MEM214

மறந்துபோ என் மனமே(2) – 14:

அவள் அழைப்பு வந்தவுடன், ஒரு ரிங் கூட முழுதாக வரவில்லை உடனே எடுத்தான்.

அவள் பேச ஆரம்பிக்கும் முன்… “லூசா நீ. ஏன் போன் எடுக்கல? இடியட். அப்படி என்ன வேல உனக்கு? ரொம்ப கோபமா இருக்கேன் சுஷி நானு” என்றான் படபடவென.

“டேய் எதுக்கு காலைலருந்து இவளோ கோபம் உனக்கு? நான் தான் சொன்னேனே எனக்கு வேல இருக்குனு. நீ எதுக்கு Peoria போன? ஆண்ட்டி அங்கிள் கூட டைம் ஸ்பென்ட் பண்ண தானே. அதைவிட்டுட்டு… போடா” என்று அவளும் கோபமாக பதில் பேசினாள்.

ஒரு நொடி நிதானித்த க்ரிஷ்… “ஓ… நான் இங்க டைம் ஸ்பென்ட் பண்ணணும் னு நீங்க கால் பண்ணல… ஹ்ம்ம். லூசு. நீ போன் எடுக்கலை… என்னமோ ஏதோனு பயந்துட்டே இருந்தேன். நீ மட்டும் இப்போ போன் பண்ணாம இருந்திருந்தா ப்ரியா’கோ இல்ல சாய்ரா’கோ கால் பண்ணிருப்பேன்”

“அடப்பாவி அங்க போயும் அவங்கள நினைச்சுட்டு இருக்கியா?” என சுஷி சிரித்துக்கொண்டே திட்ட …

“புத்தி போகுதுபாரு. அவங்கள விட்டு, நீ வந்துட்டயா… இல்ல என்னனு… கேக்க போன் பண்ணிருப்பேன். ஸ்டுபிட்” என்றான் அவள் சொன்னதை நினைத்து சிறிய புன்னகையுடன்.

“ஹுக்கும் தெரியும் தெரியும்” என்றவளை மறித்து “சாப்டயா… மதியமும் சாப்டயா?” அவன் கனிவுடன் கேட்க, அது அவள் மனதை சந்தோஷத்தின் மிகுதியால் பரமாக்கியது.

கண்களில் கண்ணீர் கோர்த்தாலும்… நிதானித்துக்கொண்டு… “ஹ்ம்ம் சாப்பிட்டேன். நைட் வீட்டுக்கு வரப்ப சாப்பிட்டே வந்துட்டேன்” என்றவுடன்…

“என்ன நைட் தான் வந்தாயா? அவ்ளோ நேரம் ஆஃபீஸ்ல வேலையா” என மறுபடியும் சீற…

“க்ரிஷ். கோபப்படாத. எனக்கு இன்னிக்கி வேலலாம் இல்ல. தனியா இருக்க போர் அடுச்சுது. என்ன பண்ணாலும்… எங்க திரும்பினாலும்… வீட்ல உன் ஞாபகமாவே இருந்துச்சு. உனக்கு கால் பண்ணி பேசலாம்னு நெனச்சேன்”

“ஆனா… நீ என்கிட்ட பேசிட்டு இருந்தப்ப, ஆண்ட்டி சாப்பிடவான்னு கூப்பிட்டாங்க. போனும் கையுமா இருக்கறதா சொன்னாங்க. அவங்களுக்கும், நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணணும் னு இருக்கும்ல. நான் வீட்ல இருந்தா உன்ன டிஸ்டர்ப் பண்ணுவேன்னு தான் கிளம்பி போய்ட்டேன்” என்று முடித்தாள்.

பெருமூச்சு விட்டான் என்ன சொல்வதென்று தெரியாமல். ‘நீ ஏன் பேசல? நீ என்ன பண்ற? ஏன் ஆஃபீஸ் போன? சாப்பிட்டயானு உன் நினைப்பாவே தானே நான் இருந்தேன் சஷி’ என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

“என்ன சவுண்ட்’டே காணோம்” அவள் மௌனத்தை கலைக்க… “அது ஒன்னும் இல்ல. இந்த மக்குக்கு எப்போ புத்தி வந்துச்சுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றான் கிண்டல் தொனியில்.

“டேய் நீ இங்க மட்டும் இருந்துருந்த… உன்ன அடிச்சு துவச்சிருப்பேன். இடியட். நானே பிடிக்காம ஆஃபீஸ் போயிட்டு வந்துருக்கேன். கிண்டல் பண்ணிட்டு” என்றாள் கடுப்புடன்.

இருவரும் பேசிக்கொண்டே இருந்தனர் மணி போவது கூட தெரியாமல்.

“உனக்கு தூக்கம் வரலையா? எப்பவும் கும்பகர்ணன் மாதிரி தூங்கி வழியுவையே” என நக்கல் செய்தாள் அவள்.

“தெரில சுஷி… என்னமோ இன்னிக்கி தூக்கமே வரமாட்டேங்குது. ஒரு கேம் போடுவோமா?” ஆர்வத்துடன் கேட்டான்.

“ஹ்ம்ம் சரி. எனக்கும் தூக்கம் வரல. ஆனா ஒரு கண்டிஷன்”    தீவிரமாக அவள் சொல்ல “என்ன” என்றான்.

“நீ ஏமாத்தக்கூடாது. நான் தான் வின் பண்ணணும் . நீ வின் பண்ணக்கூடாது. ப்ராமிஸ் பண்ணு” என்றாள் சீரியசாக.

சட்டென சிரித்த க்ரிஷ் “ ப்ராமிஸ். சரி ஆரம்பிக்கலாமா” என கேட்டுவிட்டு… ஆட ஆரம்பித்தனர் இரவு ஒரு மணி என்பதை கூட மறந்து.

இருவரும் போட்டி போட்டுக்கொண்டு ஆட… ஒரு கட்டத்தில் க்ரிஷ் நினைத்ததுபோலவே அவளை வென்றான் வெற்றி சிரிப்புடன்.

அடுத்த நொடி அவனை அழைத்த சுஷி…“என்கூட நீ பேசவே பேசாத க்ரிஷ்” என சொல்லிவிட்டு அவன் பேசும்முன் துண்டித்தாள்.

அவள் கூறிய வார்த்தைகள் அவனை மிகவும் தாக்கியது. அதை பலமுறை, அவன் மனது நினைத்துப்பார்த்தது.

“என்கூட பேசவே பேசாத…” இப்போது பழைய ஞாபகங்கள் அவனை சுழற்றியது.

“க்ரிஷ் நீ மைக்கல்’ல அடிச்சது தப்பு. அதுவும் எனக்காக அடிச்சேன்னு சொல்ற பாரு… என்னால ஏத்துக்கவே முடியாது. அவன்கிட்ட மன்னிப்பு கேளு”

“சுஷி அந்த மைக்கல் நல்லவன் இல்ல. அவனோட இன்டெண்ட்டின் வேற. He stalked you and waited for this opportunity. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ”

“நீ பேசாத க்ரிஷ். நீயும் என்னவிட்டுட்டு போய்டுவ. என்னோட பேசறவங்களையும் பேச விடமாட்ட… இல்ல. நீ அவன்கிட்ட ஸாரி கேக்கல என்கூட பேசவே பேசாத க்ரிஷ்”

“அவன் நல்லவன் இல்ல சுஷி. உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன். அவன்கிட்ட என்னால ஸாரி கேட்கமுடியாது. அவன் தான் உன்கிட்ட கேக்கணும். அவன……”

“வேணாம் க்ரிஷ். நீ இங்கிருந்து போ. ப்ளீஸ் போ. என்கூட பேசவே பேசாத”

மொபைலில் வீடியோ கால் வந்த சத்தத்தில் நிகழ்விற்கு வந்தவன், அவள் அழைக்கிறாள் என்பதைப் பார்த்து, அட்டென்ட் செய்தான் இறுகிய முகத்துடன்.

“டேய். நான் வெச்சவுடனே நீ கால் பண்ணுவன்னு பாத்தா, நான் போன் பண்ணா கூட ஏன் டா எடுக்க மாட்டேங்கற? நீ தானே தப்பு பண்ண. சீன் போடறயா?” என்று விடாமல் பேச… “ஸாரி சுஷி” என்று மட்டும் சொன்னவனை பார்த்த சுஷி… அவனுடைய இறுகியமுகத்தை பார்த்தாள்.

“க்ரிஷ் என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்க? சீரியஸ்ஸா இருக்கமாதிரி என்ன ஏமாத்த பாக்கறயா?”

அவன், “ஒன்னும் இல்லை” என்றான்.

“இல்லை க்ரிஷ் டெல் மீ? Something wrong. நான் சும்மா விளையாண்டேன். என்ன ஆச்சு?” என மறுபடியும் கேட்க…

“இனிமே விளையாட்டுக்கு கூட பேசாதன்னு சொல்லிடாத சுஷி. இன்னொரு தடம் என்னால கண்டிப்பா அத ஏத்துக்க முடியாது. ஒரு தடவ நீ சொல்லி நம்ம பிரிஞ்சதே போதும்” என்றான் அதே இறுகிய முகத்துடன்.

சட்டென அவன் என்ன சொல்லவருகிறான் என்பது புரிய, பழைய நினைவுகள் அவளுக்கும் வந்தது.

“ஐயோ க்ரிஷ் நிஜம்மா நான் விளையாண்டேன். உனக்கே தெரியும்… உன் கூட பேசாம என்னால இனி இருக்க முடியாதுன்னு. நான் தான் லூசாச்சே. நான் சொன்னதை போய்…… உன்ன ஆல்ரெடி இங்க ரொம்ப மிஸ் பண்றேன். நீ ஃபீல் பண்றத பாத்தா ரொம்ப கஷ்டமா இருக்கு. ப்ளீஸ்…….. க்ரிஷ்” அவள் கெஞ்ச…

“விடு சுஷி. ரொம்ப லேட்டாயிடுச்சு. நீ தூங்கு” என்று அவளை சமாதானப்படுத்திவிட்டு… இருவரும் விடிய சிலமணி நேரம் இருக்கும் முன் கண்ணுறங்கினர்.

——-

“எழுந்திரி க்ரிஷ். எவ்ளோ நேரம் தூங்குவ” பார்வதி மகனை எழுப்பிக்கொண்டிருந்தார்.

தூக்கத்தில் அவனோ “சுஷி ப்ளீஸ் தூங்கறப்ப டிஸ்டர்ப் பண்ணாத. கொஞ்சம் நேரம்” என்று சொல்லிவிட்டு திரும்பிப்படுக்க முயல…

“என்ன சுஷியா?” என்றார் பார்வதி சத்தமாக. சட்டென எழுந்த க்ரிஷ், ‘தான் என்ன பேசினோம்’ என்பதை அறிந்து அதிர்ந்தான்.

‘செத்தடா. சமாளி சமாளி’ அவன் யோசிக்கும் முன் “என்னடா கனவா?” என்று பார்வதி கேட்க… அதையே பயன்படுத்திக்கொண்டான்.

“ஆமா பாரு. நல்ல கனவு டிஸ்டர்ப் பண்ணிட்ட” என்று சமாளித்துவிட்டு ரெஸ்ட் ரூமிற்குள் அவசரமாக சென்றான்.

“இவன…” என்று தலையில் அடித்துக்கொண்ட பார்வதி, அங்கிருந்து சென்றார்.

உள்ளே சென்ற க்ரிஷ்… ‘அடப்பாவி எப்படிடா விஷயத்தை சொல்லுவ. இப்படி சொதப்பறயே’ என நினைத்துக்கொண்டு… ஃப்ரெஷ் ஆகிவிட்டு வெளியே வர, அவனுக்கு காபியை கொடுத்தார் பார்வதி.

“அப்பா எங்க பாரு?” மகன் கேட்க… “கோல்ஃப் கோர்ஸ் போயிருக்காரு டா. ரெண்டு வாரம் நீ இல்லல்ல… நான் தனியா இருப்பேன்னு, மனுஷன் எங்கயும் போகாம என்கூடவே இருந்தாரு. இன்னிக்கி கிளம்பியாச்சு” என்றார் சிரித்துக்கொண்டே

ஆனால் க்ரிஷ் மனதிலோ ‘அயோ கோல்ஃப் கோர்ஸ்’ஸா? அப்போ விக்டர்’ர பார்ப்பாரே… ஏதாச்சும் ஜெர்சி பத்தியோ இல்லாட்டி லாஸ்ட் வீக் எண்ட் பத்தி விக்டர் சொல்லிட்டா என்ன செய்றது” என யோசித்துக்கொண்டே இருக்கும் போது… விக்ரம் உள்ளே வந்தார்.

அவரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்.

“அப்புறம் போன வாரம் ஃபிரன்ட்ஸ் கூட வெளிய போறேன்னு சொன்னயே… எங்க போன? எப்படி இருந்துச்சு ட்ரிப் க்ரிஷ்?” ஆரம்பித்தார் விக்ரம்.

அவன் உடனே… “அப்பா விக்டர்’ர பாத்தீங்களா? அதுனால தானே இதெல்லாம் கேட்கறீங்க?”… விக்ரம் க்ரிஷை பார்க்க மட்டுமே செய்தார்.

பார்வதிக்கு ஒன்றும் புரியாமல் போக, அவரும் இவர்களுடன் டைனிங் டேபிளில் உட்கார்ந்தார்.

“நானே சொல்றேன். நான் Philly போகல. ஜெர்சி தான் போனேன்” என்றவுடன்… “அடப்பாவி என்னடா சொல்ற? எங்ககிட்ட பொய் சொல்லிட்டு போனயா? அதுக்கென்னடா அவசியம்?” என்று பார்வதி சீற…

குழப்பத்துடன் மகனைப் பார்த்த விக்ரம், மனைவி பக்கம் திரும்பி… “பாரு… சும்மா இரு. என்னமோ இதுதான் ஃபர்ஸ்ட் டைம் அவன் பொய் சொல்றமாரிதி… விடு. அவன் என்ன சொல்றான்னு கேட்போம்… சொல்லுடா” என்றார் மகனைப்பார்த்து.

விக்ரமை பார்த்து முறைத்த க்ரிஷ்… “ஹலோ… நான் அதிகமாலாம் பொய் சொன்னதில்லை. நான் சுஷிய பார்க்கத்தான் போனேன். போன வாரம் அவகூட தான் ட்ரிப் போனேன்” அவன் முடிக்கவில்லை, அதற்குள்…

“என்னது சுஷியா?” அதிர்ந்த பார்வதி… “அத ஏன்டா எங்ககிட்ட மறச்சிட்டு போன? அவளை பாக்க போறேன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே” என்றார்.

“பார்ரா. இப்ப இப்படி சொல்வ” மறுபடியும் அவனைத் தடுத்து… “எனக்கென்ன நீ அங்க போறதுல இருக்கு? உன் ஃபிரன்ட். நீ பார்க்கப் போற… அவ்ளோதானே.” என்றார் பார்வதி கேள்வியுடன்.

“அது வந்து… உனக்கு அவ மேல கோபம் இல்ல? கல்யாணத்துக்கப்புறம் ராம டிஸ்டர்ப் பண்ணாலேன்னு?” க்ரிஷ் தயங்க…

“லூசா நீ? அவளே பிரேக்கப் ஆன கஷ்டத்துல இருந்திருப்பா. நீயும் அவகூட இல்ல. அதுவும்  இல்லாம எவ்ளோ தீர்கமா நந்தினிகிட்ட அவ பேசினான்னு நந்தினி என்கிட்ட சொன்னப்ப தான் தெரிஞ்சது”

“அவ மேல நான் ஏன் கோபப்படணும்? ராம் கூட நல்லா தானே பேசறேன். ஏன் அவனும் தான் தப்பு பண்ணான்…” என்றவுடன்…

‘ஓ நான் தான் தப்பா புருஞ்சுட்டேனா’ என்று நினைத்துக்கொண்டு… “ஸாரி பாரு ஸாரி டாடி” என்றான்.

விக்ரம் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருக்க… “அப்பா அதான் ஸாரி கேட்டுட்டேன்ல”       என்றான் க்ரிஷ் அவர் பேசாமல் இருப்பதைப் பார்த்து.

அவரோ பலமாக சிரித்து… “இவனால பொய்ய ரொம்ப நாள்லாம் மைண்டன் பண்ண முடியாது பாரு” என்றவர்… க்ரிஷிடம்,

“விக்டர்’ர நான் இன்னிக்கி பாக்கவே இல்ல. நான் சும்மா தான் கேட்டேன் லாஸ்ட் வீக் எண்ட் பத்தி” என்று சொல்லி சிரிக்க… தலையில் கைவைத்துக்கொண்ட க்ரிஷ் “சரி போதும் சிரிச்சது” என்றான் மூக்கு அறுபட்டதை நினைத்து.

“அதெல்லாம் இருக்கட்டும் க்ரிஷ். சொல்லு… சுஷி எப்படி இருக்கா…? அவளை லாஸ்ட்’டா கேட்டர்பில்லர் ஃபேமிலி function’ல பாத்தது. ராம் நெனப்பு இல்லாம தானே இருக்கா?” பார்வதி கேட்க… க்ரிஷ் முகத்தில் சின்னதாக வருத்தம் தென்பட்டது.

“இல்லமா… அது ஒரு பெரிய ட்ராஜெடி. அவ ட்ரிங்க்ஸ்’க்கு அடிக்ட் ஆயிட்டா. கௌஷல், அவ ஃபிரன்ட் கிட்ட பேசினப்ப தான் தெரிஞ்சது இதப்பத்தி. மனசு கேக்காம போனேன்” என்றவுடன்…

“என்னடா சொல்ற? எப்படி இருக்கா இப்போ? அவளை அங்க ஏன் தனியா விட்டுட்டு வந்த? கூடவே இருந்திருக்கலாமே. இல்ல கூட்டிட்டு வந்திருக்கலாமே…” என்றார் விக்ரம் அவள் மேல் இருந்த அக்கறையில்.

“நான் அங்க போனப்பவே அவ ஸெல்ஃப் ரீஹாப் (self rehab) ப்ரோக்ராம்’ல இருந்தா பா. She was almost out of it. லாஸ்ட் வீக் தான் அந்த ப்ரோக்ராம் முடிஞ்சது. அவளை கொஞ்சம் டைவர்ட் பண்ணா நல்லா இருக்கும்னு, அவளை நம்ம விக்டர்’ரோட கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு போனேன். அவ கூடவே தான் இருந்தேன்”

“Infact என்னோட Airbnb ரூம்மேட் கூட ப்ராப்ளம் ஆயிடுச்சு. அதுனால… என்னை அவ வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டா. நான் கூட இருந்ததுனால She felt little better. அவளுக்கு மட்டும் இல்ல நானும் இந்த டூ வீக்ஸ் அங்க சந்தோஷமா இருந்தேன்”

“நேத்து அவளுக்கு போன் பண்ணி அவ எடுக்கலன்ன உடனே… ரொம்ப பயந்துட்டேன்… பழையபடி ட்ரிங்க் பண்றாளோன்னு. நல்லவேள… அவக்கூட நைட் பேசின உடனே தான் நிம்மதியா இருந்துச்சு”

அவ்வளவு நேரம் மகன் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த பார்வதி… “பாவம் சுஷி…” என்றவுடன்…

“அவளை மொத ரெண்டு நாள், நான் பார்த்தப்ப நொந்துட்டேன் மா. ஒருவேள அவக்கூட நான் முன்னாடியே பேசியிருந்தாலோ… இல்ல, அவக்கூடவே இருந்திருந்தாலோ, அவளை இப்படி ஆக விட்டுருக்க மாட்டேன்”

“இனிமே, அவளே ‘என்கிட்ட பேசாத’ன்னு சொன்னாக்கூட என்னால முடியாது மா. என் சுஷிய நான் இனி கஷ்டப்பட விடமாட்டேன்” என்றான் இறுகிய முகத்துடன்.

நேற்றிலிருந்து அவனுடைய நடவடிக்கையில் தெரிந்த மாற்றம், மற்றும் இன்று அவன் பேசியதைப் பற்றி நினைத்த பார்வதி, மகனை தீர்க்கமாகப் பார்த்து…

“ஹ்ம்ம். ஏன் க்ரிஷ்… நீ சுஷிய லவ் பண்றயா?” என கேட்க… அவன் அம்மாவை பார்த்து அதிர்ந்தான்.

அதே திகைப்புடன் விக்ரமும் பார்த்தார் பார்வதியை.