MEM2-4

மறந்துபோ என் மனமே(2) – அத்தியாயம் 4:

இருவரும் ஹோட்டல் வந்தடைய அவள் முகவாட்டத்துடனே இருந்தாள். அவள் மனநிலையை எப்படி மாற்றுவது என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

அவள் பெரிதாக ஆர்வமில்லாமல், மனதில் ‘என்ன பத்தி என்ன நினைப்பான். ஏதோ நட்கேஸ் வண்டி ஓட்டினமாதிரி ஒட்டிருக்கேன்’ என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…”சுஷி” என்றவுடன், அவனைப் பார்த்தாள்.

“உனக்கு ஞாபகம் இருக்கா… நம்ம சீனியர் ஹை ஸ்கூல் படிக்கிறப்ப கலிபோர்னியா ட்ரிப் போனோமே. அப்போ யாருக்கும் தெரியாம இதே மாதிரி ஒரு இந்தியன் sea food ரெஸ்டரண்ட் போனோமே…” விழிகள் விரித்து க்ரிஷ் சொல்ல…

அதைக் கேட்டவுடன், அவள் முகம் மாறியது. அவர்களுடைய சிரிய வயது நிகழ்வு நினைவுக்கு வந்தது. கூடவே கொஞ்சம் புன்னகையும் வந்தது.

**********

“என்ன ஏன் கூட்டிட்டு வந்த க்ரிஷ்??? எனக்கு ரொம்பப் பயமா இருக்கு” என்று பயத்துடன் சின்ன பெண்ணாக இருந்த சுஷி சொல்ல… “சும்மா சீன் போடாத… பயப்படற மாதிரி. அங்க அம்மா sea food ட்ரை பண்ணவே விடமாட்டாங்க”

“கௌஷல் சொல்லிருக்கான் ஷெல் ஃபிஷ் (Shellfish) செம்ம டேஸ்ட்’டா இருக்கும்னு. இங்க அது கிடைக்கும்னு பாத்து வெச்சுட்டேன் முன்னாடியே” சொல்லிக்கொண்டே ஆர்டர் செய்தான்.

கௌஷல், க்ரிஷ் சுஷியின் நண்பன். க்ரிஷிற்கு கொஞ்சம் நெருங்கிய தோழன்.

சுஷி பயத்துடன் சாப்பிட்டு முடிக்க, க்ரிஷ் ரசித்து ருசித்து சாப்பிட்டு முடித்தான். சர்வர் இவர்களிடம் பில் கொடுத்தவுடன், “சுஷி பில் கட்டிட்டு வந்துடு” என சொல்லிவிட்டு எழுந்தான்.

“டேய் நான் வாலட் எடுத்துட்டு வரல” பீதியுடன் சுஷி சொல்ல “என்னது??? நானும் எடுத்துட்டு வரலையே… என்ன செய்றது…” என யோசித்த க்ரிஷ் “சரி நீ இங்கயே இரு சுஷி. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்றான்.

“என்ன தனியா விட்டுட்டுப் போகாத க்ரிஷ். யாராவது கேட்டா நான் என்ன சொல்வேன்?” அவள் முகம் பயத்தை காட்டியது.

“நீ இங்கயே இரு சுஷி… வேற வழி இல்ல. நான் போய் எடுத்துட்டு வரேன் பத்து நிமிஷம்”

அவன் சென்ற சில வினாடிகளில்… மறுபடியும் அந்த சர்வர் அவள் அருகே வர, சட்டென பயத்தில் எழுந்தாள்.

பணம் கேட்டு வந்திருக்கிறானோ என நினைத்து… “Sorry we forgot to bring wallet. My friend will be back soon (வால்ட் எடுத்துட்டு வர மறந்துட்டோம். என் ஃபிரன்ட் எடுத்துட்டு சீக்கிரம் வந்துடுவான்) என்றாள் பதட்டத்துடன்.

சர்வர் எதுவும் புரியாமல் அவளைப் பார்க்க, அவளை யாரோ பின் இருந்து தோள்ப்பட்டையில் தட்டி அழைக்க… அவள் திரும்பினாள். அங்கே க்ரிஷ் நின்றுகொண்டிருந்தான் கண்களில் கள்ளத்தனத்துடன்.

“பயந்துட்டயா. பில் பே பண்ணிட்டேன். சாப்பிட கூட்டிட்டு வந்த எனக்கு வால்ட் எடுத்துட்டு வர தெரியாதா…” என கண்ணடித்து வாலட்’டை காண்பிக்க, கோபத்தின் மிகுதியில் ‘க்ரிஷ்’ என்று அவனை அடிக்கச்சென்றாள்.

அவன் அங்கிருந்து சிரித்துக்கொண்டே ஓடினான்.

இருவரும் அவர்கள் குழு உள்ள இடத்திற்கு நடந்து கொண்டே செல்ல “Sorry we forgot to bring wallet” என அவளைப்போலவே அவன் பேசி கிண்டல் செய்துகொண்டே இருந்தான். அவள் போலியாகக் கோபப்படுவதுபோல் முறைத்துக்கொண்டிருந்தாள்.

திடீரென அப்போது அவன் முகம் வீங்கிப் போய் இருந்தது. அதைப் பார்த்து சிரிப்பு தாங்க முடியாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“எதுக்கு சிரிக்கிற?” அவன் புரியாமல் கேட்க “நம்ம ஒரு போட்டோ எடுத்துக்கலாம் க்ரிஷ்” என்று போட்டோ எடுக்கும்போது தான் அவன் முகம் அவனுக்குத் தெரிந்தது.

“ஐயோ என்னது இப்படி?” அலறலுடன் அவனின் முகத்தைத் தேய்த்துக்கொண்டு கேட்க “ஷெல் ஃபிஷ் டேஸ்ட்டா இருக்கும். இல்ல… அதான் அதோட வேலைய காட்டிடுச்சு” என்றாள் மறுபடியும் விழுந்து சிரித்துக்கொண்டே.

சரியாக அந்த நேரம் பார்த்து அவனை வீடியோ காலில் அழைத்தார். “ஐயோ அம்மா… மாட்டினேன். இந்த நிலமைல பாத்தா கொன்னுடுவாளே. நான் எடுக்க மாட்டேன்” அந்த அழைப்பை எடுக்காமல் விட்டுவிட்டான்.

மறுபடியும் அழைக்க அவன் எடுக்கவில்லை. இதைப் பார்த்து சுஷி “இதெல்லாம் தேவையா…” என்று சிரிக்கும்போது அவளுக்கு பார்வதி அழைத்தார்.

அதைப் பார்த்த கிரிஷ் “வேணாம் சுஷி… எடுக்காத எடுக்காத” என்று அவளிடம் கெஞ்ச “என்னயா ஏமாத்தின… இரு” என்று அழைப்பை அட்டன்ட் செய்தாள்.

செய்தவள் பார்வதியிடம் பேசிவிட்டு போனை அவன் பக்கம் காண்பித்தாள். அவன் முகத்தைப் பார்த்த பார்வதி, அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு அவனைத் திட்டித்தீர்த்துவிட்டு போனை வைத்தார்.

அவனை மாட்டிவிட்ட சந்தோஷத்தில்… ‘எப்படி’ என்பது போல பெருமையாக அவள் பார்க்க… “உன்ன” என்று சொல்லிக்கொண்டே அவளைத் துரத்தினான்.

அந்த நினைவுகளில் இருந்து நிகழ்விற்கு வந்த சுஷி, க்ரிஷிடம் “மறக்க முடியுமா…” என சத்தமாக சிரித்தாள்.

“இப்போ இங்க ட்ரை பண்ணவா?” அவன் ஆர்வத்துடன் கேட்க…

“கண்டிப்பா. அப்போ மாதிரி நான் போட்டு கொடுக்க மாட்டேன் ஆண்ட்டி’ட்ட” என்றாள் சிரித்த முகத்துடன்.

“இப்போ அம் யூஸ்ட் டு இட் சுஷி”

“என்ன ஆண்ட்டி’ட்ட திட்டு வாங்கி பழகிடுச்சா?” புருவத்தை ஏற்றி இறக்கி அவள் கேட்க…

அவளின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தவுடன் நிம்மதியாக உணர்ந்தவன் “திட்டு வாங்கி இல்ல… நிறைய டைம் சாப்பிட்டு ஷெல் ஃபிஷ் பழகிடுச்சு” என புன்னகைத்தான்.

“சரி நீ இப்போ என்ன சாப்பிடறனு சொல்லு” அவன் கேட்க “எனக்கு ஏதோ ஒன்னு” என்றாள் மறுபடியும் பெரிதாக ஆர்வமில்லாமல்.

“ரைட்… நானே ஆர்டர் பண்றேன்” என்றவன் அவளுக்குப் பிடித்ததை ஆர்டர் செய்ய, அவன் தனக்குப் பிடித்ததை இன்னமும் ஞாபகம் வைத்துள்ளான் என்பதே சுஷிக்கு அளவில்லா சந்தோஷமாக இருந்தது.

இருவரும் சாப்பிட்டு முடிக்கும் போது “க்ரிஷ்…” என தயங்கி அழைத்தாள். ‘என்ன’ என்பது போல் அவன் பார்க்க, “கேன் வி ஹேவ் எ ட்ரிங்க்? ஐ ஃபீல் சோ ஹாப்பி டுடே (can we have a drink? I feel so happy today)”

‘அவனுக்கு மது எடுத்துக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அவள் இருக்கும் நிலைமையில் அவளுடன் எப்படி’ என்று யோசித்தவன் “யு ட்ரிங்க் சுஷி. எனக்கு வேணாம்” என்றான்.

“லைட்டா?” மறுபடியும் அவள் கேட்க “இல்ல சுஷி” என மறுத்துவிட்டான்.

அவள் முதலில் ஆர்டர் செய்து அதை முடிக்கும்போது, மற்றொன்றை வாங்கிக்கொண்டாள்.

அப்போது திடீரென, “அந்த ராம்க்கு என்னை எப்படி தனியா விட்டுட்டுப் போக தோணுச்சு க்ரிஷ்? அவனை நான் எவ்ளோ நம்பினேன் தெரியுமா… டாம்மிட்” என்று டேபிள் மேல் கைவைத்து அழுக ஆரம்பிக்க… அவனால் அதைப் பார்க்க பார்க்கமுடியவில்லை.

“சுஷி நம்ம கிளம்பலாம். நீ நிறைய எடுத்துட்ட. போதும்” அவள் அருகில் சென்று அவளை எழுப்ப முயற்சிக்க…

“என்னவிடு. நீயும் அவனும் ஃபிரெண்ட்ஸ். அவனுக்குத் தான நீ சப்போர்ட் பண்ணுவ. என்ன யாருமே புருஞ்சுகல. மொதல்ல நீ. அப்புறம் அவன்” என்று அவன் கைகளை உதறிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்த்தாள்.

அவள் செல்வதைப் பார்த்து அவசரமாக பில் கட்டிவிட்டு, அவனும் வெளியே செல்ல, அவள் காரை உதைத்துக்கொண்டிருந்தாள்.

“சுஷி என்ன ஆச்சு? என்ன பண்ற?” அவசரமாக அவள் அருகே சென்று கேட்க “ஏன் டோர் ஓபன் ஆகமாட்டீங்குது?” என்று மறுபடியும் திறந்துப்பார்த்தாள்.

“நம்ம கார் அந்தப் பக்கம் இருக்கு” என அவளைக் கைத்தாங்கலாக அழைத்துச்சென்றான்.

அவளை சீட்டில் உட்காரவைத்து, சீட் பெல்ட் போட்டுவிட்டு, காரை கிளப்ப ஆயத்தமாக…”ஏய் நீ ஏன் ஏறுன? ஸ்டீவ் எங்க?” என்று அவனை தள்ளப்பார்த்தாள்.

“ஸ்டீவ் இன்னிக்கி வரல… நான் தான் வந்தேன். மறந்துட்டயா?” என்று காரை கிளப்பினான்.

“உன்கூட வந்தேனோ. அப்போ ஸ்டீவ் ஏன் இன்னிக்கி வரல? ஐயோ தல வலிக்குதே” தலையைப் பிடித்தவள், டேஷ் போர்டு திறந்து அதில் இருந்த ஒரு மாத்திரையைப் போட முற்படும்போது…

“என்ன மாத்திர அது? எதுக்கு எடுக்கற?” க்ரிஷ் அவளைத் தடுத்தான்.

“கைய விடு க்ரிஷ். தல வலிக்குது எனக்கு” என்று அவன் கையை உதறிவிட்டு அதைப் போட்டுக்கொண்டாள்.

மாத்திரை உள்ளே போன சில நிமிடங்களில் மயக்க நிலைக்கு சென்றாள். க்ரிஷிற்கு என்ன செய்வதென்று தெரியாமல் காரை வேகமாகச் செலுத்தினான்.

சிறிது நேரத்தில் அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்’க்கு இருவரும் வந்தடைய, அவன் அவளைக் கைத்தாங்கலாகக் கூட்டிச்சென்றான்.

அவர்கள் இருக்கும் தளம் வந்தது. இருவரும் லிஃப்ட்டில் இருந்து வெளியே வர, அதை வெளியே போன் பேசிக்கொண்டிருந்த ப்ரியா பார்த்தாள்.

சுஷியின் கோலத்தைப் பார்த்தவள், க்ரிஷ்ஷை முறைத்துவிட்டு அவள் வீட்டினுள் சென்றாள்.

தன்னுடன் வரும்போது கூட இந்த நிலைமையில் சுஷி வருவதைப் பார்த்து கோபத்துடன் உள்ளே சென்று விட்டாள் என புரிந்துகொண்டான் க்ரிஷ்.

மெதுவாக சுஷியை அவள் வீட்டிற்கு அழைத்துச்சென்று, ரூமில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தான். போர்வையை எடுத்துப் போர்த்திவிட்டு அவளைப்பார்க்க…

“டோன்ட் லீவ் மீ அலோன். ப்ளீஸ் பி வித் மீ (Dont leave me alone. Please be with me)” என்றாள் முனுகிக்கொண்டு அரைக் கண்கள் மூடியவாரே.

அவளின் முடியை கோதிவிட்டு வெளியே வந்தவன் என்னசெய்வது என்று யோசிக்க, ப்ரியா கோபமாகச் சென்றது நினைவிற்கு வந்தது. அவளுக்கு மெசேஜ் செய்தான்.

கி: ஹாய் ப்ரியா

பி: இதை உங்ககிட்ட இருந்து எதிர்பாக்கல

கி: வெளிய வர முடியுமா?

என்ற மெசேஜ் அனுப்பியவன் வீட்டிற்கு வெளியே வர, ப்ரியாவும் வெளியே வந்திருந்தாள்.

“நீங்க இப்படி பண்ணுவீங்கனு நினைக்கல. நீங்க கூட அவங்கள இந்த நிலமைல கூட்டிட்டு வரணுமா?” அதிருப்தியுடன் கேட்க…

“இல்ல இதை சடன்’ஆஹ் நிறுத்துறது எவ்ளோ கரெக்ட்’னு தெரில. அவ எந்த லெவல்’ல இருக்கானு தெரில. இன்னிக்கி தான் மீட் பண்ணிருக்கேன். இன்னிக்கே வேணாம்னு சொன்னா அப்புறம் பேசாம போய்டுவாளோனு தான்”

இருவரும் பேசிக்கொண்டிருக்க வீட்டினுள் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு பதறிக்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே சுஷியின் கை விரலில் ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது.