MarandhupoEnmaname2-12

மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 12:

 

நேத்தன் சொன்னதைக் கேட்டுப் புன்னகைத்தவள் “ஓ நேத்தன் நீ தப்பா புருஞ்சுகிட்ட. நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்.

 

க்ளோஸ் ஃபிரண்ட்ஸ்” என்றாள்.

 

“உம்ம்ம் ஹ்ம்ம்ம்” அவன் மெலியாத புன்னகைக்க “ஏதோ ஃபிஷ் (fish) மாட்டியிருக்கு’ன்னு நினைக்கறேன்” எனப் பேச்சை மாற்றியவள், மீனை இழுக்க… அதே நேரம் க்ரிஷும் அங்கே வந்தான்.

 

“நான் போய் டீ குக்கீஸ் எடுத்துட்டு வரேன்” என நேத்தன் அங்கிருந்து சென்றான்.

 

“க்ரிஷ் ஹெல்ப் பண்ணு…” என அவள் சொல்ல… இருவரும் சேர்ந்து வெளியே எடுத்தனர்.

 

கொஞ்சம் சிரமமாக இருந்தது. இருந்தாலும் க்ரிஷ் பிடித்து அவள் கையில் கொடுத்தான்.

 

அவள் அதைக் கையில் பிடிக்க… அந்த மீன் துள்ளிக்கொண்டே இருந்தது.

 

அதன் வழவழப்பு, மற்றும் நெளிந்துகொண்டே இருக்க… “யக், இதை எப்படி க்ளீன் பண்ணி சாப்பிடறது. உள்ளேயே போட்டுறலாம்” என்று பிடித்த மீனை மறுபடியும் உள்ளே போட்டாள்.

 

“எனக்கு அப்பவே தெரியும் உனக்கு இந்த ப்ரை க்ரைலாம் (fry cry) வராதுன்னு. வெட்டி சீன்” என நமட்டுச் சிரிப்பு சிரிக்க…. அவனைப் பார்த்து முறைத்து…

“இரு நீ fish கேக்கறன்னு ஆண்ட்டி கிட்ட சொல்றேன்” என அவன் போனை பிடுங்க… “ஏய் வேணாம் சுஷி. சொன்னா கேளு” என்று அவளை மறித்தான்.

 

“நீ ஏன் ஆண்ட்டி கூடப் பேச விடமாட்டேங்கற? முன்னாடியும் ஒரு டைம் கேட்டப்ப அவாய்ட் பண்ணிட்ட” கோபத்துடன் கேட்க…

 

“இல்ல சுஷி. அதுவந்து… அம்மாகிட்ட நான் இங்கவறேன் சொல்லல. Philly போறேன்னு சொல்லிட்டு வந்துருக்கேன்” என்றான் தயங்கித் தயங்கி.

 

“பொய் சொல்லிட்டு வந்துருக்கயா க்ரிஷ்???” தளர்ந்த முகத்துடன் கேட்டு, கோவத்தில் அங்கிருந்து எழ முயற்சிக்க…

 

அவள் கையைப் பற்றித் தடுத்தவன் “சுஷி ப்ளீஸ். கோவப்படாத… ப்ளீஸ்… எனக்கு முக்கியமா தெரிஞ்சது உன்னவந்து பாத்து… உன்கிட்ட பழைய மாதிரி பேசணும்… அவ்ளோதான்”

 

“அதுக்கு எந்தத் தடையும் வந்துடக் கூடாதுன்னு தான் நெனச்சேன். எப்படியும் next weekend Peoria போறேன்.

 

அம்மாகிட்ட சொல்றத நான் பாத்துக்கறேன்” எனச் சமாதானம் சொல்ல…

 

மறுபடியும் அமர்ந்தவள், அவன் பொய் சொல்லி வந்ததை மறந்து… “என்ன நெஸ்ட் வீக் எண்ட் இருக்க மாட்டியா?” கொஞ்சம் வருத்தத்துடன் “உன்கூடவே இந்த ரெண்டு வாரம் இருந்துட்டேன் க்ரிஷ்… உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேனே…”

 

“ஹ்ம்ம் saturday காலைல போய்ட்டு சண்டே நைட் வந்துடுவேன். Flexi tickets தான். சோ எவளோ சீக்கரம் வரமுடியுமோ வந்துடறேன் ஓகேவா” என்றவன் அவள் சோகமாக இருப்பதைப் பார்த்து….

 

“சரி போதும். இருக்குற நேரத்தை சோகமா செலவழிக்கணுமா? நேத்தன் வந்த உடனே சொல்லிட்டு நம்ம குட்டி போட் ரைட் போலாம் ஓகே???” க்ரிஷ் சொல்ல… அவளும் தலையசைத்தாள்.

 

சிலநொடிகளில் ‘கரெக்ட். இப்போ இருக்குற நேரத்தை நல்லா சந்தோஷமா ஸ்பென்ட் பண்ணனும்’ என மனதில் நினைத்தவள் மறுபடியும் மீன் பிடிக்கலானாள்.

 

“ஆமா நான் கேக்கணும்ன்னு இருந்தேன். ஏன் நீ நேத்து என் ரூம்ல வந்து படுத்துட்ட?” க்ரிஷ் கேட்க

 

அந்தக் கேள்வியை எதிர்பார்காதவள், கொஞ்சம் திணறி… “அ… அதுவா. ஹான்… ஒரே பூச்சி சத்தம். அதுவும் அந்த ஆந்தை. ச்சை. ஒரே தொல்லையா இருந்துச்சு. உன் ரூம்ல சத்தமே கேக்கல. அதான் வந்தேன்” என்றாள் தடுமாறி திருத் திருவென முழித்துக்கொண்டு.

 

அதைப் பார்த்துச் சிரித்தவன் “உன் ரூம், என் ரூம் பக்கத்துலதானே இருக்கு? அப்போ என் ரூம்ல’யும் சத்தம் கேக்குமே…” சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னவன் “பயந்து தானே வந்த” என அவளைச் சீண்ட…

 

“பயம்லாம் ஒன்னும் இல்ல. நெஜம்மா உன் ரூம்ல சத்தம் கேக்கல” எனத் திரும்பிக்கொண்டவளுக்கு ஏதோ நினைவிற்கு வர…

 

“க்ரிஷ் அந்தப் பக்கம் பாறேன் … ஏதோ வித்யாசமா இருக்கு” எனக் காட்ட… அதைப் பார்க்க திரும்பினான் க்ரிஷ்.

 

அந்த நொடியில் சட்டென எழுந்தவள், அவனைப் பின் புறமாகத் தள்ளி ஏரிக்குள் தள்ளினாள்.

 

“என்ன பண்…ற?” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் தண்ணீருக்குள் விழுந்தான். சத்தமாகக் கைகளைத் தட்டி சிரித்தவள் “என் மேலயா தண்ணிய ஊத்தின??? நல்லா வேணும்” என்றாள் சிரித்துக்கொண்டே.

 

எதுவும் பேசாமல் தண்ணீரில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் வெளியே வருவதைப் பார்த்தவள், சிரிப்பதை நிறுத்திவிட்டு ‘கோவிச்சிட்டானோ’ என நினைத்து…

 

“க்ரிஷ் கோவமா?” அவன் கரை ஏறும்போது கேட்டாள்.

 

எந்த வித எதிர்வினையையும் முகத்தில் காட்டாமல், பதிலும் சொல்லாமல் மேலே எறியவன்… தலையை நன்றாக இருபுறமும் ஆட்டினான்.

 

தலை முடியில் இருந்த தண்ணீர் சுற்றியும் தெறித்தது. “ஸாரி க்ரிஷ்… சு…ம்…மா விளையாண்டேன்…” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

 

அந்த நொடி… அவள் எதிர்பார்க்காத போது அவளை அவன் ஏரியில் தள்ளினான்.

 

“Oh Shit” என்று சொல்லியவண்ணம் தண்ணீருக்குள் தொம்மென விழுந்தாள். அவள் சிரித்தது போலவே அவன் சிரித்தான் கைகளைத் தட்டிக்கொண்டு.

 

“டேய் க்ரிஷ்… உன்ன விடமாட்டேன்…” என அவள் தண்ணீரில் இருந்து வெளியே வரும்போது நேத்தனும் அங்கே வந்தான்.

 

இருவரும் அடித்துக்கொள்வதைப் பார்த்தவன் ‘ஒரு டீ தானே போட்டுட்டு வர போனேன்… அதுக்குள்ளயா…’ என்ற தோரணையில் இருவரையும் பிரித்துவிட்டான்.

 

சிறிது நேரம் கழித்து இருவரும் ஈரத்துணியுடனே நேத்தனுடன் டீ குடித்துவிட்டு மறுபடியும் ஏரியில் இறங்கிக் கொஞ்ச நேரம் நீந்திவிட்டு வெளியே வந்தனர்.

 

——

 

இரவு நிலவு மெதுவாகத் தோன்ற, மூவரும் பேஸ்மென்டில் வைக்கப்பட்டிருந்த Xbox’இல் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

சில நிமிடங்களில் சுஷி தொற்றுப்போக, நேத்தனும் க்ரிஷும் சீரியசாக விளையாட்டில் மூழ்கியிருந்தனர். இருவரின் நடுவில் உட்கார்ந்திருந்தவள்… பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே இருவர் விளையாடுவதையும் பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

சிறிது நேரத்தில் அவளுக்கு அலுப்புத் தட்ட, இருபக்கமும் இருவரையும் திரும்பித்திரும்பிப் பார்த்தாள். இருவரும் முடிப்பதாகத் தெரியவில்லை.

 

ஒரு கட்டத்தில் க்ரிஷ் வெற்றியை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கும் போது… ரிமோட்டால் டிவியை ஆஃப் செய்துவிட்டாள்.

தோற்கும் நிலையில் இருந்த நேத்தன், குஷியாக “ஹாஹா… தன்க்யு பேபி” என்று அவளுடன் ஹை ஃபை செய்தான்.

 

அதை எதிர்பார்க்காத க்ரிஷ் “சுஷி” என்று கத்திக்கொண்டு அவள் மேல் விழுந்து அடிக்கச் செல்ல, நேத்தன் மறுபடியும் சிரித்துக்கொண்டே “Oh My god you both are really mad” எனச் சொல்லி இருவரையும் பிரித்துவிட்டான்.

 

——-

 

“I don’t remember the last time I had so much fun. You guys are seriously crazy. am gonna miss you both (எனக்குக் கடைசியா எப்போ இவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு ஞாபகம் இல்ல… உங்க ரெண்டுபேரையும் நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன்)” என்றான் நேத்தன் கொஞ்சம் வருத்தத்துடன்.

 

“We will miss this place and you especially bro (இந்த இடத்தியும் உன்னையும் நாங்களும் ரொம்ப மிஸ் பண்ணுவோம் ப்ரோ)” என்றாள் சுஷி அவனைத் தழுவிக்கொண்டு.

க்ரிஷ் புன்னகையுடன் கைகுலுக்கி “We will definitely come back Nathan(கண்டிப்பா நாங்க திரும்ப வருவோம் நேத்தன்)” என்றான்.

 

அவனிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் புறப்பட்டனர் ஜெர்சி’க்கு.

அன்று திங்கள் மாலை சுஷிக்கு டாக்டர் அப்பாய்ன்ட்மென்ட் இருந்தது. இருவரும் சென்றார்கள்.

 

“வெல்கம் லேடி. எப்போவும் இல்லாம இன்னிக்கி என்ன பிரைட்’டா இருக்கீங்க? Please be seated” என்று இருவரும் உட்காரச்சொன்னார் மருத்துவர்.

சுஷி கிரிஷைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, அவள் மருத்துவரிடம் நோட்ஸ் (குறிப்புக்கள்) காண்பித்தாள்.

 

“க்ரேட். வெரி குட் டெவெலப்மென்ட். நல்லபடியா இந்த ப்ரோக்ராம் முடுச்சுடீங்க” அவளைப் பாராட்டினார். அவளும் புன்னகையுடன் நன்றி கூறினாள்.

 

“சோ டெல் மீ ஹவ் வாஸ் யுவர் வீக் எண்ட் (So tell me how was your weekend). உன்ன நிறையவாட்டி பாத்துருக்கேன். பட் டுடே யு லுக் சோ பிரெஷ் அண்ட் ஹாப்பி (But today you look so fresh and happy)” ஆச்சர்யத்துடன் மருத்துவர் கேட்க…

 

சுஷி முகத்தில் புன்னகையுடன் “நாங்க ஒரு ஷார்ட் ட்ரிப் போனோம் டாக்டர். Had a great time there” என்றாள் க்ரிஷைப் பார்த்து.

 

“தட்ஸ் கிரேட். Be happy like this always. That is more important” என சொல்லிவிட்டு இறுதி அறிக்கையைத் தயார் செய்து கொடுத்தார்.

 

‘என்ன செய்யலாம்… இனி எவ்வளவு மது எடுத்துக்கொள்ளலாம்’ என்று அறிவுரைகள் கூறி அவளை வாழ்த்தி அனுப்பிவைத்தார்.

 

வெளியே வந்தவள், சந்தோசத்தில் க்ரிஷின் கழுத்தைக் கட்டிக்கொண்டு “I’m no more alcoholic. Thanks, Krish” எனக் குதித்தாள். அவளை விடுவித்தவன் அவள் கண்களைப் பார்த்து

“நீ எப்போ இந்தப் பழக்கத்தை விடணும்ன்னு நினைச்சியா… அப்போவே you have come out of it. And எனக்கு எதுக்குத் தேங்க்ஸ்? இது உன்னோட effort. Completely your effort. அது யாரும் பங்கு போட முடியாது… புரிதா?” எனச் சொல்ல… கண்களில் நீர் கோர்த்து அவனைக் கட்டிக்கொண்டாள்.

 

——

 

நாட்களும் விறுவிறுவென நகர்ந்தது. இருவரும் அவரவர் அலுவலகத்தில் வேலை செய்யும் போது மட்டும் பிரிந்திருந்தனர். மற்றபடி காலை இடைவேளை, மதிய உணவு, மதிய இடைவேளையை ஒன்றாகவே களித்தனர்… ஒரே பில்டிங் என்பதால்.

 

வியாழக்கிழமை, எப்பொழுதும் போல் இருவரும் மாலை இடைவேளையின் போது சந்திக்க முடியவில்லை… சுஷிக்கு வேலை இருந்ததால்.

 

ஆதலால் க்ரிஷ் மட்டும் கீழே அவனுடைய அலுவலகத்தில் வேலைப் பார்ப்பவருடன் சென்றிருந்தான்.

 

சுஷி அவசரமாக வேலையை முடித்து அவனுக்கு அழைத்தாள்… அவன் போன் எடுக்கவில்லை. மறுபடியும் அழைக்க அவன் எடுக்காததால், அவளோடு வேலைப் பார்ப்பவளுடன் கீழே சென்றாள்.

 

அங்கே கிரிஷைப் பார்த்ததும் ‘அங்கே செல்லலாம்’ என்று யோசிக்க… பக்கத்தில் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தான்.

 

‘யாரது … பார்த்தாகவேண்டும்” என்றது அவள் மனம்.

 

சுஷியுடன் வந்த பெண்மணி ஏதோ பேசிக்கொண்டிருக்க, சுஷியின் கண்களோ க்ரிஷிடமே இருந்தது. அப்போது அவனுடன் பேசிக்கொண்டிருந்தவள் திரும்ப அது ‘சாய்ரா’ என்று தெரிந்துகொண்டாள்.

 

அதைப் பார்த்தவள் மறுபடியும் க்ரிஷுக்கு அழைக்க… அவன் போன் எடுக்கவில்லை. “போன் கூட எடுத்து பாக்காம… அவ்வளோ சீரியஸ்’ஸா அவளோட பேசிட்டு இருக்கான்” மனதில் திட்டினாள் அவனை.

 

சிறிது நேரத்தில் அவன் சாய்ரா உடன் பேசிவிட்டு, அவனுடைய நண்பர்களுடன் திரும்பிச் சென்றான். சுஷியும் அவளுடைய தளத்திற்குச் சென்றாள்.

 

அவன் இருப்பிடத்தில் விட்டுச்சென்ற போனைப் பார்க்க, அதில் ஐந்து மிஸ்ட் கால்’ஸ் சுஷியிடமிருந்து வந்திருந்தது. அதைப் பார்த்தவன், உடனடியாக அவளுக்கு அழைத்தான்.

 

அவன் அழைப்பதைப் பார்த்தவள் ‘நான் கூப்பிடறப்ப மட்டும் எடுக்கல. இப்போ கூப்பிடறயா…’ கோபத்தில் அழைப்பை ஏற்கவில்லை.

 

‘மறுபடியும் வேளையில் பிஸி ஆகியிருப்பாள்’ என்று விட்டுவிட்டான்.

 

அவர்கள் கிளம்பும் நேரம் ஆக, அவன் எப்பொழுதும் போல் அவளை அழைத்தான். அவள் எடுக்காமல் பதிலுக்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்பினாள்.

 

“I have work. You carry on” என்றது அந்த மெசேஜ்.

 

K: “I will wait. Call me once your work is done” என்று அவனிடமிருந்து பதில் வர, கோபத்துடன் அவனுக்கு அழைத்தாள்.

 

அவன் எடுக்க “நான் தான் வேல இருக்குன்னு சொல்றேன்ல. கேக்கமாட்டியா…” எனச் சீற, ‘எதற்குக் கோபப்படுகிறாள்’ என யோசித்தவன் “சரி நீ இப்போ கிளம்பு, மிச்ச வேலைய வீட்ல போய்ப் பாத்துக்கலாம்” என அவள் பதில் செல்லும்முன் போனை வைத்தான்.

 

அவன் போனை வைத்தவுடன், மறுபடியும் அழைத்தாள். அவன் எடுக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து மெசேஜ் வந்தது.

 

“I’m waiting in the parking lot. Come fast”

கோபமாக எழுந்து கீழே சென்றவள், அவன் கார் அருகே காத்திருப்பதைப் பார்த்து எதுவும் பேசாமல் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டாள். அவளைப் பார்த்து புன்முறுவலிட்டு அவனும் உள்ளே போய் உட்கார்ந்தான்.

 

அவள் கோவமாக இருந்தபோதும்… அவன் எதுவும் பேசாமல் வருவதைப் பார்த்து “டேய் நான் ஏன் பேசலன்னு கூடக் கேக்கமாட்டியா?” என அவனை அடிக்க….

 

“லூசு அடிக்காத… வலிக்குது. நீ ஏன் கோவமா இருக்கன்னு நீ தான சொல்லணும்” என்றான் அவள் அடித்த இடத்தைத் தேய்த்துக்கொண்டு.

 

“நான் போன் பண்ணப்ப ரொம்ப பிஸியா இருந்தல்ல… கால் கூட அட்டென்ட் பண்ணாம…” என்றுவிட்டுக் கோபமாக ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

 

“நான் டீம் மேட்ஸ் கூடப் பிரேக் போயிருந்தேன். போன் டெஸ்க்ல இருந்துச்சு சுஷி. இதுக்குத்தான் கோபமா…” எனக் கேட்டுக்கொண்டே காரை எடுத்தான்.

 

அவனைப் பார்த்து முறைத்தவள்… “பொய் சொல்றயா க்ரிஷ் என்கிட்ட? எனக்கு தெரிஞ்சு சாய்ரா என்னோட ஆஃபீஸ்’ல தான் இன்னும் வேல பாக்கறா… எப்போ உன் டீம் மேட் ஆனா…” எனக் கேட்க…

 

“ஓ நீ அங்க தான் இருந்தயா… வந்து பேசியிருக்கலாம்ல” பதில் கேள்வி கேட்டான்.

 

“எதுக்கு நான் உங்களுக்கு நடுவுல நந்தி மாதிரி” சொல்லிவிட்டுத் திரும்பிக்கொள்ள…

அவளின் போஸஸிவ்னெஸ் நினைத்து மனதுக்குள் சிரித்தவன் “இங்க பாரு சுஷி. நான் என் ஃபிரன்ட்ஸ் கூடத் தான் போனேன். என்ன அங்க பாத்துட்டு, அவளா வந்து பேசினா… அவ்ளோதான்”

“அப்பறம் You have all rights to come and talk to me anytime (எப்பவேனுன்னாலும் என் கூடப் பேசுறதுக்கு… உனக்கு எல்லா உரிமையும் இருக்கு). அத நான் disturbance’ஆஹ் நினைக்கமாட்டேன்… என்கூட இருக்கவங்க நினச்சா எனக்கு அது முக்கியம் இல்ல. எனக்கு நீ தான் முக்கியம்… புரிதா” என்றான் தீர்க்கமாக.

 

ஜன்னல் பக்கம் திரும்பியிருந்தவள், அவன் பக்கம் திரும்பாமல் புன்னகையை உதிர்த்தாள் அவன் பேசியதைக் கேட்டு.