MEM23

மறந்துபோ என் மனமே(2) – அத்தியாயம் 3:

ஆஃபீஸ்க்கு புறப்பட்டவன் நேராக சுஷீலாவின் வீட்டுக் கதவைத் தட்ட, உள்ளிருந்து அவள் திறந்தாள்.

“ஹே க்ரிஷ் வா வா” புன்முறுவலிட்டு உள்ளே அழைத்தவள் “நேத்து கொஞ்சம் வெர்க் அதிகமா இருந்துச்சு. அதான் மீட் பண்ண முடில… ஸாரி” என்றாள் கொஞ்சம் வருத்தத்துடன்.

“தட்ஸ் ஒகே. அதான் விடாம இப்போ பாக்க வந்துட்டேனே” என சின்னதாக சிரித்துக்கொண்டு அவளைப் பார்த்தவன், அவளுடைய கலையிழந்த முகத்தைப் பார்க்க வருத்தமாக இருந்தது.

இரண்டு நாட்கள், இரவில் கண்ட அவளின் தோற்றம் அவன் முன் வந்து சென்றது.

“ஹே க்ரிஷ் என்ன ஆச்சு?” அவன் முன் கைகளை ஆட்டி நிகழ்வுக்குக் கொண்டு வர “ஆண்ட்டி அங்கிள் எப்படி இருக்காங்கனு கேட்டேன்?” என்றாள் அவனைப் பார்த்து.

“நல்லா இருக்காங்க சுஷி. நீ ஆஃபீஸுக்கு கிளம்பரப்ப டிஸ்டர்ப் பண்றேன்னு நினைக்கறேன்”

“நான் அல்மோஸ்ட் ரெடி ஆயிட்டேன் க்ரிஷ். கிளம்ப வேண்டியது தான்” என்றாள்.

“கிரேட். வா அப்படியே பேசிட்டே கிளம்பலாம்” அவன் சொன்னவுடன், இருவரும் புறப்பட்டனர்.

“ஆண்ட்டி அங்கிள் எப்படி இருக்காங்க” அவன் இப்போது கேட்க, “நல்லாயிருக்காங்கன்னு தான் நினைக்கறேன்” என நிறுத்தி “நான் பாத்து நாள் ஆச்சு” என்றாள் வாடிய முகத்துடன்.

“சாயங்காலம், இங்க இருக்க ஸ்டோர்ஸ்’கு போலாமா? எனக்கு கொஞ்சம் food items வாங்கணும். போர் அடிக்கும் தனியா போனா…” அவன் கேட்க, சற்று தயங்கியவள் பின், சிரிக்க முயற்சித்து “போலாம்” என்றாள்.

அவளின் சிரிப்பிழந்த முகம் அவனை என்னவோ செய்தது.

“நீ ஏமாத்தினாலும் ஏமாத்திடுவ. நான் உனக்கு கால் பண்றேன் கிளம்பரத்துக்கு முன்னாடி. ஆஃபீஸ்ல இருந்து அப்படியே போய்டலாம்” என்றான் சிரித்தபடி பதிலுக்கு அவளும் சிரித்து “கண்டிப்பா” என்றாள்.

அவனுக்கு அந்த சிரிப்பு போதுமானதாக இருந்தது அப்போது.

சிறிதுநேரம் பேசிவிட்டு இருவரும் அவரவர் காரில் புறப்பட்டனர் ஆஃபீஸிற்கு.

—-

மாலை நான்கு மணி என காட்ட, அவன் சுஷீலாவை அழைத்தான். இருவரும் பேசியது போல் அங்குள்ள இந்தியன் ஸ்டோருக்கு சென்றனர்.

அவன் தேவையானதை எடுத்துக்கொண்டிருக்கும் போது அவளுக்கு போன் கால் வந்துகொண்டே இருந்தது.

அவள் எடுத்துப் பேச ஆரம்பிக்க… அது சில நிமிடத்தில் வாக்குவாதத்தில் முடிந்தது. அவள் வைத்துவிட்டு க்ரிஷ் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை உணர்ந்தவன்…

“என்ன ஆச்சு ஆர் யு ஒகே?” கேட்டான் அவளிடம்.

“ஒன்னும் இல்ல அம் ஒகே” என்றவள் “க்ரிஷ் எனக்கு Kohls’ல டிரஸ் வாங்கவேண்டியது இருக்கு. முடிச்சுட்டு அங்க போலாமா? இதுக்காக இன்னொரு டைம் வரணும் அதான்…” என்றாள்.

“போனும்னு சொன்னா போதும். போகலாமானு கேக்க வேணாம்… அதுவும் என்கிட்ட” அவன் புருவத்தை உயர்த்தி உதட்டில் புன்னகையுடன் சொல்ல, அவள் மெல்லியதாய் சிரிக்க… சிடுசிடுவென இருந்த முகம் சற்று மலர்ந்தது.

—-

இருவரும் அடுத்து அந்த துணிக் கடைக்கு சென்றனர்.

“ரொம்ப… ரொம்ப நாள் கழிச்சு நம்ம இப்படி ஷாப்பிங் வந்துருக்கோம்ல சுஷி?”

“ட்ரு. அந்த நாட்களைவே மறக்க முடியாது க்ரிஷ். நிறைய மிஸ் பண்ணிருக்கேன்” அவள் முகத்தில் கொஞ்சம் சோகம் தெரிந்ததோ? அதை அவன் கண்டுகொள்ளவில்லை.

“இனி மிஸ் பண்ணாத சுஷி” என்றான் பதிலுக்கு புன்னகையுடன்.

“ஹொவ் லாங்? நீ இங்க இருக்குற வரைக்கும். அப்புறம் ஆஸ்யூஷுவல்(asusual) தனியா தான் எல்லாமே” என்றாள் எதிலும் நாட்டமில்லாதது போல.

இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்த ஆடைகளைப் பார்த்துக்கொண்டிருக்க, அவன் ஒரு டிரஸ் எடுத்து அவளிடம் காட்டினான்.

அதைப் பார்த்தவுடன் “நைஸ்… பரவால்ல. எனக்கு ஆலிவ் கிறீன் பிடிக்கும்னு இன்னும் ஞாபகம் வெச்சுருக்க” சிரித்துக்கொண்டே அதை வாங்கிக்கொள்ள… “நான் எதையும் சீக்கிரம் மறக்க மாட்டேன் சுஷி” என்றான் உள் அர்த்தத்துடன்.

“ரியலி?” சந்தேகமாகக் கேட்டுவிட்டு, பின் சாதாரணமாக… “நான் ட்ரை பண்ணிப்பார்த்துட்டு வறேன். மொபைல் வெச்சுரு” என்று அவனிடம் கொடுத்துவிட்டு அவளும் ட்ரயல் ரூம் சென்றாள்.

சிறிதுநேரத்தில் அவளுக்கு போன் அழைப்பு வர, அதைப் பார்த்தான்… “ஸ்டீவ்” என்று காட்டியது. முழு ரிங் அடித்தவுடன், கட் ஆனது அந்த அழைப்பு.

மறுபடியும் ஸ்டீவ் அழைத்தான். ‘எடுத்து பேசலாமா இல்லை வேண்டாமா’ என்று க்ரிஷ் யோசித்தான். முன்பு போல இருந்திருந்தால், இந்த யோசனையே வந்திருக்காது. ஆனால் இப்போது…

‘அவளுக்கு வந்த கால் நம்ம எடுக்கறது தப்பு. அவ வந்தவுடனே சொல்வோம்’ என்று நினைத்துக்கொண்டான்.

அவள் டிரஸ் ட்ரை செய்துவிட்டு வெளியே வந்தவுடன் “சுஷி உனக்கு ஸ்டீவ்’னு ஒருத்தர்ட்ட இருந்து கால் வந்துச்சு” என்று மொபைலை அவளிடம் நீட்டினான்.

“ஓ… ஐ வில் கால் ஹிம் லேட்டர்” என சொல்லிவிட்டு இருவரும் நடக்க ஆரம்பிக்க… ஆடவர் ஆடைகள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

“ஏதாச்சும் எடுக்கிறயா க்ரிஷ்?” அவள் கேட்க “இப்போ எதுவும் வேணாம் சுஷி” என்றான்.

அவள் அந்த உடைகளைப் பார்த்து நடந்துகொண்டிருக்கும் போது, ஒர் ஆடை கண்களில் பட “க்ரிஷ்” என்று எடுத்துக்காட்டினாள்.

அவன் சிரித்துக்கொண்டு “நீயும் தான் மறக்கல. ஹ்ம்ம்ம்… ராயல் ப்ளூ நைஸ்” என்றான் அதை வாங்கிக்கொண்டு.

“உன் கப்போர்டு’ல பாதிக்கு மேல ப்ளூ ஷேட்ஸ் (shades) தானே இருக்கும்” என்றாள் அவனைப் பார்த்து புன்னகையுடன்.

பின், “அதுமட்டுமா… அதெல்லாம் போட்டுட்டு நீ கேத்தி பின்னாடி சுத்து சுத்துன்னு சுத்தினயே” என அவனைக் கிண்டல் செய்ய “கேத்தி பத்தி ஞாபக படுத்தாத… ஷி இஸ் மை டார்லிங்… ஸ்வீட் ஹார்ட்” என்றான் சிரித்துக்கொண்டு.

அவளோ சத்தமாக சிரித்து… “பாத்து அவ பாய் ஃபிரன்ட் அடிக்க வந்துடுவான்” என்றாள்.

“இப்போ பாய் ஃபிரன்ட் மட்டுமில்ல. அவளோட ட்வின்ஸ்’ஸும் சேர்ந்து அடிக்க வந்துடுவாங்க” என்றான் பதிலுக்கு சிரித்துக் கொண்டு.

“அட இன்னும் காண்டேக்ட்’ல இருக்கியா க்ரிஷ்?” ஆர்வமாக அவள் கேட்க “நான் ஆல்மோஸ்ட் எல்லாரோடையும் காண்டேக்ட்ல இருக்கேன் சுஷி” என்றான்.

“ஹ்ம்ம்… என்ன தவிரனு சொல்லு.” என்றாள் வராத சிரிப்பை முகத்தில் வரவழைத்து சின்ன வருத்தத்துடன் அங்கே இருந்த ஆடைகளைப் பார்த்துக்கொண்டு.

பதிலுக்கு புன்னகைக்க மட்டும் செய்தான்.

‘உன்னைப்பத்தி உங்கிட்ட பேசி தெருஞ்சுக்கலயே தவிர… உன்கூட இருக்கவங்க கிட்ட கேட்பேன் சுஷி. அப்படித் தெருஞ்சதுனால தான் இங்க வந்துருக்கேன்’ என நினைத்துக்கொண்டான்.

இருவரும் அங்கிருந்து வாங்கிக்கொண்டு வெளியேறும் போது இரவு எட்டிப்பார்க்க…

“சுஷி உனக்குப் பசிக்கல?”

“ஆமா பசிக்குது. இந்தியன் ரெஸ்டரண்ட்னா கொஞ்சம் தூரம் போகணும். இல்லாட்டி பக்கத்துலயே பாத்துக்கலாமா க்ரிஷ்?”

“உன் இஷ்டம். அம் ஒகே வித் எனிதிங்” என்றான்.

“உனக்கெதுவும் வேல இல்லையே?” அவள் கேட்க… “சாப்பாடு தான் முக்கியம். மத்ததெல்லாம் அப்புறம் தான்” தோள்களைக் குலுக்கிக்கொண்டு சீரியஸ்’ஸாக சொன்னான்.

“நீ மாறவே இல்ல. சாப்பாடு…” என நிறுத்தி, ஏதோ மறந்ததுபோல அவள் யோசிக்க… “நீயும் மாறவே இல்ல. அது சாப்பாட்டு ராமன்” என்றான் நக்கலாகச் சிரித்துக்கொண்டு.

அவன் முன் கையைக் காட்டி “போதும்… உன் க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணாத. எனக்கு வர தமிழ் தான் பேசுவேன்” என்றாள் போலியான கோபத்துடன்.

இருவரும் லேசாக உணர்ந்தனர். எந்தக் கவலையும், யோசனையும், இல்லாமல்… ஆனால் அது சில நொடிகள் மட்டுமே.

“நான் லாஸ்டா சிகாகோ’ல நம்ம சாப்பாடு சாப்பிட்டது. இந்தியன் ரெஸ்டரண்ட் போலாம்” என்றவளின் மனதில் ராமுடன் கடைசியாக சென்றது நினைவிற்கு வர, அவள் முகம் வாடியது.

நொடியில் தன்னிலைக்கு வந்தவள், கார் எடுக்க… அவனும் காரில் ஏறினான்.

******

‘என்னமோ எனக்கு பழைய ஞாபகம்லாம் வருது க்ரிஷ்… நம்ம ரெண்டு பேரும் எவ்ளோ சுத்திருக்கோம். ஒரு வேல அந்த ஒரு பிரச்சனை நமக்கு நடுவுல வராம இருந்துருந்தா, என் லைஃப் எப்படி இருந்திருக்கும்?’

‘நான் தனிமைல இல்லாம இருந்திருப்பேன். மே பி, ராம் கூட என் லைஃப்’ல வராம இருந்திருப்பான். உன்ன overprotective’னு சொல்லிட்டு நான் இப்போ தனியா நிக்கறேன்’

‘அந்த லோன்லினெஸ் மறக்க, ராமை மறக்க, வேற வழி தெரியாம தான்… நான் ஆல்கஹால் எடுக்க ஆரம்பிச்சேன். இப்போ… என்னையே மறந்து வாழ்ந்துட்டு இருக்கேன்’

‘என்கூட இருந்தது எதுவுமே நிலையா இருந்ததில்லை. நீ என் லைஃப்’ல கடைசி வரைக்கும் இருப்பனு நினைச்சேன். அது நடக்கல. எல்லா அப்பா அம்மா மாதிரி எனக்கும் இருக்கணும் நினைச்சேன். நடக்கல’

‘ராம் கூட சந்தோஷமா இருக்கணும்னு நினைச்சேன். நடக்கல. என் விதி இப்போ இந்தப் பழக்கத்துக்கு அடிமையாக்கிருக்கு. இது நிலையா இருக்கக் கூடாதுனு தான் ஆசை. ஆனா…’ என்று நினைத்துக்கொண்டிருக்க…

“சுஷி சுஷி…” அவன் உலுக்கத் தன்னிலைக்கு வந்தவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன ஆச்சு? ஸ்டாப் த கார் (stop the car)” என்றான் அவசரமாக.

சட்டென ஓரமாக பார்க் செய்தவள் “என்ன ஆச்சு?” புரியாமல் கேட்டாள்.

“அத தான் நான் கேட்டேன். You were crazily driving and crossing the lanes. மீடியன்ல இடுச்சிருப்ப” என்றவனிடம்

“ஓ ஏதோ யோசிச்சுட்டே வந்தேன். நான் யூஷுவலா நைட் டிரைவ் பண்ண மாட்டேன். நீ டிரைவ் பண்றயா?” என கேட்டபோது, அவளின் முகம் பதட்டத்துடன் இருந்தது.

அந்த முகம், அதில் தெரிந்த அந்தப் பதட்டம் அவனால் பார்க்கமுடியாமல், உடனடியாக “Sure” என்று இருவரும் இறங்கி இருக்கைகளை மாற்றிக் கொண்டனர்.

“என்ன ஆச்சு திடீர்னு?” வருத்தத்துடன் அவன் கேட்க “ஏதோ யோசனைல இருந்தேன் க்ரிஷ்” என்றாள் காரின் முன் கண்ணாடியை வெறித்துப்பார்த்துக்கொண்டு.

அதற்கு மேல் கேட்டு அவளை இன்னும் கஷ்டப்படவைக்கவேண்டாம் என்று நினைத்துக்கொண்டான்.