mazhai22

mazhai22

மழை – 22

கீதா கூறியதைக் கேட்ட அரசன் வாழ்க்கையில் முதல்முறையாக பெரும் பயம் சூழ அருகில் காரோட்டிக்கொண்டிருந்த தன் மாமனிடம் திரும்பி, “மாமா மதியைக் காணோமாம்வண்டிய திருப்புங்க ஊருக்கு போகணும்என்று பதற்றப்பட்டு அவருக்கும் அதைக் கடத்தினான்.

சர்ரென்று ஓரமாக வண்டியை நிறுத்தியவர் அலைபேசியை வாங்கி அழும் மனைவியை பேசி சமாதானப்படுத்தியவர் முன்னால் சென்றுக்கொண்டிருந்த நண்பனிற்கு அழைக்கப் போக அதற்குள் அவரே காரில் இவர்களை நெருங்கியிருந்தார் மதி கடத்தப்பட்ட செய்தியை அறிந்து.

அழகு தொழிற்சாலை கண்காணிக்க நான் ஆளு ஏற்பாடு பண்ணிருந்தேன். அப்போ ஊருக்குள்ள சந்தேகமா சில பேரு சுத்தவும் அவங்களையும் கண்காணிக்க ஏற்பாடு பண்ணிருக்கான். அவங்க வெளிய வேலை செய்யுற கூட்டத்தோட வேலை செய்யுற மாதிரி போக்கு காமிச்சி அரண்மனையை நெருங்கிருக்காங்க.

அந்தநேரம் பார்த்து ஏன் தான் மதி வெளிய வந்தாளோ? மயக்க மருந்து அடிச்சி எங்கிருந்தோ வந்த கார்ல ஏத்திட்டாங்க. எல்லாம் சில நிமிசத்துல நடந்திருச்சி. அவன் போன் பண்ணி சொல்றான் வண்டி ஏற்காடு பார்த்துப் போயிருச்சாம் இவங்க பின்னாடி போறதுக்குள்ள வண்டியைக் காணோம். நான் இன்னும் எனக்கு தெரிஞ்சவங்கள வச்சி தேடச் சொல்றேன். கண்டுபிடிச்சிரலாம்என்றவர் இப்பொது வந்த வழி செல்ல இவர்களும் காரை திருப்பினர் மதியைத் தேடி.

அரசனிற்கு ஏற்காடு பார்த்து வண்டி போயிருச்சாம் என்ற வார்த்தையிலே காதல் மனம் தவித்து துடித்தது. ஏற்கனவே அதே சாலையில் சுதர்சனால் தந்தையை இழந்திருக்க மீண்டும் அதே இடத்தில் அவரால் தன் மனதை ஆட்சி செய்பவளுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்று அஞ்சினான்.

ஆற்றோரம் வசிப்பவனை விட பாலைவனத்தில் வசிப்பவனுக்கு நீரின் அருமை ஒரு படி என்னபல படிகள் அதிகமாகவே தெரியுமல்லவா? அதுபோலவே தான் அரசனுக்கும் தனிமையில் வளர்ந்தவனுக்கு தன்னிடம் உரிமையோடு காதலோடு பேசிய மதியின் வெவ்வேறு பரிணாமங்கள் கண்முன் தோன்றி அவளை இழந்துவிட கூடாதே என்ற பதைபதைப்பை ஏற்படுத்தியது.

இதில் தான் அவளது காதலை வேண்டாம் என்றோம், ரூபிணியின் பேச்சுக்கள், தந்தையின் கொலைக்கான நியாயங்கள், எல்லாம் எங்கோ ஒரு மூலையில் முடங்க மனமெல்லாம் மனங்கவர்ந்தவளின் வசம்.

ஏனோ இப்போது தனக்கு பறக்கும் சக்தியைக் கடவுள் கொடுத்திருக்கக்கூடாதா என்று ஏங்கினான். அவனின் மனவேகத்திற்கு முன் விக்னேஷ்வரனின் காரைத் தாண்டி சீறிப்பாயும் கார் கூட கட்டை வண்டியை விட மோசமான வேகத்தில்தான் சென்றது.

அதேநேரம் மதியை கடத்திய வாகனம் ஏற்காட்டிற்கு செல்லாமல் வழியில் உள்ள கிளை சாலையில் திரும்பி வெகுதூரம் சென்று ஆள் அரவமில்லா சாலையில்  நின்றது. எதற்கு என்று அரைமணி நேரத்தில் சுதர்சனின் கார் அங்கு வந்தடைந்ததும் தெரிந்தது.

தான் அரண்மனையில் இருந்து யாரையேனும் கடத்தும்படி கூறியதை கச்சிதமாக முடித்த ஆட்களுக்கு ஆளுக்கொரு செக்கை நீட்டியவர் பின் அவர்களிடம் இருந்து தனக்கென வாங்க சொல்லியிருந்த போனையும் சிம்மையும் வாங்கினார். (யப்பா! சோறு இல்லாம கூட இருந்துறலாம் இந்த போனு இல்லாம இருக்க முடியாது போலவே)

அதனை உயிர்ப்பித்தவர் காரின் பின் சீட்டில் மருந்தின் வீரியத்தில் மயங்கியிருக்கும் மதியைப் பார்த்து வெற்றிப்புன்னகையோடு அழகேசனுக்கு அழைத்தார்.

அங்கே சிங்கமுகப்பாண்டியனும் பேத்தியை காணாமல் தன் ஆட்களோடு ஊரைச் சல்லடையிட, வாணிமாபுரத்தை அடைந்த அழகேசன் மேலே செல்லும் முன் நியாபகம் வந்து, அரசா உங்க தாத்தாக்கு போன் போட்டு ஏற்காடு போற வழில தேட சொல்லுஊருக்குள்ள தேடிட்டு இருக்க போறாரு என்று நீட்ட அவன் அதை வைத்து எப்படி அழைப்பது என்று தெரியாமல் விழித்தான்.

அவன் முழிப்பதைப் பார்த்தே புரிந்தவர் அவனிடம் இருந்து வாங்குவதற்குள் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்த சிணுங்கியது. அதைக்கண்டதும் அலெர்ட் ஆன அழகேசன் காரை நிறுத்தி அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டார்.

ஹலோ மதியோட அப்பா நம்பர் தான இது என்ற குரல் பவ்யமாக கேட்கவும், ஆமாநீங்க யாரு என்று சந்தேகமாக இழுத்தார். ஒருவேளை தன் மகள் கடத்தியவரிடம் இருந்து தப்பித்து யாரின் மூலமாகவாவது பேசுவாளோ என்ற நப்பாசையும் அதில் ஒளிந்திருந்தது.

அதனை நிராசையாக்கி, அட பொண்ண காணோம். இந்நேரம் யாருன்னு தெரிஞ்சிருக்கும்ன்னுல நினைச்சேன். இன்னுமா தெரியல பரவால்ல நானே சொல்றேன். இப்போ யாருக்கு குழி பறிக்க நினைக்குறியோ அவனேதான். உன் பொண்ணு இப்போ என் கஸ்டடில.

ஒழுங்கு மரியாதையா பாக்டரியோட ஒரிஜினல் பத்திரத்தை என்கையில குடுத்தா உன் பொண்ணு பத்திரமா உன் கைல சேருவா இல்லஅதுக்கு மேல நான் சொல்ல விரும்பல நாட்டுல நடக்குறதைப் பார்த்து நீயே ஊகித்துக்கோ என்று கொடூரமாக மிரட்ட

எந்த தந்தையும் கேட்கக்கூடாத வார்த்தைகள் அவை. தன் ஒரே மகளுக்காக கலங்கிய கண்களையும் இதயத்தையும் அடக்கியவர் பத்திரம் தருவதாக ஒப்புக்கொள்ளும் முன் அரசன் கத்தியிருந்தான்.

டேய்கேவலம் சொத்துக்காக இன்னும் எத்தனை உயிரைடா பறிப்ப? மதிக்கு மட்டும் ஏதாவது ஆச்சு உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது. அவ நல்லாயிருக்குற வரைக்கும்தான் உனக்கு நல்லது. பத்திரம் என்கிட்டதான் இருக்கு. இப்போ வந்தா கூட உன் மூஞ்சில வீசுறேன் எங்கடா வரணும். மதி எங்க?” என்றான் அரசன் மிரட்டலா கெஞ்சலா என்று பிரித்தறியா குரலில்.

ஒஹ் முறை மாப்பிளைக்கு மூக்கு மேல கோவம் வருதா? நியாயம்தான். அப்புறம் நீ கேட்டியே எத்தனை உயிரை பறிப்பன்னு. நானா யாரையும் தேடி போய் பறிக்குறதில்லை மாப்பிள்ளை இதோ உங்களை மாதிரி யாராவது என் வழில குறுக்க வந்தா நானும் குறுக்கா வரேன் என்றான் சுதர்சன் தவறும் செய்து விட்டு அதை செய்யவச்சது நீங்கதான் நானா செய்யலை என்ற அர்த்தத்தில். (இப்படியும் பல பேரு சுத்துறாங்க நாட்டுல என்னத்த சொல்ல?)  

இப்போ உன் நியாயத்தை கேட்க எனக்கு விருப்பம் இல்ல. மதி எங்க அவகிட்ட பேசணும் என்றான் அரசன்.

அவ தான் இன்னும் மயக்கத்துல இருக்காளே மாப்பிள்ள. அது தெளிய ஆகும் இன்னும் ஒருமணி நேரம். அதுக்குள்ள நாம நம்ம டீல்ல முடிக்கணும் சரியா? இடத்தை இன்னும் பத்து நிமிசத்துல்ல சொல்றேன். அப்புறம் இன்னொன்னு அந்த போலீஸ் அப்புறம் ஊர்க்காரங்க அப்படின்னு கும்பலா கிளம்பி வரதா எனக்கு தகவல் வரக்கூடாது. எங்கே எல்லாரையும் நல்ல பிள்ளையா திருப்பி அனுப்புங்க பார்ப்போம்என்று உத்தரவிட்டு வைத்தான்.  

அழகேசன் அழுந்த முகத்தை துடைத்து அப்படியே அமர்ந்திருக்க விக்னேஷ்வரன் வந்ததும் நடந்ததை அறிந்து போலீஸாய் மதியையும் பத்திரத்தையும் காப்பாற்ற நினைக்க அழகேசன் அதனை ஒத்துக்கொள்ளவில்லை.

என் பொண்ணு விஷியத்துல நான் ரிஸ்க் எடுக்க விரும்பல சாரிடா என்று மனம் உடைந்தார். அவரும் ஒரு தகப்பன் தானே நண்பனின் மனநிலை உணர்ந்து தோளில் தட்டிக்கொடுத்தவர் போன் செய்து தன் ஆட்களை தேடுவதை நிறுத்தி போகச் செய்தார்.

அடுத்த பத்து நிமிடத்தில் ஆட்களை வைத்து தேடுவதை நிறுத்திவிட்டதாக அறிந்த சுதர்சன் சக்திவேல் இறந்த அதே இடத்திற்கு வர சொன்னார்.

சொன்ன இடமே நிலவரசனிற்கும் அழகேசனிற்கும் திகிலைக் கிளப்பியது. இவர்கள் அதை நோக்கிச் செல்ல கிளை வழியில் இருந்து சுதர்சனும் அந்த இடத்திற்கு முன்பே சென்று காத்திருக்க ஆரம்பித்தார். இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததே அவர்களுக்கு ஒரு பயத்தை விதைக்க வேண்டும் என்றுதான்.

ஆயிற்று நீண்டநெடிய யுகம் அரசனிற்கு ஆனால் அரைமணி காலம். அங்கு இரு கார்கள் நிறுத்தப்படிருக்க சுதர்சன் முன்னால் இருந்த கார் மீது சாய்ந்திருப்பதை பார்த்த அழகேசன் அவர்களை நெருங்க, இருபதடி தூரத்திலே கார் இரண்டு தடியன்களால் அவர்களது கார் நிறுத்தப்பட்டது. இடுப்பில் எப்போதும் இருக்கும் கத்தியை தொட்டுப் பார்த்துக்கொண்டான் அரசன்.

ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் தயவு தட்சணம் பார்க்காமல் அழித்து விட முடிவு செய்திருந்தான். காட்டில் உள்ள விலங்கிடம் இருந்து தற்காத்துக்கொள்ள அதனை அழிப்பது எவ்வாறு தவறில்லையோ அது போலவே நாட்டில் வாழும் மனித மிருகங்களிடம் இருந்தும் தற்காத்துக்கொள்ள அழிப்பது பாவமில்லை என்றே தோன்றியது அரசனிற்கு.

மாறாக அது பாவமாகி தன் உறவாக இருக்கும் மழையைப் பிரித்தாலும் பரவாயில்லை, தன் உயிரானவளுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்பதே பிரதானமாய் இருந்தது.    

அவர்கள் பத்திரத்தை கேட்கவும், மதி எங்ககிட்ட வராம என்னால அதைத் தர முடியாது என்று உறுதியாய் மறுத்தான் அரசன். அதை அங்கிருந்தே கேட்ட சுதர்சன், பக்கத்தில் இருக்கும் காரை ரோட்டிற்கு குறுக்காக வர செய்து கதவைத் திறந்து காமித்தார்.

தான் இருக்கும் ஆபத்தான கட்டம் எதையும் அறியாமல் இன்னமும் மயக்கத்தில் சுருண்டிருந்தாள் மதி. அவளைப் பார்த்ததும் ஓடத்துடித்த கால்களை கட்டுபடுத்தி அழகேசனை பார்த்தான் அரசன்.

அழகேசனோ, இன்னும் உங்க மேல நம்பிக்கை இல்ல. ஒருவேளை பத்திரம் வாங்கிட்டு என் பொண்ணையும் தரலைன்னா? என்று கேள்வியாக நிறுத்தினார்.

உடனே சுதர்சன் எரிச்சலில் டிரைவரிடம் மதி இருந்த காரை சற்றுத்தள்ளி நிறுத்தி வரச்சொன்னார். பின் அனைவரையும் தன் காரில் ஏற சொன்னவர் இவர்களிடம், “பத்திரத்தை என்கிட்ட கொடுத்துட்டு அப்புறம் போய் உங்க பெண்ணை கொஞ்சிக்கோங்க. நீங்க எமாத்துனதா தெரிஞ்சது அப்புறம் நானும் வேற மாதிரி பண்ண வேண்டி வரும் என்றார் அக்மார்க் வில்லனாய்.

அரசன் காரினுள் இருந்த பத்திரத்தை எடுத்து அவரிடம் சென்று வீசாத குறையாய் கையில் திணித்தவன் மதியிடம் செல்ல கால்களை எட்டிப்போட அவனைப் பிடித்த சுதர்சன் கொஞ்சம் இரு மாப்பிள்ள எல்லாம் இருக்கான்னு பாத்துக்குறேன் என்றவர் அதனை பார்த்து எல்லாம் சரியாக இருந்த பிறகே விட்டார்.

அவர் தொட்ட இடத்தை வெறுப்போடு துடைத்தவன் பின் மதியை நோக்கி கிட்டதட்ட ஓடினான் என்றே சொல்ல வேண்டும். அழகேசன் காரை எடுக்க முயற்சிக்க சுதர்சன் தன் லைட்டரால் பத்திரத்தைப் பற்ற வைப்பது தெரிந்தது.

இருபத்தி ஐந்தாண்டுகள் நண்பனால் பாதுகாக்கப்பட்டதை தங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆற்றாமை மகள் கிடைத்த மகிழ்ச்சியையும் மீறித் தோன்றத்தான் செய்தது. அந்த பாரத்தை ஒரு பெருமூச்சை வெளியேற்றி சிறிது குறைத்தவர் காரைக் கிளப்பினார்.

எரித்து சாம்பலாக்கிய கையோடு அதன் மேல் காலை வைத்து தேய்த்தவர் அரை நாளில் அரை உயிராகியிருக்கும் தன் பாக்டரியின் பெயரைக் காப்பாற்ற வாணிமாபுரம் நோக்கி சென்றார்.

இது எதனையும் அறியாமல் மதியை அமர வைத்து அவளின் கன்னத்தை தட்டியபடி அவளைச் சுயஉணர்வுக்கு கொண்டு வர போராடிக்கொண்டிருந்தான் அரசன். அறிவிற்கு அவளைப் பார்த்ததும் தெரிந்துவிட்டதுதான் நலமாக இருக்கிறாள் என்று ஆனால் மனமோ அவள் அசைவின்றி இருந்ததால் முரண்டுப்பிடித்தது.

தலை பாரமாக இருக்க, மதிமதிகண்ணை தொற என்ற அரசனின் குரலும் மூளையைச் சென்றடைய விழிகளை கடினப்பட்டு திறக்க முயற்சி செய்தாள் மதி. ஆனால் அவளிற்கு அது கடினமாக இருக்கவும், போங்க மாமா என்னால கண்ணைத் தொறக்கவே முடியல என்று உளறியவாறு அவனின் தோள் சாய, அவ்வளவுதான் அத்தனை நேரம் எங்கெங்கோ அந்தரத்தில் உசலாடிய அரசனின் உயிர் அவனை வந்தடைந்தது.

சில மணிநேரங்கள் தவித்த தவிப்பு தீர, தவிக்க வைத்தவளிடமே அதனைக் காட்டினான் காற்றுக் கூட புக முடியாத அளவு நெருங்கி அணைத்தபடி.

ஒருவரின் இதயத்துடிப்பை மற்றொருவர் உணர, பெண்ணவளின் மூச்சுக்காற்று அரசனின் கழுத்தைச் சுட அவளின் கூந்தலில் முகம் புதைத்திருந்தான் அழுத்தமாய். மதியின் கூந்தல் அவனின் விலைமதிப்பில்லா கண்ணீரை உள்வாங்கியதை அவள் அறியவில்லை.

ஏற்கனவே மயக்கத்தில் இருந்தவள் இந்த மயக்கமும் சேர அவனின் கைகளுக்குள் அடங்கியிருந்தாள் பாந்தமாய், சுகமாய், உரிமையாய், அதற்கும் மேலாக  கரைபுரண்டோடும் காதலாய்

அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்

அந்த ஓசைக்கு இணையான இசையில்லையே

உந்தன் கூந்தல் முடி மெல்ல அசைகின்றதே

அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே

சிற்பம்கவிதைஓவியம்

மூன்றும் சேரும் ஓரிடம்

கண்டேன் பெண்ணே நானும் உன்னிடம்!!!

மழை வரும்

வறண்ட பூமியாய் வானம் பார்த்திருக்கிறேன்

என்னைக் கட்டியணைக்க

மழையாக நீ வருவாயா?

 

 

 

 

 

error: Content is protected !!