MM9

MM9

மயங்காதே மனமே 9

அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த வாரத்திற்கானப்னானிங்இல் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஆசிரியருக்கு அந்தப் பொறுப்பை மிஸஸ். ஜான்ஸன் கொடுத்துவிடுவார்.

அந்த வாரம் முழுவதும் அந்தப் பிளானிங்கின் பிரகாரமே நர்சரி இயங்கும். ‘கிறிஸ்ட்மஸ் ப்ளேக்காக பிள்ளைகளைத் தயார் செய்ய வேண்டி இருப்பதால், ப்ளானிங்கின் நிறைய இடங்களில் அதனோடு சம்பந்தப்பட்ட விடயங்களை சொருகி இருந்தாள்.

ஆசிரியர்கள் அத்தனை பேரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். மிஸஸ். ஜான்ஸன் அந்த விஷயத்தில் மிகவும் கெட்டிக்காரர். எந்த இடத்திலும் பாலிடிக்ஸ் வர அவர் அனுமதிப்பதில்லை.

மித்ரன் கொடுத்த செக்கும் உடனடியாக கைக்குக் கிடைத்து விட்டதால் ஜரூராக வேலைகள் ஆரம்பித்திருந்தன. மனதுக்குள் மித்ரனுக்கு நன்றி சொல்லிக் கொண்டாள் கீதாஞ்சலி.

கேட்காமலேயே வந்து உதவி செய்திருந்த அந்த இளம் தொழிலதிபரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அபி சொன்னதை வைத்துப் பார்க்கும் போது வில்லங்கமாகவும் தெரிந்தது. ஏதோ அவர்களுக்குள் தொழில் தகராறாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டாள். சிந்தனையை ஃபோன் கலைக்கவும், வேலையின் மும்முரத்தில் யாரென்று கூடப் பார்க்காமல் காதுக்குக் கொடுத்தாள்.

ஹலோ.”

அஞ்சலி.” அந்தக் குரலில் அவள் இருதயம் ஒரு நொடி நின்று, பின் துடித்தது. பேச்சு மறந்து போனது பெண்ணுக்கு.

அஞ்சலி, லன்ச் ப்ரேக் தானே? இப்போ பேச முடியாதா? அப்புறமா கால் பண்ணட்டா?”

இல்லை சார், சொல்லுங்க. ப்ரேக் டைம் தான்.”

இன்னைக்கு எத்தனை மணிக்கு டியூட்டி முடியுது?” அவன் கேட்கவும்,

அஞ்சு …” இயல்பாகச் சொல்ல ஆரம்பித்தவள், சட்டென்று நிறுத்தினாள்.

எதுக்கு கேக்குறீங்க சார்?”

அஞ்சலி, இன்னைக்கு நாம எங்கேயாவது மீட் பண்ணலாமா?”

எதுக்கு?”

காரணம் இருந்தாத்தான் வருவீங்களா?”

“……..”

அப்போ, நான் கூப்பிட்டா நீங்க வரமாட்டீங்களா?” அந்தக் குரல் அவளை ஏதோ செய்தது.

அப்பிடியில்லை, திடீர்னுகூப்பிட்டா…” மேசைமேல் இருந்த புத்தகத்தைத் தடவியபடி மௌனமாக இருந்தாள் கீதாஞ்சலி. அவன் அழைப்பை மறுக்கவும் முடியவில்லை. ஆனால் எதிர்காலமே இல்லாத இந்த உறவை, எதற்கு நீரூற்றி வளர்க்க வேண்டும் என்று மனது முரண்டியது.

ஒன்னுமில்லை, பாக்கனும்னு தோணிச்சு. அதான் கூப்பிட்டேன். உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா விட்டுருங்க.”

“……..” அவள் மௌனத்தில் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு மட்டும் கிளம்பியது.

கே, பை.” அழைப்பைத் துண்டித்திருந்தான் அபிமன்யு

ஃபோனை வெறித்துப் பார்த்தவள், கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். உடம்பின் ஒவ்வொரு அணுவும் அவனைப் பார்க்கத் துடித்தது. எதற்காகத் தான் அவனைத் தவிர்க்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை

அவன் உயரம் பார்த்து தன் மனம் அஞ்சுவது அவளுக்குப் புரிந்தது. இருந்தாலும், அவனே இறங்கி வரும்போது எதற்குத் தடுக்க வேண்டும்? பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. முயன்று மனதை வேலையின் பக்கம் திருப்பினாள் கீதாஞ்சலி.

காலையில் ஒரு குழு, மதியத்துக்குப் பின் இன்னொரு குழுவாக குழந்தைகள் நர்சரிக்கு வருவது வழக்கம். குழந்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பிக்க, முழுதாக அதற்குத் தயாராகினாள். ஆனாலும் பின்னணி இசைபோல அவன் குரலே ஒலித்துக் கொண்டிருந்தது.

கீதா! என்னாச்சு? ரெண்டு தடவை கூப்பிட்டுட்டேன். திரும்பியே பாக்கலை?” சக ஆசிரியை ரூபா கேட்கவும், வெட்கிப் போனாள் கீதாஞ்சலி.

சாரிப்பா. ஏதோ ஒரு ஞாபகத்துல…” அப்போதும் தட்டுத் தடுமாறியவளை ஆச்சரியமாகப் பார்த்தார் ரூபா.

ஒரு டென் மினிட்ஸ் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க. நான் பாத்துக்கிறேன்.” சொன்னவரின் கையை நன்றியுடன் பற்றிக் கொண்டாள்.

தாங்ஸ் ரூபா.” 

நேராக ஸ்டாஃப் ரூம் வந்தவள், தனது லாக்கரிலிருந்த ஃபோனை எடுத்து அவசரமாக ஒரு மெஸேஜைத் தட்டினாள்.

‘5:15pm, Liberty Plaza, Costa.’

அனுப்பி முடிக்கவும் மனதில் ஒரு நிம்மதி வந்திருந்தது. ஏதோ பாறாங்கல் ஒன்றை இறக்கி வைத்தது போல உணர்ந்தாள் கீதாஞ்சலி. ஒரு ஐந்து நிமிடங்கள் பொறுத்திருந்து பார்த்தாள். எந்தப் பதிலும் வரவில்லை. அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல் குழந்தைகளின் உலகத்திற்குள் புகுந்து கொண்டாள்.

நேரம் சரியாக மாலை 5:15. காஃபியின் மணம் நாசியை நிறைத்தது. காஃபி ஷாப்பின் உள்ளேயே வந்து உட்கார்ந்தாள் கீதாஞ்சலி. அனுப்பிய மெஸேஜுக்கு எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வந்து உட்கார்ந்திருந்தாள்

நேரம் 5:20. சுற்றிவர சூழ்ந்திருந்தது காஃபியின் மணத்தில் லேசாகப் பசித்தது கீதாஞ்சலிக்கு. முதலில் மறுத்ததால் கோபம் வந்திருக்குமோ? காலதாமதம் செய்வான் என்று சொன்ன மனது, வரமாட்டான் என்று கடைசி வரை சொல்லவில்லை

யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும் என்பதால், ஒரு ஓரமாக இருந்த டேபிளில் அமர்ந்து இருந்தாள். கிடைத்த இடைவெளியில்வீட்டிற்கு வரத் தாமதம் ஆகும்என்று அம்மாவிற்கு ஒரு மெஸேஜை அனுப்பி வைத்தாள்.

தனக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டகாப்பச்சீனோவின் வாசனையில் ஃபோனைக் குடைந்து கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்தாள். அபிமன்யு

ட்ரேயில் இருந்த காஃபியில் ஒன்றை அவளின் புறமாக வைத்தவன், மற்றதை தனக்கு எடுத்துக் கொண்டு அவளின் எதிரே அமர்ந்து கொண்டான். அவளின் பசியறிந்தோ என்னவோ, காரட் கேக் இருந்த சாசரை அவள் பக்கம் நகர்த்தி வைத்தான்.

சின்ன வட்ட மேசை. இரண்டு நாற்காலிகளுடன், இருவர் மட்டும் அமர வசதியாக இருந்தது. அவள் முகத்தையே பார்த்திருந்தவன், மென்மையாகப் புன்னகைத்தான்.

தாங்ஸ் ஃபார் கம்மிங்.” அமைதியாக இருந்தவளின் பக்கம் அனைத்தையும் நகரத்தி வைத்தவன்,

சாப்பிடு அஞ்சலி.” என்றான். தான் இருக்கும் போது உண்ண அவள் சங்கடப்படுவாள் என்று உணர்ந்தவன், ஃபோனை எடுத்து யாருடனோ பேச ஆரம்பித்தான். ஏதோ பிஸினஸ் பேச்சு. கீதாஞ்சலிக்கு ஒன்றும் புரியவில்லை. காரட் கேக்கும், காஃபியும் தேவாமிர்தமாக இருந்தது.

அவள் சாப்பிட்டு முடிக்கவும், பேசிக் கொண்டிருந்தவரிடம் அப்புறம் பேசுவதாக சொல்லிவிட்டு பேச்சை நிறுத்திக் கொண்டான். அவளைப் பார்த்த போது மீண்டும் அந்தப் புன்னகை முகத்தில் வந்து ஒட்டிக் கொண்டது.

எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி இருந்தான். கீதாஞ்சலிக்கு சங்கடமாக இருந்தது. அவளின் சங்கடம் புரிந்தும் அப்படியே தான் இருந்தான். அந்தச் சங்கடத்தை அவன் ரசித்தாற் போல தோன்றியது அவளுக்கு.

சார்வரச் சொல்லிஇருந்தீங்க.” அவன் மௌனம் பார்த்து அவளே ஆரம்பித்தாள்.

ம்கருணை காட்டினதுக்கு ரொம்ப நன்றி மேடம்.” அவன் பேச்சில் கேலியிருந்தது

நான் வீட்டுக்குப் போகணும். லேட்டானா அம்மா திட்டுவாங்க.” அவன் கேலியில் கோபம் வந்தது அவளுக்கு. முகத்தை ஒரு முழத்தில் நீட்டிக் கொண்டு அவள் சொன்ன பாங்கில் வாய்விட்டுச் சிரித்தான் அபி

அந்தச் சிரிப்பு அவளை இன்னும் வெறுப்பேற்ற, கண்களை உறுத்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பெரிய விழிகளுக்குள் தொலைந்து போனான் அவன்.

அந்தக் கண்ணுதான்டி மனுஷனைக் கொல்லுது.’ மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இதற்கு மேலும் பேசாவிட்டால் எழுந்து போனாலும் சொல்வதற்கில்லை என்று உணர்ந்தவன் பேச்சை ஆரம்பித்தான்

நிலா ரொம்பவே தூரமா இருக்குன்னு நேத்து ஒருத்தங்க கவலைப்பட்டாங்க. இப்போ பக்கத்துல வந்திடுச்சுன்னு காட்டத்தான் கூப்பிட்டேன் அஞ்சலி.” அவன் சொல்லவும், அங்கே சிறிது நேரம் மௌனம் நிலவியது. தன் விரல் நகங்களை ஆராய்ந்தபடி இருந்தாள் கீதாஞ்சலி.

பேசமாட்டியா அஞ்சலி?”

“…….” 

இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுறேனே, இன்னும் எங்கிட்ட என்ன எதிர்பாக்குற அஞ்சலி? சின்னப் பசங்க மாதிரி லவ் யூசொல்லனுமா?” அதைச் சொன்னவுடன் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் ஆச்சரியம் நிறைந்திருந்தது.

இப்பிடிப் பாக்காத அஞ்சலி. கன்ட்ரோல் பண்ணுறதுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு.” அவன் சொல்லிமுடிக்கு முன்பே பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள். முகத்தில் லேசாக வெட்கம் தெரிந்தது. அபிக்குள் எதுவோ நகர்ந்தது. முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

நிலாங்கிறேதூரம்கிறேதொட முடியாதுங்கறே. எனக்கு ஒன்னுமே புரியலை.” சொல்லிக் கொண்டே போனவன் சற்று நிறுத்தினான். சுற்றிவர கண்களால் ஒரு அலசு அலசியவன், தங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தான்

இங்க வெச்சு இதைக் கேக்குறது அவ்வளவு நாகரிகம் இல்லதான். இருந்தாலும் பரவாயில்லை கேக்குறேன். அஞ்சலிஎன்னைக் கல்யாணம் பண்ணிக்கறயா?”

கீதாஞ்சலி அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். இதை அவள் எதிர்பார்க்கவில்லை. தனது மறுப்பை மறைமுகமாகச் சொன்னவுடனேயே அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது தெரிந்தது தான். ஆனால், தனது அந்தஸ்தை விட்டு விட்டு இறங்கி வருவான் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை.

அவளின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அபி. அடேங்கப்பா! அந்தக் கண்களில் தான் எத்தனை பாவங்கள்? அவனை அப்படியே சுருட்டி அந்தக் கண்களுக்குள் வைத்துக் கொள்வாள் போல இருந்தது.

எதுக்கு இவ்வளவு ஷாக் அஞ்சலி? இப்பிடிக் கேக்குறதுக்கு எனக்குத் தகுதி இல்லையா?” ஆரம்ப கட்ட அதிர்ச்சி நீங்கவும் மெதுவாக வாய் திறந்தாள்.

உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கு சார். எனக்குத் தான் எந்தத் தகுதியும் இல்லை.” அவள் குரல் நலிந்திருந்தது.

அப்பிடி யார் சொன்னா?”

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை சார்.”

ம்ஹூம்…”

இப்போ ஒரு வேகத்துல இதெல்லாம் பேசுறதுக்கு நல்லாத்தான் இருக்கும். ஆனா வாழ்க்கை, நடைமுறை அப்பிடீன்னு வரும்போது கஷ்டமா இருக்கும் சார்.”

அஞ்சலி…” ஏதோ சொல்ல வந்தவனை கை உயர்த்தித் தடுத்தாள்.

நான் சொல்லி முடிச்சிர்றேன் சார். உங்க உயரத்துக்கு என் குடும்பத்தால ஈடு குடுக்க முடியாது. சொல்லப் போனா பாதி கூட நாங்க வரமாட்டோம். பொண்ணைக் கட்டிக் குடுத்துட்டு, நாளைக்கு என்னோட அம்மாவும், அப்பாவும் உங்க வீட்டுல கையைக் கட்டிக்கிட்டு நிக்குறதை என்னால அனுமதிக்க முடியாது சார்.”

…! ரொம்ப சினிமா பாப்பியோ?” அவன் குரலில் கேலி போய், நிதானம் வந்திருந்தது. அவள் மறுப்பதின் உள் நோக்கம் அவனுக்கு இப்போது லேசாகப் பிடிபட்டது. ஆனாலும் அவள் கண்களில் தெரிந்த மயக்கம் அவன் நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்தது.

சார், ரொம்பவே லேட் ஆகுது. நான் வீட்டுக்குப் போகணும்.”

போகலாம் அஞ்சலி, இன்னும் ஆறு மணிகூட ஆகலைம்மா.”

இருட்டிடுச்சு, இதுக்கே அம்மா திட்டுவாங்க.” அவள் சொன்ன தொனியில் சிரித்தான் அபிமன்யு. நள்ளிரவு தாண்டியும் பப்பில் உட்கார்ந்திருக்கும் தாமினியும், ரக்ஷிதாவும் அவன் கண்களில் வந்து போனார்கள்.

டோன்ட் வொர்ரி, நான் ட்ராப் பண்ணுறேன்.”

ஐயையோ! வேற வினையே வேண்டாம். நான் ஒரு ஆட்டோ பிடிச்சு போய்க்கிறேன்.”

இந்த நேரத்துல ஆட்டோ தான் சேஃப் இல்லை. ஃப்ரெண்ட் கூட வந்தேன்னு சொன்னா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்க.” சொல்லிவிட்டு சற்று நிதானித்தவன்,

ஆமா, நான் கேக்கனும்னு நினைச்சேன். எதுக்கு அன்னைக்கு மித்ரனோட ஃபாக்டரிக்குப் போனே?” என்றான். மித்ரன் என்று சொன்னதும் அவள் முகம் கனிந்து போனது. இதுவரை பேசத் தயங்கியவள் இப்போது புன்னகைத்தவாறே பேச்சை ஆரம்பித்தாள்.

மித்ரன் க்ரூப்ஸ் தான் எங்களுக்கு இந்த வருஷம் கிறிஸ்ட்மஸ் ப்ளேக்கு ஸ்பான்ஸர் பண்ணுறாங்க. அது சம்பந்தமா பேசத்தான் போனேன்.”

மிஸஸ். ஜான்ஸன் போகவேண்டியது தானே, எதுக்கு ஸ்டாஃபை அனுப்புறாங்க?”

அந்த இவன்டை நான் தான் ஆர்கனைஸ் பண்ணுறேன். அதனால்தான் நான் போனேன்.”

ஏன்? மிஸஸ். ஜான்ஸனுக்கு நாங்கல்லாம் கண்ணுல தெரியலியாமா? மித்ரனுக்கிட்ட ஹெல்ப் கேட்டிருக்காங்க?”

ஐயோ சார், நீங்க வேற. மிஸஸ். ஜான்ஸன் அவர் கிட்ட ஹெல்ப்பே கேக்கலை. அவரா தேடி வந்து ஹெல்ப் பண்ணுறாரு தெரியுமா? ஸச் வன்டர்ஃபுல் பர்சன்.” அவள் சிலாகித்து முடிக்கவும், அபியின் கண்கள் லேசாகச் சுருங்கியது.

மித்ரன் தேடி வந்து ஹெல்ப் பண்ணினானா? எதுக்கு? அவன் ரிலேடிவ்ஸ் யாராவது அங்க இருக்காங்களா?”

ம்ஹூம்ஆக்சுவலா என்ன நடந்துதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடி நாங்க அவங்க பிஸ்கட் ஃபாக்டரிக்கு போயிருந்தோம். அன்னைக்கு தருணைக் கூட பிக்கப் பண்ண நீங்க வந்திருந்தீங்களே சார்.” அவள் ஞாபகப் படுத்தினாள்.

ம்ஞாபகம் இருக்கு. அன்னைக்குத் தான் மேடம் ஏதோ பேயை பாக்கிறதைப் போல பாத்தீங்களே?” அவன் சொல்லவும் அழகாகச் சிரித்தாள் பெண்.

அப்பிடியெல்லாம் இல்லை. பேப்பர்ல பாத்த முகத்தை நேர்ல பாத்த உடனே ஒரு மாதிரி ஷாக் ஆகிட்டேன். அவ்வளவுதான். சார், நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” அவள் பீடிகையில் அவன் புன்னகைத்தான். ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி அவன் என்னவென்று கேட்க, எகிறிக் குதித்த மனதை அடக்கி வைத்தாள் கீதாஞ்சலி.

இப்பிடியொரு ஃபோட்டோவை பேப்பர்ல போடுற அளவுக்கு உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன சார் பகை?”

அவளையே ஒரு சில நொடிகள் பார்த்திருந்தவன்

பகையாலதான் மித்ரன் இதைப் போட்டான்னு உனக்கு என்ன நிச்சயம் அஞ்சலி? பேப்பர்ல சொன்ன மாதிரி, என் கேரக்டர் ஒரு வேளை இதுதானோ என்னவோ?” அவன் சொல்லவும், இப்போது அவனை அவள் ஆழ்ந்து பார்த்தாள். அந்தக் கண்கள் அவனை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருந்தன. அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டான் அபி.

அதுக்கு எந்த வகையிலயும் வாய்ப்பில்லை சார். உங்க மேல ஆத்திரமிருக்கிற யாரோ அந்த நாடகத்தைப் பண்ணி இருக்கனும். அது மித்ரன்னு நீங்க சொல்லுறீங்க. அவ்வளவு தான்.” அத்தனை உறுதியாகச் சொன்ன அந்தப் பெண்ணை நன்றியோடு பார்த்தான் அபிமன்யு.

ம்அதுக்கப்புறம் என்ன ஆச்சு?” விட்ட கதையைத் தொடர்ந்தான் அபி.

அதுக்கப்புறம் என்னடான்னா, திடீர்னு கால் பண்ணி உங்க நர்சரி ஃபங்ஷனுக்கு நாங்க ஸ்பான்ஸர் பண்ணுறோம் அப்படீன்னு சொல்லி இருக்காரு. மிஸஸ். ஜான்ஸனுக்கு செம குஷி. பாவம், நல்ல மனுஷன். நீங்கதான் அவரைப் புரிஞ்சுக்காம ஏதோ தப்பா சொல்லுறீங்களோன்னு எனக்குத் தோணுது.”

யாருநான்அவனைபுரிஞ்சுக்காம பேசுறனா?” பேச்சு பேச்சாக இருந்தாலும், அபியின் மனது அவள் சொன்ன நிகழ்வுகள் அனைத்தையும் கோர்த்துப் பார்த்தது. எங்கேயோ எதுவோ உதைத்தது. மித்ரன் திட்டம் போட்டு காய்களை நகர்த்துவது போல் தெரிந்தது. இதில், தனக்கு இந்தப் பெண்ணின் மேல் நாட்டம் இருப்பது தெரிந்தால், அது வேறு பிரச்சினைகளை இன்னும் பூதாகாரம் ஆக்கும் என்று அவனுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

மணிக்கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். ஆறு மணி என்றது. அதற்கு மேலும் அவளைத் தாமதிக்க வைக்க விருப்பம் இல்லாமல் சட்டென்று எழுந்தான்.

அவன் நேரத்தைப் பார்க்கவும் தான், வீட்டு ஞாபகம் வந்த கீதாஞ்சலி, அவளும் சட்டென்று எழுந்து கொண்டாள். அந்தச் சிறிய வட்ட மேசையில் இரண்டு பேரும் ஒன்றாக எழுந்து கொள்ளவும், இருவரது தலைகளும் மோதிக் கொண்டன. அபி சமாளித்துக் கொண்டாலும், கீதாஞ்சலி கொஞ்சம் தடுமாறிப் போனாள். கை நீட்டி அவளை நிதானப்படுத்தியவன், அவள் தலையைப் பிடித்துக் கொண்டு நிற்கவும், லேசாக அவளை அணைத்துப் பிடித்தபடி நின்றான். அவளை தான் அணைத்திருப்பதை அவனும் உணரவில்லை, அவளும் உணரவில்லை. ஆனால் ஒரு மூலையில் இருந்த காமெரா அதை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டது.

அஞ்சலி, ஆர் யூ கே?” பதட்டத்துடன் கேட்டவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

ம்ஒன்றுமில்லை சார், ஐம் ஃபைன்.” அவள் சொல்லவும், இரண்டு பேரும் கிளம்பி வெளியே போனார்கள்.

நான் ட்ராப் பண்ணுறேன் அஞ்சலி. இதுக்கப்புறம் தனியா போக வேணாம் என்ன?”

ம்…” 

கார் பார்க்கிங்கிற்கு அவளை அழைத்து வந்தவன், கதவைத் திறந்து விட்டான். அந்த அழகான black Audi இருவரையும் சுமந்து கொண்டது. காரை ஸ்டார்ட் பண்ணாமல் அவளைத் திரும்பிப் பார்த்தான். கேள்வியாகப் பார்த்தாள் கீதாஞ்சலி.

நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை அஞ்சலி?” அவன் அந்தப் பேச்சை ஆரம்பித்ததும் மீண்டும் மௌனமாகிப் போனாள் பெண்.

எனக்கு, இதுக்கு மேல என்ன சொல்லுறதுன்னு புரியலை அஞ்சலி. வாழ்க்கையில முதல் தடவையா ஒரு பொண்ணு கிட்ட கெஞ்சுறேன்.” அவன் சொல்லவும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் வலி தெரிந்தது. சில நொடிகள் பார்வைகள் கலந்து நின்றன.

புரியலை. உன்னை விட்டுக் கொடுக்கவும் முடியலை. அதே நேரம் உன்னோட சம்மதம் இல்லாம உன்னை என் வழிக்கு கொண்டு வரவும் பிடிக்கலை. என்னை என்ன பண்ணச் சொல்லுற?” அவன் குரலில் கோபம், வலி, தாபம் அனைத்தும் கொட்டிக் கிடந்தது.

நீங்க சொல்லுறது நடக்க வாய்ப்பில்லை சார், விட்டிருங்க.” அவள் நிதானமாகச் சொல்லவும், அவனுக்கு அத்தனை ஆத்திரம் வந்தது. அவளை ஆவேசமாகத் தன்னருகே இழுத்தவன்,

ஏன் வாய்ப்பில்லை? நீதானே சொன்னே, அந்த நிலாவை உனக்குப் பிடிச்சிருக்குன்னு. அப்போ உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம். சும்மா சும்மா நீ வேணாம்னு சொன்னா நான் நம்பிருவேன்னு நினைக்கிறயா?” அவன் கோபத்தில் கத்த, அவள் சற்றும் அசரவில்லை. அமைதியாக அவனையே பார்த்திருந்தாள்

சற்று நேரத்தில் தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன், அவளை மெல்ல விடுவித்தான். எதுவும் பேசாமல் காரை ஸ்டார்ட் பண்ண, அது வேகமெடுத்தது. அவள் வீடு வரும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவள் வீட்டிற்கு சற்றுத் தள்ளியே காரை நிறுத்தியவன்,

சாரி அஞ்சலி.” என்றான். அவள் எதுவும் பேசவில்லை. இறங்கி நடந்து போனாள். கேட்டைத் திறந்து உள்ளே போகும் போது மட்டும், ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். நாளை இதே நேரம் தங்கள் வாழ்க்கை தலை கீழாக மாறி இருக்கப் போவதை இருவருமே அறிந்திருக்கவில்லை.

 

 

error: Content is protected !!