தான் காலேஜுக்கு வரணும் மயூ’.

அன்று நாள் முழுவதும் மயூரா நந்தானாவின் அருகில் செல்லவே இல்லை.சுகன்யாவோ தோழி நந்தனாவை எண்ணி கலக்கமுற்றாள்.

அன்று மாலை இதற்குமேல் தாங்காதென்ற மனநிலையில் இருந்த நந்தனா, வாட்சப்பில் நிரஞ்சனை தொடர்புகொண்டு பேசினாள்.

நந்தனா : ஹாய் நான் நந்தனா

நொடியில் பதில் வந்தது

நிரஞ்சன் : எஸ் சொல்லு நந்து

‘அட உடனே பதில் வருதே’

நந்தனா: உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்

நிரஞ்சன் : பேசிட்டு தானே இருக்கோம்

நந்தனா : அதில்லை

நிரஞ்சன்: எதில்லை ?

‘கவுண்டர் கொடுக்குறானாமா…’

நந்தனா : கடவுளே ! அறுக்காதீங்க.

நிரஞ்சன் : நான் நிரஞ்சன் கடவுள் இல்லை.பிளஸ் நான் சர்ஜன் அறுக்காமல் எப்படி?

‘ டார்ச்சர் பன்றானே ஆண்டவா ‘

நந்தனா : ப்ளீஸ்! நான் சொல்ல வந்ததை மறந்துருவேன்

நிரஞ்சன் : ஓகே ஓகே சொல்லு (சிரிக்கும் ஸ்மைலீ)

நந்தனா : நான் அம்மா அப்பாகிட்ட சொல்லப் போறேன் இன்னிக்கி

நிரஞ்சன் : எதை

நந்தனா : நம்ம லவ் பத்தி

நிரஞ்சன் : நாம லவ் பண்றோமா என்ன ?

‘சொதப்புரியே நந்து… பேசின உளறுவேன்னுதானே மெஸேஜ் அதுலயும் சொதப்புரியே மக்கு முண்டம்’

நந்தனா : ஐயோ இல்லை ! அத்தை அப்பாகிட்ட நீங்க ரெஸ்டாரண்டுல விட்ட கதையை அவிழ்த்துவிட்டா ? நான் இதுவரை அவங்ககிட்ட எதுவுமே மறைச்சதில்ல, பொய் சொன்னதுமில்ல. அதான் ஏதோ உறுத்தல். பிளஸ் அத்தை அப்பாகிட்ட சொன்னா, அவர் என்னைத் தப்பா நெனச்சுட்டா? அதான்…

நிரஞ்சன் : ….

நந்தனா : ஒரு வேளை உங்கள கேட்டா நீங்களும் சொல்லுங்க

நிரஞ்சன் : என்னனு?

‘ம்ம்ம் சொரைக்காய்க்கு உப்பில்லைன்னு…வேணும்னே பன்றானோ?’

நந்தனா : அதான்…பொய் சொன்னதை ஒத்துக்கணும். உங்களுக்கு அவங்க ஃபோன் செஞ்சா நீங்களும் சொல்லணும். அதுக்குதான் சொல்றேன்.

நிரஞ்சன் : ஒரு பேஷண்ட் வந்துருக்காங்க பை

நந்தனா : சாரி! பை!

எனோ அவன் சொல்லாமல் சென்றுவிட்டாலும் அவனிடம் சொல்லிவிட்ட நிம்மதியில் பழைய நிலைக்குச் சென்றாள்.

அன்றிரவு இரவு உணவின் பொழுது ஸ்ரீராமும் கண்ணனும் மும்முரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்

“ஆமா ராம் எப்போ ஜாயின் பண்ணுமாம்? “

“அடுத்தவாரம் பா “

“ அதுக்குள்ள முடிஞ்சா ஒருதரம் குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்துருவோம் என்ன சொல்றே ?”

“ம்ம் சரிப்பா போலாம். வெள்ளிக்கிழமை கிளம்பிடுவோம் சனிக்கிழமை வந்துட்டா ஞாயிறு ரெஸ்ட் இருக்கும்.”

துள்ளிக்குதித்து வந்த நந்தனா அண்ணனின் முதுகை கட்டிக்கொண்டு

“எல்லாரும் எங்க போறோம்? டூருக்கா? “ கண்சிம்மிட்டி தந்தையைக் கேட்க

ஸ்ரீராமோ தந்தையை முந்திக்கொண்டு “ஆமாம்! டூருக்குத்தான், முதுமலை காட்டுக்கு”

நந்தனாவோ மிக உற்சாகமாக “ஹை! முதுமலைக்கா ? என்ன திடீர்ன்னு ?”

“ஆமா, அங்க குரங்கு ஒன்னு கம்மியா இருக்காம், அதான் உன்னை அதுக்கு பதிலா விட்டுட்டு வரலாம்னு இருக்கோம்” என்றவன் தந்தையைப் பார்த்துக் கண்ணடிக்க

“ டேய் நானா குரங்கு ? “ நந்தனா ஸ்ரீராமின் தலைமுடியைப் பற்றி அட்ட

“விடுடீ வலிக்குது! குரங்குன்னு சொன்னா ஒத்துக்க மாட்டாளாம். குரங்கு மாதிரி முதுகில் தொத்திக்கிட்டு இருக்குறத பாரு”

“நான் குரங்குன்னா, குரங்கோட அண்ணனும் குரங்கு தானே ? “

“விட்டேன்னா தெரியும், நானா குரங்கு ? “ என்று தன் பின்னே நின்றிருந்தவளை முன்னே இழுத்து தலையில் குட்ட

“அம்மா!” என்று அவள் அலற

“டேய் டேய் ஏண்டா குழந்தையை ? நீ என்கிட்டே வாடா” கண்ணன் மகளைத் தன்னிடம் அழைக்க

“நந்து டேபிள் சுத்தம் பண்ணி தட்டெல்லாம் வைமா” சரஸ்வதி குரல்கொடுக்க

“வரேன் மா! “ என்றவள் ஒவ்வொன்றாகச் சரஸ்வதி சொன்னதைச் செய்தாள்

அனைவரும் ஒன்றாகச் சாப்பிட அமர்ந்தனர். நந்தனா மெல்லப் பேசத் துவங்கினாள்.

“மா…பா…” என்றவள் தயங்க

ஸ்ரீரமோ இராகத்துடன் “தா… நீ…. ஸா…” என்றிழுக்க

அண்ணனை முறைத்தவள் “அம்மா நான் உங்க எல்லார்கிட்டயும் ஒன்னு சொல்லணும்.அது…” என்று ஆரம்பித்த அதே நொடி, அவள் கைப்பேசி சிணுங்கியது.

“நிரஞ்சன்” என்று கைப்பேசி திரையில் எழுத்து மிளிர உரைந்தவள்

” ஒரு நிமிஷம் ஃபிரண்ட் கால்” என்று எழுந்து சற்று தொலைவாகச் சென்றாள்.

‘இவன் எதுக்கு இப்போ கால் பண்றான்? ‘ தயங்கியபடியே அழைப்பை ஏற்றாள்.

“நந்து”

“ம்ம் சொல்லுங்க “

“சாரி உன்கூட பேசிட்டு இருக்கும்பொழுது நடுவுல பேஷண்ட் வந்ததால பாதியிலேயே போய்ட்டேன். என்ன விஷயம் கொஞ்சம் தெளிவா சொல்லேன்”

நந்தனாவோ ஏனோ சலிப்பாய் “அதான் சொன்னேனே நீங்க அத்தை கிட்ட கலர் காலரா ரீல் விட்டுருக்கீங்க அதை அவங்க அப்படியே எங்கப்பா கிட்ட சொல்லிட்டா ? “

“ம்ம்”

“அப்புறம் எங்க வீட்ல என் டப்பா டான்ஸ் ஆடிடும் “

“ம்ம்”

“அதான் எதுக்கு வம்புன்னு நானாவே உண்மையைச் சொல்லிடலாம்னு இருக்கேன்“

“ம்ம் “

‘ஏண்டா கதையா கேட்குறே?’

“அவங்க உங்களைக் கேட்டா நீங்களும் உண்மையைச் சொல்லுங்கன்னு சொல்லத்தான் அப்போ மெஸேஜ் பண்ணேன்” அவளோதான் என்பதுபோல் முடித்தாள்.

அவனோ குரலில் எந்தப் பதட்டமோ, தயக்கமோ இல்லாமல்

“நந்து உன் இஷ்டம் ! நான் எதுவும் சொல்லலை ஆனா என் கருத்தைச் சொல்லலாம்னா சொல்றேன்”

‘ஆகா என்னடா பீடிகை போடுறே?’

“ம்ம் சொல்லுங்க’ ‘ சொல்லித்தொலை என்பதுபோல் அவள் சொல்ல

ஓர் ஈர் நொடி அமைதிக்குப் பிறகு தீர்க்கமாக வந்தது நிரஞ்சனின் குரல்

“உன் அத்தைகிட்ட சொன்னது நான் தானே, இப்போ நீ போய் மறுத்துப் பேசினா உன்னை எல்லாரும் நிச்சயமா நம்புவாங்களான்னா….தெரியாது. பேசாம நானே எல்லார் கிட்டவும் நடந்ததை சொல்றதுதான் சரியா இருக்குமென்று நெனைக்கிறேன். நீ என்ன சொல்றே நந்து?”

நந்தனாவிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை,‘ஒரு வேலை அவர் சொல்றமாதிரி எல்லாரும் என்னை நம்பாமல் போனா ?’‘

இருக்காதென்று மறுக்க நினைத்தாள் ஆனால் எப்பொழுதும்போல அவளைக் குழப்புவதற்கென்றே இருக்கும் மற்றொரு மனமோ ‘லூசே நீ சொல்றதைவிட, பொய்யைச் சொன்ன அவனே உண்மையைச் சொன்னதன் சரியா இருக்கும்.’

“நந்து லைன்ல இருக்கியா ?” நிரஞ்சனின் குரலில் சிறிய பதற்றம்

“ம்ம் சரி நீங்கசொல்ற மாதிரியே செய்வோம் சார்”

“ம்ம் தட்ஸ் குட்! சரி பார்ப்போம்.”

“ஒருநிமிஷம் சார்”

“சொல்லுமா”

ஏனோ பதட்டம்வந்து தொற்றிக்கொள்ள “நீங்க எப்போ எங்கே என் குடும்பத்தை மீட் பண்ணபோறீங்க? என்ன பிளான்?”

“ம்ம் அதை நான் என் அப்பொய்ன்ட்மென்ட்ஸ் பார்த்திட்டு சொல்றேன். அப்புறம் ஒரு ரெக்வஸ்ட். இந்த சார் மோர் சாம்பார் எல்லாம் வேண்டாம்! நிரஞ்சன்னே கூப்பிடு” குரலில் மெல்லிய புன்னகையோட முடித்தான்

‘இதான் உலகத்துக்கு இப்போரொம்ப முக்கியம். ஏன்டா ஏன் என்னை இம்சிக்கிறே?’

“ம்ம்” தயக்கத்துடன் ஒப்புக்கொண்டாள்.

இப்பொழுது அவன் குரலில் இன்னும் புன்னகை சேர்ந்து கொண்டது

“வெரி குட் ! நான் அப்புறம் பண்றேன் குட் நைட்! “

“குட்நைட்”

உப்ப் என்று மூச்சைவிட்டவள் ஏனோ மனதை விட்டுப் பாரம் முழுவதாய் அகன்றதைப் போல் உணர்ந்தாள்.

மீட்டும் டைனிங் டேபிளை அடைந்தவள் ஏதும் பேசாமல் சாப்பிடத் துவங்க.

சரஸ்வதி யோசனையாய் “ஏதோ சொல்ல ஆரம்பிச்சு நிறுத்திட்டியே. என்ன சொல்ல வந்தே? “

சப்பாத்தியை எடுத்த நந்தனாவின் கை ஆந்திரத்தில் நிற்க, வாய் டைப் அடிக்க, என்ன செய்வது என்ற பதட்டத்தில் “லவ்…லவ்…” என்றவள் சப்பாத்தியை வாயில் போட்டுக்கொண்டு மௌனமானாள்.

பெற்றோர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, ஸ்ரீராம் கோவமாக முறைப்புடன் “என்னடி எவனையாவது லவ் பண்ணறியா?”

‘ஐயோ! முடிஞ்சுது…மட சாம்பிராணி. சமாளிச்சு தொலை’ தன்னைத்தானே தேற்றிக்கொண்டு “நான் உங்க மூணு பேரையும் ரொம்ப ரொம்ப லவ் பண்றே….ன்னு சொல்லவந்தேன்” அசடு வழிந்தவள் முடிந்தவரை முகத்தை அமைதியாக வைத்துக்கொண்டாள்.

ஸ்ரீராம் நம்புவதாக இல்லை “என்ன சொல்லவந்த? ஒழுங்கா உண்மையைச் சொல்லு. “ சாப்பிடுவதை நிறுத்தியவன் நந்தனாவை மிரட்ட

‘பொல்லாப்பு கூடவே பொறந்துருக்கு’ சகோதரனை மனதினுள் திட்டியவள், அவனை முறைத்தவாறே “ஏண்டா நான் உங்க மூணு பேரையும் லவ் பண்ணக்கூடாதா?”

“நம்புற மாதிரியே இல்லையே ! ஒழுங்கா உண்மையைச் சொல்லுடி யார் அவன் ?”

கண்ணனோ “போதும் ராம்! குழந்தையைச் சும்மா… அப்படி அவ யாரையாவது காதலிச்சா நம்மகிட்ட சொல்லமாட்டாளா என்ன?” என்று நந்தனாவிற்கு பரிந்து கொண்டுவர

நாதனாவோ மனதில் ‘எஞ்சாமி… நீ இருக்கிறவரை என்னை ஒருபயலும் அசச்சுக்க முடியாது’ தந்தையைக் கொஞ்சி, வெளியில்

முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டாள்.

“அப்பா நீ இவளை ஓவரா நம்புறே, நல்லதுக்கில்லை சொல்லிப்புட்டேன். அப்புறம் வந்து குத்துதே குடையுதேன்னு சொன்னே அவளோதான் பாத்துக்கோ!” ஸ்ரீராம் கடிந்தபடியே கை அலம்ப எழுந்து சென்றான்.

கண்ணனோ “நீ அவனைக் கண்டுக்காதே. சாப்பிட்டுப் போய்த் தூங்கு” என்று சொல்ல. நந்தனா நல்ல பிள்ளைபோலத் தலையசைத்தாள்

ஸ்ரீராம் ஏதும் பேசாமல் டிவிமுன் அமர்ந்துவிட அவனை முறைத்துக்கொண்டே சாப்பிட்டவள்

‘நல்லா சாப்பிடு நந்து இவனைச் சமாளிக்கவே தனியா சாப்பிடணும் போல இருக்கே’ மனதுக்குள்ளே அண்ணனை அர்ச்சனை செய்தவரே சாப்பிட்டு முடித்தாள்.

***

“எவ்வளவு நேரமா காத்து கிட்டு இருக்கேன் தெரியுமா? இப்படியா லேட்டா வருவே?” கடுகடுத்த நிரஞ்சன்,

“கொஞ்சமும் பொறுப்பே இல்லை பேபி உனக்கு! “ தலையை வெறுப்பாய் ஆட்டியபடி செல்ல , பதறியபடி அவனைப் பின்தொடர்ந்தாள் நந்தனா.

அவன் கோவமாய் செல்வதைப் பொறுக்க முடியாமல் “சாரி டாக்டர் சார்! ட்ராஃபிக் அதான்…”

ப்ரேக் அடித்தது போல நின்றவன், மெல்லத் திரும்பி “இனிமே இப்படி செய்யக் கூடாது பேபி. சரியா?” மயக்கும் புன்னகையை சிந்தினான்.

“கண்டிப்பா…” மெல்லப் புன்னகைத்த நந்தனா “சரி சொல்லுங்க இப்போ நான் என்ன செய்யனும்?”

“ஒருநிமிஷம்” என்றபடி சென்ற நிரஞ்சன் கையில் ஒரு கவருடன் வந்தான்.

“சீக்கிரமா வா ! ஏற்கனவே லேட்!” அவளை விரைந்து வரும்படி அவன் விரட்ட, வேக வேகமாய் உடைமாற்றி பச்சைவண்ண ஹாஸ்பிடல் கவுனை அணிந்து கொண்டவள் “நான் ரெடி சார்! “ என்றபடி ஓடிச்சென்று அவன் முன்னே நிற்க

“நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவை நீ எடுத்திருக்க அப்படிதானே?“

“ஆமா சார்!”

அவளை ஊறுப்பார்தவன் “பின்னாடி என்னைக் குறை சொல்லக் கூடாது சரிதானே?”

“அதான் நான் சரின்னு சொல்லிட்டேன்ல இப்போ என்ன சத்யபிரமானமா எடுக்கணும் “ என்றவள் அவனைப் பின்தொடர்ந்து ஆபரேஷன் அறைக்குச் சென்றாள்.

அவளை ஒரு நாற்காலியில் அமரச்செய்தவன் ,அவள் கையைப் பிடித்து நாடித்துடிப்பை பார்த்தவன், “கண்டிப்பா அனேஷ்தீஷியா (மயக்க மருந்து) வேண்டாமா பேபி?” கண்ணில் அக்கறையும் ஆதங்கமுமாய் கேட்க

“இல்ல சார்”

“சரி உன் இஷ்டம்” என்றவன்.

“அப்போ ஸ்டார்ட் பண்ணலாமா?” என்றபடி அருகிலிருந்த அவள் குடும்பத்தினரை பார்த்து மெல்லத் தலையசைத்தவாறே கேட்க, அவர்கள் சம்மதம் எனத் தலயசைக்க

“சிஸ்டர் கிளவுஸ்!” என்று இரு கைகளையும் நீட்ட, செவிலியர் ஒருவர் அவன் கைகளுக்குக் கிளவுஸ்சை அணிவித்தார்.

இப்பொழுது மெல்ல மறுபுறம் திறும்பியவன் “அத்தை! “ என்றபடி கைகளை நீட்ட, நந்தனாவின் அத்தை காஞ்சனா அவன் கையில் எதையோ தர, அதை என்ன என்று எட்டிப்பார்க்க நந்தனா முயற்சிக்க, அவள் தலைக்குமேல் இருந்த அதிகப்படியான வெளிச்சத்தில் அவளால் அதை சரியாக பார்க்க முடியவில்லை.

அத்தை தந்ததை புன்னகையுடன் வாங்கிக் கொண்டு நந்தனவின் புறம் திரும்பி

“பேபி! இந்த ஜென்மத்துல எனக்கு மனைவின்னா அது நீதான்!” என்றபடி கையில் மஞ்சள் தாலிக் கயிற்றுடன் அவளை நெருங்கினான் நிரஞ்சன்!

அரண்டு வியர்த்துக் கண்விழிதவளின் நாடித்துடிப்பு பன்மடங்கு எகிறியது

என்ன மாதிரியான கணவிதுவெனக் குழம்பியவள்.

நிரஞ்சனை எண்ணி ‘‘டேய் என்னடா கனவுல எல்லாம் வரே? அதுவும் தாலியோட” தலையைப் பிடித்துக்கொண்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ள, அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவெனக் குடித்துவிட்டு உதடுகளைத் துடைத்தவள்,

‘ம்ம்ஹும் இது சரி இல்ல…நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்!.’ தன்னுள் சொல்லிக் கொண்டவள், வெகுநேரம் போராடி உறங்கிப்போனாள்.