Mozhi 14
Mozhi 14
அன்பின் மொ(வி)ழியில் – 14
பரபரப்பான நகரத்தில், எங்கும் மக்கள் அதிகமாக காணப்படும், சென்னையின் மையப் பகுதியில் இருந்த அந்த பங்களா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு அறையிலும் பணக்கார தன்மை துல்லியமாக தெரிந்தது.
அவனின் தாய், தந்தை பூர்விக ஊரில் இருக்க, தனியாக அந்த வீட்டில் உள்ள தனது அறையில் அடிபட்ட வேங்கையென கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தான் விஜய்.
பரம்பரை பரம்பரையாக பணத்தில் உயர்திருந்த அவனின் குடும்பத்தில் பிறந்து, எதிலும் தோல்வி என்பதை விரும்பாத விஜயின் நிலை நேற்றைய இரவில் இருந்து அதுவாக தான் இருக்கிறது.
விஜயின் சிவந்திருந்த கண்கள் இரண்டும் வெறியுடன் எதிரில் இருந்த மேசையில் விழுந்து கிடந்த புகைப்படங்கள் மீது இருந்தது.
ராம் தன் கரங்களில் கயல்விழியை அணைத்து தூக்கியிருப்பது போல் உள்ள படங்கள் அவை அனைத்தும்.
புகைப்படத்தில் உள்ளது ராஜ் என்று எண்ணியவன் உள்ளத்தில், ஒவ்வொரு முறையும் அவனிடம் அடையும் தோல்வியை நினைத்து உள்ளம் எரிமலையாய் கொந்தளிக்க அதை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தான்.
அனைவரையும் வெல்ல முடிந்தவனால், இப்போது வரை வேந்தன் குரூப்ஸ் இடம் மோதும் போது மட்டும் அடைவது தோல்வியே!.
ராமின் கைகளில் பூங்கொடியை போல் இருந்தவள் தேகத்தை கண்ட, விஜயின் கடுமையான கண்களில் அவளை முதலில் கண்ட போது தோன்றிய அதே மோகமும், தாபமும் தற்போதும் ஏற்பட்டது.
அதை விட அவன் விரும்பி இன்று வரை அடைய முடியாதது அவளை மட்டும் தான்.
அவளை தன் எதிரியின் கைகளில் இருக்க கண்டவன், வெறியுடன் மது கிண்ணத்தை நேரே இருந்த கண்ணாடியில் ஓங்கி அடித்தான்.
புகைப்படத்தை கைகளில் எடுத்தவன் அதில் கண்களை முடிய நிலையில் ராமின் கரங்களில் இருந்தவளை கண்டு கொடூரமாக நகைத்தவன் பின் “கயல் நீ இவ்வளவு நாள் என் கண்ணுல படாம இருந்திருக்கலாம், இனி உன்னை என் கைல வரவைகல நான் விஜய் இல்ல” என்று ஆக்ரோஷமாக கூறியவன்.
அவன் அடைய விரும்பியவளை உரிமையாக தங்கி இருந்தவனை, அதோடு தனக்கு தோல்வியை அறிமுக படுத்தியவனின் மீது தான் பார்வையை பதித்து, “டேய்! ராஜ் உன்னோட அழிவு என் கைல தன்டா” என்று வெறியுடன் கத்தினான் விஜய்.
ஏற்கனவே மிருகம் போல் இருப்பவனை, அவன் உட்கொண்ட போதை மேலும் மூர்க்கணக்கியது.
தன்னிலை இழந்து, அறையின் இருந்த அனைத்து பொருட்களையும் உடைத்த பிறகும் கூட அவன் நிலையில் எந்த மாற்றமும் இல்லை…
அந்த அழகிய அறையில் உடைந்த கண்ணாடி, மற்ற பொருட்கள் எல்லாம் சிதறி அந்த இடம் முழுவதும் அவனின் மனம் போல அசிங்கமாக இருந்தது.
ஆறு வருடங்களுக்கு முன்பு, கயலை முதல் முறையாக அந்த விருது வழங்கும் விழாவில் கண்டது முதல், விஜயின் விழிகள் அவள் மீது தான் இருந்தது.
நவீன உலகில் நடமாடும் பெண்களை போல் இல்லாமல், ஒப்பனை எதுவும் இன்றி இலந்தளிர் நிற சேலையில் பந்தமாய், மென்மையாய் வெளிப்பட்ட அவளின் அழகை கண்டு மயங்கியவன் சிறிது நேரம் முன்பு, ராஜை பழி வாங்க எண்ணி அவன் அருந்தும் பானத்தில் யாரும் அறியாத வகையில் போதை மருந்தை கலந்தவன், தற்போது ஏதும் அறியா பேதை பெண்ணான கயலை அடையவும் அதே வேலையை செய்தான்.
மனிதன் நினைப்பது அனைத்தும் நடந்து விடுவது இல்லையே..
விதியின் சதிராட்டத்தில், அந்த இரண்டு முயற்சியில் விஜய் அடைந்தது தோல்வி மட்டுமே!..
அந்த நாளைக்கு பிறகு, அவன் எவ்வளவு தேடியும், இதனை வருடங்களில் விஜய்யின் கண்களில் கயல் படவே இல்லை.
ஆறு நெடிய ஆண்டுகளுக்கு பிறகு, அவளை இப்போது தான் புகைப்படத்தின் வழியாக காண்கிறான்.
அதுவும் தற்போது முன்பை விட அழகாக மலர்ந்து, பார்ப்பவரின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும் அவளை அப்படியே எடுத்து கொள்ள அவனின் ஒவ்வொறு அணுவும் துடித்தது.
கடந்த சில நாட்களாக, ராஜ் நீலகிரி ப்ராஜெக்ட் பெற்றது பின் தொடர்ந்து வேந்தன் குரூப்ஸ்ஸிடம் தோற்பதும் ராஜின் மீதான வன்மத்தை கொழுந்து விட்டு எரிய செய்தது விஜயின் மனதில்.
அதன் காரணமாக அவனை கண்காணிக்க ஆள்களை போட்டிருந்தான்.
ராஜை நிழல் போல தொடர்ந்தவர்கள், அவன் நீலகிரி வந்தது அறிந்து , அவனை தொடர்ந்து அங்கும் வந்தார்கள், ராஜ் தன் குடும்பத்துடன் எளிய சூழலில் இருப்பதை கண்டு எப்போதும் போல், அவனை புகைப்படம் எடுத்து மின்னஞ்சல் மூலம் விஜய்க்கு அனுப்பினார்கள்.
சாதகமான சமயம் பார்த்து அவனை கொலை செய்ய நினைத்திருந்த, விஜயின் கைகளில் நிலகிரியிலுருந்து அவனின் ஆட்கள் அனுப்பிய போட்டோ அவனை மேலும் மிருகமாக்கியது.
ஒரு பைத்தியம் போல அதைக் கண்ட நிமிடம் முதல் தன்னிலை இழந்து நடந்து கொண்டு இருப்பவன், மனது வன்மமாக பல சிந்தனைகளுக்கு பிறகு, சூழ்ச்சி மிகுந்த விஜயின் உதடுகள் இறுதியில் விஷமமான புன்னகையை ஏந்தி கொண்டன.
அவன் ராஜை பின்தொடர போட்டிருந்தவர்களை போனில் அழைத்தவன்.
எதிரில் பேசியவனிடம் “விக்டர் நேத்து நீ சென்ட் பண்ண போட்டோ ல இருக்குற பொண்ணோட எல்ல டீடெயில்ஸ்ஸும் எனக்கு வேணும், அப்புறம் அந்த ராஜோட ஈச் அண்ட் எவேரி மூவ்மெண்ட் ஷுட் கம் டூ நாலேஜ்க்கு (each and every movement should come to my knowledge) என்றவனிடம்.
“ கண்டிப்பா சார் நான் அதை பத்தின எல்ல டீடெயில்ஸ்ஸும் உங்களுக்கு சென்ட் பன்றேன் அஸ் சூன் அஸ் பாஸிப்ள்(as soon as possible)”.
விக்டர் இடம் பேசி செய்ய வேண்டிய அனைத்தையும் கட்டளையிட்டு முடித்த பிறகு விஜயின் மனம் சிறிது திருப்தி அடைந்தது.
************************
அந்த அழகிய மாலை பொழுதில் செங்கதிரோன் அவனின் பணி முடிந்து வீட்டுக்கு தன் இல்லம் செல்லும் போது, பறவைகள் அனைத்தும் தத்தம் கூட்டுக்கு திரும்பிய அந்த மயங்கும் வேளையில் கூட ராம், கயல் இருவரையும் யாரும் தொந்திரவு செய்யவில்லை.
மதிய நேரம் தாண்டியும் ராம் கயலை அழைத்து வரவில்லை என்பதால், ராஜ் தன் அண்ணனுக்கு போனில் அழைத்தான்
“ராம் அண்ணி எப்படி இருக்காங்க”
“காய்ச்சல் கொஞ்சம் தேவலை டா ஆனா இன்னும் கண்ணு தொறக்கலை, பிள்ளைகல பார்த்துக்கோ” என்றவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட கலக்கத்தை உணர்ந்து கொண்டவன்.
ராஜ் – “அவுங்களுக்கு நிறையா அதிர்ச்சி இந்த ஒரே நாளில் அதன் காரணம், சீக்கிரம் சரி ஆகிடும் , நீ காலைலயும் சாப்பிடல, நான் மதிய சாப்பாடு கொடுத்து விடுறேன் ராம்… மனசுல எதையும் நினைச்சு கவலைப்படாத” என்றவனிடம்.
ராம் – “விஜய் கன்ஸ்ட்ரக்க்ஷன். எம். டி விஜய், தான் இது எல்லாத்துக்கும் காரணம் போல ராஜ், விழி காய்ச்சல் வேகத்துல சிலது சொன்னா ” என்றவன் வார்த்தைகள் மிகவும் கடுமையாக வந்து விழுந்தது.
அவனுக்கு குறையாத அளவு கோபம் ராஜிற்கு வந்தது.
அன்று ஒருநாள் சோழாவில் பார்த்த போது, விஜயின் குரலில் வெளிப்பட்ட வன்மத்தை நேரடியாக கண்டது ராஜின் நினைவில் வந்தது.
“அவனை நான் பாத்துக்குறேன் ராம்” என்ற ராஜின் குரலில் அடக்கப்பட்ட ஆத்திரத்தை புரிந்து கொண்டவன்.
ராஜ்- “விழிக்கும் எனக்கும் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யனும்லே”.
ராமின் ‘விழி’ என்ற அழைப்பை கேட்டவனின் வழக்கமான குறும்பு தலை தூக்கியது.
“அய்யோ! ராம் யாரு அது விழி, எனக்கு ஒரு அண்ணி தானே… நீ வேற லைன் ஆஹ் சொல்லுவ போல” என்று போலியாய் அலறினான்.
அவனின் குசும்பை உணர்ந்தவன் உள்ளத்தில் இதனை நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்தது.
“நான் என் பேருக்கு ஏத்த மாதிரி ராமன்லே…” என்று கூறி புன்னகைத்தவன்.
“ஆதி, ரவி என்ன செய்றாங்க ராஜ் ?, அதுலையும் சின்னவன் முகமே சரியல்ல காலைல ” என்றவன் வார்தைகளில் மைந்தர்கள் மீதான அன்பு நிறைந்திருந்தது.
“நல்ல இருக்காங்க ராம், நம்ம பட்டு கூட அப்படி ஒட்டிக்கிட்டாங்க” என்றான் பூரிப்புடன்.
“நாங்க எல்லாம் பசங்கள பாத்துக்குறோம், நீ சாப்புட்டு அண்ணிய சாப்பிட வை” என்றவன் போனை வைத்து விட…
ராஜிடம் பேசிய பிறகு ராமின் மனதில் இருந்த கலக்கம் சிறிது சிறிதாக மறைந்தது.
தன் நெஞ்சின் மீது சிறு பிள்ளையென்ன தூங்கும் கயலை கண்டவன் அவளை எழுப்ப மனது இல்லாமல் அவளின் இடையில் தன் கரங்களை பதித்து தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்டான்.
அதனை நேரம் கயலை அணைத்திருந்த போது உணராத ஒரு உணர்வு ராமிற்கு ஏற்பட்டது.
தான் விரும்பும் பெண், இதனை நெருக்கத்தில் அதுவும், தன் கையணைவில் இருக்கும் போது எப்பேர்ப்பட்ட மனிதனுக்கும் மனதை அடக்குவது சோதனைத் தான்.
சிலவருடங்களாக அவனின் கனவுகளில் உணரும் நெருக்கமும், அவளில் ஸ்பரிசமும், ராமினை திக்குமுக்காட செய்தது.
தன்னை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டவனை காப்பாறுவது போல கதவு தட்டும் ஒளியில் மனதை நிலைப்படுத்திக் கொண்டவன்.
கயலின் தலையை மெல்ல நகர்த்தி தலையணை மீது வைத்தவன், அவளின் உறக்கம் கலையாத வண்ணம் அவளை மெத்தையில் கிடத்தினான்.
மனதில் உள்ளதை அவனிடம் கூறியதனாலோ.., இல்லை மன்னவனின் நெஞ்சத்தை மஞ்சமென்ன கொண்டு இருந்ததனாலோ… தெரியவில்லை கயலின் முகம் அதனை ஒளியுடன் தோன்றியது ராமின் கண்களுக்கு.
அவளின் முகம் நோக்கி குனிந்தவன் தன்னை கட்டுப்படுத்த இயலாமல் தன் இதழ் கொண்டு பெண்ணவளின் இதழ்களை மென்மையாக ஒற்றி எடுத்தவன் விருட்டென அதை அறையை விட்டு வெளியே வந்து விட்டான்.
கதவினை திறந்து தங்களுக்கான உணவினை வாங்கி கொண்டவன்.
உணவு மேஜையில் வைத்து விட்டு கயலின் அருகில் வந்து நின்றவன், பேதையவளின் முகத்தில் வந்து விழுந்த முடியினை காதின் ஓரமாக ஒதிக்கியவன், விழி என்று மென்மையாக அழைத்தான்.
அவனின் அழைப்பை உணராதவளின் கயல் விழிகளை மென்மையாக வருடியவன், அவளில் கண்ணத்தினை தட்டி எழுப்பினான்.
காய்ச்சல் மெல்ல குறைந்திருந்த நிலையில் கயலுக்கு மெல்ல விழிப்பு வந்து கண்களை திறந்த போது தன் முகத்தின் அருகில் இருந்த ராமின் முகத்தினை கண்டு திகைத்து “சார்” என்று அழைத்து வேகமாக எழ முயன்றவள், சோர்வின் காரணமாக தடுமாறினாள்.
தன்னை கண்டு திகைத்து போய் தடுமாறியவளை தாங்கி தன்மீது சாய்த்துக் கொண்டவன் அவளில் “சார்” என்ற அழைப்பில் மனம் வலிக்க அவளை பார்த்தவன்.
“விழி, வா முதல்ல கொஞ்சம் வயித்துக்கு ஆகாரத்தை கொடு அப்ப தான் உன்னால நிக்கவாவது முடியும் என்றவன், அவளை டைனிங் டேபிள் வரை அழைத்து சென்று அமற வைத்தான்.
இலகுவாக அவள் உண்ண ஏதுவான உணவை எடுத்து வைத்தவனை பார்த்தவளுக்கு, ‘இவர் எப்போது இங்கு வந்தார்’ என்ற சிந்தனை ஓடியது அதோடு ரம்யா பிள்ளைகள் எல்லாம் எங்கே என்ற கேள்வி தோன்ற தன் விழிகளை வீடு முழுவதும் பரவ விட்டவள் கேள்வியாக ராமை நோக்கினாள்.
கயலுக்கு ரம்யா தன்னிடம் சொல்லி பிள்ளைகளை அழைத்து சென்றது, ராம் வந்தது, அவனிடம் தன் மனதில் இதனை வருடங்கள் எண்ணி பயந்த விடயங்களை சொல்லி கதறியது, ராம் அவனின் காதலை சொன்னது எதுவும் நினைவில் இல்லை .
அங்கு அவளின் வீட்டில் வந்து உரிமையாக தன்னிடம் நடந்து கொள்பவனை புரியாத பாவனையுடன் பார்த்து கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையை உணந்தவன் மெல்லிய நகைப்புடன் அவள் அருகில் அமர்ந்து அவளில் தட்டை கைகளில் ஏந்தி உணவை எடுத்து அவளுக்கு ஊட்டினான்.
அவனின் செய்கையில் கண்கள் கலங்க ராமை பார்த்தாள் கயல்.
அவளின் நினைவு தெரிந்து யாரும் அவளுக்கு உணவு ஊட்டியது இல்லை .
பிள்ளைகள் பிறந்த பிறகு, ஆதி , ரவி இருவரும் அவள் வேறு சிந்தனைகளில் உண்ணாத சமயத்தில் அவர்களுடைய பிஞ்சு கரங்களினால் அவளுக்கு ஊட்டியது மட்டுமே, கயல் அறிய அவளுக்கு தெரிந்து.
மைந்தர்களுக்கு அடுத்து , அவர்களின் தந்தையிடம் கிடைத்த இத்தகைய அன்பினை தாங்க முடியாமல் அவளில் வேல் விழிகளில் நீர் ததும்பியது.