அத்தியாயம் – 11

நிலா மற்றும் ரித்துவை அழைத்துச் செல்வதைக் கருத்தில் கொண்ட சுமிம்மா காரில் செல்வதை வேண்டாமென்று என்றவர் பஸ்ஸில் செல்லலாம் என்று முடிவெடுக்க, சிறியவர்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர். ஐவரும் பஸில் மகாபலிபுரம் சென்றடைந்தனர்.

“சுமிம்மா கட்டிடக்கலைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..” என்று அவரோடு இணைந்து நடந்தவண்ணம் கேட்டான் பாரதி..

“என்ன டாக்டரே கருத்து கணிப்பு நடத்த போறீங்களா?” என்றவனை கிண்டலடிக்க மற்ற இருவரும் வாய்விட்டு சிரித்தனர்.

“என்னை கிண்டலடிக்கிறீங்களா சுமிம்மா..” என்றவன் புன்முறுவலுடன் கேட்க, “அந்த காலத்தில் மண்ணை ஆண்ட மன்னர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் பெருமையைப் பறைசாற்ற இந்த கட்டிடக்கலை. குறிப்பாக தமிழக்கத்தில் சில இடங்கள் நம்ம பார்க்க வேண்டும்..” என்றார்

“உங்களுக்கு மன்னர்கள் காலம் பிடிக்குமா சுமிம்மா..” என்றான் பிரவீன் புன்னகையுடன்

“ம்ஹும்.. என்னிடம் கடவுள் ஒரு வரம் என்று கேட்டால் மன்னர் காலத்தில் வாழனும் என்று வரம் கேட்டும் அளவிற்கு பிடிக்கும்..” அவரின் பதிலில் மற்ற மூவரும் சிரித்தனர்.

சுமிம்மா, ரித்திகா, பாரதி, பிரவீன் நால்வரும் பேசியபடியே கோவிலை நோக்கி நடக்க, கடற்கரையைப் பார்த்தும் அந்த குட்டிப்பெண்ணின் நினைவில் மூழ்கினாள் நிலா. ஆழ்கடலிலிருந்து எழும் அலைகள் கடற்கரையை வந்து தொட்டுச்செல்ல கடற்காற்று முகத்தில் மோதி அவளின் கூந்தலை வருடிச்சென்றது.

அவளின் மனம் லேசாக இருக்க அந்த உப்புக்காற்றை ஆழ்ந்து சுவாசித்தவளின் உதட்டில் புன்னகை மெல்ல படர்ந்தது. குழந்தைகள் மணலில் விளையாடுவதைக் கவனித்தவள், “நானும் மணல்வீடு கட்டட்டுமா?” அவளும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

அவர்கள் மூவரும் பேச்சின் சுவாரசியத்தில் அவளைக் கவனிக்க மறந்தனர்.அவர்கள் முன்னே நடக்க நிலா அங்கேயே பின்தங்கிவிட்டாள்..

“சுமிம்மா உங்க வழி தனி வழிதான் போல..” என்ற ரித்திகா அப்பொழுதுதான் கவனித்தாள்.

“இந்த நிலாவை எங்கே காணோம்?” என்று கேட்க மற்றவரிகளின் கவனமும் திசை திரும்பியது..

“நம்மோடு தானே வந்தால் அதற்குள் எங்கே போக முடியும்?” என்று சுமிம்மாவும் அவளை தேடினார். ‘அதற்குள் எங்கே போனாள்’ பாரதியின் விழிகள் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் அவளைத் தேடியது.

அவள் அவனின் விழிகளில் சிக்கவில்லை என்றதுமே, ‘ஒருவேளை அன்று மாதிரி வயிற்று வலியில் எங்காவது உட்கார்ந்துவிட்டாளா..’ அவனின் மனம் படபடவென்று அடித்துக்கொண்டது.

நிலாவைக் காணாமல் சிலநொடி தன்னைமறந்து சிலையாக நின்ற பாரதியை கவனித்தார் சுமிம்மா. அவனின் உள்ளம் அவருக்கு புரியாமல் இல்லை. ஆனால் நிலாவின் பதில் என்னவென்று தெரியாமல் அவரும் குழம்பிப்போனார்..

“அண்ணா என்ன இப்படி சிலை மாதிரி நிற்கிற? அந்த அக்கா இங்கேதான் இருப்பாங்க பாருங்க..” என்றாலும் அண்ணனின் முகத்தில் பரவிய உணர்ச்சிகளை அவனும் படிக்கவே செய்தான்.

“நீங்க கோவிலைச்சுற்றி பாருங்க.. நான் அவள் எங்கே இருக்கிறாள் என்று பார்க்கிறேன்..” என்றான்.

“இல்ல பாரதி நீ போய் பார்த்துவிட்டு வாப்பா.. நாங்க இங்கேயே நிற்கிறோம்..” என்றவர் அவனை அனுப்பிவிட்டு அர்ஜூன் மற்றும் ரித்திகாவுடன் மணலில் அமர்ந்தார்.

அவன் வந்த வழியில் திரும்பிச்செல்ல குழந்தைகளுடன் குழந்தைகளாக மாறிய நிலா தீவிரமாக மணல் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பதை தூரத்திலிருந்து கவனித்தான் பாரதி.

மணல்வீடு கட்டும் பொழுது முகத்தில் ஈரமணல் ஒட்டியதைக் கூட கவனிக்காமல், என்னவோ அவள் அந்த வீட்டில்தான் தங்க போவது போல அவ்வளவு ரசித்து கட்டியவளின் முகபாவனைகள் அவனின் கவனத்தை அவளின் பக்கம் ஈர்த்தது.

தன்னவளை பார்வையால் பருகியவன் அவன் அவளின் அருகில் செல்ல, “ஹே இந்தமுறை நான் வீட்டை சரியாக கட்டிவிட்டேனே. என்னோட வீட்டை இடிக்க நான் யாரையும் விடமாட்டேன்..” குரலில் எல்லையில்லா சந்தோஷம்..

அவளின் மழழை மொழியில் அவனின் மனம் மயங்கிட, ‘இன்னும் குழந்தையாகவே இருக்கிறாளே..’ என்றவனின் பார்வை அவளை தழுவிச்சென்றது.

“இங்கே என்ன நிலா பண்ற..” அவனின் குரல்கேட்டு நிமிர்ந்தாள் நிலா

“வீடு கட்டிட்டு இருக்கிறேன் பாரதி. இங்கே பாரு என்னோட வீடு எவ்வளவு அழகாக இருக்குன்னு. மற்றவர்கள் யாரும் இந்த வீட்டை இடிக்க நான் விடமாட்டேன்..” என்றவளின் பேச்சில் என்றும் இல்லாத ஒரு மாறுதலை உணர்ந்தான் பாரதி.

“பாரதி இந்த வீடு இடியாது இல்ல. என்னோட வீட்டை யாரும் இடிக்க மாட்டாங்க இல்ல. ஒரு முறை ஏமாந்துப்போன மாதிரி இந்த முறையும் நடக்காது இல்ல..” அவளின் ஆழ்மனத்தின் தாக்கம் வார்த்தைகளாக வெளிவர பாரதியின் மனம் திக்கென்றது.

அவன் அதிர்ந்து நிற்பதை கவனிக்காமல் தான் கட்டிய மணல்வீட்டை ரசனையுடன் பார்க்க பாரதியின் முகம் மாறியது. அவளின் பார்வையில் இருந்த மாற்றம் புரிந்து, ‘இவளுக்கு இன்று என்ன ஆனது?’ என்ற சிந்தனையுடன் நின்றான்.

அவன் சிலைபோல நிற்பதை அவள் கேள்வியாக நோக்கிட அவளின் பார்வையின் பொருள் உணர்ந்து, “நீ கட்டிய வீட்டை யாராவது இடிக்க முடியுமா?” அவன் இயல்புடன் கூறினான்.

“இந்த வீட்டை எனக்காக போட்டோ எடுத்து தாங்க பாரதி..” அவள் ஆவலுடன் கேட்டாள்.

தன்னுடைய போனை எடுத்து அவள் கட்டிய மணல்வீட்டை போட்டோ எடுத்த பாரதி, “உன்னோட மணல்வீடு இடிந்தாலும் இந்த போட்டோ மட்டும் அழிக்க முடியாது..” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் முகம் தாமரை மலரென மலர்ந்தது..

நிலாவின் அவனின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் மாறாமல் இருக்க, “நிலா உனக்கு என்ன பிரச்சனை?” என்று எதர்த்தமாகவே கேட்டான்.

“எனக்கு எந்த பிரச்சனையுமே இல்லயே..” என்றவளின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

“சீக்கிரம் வாங்க பாரதி கோவிலைப் போய் சுற்றி பார்க்கலாம்..” என்று துள்ளிக்குதித்து முன்னே ஓடியநிலாவைக் கவனித்தவன் ‘இவளோட இயல்பு எது..’ என்று புரியாமல் அவளைப் பின்தொடர்ந்தான்.

“சுமிம்மா..” என்று கத்திகொண்டே ஓடிவந்தாள் நிலா.

“எங்கே போயிருந்த நிலா..” அக்கறையுடன் கேட்டாள் ரித்திகா.

“நான் வீடு கட்டினேனே.. என்னோட வீடு கடைசி வரை இடியவே இல்ல..” என்று மலர்ந்த முகத்துடன் கூறியவள், “வாங்க போய் கோவிலைச் சுற்றிப் பார்க்கலாம்..” என்றவள் நுழை வாயிலை நோக்கி ஓடினாள்.

அவளின் மாற்றம் உணர்த்து மூவரும் திகைப்புடன் அமர்ந்திருக்க அவர்களின் அருகில் வந்தான் பாரதி.

அவனை நிமிர்ந்து பார்த்தும், “என்ன பாரதி நிலா இந்த ஓட்டம் ஓடுகிற.. என்ன நடந்துச்சு..” என்று விளக்கமாகக் கேட்க, அங்கே நடந்த விஷயத்தைக் கூறியவன், “அவளோட கடந்த காலத்தில் என்னவோ பெரிதாக நடந்திருக்கு சுமிம்மா..” என்றான்

அண்ணனிடம் அவன் இதுவரைக் காணாத மாற்றத்தை உணர்ந்த பிரவீனின் மனமோ, ‘அந்த அக்காவை அண்ணா காதலிக்கிறானா?’ என்ற சந்தேகத்துடன் இருந்தான்.

‘வீடு என்பது பெண்களுக்கு இன்றியமையாத ஒன்று. அவள் அதிலொரு அங்கம். இவள் கட்டிய இந்த வீடு இடியல என்ற சந்தோஷத்தில் போகிறாளா? இல்ல இதற்கு முன்னாடி இவள் கட்டியவீடு இடிந்துவிட்டது என்று சொல்லாமல் சொல்கிறாளா?’ என்ற கேள்வியுடன் அவள் சென்ற திசையைப் பார்த்தார் சுமிம்மா..

அவளின் பின்னோடு அவர்கள் மூவரும் செல்ல கோவிலின் கட்டிடக்கலையைப் பார்த்து வியந்து நின்றவளை பார்த்த சுமிம்மாவிற்கு சிரிப்புத்தான் வந்தது..

“என்ன நிலா அதிசயத்தைப் பார்க்கிற மாதிரி பார்க்கிற..” என்று பாரதி அவளின் பேச்சு கொடுத்தபடியே நடந்தான்.

“சோழர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துகாட்டு, தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழபுரம், கல்லணை என்றால் பல்லவர்களுக்கு இந்த மாமல்லபுரம்..” என்றவளின் பார்வை அங்கிருந்த சிற்பங்கள் மீது நிலைத்தது.

அதுவரை அவனை வெட்டும் பார்வை மட்டும் பார்க்கும் நிலாவோ இன்று அவனின் கேள்விக்கு புன்னகையுடன் பதில் கொடுக்க திகைப்புடன் அவளைப் பார்த்தான் பாரதி..

அவளின் ரசனைகளை மனதில் சேகரித்தவண்ணம் அவளுடன் இணைந்து நடந்த பாரதியின் மனம் ஏனோ லேசானது. அவளுக்குள் ஒரு பாதிப்பு இருப்பதை உணர்ந்து கொண்டவன் அவளிடம் அதை வெளிக்காட்டவில்லை.

“வாழ்ந்து முடித்த தமிழர்கள் விட்டுச்சென்ற பிரமாண்டங்களை ரசிக்க மட்டுமே நம்மால் முடிகிறது. அந்தளவிற்கு அந்த காலத்து மன்னர்களின் அறிவாற்றலும், திறமையும் கணக்கிட்டு சொல்லிவிட முடியாது. அடுத்து நம்மால் அவ்வளவு பெரிய பிரமாண்டத்தை உருவாக்கிடவும் முடியாது..” என்ற நிலா கோவிலைச் சுற்றி வந்தாள்.

பிரவீன் சிந்தனையுடன் வரவே, “என்னப்பா யோசனை?” புன்னகையுடன் கேட்டார் சுமிம்மா.

கவனம் களைந்து நிமிர்ந்தவன், “சுமிம்மா சர்வர் சுந்திரம் படத்தில் ஒரு பாட்டு வரும் பாட்டோட முதல் லைன் மட்டும் மறந்து போச்சு..” என்றவன் சிந்தனையிடன்

“நான் அந்த பாட்டைப் பார்த்திருக்கிறேன். அந்த பாட்டில் கூட இந்த இடத்தை எல்லாம் காட்டுவாங்க..” ரித்திகாவும் யோசிக்க தொடங்கினாள்.

அவர்கள் இருவருமே அந்த பாடலை கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த சுமிம்மா, “நான் அந்த படம் பார்க்கல. எனக்கு என்ன பாட்டுன்னு தெரியல..” என்றவர் அங்கிருந்த படிக்கட்டில் அமர மற்ற இருவரும் அவரின் அருகில் அமர்ந்து யோசனையைத் தொடர்ந்தனர்.

“என்னம்மா இங்கேயே உட்கார்ந்துட்டீங்க..” என்ற நிலாவும், பாரதியும் அவர்களை நோக்கிச் சென்றனர்..

“உன்னோட தம்பிக்கு ஒரு பாட்டின் பெயர் மறந்துவிட்டதாம் பாரதி.. அதுதான் அவன் யோசனை பண்ணி கண்டு பிடிக்கட்டும் என்று இங்கேயே உட்கார்ந்துவிட்டேன்..” என்று குறும்புடன் கூறினார் சுமிம்மா.

அவரின் குறும்பு மின்னும் கண்களைக் கவனித்த நிலா, “சுமிம்மா உங்களுக்கு அந்த பாட்டு தெரியாதா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா..” என்று சந்தேகமாகவே கேட்க அவரின் விழிகளில் குறும்பு மின்னியது..

இருவரையும் கவனித்த பாரதி, “என்னவோ சரியில்ல..” என்றவன்,

“பிரவீன் சீக்கிரம் பாட்டை கண்டுபிடிடா..” என்றவனும் சிந்தித்தான்..

“அந்த பாட்டில் பெண்ணோட பருவத்தை தெளிவாக சொல்லிருப்பாங்க அண்ணா. குறிப்பா சொல்லணும் என்றால் வயது பற்றி சொல்லியிருப்பாங்க..” என்றான் பிரவீன்.

“ஹே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது..” என்ற நிலா சுமிம்மாவைக் கடந்து வேகமாக அந்த சிலையை நோக்கி சென்றாள் நிலா.

“அந்த பாட்டு வரி சொல்லாமல் போறாங்களே..” என்றவன் அவளை பின்தொடர்ந்து செல்ல, “அவள் எங்கேடா தனியாக போறா..” என்று அவர்களின் கவனத்தையும் திசை திருப்பிய சுமிம்மா அங்கேயே அமர்ந்துவிட்டார்.

“அண்ணா நீங்க வாங்க அந்த சிலையைப் பார்த்தால் பாட்டுவரி தன்னால் நினைவிற்கு வரும்..” என்று பாரதியையும் அழைத்துச் சென்றாள் ரித்திகா.

அவர்கள் நால்வரும் சென்ற பின்னர் தன்னருகே இருந்த சிலையை பார்த்த சுமிம்மா, “நானும் இந்த சிலை மாதிரி நின்றால் எப்படி இருக்கும்..” என்று ஒரு பெண்ணின் சிலையருகே அவரும் சிலைபோல நின்றுவிட்டார்.

“இங்கே எங்கயோ தானே நான் அந்த சிலையைப் பார்த்தேன்..” அந்த சிலையைத் தேடிக்கொண்டே கோவிலை இரண்டாம் முறையாக சுற்றி வந்தவளின் விழிகளில் விழுந்தது அந்த பெண்ணின் சிலை!

“சிலையெடுத்தான் ஒரு சின்ன பெண்ணிற்கு..

கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணிற்கு..

ஆடை கொடுத்தான் அவளின் உடலினிலே..

ஆடவிட்டான் இந்த கடலினிலே..” என்று பாடிக்கொண்டே அந்த சிலையின் அருகில் சென்றாள்.

அந்த சிலைக்கு அருகில் சிலைபோல நின்ற சுமிம்மாவைப் பார்த்த நிலா, “நான் முதல் முறை பார்க்கும் பொழுது இந்த இடத்தில் இந்த சிலை இல்லையே.. இப்போ எப்படி இந்த சிலை இங்கே வந்துச்சு..” என்றவள் குழப்பத்தில் ஆழ்ந்தாள்..

சுமிம்மா கண் சிமிட்டாமல் நின்றிருக்க அப்பொழுதுதான் சுமிம்மாவை நன்றாக கவனித்த நிலா, ‘சுமிம்மாவா இது..’ என்ற திகைப்பில் அவளின் விழியிரண்டும் விரிந்தது..

அவளின் பின்னோடு வந்த பிரவீன்,“அக்கா நீங்க அந்த பாட்டுவரி சொல்லாமல் வந்துட்டீங்க..” குழந்தை போல அவன் சிணுங்க, சுமிம்மா சிலைபோல நின்றிருப்பதை அவன் கவனிக்கவே இல்லை..

“அன்னமிவள் வயதோ பதினாறு ஆண்டுகள் போயின ஆறுநூறு..

இன்னும் இவள் முதுமை எய்தவில்லை. என்னதான் ரகசியம் தெரியவில்லை..” என்றவள் பாடிமுடித்தாள். அவளின் பாடலைக் கேட்டபடியே வந்து சேர்ந்தனர் பாரதியும், ரித்திகாவும்.

“நான் தினமும் வாக்கிங் போகிறேன். எதற்கும் கவலை படாமல் இருக்கேன். அதுதான் நான் என்றும் இளமையாக இருக்க ஒரே காரணம்..” என்று சுமிம்மா பேச, “அக்கா சிலை பேசுது பாருங்க…” என்றான் பிரவீன் பிரம்பிப்புடன்.

சிலைபோல நின்றிருந்த சுமிம்மாவைக் கவனிக்கவில்லை என்று உணர்ந்த நிலா, “பிரவீன் அது சிலை பேசல.. இதோ சிலைபோல நிற்கிறாங்க பாரு நம்ம சுமிம்மா அவங்க பேசிய டைலாக்டா..” சிரித்துக்கொண்டே கூறிவே,

“என்னது சுமிம்மாவா..” என்று மூவரும் அதிர்ந்தனர்.

“உன்னால இங்கிருந்து நகரவே முடியாது நீ என்றும் பதினாறா? முடிந்தால் இப்பொழுது என்னை பிடி பார்க்கலாம்..” என்று அவரை கிண்டலடித்து கலகலவென்று சிரித்தவள் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டாள்..

“எனக்கு ஓட தெரியாதா? நாங்க ஓடிப்போனது எல்லாம் சொன்னால் நீ நம்புவாயா? அவளை துரத்திக்கொண்டு ஓடினார் சுமிம்மா

“சுமிம்மா சும்மா சொன்னேன்..” என்றவள் முன்னே ஓடிட அவளை விரட்டிப் பிடித்தார். கொஞ்சநேரத்தில் இருவரும் இணைந்த வண்ணம் வர மற்ற மூவரும் சிலையென நின்றிருந்தனர்

“நிலா இந்த மூன்று சிலையும் பல்லவன் வடிக்கலன்னாலும் எவ்வளவு அழகாக இருக்கு பாரேன்” அவர்களை சுமிம்மா கேலி பேச வாய்விட்டுச் சிரித்தாள் நிலா.

அவரின் பேச்சில் எரிச்சலைடைந்த “சுமிம்மா..” என்று மூவரும் அவரை துரத்தினர்.

அன்றைய பொழுது அங்கே இனிமையாக கழிந்துவிட, திடீரென்று மழை வரவே அதில் நனைந்தவண்ணம் வீடு வந்து வீடு வந்து சேர்ந்தனர் ஐவரும். வீட்டினை அடையும் பொழுது அப்படியொரு விபரீதம் நடக்குமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

error: Content is protected !!