மறந்துபோ என் மனமே(2) – MEM2 – அத்தியாயம் 8:
“சுஷி எப்பவும் போல நீங்க இந்த டெஸ்ட் எடுத்துட்டு வந்துடுங்க” என்று அந்த ரீஹாப் சென்டர் பயிற்சியாளர் சொன்னவுடன் அவள் க்ரிஷிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றாள்.
“நீங்க அவங்களோட க்ளோஸ் ஃபிரன்ட் இல்லையா?” மருத்துவர் கேட்க அவன் ஆம் என்பது போல் தலையசைத்தான்.
“சுஷீலா இங்க வந்தப்ப ஷி வாஸ் ஏர்லி ஆல்கஹாலிக் – ஸ்டேஜ் 2 (She was early alcoholic – Stage 2). ஆனாத் தெளிவாப் பேசினாங்க. உறுதி ஓட இருந்தாங்க இதுலயிருந்து வெளிய வரணும்னு”
“அப்போ ரீஹாப் சென்டர்ல அட்மிட் ஆகச் சொன்னோம். பட் அவங்க ஸெல்ஃப் டிடாக்ஸ் (self detox) தேர்ந்தெடுத்தாங்க”
“உண்மையச் சொல்லனும்னா கரெக்ட்டா ஃபாலோவ் பண்ணாங்க. எப்பயாச்சும் ஒன்னு ரெண்டு நாள் கொஞ்சம் அதிகமா எடுத்துப்பாங்க. பட் லிமிட் தாண்டல. இப்போ இன்னும் நாலு நாள் தான் இருக்கு”
“அவங்க எடுக்க வேண்டிய லிமிட் ரொம்பக் கொறஞ்சுடுச்சு. அவங்களுக்கு நிறைய எடுத்துக்கணும்ன்னு சில சமயம் தோணும். ஆனா அவங்களக் கட்டுப்பாடோட இருக்கச்சொல்லி பாத்துக்கணும்” என்று டாக்டர் சொல்லும்போது
அதைக் கேட்ட க்ரிஷ் “எப்படிப் பாத்துக்கணும்ன்னு சொன்னீங்கன்னா நான் அப்படியே செய்றேன்” என்றான்.
“சொல்றேன். அவங்கள முக்கியமா எங்கேஜ்ட்’ஆஹ் வெச்சுக்கணும். தனிமையை ஃபீல் பண்ண விட்டுடாதீங்க. அவங்களுக்குப் பிடிச்ச விஷயம் செய்ங்க. அவங்க இப்போ இருக்க நிலைமைய மறந்து இருக்கனும். அப்பறம் முக்கியான விஷயம்”
“Mood Swings நிறையவே இருக்கும். அத அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். அவங்களுக்குப் பிடிக்காத விஷயத்தை செய்ய வேண்டாம்”
“அவங்க இதுவரைக்கும் எவளோ ட்ரிங்க் எடுத்துட்டாங்கன்னு மார்க் பண்ணிருக்காங்க. அத அவங்க பாத்துப்பாங்கன்னு நினைக்கறேன். இது லாங் வீகென்ட். திங்கள் ஈவினிங் அடுத்தச் செக்கப்”
டாக்டருடன் பேசியதை நினைத்துக்கொண்டிருந்தவன் தூக்கத்தில் அவளின் அசைவைப் பார்த்துத் தன்னிலைக்கு வந்தான்.
அவன் தோள் மேல் சாய்ந்து தூங்கியவள், திடீரெனத் தூக்கத்திலிருந்து எழுந்து… தூக்க கலக்கத்திலேயே கோவமாக…
“என்ன ஏன் அவாய்ட் பண்ண க்ரிஷ்? உன்னால தான் எனக்கு இந்த நிலைமை. நீ இல்லாத இடத்தை நிரப்ப நான் பண்ண எல்லாமே தப்பா போச்சு. உன்னால தான் உன்னால தான்” என்று அவன் கையில் அடிக்க
அவன் என்ன செய்வதென்று தெரியாமல் அவளின் கைலைகளைப் பற்றிக்கொண்டு கண்கள் கலங்க “ஸாரி சுஷி. ஸாரி… ஸாரி. ஆமா எல்லாம் என்னால தான். ப்ளீஸ் நீ படு” என்று அவளைக் கட்டுப்படுத்த அவள் திமிறினாள்.
அவளின் கைகளைச் சற்று இறுக்கமாகத் தடுத்து அவளைச் சோபாவில் அப்படியே படுக்க வைத்தான். அவள் முணுமுணுத்துக்கொண்டே கண் மூடினாள்.
அவள் உறங்குவதை அவளருகில் மண்டியிட்டுப் பார்த்தவன்… “நீ சொல்றது தான் கரெக்ட் சுஷி. என்னால தான் எல்லாமே” என்றான் இறுகிய முகத்துடன்…
“ஆனா இனி நீ சந்தோஷமா இருக்கனும் அவளோ தான்” என்று நினைத்துக்கொண்டு மற்றொரு சோபாவில் சாய்ந்தான்.
அவன் நினைவுகள் அவர்கள் பார்த்த போட்டோ’சையே சுற்றிக்கொண்டிருந்தது. அந்த நினைவுகள் அவனுள் வலியை ஏற்ப்படுத்தியது. அவனையும் மீறிக் கண்களில் இருந்து சிறிய துளிகளாகக் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
வெகுநேரம் அந்த நினைவுகளில் இருந்த க்ரிஷ் வீடிய சில மணி நேரம் முன்னரே கண்ணுறங்கினான்.
காலை சூரியன் பால்கனி வழியாக அவன் முகத்தில் படர, அவன் மெதுவாகக் கண் விழித்தான்.
விழித்தவன் முதலில் திரும்பி ‘அவள் எழுந்தவிட்டாளா?’ என்று பார்க்க அவள் அவனைப் பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தாள்.
“குட் மார்னிங். எப்போ எந்திருச்ச?” கேட்டுக்கொண்டே அவன் எழ “மார்னிங் க்ரிஷ். நான் எப்பவும் சீக்கரம் எந்திருச்சுடுவேன்” என்று அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் பார்வையில் ஏதோ சொல்ல வருகிறாள் என்பதை உணர்தவன்
“என்ன அப்படிப் பாக்கற சுஷி?” எனக் கேட்க…
“நைட் நடந்ததுக்கு ஸாரி” என்றாள் கலங்கிய கண்களுடன் வருத்தமாக.
“என்ன நடந்துச்சு? ஒன்னும் இல்லையே” என்றவனிடம் கை நீட்டி மேல் சுவற்றின் மூலையைக் காட்டினாள். அங்கே ஒரு கேமரா இருந்தது.
அதைப் பார்த்து திடுக்கிட்டவன் “இது எதுக்கு?” எனக் கேட்க “என் டெய்லி லிமிட்ஸ்’க்கு மேலயோ… நடு ராத்திரி தூக்கத்துல ஏதாச்சும் குடிக்கறேனான்னு பாக்க” என்றாள் முகத்தைத் தாழ்த்தி தரையைப் பார்த்துக்கொண்டு.
அவள் இரவு நடந்ததை நினைத்து வருந்துகிறாள் என்றுணர்ந்தவன் அவள் அருகில் மண்டியிட்டு உட்கார்ந்து குனிந்து அவள் முகத்தைப் பார்த்து …
“எதுக்கு இப்போ இவளோ சோகம். சின்ன வயசுல நான் உன்ன எவளோ அடுச்சுருக்கேன். அத பாக்கறப்ப நீ அடுச்சது கம்மி தான்” கண்சிம்மிடி அவன் சொல்ல… அதைக் கேட்டதும் அவளுக்கு மனது கொஞ்சம் லேசானது…
“அப்போ டெய்லி அடிக்கலாமா?” கலங்கிய கண்களுடன் புன்னகையை ஏந்திக்கொண்டு கேட்க “நேத்து பாவம்ன்னு விட்டுட்டேன். இனிமே பழைய க்ரிஷா மாறனும்ன்னு நினைக்கிறேன்” என்றான் கள்ளப்புன்னகையுடன் விழிகள் விரித்து.
“அப்போ நானும் பழைய சுஷியா மாறிடுவேன். பழிக்குப் பழி” என்று அவன் தலையில் குட்டியவள் “ரெடி ஆகு… நான் பிரேக் ஃபாஸ்ட் செய்யறேன்” சொல்லிவிட்டு எழுந்து
“கேமரா டிஸ்ஸேபில் பண்ணிட்டேன். இனி நீ தான் வரப் போற மூணு நாள் சொல்லணும் நான் தூக்கத்துல ஏதாச்சும் குடிச்சேனா… இல்ல அடிச்சேனான்னு” என்று புன்னகைத்துக்கொண்டு சென்றாள்.
இருவரும் கிளம்பி ஆஃபீஸ் செல்ல அந்த வாரம் லாங் வீக்எண்ட் என்பதால் சீக்கரம் புறப்பட்டனர் ஆஃபிஸில் இருந்து.
“சுஷி உனக்கு ஒரு சர்ப்ரைஸ்… சீக்கரம் வா. அங்க நல்லா டைம் ஸ்பென்ட் பண்ணலாம்” அவளை அழைத்துக்கொண்டு காரில் புறப்பட்டான்.
“எங்கப் போறோம் க்ரிஷ்???” நச்சரித்துக்கொண்டே வந்தவளைப் பொறுமையாக இருக்கும் படி சொல்லிக் கூட்டிச்சென்றான்.
அவன் நினைத்த இடம் வர, அந்தக் கட்டிடத்தின் பெயர் பலகையைப் பார்த்த சுஷியின் கண்கள் விரிந்தன.
“South Orange Tennis Club” என்று அந்தப் போர்டில் எழுதியிருந்தது. அவன் காரின் பின்னால் இருந்து பேட் எடுத்துக்கொண்டு முன்னே வர…
“க்ரிஷ் டென்னிஸா? நான் விளையாண்டு நாள் ஆகுது. இப்போ போய்” அவள் தயங்க…
“அட வா. நீ நம்ம ஸ்கூல்’ல சீனியர் லெவல் சாம்பியன். மறந்துட்டயா?” என்று அவளைக் காரில் இருந்து இழுத்துக் கொண்டு சென்றான்.
“இங்க மெம்பர்ஷிப்’லாம்” என்று கேட்பதற்குள் “உனக்கு எதுக்கு அதெல்லாம். வா” என்று உள்ளே அழைத்துச்சென்றான்.
உள்ளே சென்றவுடன் அங்கிருந்த சோபாவில் அவளை உட்காரச்சொல்லிவிட்டு… அவன் அங்கிருந்த ஆஃபிஸில் பேசிட்டு வந்தவன் அவளை அங்கிருந்த ஒரு அறைக்குச் சென்று ஆடை மாற்றிக்கொண்டு வரும் படி அவளிடம் ஒரு கவரை நீட்டினான்.
அவனைப் பார்த்துப் போலியாக முறைத்தவள் “எல்லாம் ரெடி பண்ணிட்டு தான் வந்துருக்க போல” சொல்லிக்கொண்டே உள்ளே சென்று மாற்றிக்கொண்டாள்.
அவள் வெளியே வர அந்த வெண்ணிற டென்னிஸ் ஆடை, தூக்கி கட்டிய போனிடைலை பார்த்து அவனுக்குச் சிறுவயது சுஷி நினைவிற்கு வர… சிறியதாகப் புன்னைகைத்துவிட்டு அங்கிருந்த கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றான்.
அந்தக் கோர்ட்டில், முன் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணி வெளியே செல்ல அங்கிருந்தவளுடன் சுஷி விளையாடத் தயாரானாள். அவன் அங்கிருந்த ரெஸ்டீங் ஏரியாவில் உட்கார்ந்து கொண்டான்.
அவள் ஆரம்பிக்கும் முன் அவனைப் பார்க்க…. அவன் அவளுக்கு “தம்பஸ் அப்” காட்டினான், பதிலுக்கு அவள் புன்னகையை உதிர்த்துவிட்டு முதல் சேர்வ்’வுடன் (serve) தொடங்கினாள்.
அது இலக்குத் தவறியது. கனெக்ட் செய்ய முடியாமல் சில நிமிடங்கள் தடுமாறியவள், பின்பு சுதாரித்துக்கொண்டு எதிர்கொண்டாள்.
அவள் ஆடுவதைப் பார்த்தவனுக்குப் பள்ளியில் ஆடிய சுஷியே நினைவிற்கு வந்து சென்றாள். அவள் அங்கும் இங்கும் ஓடி ஆடுவதைக் கண் சிமிட்டாமல் கன்னத்தில் கைவைத்து ரசித்துக்கொண்டிருந்தேன்.
அதைப் பார்த்தவள், அவளின் சேர்வ் போடுமுன் உதற்றில் சிறிய புன்னகையுடன் அவனைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்பதுபோல் கேட்க, ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்தவன் மனது பின்னோக்கி சென்றது.
வெறித்தனமாக சுஷி கேத்தியுடன் சிங்கில்ஸ் போட்டி ஆடிக்கொண்டிருந்தாள். இருவரும் ஆடிக்கொண்டிருக்கும் போது சுஷி ஆடும் எதிர்பக்கம் வந்த க்ரிஷ், அவள் பார்க்கும் படி உட்கார்ந்தான்.
குனிந்து நின்றபடி இருந்த சுஷி, கேத்தி சேர்வ் போட எதிர்பார்த்துகொண்டித்தபோது… கிரிஷை பார்க்க… அவள் முகம் பிரகாசம் ஆனது. அவன் அவளுக்கு ‘தம்பஸ் அப்’ காட்ட சிரித்துக்கொண்டே கேத்தி போட்ட சேர்வ்க்கு ஆட ஆரம்பித்தாள்.
இருவரும் மாறி மாறிப் புள்ளிகள் சேர்த்துக்கொண்டு போக… ஒரு கட்டத்தில் மேட்ச் பாயிண்ட் யார் அடிப்பபார்கள் என்று எதிர்பார்க்க… கேத்தி அதை அடித்து அந்தச் சுற்றில் வெற்றிப்பெற்றாள். சுஷி கண்கள் கலங்கியது.
இடைவெளியின் போது, கோர்ட்டில் குதித்த க்ரிஷ் முதலில் கேத்தி இருந்ததால் அவளைப் பார்த்துக் கைகுலுக்கி விட்டி சுஷியிடம் வந்தான். அவன் அவளுடன் கைகுலுக்கியதில் இன்னும் கோவப்பட்ட சுஷி அவனிடம் பேசாமல் திரும்பி நின்றாள்.
சுற்றிச் சென்று அவள் முன்பு போய் குனிந்து அவளைப் பார்க்க, அவள் கண்களில் கண்ணீரைப் பார்த்தவுடன், அவளுடைய தோள்களைப் பற்றிக்கொண்டு…
“அய்யே இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணுவாங்களா? லாஸ்ட் செட் இருக்குல்ல” என சொல்ல… அவன் கைகளைத் தட்டிவிட்டு “நீ அவளுக்குத் தானே சப்போர்ட்” என்று மறுபடியும் திரும்பி நின்றாள்.
அவளை அவன் பக்கம் திரும்பியவன் “லூசு. டென்ஷன் ஆகம ஆடு. யு வேர் சோ கிளோஸ். இந்த வாட்டி விடாத” என்றவன் விசில் சத்தம் கேட்டவுடன் அவளை அணைத்து விடுவித்து…
“கம் ஆன் சுஷி யு கேன் டூ இட். ஆல் தெ பெஸ்ட் ” சொல்லிவிட்டு ஓடிச் சென்றான் அவன் இடத்திற்கு.
அவளும் கவனம் சிதறாமல் ஆடி அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற… அவன் கோர்டுக்குள் அவளைப் பாராட்ட வந்தவுடன் “க்ரிஷ்” என அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் குதித்தாள்.
அந்த நினைவலைகளில் இருந்து அவளின் ஆடும் சத்தம் கேட்டு நினைவிற்கு வந்தவன்… சுஷி அப்பொழுது போல் இப்பொழுதும் வெறித்தனமாக ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.
அன்று போல் எதிர்த்து ஆடியப் பெண்ணை வீழ்த்தியதைப் பார்த்தவன் கைதட்டிக்கொண்டே எழ
“க்ரிஷ்” என்று ஓடிவந்து அவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
‘அதே சுஷி. மாறவே இல்லை’ என்று மனதில் நினைத்தவன் அவளின் சந்தோஷத்தைப் பார்த்து அவனது விழிகள் பளபளத்தன.
அவனிடம் இருந்து விலக்கிக்கொண்டு கண்கள் கலங்க… “தேங்க்ஸ் க்ரிஷ்” என்றாள்.
“சரி சரி ஃபீல் பண்ணது போதும். பசிக்குது எனக்கு. வா போய் ஏதாச்சும் சாப்பிடலாம்” அவன் சொல்ல… “சாப்பாட்லயே இரு. விளையாண்டது நானு… பசி உனக்கா?” என்று அவனைச் செல்லமாக அடித்தாள்.
இருவரும் சிறிதுநேரம் அங்கே கழித்துவிட்டு வீட்டிற்கு வந்தடைந்தனர்.
இருவரும் சாப்பிட்டு முடித்திருக்க… இரவு ஆகும்போது “பாரு. ப்ளீஸ் பாரு. இந்த வீகென்ட் இங்க ஃபிரன்ட் கூட ஒரு குட்டி ட்ரிப் போறேன்.
நெஸ்ட் வீக் வரேன் பாரு….. ப்ளீஸ்….. என் செல்ல பாரு தேங்க்ஸ்…” என்று அவனுடைய அம்மாவுடன் பேசி போன் வைத்தான்.