MMV 14

MMV 14

அத்தியாயம் – 14

காலையில் எழுந்தும் குளித்துவிட்டு வெளியே வந்த நிலா சுமிம்மாவிற்கு உதவி செய்ய சமையறைக்குள் நுழைய, ஏற்கனவே வேலைகளை முடித்திருந்த சுமிம்மா, “இந்த நிலா காபியைக் கொண்டு போய் பாரதியிடம் கொடுத்துவிட்டு வா..” என்றார்.

அவரிடம் மறுப்பு சொல்லாமல் அவனுக்கான காபியை எடுத்துச் சென்ற நிலாவிற்கு அவனின் அறைக்குள் நுழைய தயக்கமாக இருந்தது. இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அந்த அறைப்பக்கம் அவள் வந்ததே இல்லை.

அப்பொழுது அறையைவிட்டு வெளியே வந்த பிரவீனிடம், “குட் மார்னிங்..” காபியைக் கொடுக்க,

“தேங்க்ஸ்” என்றவன் திரும்பிச் சென்றான்.

பாரதியின் அறைக்குள் நுழைந்த நிலா அங்கிருந்த டேபிளில் காபியை வைத்துவிட்டு அறையைச் சுற்றிலும் தன்னுடைய பார்வையைச் சுழற்றினாள். வலதுபுறம் பெரிய அலைமாரி, அடுத்து கண்ணாடியால் ஆன புத்தக அலைமாரியில் புத்தகம் அடுக்கபட்டிருந்தது.

இன்னொரு பக்கம் குளியலறை மற்றும் ட்ரசிங் ரூம் மற்றும் பால்கனியுடன் கூடிய அறையை மிகவும் நேர்த்தியாக இருந்தது

அறையின் நடுவே பெரிய கட்டிலில் நைட் சிப்ட் முடித்துவிட்டு வந்தவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவளின் பார்வை அவனின் மீது படித்தது.

சிறுவன் ஒருவன் தனிமையின் நிழலில் ஆழ்ந்த நித்திரையில் இருப்பது போல இருந்தது.

அலையலையாக கேசம் கலைந்திருந்தது. அவனை தலையைக் கோதிவிட எழுந்த கரங்களைக் கட்டுப்படுத்துகொண்டு, ‘உனக்கு அறிவிருக்கா..’ தன்னைக் கடிந்துகொண்டாள்.

அவனிடம் அசைவு தெரியவே, “குட் மார்னிங்..” என்றாள் நிலா மெல்லிய குரலில்.

‘நிலாவோட குரலா..’ என்று பட்டென்று விழிதிறந்து பார்க்க அவனின் எதிரே நீலநிறச் சுடிதாரில் ஓவியம் போல நின்றவளைப் பார்த்தவனின் விழிகள் அவளின் மீதே நிலைத்தது.

அவனின் பார்வை வருடல் அவளுக்குள் மாற்றத்தை ஏற்படுத்திட அவளின் மனம் தடுமாறியது..

“குட் மார்னிங்..” என்றவன் புன்னகைக்க, “காபி வெச்சிருக்கேன்..” என்று அவனுக்கு நினைவுபடுத்திவிட்டு வேகமாக வெளியேறிய நிலாவிற்கு சுவாசம் சீராக சிலநொடி ஆனது.

‘ஹப்பா என்ன பார்வை பார்க்கிறான்..’ என்றவளின் இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது.

பிரவீனும், நிலாவும் இருவரும் காலேஜ் கிளம்பிட பாரதி ஹாஸ்பிட்டல் கிளம்பிக் கொண்டிருந்தான்.

மூவரும் சாப்பிட டைனிங் டேபிளிற்கு வரவே மூவருக்கும் பரிமாறிய சுமிம்மாவைக் கவனித்த பாரதி,

“அம்மா காலேஜ் போகல..” என்று கேள்வியாகப் புருவம் உயர்த்தினான்.

அவர் அமைதியாக இருக்க,

“அண்ணா நேற்று ஆடிய கேரம் விளையாட்டில் அம்மா அவுட் ஆகிட்டாங்க. அதன் இன்னைக்கு காலேஜ் வராமல் வீட்டில் இருக்காங்க..” நேற்று நடந்த விஷயத்தை தெளிவாக கூறினான்.

சுமிம்மா பாவமாக முகத்தை வைத்திருக்க, “இதற்கு எல்லாம் காலேஜ் போகாமல் இருந்தால் எப்படிம்மா..” என்றான் பாரதி.

“நான் போக மாட்டேன்..” என்று சுமிம்மா அடம்பிடிக்க பாரதியின் பார்வை நிலாவின் மீது கேள்வியாக படிந்தது.

“நீ ஏன் அமைதியாக இருக்கிற..” என்று கேட்க நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்,

“நான் என்ன சொல்லணும்..” புரியாமல் கேட்டாள்.

“சுமிம்மா காலேஜ் வரல என்றதும் நீ அமைதியாக இருக்கிறாயே அதன் கேட்டேன்..” என்றான் தெளிவாக.

“உங்களுக்கு சுமிம்மா பற்றி தெரியும். அப்புறம் எதற்கு என்னிடம் கேள்வி கேட்கிறீங்க..” என்று பட்டும்படாமல் பேசிய நிலா எழுந்து கைகழுவச் செல்ல,

‘என்னை முழுவதுமாகப் புரிஞ்சி வெச்சிருக்கா..’ அவனின் பார்வை அவளைத் பின் தொடர்ந்தது.

“அண்ணா நான் காலேஜ் கிளம்பிறேன். சுமிம்மா பாய்.. இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு காலேஜ் வாங்க..” என்றான் பிரவீன்

“நானும் வருகிறேன்..” என்று நிலாவும் அவனோடு சேர்த்து கல்லூரிக்கு சென்றனர்.

சுமிம்மாவை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அஜய்,

“அண்ணா அம்மா எங்கே..” பதட்டத்துடன் கேட்க,

“அம்மா காலேஜ் வரலடா..” என்றதும் அங்கிருந்த அனைவரின் முகமும் சோகத்தில் மூழ்கியது.

திவாகர் மட்டும் அஜய் முறைக்க தன்னுடைய பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டான்.

ரித்தி, ரேணு இருவரும் அமைதியாக இருக்க, “நான் கிளாஸ் ரூம் போகிறேன்..” சரியென தலையசைக்க அவள் அங்கிருந்து சென்றாள்.

மற்றவர்களுக்கு கிளாஸ் ரூம் செல்ல மனமே இல்லாமல் மரத்தடியில் தஞ்சம் புகுந்தனர்.

ஸ்டாப் ரூம் விட்டு வெளியே வந்த ஆசிரியர்கள் எல்லோரும் வாசலுக்கு வருவதை கவனித்த அஜய் அவர்களின் அருகில் சென்றான்.

“ஸார் என்ன இன்னைக்கு காலேஜ் லீவா?” என்று சந்தேகமாக அவன் கேட்டான்.

அவன் அந்த கல்லூரியின் சேர்மன் என்பதால், “அஜய் நம்ம காலேஜ் கரஸ்பாண்டன்ட் மகள் இந்த கல்லூரியில் படிக்க வராங்க. அதன் அவங்களை வரவேற்க நாங்க எல்லோரும் இங்கே நிற்கிறோம்..” என்று அவனுக்கு தலையே சுற்றியது.

“அஜய் யார் வராங்க..” என்ற கேள்வியுடன் அவனை நெருங்கினான் பிரவீன்.

அவனை உச்சி முதல் பாதம் வரை பார்த்த அஜயின் பார்வையில் குழப்பமே அதிகரிக்க, “பாரதி அண்ணாக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல..” என்று சந்தேகமாகவே கேட்டான்.

அவனின் பார்வையும் பேச்சும் ஒரு மாதிரியாக இருக்க, “ஏண்டா கெட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற என்னவோ கேட்கிற..” என்று தலையில் அடித்துகொண்டான் பிரவீன்.

“இந்த காலேஜ் கரஸ்பாண்டன்ட் உங்க அண்ணாதானே..” என்றவன் மீண்டும் கேட்க பிரவீனின் கோபம் அதிகரிக்க,

“ஆமாண்டா..” என்றான் கோபத்துடன்.

“பாரதி அண்ணாவுக்கு வயது இருபத்தி ஆறுதானே? ஐம்பத்து ஆறு இல்லல்ல..” என்று அவன் சந்தேகமாக புருவம் உயர்த்திட,

“அஜய்..” என்றவன் பல்லைக்கடிக்க மற்றவர்களின் கவனமும் அவர்களின் பக்கம் திரும்பியது.

“இல்ல கரஸ்பாண்டன்ட் மகள் காலேஜிற்கு படிக்க வருகிறதாம். பாரதி அண்ணாவுக்குதான் இன்னும் கல்யாணம் ஆகலையே? அப்புறம் எப்படி மகள் அதுவும் காலேஜ் படிக்கும் வயதில்?” சந்தேகமாக அவன் இழுக்க, குழப்பத்தின் உச்சிக்கே சென்றான் பிரவீன்.

இவர்கள் இருவரும் பேசியதை கேட்டுகொண்டிருந்த யாருக்குமே அதற்கான விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமிம்மா காலேஜ் வரல என்பது மட்டுமே மனதில் ஆழமாக பதிந்திருக்க மற்றவை எல்லாம் பின்னுக்கு தள்ளப்பட்டது.

அந்தநேரம் பாரதியின் கார் கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதை கவனித்த ரேணு, “பாரதி அண்ணாவோட கார் மாதிரி இருக்கு” என்று ரேணு சொல்ல மற்றவர்களின் திசை திரும்பியது.

அவன் காரை நிறுத்திவிட்டு கீழிறங்க பின் கதவை திறந்துகொண்டு அவனோடு கீழே இறங்கினார் ஒரு பெண்மணி. ஒயிட் கலர் சுடிதாரில் இறங்கிய பெண்ணின் முகத்தை பார்க்க முடியாதவண்ணம் அந்தப்பெண் திரும்பி நின்றிருந்தார்.

“திவாகர் யார் வந்திருப்பது?” ரித்து குழப்பத்துடன் கேட்க,

“இங்கே நடக்கும் விஷயம் ஒண்ணுமே புரியல..” என்றான் திவாகர் குழப்பத்துடன்.

அவர்களை வரவேற்க சென்ற ஆசிரியர்கள் திகைத்து விழித்தவண்ணம் திரும்பி வருவதை கவனித்த அஜயின் பார்வை கூர்மை பெற்றது. அந்தப்பெண் பாரதியிடம் சிறிதுநேரம் பேசிகொண்டிருந்தார்.

“அஜய் நீ சொன்ன மாதிரி ஒரு பொண்ணுதான் அண்ணாவோட காரில் இருந்து இறங்கி நிற்கிறது. என்ன நடக்குது இங்கே?” அவன் தனியாக புலம்பினான்.

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
அந்தப்பெண் லேசாக திரும்பவே,

அந்தப்பெண்ணின் முகத்தை முதலில் பார்த்த அஜய், “சு..மி..ம்..மா..” என்றான் அதிர்ச்சியில் சிலையாகி நின்றான்.

வெள்ளை நிற சுடிதாரில் சிறிய பேக்கை தோளில் மாட்டிகொண்டு ஒற்றை ஜடையில் இடதுபுறம் சைடு ரோஜாவுடம் அவர்களை நோக்கி வந்த சுமிம்மாவைப் பார்த்து மற்றவர்கள் வாயடைத்துப் போயினர்.

திவாகரோ ஒரு படி மேலே சென்று , “டேய் அஜய் சுமிம்மாடா..” என்று அலறிவிட்டான்.

“ஹாய் ஐ எம் சுமித்ரா. இந்த காலேஜில் பைனல் இயரில் நியூ ஜாயின்ட் பண்ணிருக்கேன்..” என்று புன்னகையுடன் கூற மற்றவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீண்டனர்.

“வாடா கிளாஸ் போகலாம்..” என்று அஜய் சொல்ல மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தனர். சுமிம்மாவிடம் இப்படியொரு அதிரடியை அங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை.

அங்கே நடப்பதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பாரதியின் அருகில் சென்ற பிரவீன், “சுமிம்மா காலேஜ் வரல என்று நினைச்சா, இப்போ அவங்க ஸ்டுடென்ட்டாக வந்துருக்காங்க அண்ணா” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டான்.

“அம்மா ஆசைபட்டாங்க பிரவீன்..” என்றதும் பிரவீன் அமைதியாவிட,

“சின்ன ஆசைதானே. அவங்க இஷ்டம் போல இருக்கட்டும்..” என்றவன் தம்பிக்கு புரியவைக்க முயன்றான்.பிரவீன் மறுபேச்சின்றி அவனின் வகுப்பறை நோக்கிச் செல்வதை கவனித்துவிட்டு ஹாஸ்பிட்டல் சென்றான் பாரதி.

அஜய், திவாகர், ரித்து, ரேணு எல்லோரும் வகுப்பறைக்குள் நுழைய, “கொஞ்சம் நகர்ந்து உட்காருங்க நானும் உட்காரனும்..” என்று ரேணுவிடம் கூறிய சுமிம்மாவை அவள் முறைத்தாள்.

“என்ன எனக்கு உட்கார இடம்தராமல் முறைக்கிற..” அவளிடம் சண்டை போட தயாரானார்.

“ரேணு நீ நகர்ந்து உட்காராதே..” என்று அஜய் அவனின் இடத்திலிருந்து எச்சரித்தான். அவர் அவனுக்கு பதிலடி கொடுக்கும் முன்னரே பேராசிரியர் வகுப்பறைக்குள் நுழைய அமைதியாகிவிட்டார். அவர்களின் இடத்தில் அமர ரேணு கோபத்துடன் நகர்ந்து அமர அவளின் அருகில் அமர்ந்தார் சுமிம்மா.

சுமிம்மாவைப் பார்த்த பேராசிரியர், “சுமித்ரா மேடம் இது உங்களோட கிளாஸா என்று சந்தேகமாக தனக்கு கொடுத்த டைம் டேபிளை சரிபார்க்க,

“ஸார் நான் நியூ ஸ்டுடென்ட்..” என்று அவரிடம் சொல்ல,

“என்னது..” என்று அதிர்ந்தார் அவர்.
சுமிம்மா எப்பொழுதும் போல அமைதியாக நின்றிருக்க, சிறியவர்கள் தான் கோபத்துடன் அவரை முறைத்தனர்.

சிறிதுநேரத்தில் அதிர்ச்சியிலிருந்து மீண்டவர் வகுப்பை முடித்துவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

அஜய் ரன்னிங் நோட்ஸ் எடுத்தைக் கவனித்த சுமிம்மா, “எனக்கு அந்த நோட் கொடுக்கிறீங்களா. நான் கிளாஸ் கவனித்ததில் ரன்னிங் நோட்ஸ் எடுக்க மறந்துவிட்டேன்..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்டார்.

“நீங்க ஸ்டுடென்ட்..” என்று கேட்க அவரும் அசராமல் தலையசைக்க,

“நீங்க கிளாஸ் முடிந்தும வெளியேதானே வரணும் அப்போ கவனிச்சுக்கிறேன்..” என்று இருபொருள்பட அழுத்தமாக கூறிய அஜய் அடுத்து நடந்த வகுப்புகளில் கவனம் செலுத்தவே திவாகர் அவரின் பக்கம் திரும்பவில்லை.

வகுப்புகள் முடிந்து கேண்டீன் சென்றவர்களை பின்தொடர்ந்த சுமிம்மா, “நானும் உங்களோட ஜாயின் பண்ணிக்கலாமா..” என்று புன்னகையுடன் கேட்டார்.

அதுவரை இழுத்து பிடித்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க, “சுமிம்மா..” என்று கத்திய ரித்து,

“நீங்க மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க..” என்று அவரிடம் சண்டைக்கு வந்தாள்.

“ எனக்கு என்றும் பதினாறுன்னு நினைச்சிட்டு இருக்கேன்..” என்றார் சுமிம்மா சாதாரணமாகவே.

“காலையில் காலேஜ் வரமாட்டேன்னு சொல்லிட்டு இப்பொழுது எதற்கு வந்தீங்க..” என்றான் அஜய் கோபத்துடன்.

“இது என்ன கேள்வி. காலேஜிற்கு படிக்க வந்தேன்..” குறும்புடன் பதில் கொடுத்தார்.

“சுமிம்மா காலேஜ் வரமாட்டேன் என்று சொல்லிட்டு இப்பொழுது வந்துட்டீங்க..” என்று ஆச்சரியமாக விழிவிரிய கேட்டுகொண்டே கேண்டீன் உள்ளே நுழைந்தாள் நிலா.

மற்றவர்கள் அமைதியாக இருக்கவே, “அண்ணா இன்னைக்கு கிளாஸ் எப்படி இருந்தது சுமிம்மா கிளாஸில் என்ன பண்ணாங்க..” என்றவள் அஜயிடம் வினாவ மற்றவர்கள் சுமிம்மாவை முறைக்க அவரோ தலையைக்குனிந்து கொண்டார்.

அப்பொழுதுதான் அவர்களின் முகத்தைக் கவனித்த நிலா, “அஜய் அண்ணா..” என்று அழைக்க, “கிளாஸ் நல்லா போச்சு நிலா..” என்றவன் மீண்டும் சுமிம்மாவை முறைத்தான்.

அவனின் பார்வையை கவனித்தவளுக்கு ஒன்றுமே புரியாமல் போகவே, “சுமிம்மா..” என்று அழைக்க,

“ஏய் நான் சுமிம்மா இல்ல சுமித்ரா. பைனல் இயர் ஸ்டுடென்ட். கால் மீ சுமி.” என்றார் கறாராகவே.

“சோ ஸ்வீட் சுமிம்மா. நீங்க இப்படியொரு அவதாரம் எடுப்பீங்க என்று நேற்றே மைண்ட் வாய்ஸ் சொல்லுச்சு. ஆனால் அது நின்னைக்கே நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கல..” என்ற நிலா அவரின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.

“தேங்க்ஸ்டா செல்லம்..” என்ற சுமிம்மா அவளின் கன்னத்தில் முத்தமிட்டார். மற்றவர்கள் அவளை கேள்வியாக நோக்கிட,

“சுமிம்மா ஸ்டுடென்டடாக இருக்கும் பொழுது கிளாஸ் சூப்பராக இருக்கும்..” என்று அவள் கற்பனையில் ஆழ்ந்து மற்றவர்களின் கோபத்தை குறைக்க நினைக்க காலேஜ் பெல் அலறும் சத்தம் கேட்டது.

“ஸாரி கிளாஸ்க்கு லேட் ஆச்சு. என்ஜாய் பிரிண்ட்ஸ்..” என்ற நிலா அங்கிருந்து சிட்டாக பறந்துவிட்டாள்.

“நீங்க கேட்டை தாண்டுங்க உனக்கு இருக்கு கச்சேரி..” என்று அவரை மிரட்டிவிட்டு எழுந்து சென்றான் அஜய்.

அவனின் பின்னோடு மற்றவர்கள் சென்றுவிட சுமிம்மா மட்டும் தன்னுடைய கல்லூரி நாட்களை நினைத்தவண்ணம் அங்கேயே அமர்ந்திருந்தார்.

சில தருணங்கள் அமையும் பொழுது அதை அனுபவிக்கவும் கற்றுகொள்ள வேண்டும். அதைதான் சுமிம்மாவும் செய்தார்.அவரின் வயதில் இருக்கும் நபர்களுக்கு இந்த வாய்ப்பு அமையவில்லை. அவர்களுக்கும் வாய்ப்பு அமைந்தால் அவர்களும் இப்படித்தான் இருப்பார்களோ?

மாலை கல்லூரி முடிந்ததும் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டனர். நிலா மட்டும் கல்லூரியில் அமர்ந்து தன்னுடைய அசைன்மெண்ட்ஸ் முடித்துவிட்டு லேட்டாக வீட்டிற்கு கிளம்பினாள்.

அவள் மட்டும் தனியாக பஸ்ஸ்டாப் நோக்கி செல்வதை கவனித்தவண்ணம் வந்த பாரதி,

‘இவளை காரில் ஏறச்சொன்னால் ஏறமாட்டாள்.. இவளை தனியாக விட்டுட்டு போகவும் மனசு வரல..’ என்று நினைத்தவண்ணம் காரில் அவளை பின் தொடர்ந்தான் பாரதி.

அப்பொழுதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. அவள் முன்னே பஸ் வந்து நின்றது. அந்த பஸ்லிருந்து இறங்கிய ஒருவன் அவளிடம் எதையோ பேசவே, அவளின் முகம் செந்தணலாக மாறியது.

அடுத்த கணமே அவனின் கன்னத்தில், ‘பாளர்’ என்று ஒரு அறைவிட்ட நிலா அடுத்து வந்த பஸில் ஏறிச்சென்று விடவே,

கன்னத்தில் அரை வாங்கிய அந்த புதியவனுக்கும் சரி, தூரத்தில் இருந்து அவர்களை பார்த்த பாரதிக்கும் சரி அந்த நிகழ்வு மிகபெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

error: Content is protected !!